வவுனியாவில் 22 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை : மழை காரணமாக சில விவசாயிகள் பாதிப்பு!!

பெரும்போக நெற்செய்கை..

வவுனியா மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பெரும் போகத்தில் நெற் பயிற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், மழை காரணமாக புழுதி விதைப்பில் ஈடுபட்ட சில விவசாயிகள் பதிப்படைந்துள்ளதாகவும் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் என்.விஸ்ணுதாசன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் பெய்து வரும் மழை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறுகிய காலத்தில் அதிகளவிலான மழை பெய்கின்றது. இதனால் குளங்கள் உடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளது. எல்லோரும் எப்பொதும் குளங்கள் தொடர்பில் அவதானமாக இருக்கவும்.

ஏதாவது உதவி தேவை எனில் கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு அல்லது உங்கள் பிரதேசங்களில் உள்ள கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உடனடியாக அறவிக்கவும். 24 மணி நேரமும் உங்களுக்கான உதவிகள் கிடைக்கும்.

வவுனியா மாவட்டத்தில் பெரும் போகத்தில் 22 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நெற் பயிற் செய்கையில் ஈடுபட்டுள்ளோம். தற்போது 60 வீதத்திற்கு அதிகமான வயல் நிலங்கள் பயிரிடப்பட்டுள்ளன.

ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டதற்கு அமைவாக 25 ஆம் திகதிக்கு பின் அதிக மழை வீழ்ச்சி வடக்கில் ஏற்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் புழுதி விதைப்பில் ஈடுபட்டுள்ள சிலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஏற்கனவே, குளங்கள் துப்புரவு செய்யப்பட்டு அதில் உள்ள பிரச்சனைகள் இனங்காணப்படாமல் இருந்தமையால் குளத்தில் என்ன பிரச்சனை உள்ளது என்பது தெரியாது. அப் பகுதி விவசாயிகளுக்கு கூட அது தெரியவில்லை. மழை பெய்து உடைக்கும் நிலையில் தான் அதனை பார்க்கக் கூடியதாகவுள்ளது.

இதனால் விவசாயிகள் தங்கள் குளங்களை துப்பரவு செய்து அதில் உள்ள பிரச்சனைகளை முன் கூட்டியே அடையாளம் கண்டு கொள்ளவும். இதன் மூலம் தான் வயல் நிலங்களையும், குடியிருப்புக்களையும் பாதுக்காக்க முடியும்.

நொச்சிகுளத்தில் 5 வருடமாக உமை இருந்துள்ளது. அதனை தடுக்காது இருந்துள்ளார்கள். அதனாலேயே குறித்த குளம் உடைப்பெடுக்கும் நிலைக்கு சென்றது. தற்போது தடுக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் சிறிய குளங்கள் அதிகம். எனவே மக்கள் கவனமாக இருக்கவும்.

செட்டிகுளம் துட்டுவாகை குளத்தில் உடைப்பெக்க கூடிய நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். அதனை உடைப்பெடுக்காது தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

வவுனியாவிலுள்ள மருந்தகங்கள் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை!!

மருந்தகங்கள்..

வவுனியா மாவட்டத்திலுள்ள மருந்தகங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் அதிகரித்த நிலையில் சுகாதார அதிகாரிகளுக்கும் மருந்தக உரிமையாளர்களுடான இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் இவ்விடயத்தினை தெரிவித்திருந்தார்.

வவுனியா மாவட்டத்தில் கொவிட் -19 தொற்று காரணமாக சுகாதார பிரிவினருக்கு ஏற்பட்ட வேலைப்பழுவிற்கு மத்தியில் எம்மால் மருந்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த காலப்பகுதியில் ஒர் சில மருந்தகங்கள் தொடர்பில் எமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

அந்த அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் மருந்தகங்கள் மீது மிகக் கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளது என வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்ததுடன்,

மருந்தக உரிமையாளர்களுக்கு சட்டதிட்டங்கள் தொடர்பில் தெளிவு வழங்கப்பட்டதுடன் அந்த சட்டதிட்டங்களுக்கு இனங்க செயற்பட வேண்டுமெனவும் , மருந்தகங்களில் மருந்தாளர் கட்டாயமாகும் , மருந்துகள் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மாத்திரம் கொள்வனவு மேற்கொள்ள வேண்டும்,

வைத்தியரின் சிபாரிசு இன்றி மருந்துகள் வழங்கப்பட கூடாது, மருந்தகங்களில் பணியாற்றும் மற்றைய ஊழியர்களும் மருந்துகள் தொடர்பில் அறிவுகளை பெற்றுக்கொண்டிருந்தல் அவசியம்,

மருந்தகங்களுக்கு குளிரூட்டி அவசியம் ஆகியவற்றினை மருந்தகங்கள் பின்பற்ற தவறினால் அந்த மருந்தகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் சுகாதாரப் பிரிவினர், மருந்தக உரிமையாளர்கள், உணவு, மருந்து பாதுகாப்பு அதிகாரி, வர்த்தக சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

93 இலட்சம் பயனர்களின் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம்!!

