ஆஸ்திரேலியாவில், ஹைதராபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், போலீசாரின் விசாரணையில், கணவரே இளம்பெண்ணைக் கொலைச் செய்தது தெரிய வந்துள்ளது.
மனைவியைக் கொலைச் செய்து விட்டு, ஆஸ்திரேலியாவில் இருந்து தன்னுடைய மாமியாரிடம் குழந்தையை ஒப்படைக்க வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் கணவர். ஆஸ்திரேலியாவில், சைதன்யா தனது கணவர் மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் பக்லி நகரில் சாலையின் ஓரத்தில் சக்கர வண்டி ஒன்றில் இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலைச்செய்யப்பட்ட பெண் ஹைதராபாத்தை சேர்ந்தவர் என்றும், 36 வயதான சைதன்யா என்பதும் தெரிய வந்தது.
இந்த செய்தி பரபரப்பான நிலையில், ஹைதராபாத்தில், இறந்த சைதன்யாவின் தொகுதி எம்எல்ஏ பண்டாரி லக்ஷ்மா ரெட்டி, அவரின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். சைதன்யாவின் அஸ்தியை ஹைதராபாத்துக்குத் திருப்பி அனுப்பக் கோரி உடனடியாக வெளியுறவு அமைச்சகத்திற்கும் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், சைதன்யாவின் கணவர் ஆஸ்திரேலியாவில் இருந்து ஹைதராபாத் பறந்து வந்து குழந்தையை சைத்தன்யாவின் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
தங்கள் மகள் சைதன்யாவைக் கொலைச் செய்ததை மருமகன் ஒப்புக்கொண்டதாக பெண்ணின் பெற்றோர்கள் தெரிவித்தனர். தங்களது மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு கதறுகின்றனர் சைதன்யாவின் பெற்றோர்.
ஒரே கல்லூரியைச் சேர்ந்த 25 பேர், கடந்த 3 மாதங்களில் தற்கொலைச் செய்து கொண்டு உயிர்விட்ட பரிதாபம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிகளின் தொடர் தற்கொலைக்கு என்ன காரணம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன அழுத்தம் காரணமா என்கிற ரீதியிலும் விசாரணை நடைப்பெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஹிம்பரம் ஷிவானி ஜூனியர் கல்லூரியில் படிக்கும் மாணவி சாகித்யா, கல்லூரி வளாகத்தில் மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாணவி சாகித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி தனது தோழி ஒருவருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அந்த கடிதத்தில், “உன்னிடம் சொல்லாமல் போனதற்கு என்னை மன்னித்துவிடு. நீ தான் என் உயிர் தோழி. கடந்த 3 மாதங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை.
என் மூளை ஒட்டுமொத்தமாக இறந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் எல்லாம். உன்னுடன் நட்பாக பழகிய யாரும் உன்னை விட்டு பிரிந்து செல்ல நினைக்க மாட்டார்கள் என உருக்கமாக தனது தோழி குறித்து கடிதத்தில் எழுதி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட மாணவி சாகித்யா உட்பட கடந்த 3 மாதங்களில் மட்டும் அந்த கல்லூரியில் 25 பேர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. போலீசார் இது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் 17 வயதுடைய வலதுகை வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுலன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வலைபந்துவீச்சாளராக இணைந்துகொண்டுள்ளார்.
இண்டியன் பிறீமியர் லீக் ஆரம்பமாவதற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் மாதுலன் இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துகொண்டுள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்னர் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 117ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டியில் சென். ஜோன்ஸ் சார்பாக பந்துவீசிய மாதுலன், எதிரணி வீரர் தகுதாஸ் அபிலாஷை இரண்டாவது இன்னிங்ஸில் யோக்கர் பந்தின் மூலம் ஆட்டம் இழக்கச் செய்திருந்தார்.
அவரது பந்துவீச்சுப் பாணி லசித் மாலிங்கவின் பந்துவீச்சை ஒத்ததாக இருந்ததுடன் மாதுலன் வீசிய யோக்கர் பந்து சமூக ஊடகங்களில் பரவியது. இதனை அடுத்து இளம் வீரர் குகதாஸ் மாதுலனின் பந்துவீச்சை பார்க்க சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் எம்.எஸ். தோனி விரும்பியதாக செய்தி வெளியாகியது.
