வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவுக்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தனது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து குறித்த ஆசிரியர் மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையிலேயே அவருக்கு இன்று (01.11) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை சுய தனிமைப்படுத்துவதற்கும், அவருடன் தொடர்புடையவர்களை இனங்காணப்பதற்கும் சுகாதரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தரம் 5 வரை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கற்பிக்கும் குறித்த ஆசிரியரும் பாடசாலைக்கு சென்று தரம் 1 மாணவர்களுக்கு கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சீர் செய்ய எந்தவொரு ஊழியரும் இருக்க மாட்டார்கள் என தொழிற்சங்கங்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளன.
நாட்டின் பொதுமக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது தமது நோக்கம் கிடையாது எனவும் இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் அமைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். எனினும் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சரி செய்ய எவரும் இருக்க மாட்டார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெற்கு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 3ம் திகதி மாபெரும் போராட்டமொன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை மற்றும் துறைமுக அதிகாரசபையின் ஊழியர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து ஊழியர்களும் ஒரு இடத்தில் ஒன்று கூடி போராட்டம் நடாத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வேண்டுமென்றே மின்சாரம் துண்டிக்கப்படாது என்ற போதிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சீர் செய்ய எவரும் இருக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார். யுகதனவி மின் நிலையத் திட்டம் குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ரஞ்சன் ஜயலால் கோரியுள்ளார்.
A 30 கோவிட் வைரஸ் திரிபு குறித்து உலகில் பல நாடுகள் கடும் அவதானத்துடன் இருந்து வருவதுடன் இலங்கையும் இது குறித்து உன்னிப்பான அவதானிப்பில் இருப்பதாகச் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த திரிபை ஒழிப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் என்ற வகையில் சுகாதார அமைச்சு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே கோவிட் வைரசின் A 30 திரிபு சம்பந்தமாக இலங்கையும் அவதானத்துடன் இருந்து வருவதாக மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டுப்பாடு தொடர்பான ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அஸ்ராசெனேகா உட்படப் பிரதான கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் அனைத்து பாதுகாப்புகளையும் இந்த புதிய வைரஸ் திரிபால் உடைக்க முடியும் எனப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கு நாடு முழுவதும் சந்தையில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரண்டு வகை சமையல் எரிவாயுகளில் ஒன்றை கூட கொள்வனவு செய்ய முடியாது நுகர்வோரும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக லாஃப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டப்ளியூ.கே.எச். வேகப்பிட்டிய தெரிவித்துள்ளார். எனினும் தினமும் 300 முதல் 400 தொன் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வங்கிகளில் டொலர் கிடைக்காததால், எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கடன் பத்திரங்களை பெற வங்கிகளை வணங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் வேகப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தமது நிறுவனம் வழமை போல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுத்து வருவதாகவும் லாஃப் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், லிட்ரோ எரிவாயுவின் கேள்வி அதிகரித்துள்ளது எனவும் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் கோவிட் தொற்று நோய் இன்னும் அதிகமாகப் பரவி வருவதால் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் இன்று முன்னணி இராணுவத்தினருக்குப் பூஸ்டர் தடுப்பூசியை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது..
“அன்றாடம் 500 முதல் 600 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையில் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் கோவிட் தொற்றாளர்களது எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.
மக்களின் வாழ்க்கையைக் கருத்தில்கொண்டு மாகாணங்களுக்கு இடையேயான கட்டுப்பாடுகள் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. எனவே, மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பெறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்” என்றார்.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (31.10.2021) இரவு வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக கொரோனா தொற்று ஒரு வயதுக் குழந்தை உட்பட மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை தனிமைப்படுத்துவதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெர்முடாவில் இலங்கை இளைஞன் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 30 வயதுடைய டிலான் சித்ரானந்த என்ற இலங்கை இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பெர்முடா பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை மாலை 4:10 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் பெர்மூடா வடக்கு கடற்கரை வீதியில் தனது காரை ஓட்டிச் சென்றபோது, மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில், இலங்கை இளைஞன் ஓட்டிய கார் கவிழ்ந்துள்ளது. இதனால் அவர் அவரது வாகனத்திற்கு அடியில் சிக்கியுள்ளார்.
பெர்முடா தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பெர்முடா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் சாலை விபத்தில் சிக்கி முன்னாள் கேரள அழகியும் அவரது தோழியும் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2019ம் ஆண்டில் மிஸ் கேரளா பட்டம் வென்றவர் அன்சி கபீர். இதே அழகி போட்டியில் இரண்டாவது இடத்திற்கு வந்தவர் அஞ்சனா ஷாஜன். இவர்கள் இருவருமே எர்ணாகுளம் பைபாஸ் சாலையில் வாகன விபத்தில் சிக்கியுள்ளனர்.
