பட்டப்பகலில் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!!

பெங்களூரில்..

பெங்களூரில் காதலிக்க மறுத்த பெ.ண்.ணு.ட.ன் போட்டோஷாப்பில் கு.டி.த்தனம் நடத்திய தமிழக இ.ளைஞர் ஒருவர், அந்த பெ.ண்.ணைக் கொ.லை செ.ய்.து.விட்டு உ.யி.ரை மா.ய்.த்துக் கொ.ண்.ட ச.ம்.பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலாவைச் சேர்ந்தவர் 25 வயதான உஷா. இவர் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையில் உள்ள பெ.ண்கள் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

அதே நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணா என்பவரும் வேலை பார்த்து வந்தார். ச.ம்.ப.வ.த்தன்று உஷாவை சந்தித்து பேசிய கோபால கிருஷ்ணா அவரை சராமரியாக கு.த்.தி கொ.லை செ.ய்.து விட்டு த.ப்.பிச்சென்றார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போ.லீ.சார் கோபாலகிருஷ்ணாவை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் கெத்துலாபுரம் கிராமத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கோபாலகிருஷ்ணா ம.ர்.ம.மான முறையில் இ.ற.ந்து கி.ட.ப்பதாக போ.லீ.சுக்குத் தகவல் கிடைத்தது.

இருவரது ச.ட.லங்களையும் கைப்பற்றிய போலீசார், பி.ண.க்கூறாய்வுக்காக அ.ர.சு ம.ரு.த்துமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் வி.சா.ரணையில், உ.யி.ருள்ளவரை உஷா என்ற கோபால கிருஷ்ணனின் ஒருதலைராகம் வெளிச்சத்திற்கு வந்தது..

உஷாவும், கோபாலகிருஷ்ணாவும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்ததால் நண்பர்களாகப் பழகி வந்தனர். அப்போது உஷாவை, கோபாலகிருஷ்ணா ஒருதலையாக காதலிக்கத் தொடங்கியுள்ளார். தன்னுடைய போட்டோவையும் , உஷாவின் போட்டோவையும் தனக்குத் தெரிந்த அளவில் போட்டோஷாப்பில் ஒட்டி வைத்து, ஆர்டினில் அம்பு விட்டு கணவன் ம.னை.வியாக பா.வி.த்து கற்பனையில் கு.டி.த்தனம் ந.ட.த்தி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் உஷாவிடம் கோபாலகிருஷ்ணா தனது காதலை நேரில் தெரிவித்தபோது, அதனை ஏற்க ம.று.த்த உஷா, தான் ஏற்கனவே வேறு ஒருவரைக் காதலித்து வருவதாக பதிலளித்துள்ளார்.

ஆனாலும் உஷாவின் மீதான காதலைக் கைவிட ம.று.த்த கோபாலகிருஷ்ணா அ.டி.க்.க.டி அவரை சந்தித்து நீ இல்லையென்றால், உ.யி.ரை விட்டு விடுவேன் என்று கூறி தன்னைக் காதலிக்கும்படி காதல் பி.ச்.சை கே.ட்டுள்ளார். இதனால் உஷா, கோபாலகிருஷ்ணாவை சந்திப்பதையே முழுமையாகத் த.விர்த்துள்ளார்.

இந்த நிலையில் ச.ம்.ப.வ.த்தன்று காலையில் மல்லசந்திரா கிராமம் அருகே உள்ள வீட்டில் வைத்து உஷாவை சந்தித்த கோபாலகிருஷ்ணா, தன்னைக் காதலிக்கும்படி மீண்டும் உஷாவை வ.ற்.பு.று.த்தினார். அதற்கு எ.தி.ர்ப்பு தெரிவித்த உஷா, கோபாலகிருஷ்ணாவை க.டு.மை.யாக எ.ச்.ச.ரித்து வீட்டை விட்டு வெளியேறும்படி கண்டித்தார். இதனால் ஆ.த்.தி.ர.மடைந்த கோபாலகிருஷ்ணா,

உஷாவை ச.ர.மா.ரி.யாக தா.க்.கியதோடு, தான் ம.றைத்து வைத்திருந்த க.த்.தி.யால் உஷாவை ச.ர.மா.ரி.யாகக் கு.த்.தி.னார். இதில் ப.ல.த்.த க.த்.திக்குத்து கா.ய.ம் அ.டைந்த உஷா ர.த்.த வெ.ள்.ள.த்.தில் ச.ம்.பவ இ.டத்திலேயே ப.ரி.தா.பமாக உ.யி.ரி.ழந்துள்ளார்.

