வெளிநாட்டிலிருந்து வந்த கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!!

களுவாஞ்சிக்குடியில்..

களுவாஞ்சிக்குடியில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பில் அவரின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுவாஞ்சிக்குடி – மகளூர் பல நோக்கு கூட்டுறவு சங்க வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய ராஜேந்திரன் ரஜேந்தினி என்ற பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர், திருமணம் முடித்துவிட்டு வெளிநாடு சென்றிருந்த நிலையில் கடந்த 18 நாட்களுக்கு முன் வீடு திரும்பியுள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர் வெளிநாட்டிலிருந்து அனுப்பிய பணம் தொடர்பில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்குமிடையே மீண்டும் சச்சரவு ஏற்பட்டுள்ளதையடுத்து மனைவி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவனான 38 வயது நபர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் தடயவியல் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மீண்டும் இலங்கையில் பயங்கரமான கொவிட் அலை ஏற்படலாம் : எச்சரிக்கும் விசேட மருத்துவ நிபுணர்கள்!!

கொவிட் அலை..

இலங்கைக்குள் மீண்டும் பயங்கரமான கோவிட் அலை ஏற்படலாம் என விசேட மருத்துவ நிபுணர்கள், சுகாதார அமைச்சுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்போவதில்லை என்பதே இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வெளிநாட்டில் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டால் மற்றும் பி.சி. ஆர். பரிசோதனை செய்துகொண்டிருந்தால், அவர்களை எவ்வித கோவிட் பரிசோதனைக்கும் உட்படுத்தாது, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சில சுற்றுலாப் பயணிகள் பி.சி. ஆர். பரிசோதனை செய்துகொண்டதாகப் போலி சான்றிதழ்களைச் சமர்ப்பித்து நாட்டுக்குள் பிரவேசிக்கும் ஆபத்து இருப்பதாகவும் இதன் மூலம் மீண்டும் கோவிட் அலை ஒன்று ஏற்படலாம் எனவும் விசேட மருத்துவ நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். அப்படியான நிலைமை ஏற்பட்டால், அதற்கான பொறுப்பைச் சுகாதார அமைச்சு ஏற்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

-தமிழ்வின்-

உடனடியாக நாடு கடத்துங்கள் : ஜனாதிபதி கோட்டாபய அதிரடி உத்தரவு!!

ஜனாதிபதி அதிரடி உத்தரவு..

இலங்கையில் அதிகரித்துள்ள நிதி மோசடிகளுக்கு தொடர்புடைய அனைத்து நைஜீரிய நாட்டவர்களையும் உடனடியாக நாடு கடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நுகேகொட, மிரிஹான குடிவரவு குடியகல்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 44 நைஜீரிய நாட்டவர்களை அரசாங்க செலவில் விசேட விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளனர்.

இவர்கள் குறித்த முகாமில் இருந்த நிலையில் பரிசு பெட்டி அனுப்புவதாக கூறி பல்வேறு நபர்களை ஏமாற்றி பணம் கொள்ளையடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த நபர்களை இலங்கையில் இருந்து நாடு கடத்துவதற்காக மாத்திரம் 41 மில்லியன் செலவாகுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இதில் நூற்றுக்கு 80 வீதமான செலவை பொலிஸ் மா அதிபரின் நிதியத்தில் இருந்து ஏற்பதாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இணக்கம் வெளியிட்டுள்ளார்.

மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 44 நைஜீரியர்களில் 24 பேர், தங்கள் மீது நிதி மோசடி குற்றச்சாட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி இலங்கையில் தங்க முயற்சிப்பது தெரியவந்துள்ளது.

எனினும் சட்டமா அதிபருடன் கலந்துரையாடல் மேற்கொண்டு இந்த நபர்களை உடனடியாக நாடு கடத்த நடவடிக்கை எடுக்க குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வேறு விமான நிறுவனங்கள் மூலம் இவர்களை நைஜீரியாவுக்கு அனுப்ப முயற்சித்த போதிலும் விமான நிறுவனங்கள் அதனை நிராகரித்துள்ளள. இதன் காரணமாக ஸ்ரீலங்கன் விமானத்திலேயே இவர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்.