இருசக்கர வாகனம் ஒன்றுடன் மோதாமலிருக்க, இவர்கள் சென்ற வாகனத்தை திடீரென்று திருப்ப, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் அன்சி கபீர் மற்றும் அஞ்சனா ஷாஜன் ஆகியோர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
நால்வர் பயணித்த அந்த வாகனத்தில், எஞ்சிய இருவரில் மிகவும் ஆபத்தான நிலையில் ஒருவர் இருப்பதாகவும், இருவரையும் எர்ணாகுளம் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கேயே பலியான இருவரது சடலங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்கெய்ன் போதை மாத்திரைகளை விழுங்கிய நிலையில் நாட்டிற்குள் பிரவேசித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கென்ய நாட்டை சேர்ந்தவரை இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று காலை டுபாயில் இருந்து இலங்கை வந்துள்ள நிலையில் விமான நிலையத்தின் எக்ஸ்ட்ரே பரிசோதனை செய்யும் போது அவரது வயிற்றில் ஏதோ ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அங்கு மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனையில் அது கொக்கெய்ன் போதை மாத்திரைகள் என கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது வயிற்றில் மொத்தமாக 17 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராகம மற்றும் பெரலந்த ஆகிய இடங்களுக்கு இடையிலான ரயில் கடவையில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. எனினும் எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதான ரயில் மாா்க்கத்தின் தெமட்டகொட- பல்லேவெல ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையிலான கடவையில் சமிஞ்சை பிரச்சினை காரணமாக ரயில் சேவைகளில் இன்று காலை தாமதம் ஏற்பட்டது.
கோவிட் காரணமாக சுமாா் 6 மாதங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை இன்றே ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் கடும் மழை பெய்து வரும் நிலையில் நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது. இதனையடுத்து உடைப்பை தடுக்கும் நடவடிக்கை இரவில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன், தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி வருகின்றது.
அந்த வகையில், வவுனியாவில் நேற்றும் (31.10) மதியத்திற்கு பின் கடும் மழை பெய்தது. மழை காரணமாக வவுனியா, ஓமந்தை நொச்சிக்குளத்தின் நீர் வரத்து அதிகரித்த நிலையில் குளத்தின் கட்டு கீழ் இறங்கி உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது.
இதனையடுத்து மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் இராணுவத்தினர், நகரசபையின் தீயணைப்பு பிரிவு, கமநல அபிவிருத்தி திணைக்களத்தினர் இணைந்து குளக்கட்டில் மண் பைகளை இட்டு குளம் உடைப்பெடுக்காமல் தடுக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த குளம் உடைப்பெடுத்தால் அதன் கீழ் உள்ள 98 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் அழிவடைவதுடன், பல குடிமனைகளும் நீரில் முழ்கும் அபாய நிலை ஏற்படும். உடைபெடுப்பதை தடுக்கும் நடவடிக்கை இரவிரவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு தாய் மாமன் மகளை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து முதிர்காளை ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. தாய்க்கு கொடுத்த வாக்கை, அடுத்த நிமிடமே நிறைவேற்றிய தனயன் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
விழுப்புரம் திருக்காமு நகரைச் சேர்ந்தவர் தயாளன்.பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதிவறை எழுத்தராக பணிபுரிந்து வரும் இவர், 40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாயை பராமரித்து வந்தார்.
இந்த நிலையில் இவரது தாய் முத்தாலம்மாள் கடந்த இரு நாள்களுக்கு முன், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதையடுத்து, தனது மகன் தயாளனிடம் என்னால் உனக்கு திருமணம் செய்து பார்க்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டு முத்தாளம்மாள் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
இதைக் கேட்ட தயாளன், மருத்துவமனையில் தாயை பார்க்க வந்திருந்த தனது தாய் மாமன் கோனனூரை சேர்ந்த ஏழுமலை என்பவரது மகள் காயத்திரி என்பவரை, உறவினர்கள் மத்தியில் பேசி, திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தார்.
30 வயதாகியும் திருமணமாகாமல் இருந்த காயத்திரி சம்மதத்துடன் உடனடியாக திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் மணமகன் மற்றும் மணமகள் மாலை மாற்றிக் கொண்டனர். மணமகள் காயத்திரி கழுத்தில் தயாளன் தாலி கட்டி, நெற்றியில் திலகமிட்டார்.
