மினுவாங்கொட தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் 160 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த நோயாளர்களுடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மினுவாங்கொட கொத்தணியை கட்டுப்படுத்த கூடிய நிலையில் உள்ளது. எனினும் கொழும்பு மாவட்டத்தில் அதிக மக்கள் உள்ளமை, சிறிய இடத்தினுள் பாரிய அளவிலான மக்கள் வாழ்கின்றமை மற்றும் நகர சூழல் ஆகிய விடயங்கள் காரணமாக ஆபத்துக்கள் உள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் தொற்றாளர்கள் மேலும் அடையாளம் காணப்பட்டால், தொடர்ந்து பரவும் ஆபத்து அதிகமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்படும் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் எதிர்வரும் நாட்களில் சிரமமான நிலை ஏற்பட கூடும் என அவர் கூறியுள்ளார்.
சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். -தமிழ்வின்-
சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய சட்டம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினத்திற்குள் வௌியிடப்படும் என சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர், டொக்டர் ஜயருவன் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தமானியில் வௌியிடப்படும் ஒழுங்கு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று எவ்வாறு பரவியுள்ளது என்பதை கண்டறிந்துள்ளதால், மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் பட்சத்தில் இதனை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் எனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
இதேவேளை சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய சட்டத்தை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி அண்மையில் தெரிவித்திருந்தார்.
வர்த்தமானியில் வௌியிடப்படும் ஒழுங்கு விதிகளை பின்பற்றாதவர்கள் பிடியாணையின்றி கைது செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்படுவோருக்கு 06 மாதங்கள் சிறைத் தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்கான சட்ட திருத்தங்களும் குறித்த வர்த்தமானியில் உள்ளடக்கப்படும் என சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவௌியை பேணுதல் உள்ளிட்ட விடயங்களை குறித்த வர்த்தமானியூடாக சட்டமாக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி தெரிவித்திருந்தார்.
திருகோணமலையில் ஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனையூர் மத்திய கல்லூரியில் வெளிவாரியாக பரீட்சை எழுத வருகை தந்த ஒருவரை ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெருகல் – மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை இன்று மூதூர் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸர் தெரிவிக்கின்றனர்.
கடன் தொல்லையினால்..
வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ க் கி ல் தொ ங் கி த ற் கொ லை செ ய் து ள் ளா ர். இச் சம்பவம் இன்று (14.10.2020) காலை 7 மணி தொடக்கம் 8.45 மணி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலிருந்து காலை 6.30 மணியளவில் 3 வயது , 7 வயதுடைய பிள்ளைகளுடன் கணவர் அவரது தயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் போது தனிமையில் இருந்த பெண் தூ க் கி ல் தொ ங் கி யு ள் ளா ர்.
காலை 8.45 மணியளவில் வீடு திரும்பிய கணவர் வீட்டிக்குள் சென்ற சமயத்தில் மனைவி தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் ச டலமாக இருப்பதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து இவ்விடயம் தொடர்பில் அயவர்களின் உதவியுடன் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த கற்பகபுரம் கிராம சேவையாளர் சாந்தரூபன் சடலத்தினை அவதானித்துடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
பொலிஸார் , திடீர் மரண விசாரணை அதிகாரி உடனடியாக அவ்விடத்திற்கு வருகை மேற்கொண்டு வி சாரணைகளை மேற்கொண்டதுடன் தடவியல் பொலிஸாரின் வி சாரணைக்காக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
27வயதுடைய முத்துக்குமார் கஜனி என்ற பெ ண்ணே இவ்வாறு ச டலமாக மீ ட்கப்ப ட்டவ ராவார். தான் கடன் தொ ல்லையினால் த ற் கொ லை செ ய் ய வே ண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப் பெ ண் அவரது தாயாரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்டத்தில் இம்முறை 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
காலபோக நெற்செய்கை குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாண்டுக்கான காலபோக நெற்செய்கை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இம்முறை 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 1000 ஏக்கருக்கு மேல் அதிகமாகும். இருப்பினும் நாம் எதிர்பார்க்கும் அளவை விட இம்முறை நெற்செய்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.
குளங்கள் புனரமைக்கப்பட்டமை, கைவிடப்பட்ட விவசாய நிலங்கள் மீள புனரமைக்கப்பட்டமை மற்றும் அரசாங்கத்தின் இலவச உர விநியோகம் என்பன காரணமாக இவ் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இம் மாதம் மழை வீழ்ச்சி குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புழுதி விதைப்பில் ஈடுபடுவோர் இம்மாதம் இறுதி வரை மழையை அவதானித்து பயிர்செய்கையில் ஈடுபடுவதே சிறந்தது.