அதற்காக கடற்படை தளபதி விருப்பம் வெளியிட்டுள்ளார். நைஜுரிய நாட்டவர்கள், தாம் பிரித்தானியர்கள் போன்று ஏமாற்றி பாரிய அளவான இலங்கையர்களை ஏமாற்றியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

வவுனியாவில் மழைக்கு மத்தியிலும் நடமாடும் தடுப்பூசி திட்டம் முன்னெடுப்பு!!

தடுப்பூசி..

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மழைக்கு மத்தியிலும் ஒரே நாளில் 30 பேருக்கு நடமாடும் தடுப்பூசித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொவிட் கட்டுப்பபாட்டு நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் முகமாக வவுனியாவில் நடமாடும் தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 60 வயதிற்கு மேற்பட்ட நிலையில் வீடுகளில் இருந்து வரமுடியாத நோய் தாக்கம் காரணமாக வீடுகளில் இருப்போர், தடுப்பூசி பெறத் தவறியோர்,

விசேட தேவைக்குட்பட்டோர் மற்றும் கிராம அலுவலர் ஊடாக நடமாடும் தடுப்பூசிக்கு விண்ணப்பித்தோர் என பதிவு செய்யப்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று சினோபாம் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையைச் சேர்ந்த வைத்தியர் பிரசன்னா தலைமையில் மழைக்கு மத்தியிலும் இறம்பைக்குளம், குட்செட்வீதி, வவுனியா நகரம், பண்டாரிக்குளம், வைரவபுளியங்குளம், தோணிக்கல், மூன்றுமுறிப்பு ஆகிய பகுதிகளில் 30 பேருக்கு சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

கிராம அலுவலர் ஊடாக கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களுக்கு அமைவாக குறித்த நடமாடும் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் மேலும் சில தினங்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று வெளியான உலக சந்தையின் புதிய புள்ளிவிபரங்களுக்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய தங்கம் ஒரு அவுஸின் இன்றைய விலை 1,761 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது இதேவேளை நேற்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின பெறுமதி 1751.5 டொலராக பதிவாகியுள்ளதென உலக சந்தை குறிப்பிட்டுள்ளது.

தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று வெளியான உலக சந்தையின் புதிய புள்ளிவிபரங்களுக்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.

வீட்டு வேலை செய்து வந்த 21 வயது தமிழ்ப் பெண்ணுக்கு நடந்த கொடூரம்!!

லட்சுமி..

டெல்லியில் தமிழ்ப்பெண் ஒருவர் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி லஜ்பத் நகரில் அழகு நிலையம் நடத்தி வருபவரின் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த லட்சுமி (21).

இவர் அந்த வீட்டின் குளியல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி வேலை செய்து வருபவரின் வீட்டின் குளியல் அறையில், பாதி எரிந்த நிலையில் சடலமாக லட்சுமி கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

லட்சுமியின் சடலத்தை பொலிசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். பிரேத பரிசோதனையின் அறிக்கைக்குப் பின் தான் முழுமையான விவரம் தெரியவரும்.

அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில், லட்சுமி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் டெல்லி வாழ் தமிழர்கள் ஒன்றாகக் கூடி இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் போ.ராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பட்டப்பகலில் கணவனின் நினைவு நாளுக்கு ஒரு நாளுக்கு முன்பாக மனைவிக்கு அரங்கேறிய பயங்கரம்!!

தூத்துக்குடி…

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரிந்து வந்த செல்வ முருகன் கடந்த ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக த.ற்.கொ.லை செ.ய்து கொண்டார்.