வாட்ஸ்அப்..

இந்தியாவில் ஜூலையிலிருந்து மொத்தம் 93 லட்சம் பயனர்களின் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம், கடந்த செப்டம்பரில் மட்டும் 22 லட்சம் கணக்குகளை முடக்கியதாகத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அந்நிறுவனம் வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில், கணக்குகளை முடக்கவும், பாதுகாப்பு தொடர்பாகவும் செப்டம்பரில் 560 பயனர்கள் புகாரளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ‘ரிபோர்ட்’ வசதியைப் பயன்படுத்தி பயனர்கள் அளித்த எதிர்மறை கருத்துக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

வவுனியா இறம்பைக்குளம் அபிவிருத்தி உத்தியோகத்தரை இடமாற்ற மூன்று கிராம அபிவிருத்தி சங்கங்கள் கோரிக்கை!!

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இறம்மைக்குளம் அபிவிருத்தி உத்தியோகத்தரை இடமாற்றுமாறு கோரி மூன்று கிராம அபிவிருத்தி சங்கத்தினர் கூட்டாக இணைந்து பிரதேச செயலாளர் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் , மாவட்ட அபிவிருத்தி குழு இணைப்பாளர் ஆகியோருக்கு மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது கிராம சேவகர் பிரிவான இறம்பைக்குளம் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமைபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அரசினால் அறிமுகம் செய்யப்பட்ட 3 மில்லியன் ரூபாய் பாதீட்டு திட்டத்தில் எமது மக்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்டாத தன்னிச்சையான பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளமை எமக்கு ஆதாரபூர்வமாக தெரியவந்துள்ளது.

மேற்படி நபரால் பரித்துரைக்கப்பட்ட பல விடயங்கள் மக்கள் பணத்தினை வீணாக்கும் செயற்பாடு மட்டும் அன்றி இதனை ஒரு முறைகேடாகவே நாம் பார்க்கின்றோம்.

ஆகவே குறித்த நபரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை நிராகரித்து மேற்படி கூட்டத்தினை மீண்டும் ஒழுங்கு செய்து சரியான முடிவினை எடுப்பது மட்டுமன்றி மேற்படி உத்தியோகத்தர் தனது அலுவலகத்திற்கு வருவதோ மக்கள் சந்திப்புக்களை முறையாக மேற்கொள்வதோ தனது கடமையை செய்வதில் ஆர்வம் இல்லாமை போன்ற காரணங்களினால் மேற்படி தபரை எமது கிராம சேவகர் பிரியில் இருந்து மாற்றி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் சின்னப்புதுக்குளம் கிராம அபிவிருத்தி சங்கம் , இறம்பைக்குளம் கிராம அபிவிருத்தி சங்கம், சகாயமாதாபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் கையொப்பமிட்டு பிரதேச செயலாளர் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைப்பாளர் ஆகியோருக்கு கையளித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் குறித்த இறம்பைக்குளம் அபிவிருத்தி உத்தியோகத்தரை வினவிய போது,

சுற்றுநிருபத்தில் உள்வாங்க முடியாத விடயங்களை இவர்கள் கோரியமையினால் அவற்றை 3 மில்லியன் ரூபாய் பாதீட்டு திட்டத்தில் உள்வாங்க முடியவில்லை. இவ்விடயமே அவர்களுக்கு அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது தவிர வேறு எவ்வித விடயங்களும் இல்லை என தெரிவித்தார்.

வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!!

போராட்டத்திற்கு அழைப்பு..

வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக எதிர்வரும் 10ஆம் திகதி வவுனியா வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளருமான ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு பகுதியில் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்கள் தொடர்பில் வடக்கு – கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் கூட்டம் ஒன்று வவுனியா வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா (ஈபிஆர்எல்எப்), ஜி.ரி.லிங்கநாதன் (புளொட்), வவுனியா வடக்கு பிரதேசசபைத் தலைவர் தணிகாசலம் (தமிழரசுக் கட்சி),

புதிய மாக்சிச லெனினச கட்சியைச் சேர்ந்த நி.பிரதீபன், வவுனியா வடக்கு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஜனநாயக போராளிகள் கட்சி பிரதிநிதிகள், தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவர் ந.கருணாநிதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, வவுனியா வடக்கில் இன விகதாசாரத்தை மாற்றியமைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த தமிழ் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் இணைந்து செயல்பட தீர்மானிக்கப்பட்டதுடன்,

எதிர்வரும் 10ஆம் திகதி வவுனியா வடக்கு பிரதேச செயலகம் முன்பாக காலை 10 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த போராட்டத்திற்குத் தமிழ் மக்களின் இருப்பிலும், தமிழ் மக்களின் அடையாளத்தைப் பாதுகாப்பதிலும் அக்கறை கொண்ட அனைத்து தரப்புக்களையும் கலந்து கொண்டு ஜனநாயக ரீதியாகக் குரல் கொடுக்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கணவனுக்கு மனைவி செய்த செயல் வினையான விபரீதம்!!

தூத்துக்குடி..

தூத்துக்குடி தாளமுத்துநகர் அட்டகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம், கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சுப்புலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் கு.டி.த்து விட்டு வீட்டில் மனைவியுடன் த.க.ரா.றில் ஈ.டு.பட்டதாக தெரிகிறது. இதனால் ஆ.த்.தி.ரமடைந்த அவரது மனைவி சுப்புலட்சுமி, க.ணவரை சத்தம் போடாமல் இருக்கச் சொல்லி மி.ர.ட்.டியுள்ளார்.

ஆனாலும் ஆறுமுகம் தொடர்ந்து புலம்பி தீர்த்ததை தாங்கமுடியாத அவர், போர்வை துணியை கொண்டு ஆறுமுகத்தின் க.ழு.த்தை சுற்றி இ.று.க்கியதாக கூறப்படுகிறது. இதன்பின் ஆறுமுகம் ம.ய.ங்கிவிட்டார்.

இந்நிலையில், காலையில் ஆறுமுகத்தை தட்டி எழுப்பும் போது அவர் அசைவற்று கிடந்ததை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் தாளமுத்து நகர் காவல் நிலையத்துக்கு சுப்புலட்சுமி தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் ச.ம்.பவ இடத்திற்கு வந்த போ.லீ.சார் ஆறுமுகத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆறுமுகம் ஏற்கனவே இ.ற.ந்.துவிட்டதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக ச.ம்பவ இடத்தை ஆய்வு செய்த மாவட்ட கா.வல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்,

ஆறுமுகத்தின் ம.னைவி சுப்புலட்சுமியிடம் கணவர் இ.ற.ந்தது குறித்து விசாரணை நடத்தினார். மேலும், ம.ர.ணம் தொடர்பாக வ.ழ.க்குப்பதிவு செய்த தாளமுத்து நகர் போலீசார் தீ.வி.ர வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.

இளம் தாய்க்கு உறவினர்களால் நேர்ந்த சோகம் : கதறும் குழந்தைகள்!!

திருவாரூர்…

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த கொக்கலாடி அரைக்கரை பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு ராமமூர்த்தி என்பவருக்கு நிலத்தை ஒத்திகைக்கு கொடுத்துள்ளளார்.

தற்போது இருவரும் இ.ற.ந்த நிலையில், வேலாயுதத்தின் மருமகள் விமலா, ராமமூர்த்தியின் மகன் ரவி மற்றும் மருமகள் ரேணுகாவிடம் தனது மாமனாருக்கு சொந்தமான நிலத்தை கொடுக்கும் படி கேட்டுள்ளார்.

ஆனால் ரேணுகா நிலத்தை கொடுக்க முடியாது என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோ.த.லில் ஒருவரை, ஒருவரை க.த்.தி.யா.ல் தா.க்.கி.க் கொ.ண்.டு.ள்ளனர். இதில் க.த்.தி.யால் கு.த்.தி.ய.தி.ல் விமலா ச.ம்.ப.வ இ.ட.த்திலேயே உ.யி.ரி.ழ.ந்.தார்.

