ந.டுங்க வைக்கும் பேஸ்புக் பதிவு : மனைவி மகளை கொ.லை செ.ய்.து.விட்டு த.ப்.பி.ய நபர் சாலை விபத்தில் ப.லி!!

ஸ்கொட்லாந்தில்..

ஸ்கொட்லாந்தில் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட பின்னர் மனைவி மற்றும் மகளை கொ.டூ.ர.மாக கொ.லை செ.ய்த கணவர் சாலை வி.பத்தில் கொ.ல்லப்பட்டுள்ளார்.

40 வயதான ஸ்டீவன் ராபர்ட்சன் என்பவரே தமது முன்னாள் மனைவியும் என்.எச்.எஸ் ஊழியருமான எம்மா கூப்லாண்ட் மற்றும் அவரது மகள் நிக்கோல் ஆண்டர்சன் ஆகியோரை க.த்.தி.யா.ல் கொ.டூ.ர.மா.க தா.க்.கி கொ.லை செ.ய்துவிட்டு த.ப்.பி.ய நிலையில் சாலை விபத்தில் சி.க்.கி ம.ரணமடைந்துள்ளார்.

அப்பகுதி மக்கள் அது ராபர்ட்சன் என்பதை அடையாளம் காட்டிய நிலையில், பொலிசார் கண்காணிப்பு கெமரா பதிவுகளை சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் எம்மா பணியாற்றும் மருத்துவமனை அருகாமையில் தமது வாகனத்தில் ராபர்ட்சன் காத்திருப்பதையும் சிலர் சாட்சியப்படுத்தியுள்ளனர்.

எம்மா மற்றும் அவரது மகள் நிக்கோல் ஆகியோரை கொ.லை செ.ய்வதற்கு முன்னர், ராபர்ட்சன் .கடுமையான வார்த்தைகளால் அவர்களை வசைபாடி பேஸ்புக் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், தம்மை ஏமாற்றி, தமது பிள்ளைகளையே தமக்கு எ.திராக தூ.ண்டிவிட்ட மோ.சமான பெண் எம்மா என குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னரே எம்மா மற்றும் நிக்கோல் ஆகியோரை ராபர்ட்சன் க.த்.தி.யா.ல் மூ.ர்க்கதனமாக தா.க்.கி.யு.ள்.ளா.ர்.

இதில் 39 வயதான எம்மா அவர் பணியாற்றும் மருத்துவமனை வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் தா.க்.க.ப்.ப.ட்.டு, பின்னர் சம்பவயிடத்திலேயே ம.ரணமடைந்துள்ளார்.

20 நிமிடங்களுக்கு பிறகு, குடியிருப்பு ஒன்றில் இருந்து கு.ற்றுயிராக மீ.ட்கப்பட்ட 24 வயது நிக்கோல் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை ப.லனின்றி ம.ரணமடைந்துள்ளார்.

ஆனால், மனைவி மற்றும் வளர்ப்பு மகளை கொ.டூ.ர.மா.க தா.க்.கி.வி.ட்.டு த.ப்.பி.ய ராபர்ட்சன் சாலை விபத்தில் சி.க்கி ம.ரணமடைந்துள்ளார். வியாழக்கிழமை இரவு நடந்த இச்சம்பவம் தொடர்பில் உரிய வி.சாரணை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அழகாக மாற இளம்பெண் செய்த செயல் : நேர்ந்த விபரீதத்தால் சூன்யமாகி போன எதிர்காலம்!!

சீனாவில்..

சீனாவில் முக அழகை வசீகரமாக மாற்ற நினைத்து தனது வாழ்க்கையை நடிகை ஒருவர் இழந்துள்ளார். சீனாவைச் சேர்ந்த பிரபல நடிகை காவ் லியூ. இவர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.

ஏற்கனவே அழகாக இருந்த காவ் லியன் தனது முக அழகை மேலும் வசீகரமாக மாற்ற வேண்டும் என்பதற்காக மூக்கில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் திட்டமிட்டார்.

இதன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கை மேலும் உயரும் என்று நம்பி கடந்த ஆண்டு, அக்டோபர் மாத இறுதியில் தனது மூக்கின் நுனியில் உள்ள குருத்தெலும்பில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

ஆனால், அந்த அறுவை சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக்கொள்ளாததால் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.