இதையடுத்து தனது மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற கோபாலகிருஷ்ணா, கெத்துலாபுரா கிராமத்திற்கு சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து வி.ஷ.ம் கு.டி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட.தாக போ.லீ.சார் தெரிவித்தனர். காதலை தெரிவிக்க தைரியம் இல்லாமல்,

அந்தப்பெண்ணுடன் வெளியில் நண்பர் போல பழகிய கோபாலகிருஷ்ணாவால் உள்ளுக்குள் ம.னைவியாக நேசித்த உஷாவை வேறு ஒருவருக்கு வி.ட்டுக்கொடுக்க மனமில்லாமல் வி.ப.ரீத செ.யலில் ஈ.டுபட்டதோடு, தானே முடிவையும் தேடிக் கொ.ண்டதாக போ.லீ.சார் சு.ட்.டி.க்காட்டினர்.

அரிசி விலைகள் மீண்டும் அதிகரிப்பு!!

அரிசி விலைகள்..

அரிசி விலைகளை மீண்டும் 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை அதிகரிக்க பிரதான அரசி உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனடிப்படையில் ஒரு கிலோ கிராம் கீரி சம்பா 30 ரூபாவிலும் சம்பா மற்றும் நாடு ஒரு கிலோ கிராம் 10 ரூபாவிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்புடன் ஒரு கிலோ கிராம் கீரி சம்பாவின் விலையானது 225 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கிராம் சம்பாவின் விலை 165 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் நாடு அரிசியின் விலை 140 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் வெள்ளை மற்றும் சிகப்பு பச்சை அரிசியின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது ஒரு கிலோ கிராம் 110 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அரசாங்கம் அரிசி விலையை நிர்ணயிக்கும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகியதை அடுத்து பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் தற்போது அரிசியின் விலைகளை தீர்மானித்து வருகின்றனர்.

நேருக்கு நேர் மோதிய இரு முச்சக்கரவண்டிகள் : மூவர் வைத்தியசாலையில்!!

விபத்து..

மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியின் பிள்ளையாரடி பகுதியில் இன்று காலை இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன. குறித்த சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனைக்கு சென்ற முச்சக்கரவண்டியொன்றும், ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுமே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளன.

விபத்தில் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட மக்கள் வங்கி : சீன தூதரகம் அதிரடி : மக்கள் வங்கி பதிலடி : நடந்தது என்ன?

இலங்கையின் மக்கள் வங்கியை கொழும்பில் உள்ள சீன தூதரகம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இரண்டு தரப்புக்களுக்கும் இடையிலான கடன் கடிதம் மற்றும்,

ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள தவறியமையை அடுத்தே இந்த நடவடிக்கையை, சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் எடுத்துள்ளது.

சீன தூதரகம் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த தீர்மானத்தை சீன தூதரகம், சீனாவின் வர்த்தக அமைச்சுக்கும் சமா்ப்பித்துள்ளது.

இந்த நிலையில் ஒப்பந்தக் கடமை, வணிக விதிகள் மற்றும் சர்வதேச வர்த்தக வழக்கங்களை மீறி, இலங்கை மக்கள் வங்கி எல்/சி செலுத்தத் தவறிதன் மூலம், சீன நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையுடனான சர்வதேச வர்த்தகத்தில் இலங்கை மக்கள் வங்கியால் வழங்கப்பட்ட (கடன் கடிதம்) எல்/சியை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறு அனைத்து சீன நிறுவனங்களும் சீனத் தூதரகம் அறிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீன தூதரகத்தின் அதிரடி நடவடிக்கைக்கு மக்கள் வங்கி பதிலடி!!

நீதிமன்ற தீர்மானத்தின் அடிப்படையில் சீன நிறுவனத்தின் கொடுப்பனவுகள் தொடர்பில் உாிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என இலங்கை மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

சீனாவின் சேதனப்பசளைகள் நிறுவனத்தின் கடன் கடிதக் கொடுப்பனவுகள் மற்றும் ஒப்பந்தங்களை உாிய முறையில் செயற்படுத்தாமை காரணமாக இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக முன்னதாக சீன தூதரகம் அறிவித்திருந்தது.