இதையடுத்து வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.த போ.லீ.சார் ரவி அவருடைய ம.னை.வி ரேணுகா மற்றும் அவருடைய சகோதரர்களை கை.து செ.ய்.து வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான 4 நாட்களில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

அரக்கோணம்…

அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (31). இவர் மருந்து விநியோகஸ்தர். தாம்பரம் பெருங்களத்தூரை சேர்ந்த கார்த்திகா (30). இவர் தாம்பரம் தனியார் மருத்துவமனை மருத்துவர்.

இவர்கள் இருவருக்கும் கடந்த மாதம் 28 ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் பெருங்களத்தூரில் உள்ள மனைவியின் தாய் வீட்டிலிருந்து அரக்கோணம் வீட்டிற்கு செல்ல இன்று அதிகாலை காரில் புறப்பட்டனர்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அருகே உள்ள மப்பேடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பூந்தமல்லி – அரக்கோணம் நெடுஞ்சாலையில் கூவம் அருகே சென்று கொண்டிருந்த போது அரக்கோணத்திலிருந்து எதிரே வந்த சிமெண்ட் டேங்கர் லாரி கூவம் வளைவில் லாரி கட்டுப்பாட்டை இ.ழ.ந்து கார் மீது கவிழ்ந்தது.

இதில் காருக்குள் இருந்த மருத்துவர் கார்த்திகா, அவரது கணவர் மனோஜ் குமார் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மப்பேடு போலீசார் ச.ம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேரம் போ.ராட்டத்திற்கு பிறகு லாரியை அப்புறப்படுத்தினர்.

பிறகு காரை உடைத்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த வி.சாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 நாளில் விபத்தில் சிக்கி புதுமண தம்பதி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் இரண்டு நாட்களுக்கு மின் தடையா? மின்சார சபையின் அறிவிப்பு வெளியானது!!

மின்சார சபையின் அறிவிப்பு..

நாட்டில் நாளை அல்லது நாளை மறுதினம் மின்தடை ஏற்படாது எனவும், அது குறித்த சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ இதனைக் குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மின்சாரசபை ஊழியர்களும் நாளை நண்பகல் 12 மணிக்கு கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக ஏனைய தொழிற்சங்கங்களும் நாளைய தினத்தில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில், நாளை மற்றும் நாளை மறுதினம் நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்படலாம் என பரவலாக கூறப்பட்டு வந்த நிலையில் மின்சார சபை குறித்த அறிவிப்பினை விடுத்துள்ளது.

மேலும், இவ்வாறு மின்தடை ஏற்படலாம் என கருதி நாட்டின் பல பாகங்களில் உள்ள மக்கள் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்காக பொது மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நோக்கி படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீனியின் விலை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு!!

சீனி, அரிசி..

நாட்டில் அமுலில் இருந்த சீனிக்காக நிலவிய கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்ற வாழ்க்கை செலவுக் குழு கூட்டத்தில் இத தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை முதல் வெள்ளை சீனி கிலோவொன்றின் மொத்த விலையை 135 ரூபா முதல் 140 ரூபாவரை விற்பனை செய்யவும், 150 ரூபா சில்லறை விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 976 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக, இலங்கை சீனி இறக்குமதியாளர் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்த சீனி கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர்களை வழங்க நிதியமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

விபத்தில் இறந்த மிஸ் அழகியின் கடைசி பதிவு : நண்பர்கள் உருக்கம்!!

அன்சி கபீர்..

இந்தியாவில் நேற்று நடந்த கோர விபத்தில் கேரள அழகியும் மற்றும் அவரது தோழியும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவணந்தபுரத்தில் வசித்து வருபவர் அன்சி கபீர். இவர் 2019ஆம் ஆண்டு மிஸ் கேரள பட்டம் வென்றுள்ளார். திருச்சூரை சேர்ந்த அஞ்சனா மாடலிங் துறையில் உள்ளார்.

இவர்கள் இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் இருவரும் சில நண்பர்களுடன் காரில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கியது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சாலை விபத்தில் உயிரிழந்த தோழிகள் இருவரும் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர்கள்.

அன்சி கபீர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கடைசியாக போஸ்டில் இது போக வேண்டிய நேரம் எனப் பதிவிட்டு ஒரு அடர்ந்த வனத்தில் நடந்து செல்வது போன்ற வீடியோவை பதிவு செய்துள்ளார்.

அன்சி கபீருக்கு அவரது மரணம் குறித்து முன்பே தெரிந்துவிட்டதாக என இந்த விடியோவுக்கு கீழ் அவரது நண்பர்களும், இன்ஸ்டாவில் அவரை பின் தொடர்பவர்களும் சோகமான கமெண்ட்களை பதிவு செய்துள்ளனர்.

