பல அத்தியாவசிய உணவு பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிழங்கு, பருப்பு, சீனி, உட்பட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லை என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் நாட்டில் அத்தியாவசிய இறக்குமதி பொருட்களுக்கு பாரிய தடுப்பாடு ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக பொருட்களின் விலை அதிகரிக்கும் என அதன் ஊடக பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது வரையிலும் டொலர் தட்டுப்பாடு காரணமாக சீனியை ஏற்றிவந்த கொள்கலன் துறைமுகத்தில் சிக்கியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார் அத்தியாவசிய உணவு பொருட்களுக்காக குறைந்தபட்சம் 100 – 110 மில்லியன் டொலர் பணம் மாதாந்தம் செலவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளின் பாதுகாப்பையும் உடைக்கக் கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. A.30 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வகை வைரஸ் குறித்து தற்போது உலகின் பல நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
இலங்கையும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்களை புறக்கணிப்பதால் வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் அனைத்து தடுப்பூசிகளின் பாதுகாப்பையும் உடைக்கக்கூடிய புதிய தடுப்பூசிகளைத் தேடுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இது பரவினால் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் எனவும் அதனால் உலகத்தின் கவனம் அதன் மீது குவிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே, இதுதொடர்பில் நாமும் அவதானம் செலுத்த வேண்டும்.
கொரோனா முற்றாக நிறைவுக்கு வந்துவிட்டது என்று எண்ணி மக்கள் செயற்பட்டால் மேலும் நான்கே வாரங்களில் இந்தத் திரிபின் பிரதிகூலத்தை அனுபவிக்க நேரிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளாா்.
முல்லைத்தீவு – முள்ளியவளை பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
முள்ளியவளை 4ஆம் வட்டாரத்தினை சேர்ந்த முள்ளியவளை வித்தியானந்த கல்லூரியில் கல்விகற்று சாதாரண தர பரீட்சை எழுதிய 16 அகவையுடைய வர்சிகா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 19.10.21 அன்று வீட்டில் தவறான முடிவெடுத்த நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், அங்கு சிகிச்சையளிக்க முடியாத நிலையில் யுவதி மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் கேரள கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து நேற்றையதினம் (30.10.2021) குறித்த பகுதியில் தேடுதல் நடாத்திய போது,
வீடொன்றிலிருந்து 3 கிலோ 700 கிராம் கேரள கஞ்சாவினை மீட்டுள்ளனர். அதனை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளிற்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா – மகாகச்சக்கொடி பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் தரம் 5இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஏனைய மாணவர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்த தொடர் முடக்கநிலை நீக்கப்பட்டு ஆரம்ப பிரிவு மாணவர்களிற்கான பாடசாலை கல்வி செயற்பாடுகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வவுனியா மகாகச்சக்கொடிய பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த மாணவனின் வகுப்பறையில் இருந்த ஏனைய மாணவர்களிற்கு நாளைய தினம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கோவிட் தடுப்பூசி சான்றிதழ் பாவனையை இறுக்கமாக்கும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அதற்கமைய பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் உட்பட மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் நுழையும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இதுவரையில் நாட்டு மக்களின் சனத்தொகையில் 30 வயதிற்கு மேற்பட்ட 70 சதவீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, நாட்டு மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 4 மணி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதாக கோவிட் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது. அதற்கமைய 6 மாத காலங்கள் நீடித்த மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு இன்றைய தினம் முடிவுக்கு வந்துள்ளது.
அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை நாளை முதல் முழுமையாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் வானிலையில் இன்று வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது. பல இடங்களில் குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இந்தநிலையில் இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வானிலை மையம் கோரியுள்ளது.
காதலிக்க மறுத்த கல்லூரி மா.ணவியின் வீட்டிற்குள், ந.ள்ளிரவில் பு.குந்த க.ல்லூரி மா.ணவர் ஒ.ருவர், கா.தலிக்க க.ட்டாயப்படுத்தி மா.ணவியின் க.ழு.த்.தி.ல் க.த்.தி.யா.ல் அ.று.த்.த ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி பகுதியில் உள்ள தனியார் க.ல்லூரியில் படித்து வரும் மா.ணவி ருக்கிசிங்கிடம் அவருடன் படிக்கின்ற உறவுக்கார இளைஞர் பிரேம் சிங் கா.தலை தெ.ரிவித்துள்ளார்.