இதனையடுத்தே மக்கள் வங்கியின் இந்த பதில் வெளியாகியுள்ளது.
கொடுப்பனவுகளை இடைநிறுத்துவது தொடர்பில் நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்தமை காரணமாகவே தாம் அதனை நிறுத்தியதாக மக்கள் வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மக்கள் வங்கியின் இந்த செயற்பாடு காரணமாக சீனாவின் சேதனப் பசளை நிறுவனத்துக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், சீனத் தூதரகம் சுட்டிக்காட்டியிருந்தது.

அத்துடன் இலங்கையுடன் சர்வதேச வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனங்கள், இலங்கை மக்கள் வங்கியால் வழங்கப்படும் கடன் கடிதங்களை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சீன தூதரகம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா வடக்கில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்திற்கு எதிராக கொட்டும் மழையிலும் ஆ.ர்ப்பாட்டம்!!

ஆ.ர்ப்பாட்டம்..

வவுனியா வடக்கில் இனம்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்திற்கு எ.திர்ப்பு தெரிவித்து கொட்டும் மழைக்கு மத்தியில் ஆ.ர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (29.10) குறித்த ஆ.ர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘கொட்டமடிக்காதே கொடுங்கோல் அரசே, எங்கள் மண் எங்கள் குருதி, திட்டமிட்ட தமிழின அழிப்பு நடவடிக்கையை சிறிலங்கா அரசு நிறுத்த வேண்டும்,

தமிழர் இன்பரம்பலை சூறையாடும் எண்ணத்தை நிறுத்து, எங்கள் தாயகத்தில் எங்களை நிம்மதியாக வாழவிடு, தமிழன் ஒன்றும் 700 பேருடன் நாடு க.டத்தப்பட்டவன் அல்ல, சர்வசே தலையீடு உடன் தேவை, இது ஒன்றும் படகில் வந்த குடியேற்றம் அல்ல’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன்,

அனுராதபுரத்தின் எல்லைப்புறத்தில் உள்ள 1330 சிங்கள குடும்பங்களை வவுனியா வடக்குடன் இணைப்பதை நிறுத்து, நிறுத்து நிறுத்து சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, இராணுவமே வெளியேறு, தமிழர் தேசம் வவுனியா வடக்கு, வடக்கும் – கிழக்கும் தமிழர் தாயகம்’ என கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

குறித்த ஆ.ர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையிலிருந்து கொண்டுச்செல்லப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல்!!

இரத்தினக்கல்..

இரத்தினபுரி, கஹவத்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல் தொகுதி துபாய் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறித்த இரத்தினக்கல் தொகுதி 510 கிலோகிராம் எடையுள்ள அரனுல் கற்களின் பெரிய கொத்து ஆகும்.

இந்த கல் குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியதால், இரத்தினங்கள் துறையின் வல்லுநர்கள் அதன் மதிப்பு குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். சிலர் அதற்கு மதிப்பில்லை என்றும் தெரிவித்தனர்.

இந்தப் பின்னணியில் குறித்தக்கல் இன்று (28) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. துபாய்க்கு எடுத்துச் கொண்டுச்செல்லும் நோக்கில் குறித்த கல்கொண்டுவரப்பட்டது. துபாய்யில் நடைபெறவுள்ள மாணிக்கக் கண்காட்சிக்காக இந்த மாணிக்கக் கொத்து வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மின்சார கட்டணம் செலுத்தாதவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

மின்சார கட்டணம்..

பல மாதங்களாக மின்சார கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு சிவப்பு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிவப்பு பட்டியல் அனுப்பப்பட்ட போதிலும், தொடர்ந்தும் கட்டணத்தை செலுத்தாதவர்களின் மின்சார விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்றுநோயால் ஏற்படும் வருவாய் இழப்பைக் கருத்தில் கொண்டு மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு சில நிவாரணங்களை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஆனால் மாதாந்த கட்டணத்தை செலுத்தக்கூடியவர்கள் கூட அதைத் தொடர்ந்து செலுத்தவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மின்கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது.

தொடர்ந்து மின்கட்டணம் செலுத்தாதவர்கள், செலுத்த தயக்கம் காட்டினால் தற்காலிகமாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். எப்படியிருப்பினும் மின்சாரத்தை துண்டிப்பதற்கு முன்னர் சிவப்பு பட்டியல் வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் தரித்து நின்ற இராணுவ வாகனத்தில் மோதிய மோட்டார்சைக்கிள் : இளைஞர் பலி!!

முல்லைத்தீவு..