38 வயதான அவரது மனைவி அருணா உடன்குடி -பிள்ளையார் பெரியவன்தட்டு பகுதியில் உள்ள அவரது வீட்டில் தனது இரு மகன்களுடன் வசித்து வந்த நிலையில், வீட்டுக் கழிவறையில் க.ழுத்து அ.றுபட்டும் க.த்திக் கு.த்து காயங்களுடனும் கொ.லை செ.ய்யப்பட்டு கிடந்தார்.

அருணாவின் உடலில் 21 இடங்களில் க.த்.திக்குத்துக் கா.யங்கள் இருந்தன. உ.யிரிழந்த தனிப்பிரிவு காவலர் செல்வமுருகன் நினைவு நாளுக்கு முந்தையதினம் அவரது மனைவி அருணா கொ.லை செ.ய்யப்பட்ட ச.ம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்தை பார்வையிட வந்த திருச்செந்தூர் உதவி காவல் துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், அதே இடத்திற்கு ஏற்கனவே வந்திருப்பதாக கூறியதோடு தலைமைக் காவலர் செல்வமுருகன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

அருணாவின் ச.டலத்தைக் கைப்பற்றிய குலசேகரன்பட்டினம் கா.வல்துறையினர் நடத்திய முதற்கட்ட வி.சாரணையில், செல்வ முருகனின் த.ற்.கொ.லைக்கு ப.ழிக்கு ப.ழியாக அருணா கொ.ல்.லப்பட்டது தெரியவந்துள்ளது. மனைவி அருணாவின் நடத்தையால் உண்டான பி.ரச்சனையே செல்வமுருகன் த.ற்.கொ.லை செ.ய்து கொள்ள காரணம் என்று கூறப்படுகின்றது,

செல்வமுருகனின் த.ற்.கொ.லைக்கு பின்னரும் அ.டங்க மறுத்த அருணா, தனது நடத்தையை திருத்திக் கொ.ள்ளவில்லை என்று கூறப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக அருணாவின் நடவடிக்கைகளை கண்காணித்த , செல்வ முருகனின் அக்காள் மகன் சம்பவத்தன்று அருணாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

தனது மாமா எதற்காக த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டார் ? என்று கேட்டு அருணாவிடம் த.க.ரா.று செ.ய்த அவர், அருணாவின் தாயை வீட்டுக்கு வெளியே போகச்சொல்லி கதவை உள்பக்கமாக பூட்டியுள்ளார்.

அதன் பின்னர் அருணாவின் அ.ல.றல் சத்தம் கேட்டு அடங்கிய சிறிது நேரத்தில் அந்த இ.ளைஞர் வீட்டுக்குள் இருந்து தப்பி ஓடியது வி.சா.ரணையில் தெரியவந்தது, தனது மாமா செல்வமுருகனின் த.ற்.கொ.லைக்கு காரணம் அவரது மனைவி அருணா என்பது தெரியவந்ததால்,

அவரது நினைவு நாளுக்கு ஒரு நாளுக்கு முன்பாக கொ.லைசெ.ய்துவிட்டு அந்தநபர் தப்பிச்சென்றுள்ளதாக சுட்டிக்காட்டும் காவல்துறையினர், கொ.லையாளியைத் தேடிவருகின்றனர்.

கொ.லை ச.ம்பவத்தை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் காவல்துறையினரை , பட்டப்பகலில் அரங்கேறிய இந்த ப.டு.கொ.லை ச.ம்பவம் அ.தி.ர்.ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

வவுனியாவில் பட்டப்பகலில் வீடுடைத்து பணம் மற்றும் நகை திருட்டு!!

திருட்டு..

வவுனியா, குடியிருப்பு பகுதியில் பட்டபகலில் வீட்டினை உடைத்து பெருமளவு பணம் மற்றும் நகை என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று (01.10) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள தமது வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் தேவை நிமிர்த்தம் வீட்டில் இருந்து காலை வெளியே சென்றிருந்தனர்.