இந்நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் உரிமையாளர்களால் குகதாஸ் மாதுலன் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது சென்னையில் இருக்கும் குகதாஸ் மாதுலனின் பந்துவீச்சை சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பயிற்றுநர் குழாம் அவதானித்து வருவதடன் அவருக்கு தேவையான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கிவருவதாக அறியக் கிடைக்கிறது.
இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால், குகதாஸ் மாதுலனின் பந்துவீச்சு இலங்கை பயிற்றுநர்களினதோ தெரிவாளர்களினதோ கண்களில் படாமல் போன நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் எம்.எஸ். தோனி கண்ணில் பட்டுள்ளது..
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படுவதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய கிழக்கு, வடமேற்கு, வடமத்திய, மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இன்று(15.03.2024)சில இடங்களில் வெப்பநிலை அதிகமாக காணப்படும்.
இந்த வெப்பமான காலப்பகுதியில் குழந்தைகளை தனியாக வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் வீடுகளில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழிலுக்காக செல்வோர் போதுமான அளவு தண்ணீரை அருந்துமாறும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Trekking சென்ற இளம்பெண் ஒருவர் பள்ளத்தில் விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் வேமுரு உஜ்வாலா (23). மருத்துவரான இவர், தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இந்த சூழலில் கடந்த மார்ச் 2-ம் தேதி இவர், ஆஸ்திரேலியாவில் உள்ள லாமிங்டன் தேசிய பூங்காவில் உள்ள யான்பாகூச்சி நீர்வீழ்ச்சிக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது அனைவரும் ஆங்காங்கே இருந்து போட்டோ எடுத்துக்கொள்ளவே, இவரும் தான் கொண்டுபோன Tripod-ஐ பயன்படுத்தி போட்டோ எடுத்துள்ளார். அந்த சமயத்தில் அந்த Tripod-ஐ சுமார் 20 மீட்டர் ஆழமுள்ள விழுந்துள்ளது. இதனை கண்ட அந்த இளம்பெண், தாமாகவே எந்த உதவியும் இன்றி எடுக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் அவர் கால் இடறவே, சட்டென்று சரிந்து பள்ளத்தில் விழுந்துள்ளார்.
முதல் 10 மீட்டரில் சிக்கிய அவர், சில நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் நிரம்பிய மீதமுள்ள 10 மீட்டரில் சரிந்து மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து இவரது நண்பர்கள் தேடி அழையவே, வேமுரு உஜ்வாலா பள்ளத்தில் விழுந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உஜ்வாலாவின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
உயிரிழந்த உஜ்வாலா, மருத்துவ படிப்பு முடித்து தற்போது அங்கிருக்கும் பெண்கள் மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருந்து வருகிறார். இவரது குடும்பமும் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெருநாய் ஒன்று கடித்ததில், உடனே மருத்துவமனைக்கு சென்று முறையாக தடுப்பூசிகள் அனைத்தையும் போட்ட நிலையிலும் 21 வயதேயான சிருஷ்டி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார்.
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர் சிருஷ்டி (21). இவர் பவுசிங்ஜி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, செல்போனில் வந்த அழைப்புக்கு பதிலளிக்க சாலையில் நின்றிருந்த போது, தெருநாய் ஒன்று அவரது காலில் கடித்துள்ளது.
நாய் கடித்த பின்பு, உ டனடியாக ஸ்ருஷ்டி மருத்துவமனைக்கு சென்று ரேபிஸ் தடுப்பு மருந்தின் ஐந்து டோஸ்களையும் எடுத்துக் கொண்டார். இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு, ஸ்ருஷ்டிக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டது.
அவரது இரண்டு கால்களும் வலிமையை இழந்த நிலையில், மீண்டும் வீட்டின் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பல சோதனைகள் நடத்தப்பட்ட பின்பும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததை அடுத்து வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார்.
பரிசோதனை அறிக்கையில் அவருக்கு ரேபிஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஷிண்டே அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் மறுநாள் அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.
சிருஷ்டி ஷிண்டேவின் மரணம், உடனடியாக தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்பும், அவருக்கு எப்படி ரேபிஸ் வந்தது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ரேபிஸ் தடுப்பூசி தேவையான வெப்பநிலையில் வைக்கப்படவில்லையா என்று அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், நயம்புத்தூர் பகுதியில் வசிப்பவர் ஜெயபால். இவரது மனைவி காளியம்மாள். தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் ஜெயபால் உயிரிழந்தார்.
இதையடுத்து, தனியாக வசித்து வந்த காளியம்மாள், அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரனை (வயது 28) சந்தித்தார். இவர் அப்பகுதியில் வசிக்கும் பணக்காரர்.
