தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர்கள் பிலவேந்திரராஜா – பாத்திமாமேரி தம்பதி. ஏற்கனவே இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், 3வதாக கர்ப்பம் தரித்துள்ளார் பாத்திமாமேரி.
ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த பாத்திமாமேரிக்கு சனிக்கிழமை இரவு பிரசவ வ.லி ஏற்பட்டு வீட்டிலேயே பனிக்குடம் உடைந்தது. உடனடியாக அவரை உறவினர்கள் வாகனம் மூலமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு நள்ளிரவு 12.30 மணிக்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு அதிகாலை 3.30 மணிக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், 700 கிராம் மட்டுமே இருந்த அந்த குழந்தை சுவாசப் பிரச்சனையால் பிறந்த சிறிது நேரத்திலேயே இ.றந்துவிட்டதாகவும் செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனை நடைமுறைகளுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு முப்பது மணிக்கு இ.றப்பு தொடர்பான ஆவணங்களுடன் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு பிலவேந்திரராஜாவிடம் ஒப்படைத்துள்ளனர்.
மயானத்தில் ஏற்கனவே தோ.ண்டப்பட்டு தயார் நிலையில் இருந்த கு.ழிக்குள் பு.தைப்பதற்காக தூ.க்கியபோது கு.ழந்தையின் உ.டலில் அசைவு காணப்பட்டுள்ளது.
கு.ழந்தை உ.யிருடன் இருப்பதைக் கண்டு இ.ன்ப அ.திர்ச்சி கொண்ட பெற்றோரும் உறவினர்களும் மீண்டும் தேனி அ.ரசு மருத்துவக் கல்லூரி ம.ரு.த்துவமனைக்கு கு.ழந்தையுடன் ஓ.டினர்.
வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. குறைமாதத்தில் பிறந்து, மூச்சு விடாமல் இருந்த குழந்தையை சரியாக பரிசோதிக்காமல்,
இ.றந்துவிட்டதாக த.வறாக கருதிவிட்டனர் என்றும் சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் துறை ரீதியான வி.சாரணை ந.டத்தப்படும் என்றும் மருத்துவமனையின் தலைவர் பாலாஜிநாதன் கூறினார்.
காதல் கணவன் ம.ரணத்தில் ச.ந்தேகம் உள்ளதாகவும் இ.றந்த கணவரின் உடலை மீண்டும் தோ.ண்டி எடுத்து பி.ரேத ப.ரிசோதனை செ.ய்து தனக்கு நியாயம் வழங்க கோரி இ.ளம் பெ.ண் ராணிப்பேட்டை கா.வல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா(21) , இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராணிப்பேட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த விஜயலிங்கம் (26)என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இந்த திருமணத்திற்கு விஜயலிங்கத்தின் தாயார் கிருஷ்ணவேனி ஒப்புக்கொள்ளவில்லை.இதன்காரணமாக அவ்வபோது இவர்களுக்கிடையே குடும்பத் த.கராறு ஏற்பட்டு வந்துள்ளது.
விஜயலிங்கம் தனது வீட்டில் தனி அறையில் தனியாக சமைத்து மல்லிகாவுடன் வசித்து வந்துள்ளார். கடந்தாண்டு கு.டும்பத்தின் பி.ரச்னை அதிகரிக்கவும் மல்லிகா மகளிர் காவல் நிலையத்தில் விஜயலிங்கத்தின் தாய் கிருஷ்ணவேணி மற்றும்.