பிற்பகுதியில் மழை வீழ்ச்சி அதிகமாக காணப்படும் அதேவேளை, ஆரம்பத்தில் மழை வீழ்ச்சி குறைவாக காணப்படும் எனவும் தெரிவித்தார்.
இங்கிலாந்தை சே ர்ந்த பெ ண்ணு க்கு வ யிற்றில் ஏ ற்ப ட்ட ர த் த க ட் டி அ வரது உ யி ரை யே ப றிக்கும் அ ளவிற்கு செ ன்றுள்ள ச ம்பவம் பெ ரும் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.
21 வ யதான மேடலின் ஜேன்ஸ் நா ன்கு ஆ ண்டுகளாக தீ ரா த வ யிற்று வ லியால் அ வதிப்ப ட்டு வ ந்துள்ளார். த னக்கு ம லச்சி க்கல் இ ருக்க க்கூடும் எ ன நி னைத்து புஸ்கோபன் ம ருந்தினை உ ட்கொண்டு வ ந்துள்ளார். ஆ னாலும், வ யி ற் று வ லி தீ ர்ந்தபாடி ல்லை. இ ந்நி லையில் அ வ ர் ம ருத்துவ ப ரிசோ தனைக்கு செ ன்றபோ து பே ர தி ர் ச் சி கா த்திருந்து ள்ளது.
ஜேன்ஸின் க ருப்பையில் ர த் த க் க ட் டி பெ ரிய அ ளவில் ஏ ற்பட்டிரு ப்பதை ம ருத்துவர்கள் க ண்டு அ தி ர் ச் சி ய டை ந் து ள் ள ன ர். கொ ஞ்சம் வி ட்டிருந்தால் க ட் டி உ டை ந் து ஜேன்ஸின் ஆ ப த் தா ன நி லைக்கு செ ன்றிரு ப்பார்.
தீ ரா த வ லி யு ட ன் அ வள் பி ரசவத்திற்கு த யாராக இ ருக்கும் பெ ண்ணைப் போ ல் இ ருப்பதாக செ விலியர்கள் ம ற்றும் ம ருத்துவர்கள் அ னைவரும் க ருத்து தெ ரிவித்த னர்.
இ ரண்டு க ருப்பைகளில் ஒ ன்று மு ழுமையாக ர த் த த் தா ல் நி ரப்பப்பட்டு ள்ளது ப ரிசோ தனையில் உ றுதி செ ய்யப்ப ட்டது. பி ன்னர் மே ற்கொள்ள ப்பட்ட அ று வை சி கிச்சையில் அ வரது வ லி கு றைக்கப்ப ட்டது.
த ன்னுடைய சி றுவ யதிலிருந்து ம ருத்துவமனையை அ ணுகாதிருக்கும் எ ண்ணமே இ ந்த பி ரச்னைக்கான மு ழு கா ரணம் எ ன ஜேன்ஸ் க வலை தெ ரிவித்து ள்ளார்.
இ ந்த அ று வை சி கிச்சையில் அ வரது ஒ ரு சி றுநீரகம் அ கற்றப்ப ட்டது. “அ று வை சி கிச்சை இ ல்லாமல், எ ன து இ ரண்டாவது க ருப்பை ஒ வ்வொரு மா தமும் ஒ ரு கா லகட் டம் தொ டர்ந்து ர த் த த் தா ல் நி ரப்பப்பட்டி ருக்கும், மே லும் வ லி நீடி த்திருக்கும் எ ன்று க ருதுகிறேன்.” எ ன ஜேன்ஸ் த னது அ றியா த ன்மையை வெ ளிப்படுத்தியிரு க்கிறார்.
எ னவே பெ ண்கள் எ ன்னைப் போ ல் தா மதிக்காமல் உ டலில் ஏ தேனும் பி ரச்னை யென தெ ரிந்தால் உ டனடியாக ம ருத்துவம னையை அ ணுக வே ண்டும் எ ன அ வர் தெ ரிவித்துள் ளார்.
வவுனியா மாவட்டத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படும் விளையாட்டுக்கழகங்களை இனங்கண்டு அவற்றின் அடிப்படை உபகரண தேவைகளை முதற்கட்டமாக வழங்கி வைக்கும் நோக்கில் சமூக ஆர்வலர் சாந்தி நிரோஷ்குமார் அவர்களின் நிதியுதவியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
ஓமந்தை, மதியாமடு, சேமமடு, நாவற்குளம் மற்றும் பல கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட ஏழு விளையாட்டுக் கழகங்கள் பங்குபெற்ற இந்த தொடரில் பரபரப்பான இறுதிப்போட்டியில் சேமமடு நாகதம்பிரான் அணியுடன் மோதிய ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீமுருகன் விளையாட்டு கழகம் மாபெரும் வெற்றியை பெற்றுக்கொண்டது.