ராமச்சந்திரனுக்கும் காளியம்மாளுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மாறியது, இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடங்கினார்கள். காளியம்மாளுக்கு இது இரண்டாவது திருமணம்.
ராமச்சந்திரனும் காளியம்மாளை விட இளையவர், முதல் திருமணம். இதனால் இந்த திருமணத்திற்கு ராமச்சந்திரனின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 29ம் தேதி கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட காளியம்மாள் சடலம் வீட்டின் பின்புறம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கொலையை உறுதி செய்து குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது, சம்பவத்தன்று,
காளியம்மாள் வீடு அமைந்துள்ள பகுதியில், கீழ விளாத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாலன் என்பவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்தது உறுதியானது. இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதாவது, ராமச்சந்திராவின் தந்தை கோவையில் பெரிய அளவில் இரும்புக் கடை நடத்தி வருகிறார். அவருக்கும் கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன. ராமச்சந்திரனுக்கு விஜயலட்சுமி என்ற சகோதரியும் இருந்தார்.
28 வயதான தனது தம்பி தன்னை விட 10 வயது மூத்த காளியம்மாளை திருமணம் செய்து கொண்டு முதல் கணவனுக்கு பிறந்த குழந்தைகளை கவனித்துக் கொண்டது விஜயலட்சுமிக்கு பிடிக்கவில்லை. காளியம்மாளுக்கும் சொத்து போய்விடுமோ என்று ஆவேசமாக இருந்துள்ளார்.
இந்த வேதனையும், ஆத்திரமும் ஒரு கட்டத்தில் காளியம்மாளைக் கொல்லத் திட்டமிட்டது. இதையடுத்து, அவருக்கு அறிமுகமான ஜெயபால், அவரது தோழி கவிதா, நண்பர் விவேக், காலச்செல்வன் ஆகியோருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி அவரைக் கொன்றனர்.
கொலைக்கான முன்பணமாக 70 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டு, ஜெயபால் காளியம்மாளின் வீட்டிற்கு நோட்டரி மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காளியம்மாள் நாய்கள் மீது பிரியம் கொண்டதால், பல நாய்களுக்கு உணவளித்து வருகிறார்.
இதையடுத்து, கால்நடை மருத்துவர் வேடமணிந்த ஜெயபால், நாய்களுக்கு ஊசி போட வந்ததாக கூறினார். காளியம்மாள் வளர்ப்பு நாய்களை ஊசி போடுவதற்கு தயார் செய்தபோது, ஜெயபால் காளியம்மாளை கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
மேற்கண்ட சம்பவத்தை வாக்குமூலமாக பதிவு செய்த அதிகாரிகள், ஜெயபால் கொடுத்த தகவலின் பேரில் விஜயலட்சுமி, கவிதா, விவேக், கலையரசன் ஆகியோரையும் கைது செய்தனர்
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலையுடன் கூடிய வானிலை எதிர்வரும் மே மாதம் வரையில் நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தற்பொழுது நிலவி வரும் அதிக வெப்பத்துடனான வானிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும் மே மாதம் வரையில் வெப்பநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் குறைதல், வளிமண்டலத்தில் நீர் ஆவியாதல் அதிகரிப்பு போன்ற ஏதுக்களினால் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
இதற்கமைய மேல் மாகாணம், வவுனியா, மன்னார், ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலனறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் கூடுதலான வெப்பநிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கனடா ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று வியாழக்கிழமை (14) இடம்பெற்றது.
இலங்கையைச் சேர்ந்த பெப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை மாணவரே ஒருவரே கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் இவர் நேற்று வியாழக்கிழமை (14) விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. மேலும் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக கோரியும், பொலிசாரின் அராஜகத்தை கண்டித்தும் வவுனியா, நெடுங்கேணியில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று (15.03) முன்னெடுக்கப்பட்டது.
நெடுங்கேணி நகர சந்தியில் ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி, நெடுங்கேணி – புளியங்குளம் வீதி ஊடாக சென்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் வாயிலில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், உதவிப் பிரதேச செயலாளரிடம் கண்டன மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அங்கிருந்து பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரார்கள் வனவளத் திணைககள அலுவலக வாயிலில் நின்று வனவளத் திணைக்களத்திறகு எதிராக கோசங்களை எழுப்பியதுடன், பின்னர் அங்கிருந்து சென்று நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதன்போது பொலிஸ் உயர் அதிகாரிகள் வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரருடன் பேச முற்பட்ட போதும், அதற்கு மறுப்பு தெரிவித்து பொலிசாருக்கு எதிரான கோசங்களை ஆர்ப்பாட்டக்கரரர்கள் எழுப்பினர்.