தான் படிப்பதற்காக க.ல்லூரிக்கு வந்திருப்பதாக கூறி அவரது கா.தலை ருக்கி சிங் நி.ராகரித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று மா.ணவி ருக்கி சிங் தன்னுடைய வீட்டில் உள்ள ப.டுக்கை அ.றையில் அ.யர்ந்து தூ.ங்கிகொண்டிருந்த போது ந.ள்ளிரவு பிரேம் சிங் திடீரென்று வீட்டின் க.த.வை உ.டை.த்.து உ.ள்.ளே பு.கு.ந்.தா.ர்.
ருக்கிசிங் ப.டுக்கை அ.றைக்குள் சென்று தன்னிடம் இ.ருந்த க.த்.தி.யா.ல் ருக்கிசிங் க.ழு.த்.தி.ல் வை.த்.து த.ன்னை காதலிக்க கோ.ரி மீண்டும் க.ட்.டா.ய.ப்படுத்தியதாக கூறப்படுகின்றது.
ஆனால் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததோடு கா.தலிக்கவும் ம.றுத்துள்ளார். இதையடுத்து ருக்கி சிங்கின் க.ழு.த்.தை அ.று.த்.த.தோ.டு, அ.வரது கை ம.ற்றும் கா.லி.ல் வெ.ட்.டி.யு.ள்.ளா.ன்.
வ.லி.யா.ல் ச.த்.த.மி.ட்.ட ருக்கிசிங்கின் அ.ல.ற.ல் கே.ட்டு அங்கு வந்த அவருடைய பெ.ற்றோர் பிரேம் சிங்கை ம.ட.க்.கி.ப் பி.டி.த்.து த.ர்.ம அ.டி கொ.டுத்து தூ.ணி.ல் க.ட்.டி.வை.த்.த.ன.ர். போலீசாரை வரவழைத்து பிரேம்சிங்கை அ.வர்களிடம் ஒ.ப்படைத்தனர்.
பிரேம் சிங்கை கை.து செய்த போலீசார் அவர் மீ.து கொ.லை மு.யற்சி வ.ழக்கு ப.திவு செ.ய்து வி.சாரணை ந.டத்தி வ.ருகின்றனர். ப.டு.கா.ய.ம.டை.ந்.த ருக்கிசிங் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சே.ர்க்கப்பட்டு தற்போது சி.கிச்சை அ.ளிக்கப்பட்டு வ.ருகின்றது.
யூடியூப் பார்த்து பள்ளி மாணவி ஒருவர் தனக்கு தானே பிரசவம் பார்த்த ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், கூட்டக்கல் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்த நிலையில் அவரது வீட்டில் அருகே வசித்தும் வரும் 21 வயது இளைஞருடன் காதல் மலர்ந்தது. இருவரும் அ.டி.க்.கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். இதனால் மாணவி க.ர்.ப்பமடைந்தார். 18 வயது ஆன பிறகு திருமணம் செ.ய்.து கொள்வதாக மாணவிக்கு இளைஞர் வா.க்கு கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் கர்ப்பமாக இருப்பதை பெற்றோரிடம் மறைத்த மாணவி தனக்கு உ.டல்நிலை சரியில்லை என கூறிவந்துள்ளார். இதனிடையே க.ர்ப்பத்தை மறைத்த மாணவிக்கு பிரசவ வ.லி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து செ.ய்வதறியாத மாணவி, வீட்டில் உள்ள தனது அறையில் செல்போனில் யூடியூப் மூலம் பிரசவம் பார்ப்பது எப்படி என அறிந்து தனக்கு தானே பிரசவம் பார்த்து ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
கு.ழ.ந்தையின் அழுகுரலை கேட்டு அறைக்கு வந்த பெற்றோர்கள் அ.தி.ர்.ச்.சியடைந்தனர். இதையடுத்து கு.ழ.ந்தையுடன் மகளையும் மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர், போ.லீசாரிடம் பு.கா.ர் கொடுத்தனர். இதையடுத்து 21 வயது இ.ளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கோவிட் தொற்றுக்கு உள்ளாகி கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காணாமல் போன, கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜனின் சடலம் வைத்தியசாலையின் தண்ணீர் தாங்கிக்குள் இருந்து நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரி 51 நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயுள்ளார். இந்த நிலையில் மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தாங்கியில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் அது மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
குடிநீருக்கு பயன்படுத்தும் தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதாக வைத்தியசாலை விடுதிகளில் இருந்து கிடைத்த முறைப்பாட்டை அடுத்து தண்ணீர் தாங்கியை பரிசோதித்த போது இதில் சடலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த எஸ்.இளகோவன் (S.Elangovan) என்ற பொலிஸ் சார்ஜன்டே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பூண்டுலோயா பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை கம்பளை நீதவான் ஸ்ரீனித் விஜேசேகர (Sreenith Wijesekara) மேற்கொண்டார். உயிரிழந்தவரின் சடலத்தை அவரது மகன் அடையாளம் காட்டியுள்ளார். பிரேத பரிசோதனைக்காக சடலம் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரியவருகிறது.
