வவுனியா புதுக்குளம் பாடசாலை அதிபரைப்பற்றி வெளியான செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!!
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் பாடசாலை ஆசிரியர்களுக்கும் அதிபருக்கும் அவதூறு ஏற்படுத்துமுகமாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருப்பதாக கூறி இன்று (03.05.2017) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் மாணவர்களின் பெற்றோர்களால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில்...
வவுனியாவில் 69ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்!!
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் மேற்கொண்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 69ஆவது நாளாவும் இன்று(03.05.2017) தொடர்கிறது.
குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை...
வவுனியாவில் அரிசி ஆலையில் 160 நெல் மூட்டைகள் மாயம் : சந்தேகத்தில் இருவர் கைது!!
வவுனியாவிலுள்ள அரிசி ஆலை ஒன்றில் 160 நெல் மூட்டைகள் திருட்டு போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா...
வவுனியாவில் 68வது நாளாக இடம்பெறும் போராட்டம்!!
வவுனியாவில் கடந்த 68 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (02.05.2017) 68வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை...
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்கள் மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில்!!
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய புதிய அதிபருக்கு எதிராக மூன்றாவது நாளாக இன்று மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 4 வருடங்களுக்கு மேலாக செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய அதிபர் செ.தர்மரணட்னத்தின்...
வவுனியா செட்டிகுளம் ம.வி மாணவர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்த பெற்றோர் கண்டனம்!!
வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக பெற்றோர்கள், பழைய மாணவர்கள் , நலன் விரும்பிகள் ஒன்றினைந்து கடந்த 28.04.2017 அன்று காலை 10 மணியளவில் ஒன்றுகூடல் ஒன்று இடம்பெற்றது.
இவ்...
வவுனியாவில் 67 ஆவது நாளாக தொடரும் போராட்டம்!!
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 67வது நாளாகவும் இன்று (01.05.2017) தொடர்கிறது.
குறித்த போராட்டம் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும்,...
வவுனியாவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் புரட்சிகர மேதின ஊர்வலம்!!
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் புரட்சிகர மேதின ஊர்வலம் இன்று(01.05.2017) காலை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் ஆரம்பமாகி வவுனியா நகரசபை மண்டபத்தை சென்றடைந்தது.
இவ் ஊர்வலத்தின் போது அரசே அனைத்து அரசியல்...
வவுனியாவில் சிறுவன் தற்கொலை முயற்சி : அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!!
வவுனியா ஓமந்தையில் சிறுவன் ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் ஒன்று இன்று (01.05.2017) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
ஒமந்தை மாணிக்கவளவு , இலுப்பைக்குளம்...
வவுனியாவில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் மே தினம்!!
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனயின் (EPRLF) மே தினம் வவுனியா வீரபுரம் பகுதியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
செட்டிகுளம், வீரபுரம் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகிய பேரணி ஊர்வலம் வீரபுரம் பொது விளையாட்டு மைதானத்தை...
வவுனியாவில் றொக்கற் விளையாட்டுக்கழகம் நடத்தும் மாபெரும் விளையாட்டுப்போட்டி!!
வவுனியா கோவில்புதுக்குளம் றொக்கற் விளையாட்டுக் கழகத்தின் 41 வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் தமிழ் சிங்கள புத்தாண்டையிட்டும் நடத்தப்படும் மாபெரும் விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு நேற்று (30.04) காலை 8.00 மணிக்கு...
வவுனியாவில் கிராமங்களை நோக்கி ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன் மேதினம்!!
வவுனியா நகருக்குள் நடத்தப்பட்டு வந்த மேதினக் கூட்டம் இம்முறை இன்று (01.05.2017) தொழிலாளர்கள், விவசாயிகளை இணைத்து வவுனியா செட்டிகுளப் பிரதேசத்திலுள்ள வீரபுரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
வீரபுரம் பிள்ளையார் ஆலயத்திலிருந்து எதிர்வரும் முதலாம் திகதி...
வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!!
வவுனியா தவசிகுளத்தில் இன்று (01.05.2017) காலை 5.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா தவசிகுளத்தில் வசித்துவரும் ஜோகராஜா பிரதீப் (வயது 25)...
வவுனியாவில் நிலமெஹெவர ஜனாதிபதி நடமாடும் சேவை!!
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று (30.04.2017) காலை 10.30 மணியளவில் நிலமெஹெவர ஜனாதிபதி நடமாடும் சேவை வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா தலமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும்...
வவுனியாவில் அடங்காப்பற்று வன்னியின் ஆதிகாலத் தமிழர் வரலாறு நூல் வெளியீடு!!
வன்னியில் ஆதிகாலத்தமிழர்களின் வரலாற்றை எதிர்கால தமிழர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்ற உயரிய நோக்குடன் தொல்லியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான அருணா செல்லத்துரையின் அடங்காப்பற்று வன்னியில் ஆதிகாலத்தமிழர் வரலாறு எனும் நூல் வெளியீடு வவுனியா சுத்தானந்தா...
வவுனியாவில் நீண்டகாலம் திருமணம் செய்யாத மூவருக்கு அமைச்சர் றிசாட் தலைமையில் திருமணம்!!
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் மூன்று பேருக்கு திருமணம் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது.
வவுனியாவில் இன்று (30.04.2017) இடம்பெற்ற ஜனாதிபதி நடமாடும் செவையின் ஆரம்ப நிகழ்வுகள் காலை...