மீண்டும் மாலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் பிரதான கதவு உடைக்கப்பட்டிருந்ததுடன், வீட்டில் இருந்த அலுமாரிகள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் மற்றும் நகைகள் என்பன திருடப்பட்டிருந்தன.

இதன்போது அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த நான்கு பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் எனபனவற்றை திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எரிவாயுவின் விலையை 1200 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை!!

எரிவாயு..

சமையல் எரிவாயுவின் விலையை 1200 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என லிற்ரோ பாதுகாப்பு தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வை முழுமையாக பெறவில்லை என்றால், திறைச்சேரி முழுமையான விலை மாற்றத்தை ஏற்க வேண்டும் என அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை இன்று 800 டொலராக உயர்ந்துள்ளதாக லிற்ரோ நிறுவனத்தின் ஊழியர்கள் அடங்கிய கூட்டமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனை நேரடியாக 12.5 கிலோ கிராம் எரிவாயுடன் மாற்றும் போது 2021 ரூபாயாகும். எப்படியிருப்பினும் இன்று வரையில் 12.5 கிலோ கிராம் சிலின்டர் 1493 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

கப்பல் மற்றும் காப்பீடு உள்ளிட்ட பிற அத்தியாவசிய சேவைகளின் நேரடி செலவுகளின் தொகை 700 ரூபாயாகும். செலவை மாத்திரம் ஈடுசெய்ய ஒரு எரிவாயு சிலிண்டரை 2,800 ரூபாய்க்கு விற்க வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் : 5 வயது சிறுவர்களும் ஆயுதம் ஏந்தினார்களா என கேள்வி!!

வவுனியாவில்..

5 வயது சிறுவர்களும் ஆயுதம் ஏந்தினார்களா? எனத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (01.10) இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘5 வயது குழந்தையும் ஆயுதம் ஏந்தியவர்களா, மரணச்சான்றிதழும் வேண்டாம், இழப்பீடும் வேண்டாம், தமிழ்க் குழந்தைகள் பயங்கரவாதிகளா, கையில் ஒப்படைந்த குழந்தைகள் எங்கே, சர்வதேச நிறுவர் தினம் எமக்கு துக்க தினம்’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

இதன்போது குரத்து தெரிவித்த அவர்கள், ஓமந்தை பகுதியில் இராணுவத்தின் உறுதி மொழியை நம்பி கையளிக்கப்பட்ட எமது குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டு பல வருடங்கள் கடந்தும் எமக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை.

குடும்பம் குடும்பமாக ஒப்படைத்த எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பால் குடி குழந்தையை கூட தாயுடன் கொண்டு சென்றார்கள்.

30இற்கு மேற்பட்ட குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம். ஜனாதிபதியின் கருத்துக்களை ஏற்க முடியாது. சர்வதேசம் எமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும் என தெரிவித்தனர்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சிறுவர் தினமும் மர நடுகையும்!!

சிறுவர் தினமும் மர நடுகையும்..

‘எல்லாவற்றிலும் சிறுவர்ககளுக்கு முன்னுரிமை’ என்னும் தொனிப் பொருளில் சிறுவர் தின நிகழ்வும், மரநடுகையும் வவுனியா வேப்பங்குளம் அன்பகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.கெனடி தலைமையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இன்று (01.10.2021) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

எல்லாவற்றிலும் சிறுவர்களுக்கு முன்னுரிமை எனும் தொனிப் பொருளில் நாடு முழுவதும் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதற்கமைவாக வவுனியாவிலும் மாவட்டத்தின் பிரதான சிறுவர் தின நிகழ்வு வேப்பங்குளம் அன்பகத்தில் கொண்டாடப்பட்டது.

இதன்போது வேப்பங்குளம் சிறுவர் இல்ல வளாகத்தில் அதிதிகளால் மா, பலா, நெல்லி, கொய்யா போன்ற பயன்தரு மரங்கள் நாட்டப்பட்டதுடன், சிறுவர்களும் மர நடுகையில் ஈடுபட்டனர்.