மணமக்களுக்கு உடனிருந்த நண்பர்கள் செந்தில், அய்யனார், மோகன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர். இதைபார்த்து வியந்து போன மருத்துவமனைக்கு வந்திருந்த பொதுமக்கள் மணமக்களை வாழ்த்தினர்.
திருமணம் முடிந்ததும் தாயிடம் ஆசி வாங்க மருத்துவமனைக்கு மணமக்கள் சென்றனர். மருத்துவர்கள் வார்டினுள் அனுமதிக்காததால், தாயிடம் தகவலை தெரிவிக்குமாறு மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் கூறிவிட்டு, ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
பெற்ற தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற முரட்டு சிங்கிளாக இருந்த முதிர்காளையான தயாளன், மூன்று மணி நேரத்தில் முறை பெண்ணை மணந்து திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துள்ளது குறிப்பிடதக்கது.
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள கருமானூர் மருதன்விளை பகுதியைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி ஆதிரா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் தன்னுடன் முகநூலில் அறிமுகமாகி பழகி காதலனான, கேரளாவை சேர்ந்த நிகில் பிரசாத் என்பவர் தன்னுடைய புகைபடங்களை பெற்று மார்பிங் மூலம் ஆ.பா.சமாக சித்தரித்து வைத்துக் கொண்டு 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மி.ர.ட்.டுவதாகவும்,
அதனை அவர் சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் குறித்து வி.சா.ரணை நடத்த சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தர விடப்பட்டது.
வி.சா.ரணையில் தீவிரம் காட்டாமல் போலீசார் மெத்தனம் காட்டிய நிலையில் மீண்டும் மாணவி ஆதிராவை கடுமையாக மி.ர.ட்.டிய அந்த முகநூல் பிளாக்மெயிலர் ஆதிராவின் சில படங்களை வெளியிட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் அவமானம் தா.ங்.காமல் கடந்த 22 ந்தேதி அந்த மாணவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதாக கூறப்படுகிறது. எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் மாணவி உ.யி.ரை மா.ய்.த்.து.க் கொ.ண்.ட ச.ம்.பவத்தால் அ.தி.ர்ந்து போன பளுகல் போ.லீ.சார் ச.ம்.பவம் குறித்து வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.தனர்.
இது தொடர்பாக வி.சா.ரணை நடத்த 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பிளாக்மெயில் கா.த.லனை தேடிவந்த போ.லீ.சார், அவனது குடும்பத்தினரை வி.சா.ரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கிடையே மாணவி பயன்படுத்திய செல்போன் , லேப் டாப்பை ஆய்வு செ.ய்.தனர் . இதில் மாணவியை மி.ர.ட்.டியதற்கான பல்வேறு புகைப்பட ஆதாரங்கள், வீடியோக்கள் தொடர்பான தகவல்கள் இருந்தன.
த.ற்.கொ.லை.க்.கு முன் மாணவி, சம்பந்தப்பட்ட தன் காதலன் நிகில் பிராசத்துக்கு தனது த.ற்.கொ.லை தொ.டர்பான தகவல்களை வாட்ஸ் அப்பில் தெரிவித்துள்ளார். தனது அறையில் இருந்தவாறு கை நரம்பை அ.று.த்து ர.த்.த.ம் வெளியேறிய நிலையில் அதை வாட்ஸ் அப் மூலம் அந்த இ.ளைஞனுக்கு அனுப்பி இருந்தார்.
மேலும், தான் தூ.க்.கி.ல் தொங்க போவதாக கூறி , துப்பட்டா கட்டி இருந்த காட்சியையும் அனுப்பி வைத்து இருந்தார். இவற்றை முக்கிய த.ட.யமாக கைப்பற்றியுள்ளனர்.
இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் , முகநூல் பிளாக் மெயிலர் நிகில் பிரசாத், ஏற்கனவே ஒரு மாணவியுடன் பழகி ஏ.மா.ற்.றி மி.ர.ட்.டியதும் தெரிய வந்தது.
கேரளாவை சேர்ந்த நிகில் பிரசாத் ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த போது, தனிப்படை போலீசார் அவனை சுற்றிவளைத்து கைது செய்தனர். அங்கிருந்து அழைத்து வரப்பட்ட அவனிடம் பளுகல் கா.வல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிளாக்மெயிலர் நிகிழ் பிரசாத்தின் மொபைல் போனில் இருந்தும் அ.டி.க்கடி மாணவிக்கு, மார்பிங் செய்யப்பட்ட ஆ.பா.ச படங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்துள்ள காவல்துறையினர். இந்த பிளாக் மெயிலுக்கு உடந்தையாக இருந்த அவனது குடும்பத்தை சேர்ந்த சிலரை வலை வீசித் தேடிவருகின்றனர்.