இதற்காக அவர் 61 நாட்கள் மருத்துவமனையில் தங்கி, மறு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால், சுமார் 45 லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. ஆனாலும், அவரது முகம் பழைய நிலைக்குத் திரும்பவில்லை.

அறுவை சிகிச்சை செய்த இடம் கருப்பாக மாறிவிட்டது. இதனால், அவரது எதிர்காலமே இப்போது சூன்யமாக மாறிவிட்டது. இது குறித்து காவ் லியூ, நான்கு மணி நேர அறுவை சிகிச்சை என்னை மிகவும் அழகாக மாற்றும் என்று நம்பினேன்.

ஆனால், அது மோசமான கனவின் தொடக்கமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இது போன்று யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

சொந்த மகள்களை நி.ர்.வா.ண.ப்படுத்தி ந.ர.ப.லி கொடுத்த பெற்றோர் : வெளிச்சத்துக்கு வந்த காதலனின் பங்கு!!

ஆந்திர மாநிலம்..

இந்தியாவின் ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் பெற்ற மகள்களை ந.ர.ப.லி கொடுத்து பூஜை செய்த சம்பவத்தில் புதிய திருப்பமாக காதலனின் பங்கும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வருபவர் புருஷோத்தம் நாயுடு – பத்மஜா தம்பதியினர். புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும், அவரது மனைவி பத்மஜா ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களின் இளையமகள் சாயி திவ்யா (22) ஏ ஆர் ரகுமான் இசை கல்லூரியில் படித்து வந்தார். மூத்த மகள் அலேக்யா போபாலில் உள்ள மத்திய வன ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

தற்போது இந்த கொடூர நரபலி விவகாரத்தில் அலேக்யாவின் காதலரின் பங்கும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பவத்தன்று அலேக்யாவை தொடர்பு கொள்ள மொபைலில் பலமுறை முயன்றும் அந்த இளைஞருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

ஒருகட்டத்தில் மொபைல் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிய வரவே, அந்த இளைஞர் அலேக்யாவின் குடியிருப்புக்கு நேரிடையாக சென்றுள்ளார். ஆனால் அலேக்யாவின் குடியிருப்புக்கு சென்ற இளைஞருக்கு கடும் அ.திர்ச்சி காத்திருந்துள்ளது.

உடனடியாக அந்த இளைஞர் பொலிசாருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் தகவல் தெரிவித்து உதவி கோரியுள்ளார். இதன் பின்னரே இந்த விவகாரம் வெளியுலகிற்கு தெரிய வந்தது என கூறப்படுகிறது.

இளம் ஆசிரியர் ஒருவர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை!!

இளம் ஆசிரியர்..

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் ச.ட.ல.ம் இன்று மீ.ட்.க.ப்.ப.ட்.டு.ள்.ள.தா.க களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

பெரியகல்லாறு – 02, கனடியன் வீதியை சேர்ந்த 30 வயதையுடைய களுவாஞ்சிகுடியில் உள்ள பிரபல பாடசாலையென்றில் கடமையாற்றிவந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்பட்டுள்ளார்.

கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டே அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளதாக வி.சாரனைகள் மூலம் தெரியவந்துள்ளது. களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற,

களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் ம.ர.ண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரத்தினம் பி.ரே.த.த்.தை பார்வையிட்ட பின்னர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பி.ரே.த ப.ரிசோதனைக்கு உட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக வி.சாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். பி.ரே.த ப.ரிசோதனைகளின் பின்னர் ச.ட.ல.ம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் புகையிரதம் மோதி ஆசிரியரொருவர் பலி!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் கடுகதி புகையிரதம் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் அரியாலை, நாவலடி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆசிரியரான வி.பாலரூபன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை உயிரிழந்தவரின் உடல் நாவற்குழி புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வங்கிகளில் நடக்கும் மோசடி : அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

வங்கிகளில் நடக்கும் மோசடி..