அவர்கள் கு.டும்பத்தினர் மீதும் வ.ரதட்சணை கொ.டு.மை அ.சிங்கமாக பேசுவது, அ.டி.ப்.பது உள்ளிட்ட கு.ற்.ற.ங்களின் கீழ் பு.கா.ர் அ.ளித்துள்ளார். இந்தச் ச.ம்.பவத்துக்கு பிறகு குடும்பத் த.கராறு அதிகரிக்கவே விஜயலிங்கம் மல்லிகா தம்பதியினர் மல்லிகாவின் தாயார் வீட்டிற்கு வந்து சுமார் ஒன்றரை மாதங்கள் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மே மாதம் 21ஆம் தேதி விஜயலிங்கத்தின் தாயார் விஜயத்திற்கு போன் செ.ய்.து நீயும் மல்லிகாவும் வீட்டிற்கு வந்து விடுங்கள் நான் மீண்டும் இதுபோன்று ச.ண்.டை.யி.ட மாட்டேன் என உறுதி அளித்து வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அன்று அவர்களுக்கு கறி விருந்து படைத்துள்ளார் அன்று மாலையே விஜயகுமாருக்கு சேரவேண்டிய சொத்துக்கும் விஜயகுமாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கையெழுத்திட சொல்லி விஜயகுமார் மற்றும் மல்லிகாவை நிர்பந்தித்துள்ளார் இதனால் வா.ய்.த்.த.க.ரா.று கை.த.க.ரா.றாக மா.றியுள்ளது.
ஒருகட்டத்தில் விஜயலிங்கம் மல்லிகாவை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு இந்தப் பி.ரச்சினையை சுமுகமாக பேசி முடிக்க கிருஷ்ணாபுரத்திலேயே தங்கி உள்ளார். அன்று இரவு 2 மணி அளவில் மல்லிகாவிடம் போனில் உரையாடியுள்ளார்.
இந்நிலையில் 22ஆம் தேதி காலை 6 மணி அளவில் விஜய லிங்கம் இ.றந்துவிட்டதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் போன் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதை அறிந்த மல்லிகா தன் மாமியாரிடம் சென்று விஜயலிங்கத்தின் ம.ரணத்திற்கான காரணத்தை அறிய முயற்சித்துள்ளார் மல்லிகாவை ச.ர.மாரியாக தா.க்.கி.ய அந்த குடும்பத்தினர் பின்னர் அவசர அவசரமாக விஜயலிங்கத்தின் உ.ட.லை பு.தைத்து வி.ட்டதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் மல்லிகா தன் கணவரின் சா.வி.ற்.கு காரணம் அறிய முயற்சித்த போதெல்லாம் அவர் தா.க்.க.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர். இதனால் ம.ன.மு.டைந்த மல்லிகா வி.ஷ.ம் கு.டி.த்.து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் உ.யிருக்கு ஆ.ப.த்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட பத்து நாட்கள் சி.கி.ச்.சைக்குப்பின் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
தற்போது தனது க.ணவர் சா.வி.ல் ம.ர்.ம.ம் இருப்பதாகவும் தனது க.ண.வ.ர் ச.டலத்தை தோ.ண்.டி பி.ரே.த ப.ரி.சோ.த.னை செ.ய்.ய வே.ண்டும் எனவும் அவர் இ.யற்கையாக இ.ற.ந்.தி.ருக்க மாட்டார்.
அதற்கான வயதும் அவருக்கு இல்லை எனவே அவரை தி.ட்டமிட்டு அவரது தாய் கிருஷ்ணவேணியும் அவரது தம்பி சண்முகராஜன் ஆகியோர் கொ.லை செ.ய்.தி.ரு.ப்.ப.தா.க ச.ந்.தே.கம் உ.ள்ளதாகவும்,
எனவே தனது கணவரின் ம.ர.ண.ம் கு.றித்த காரணத்தை ச.ட.ல.த்.தை மீண்டும் தோ.ண்.டி பி.ரே.த ப.ரி.சோ.தனை செ.ய்.து அதன் வாயிலாக தனக்கு தெரிவிக்குமாறு ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடம் பு.கா.ர் மனு அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஞானசுந்தரி (32). இவர்களுக்கு குழந்தை கிடையாது. இந்நிலையில், செல்வராஜுக்கு உடன் பணிபுரியும் நிஷா (30) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. நிஷா கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்ததால், செல்வராஜ் அடிக்கடி நிஷாவை பார்ப்பது அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த 2 நாட்களாக செல்வராஜ் நிஷாவின் வீட்டிற்கு செல்லவில்லை. மேலும், செல்போனில் தொடர்பு கொண்டும் அழைப்பை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் செல்வராஜை தேடி அவரது வீட்டிற்கே நிஷா சென்றுள்ளார். தன்னுடன் வாழ வரும்படி அழைத்திருக்கிறார். இதனால், ஞானசுந்தரிக்கும், நிஷாவுக்கும் இடையே வா.க்குவாதம் ஏற்பட்டு இரண்டு பேரும் அ.டி.த்.து.க் கொண்டனர்.