மரங்கள் வளர்ந்து பயன் தருவது போல் சிறுவர்களும் வளர்ந்து நாளைய தலைவர்களாக செயற்பட வேணடும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.சுபாஜினி, அன்பக முகாமையார் சாமி அம்மா உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டனர்.

வவுனியா மாவட்டம் கொரோனா மரணங்களில் முன்னிலையில் : இதுவரை 200 பேர் மரணம், 7175 பேருக்கு தொற்று!!

கொரோனா..

வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கொரோனா தொடர்பான கலந்துரையாடலின் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்க அதிபர் தலைமையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், சுகாதாரப் பிரிவினர், பிரதேச செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இன்றைய தினம் நாடு முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையிவ் எமது மாவட்டத்தில் கொரோனாவை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடினோம். இலங்கையில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் வவுனியா மாவட்டம் முன்னிலையில் உள்ளது.

தற்போதைய நிலவரத்தின் படி வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 72 வீதமானவர்கள் இரண்டு கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

29- 59 வயதிற்குட்பட்ட 58 வீதமானவர்கள் இரண்டு கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். 18-29 வயதிற்குட்பட்ட 28 வீதமானவர்களுக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஒக்ரோபர் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் இதுவரை 7175 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள். அதில் இதுவரை 200 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களில் 70 வீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் உள்ளனர். இந்த 60 வயதிற்கு மேற்பட்ட இறப்புக்களில் 59.5 வீதமானவர்கள் எந்தவிதமான தடுப்பூசிகளையும் பெறாதவர்களாக காணப்படுகின்றனர்.

2 வீதமானவர்கள் மட்டுமே இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற நிலையில் மரணித்துள்ளார்கள். தடுப்பூசியைப் பெறாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை வழங்ககும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் வவுனியா மாவட்டத்தில் முதல் கட்டமாக 114 பாடசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எமது மாவட்டத்தில் 200 இற்கு குறைவான மாணவர்களை கொண்ட 114 பாடசாலைகள் காணப்படுகின்றன. அதனை திறப்பதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைகளை முன்னெடுக்க பொலிஸ் மற்றும் பாதுகாப்பு துறையினரின் உதவிகளையும் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் முதற்கட்டமாக 114 பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை!!

பாடசாலை..

வவுனியா மாவட்டத்தில் முதல் கட்டமாக 114 பாடசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கோவிட் தொடர்பான கலந்துரையாடலின் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்க அதிபர் தலைமையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், சுகாதாரப் பிரிவினர், பிரதேச செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.

எமது மாவட்டத்தில் 200 இற்கு குறைவான மாணவர்களை கொண்ட 114 பாடசாலைகள் காணப்படுகின்றன. அதனை திறப்பதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைகளை முன்னெடுக்க பொலிஸ் மற்றும் பாதுகாப்பு துறையினரின் உதவிகளையும் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் வீதியோர வியாபாரங்களில் சனநெரிசல் அதிகமாக இருந்தால் கடும் நடவடிக்கை!!

இ.கௌதமன்..

வீதியோர வியாபாரங்களில் சனநெரிசல் காணப்படுமாக இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா நகரசபைத் தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபையில் இன்று (01.10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நகர அபிவிருத்தி அதிகார சபையின் 100 நகர உருவாக்க திட்டதின் கீழ் வவுனியாவில் மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து வைத்தியசாலை சுற்று வட்ட வீதி வரைக்கும் நடைப்பாதைக்கான திட்டம் உருவாக்கப்பட்டது.

அந்த திட்டதற்கு அனுமதி கிடைத்துள்ளது. அதற்கான கேள்வி கோரலும் இடம்பெற்றுள்ளது. மிக விரைவில் அந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

அத்துடன், வவுனியா மாவட்டத்தில் தற்போது மக்கள் வழமையான நிலைக்கு திரும்பியுள்ளார்கள். கோவிட் இறப்புக்கள் குறைவடைந்துள்ளன.