வர்த்தக வங்கிகளில் கணக்கு உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தாமல் பணம் அறவிடப்படுவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

சில வங்கிகள் தவறாக எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவளிக்காமல் புதிய சட்டத்திட்டங்கள் சிலவற்றை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வங்கிகளில் வைப்பு வைத்துள்ள கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் பணம் அறவிடும் நடவடிக்கை இடம்பெறும் என்றால் அது முழுமையாக தவறான விடயமாகும். எந்தவொரு வங்கிகளாலும் கணக்கு உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தாமல் ஒரு சதமேனும் எடுக்க முடியாது.

சில இடங்களில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவவாக எனக்கு தெரியும். அந்த விடயங்கள் தவறானவைகளாகும். கடந்த வாரம் 3 வீதம் வட்டி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் அப்படி ஒன்றும் இல்லை. இதனால் புதிய சட்டத்திட்டங்களை அறிமுகப்படுத்த நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மேலும் தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் முக்கிய எச்சரிக்கை!!

பொது மக்களுக்கு..

கொழும்பு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் என கூறி வீடுகளுக்குள் நுழைந்து 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வர்த்தகரின் வீட்டிற்குள் மோசடியான முறையில் புகுந்த நான்கு பேர் கொள்ளையடித்த நிலையில், தப்பிச் சென்றுள்ளனர்.

சந்தேக நபர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த முறையில் கொள்ளையர்கள் வீடுகள் அல்லது வர்த்தக நிலையங்களுக்கு வர கூடும் என்பதனால் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் அவ்வாறு விசாரணைக்கு வந்தால் அடையாள அட்டைகளை காண்பிப்பார்கள். விசேட சந்தர்ப்பங்களை தவிர ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் உத்தியோகபூர்வ வாகனங்களில் வருவார்கள்.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தாம் சிவில் உடையில் வந்திருக்கும் பொலிஸ் அதிகாரிகள் என கூறினாால் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வது பொது மக்களிடம் கடமையாகும் என பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தீயில் எரிந்த பெண் சிகிச்சை பலனின்றி மரணம்!!

தெற்கிலுப்பைக்குளம் பகுதியில்..

வவுனியா தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் தீயில் எரிந்து படுகாயமடைந்த பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (06.02.2021) மரணமடைந்துள்ளார்.

குறித்த பெண் கடந்தவாரம் தனது வீட்டில் இருந்த சமயம் தீயில் எரிவதை அவதானித்த அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த அமல உட்பவும் (வயது 37) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று (06.02) அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். அவரது மரணம் தொடர்பாக வவுனியா நகர திடீர் மரண விசாரணை அதிகாரியான சிவநாதன் கிசோரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கொரோனா தொற்றால் உயிர்நீத்த வைத்தியருக்கு அஞ்சலி!!

வைத்தியருக்கு அஞ்சலி..

கொரோனா தொற்றினால் உயிரிழந்த இலங்கையின் முதலாவது வைத்தியரான கயான் டந்தநாராயணவிற்கு வவுனியா மக்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த அஞ்சலி நிகழ்வு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று (07.02.2021) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற போராடி தனது உயிரினையும் துறந்த ராகம வைத்தியசாலை வைத்தியர் கயான் டந்தநாராயணவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அஞ்சலி உரைகளும் இடம்பெற்றதன.

குறித்த அஞ்சலி நிகழ்வில் அரச அதிபர் சமன் பந்துலசேன, நகரசபை உறுப்பினர்கள், வைத்தியர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனா தொற்றுக்கு பலி!!

கொரோனா..

இலங்கையில் மேலும் எட்டு பேர் கோவிட் – 19 தொற்றுக்கு பலியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கோவிட் – 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 351 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்குள் இன்று மாத்திரம் 726 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர். இதனையடுத்து நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 68ஆயிரத்து 576 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5639 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை கொரோனாவில் இருந்து குணமானோரின் மொத்த எண்ணிக்கை 62ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது.

வவுனியாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவைச் சேர்ந்த 3 பேருக்கு இன்று (06.02.2021) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியான முடிவுகளில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று வடமாகாணத்தைச் சேர்ந்த 727 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பரிசோதனை முடிவுகள் வெளியானது. முடிவுகளின்படி வவுனியாவைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதியில் இருந்து இன்றுவரை வவுனியாவில் 370க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இப்போ தான் கல்யாணம் ஆனது : அதுதான் இப்படி செய்தேன் : விமான நிலையத்திற்கு கணவனை வழியனுப்ப வந்த மனைவியின் பித்தலாட்டம்!!