இதில் ஆ.த்.தி.ர.மடைந்த ஞானசுந்தரி வீட்டில் இருந்த ம.ண்.ணெ.ண்ணையை எடுத்து நிஷா மீது ஊ.ற்றி தீ வை.த்துள்ளார். இதில், நிஷாவின் உடல் முழுவதும் தீ.ப்.ப.ற்றியதால் அவர் அ.ல.றி து.டி.த்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நிஷாவை மீ.ட்.டு திருப்பூர் அரசு ம.ரு.த்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நிஷாவிற்கு தீ.வி.ர சி.கி.ச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த ச.ம்பவம் குறித்து, குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ச.ம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வி.சாரணை நடத்திய போ.லீசார் ஞான சுந்தரி மீது கொ.லை மு.ய.ற்.சி வ.ழ.க்குப்பதிவு செ.ய்.து கை.து செ.ய்தனர்.
தமிழர் தாயகப் பிரதேசத்தில் இருந்து சீனா வெளியேற வேண்டும் என வவுனியாவில் 1600 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் 1600 ஆவது நாளாக சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (05.07) தமது போராட்டத்தின் 1600 ஆவது நாளை முன்னிட்டு தமது போராட்ட கொட்டகைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
சீனாவுக்கு எதிரான பதாதைகளையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில், சீனா தமிழர் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டும். தமிழர்கள் கடந்த 74 ஆண்டுகளாக அரசியல் தீர்வுகளை கேட்டு வருகின்றனர்.
2009 ஆம் ஆண்டு போரின்போது, 146,000 தமிழர்கள் கொ.ல்.லப்பட்டனர் மற்றும் 25,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களான நாங்கள், பொறுப்பு மற்றும் நீதியைக் காண கடந்த 1600 வது நாளாக, ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு என்று தொடர்ந்து போராடி வருகிறோம்.
ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் தமிழர்களுக்கான நீதியை சீனா எதிர்ப்பதால், சீனா தமிழர்களின் நண்பர் அல்ல. எனவே, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் நாங்கள் சீனாவை தமிழ் தாயகத்தை விட்டு வெளியேறச் சொல்கிறோம்.
மனித உரிமைகளிள் அக்கறை கொண்ட அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இலங்கையில் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்த தாமதிக்காமல் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.
கோவிட் தாக்கம் காரணமாக பாதிப்படைந்துள்ள மாணவர்களுக்கான கற்றல் செயற்பாட்டை முன்னெடுக்கும் வகையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தொலைக்கல்வி நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (05.07) காலை பாடசாலையின் கணினி கற்றல் வள நிலையத்தில் அதிபர் ஆ.லோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச தொலைக்கல்வி மத்திய நிலையங்களை தாபித்தல் தொடர்பான கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய வவுனியா மாவட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் ஒரு பிரதேச தொலைக் கல்வி மத்திய நிலையமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், கோவிட் விடுமுறை காலத்து கற்றல் செயற்பாடுகளின் போது இணையத்தள வசதிகள் அற்ற தரம் 11 மற்றும் தரம் 6 இனை சேர்ந்த 20 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நடைபெற்றன. இது தொடர்ச்சியாக தரரீதியாக நடைபெறவுள்ளது.