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வீதியில் தரித்து நின்ற இராணுவத்தினரின் வாகனத்துடன் மோட்டார்சைக்கிளொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வேணாவில், புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த மாரிமுத்து பவிசாந் (21 வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

நேற்று இரவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மின்சாரம் தடைப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இராணுவத்தினரின் வாகனத்தில் குறித்த இளைஞர் பயணித்த மோட்டார்சைக்கிள் மோதியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் வங்கிகளில் கடன் பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

வங்கிகளில் கடன்..

இலங்கையில் கடன் வசதிகளை கோரும் மக்களுக்கு இலகுவான முறையில் அதனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வங்கியல்லாத நிதி நிறுவனங்களிடம் இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்களுக்கு நிதிக் கடன் வசதிகளை வழங்குவதில் இலங்கை கடன் தகவல் பணியகத்தின் CRIB பதிவுகளைப் பயன்படுத்த வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடன் வழங்காமல் இருப்பதற்கு CRIB பதிவுகளை காரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றுநோய் காரணமாக நிதி நெருக்கடியில் உள்ள மக்கள் வாங்கிய கடன்களில் சில தவறுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு மத்திய வங்கி இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே அரச மற்றும் தனியார் வங்கிகளிடமும் இந்தக் கோரிக்கையை இலங்கை மத்திய வங்கி விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய பெயரை அறிவித்தார் மார்க் ஜுக்கர்பெர்க்!!

பேஸ்புக்..

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மெட்டா (Meta) என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) அறிவித்துள்ளார்.

சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ‘பேஸ்புக்’ ஆண்டு கூட்டத்தின்போது, பேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா’ என மாற்றி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

 

கொழும்பு துறைமுக நகரில் ஏற்படுத்தப்பட்டுள்ள பந்தய வாகன ஓடு பாதைகள்!!

துறைமுக நகரில்..

கொழும்பு துறைமுக நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மணல் மேடுகளுடன் கூடிய இலங்கையின் முதலாவது பந்தய வாகன ஓடு பாதைகள் அமைச்சர்கள் நாமல் ராஜபக்ச மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

2 கிலோ மீற்றர் தூரம் கொண்டதாக இந்த ஓடு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு டியூன்ஸ் ட்ராக்ஸ் என பெயரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஓடு பாதைகள் துறைமுக நகரில் 5 ஏக்கர் காணிக்குள் அமைக்கப்பட்டுள்ளது.

திறப்பு நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர்கள் நாமல் ராஜபக்ச, பிரசன்ன ரணதுங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் ஓடு பாதைகளில் ஏ.டி.வி. வாகனங்களை இந்த மணல் மேடுகளில் ஓட்டியுள்ளனர்.

இலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய நபர் : நெகிழ்ச்சி அடைந்த பெண்!!

மனிதாபிமான செயற்பாடு..

இலங்கையில் நபர் ஒருவரின் மனிதாபிமான செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஹட்டனில் வீதியை துப்பறவு செய்து கொண்டிருந்த ஊழியர் ஒருவருக்கு 52000 ரூபாய் பணத்துடன் பை ஒன்று கிடைத்துள்ளது.

எனினும் அதனை உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அந்தப் பகுதியை 43 வயதான ஆர்.ஜே.செல்வம் என்பவர் நேற்று காலை நகரத்தை சுத்தம் செய்துக் கொண்டிருந்த போது குறித்த பணப்பை கண்டெடுத்துள்ளார்.

உடனடியாக அந்த பார்சலை ஹட்டன் நகர சபையின் தலைவரிடம் சென்று வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். நாட்டில் அனைவரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ்கின்றனர்.

இதனால் இந்த பணத்துடனான பார்சலை உரிமையாளரிடம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, நகர சபை தலைவரிடம் செல்வம் கோரியுள்ளார்.

பணத்துடனான பை காணாமல் போனதை அறிந்த ஹட்டன், ஆரிபுர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய், மீண்டும் பையை தேடி நகரத்திற்கு சென்றுள்ளார்.

நகரம் முழுவதும் பையை தேடும் இந்த பெண்ணை அவதானித்த மற்றுமொரு நகர சபை ஊழியர், விடயத்தை வினவியதுடன், நகர சபை தலைவரிடம் பணப்பை உள்ளதென கூறியுள்ளார். நகர சபை தலைவரிடம் சென்ற பெண் பணப்பையை பெற்றுக்கொண்டார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள செல்வம், குறித்த பணத்தை தனக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டமையை பாராட்டியுள்ளதுடன், அவரின் நேர்மையான செயற்பாட்டை கண்டு நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது : சீனாவிற்கு அறிவித்த மகிந்த ராஜபக்ஷ!!

