யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்து வீதியை விட்டு விலகி விபத்து!!

பேருந்து விபத்து..

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் ஏ9 வீதியில் விபத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது. காலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து அதிகாலை 3.30 மணியளவில் பதிவாகியுள்ளது. விபத்துக்குள்ளான பேருந்து வீதி அருகில் உள்ள தனியார் காணி ஊடாக பயணித்துள்ளது.

எனினும் அவ்விபத்தின் போது பயணித்த பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் மொத்த வியாபாரிகள் வீதியினை மறித்து போராட்டம் : இரு நாட்களுக்குள் தீர்வு!!

மொத்த வியாபாரிகள்..

வவுனியா- திருகோணமலை பிரதான வீதியான ஹொரவப்பொத்தானை வீதியினை வழிமறித்து இன்று (06.02.2021) அதிகாலை 4.30 தொடக்கம் காலை 10.00 மணி வரை வவுனியா மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா நகரில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாகவும் வவுனியா மொத்த மரக்கறி வியாபாரிகள் சந்தையில் சமூக இடைவெளியினை பேணுவதில் கடினமான சூழல் காணப்பட்டதினையடுத்து,

வவுனியா அரசாங்க அதிபரின் உத்தரவின் அடிப்படையில் 291 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா கண்டி வீதியில் அமைக்கப்பட்டு பயன்பாடற்ற நிலையில் காணப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தினை,

தற்காலிகமாக மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனையினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு மூன்று வாரங்களுக்கு மேலாக குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனை என்பன இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் பொருளாதார மத்திய நிலையத்தில் தமக்கு பொதுமான வசதிகள் இல்லை என தெரிவித்து மரக்கறி மொத்த வியாபாரிகள் இன்று (06.02.2021) வழமையாக மரக்கறி விற்பனை மேற்கொண்டு வந்த மொத்த மரக்கறி விற்பனை நிலையத்தினை திறந்து வியாபார நடவடிக்கையினை முன்னெடுக்க முற்பட்ட சமயத்தில் மரக்கறி மொத்த விற்பனை நிலையத்தினை திறப்பதற்கு பொலிஸார் தடை விதித்தனர்.

அதனையடுத்து அதிகாலை 4.30 மணி தொடக்கம் மரக்கறி மொத்த வியாபாரிகள் வவுனியா- திருகோணமலை பிரதான வீதியான ஹொரவப்பொத்தானை வீதியினை வழிமறித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் திறக்க விடு திறக்க விடு சந்தையினை திறக்க விடு, வாழ விடு வாழ விடு விவசாயிகளை வாழ விடு, விவசாயத்தினை வைத்து சுயலாபம் காணதே, சந்தையினை மட்டும் திறக்க விடாதது ஏன்?,

அடிக்காதே அடிக்காதே விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், சுகாதார பிரிவினர் பரிசோதனை செய்தும் திறக்க விடாதது ஏன் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்ட இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான காதார் மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், குலசிங்கம் திலிபன், வினோ நோகராதலிங்கம் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் வருகைதந்து போராட்டத்திலிருந்தவர்களுடன் கலந்துரையாடியதுடன் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கிச் சென்றனர். எனினும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் தொடந்து கொண்டிருந்தது.

அதன் பின்னர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் காலை 10 மணியளவில் போராட்ட இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் சகிதம் வருகை தந்த வவுனியா , மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் செனவிரத்ன போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி,

திங்கட்கிழமை மரக்கறி மொத்த விற்பனை நிலையத்தினை திறப்பதற்குறிய நடவடிக்கையினை மேற்கொள்ளுவதாகவும் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களுக்கு காமினி மாகா வித்தியாலய மைதானம் அல்லது வீதியோரங்களில் விற்பனை நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு வழங்கிய வாக்குறுதியினையடுத்து போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

வவுனியாவில் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!!

போராட்டம்..

வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்னி மக்கள் அமைப்பு, வவுனியா மாவட்ட மக்கள் காப்பகம் ஆகியவற்றினால் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா பழைய பேரூந்து நிலைய முன்றலில் இன்று (06.02.2021) காலை 9.30 மணி தொடக்கம் 10.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாணக்கியனே நீ நேற்று அரச விருந்தில் இன்றோ பி2பி இல் எமாற்றாதே தமிழினத்தை , ஏசி அறையில் உல்லாசமாய் இருப்பவரே இளைஞர்களின் இரத்தத்தை வசனங்களால் சூடாக்காதே இழந்தது போதும்,

சாணக்கியன் புலிக்கு பயந்தவன் நடைப்பயணத்தில் கோடிகளை வாங்கியவன் கூட்டமைப்பில், வவுனியாவில் கடைகளை திறக்க பி.சி.ஆர் தேவை வெளிமாவட்டத்திலிருந்து ஊர்வலம் நடத்தியவர்களுக்கு பி.சி.ஆர் தேவையில்லையா?,

யுத்தம் முடிந்த பின்பும் பித்தாலட்டம் எதற்கு, இல்லாமல் போன எங்கள் உறவுகளுக்காக இருக்கின்றவர்களை சாகடிக்காதே வாழ வழி செய் போன்ற பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை எந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் 10க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதுடன் போராட்டத்திற்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

 

வவுனியாவிலிருந்து ஆரம்பமான மக்கள் எழுச்சி போராட்டம் : அணி திரண்ட மக்கள்!!

மக்கள் எழுச்சி போராட்டம்..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் 4ஆம் நாள் பேரணி இன்று (06.02) காலை 7.30 மணியளவில் வவுனியா புதிய பேரூந்து நிலைய முன்றலிருந்து ஆரம்பமாகியது.

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல் நிலங்கள் அபகரிப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம்,

மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி அவற்றை கண்டித்தும் நீதி கோரியும் தீர்வு கேட்டும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய பேரணியானது வவுனியா நகரை வலம் வந்து வவுனியா- மன்னார் பிரதான வீதியுடாக மன்னாரை சென்றடைந்து மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியுடாக துணுக்காய் சென்று மாங்குளம் ஊடாக கிளிநொச்சி நகரை சென்றடையவுள்ளது.

குறித்த போராட்டத்தில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என 1000க்கு மேற்பட்டவர்கள் அணி திரண்டு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

 

வவுனியாவில் மொத்த வியாபாரிகள் வீதியினை மறித்து போராட்டம்!!

மொத்த வியாபாரிகள்..

வவுனியா- திருகோணமலை பிரதான வீதியான ஹொரவப்பொத்தானை வீதியினை வழிமறித்து இன்று (06.02.2021) அதிகாலை 4.30 தொடக்கம் தற்போது வரை வவுனியா மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா நகரில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாகவும் வவுனியா மொத்த மரக்கறி வியாபாரிகள் சந்தையில் சமூக இடைவெளியினை பேணுவதில் கடினமான சூழல் காணப்பட்டதனையடுத்து வவுனியா அரசாங்க அதிபரின் உத்தரவின் அடிப்படையில்,

291 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா கண்டி வீதியில் அமைக்கப்பட்டு பயன்பாடற்ற நிலையில் காணப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தினை தற்காலிகமாக மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனையினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு மூன்று வாரங்களுக்கு மேலாக குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனை என்பன இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் பொருளாதார மத்திய நிலையத்தில் தமக்கு பொதுமான வசதிகள் இல்லை என தெரிவித்து மரக்கறி மொத்த வியாபாரிகள் இன்று (06.02.2021) வழமையாக மரக்கறி விற்பனை மேற்கொண்டு வந்த மொத்த மரக்கறி விற்பனை நிலையத்தினை திறந்து வியாபார நடவடிக்கையினை முன்னெடுக்க முற்பட்ட சமயத்தில் மரக்கறி மொத்த விற்பனை நிலையத்தினை திறப்பதற்கு பொலிஸார் தடை விதித்தனர்.