மாவட்ட ரீதியான இவ் ஆரம்ப நிகழ்விற்காக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய குலசிங்கம் திலீபன், வவுனியா தெற்கு வலய வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன் உள்ளிட்டோர் வருகைதந்து நிகழ்வை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துடன், பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் அதிபருடன் கலந்துரையாடி இருந்தனர்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் 2000 மத்திய நிலையங்களில் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட கூடும் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பேக்கரி உரிமையாளர்களுக்கு தேவையான கோதுமை மாவினை பிறிமா நிறுவனமே வழங்குவதாக பேக்கரி உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக பேக்கரி தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு கடும் சிரமமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். செரன்டிப் நிறுவனம் கோதுமை மா ஒரு கிலோ கிராமிற்கான விலையை 18 ரூபாயினால் அதிகரித்தமையினால் பாண் ஒன்றின் விலை இந்த வாரம் 10 ரூபாயில் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
எனினும் கோதுமை மாவின் விலை குறைக்கப்படும் என அமைச்சர் லசந்த அழகியவன்ன வாக்குறுதியளித்தமையினால் பாண் விலை அதிகரிப்பினை கைவிட்டதாக சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் மாவின் விலையை குறைக்க முடியாதென செரன்டிப் நிறுவனம் பேக்கரி உரிமையாளர்களுக்கு தெரிவித்துள்ளது. எப்படியிருப்பினும் கோதுமை மாவின் விலையை குறைக்கவில்லை என்றால் பாண் உட்பட பேக்கரி தயாரிப்புகளின் விலையை அதிகரிக்க நேரிடும் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், மின்சாரசபை உள்ளிட்ட 19 அரச நிறுவனங்களுக்கு இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 8 ஆயிரத்து 200 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காலப்பகுதிகளில் அதிகளவான இழப்புகள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கே ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டுத்தாபனத்துக்கு 4 ஆயிரத்து 500 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு 2 ஆயிரத்து 400 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது. கோவிட் வைரஸ் தொற்று காரணமாக அரச நிறுவனங்கள் அதிகளவு நட்டம் அடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் பெறப்பட்ட 142 மாதிரிகளில் பத்தில் ஒன்று அதாவது 14 பேருக்கு டெல்டா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையானது கவலைக்குரிய நிலைமையாகும் என சுகாதார கொள்கை நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் வைத்தியர் ரவி ரன்னன் எலிய தெரிவித்துள்ளார்.
இது குறித்த உண்மையான தகவல்கள் வெளிப்படுத்தப்படாவிட்டாலும் தற்போது நாட்டில் நூறு அல்லது ஆயிரக்கணக்கான டெல்டா தொற்றாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மாத்திரம் உறுதியாகக் கூற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நிலைமை கவலை அளிக்கிறது. எதிர்பார்த்தபடி, சமீபத்திய கண்டுபிடிப்புகள் டெல்டா பரவியுள்ளதை உறுதிப்படுத்துகின்றன. தற்போது கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் சோதனைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை என்பதால் இதைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்படும்.
இதன் விளைவாக அடுத்த சில மாதங்களில் இலங்கையில் ஆயிரக்கணக்கான இறப்புகளைக் காண வாய்ப்புள்ளது. நாடு முழுவதிலுமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட 142 மாதிரிகளில் பத்தில் ஒன்று டெல்டா என்பது கவலை அளிக்கிறது. உண்மையான விவரங்கள் எமக்கு தெரியாது.
ஆனால் இப்போது நாட்டில் பல நூறு அல்லது ஆயிரக்கணக்கான டெல்டா தொற்றாளர்கள் உள்ளனர் என்று உறுதியாகக் கூறுகிறோம். இதைக் கட்டுப்படுத்த எம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும் வைத்தியர் ரவி ரன்னன் எலிய தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்குமென சுகாதார அமைச்சு நேற்றைய தினம் வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த சுற்றறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டுதல்களின் படி இன்று முதல் ஜுலை 19ஆம் திகதிவரை கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ள அதேவேளை மத தலங்கள், விடுதிகள், திரையரங்குகள் என்பன திறப்பதற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் சுகாதார வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.