கிந்த ராஜபக்ச..

கொழும்பு துறைமுகத்திற்கு சீன கப்பலில் கொண்டுவரப்பட்ட பசளையை இலங்கை ஏற்றுக்கொள்ளாது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச, சீனத் தூதுவர் வீ. ஷெங் ஹோங்கிற்கு அறிவித்துள்ளார். சீனத் தூதுவர் நேற்று முற்பகல் அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்த போதே பிரதமர் இதனை கூறியுள்ளதாக தெரியவருகிறது.

நாடு கோரியுள்ள அளவுகோலுக்கு அமைவாக வழங்கப்படும் பசளைகளை மாத்திரம் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக பிரதமர் கூறினார் என கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஊடக நிலையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

14 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள அவலம் : மூன்று சந்தேகநபர்கள் கைது!!

14 வயது சிறுமிக்கு..

மூன்று வருடங்களுக்கு முன்னர் இருந்து 14 வயது சிறுமியைக் கடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக மூன்று பேரைக் கைது செய்துள்ளதாகக் கொழும்பு வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாயுடன் மறைமுக தொடர்பு வைத்திருந்த நபர், சிறுமியின் சகோதரியின் காதலன் ஆகியோர் இந்த மூன்று பேரில் அடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர். சகோதரியின் காதலன் இராணுவத்தில் பணிபுரியும் நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடவலவ, ராஜகிரிய மற்றும் மஹியங்கனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 64, 59 மற்றும் 36 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாய் மற்றும் சில சகோதர சகோதரிகளுடன் ராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை மரணமடைந்துள்ளார்.

இதன் பின்னர் தாயின் மறைமுக தொடர்பாளர் வீட்டில் வந்த தங்க ஆரம்பித்துள்ளார். 64 வயதான இந்த நபர், சிறுமியைத் தந்திரமாக ஏமாற்றி தகாத உறவுக்கு தூண்டியுள்ளதுடன், சிறுமிக்குக் கையடக்க தொலைபேசி ஒன்றையும் வாங்கிக்கொடுத்துள்ளார்.

ஆரம்ப விசாரணைகளுக்கு அமைய 2018 ஆம் ஆண்டு சிறுமி கடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. தொடர்ந்தும் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ள 64 வயதான நபர், ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த தனது நண்பரும் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த இடமளித்துள்ளார்.

இதன் பின்னரே சிறுமியின் மூத்த சகோதரியின் காதலனான இராணுவ வீரர், சிறுமியைத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்க ஆரம்பித்துள்ளார். இந்த சந்தேக நபர் சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்துச் சென்றுள்ளார்.

தனக்கு நேர்ந்த இந்த சம்பவங்கள் குறித்து சிறுமி சில தினங்களுக்கு முன்னர் தனது நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சிறுமியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

விசாரணைகளில் கிடைத்த தகவலுக்கு அமையச் சிறுமியை முதலில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர் உடவலவ பிரதேசத்தில் வீடொன்றில் தலைமறைவாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் கிடைத்த தகவலின் பின்னர் ஏனைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணைகளில், சிறுமியை மேலும் சிலர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. அந்த சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் விரைவில் மற்றொரு கொரோனா அலை : ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கை கடிதம்!!

கொரோனா அலை..

கோவிட் தொற்றின் மற்றொரு அலையை தடுக்கும் முயற்சியில் தற்போதைய சுகாதார விதிமுறைகளின் பின்னணியில் துல்லியமான நடவடிக்கைகளை எடுப்பது முன்னெப்போதையும் விட முக்கியமானது என்று இலங்கை மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அந்த சங்கத்தின் Intercollegiate Committee தலைவர்களான வைத்தியர் பத்மா குணரத்ன (Dr. Padma Gunaratne) மற்றும் தாமசி மகுலொலுவ ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் குறித்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடித்தில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கோவிட் வைரஸ் தொற்றுக்கான மற்றொரு அலை நாட்டின் ஆரோக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

“கோவிட் தொற்றின் கடைசி அலையைத் தணிக்க அரசாங்கம் எடுத்த முடிவுகளைப் பாராட்டும் அதேவேளையில், பிரித்தானியா, சிங்கப்பூர் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் சமீபத்திய கோவிட் பரவலிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றொரு அலை உடனடி என்று நம்பத் தூண்டுகிறது,” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்த நியாயமான வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்தாலும், அந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது மிகவும் மந்தமானதாக இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டனர்.