அதனையடுத்து அதிகாலை 4.30 மணி தொடக்கம் மரக்கறி மொத்த வியாபாரிகள் வவுனியா- திருகோணமலை பிரதான வீதியான ஹொரவப்பொத்தானை வீதியினை வழிமறித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் திறக்க விடு திறக்க விடு சந்தையினை திறக்க விடு, வாழ விடு வாழ விடு விவசாயிகளை வாழ விடு, விவசாயத்தினை வைத்து சுயலாபம் காணதே, சந்தையினை மட்டும் திறக்க விடாதது ஏன்?,

அடிக்காதே அடிக்காதே விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே , வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் , சுகாதார பிரிவினர் பரிசோதனை செய்தும் திறக்க விடாதது ஏன் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்ட இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான காதார் மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், குலசிங்கம் திலிபன் ஆகியோர் சென்று போராட்டத்திலிருந்தவர்களுடன் கலந்துரையாடியதுடன் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கிச் சென்றனர்.

எனினும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் தற்போது வரை தொடந்த வண்ணமேயுள்ளது.

வவுனியாவில் நடைபெற்ற ஆளுமை நிறைந்த மாதரை உருவாக்கும் பிரதேசமட்ட கண்காட்சியும் பரிசளிப்பு விழாவும்!!

கண்காட்சியும் பரிசளிப்பு விழாவும்..

வவுனியாவில் ஆளுமை நிறைந்த மாதரை உருவாக்கும் பொருட்டு மகளிர் அபிவிருத்தி நிலைய பிரதேச மட்ட கண்காட்சியும் பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது.

வவுனியா பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு உள்வட்ட வீதியில் அமைந்துள்ள மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலகத்தில் இன்று (05.02) இடம்பெற்றது.

இதன்போது பெண்களின் ஆளுமையை விருத்தி செய்யும் நோக்கில் வழங்கப்பட்ட கைத்தொழில் மற்றும் கைவினை உற்பத்தி பயிற்சிகளை பூர்த்தி செய்த பெண்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன்,

அவர்கள் தொடர்ந்தும் அத் தொழில் முயற்சியில் ஈடுபடுவதற்கான உதவிகளும் பிரதேச செயலகத்தால் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் ஆளுமை நிறைந்த மாதர்களாக தொழில் முயற்சிக்கு தயாரானவர்களுக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ரதீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன்,

மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தேன்மொழி, கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், போதனாசிரியர்கள், பயிலுனர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் கைத்தொழில் அமைச்சரின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் அலுவலகம் திறப்பு!!

ஒருங்கிணைப்பு செயலாளர் அலுவலகம்..

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் அலுவலகம் ஒன்று வவுனியாவில் இன்று (05.02) திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா, மன்னார் வீதியில் உள்ள கலைமகள் விளையாட்டு மைதானம் அருகில் குறித்த அலுவலகம் திறந்து வைகப்பட்டது. கைத்தொழில் அமைச்சர் விமல்வீரவன்சவின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளராக ம.புஸ்பதேவா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைத்தொழில் அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் அலுவலகத்தை மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன திறந்து வைத்துடன், தேசியக் கொடியையும் ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வில், பொதுஜன பெரமுன கட்சியின் தமிழ் பகுதி இணைப்பாளர் பிறேம், மதகுருமார், அமைச்சர் விமல் வீரவன்சவின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தந்தை கண் முன்னே கருங்கல்லில் சிக்கி பலியான நான்கு வயது குழந்தை!!

நான்கு வயது குழந்தை..

பண்டாரவெல- ஹல்தும்முல்லை, ஹரங்கஹவ பிரதேசத்தில் 4 வயதுடைய குழந்தையொன்று கருங்கல்லொன்றில் சிக்கி சம்பவ இடத்திலேயே இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வெலிமடை உடபேருவ பிரதேசத்தை சேர்ந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. தாய், தந்தையுடன் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

குழந்தை தந்தையுடன் கருங்கல் ஒன்றில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த போது அங்கு குரங்கொன்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, கல்லில் இருந்து அவர்கள் பாய்ந்துள்ள நிலையில், குறித்த கருங்கல் கவிழ்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீட்டை விட்டு செல்லாத நபர் கொரோனா தொற்றால் மரணம்!!

கொரோனா..

அலவ்வ சுகாதார பிரிவுக்குட்பட்ட யட்டிகல்ஒலுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். 73 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பின்னர் அந்த சடலம் குருணாகல் வைத்தியசாலைக் கொண்டு செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.