வவுனியாவில் விசேட தேவைக்குட்பட்டவர்களை பாராமரிக்கும் இல்லம் ஒன்றில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (30.10) வெளியாகின.
அதில், விசேட தேவைக்குட்பட்டவர்களை பராமரிக்கும் இல்லம் ஒன்றைச் சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த இல்லம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் தொடர்ந்தும் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இன்றைய தினத்திற்கான காலநிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏனைய இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும்.
குறைந்த அழுத்த பிரதேச தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முல்லைத்தீவிலிருந்து காங்கேசந்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15 – 30 கிலோமீற்றர் வரை காணப்படும்.
திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 65 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
முல்லைத்தீவிலிருந்து காங்கேசந்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆகிய வகுப்புக்களை மீள ஆரம்பிக்கும் திகதி வெளியானது. இதன்படி எதிர்வரும் 8ஆம் திகதி குறித்த வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
முன்னதாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் இவ்வாறு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று இரவு (29.10) வெளியாகின.
அதில் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வவுனியாவைச் சேர்ந்த 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, வவுனியாவில் மீண்டும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் சுகாதாரப் பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வவுனியாவில் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் தமிழ் கட்சிகள் வவுனியாவில் அவசரமாக கூடி ஆராய்ந்திருந்தனர். தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் இன்று (29.10) மாலை இடம்பெற்றது.
வவுனியா மாவட்டத்தில் திட்டமிட்ட ரீதியில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. மகாவலி திட்டத்தின் ஊடாகவும் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன.
இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்கள் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இன விகிதாசாரம் மாற்றமடைந்து வவுனியா வடக்கு பிரதேச சபை பறிபோகும் அபாயநிலை ஏற்பட்டுள்ளதுடன், சிங்கள பிரதிநிதித்துவமும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தடுத்து நிறுத்துவதற்கு தமிழ் கட்சிகள் ஓரணியில் திரண்டு எதிர்ப்பை வெளியிட வேண்டும் என இக் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது.
இதனையடுத்து வரும் வாரம் வவுனியா வடக்கில் குறித்த குடியேற்றங்களுக்கு எதிராக தமிழ் கட்சிகள், பொது மக்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்துவது எனவும் இதில் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தணிகாசலம், தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ந.கருணாநிதி, சிவசோதி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சார்பில் நகரசபை உறுப்பினர்களான எஸ்.சந்திரகுலசிங்கம், சு. காண்டீபன்,
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை தலைவர் இ.கௌதமன், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களான கே.அருந்தவராசா, றேகன்,
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன், பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சந்திரபத்மன், மாக்ஸிஸ லெனினிச கட்சி சார்பில் நி.பிரதீபன், ஜனநாயக போராளிகள் கட்சி சார்பில் அக்கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் ம.து அ.ரு.ந்.திய நண்பர்கள் இருவரிடையே விளையாட்டு வினையாகி ஒருவர் இரும்புக் கம்பியால் அ.டி.த்.த.தில் மற்றொருவர் உ.யி.ரிழந்தார்.
நவ்வலடியைச் சேர்ந்த வண்ணம் பூசும் தொழிலாளி ரமேஷ் தனது பிறந்த நாளையொட்டித் திசையன்விளையில் தனது நண்பரான முருகானந்தம் என்பவருடன் சேர்ந்து காலை முதலே ம.து அ.ரு.ந்.தியுள்ளார்.
மாலையில் கடைத்தெருவில் நின்றுகொண்டிருந்த போது ரமேஷ் விளையாட்டாக முருகானந்தத்தை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமான முருகானந்தம் வீட்டில் இருந்து இரும்புக் கம்பியை எடுத்து வந்து ரமேசை அ.டி.த்ததில் அவர் உ.யி.ரி.ழந்ததாக கூறப்படும் ச.ம்.ப.வம் குறித்து போ.லீ.சா.ர் வி.சா.ரணை மேற்கொண்டுள்ளனர்.