பலர் முகக்கவசம் அணிவதைக் கடைப்பிடிப்பதில்லை, கடைகள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்ற பொது இடங்களில் சமூக இடைவெளி பராமரிக்கப்படவில்லை.

“இந்த விதிமுறைகளை தீவிரமாக கண்காணிப்பு அமைப்பு மூலம் அமுல்படுத்த போதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறும், சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் (DGHS) வழங்கிய சுகாதார விதிமுறைகள் முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்யுமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்,” என்று அவர்கள் கூறினர்.

ஃபைசர் தடுப்பூசியின் மூன்றாவது அளவு அல்லது பூஸ்டர் தடுப்பூசியினை முன்னுரிமை குழுக்களுக்கு வழங்க வேண்டும். இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்ற முதியவர்களில் ஏழு சதவீதத்தினருக்கு கோவிட் தொற்று எதிராக போதுமான அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவில்லை என்பது நிறுவப்பட்டுள்ளது.

பாடசாலைகள் மீளத் திறப்பதும் கட்டுப்பாடுகளை நீக்குவதும் முதியோர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ள 60 வயதுக்கு குறைவான நோயாளிகள் மற்றும் அனைத்து சுகாதார நிபுணர்களுக்கும் தாமதமின்றி மூன்றாவது டோஸ் அல்லது பூஸ்டர் தடுப்பூசியை வழங்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-தமிழ்வின்-

மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ள அவசர எச்சரிக்கை!!

இலங்கை மக்களுக்கு, சில மோசடிகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அவசர எச்சரிக்கையொன்றை வழங்கியுள்ளது. இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் தங்கள் கணக்குகளில் பெருந்தொகை வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நாணயம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும்,

அத்தகைய முடக்கத்தை நீக்க உதவக்கூடிய யாராவது ஒரு நபருக்கு கவர்ச்சிகரமான தொகையை வழங்குவதாகவும் தெரிவித்து சில மோசடிகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சில சமயங்களில் அவர்கள் பல்வேறு கணக்குகளுக்குப் பெருந்தொகைப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீளப்பெற மத்திய வங்கியின் அனுமதியைப் பெறவேண்டி மட்டுமே இருப்பதாகவும் காட்டும் போலி ஆவணங்களையும் காட்சிப்படுத்துகின்றனர்.

இத்தகைய சில சந்தர்ப்பங்களில், மேற்படி பரிமாற்றங்களை நிறைவேற்றுவதற்காக தனிநபர் அடையாள இலக்கங்கள், அட்டை சரிபார்த்தல் இலக்கம், அதேநேர கடவுச்சொல், பயன்படுத்துனர் அடையாள இலக்கம்,

கடவுச்சொல், தொலைபேசி/ இணைய வங்கியியலின் அதேநேர கடவுச்சொல் உள்ளிட்ட கணக்கு விபரங்களை வாடிக்கையளர்களிடமிருந்து மோசடியாளர்கள் கோருகின்றனர்.

வாடிக்கையாளர் அத்தகைய விபரங்களை அளிப்பதானது அவர்களைப் பாரிய நிதி ஆபத்திற்கு இட்டுச் செல்லும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இத்தகைய மோசடியான அறிவித்தல்களையும், நடைமுறைகளையும் கருத்திற்கொள்ள வேண்டாம். இவ்வாறான மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் எல்லோரும் எச்சரிக்கப்படுகின்றனர்.

எனவே மக்கள் எந்தவொரு இரகசியத் தரவுகளையும் குறிப்பாக, கணக்குப் பயன்படுத்துனர் அடையாள இலக்கம், கடவுச்சொல், தனிநபர் அடையாள இலக்கம், அதேநேர கடவுச்சொல் மற்றும் கணக்கு சரிபார்த்தலுடன் தொடர்புடைய தரவுகள் போன்றவற்றை யாருடனும் பகிர வேண்டாம்.

மேலும், குறுந்தகவல் சேவை எச்சரிக்கை, அதேநேர அறிவிப்புச் சேவைகள் முதலியவற்றைத் தங்களது வங்கிகளிலிருந்து பெற்றுக் கொள்ள ஒவ்வொருவரும் நடவடிக்கை மேற்கொள்வது நன்று.

இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் கணக்குகளைப் பாவித்து ஏதேனும் மோசடிகள் இடம்பெறுகின்றனவா என்பதை உடனடியாக அறியலாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.