இதன்போது அப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதுடன், பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பொலிஸ் நிலையம் முன்பாக சுமார் அரை மணிநேரம் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மக்கள் பின்னர் அங்கிருந்து சென்று பேரூந்து நிலையத்தில் கண்டன ஆர்பாட்டத்தை நிறைவு செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘பொலிஸ் அராஜகம் ஒழிக, வெடுக்குநாறி எங்கள் சொத்து, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய், வழிபாட்டு உரிமையை தடுக்காதே, சிவ வழிபாட்டை தடை செய்யாதே,
வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம், பொய் வழக்கு போடாதே, பௌத்தமயமாக்கலை உடனே நிறுத்து” என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய நிர்வாகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட இக் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், இ.சாள்ஸ் நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம்,
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், கிறிஸ்தவ மதகுருமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, து.ரவிகரன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். ஒரு பிள்ளையின் தந்தை இன்று மதியம் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அல்வாய் வடக்கு வியாபாரிமூலை பகுதியில் இடம் பெற்றுள்ளது.
நேற்று மதியம் ஒரு மணியளவில் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த சுரேஷ் விஜயகாந் வயது 28 என்ற ஒரு பிள்ளையின் தந்தையை உயிரிழந்துள்ளார்.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மரணத்திற்கான காரணம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாக்கியதுல் சாலியா பகுதியில் உள்ள வீடொன்றில், தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தற்கொலையில் ஈடுபட்ட தந்தை காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(14) காலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலங்களும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சம்பவத்தில் முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ் (வயது-29) மற்றும் முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா (வயது-15) ஆகியோர் சம்பவ இடத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தவர்களாவர்.
குழந்தைகள் இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. அதேவேளை , உயிரிழந்த குறித்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்ததாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அலுவலகப் பணியாளர் ஒருவர், 26 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்ததற்காக ‘India Book of Records’ சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
துவரிகேஷ் சுகர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ( Dwarikesh Sugar Industries Ltd) நிறுவனத்தில் எழுத்தாளராக பணியாற்றும் தேஜ்பால் சிங் என்பவர் தான் இந்த சாதனையை புரிந்துள்ளார்.
அலுவலக விடுமுறையின் போதும் பணி இவர் விடுமுறை எடுக்காதது மட்டுமல்லாது ஞாயிற்றுக் கிழமைகள், பண்டிகை தினங்கள் மற்றும் அலுவலகம் விடுமுறையின் போதும் பணியாற்றியுள்ளார்.
நிறுவனத்தில் 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி முதல் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2003 ஆம் ஆண்டில் ஒரே ஒரு நாள் மட்டும் தனது சகோதரனின் திருமணத்திற்காக விடுமுறை எடுத்துள்ளார்.
ஆண்டுதோறும் 45 நாட்கள் விடுமுறையை நிறுவனம் அளித்தாலும் இவர் ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்துள்ளார்.
அதேவேளை மனைவி, இரண்டு தம்பிகள் மற்றும் நான்கு குழந்தைகள் என பெரிய குடும்பத்துடன் வாழ்ந்து வரும் தேஜ்பால் சிங், ஒரு நாள் கூட அலுவலகத்திற்கு தாமதமாக சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38 ஆவது பட்டமளிப்பு விழாவில், ஊடகத்துறையில் ஆண்டுதோறும் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும், யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் இவ் ஆண்டு செல்வி கிருஷ்ணராஜா செல்வி வழங்கப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழா 14.03.2024, 15.03.2024 மற்றும் 16.03.2024 ஆகிய தினங்களில் நடைபெறுகின்றது.
14.03.2024 அன்று நடைபெறும் அமர்வின் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவியான இரத்தினபுரி மாவட்டத்தில் கொழும்புகாமம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜா செல்விக்கு, நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாகப் படித்துக் கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி இலங்கை இராணுவ ஊரடங்கு வேளையில் அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டில் வைத்து பெற்றோர் முன்னிலையில் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
நிலக்சனது ஞாபகார்த்தமாக அவருடன் யாழ். இந்துக்கல்லூரியில் ஒன்றாய்க் கற்ற 2004 உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்படும் “நிலா நிதியம்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கும்வகையில், தங்கப்பதக்கத்தை அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
இந்நிதியத்தின் அங்குரார்ப்பண சான்றிதழ் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலின் போது யாழ் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டு பின்னர் யாழ் பல்கலைகழகத்திடம் நிதி கையளிக்கப்பட்டது.