ஆபத்தை மறந்து மோசமான நடவடிக்கையில் ஈடுபடும் பெருமளவான மக்கள்!!

சுற்றுலா பகுதிகளில்..

இலங்கையில் பல மாதங்களாக அமுலில் இருந்த மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் எம்பிலிப்பிட்டிய சந்திரிகா குளம் உள்ளிட்ட பல சுற்றுலா பகுதிகளில் மக்கள் பெருமளவானோர் ஒன்றுகூடி வருகின்றனர்.

இவர்களில் எவரும் சுகாதார விதிமுறைகள் எதனையும் பின்பற்றாமல், நடந்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகாதார விதிமுறைகளை மீறி நடப்பதால் எதிர்காலத்தில் மற்றுமொரு,

கோவிட் அலை ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக பல தரப்பினராலும் எச்சரிக்கை விடுக்கப்படும் போதும் இவை எதனையும் கருத்தில் கொள்ளாது பெரும்பாலானோர் மோசமாக செயற்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

எனவே பொதுமக்கள் சுகாதார தரப்பினரின் எச்சரிக்கைகளை கருத்தில் கொண்டு நாட்டை மற்றுமொரு கோவிட் கொத்தணி ஆபத்திற்குள் தள்ளாமல் நடந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரிசிக்கு தட்டுப்பாடு என்றால் மரவள்ளி கிழங்கை சாப்பிடுங்கள் : இலங்கை மக்களுக்கு சமல் ராஜபக்ச வழங்கிய அறிவுரை!!

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது, கடந்த காலங்களில் கிராமங்களில் மரவள்ளி கிழங்கு, பாசி பயறு போன்றவற்றை உண்டதாக நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாண் சாப்பிடுவதை விட மரவள்ளி கிழங்கு, பாசி பயறு சாப்பிடுவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் மரவள்ளி கிழங்கு புற்று நோய்க்கும் சிறந்த மருந்து எனவும் அவர் கூறியுள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற பூஜை ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நானும் ஒரு விவசாயி, நான் சேதனப் பசளையை பயன்படுத்தி பயிர் செய்தேன். புதியவர்களுக்கு இது புதிய அனுபவம் தொடர்ந்தும் செய்தால், வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்.

முதல் போகத்தில் அனுபவம் கிடைக்கும். அறுவடை குறைந்தால், இழப்பீடு வழங்கப்படும் என உறுதியும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அஞ்ச தேவையில்லை.

ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் எழுப்பும் குரலை கேட்டால், சேதனப் பசளை சிறந்தது, அதனை உடனடியாக செய்வதே தவறு என்று கூறுவதை கேட்க முடிகிறது.

எவரும் சேதனப் பசளை மூலமாக பயிர் செய்கையை எதிர்க்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது. மக்களுக்கு நாம் விஷமற்ற போஷாக்குள்ள உணவை வழங்க வேண்டும்.

பல்தேசிய நிறுவனங்கள் தேவையில்லை என கடந்த காலங்களில் கோஷமிட்டனர். தற்போது இரசாயன பசளையை இறக்குமதி செய்து அந்த நிறுவனங்களை வைத்துக்கொள்ளுமாறு கூறுகின்றனர். இவற்றை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எமது நிலங்களில் மரவள்ளி கிழங்கு சிறப்பாக வளரும். 60க்கும் மேற்பட்ட தேசிய கிழங்கு வகைகள் இருக்கின்றன. பாசி பயறு , கௌப்பி போன்ற பயிர்கள் இருக்கின்றன.

இவற்றை உணவுக்காக எடுப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இரசாயன பசளைக்காக எமது பணம் செலவாகின்றது. இரண்டு தரப்பினரும் இது பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம்.

அரிசிக்கு தற்போதும் தட்டுப்பாடு நிலவுகிறது. எந்தளவு தொகை அரிசி இருந்தாலும் குறைந்த வருமானம் பெறுவோருக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றனர்.

குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு எப்படி குறைந்த விலையில் அரிசியை வழங்கலாம் என சிந்திக்கின்றனர் எனவும் சமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

மின்சார ஊழியா்களின் பணிநிறுத்தம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்!!

மின்சார ஊழியா்கள்..