அதன்படி டெல்டா வைரஸ் பரவல் குறித்து கோவிட் – 19 செயலணி கூட்டத்தில் ஒரு நிலைப்பாட்டை எட்ட முன்னர் டெல்டா வைரஸ் சமூக பரவலாக மாறியிருக்கும், அது மட்டுமல்லாது அடுத்த 10 வாரங்களுக்கு கோவிட் – 19 வைரஸின் நான்காம் அலைக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கோடீஸ்வரர்களுக்கு இளம் பெண்களை விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஈடுபடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புற்று நோயினால் பாதிக்கப்பட்ட 21 வயதுடைய இளம் பெண்ணை 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய பேரம் பேசப்பட்டுள்ளது. பொலநறுவை பிரதேச சபைக்கான நிர்மாணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கோடீஸ்வர வர்த்தகருக்கு விற்பனை செய்வதற்கு முயன்ற போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் 15 வயதுடைய சிறுமியை இளம் பெண் என கூறி அந்த வர்த்தகருக்கு விற்பனை செய்தவரும் மெல்டா என்ற பெயருடைய இந்த வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள வர்த்தகரின் கையடக்க தொலைபேசியை தங்கள் பொறுப்பில் எடுத்து ஆய்வு செய்த போது புற்று நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணையும் விற்பனை செய்ய தயார் செய்துள்ளதாக தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உலகின் ஆரோக்கியமான 600 விமான நிலையங்களுள் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டீ.வி சானக தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள 17,000 விமான நிலையங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேவையாளர்களின் பாதுகாப்பின் அடிப்படையில் கிடைத்துள்ள இந்த நன்மதிப்பு எதிர்காலத்தில் மிகவும் பயன் மிக்கதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் கோவிட் தொற்று நிலைமை காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இந்த வருடம் மார்ச் முதலாம் திகதி முதல் பத்தாம் திகதி வரை நடைபெற்றது. நாடு இயல்பு நிலையில் இருந்திருந்தால் ஜூன் மாதத்தில் முடிவுகளை வெளியிட்டிருக்க முடியும்.
நாட்டில் கோவிட்டின் மூன்றாம் அலை காரணமாக ஏப்ரல் நடுப்பகுதியில் தொடங்கி, அரசு அலுவலகங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யப் பணிக்கப்பட்டனர்.
அதேவேளை, ஒரு மாத கால பயணக் கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. இந்த நடவடிக்கைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் தாமத்தை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவது தொடர்பான பணிகள் நடந்து கொண்டிருக்கின்ற போதிலும் தொற்று நோயுடன் நாட்டின் சூழ்நிலைகள் மாறும்போது சரியான திகதியை வெளியிட முடியாதுள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு 2021 ஜூலை முதல் புதிய உயர்தர வகுப்புகளைத் தொடங்க அரசு எதிர்பார்த்தது. எனினும், பரீட்சை முடிவுகள் தாமதமாகி விட்டதால் இந்த நடவடிக்கைகளும் தாமதமாகியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெறுவதினால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (05.07.2021) அவசர மருத்துவ சேவை தவிர்ந்த ஏனைய சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்கள் , மருந்தாளர்கள் மற்றும் கதிரியக்கவியலாளர்கள் நாளாந்த சேவையில் ஈடுபடவில்லை.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை உட்பட நாட்டின் பல பாகங்களில் வைத்தியசாலைகளில் பணியாற்றும் நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுநர்களும் ஆதரவளித்துள்ளனர்.
இதனால் நீண்ட தூரத்திலிருந்து ஆய்வுகூடப் பரிசோதனை உள்ளிட்டவைகளுக்கு வைத்தியசாலைகளுக்கு வருகை தந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றமையினை அவதானிக்க கூடியதாகவிருந்தது.
எனினும் உயிர்காக்கும் அவசர சேவைகளுக்கு நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுநர்கள் சேவையாற்றுவதாக வவுனியா வைத்தியசாலை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
மருமகனை காதலித்து மாமியார் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. முஸாபர் நகரைச் சேர்ந்த 50 வயது பெண் தனது மருமகனுடன் காதல் வலையில் விழுந்துள்ளார்.
2 பேரக் குழந்தைகளுக்கு பாட்டியான அவர், தன்னை விட சரிபாதி வயதுள்ள மருமகனுடன் காதல் வயப்பட்டதற்கு கடும் எ.திர்ப்பு கி.ளம்பியுள்ளது.