இதன்மூலம் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவனான புத்தளம் மாவட்டத்தில் கொட்டகை என்னும் கிராமத்தை சேர்ந்த சேர்ந்த ரமேஸ் மதுசங்கவிற்கு வழங்கப்பட்டது.
முன்னைய ஆண்டு மொனராகலை மாவட்டத்தில் மரகலை தோட்டம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த அமரர் செல்வி நவரத்னம் தில்காந்திக்கு ஏகாந்த நிலையில் வழகப்பட்டது.
அதற்கு முன்னய ஆண்டுகளில் மாத்தளை மாவட்டத்தில் சுதுகங்கை என்னும் கிராமத்தைச் சேர்ந்த மாணவியான செல்வி முனியப்பன் துலாபரணி, யாழ்ப்பாணம் உடுவிலைச்சேர்ந்த மாணவியான செல்வி அன்ட்கேசிகா லோறன்ஸ் ராஜ்குமார், யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த தினேஸ் விஜயதர்சினி ஆகியோர் பெற்றுக் கொண்டிருந்தனர்.
யாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கத்தினை இவ் ஆண்டு பெற்றுக்கொள்ளும் கிருஷ்ணராஜா செல்வியினது கருத்துப் பகிர்வு வருமாறு, எனது பெயர் கிருஷ்ணராஜா செல்வி.
நான் இரத்தினபுரி மாவட்டத்தில் கொழும்புகாமம் என்னும் கிராமத்தை பிறப்படமாகக் கொண்டுள்ளேன். எனது தந்தை தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் கூலித்தொழிலாளி. நான் எனது ஆரம்பக் கல்வியை இ/ நிவி/தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஆறு வரை பயின்றேன்.
பின் தரம் ஆறு தொடக்கம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரை இ/ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலயத்திலும் உயர்தரத்தினை இ/இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்திலும் கற்றேன்.
உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த பின் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது. எனக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை தொடர்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் ஊடகக் கற்கைகள் மற்றும் சமூகவியல் பாடங்களைத் தெரிவு செய்து பயின்று வந்தேன்.
இரண்டாம் வருடத்தில் இருந்து ஊடகக் கற்கைகள் துறையை சிறப்பு கற்கைகள்துறையாக தெரிவு செய்தேன். ஊடகக் கற்கைகள் துறையை சிறப்பு கலையாக தெரிவு செய்யும் போது இதுவரை அறிமுகமே இல்லாத ஒரு துறையினை தெரிவு செய்கிறோமே என சிறு அச்சம் என்னில் ஏற்பட்டது .
பின் விரிவுரையாளர்களின் கற்பித்தல் நுட்பங்களும், எமக்கான வழிகாட்டல்கள் மற்றும் அறிவுரைகளும் எனது அச்சத்தினை போக்கி ஆர்வத்தினை என்னுள் அதிகரித்தன. ஊடகக் கற்கள் துறையில் பாடவிதானத்தோடு செயல்முறை ரீதியான கற்கைகளும் இரண்டாம் வருடம் தொடக்கமே ஆரம்பமாகின.
கெமராவை பயன்படுத்தி புகைப்படம் எடுத்தல் ,சஞ்சிகைக்கு ஆக்கங்களை எழுதுதல் ,பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளுக்கான பக்கவடிவமைப்பு செய்தல், ஆவணப்படம் தயாரித்தல் ,பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதுதல் போன்றவற்றை அனுபவரீதியாக செயல்படுத்துவதற்கான தளத்தை ஊடகக் கற்கைகள் துறையால் பெற்றுக் கொண்டேன்.
அத்தோடு இறுதியாண்டில் தொழில்துறைசார்ந்த பயிற்சியினை அரச நிறுவனமொன்றில் பெற்றுக் கொண்டதும் அதன் மூலம் ஒரு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தமையும் மிகப்பெரிய வாய்ப்பு என்றே கூறலாம்.