திட்டமிப்பட்டபடி, நாளை நவம்பா் 3ஆம் திகதி பணி நிறுத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என்று இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

எனினும் பராமரிப்புச் சேவையில் இருக்கும் ஊழியர்களை கொழும்புக்கு அழைக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை, ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளாா்.

அனல்மின் நிலையங்களில் கடமையாற்றும் அத்தியாவசியப் பணியாளர்கள் மற்றும் அவசர பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுபவர்களை தமது தொழிற்சங்கம் அழைக்காது என்று அவர் தெரிவித்தார். இந்தநிலையில் பணிநிறுத்தம் தொடா்பில் நாளை நவம்பர் 3ஆம் திகதியின் பின்னா் ஆலோசிக்கப்படும் என்று ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டுள்ளாா்.

இதற்கிடையில், 1996 இல் 72 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையை போன்று நவம்பர் 3 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஏற்கனவே மின்சாரசபையின் தொழிற்சங்க கூட்டமைப்பு அண்மையில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கெரவலப்பிட்டியில் உள்ள யுகதனவி எல்என்ஜி மின்சார உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனத்திற்கு மாற்றும் அரசாங்கத்தின் ஒப்பந்தத்திற்கு எதிராகவும்,

கேள்விப்பத்திர நடைமுறைகள் இன்றி எரிவாயுவை விநியோகிக்கும் ஏகபோக உரிமையை அமெரிக்க தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தமைக்கு எதிராகவும் மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தொடா்ந்தும் தமது எதிா்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கருத்து முரண்பாடு!!

ஐக்கிய மக்கள் சக்தி..

ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துவ பண்டார தலைமையில் நடைபெற்ற போது கட்சி உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது.

வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள விருத்தினர் விடுதி ஒன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ரசிக்கா பிரியதர்சினி தலைமையில் குறித்த கூட்டம் இன்று (02.11) நடைபெற்றது.

இதன்போது கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் அமைப்பாளர்கள், ஆதரவாளர்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டது. இதன்போது அக் கட்சியின் வவுனியா மாவட்ட சிரேஸ்ட உறுப்பினர்கள் தாம் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்திகாக செயற்படுகின்ற போதும் தாம் புறக்கணிக்கப்படுவதாகவும், திட்டமிட்டு தம்மை தற்போது கட்சியின் மாவட்ட பதவிகளில் உள்ளோர் ஓரம்கட்டுவதாகவும் குற்றம் சாட்டினர்.

கட்சியினால் தமக்கு எந்த விடயங்களும் அறிவிக்கப்படுவதில்லை எனவும், கட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் எந்தவித செயற்பாடுகளும் முன்னெடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.

பிறிதொரு ஆதரவாளர், கட்சியின் பெயரால் மக்களிடம் பணம் பெற்றவர்களே கட்சியில் இருந்து ஓதுக்கி இருப்பதாகவும், திட்டமிட்டு எவரையும் கட்சி ஓரங்கட்டவில்லை எனவும் தெரிவித்ததுடன், கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது பிறிதொரு உறுப்பினர், ஊடகங்கள் முன் எமது கட்சி பிரச்சனையை கதைத்து அதனை பெரிதாக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

வேறு பல உறுப்பினர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்ததையடுத்து கருத்தறியும் செயற்பாடு நிறுத்தப்பட்டு கட்சியின் செயலாளரும், பாராமளுன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துவ பண்டார உரையாற்றியிருந்தார். இதன் பின் கட்சி உறுப்பினர் சிலரை தனித்தனியாக சந்தித்து பேசியிருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏரான் விக்கிரமரட்ண, புத்திக பத்திரண மற்றும் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர் உமா சந்திர பிரகாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா பேராறு நீர்த்தேகத்தின் வான்கதவுகள் திறக்கப்படவுள்ளமையால் மக்களை அவதானமாக இருக்குமாறு அவசர கோரிக்கை!!

பேராறு நீர்த்தேக்கம்

வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளமையால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அ.வதானமாக இருக்குமாறு மாவட்ட அ.னர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் திலீபன் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றது.

அந்தவகையில் பேராறு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளது. இதன் காரணமாக பேராறு நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அ.வதானமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக, பேராறு நீர்த்தேக்கத்தின் கீழ் உள்ள புதுக்குளம், சாஸ்திரிகூழாங்குளம், ஈச்சங்குளம், மருதமடு, பாலமோட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களை அவ.தானமாக இருக்குமாறும் மாவட்ட அ.னர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.