விமான நிலையத்தில்..

விமான நிலையத்தில் கணவரை வழியனுப்ப வந்த மனைவியின் செயல் சிறிது நேரம் அங்கு ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து இன்று சார்ஜா செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

அந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் டிக்கெட் மற்றும் ஆவணங்களைப் பரிசோதித்து விமானநிலையத்தின் உள்பகுதிக்குள் பாதுகாப்பு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

அப்போது ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த நவாஸ் சேக் என்பவரும், அவருடைய மனைவி சனா என்பவரும் பயணிகளுக்கான இ டிக்கெட்டை காட்டிவிட்டு உள்ளே சென்றனர்.

பின்னர் ஒரு மணி நேரம் கழித்து இளம்பெண் சனா மட்டும் வெளியே வந்தார். இதை கவனித்த கேட்டில் நின்ற பாதுகாப்பு படை அதிகாரிகள், சனாவை நிறுத்தி விசாரித்த போது, தான் பயணத்தை ரத்து செய்து விட்டதாகவும் எனது கணவர் மட்டுமே பயணிக்கின்றார் என்றும் கூறியுள்ளார்.

அதோடு உள்ளே போகும்போது கேட்டில் காட்டிவிட்டு சென்ற இ டிக்கெட்டையும் காட்டினார். ஆனால் அந்த டிக்கெட்டில் பயணி ஆப்லோடு செய்யப்பட்டதற்கான எந்த முத்திரையும் குத்தப்படவில்லை.

இது பாதுகாப்பு அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், குறித்த பெண்ணை வெளியில் விடாமல் நிறுத்திவைத்து தீவிர வி.சாரணை நடத்தினர்.

அப்போது, நாங்கள் இருவரும் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டோம். இந்த சூழ்நிலையில் எனது கணவர் சார்ஜாவிற்கு வேலைக்காகச் செல்ல தயாரானார்.

இதனால் அவரை வழியனுப்ப நானும் அவருடன் சென்னை விமானநிலையம் வந்தேன். ஆனால் சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. ஆனால் கடைசி வரை சென்று கணவரை வழியனுப்ப வேண்டும் என எனக்கு ஆசையாக இருந்தது.

இதனால், நான் எனது கணவரின் உண்மையான டிக்கெட்டை கலா் ஜெராக்ஸ் எடுத்து அந்த ஜெராக்ஸ் டிக்கெட்டில் எனது பெயரையும் இணைத்து போலியான இ டிக்கெட் தயார் செய்து கொண்டு வந்தோம்.

அந்த போலி இ டிக்கெட்டை காட்டிதான் விமானநிலையத்திற்குள் பாதுகாப்பு சோதனை நடக்கும் பகுதி வரை ஒன்றாகவே சென்றோம். அதன்பின்பு நானும் கணவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தோம்.

பின்பு அவர் தனது உண்மையான டிக்கெட் மூலம் விமானத்தில் ஷார்ஜாவிற்கு புறப்பட்டு சென்றார். நானும் அவரை வழியனுப்பி விட்டு அதே போலி இ டிக்கெட் மூலம் வெளியே வந்தேன். நான் செய்தது தவறு தான். மன்னித்துவிட்டுவிடுங்கள் என்று அழுதுள்ளார்.

ஆனால் உயர் பாதுகாப்பு கொண்ட சென்னை விமான நிலையத்தில் நடந்த இந்த மோ.சடி காரணமாக, இளம் பெண்ணை கைது செய்த பாதுகாப்புப் படை அதிகாரிகள், அவரை சென்னை விமானநிலைய பொலிசில் ஒப்படைத்தனர். அவரிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமாகி சில மாதங்கள் : பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிட்ட மனைவி : கணவன் செய்த கொ.டூ.ர செயல்!!

தெலுங்கானா மாநிலத்தில்..