இதனால், காதல் மயக்கத்தில் இருந்த அந்த ஜோடி, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். எதோ ஒரு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்த நிலையில்,
மீண்டும் நேற்று வீடு திரும்பியுள்ளனர். பி.ரச்சனைகளை மறந்து தங்களை மீண்டும் சேர்த்துக் கொள்வார்கள் என நினைத்து அவர்கள் திரும்பி வந்துள்ளனர். ஆனால், செய்துள்ள காரியத்தை மறக்க முடியாத குடும்பத்தினர் மற்றும் ஊர்மக்கள், அவர்களை க.டுமையாக எ.திர்த்துள்ளனர்.
அப்போது, இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், ஆதலால் தங்களை வாழ விடுமாறு கெஞ்சியுள்ளனர். ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத குடும்பத்தினர், போலீசாருக்கு தகவலை தெரிவித்தனர்.
அதன்படி, விரைந்து வந்த போலீசார், பொது ஒழுக்கத்துக்கு அ.ச்சுறுத்தலாக இருக்கக் கூடும் என்ற பிரிவில் அவர்கள் மீது வ.ழக்குப் பதிவு செய்த போலீசார், மாமியாரையும் மருமகனையும் கை.து செய்தனர்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை உட்பட நாட்டின் பல பாகங்களில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதார ஊழியர்கள் நாளையதினம் ப.ணி.ப்.பு.ற.க்.க.ணி.ப்.பி.ல் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீ.வி.ர சி.கிச்சை பிரிவு, வி.பத்துப் பிரிவு, வி.டுதிகள் என்பன மாத்திரம் நோ.யாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இயங்கவுள்ளது. எனினும் வெளி நோ.யாளர் பிரிவில் வைத்தியர்களின் சேவைகளை தவிர்ந்த மருந்தகம் உட்பட பல பிரிவுகள் ஸ்.த.ம்.பி.த.ம் அ.டையும் நிலைமை உருவாகியுள்ளது.
மணமகள் மணமகன் கோலத்திலும் மணமகன் மணமகள் கோணத்திலும் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. திருமணத்தை ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள்.
வெறுமனே ஆணும், பெண்ணும் இணையும் நிகழ்வாக அன்றி, வாழ்வின் ஒப்பற்ற தொடக்கமாகவே திருமணம் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள செர்லோபள்ளி கிராமத்தில் நடைபெற்ற விநோத முறையிலான திருமணம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பெத்த அறவேடு மண்டலம் செர்லோபள்ளி கிராமத்தில் இந்த அதிசய திருமணம் நடைபெற்றுள்ளது. மணமகன் மணமகள் கோலத்திலும், மணமகள் மணமகனைப் போலவும் தயாராகி, திருமண சடங்குகள் நிறைவேற்றப் பட்டதே இதற்குக் காரணம்.
இந்தப் பகுதியில் மர்காபுரம் மண்டலம், தரிமடுகு, குரிச்செடு மண்டலம், தேஷினேனி பல்லி, அர்த்தவீடு மண்டலம், மாவுட்டூர், கம்பம் மண்டலம், ஜங்கங்குண்ட்லா கிராமங்களில், குலதெய்வ முறைப்படி நிச்சயம் செய்த தம்பதியினர்,
திருமண நாளில் மணமகன் மணமகள் கோலத்திலும் மணமகள் மணமகன் கோலத்திலும் உடை அணிந்து வந்து, குலதெய்வ கோவில் முன்பாக திருமணம் செய்து கொள்வது வழக்கம்.
பாரம்பரியமாக பல்வேறு ஆண்டுகளாக இந்த முறையை அந்த கிராம மக்கள் கையாண்டு வருகின்றனர். குறிப்பாக மணமகன் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் திருமணத்தன்று முறைப்படி பெண் வேடமிட்டு தாலி கட்ட வேண்டும்.
நாட்டில் எவ்வளவு நாகரிகங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த கிராமங்களில் இதுபோன்ற திருமணம் நடப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, பெத்த அறவேடு மண்டலம் செர்லோபள்ளி கிராமத்தில் நடைபெற்ற திருமணம் தான் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.