வீதியோர வியாபாரங்கள் நடைபெறுகின்றது. சதொச காணப்படும் உள்வட்ட வீதி பகுதியில் சன நெரிசல் அதிகமாக இருக்கிறது. சில வீதியோர வியாபாரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. கோவிட் கட்டுப்பாட்டுக்காக இவ்வாறான நிலமைகள் காணப்படும் போது கடுமமையான நவடிக்கை எடுக்கப்படும்.

பல்வேறு கஸ்ரங்களுக்கு மத்தியில் கோவிட் மரணங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நாம் தொடர்ந்தும் தக்க வைத்து முன்னோக்கி செல்ல வேண்டும்.

அதற்கு மக்கள் சுகாதார நடைமுறைளைப் பின்பற்றி நகரசபையின் செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.

இலங்கையில் இரு வாரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா? வெளியான தகவல்!!

கட்டுப்பாடுகள்..

அடுத்து வரும் இரண்டு வாரங்கள் மிகவும் தீர்மானம் மிக்கவை என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன (Dr. Asela Gunawardena) தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டின் கோவிட் நிலைமைகளை கவனத்திற் கொண்டு பயணக் கட்டுப்பாடுகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்கு தளர்வுடன் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை மக்கள் முழு அளவில் பின்பற்ற வேண்டியது அவசியமானது.

நாளாந்த கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 4000 – 5000ஆக காணப்பட்டதுடன் தற்பொழுது அந்த எண்ணிக்கை ஆயிரமாக குறைவடைந்துள்ளது.

அத்துடன், நாளாந்த மரண எண்ணிக்கையும் 50 – 60ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. தேவை ஏற்பட்டால் தற்பொழுது உள்ள கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், நாடு முழுவதிலும் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருவதாகவும், எந்த வகை தடுப்பூசி என்பதனை கருத்திற் கொள்ளாது கிடைக்கும் தடுப்பூசியை மக்கள் ஏற்றிக் கொள்ள வேண்டுமெனவும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒன்லைன் வகுப்பிற்கு செல்லாத மா.ணவனை அ.டி.த்.து.க் கொ.ன்.ற த.ந்தை!!

தென்னிலங்கையில்..

தென்னிலங்கையில் தந்தை ஒருவர் மகனை படிப்பதற்காக க.ண்டித்தமையினால் ஏற்பட்ட கா.யம் காரணமாக மகன் உ.யிரிழந்துள்ளார். காலி, மஹமோதர, சியம்பலாஹேன பிரதேசத்தை சேர்ந்த கிம்ஹான் விமுக்தி என்ற மா.ணவனே உ.யிரிழந்துள்ளார்.

அவர் இம்முறை சாதாரண பரீட்சைக்கு ஆயத்தமாக இருந்தவராகும். குறித்த மாணவன் சில மாதங்களாக ஒன்லைன் கற்கை நடவடிக்கைகளில் ஈடுபடாமையினால் தந்தை க.ண்டித்துள்ளார்.

கோபம் காரணமாக மகனின் முதுகின் மீது .துடைப்பத்தால் அ.டிக்க தந்தை முயற்சித்த போது அதனை த.விர்க்க மகன் மு.யற்சித்துள்ளார். இதன் போது அந்த தா.க்குதல் அவரது த.லையில் வி.ழுந்தமையினால் மகன் கா.யமடைந்துள்ளார்.

கா.யமடைந்த மகன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் உ.யிரிழந்துள்ளார். தனது மகனை மிகவும் அன்பாக வளர்த்த தந்தை, கல்வி நடவடிக்கை இடைநடுவில் நின்றுவிடும் என்ற அ.ச்சத்திலேயே தா.க்கியுள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.