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிட்ட மனைவியை திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கணவன் கொ.லை செ.ய்.து.ள்.ள ச ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் கம்மம் மாவட்டம் யெரபாலம் கிராமத்திலேயே குறித்த அ.தி.ர்.ச்.சி ச ம்பவம் அரங்கேறியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் எர்ரமல்ல நவ்யா என்பவருக்கும் நாகா ஷேஷு ரெட்டி என்பவருக்கும் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது.

ஆனால் திருமணம் முடிந்த நாள் முதலே, நவ்யா பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிக நாட்டம் காட்டி வந்துள்ளதுடன், அதிக நேரம் அதில் செலவிட்டுள்ளார்.

பல முறை இந்த விவகாரம் தொடர்பில் ஷேஷு ரெட்டி தமது மனைவியை க.ண்.டி.த்.து.ம், அவரது நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே அ.டி.க்.க.டி வா.க்.கு.வா.த.மு.ம் ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் தமது மனைவிக்கு வேறு நபருடன் தொ.டர்பு இருக்கலாம் என முடிவு செய்த ஷேஷு ரெட்டி, அ.வரை கொ.லை செ.ய்.ய.வே தி.ட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து விருந்துக்கு என மனைவி நவ்யாவை அழைத்து சென்ற ஷேஷு ரெட்டி, கோத்தப்பள்ளி குட்டா என்ற பகுதியில் வைத்து கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.

இச் ச.ம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிசார், ஷேஷு ரெட்டியை கை.து செ.ய்ததுடன், இந்த கொ.லை ச.ம்.ப.வ.த்.தி.ன் உ.ண்மையான பி.ன்னணியையும் வி.சாரித்து வ.ருகின்றனர்.

இரவில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற தாய் மற்றும் இரு மகள்கள் : அடுத்த சில நிமிடங்களில் நடந்த பயங்கரம்!!

இந்தியாவில்…

இந்தியாவில் இருட்டான இடத்தில் இயற்கை உபாதைகள் கழிக்க சென்ற இரண்டு மகள்கள் மற்றும் தாயார் மீது புகையிரதம் மோதியதில் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பரிதாபாத்தை சேர்ந்தவர் ராஜீவ். இவர் மனைவி சுனிதா. தம்பதிக்கு சிப்பி (18) மற்றும் இந்து (16) என இரு மகள்கள் இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு சுனிதா, சிப்பி, இந்து ஆகிய மூவரும் கடைக்கு சென்றனர்.

பின்னர் இரவு 8 மணியளவில் அங்குள்ள இருட்டான பகுதிக்கு இயற்கை உபாதைகளை கழிக்க சென்றனர். பின்னர் அருகில் இருந்த இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மூவர் மீதும் புகையிரதம் மோதியது.

இந்த பயங்கர சம்பவத்தில் மூவரும் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் மூவரின் சடலங்களையும் கைப்பற்றினார்கள்.

இரவு நேரங்களில் இது போல இரயில் வரும் இடங்கள் அருகில் இயற்கை உபாதைகள் கழிக்க செல்ல வேண்டாம் என பொலிசார் எச்சரித்துள்ளனர்.

கிளிநொச்சி நகரை சென்றடைந்துள்ள பொத்துவில் : பொலிகண்டி மக்கள் பேரணி!!

மக்கள் பேரணி..

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியின் போராட்டக்காரர்கள் தற்போது கிளிநொச்சி நகரப்பகுதியை சென்றடைந்துள்ளனர்.

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கின் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் நான்காவது நாளான இன்று வவுனியாவில் ஆரம்பித்து பேரணி கிளிநொச்சி நோக்கி நகர்ந்துள்ளது.

இதன்போது குறித்த பேரணியை ஆதரிக்கும் வகையில் கிளிநொச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியின் இரு மருங்கிலும் திரண்டு நிற்பதாக கூறப்படுகிறது.

இந்தப் போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் எனப் பெரும் திரளான மக்கள் தமது ஆதரவினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வீதி விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி!!

விபத்து..

திருகோணமலை – கந்தளாய் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த நபரொருவருடன் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது. அதே பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாரதியை கைது செய்துள்ளதாகவும், விபத்து தொடர்பான விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.