அந்த வீட்டில் ஒருவரும் கொரோனா தொற்றவில்லை. அத்துடன் உயிரிழந்த நபர் வீட்டில் இருந்து வெளியே சென்று எவருடனும் தொடர்பு கொள்ளாதவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கொரோனா தொற்றியமை தொடர்பில் உரிய முறையில் கண்டுபிடிக்க முடியவில்லை என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவரின் தகன நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காதலனை ஏமாற்றி வேறொருவரை திருமணம் செய்ய நினைத்த காதலிக்கு நேர்ந்த துயரம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் காதலியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதால், ஆ.த்திரமடைந்த காதலன் செய்த செயலால், காதலி, காதலியின் தாயார் மற்றும் காதலன் மூன்று பேர் உ.யிரிழந்த சம்பவம் பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்டம்மா. இவருக்கு ரஜிதா என்ற மகள் இருந்தார். வெங்கட்டம்மாவின் கணவர் சென்னை மாநகராட்சியில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் ம.ரணமடைந்தார்.

இதனால் வெங்கட்டம்மா மற்றும் ரஜித்தா மட்டுமே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ரஜித்தா வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன் என்பவரின் மகன் சதீஷ்(31) ரஜிதாவை 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

அப்போது தந்தை உ.யிரிழந்ததால், ரஜித்தாவுக்கு சென்னை மாநகராட்சியில் வேலை கிடைத்துள்ளது. தந்தை வேலை பார்த்த சென்னை மாநகராட்சியில் அலுவலக உதவியாளராக ரஜிதா வேலைக்கு செல்ல தொடங்கி உள்ளார்.

அரசு வேலை கிடைத்த பின்னர் ரஜித்தா காதலன் சதீஷை உதாசினப்படுத்தி வந்துள்ளார். இதனால் அவர் மீது சதீஷ் க.டு.ம் கோ.பத்தில் இருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் திகதி ரஜித்தாவுக்கு, மயிலாப்பூரைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

ஏற்கனவே ரஜித்தா மீது க.டும் கோ.பத்தில் இருந்த சதீஷ், இந்த விஷயத்தை அறிந்தவுடன் ரஜித்தாவை நேரடியாக சந்தித்து ச.ண்.டை போ.ட்டுள்ளார். அப்போது ரஜித்தாவோ, ஆம் நான் அவரைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால் மிகுந்த வே.தனையடைந்த சதீஷ், இன்று அதிகாலை ரஜித்தாவின் வீட்டு ஓடுகளை பிரித்து, வீட்டிற்குள் ம.ண்ணெண்ணய் கே.னுடன் கு.தித்துள்ளார்.

பின்னர், அங்கு உறங்கிக் கொண்டிருந்த காதலி ரஜித்தா மீ.து ம.ண்ணெண்ணெய் ஊ.ற்றி தீ வை.க்.க, அதைத்தடுக்க வந்த தாயார் வெங்கட்டம்மாவுக்கும் தீ வை.க்.க வீ.டு மொத்தமும் தீ ப.ற்.றி எ.ரிந்தது.

இந்த சம்பவத்தில் வெங்கடம்மா, ரஜிதா மற்றும் சதீஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்தில் ப.ரிதாபமாக உ.யிரிழந்தனர். இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார், தீயணைப்பு துறை உதவியுடன் தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்த போது, மூன்று ச.டலம் கி.டந்தது.

மூன்றாவது நபர் யார் என்பது குறித்து நடத்தப்பட்ட வி.சாரணையில் தான், அது காதலன் சதீஷ் என்பது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது போராட்டம்!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் 3ஆம் நாளான இன்று (05.02.2021) இரவு 8.30 மணியளவில் வவுனியா புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் 3ம் நாளான இன்று வவுனியாவில் நிறைவு பெற்றுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல் நிலங்கள் அபகரிப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்,

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி அவற்றை கண்டித்தும் நீதி கோரியும் தீர்வு கேட்டும் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றது.

இன்று காலை 09 மணிக்கு திருகோணமலையில் ஆரம்பித்த பேரணி தென்னமரவடி கொக்கிளாய் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தினை அடைந்திருந்தது. அங்கிருந்து புதுக்குடியிருப்புநோக்கி சென்று ஒட்டுசுட்டான் சந்தியை அடைந்து,

இரவு 7 மணியளவில் நெடுங்கேணியை ௮டைந்து அங்கிருந்து புளியங்குளம் ஊடாக வவுனியா மாவட்டத்தை அடைந்த நிலையில் போராட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது.