விரிவுரைகளுக்கு அப்பால் ஊடகத்துறை சார்ந்தவர்களின், துறைசார் நிபுணர்களின் அனுபவப்பகிர்வுகள் மற்றும் ஊடகப் பயிற்சி கருத்தரங்குகளில் பங்கு பற்றியமை போன்றனவும் எமக்கான மேலதிக அறிவையும் அனுபவத்தையும் பெற்று தந்தது.
மும்மொழி புலமை,பால்நிலை அடிப்படையில் நடுநிலையான அறிவு கற்கும் போதே தொழில் அடிப்படையிலான பிரயோக அறிவு என்பன ஊடக கற்கைகள் துறையின் மூலம் எமக்கு கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதங்களாகும் .
தற்போது ஊடகக் கற்கைகள் துறையை சிறப்புக் கலையாகக் கொண்ட எமது சகோதரர்கள் பலர் இன்றும் பல்வேறான ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர் .
இதே போல் நானும் ஊடகத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருக்கின்றது . அந்த ஆர்வத்தின் ஒரு ஆரம்பமாக ஊடக கற்கைகள் துறையினால் ஏற்படுத்தி தரப்பட்ட ஒரு வாய்ப்பினை பயன்படுத்தி இலங்கை நாடாளுமன்றத்தில் தற்காலிக பணியாளராக சட்டமூல அலுவலகத்தில் தற்சமயம் பணியாற்றி வருகின்றேன்.
எதிர்காலத்தில் ஊடக ஒழுக்கநெறிகளுடன் கூடிய ஒரு சிறந்த ஊடகவியலாளராக எம் சமூகத்திற்காக எவ்வித பாகுபாடுகளுமின்றி பணியாற்றுவதே என் இலட்சியமாகும்.
அந்தவகையில் எமக்கான வழிகாட்டிகளாக நின்ற ஊடகக் கற்கைகள் துறையின் துறையின் முன்நாள் தலைவரும் கலைப்பீட த்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் சி. ரகுராமிற்கும் ஊடக கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறீ சங்கீரத்தனனுகும்,
விரிவுரையாளர்களான யூட் தினேஸ் கொடுதோர் மற்றும் அனுதர்ஷி கபிலன் ஆகியோருக்கும் எனக்கு கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க உதவியாய் இருந்த எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளை கூற கடமைப்பட்டுள்ளேன்.
அத்தோடு அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்கப்படுகின்ற தங்கப் பதக்கத்தினை எனக்களித்து கௌரவிக்கும் நிலா நிதியம் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். என்றுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, நாளை 14ம் திகதி முதல் எதிர்வரும் 16ம் திகதி வரை மூன்று நாள்கள் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ஒன்பது அமர்வுகளாக நடைபெறவுள்ளது.
இந்தப் பட்டமளிப்பு விழாவின் போது 2 ஆயிரத்து 873 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் 46 தங்கப் பதக்கங்கள், 09 புலமைப் பரிசில்கள் மற்றும் 48 பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
ஓமானில் வீட்டு வேலை செய்துவிட்டு நாடு திரும்பிய பெண்ணை ஏமாற்றி சுமார் 12 லட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்களை பெற்றுக் கொண்ட நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
பேஸ்புக் ஊடாக குறித்த பெண்ணை அடையாளம் கண்டுகொண்ட சந்தேக நபர், அவருடன் நெருங்கிய உறவை வளர்த்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புத்தேகம மல்வனேகம பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய பெண் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஓமானில் வீட்டு வேலை செய்யச் சென்றிருந்த நிலையில், லஹிரு மதுசங்க என்ற நபரை பேஸ்புக் ஊடாக அவர் அடையாளம் கண்டுள்ளார்.
இராணுவத்தை சேர்ந்தவர் என கூறிக்கொண்டு குறித்த நபர் அந்த பெண்ணுடன் உறவை தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண்ணை அழைத்து செல்வதற்காக இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்திற்குவந்துள்ளார்.
பின்னர் குறித்த நபர், குறித்த பெண்ணுடன் கொழும்புக்கு வந்து அவரது வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு கண்டிக்கு அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளார்.
இராணுவ முகாமுக்குச் செல்ல வேண்டும் எனக் கூறி கல்கமுவ பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பானம் ஒன்றை கொடுத்து மயங்க வைத்துள்ளார்.
குறித்த பெண் மயங்கியவுடன் ஏழரை லட்சம் ரூபாய் பணம், தங்க சங்கிலி, இரண்டு வளையல்கள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பனவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில், பாதிக்கப்பட்ட பெண் கல்கமுவ பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், கல்கமுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த ஜயசிறி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்