முன் பின் தெரியாமல், முக நூலில் மட்டுமே நட்பாக பேசக்கூடியவர்களை நம்பி இதயத்தை பறிகொடுத்தால் முடிவில் என்னமாதிரியான விபரீதம் அரங்கேறும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சி.
வில்லிவாக்கம், ரெட்ஹில்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் லாவண்யா. செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராதாகிருஷ்ணன் என்பவருடன் திருமணமாகி மகன் மற்றும் 7 வயதில் மகள் ஆகியோர் உள்ளனர்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லாவண்யா தனியே வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் லாவண்யா பணிக்கு புறப்பட்டதும், இரவு வீட்டில் இருந்த கு.ழ.ந்.தைகளை சந்திக்க ராதாகிருஷ்ணன் சென்றுள்ளார்.
அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த அவர், அவரது ம.க.ளான வதனா ஸ்ரீயிடம், லாவண்யாவின் நடத்தை குறித்து விசாரித்துள்ளார். இதற்கு பதில் கூறாமல் வதனா ஸ்ரீ அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆ.த்.தி.ரமடைந்த ராதாகிருஷ்ணன், காய் வெ.ட்.டுவதற்காக வீட்டில் இருந்த க.த்தியை எடுத்து மகளின் வ.யிற்றில் ச.ர.மா.ரியாக கு.த்.தி.யு.ள்ளார். மேலும் ஆ.த்.திரம் தாளாமல் மகளின் க.ழு.த்தையும் அ.று.த்.துள்ளார்.
இதில் ப.டு.கா.யமுற்ற சி.று.மி, உதவிக்கேட்டு கூ.ச்சல் இடவே, ராதாகிருஷ்ணன் அங்கிருந்து தப்பியுள்ளார். அதன்பேரில் அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், ர.த்.த வெ.ள்.ளத்தில் கிடந்த சி.று.மியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவரை பரிதோதித்த மருத்துவர்கள் அவர் இ.ற.ந்.து.விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே சி.று.மியை கு.த்.தி.கொ.லை செ.ய்.து விட்டு, தலைமறைவாகி இருந்த ராதாகிருஷ்ணனை வில்லிவாக்கம் போலீசார் கைது செ.ய்.து.ள்ளனர்.
ம.னைவி மீதான ஆ.த்.தி.ரத்தில், பெற்ற மகளை தந்தையே கொ.டூ.ர கொ.லை செ.ய்.த ச.ம்.பவம் அப்பகுதியில் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் கோவிட் தொற்றுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசி நாளை முதல் வழங்கப்படவுள்ளது. சுகாதாரப்பணிப்பாளா் அசேல குணவா்த்தன இதனை தொிவித்துள்ளாா்.
இதன் முன்னுரிமை அடிப்படை பின்பற்றப்படும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா். சுகாதாரத்துறை முன்னிலைப் பணியாளா்கள், மற்றும் முப்படையினருக்கு இந்த முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
இதன்பின்னா் 60 வயதுக்கு மேற்பட்ட சுகவீனமடைந்துள்ளவா்கள், மற்றும் 30வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவா்கள் இறுதியாக 20வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இந்த மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அசேல குணவா்த்தன தெரிவித்துள்ளார்.
இதுவரை தடுப்பூசிகளை செலுத்தி 6 மாதங்கள் கடந்தவா்களுக்கு மூன்றாவது அளவாக பைஸா் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பசளை தொகைக்கு பணத்தை கட்டாயம் செலுத்த நேரிடும் என மக்கள் வங்கியின் பொது முகாமையாளர் ரஞ்சித் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
9 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது எனவும் அரச பசனை நிறுவனத்தின் குறைப்பாடுகளே இதற்கு காரணமாக அமைந்தது எனவும் யார் இதற்கான ஆலோசனைகளை வழங்கியது என்பது தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
பசளை மாதிரியின் பரிசோதனை அறிக்கை கிடைக்கும் முன்னர் கடன் பத்திரம் வெளியிடப்பட்டுள்ளது எனவும் தற்போது செய்வதற்கு எதுவுமில்லை எனவும் கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு கிடைக்கவில்லை என்றால், ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டிருக்கும். நீதிமன்ற உத்தரவும் நீடித்து இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் இலங்கை மத்திய வங்கி எந்த தவறையும் செய்யவில்லை எனவும் மக்கள் வங்கியின் பொது முகாமையாளர் மேலும் கூறியுள்ளார்.