நாளையதினம் காலை 7.30 மணிக்கு வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து போராட்டம் மீண்டும் ஆரம்பமாகி ஏ9 வீதியூடாக மணிக்கூட்டு கோபுரம் வரை சென்று கடைவீதி ஊடாக நகர பள்ளிவாசல்வரை சென்று அங்கிருந்து கொறவபதானை வீதி வழியாக மன்னார் வீதிக்குசென்று அங்கிருந்து மன்னார் மாவட்டம் நோக்கி பயணமாகும்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிப்பு!!

27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள்..

27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு இந்த விலை குறைப்பு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த விலைக் குறைப்பு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் லங்கா சதொச, மற்றும் கடைகளில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி வகைகள், சீனி, பெரிய வெங்காயம், தேயிலை, உருளைக் கிழங்கு, கடலை, காயந்த மிளகாய், டின் மீன், நெத்தலி, கோழி இறைச்சி, உப்பு, பால் மா, சோயா எண்ணெய், முகக் கவசங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவை வந்தடைந்தது போராட்டம் : நாளை மன்னார் நோக்கி பயணம்!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் 3ம் நாளான இன்று வவுனியாவில் நிறைவு பெற்றுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல் நிலங்கள் அபகரிப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்,

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி அவற்றை கண்டித்தும் நீதி கோரியும் தீர்வு கேட்டும் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றது.

இன்று காலை 09 மணிக்கு திருகோணமலையில் ஆரம்பித்த பேரணி தென்னமரவடி கொக்கிளாய் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தினை அடைந்திருந்தது. அங்கிருந்து புதுக்குடியிருப்புநோக்கி சென்று ஒட்டுசுட்டான் சந்தியை அடைந்து இரவு 7 மணியளவில் நெடுங்கேணியை ௮டைந்து அங்கிருந்து புளியங்குளம் ஊடாக வவுனியா மாவட்டத்தை அடைந்தநிலையில் போராட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது.

நாளையதினம் காலை 7.30 மணிக்கு வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து போராட்டம் மீண்டும் ஆரம்பமாகி ஏ9 வீதியூடாக மணிக்கூட்டு கோபுரம் வரை சென்று கடைவீதி ஊடாக நகர பள்ளிவாசல்வரை சென்று அங்கிருந்து கொறவபதானை வீதி வழியாக மன்னார் வீதிக்குசென்று அங்கிருந்து மன்னார் மாவட்டம் நோக்கி பயணமாகும்.

வவுனியாவில் ச.டலமாக மீ.ட்க்கப்பட்ட கு.டும்பப் பெ ண் : ச.ந்தேகத்தின் பேரில் க ணவர் கை து!!

எருக்கலம்கல் பகுதியில்..

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருக்கலம்கல் பகுதியில் த.லை.யி.ல் கா.ய.ங்.க.ளு.ட.ன் பெ.ண்.ணி.ன். ச.ட.ல.ம் ஒன்று நேற்று (04.02.2021) மாலை மீ.ட்.க்.க.ப்.ப.ட்.ட.து.

குறித்த பெ.ண் நேற்றைய தினம் வீட்டில் இருந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில் ச.ட.ல.மா.க கி.ட.ந்.து.ள்.ளா.ர். இதனை அவதானித்த குறித்த பெ.ண்ணின் க.ணவர் சம்பவம் தொடர்பில் அயலவர்களிற்கும் காவல்துறையினருக்கும் தெ.ரியப்படுத்தினார்.

குறித்த பகுதிக்கு சென்ற பூவரசங்குளம் காவல்துறையினர் ச.ட.ல.த்.தி.னை மீ.ட்.டு வி.சாரணைகளை முன்னெடுத்தனர் அந்தவகையில் பொலிஸாரின் மு.தற்கட்ட வி.சாரணையில்,

இ.றந்த பெ.ண்ணின் க.ணவர் ச.ந்.தே.க.த்.தி.ன் பே.ரி.ல் கை.து செ.ய்யப்பட்டு வி.சாரணைக்கு உ.ட்படுத்தப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் சிவகுமார் சித்திரகலா என்ற 36 வ.யதான பெ.ண்ணே ம.ர.ண.ம.டை.ந்.து.ள்.ள.தா.க காவல்துறையினர் தெரிவித்தனர்.

மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் : மலை உச்சியில் 5 வயது மகள் கண்முன்னே பறிபோன பெற்றோர் உயிர் : நடந்தது என்ன?

இத்தாலி..

இத்தாலி ஆல்ப்ஸ் மலையில் 5 வயது மகள் கண்முன்னே பெற்றோர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிலனைச் சேர்ந்த 35 வயதான VC மற்றும் அவரது 40 வயது கணவர் FM ஆகியோர் மலைகளை மிகவும் நேசிக்கும் ஜோடியாக திகழ்ந்தனர்.

ஆனால் அவர்கள் இத்தாலிய ஆல்ப்ஸுக்கு சென்றதே VC- FM ஜோடியின் கடைசி பயணமானது. கடந்த ஞாயிற்றுக்கிழமை Brescia-வுக்கு அருகிலுள்ள Passo della Presolana-வில் தங்கள் மகள் மார்டினா (5) மற்றும் இரண்டு நண்பர்களுடன் VC-FM ஜோடி நடைபயணம் சென்றனர்.

அவர்கள் ஒரு ஐஸ் சேனலைக் கடக்க முயன்ற போது VC நழுவி விழுந்துள்ளார், அவருக்கு உதவ முயன்ற கணவர் FM-மும் விழுந்துள்ளார். இருவரும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

கண்முன்னே பெற்றோர்கள் இறப்பதை பார்க்க வேண்டிய கொடூர நிலைக்கு மார்ட்டினா தள்ளப்பட்டுள்ளார். ஆனாதையான மார்டினா இப்போது தனது தாத்தா பாட்டிகளுடன் வசிக்கிறார்.

சிறுமியின் தலைவிதியைப் பற்றி மிகவும் கவலையடைந்த இத்தாலியர்கள் பலர் குழந்தைக்காக பணத்தை நன்கொடை செய்கிறார்கள். சுமார் 2,20,000 யூரோக்கள் மார்டினாவுக்காக சேகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குழந்தை பெற்று 3 மாதங்களுக்கு பின்னர் குழந்தையை சந்தித்த தாய் : உருக்கமான சம்பவம்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் தாய் ஒருவர் கொரோனாவால் சிக்கியதால், 3 மாதங்களுக்கு பின் தன் குழந்தையை கொஞ்சி மகிழும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில், மேடிசன் நகரில் கெல்சி என்ற பெண் நான்காவது முறையாக கர்ப்பம் தரித்து குழந்தையை பெற்றெடுக்க இருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம், அவரை கொரோனா தா.க்.கி.ய.து.

இதையடுத்து அவர், அங்குள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் சேர்க்கப்பட்டார். அவரை மருத்துவ ரீதியில் கோமாவில் ஆழ்த்திய மருத்துவர்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து, பெண் குழந்தையை பிரசவிக்க செய்தனர்.

கெல்சியின் ஆக்சிஜன் அளவு மிக குறைவாக இருந்ததால் மருத்துவர்கள் இதைச் செய்தனர்.டிசம்பர் மாத இறுதியில் கெல்சிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது வரும் என மருத்துவர்கள் கருதினர்.

ஆனால் அவரது உடல்நிலை திடீரென நன்றாக தேறத்தொடங்கியது. ஜனவரி மாதம் மத்தியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே அவரது குழந்தை லூசி என பெயரிடப்பட்டு தந்தை டெரக் டவுன்சென்ட் பராமரிப்பில் வளரத்தொடங்கினாள்.

ஏற்கனவே 3 குழந்தைகள் இருந்த நிலையில் இந்த நான்காவது குழந்தையையும் இக்கட்டான தருணத்தில் அவர் கவனமாக வளர்த்து வந்தார்.

ஏறத்தாழ 3 மாதங்களுக்கு பின்னர் இப்போது குணம் அடைந்து, கெல்சி வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பியவுடன் செல்லமகள் லூசியை கொஞ்சி மகிழ்ந்தார்.