வெற்றிபெற்ற அணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் சமூக ஆர்வலர் சாந்தி நிரோஷ்குமார் அவர்களின் நிதியுதவியில் அவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் கலந்து கொண்ட அனைத்து அணியினருக்கும் (ஏழு விளையாட்டுக் கழகங்கள்) மொத்தமாக ஒரு லட்சம் ரூபாவிற்கு மேல் பெறுமதி கொண்ட அடிப்படை விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து பாவனையில் இல்லாத சேமமடு விளையாட்டு மைதானத்தை பார்வையிட்ட சமூக ஆர்வலர் சாந்தி நிரோஷ்குமார் நேரடியாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் அபிவிருத்திச் செயற்றிட்டங்களில் உள்வாங்கி விரைவில் புனரமைப்பு செய்வதாக உறுதியளித்து சென்றிருந்தனர்.
அத்தியாவசிய சில பொருட்களுக்கான இறக்குமதி இன்று நள்ளிரவு முதல் நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய ரின்மீன், சீனி, பருப்பு மற்றும் வெங்காயம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி நீக்கப்படவுள்ளது.
இவ்வாறு இறக்குமதி வரி நீக்கப்படுவதால் இன்று நள்ளிரவு முதல் மேற்படி பொருட்களின் விலையும் குறைக்கப்படவுள்ளது..
இதன்படி பெரிய ரின்மீன் ஒன்று 200 ரூபாவுக்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோவை 100 ரூபாவுக்கும், சீனி ஒரு கிலோவை 85 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பொலிசார் பொதுமக்கள் நல்லுறவு பிரிவினரால் ஐந்து கிராம அலுவலர் பிரிவை உள்ளடக்கிய வறுமைக்கோட்டிற்குட்பட்ட 5 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் இன்று(13.10) வழங்கிவைக்கப்பட்டது.
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய வளாகத்தில் அதன் பொறுப்பதிகாரி மானவடு தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர் சந்திரகுமார் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உதவித்திட்டத்தினை வழங்கிவைத்தனர்.
லண்டனில் தாயுடன் சாலையை கடக்க முயன்ற 4 வயது சிறுவன் உ யிரிழந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அந்த சிறுவனின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் ஹேய்ஸ், ஆக்ஸ்பிரிட்ஜ் சாலையில் நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 7 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், உ யிரிழந்த சிறுவன் மற்றும் விபத்து குறித்து பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவனின் பெயர் அகர்வின் சசிகரன் , சம்பவ தினத்தன்று சிறுவன் மற்றும் அவனின் தாயார் அருகில் இருக்கும் கே.எப்.சிக்கு இரவு உணவிற்காக சென்றுள்ளனர்.
அதன் பின் வீடு திரும்பும் நேரத்தில், தாய் மற்றும் மகன் அங்கிருக்கும் சாலையை கடக்கும் பகுதியில் நின்று கொண்டிருந்த போது, திடீரென்று சிறுவன் சாலையில் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த வழியே வந்த கார் சிறுவன் மீது பயங்கரமாக மோதியதால், சிறுவன் உடனடியாக அருகில் இருக்கும், மத்திய லண்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான்.
ஆனால் சிறுவன் உ யிரிழந்துவிட்டான். இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிசார், இந்த விபத்திற்கு காரணமான டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்படவில்லை.
சிறுவனின் உறவினர் ஒருவர் கூறுகையில், இது ஒரு மோசமான நாள், நாங்கள் அனைவரும் மிகுந்த துயரத்தில் இருக்கிறோம். இந்த சாலையில் 40 கி.மீற்றர் வேகத்தில் தான் செல்ல வேண்டும். ஆனால் பல கார்கள் மிக வேகமாக செல்கின்றன.
பெரும்பாலும் வேக வரம்பை விட மிக வேகமாக செல்கின்றன. இது உண்மையில் நிறுத்தப்பட வேண்டும். இல்லையெனில் அதிகமான குழந்தைகளும் உ யிரிழக்க நேரிடும் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை குறி இளம் பெண்கள் பலரிடம் நகை மோ சடி செய்து வந்த வங்கி ஊழியரை பொலிசார் அ திரடியாக கைது செய்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் மஞ்சூரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜ். 30 வயது மதிக்கத்தக்க இவர் திருவண்ணாமலையில் இருக்கும் தனியார் வங்கியில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவர் இணையத்தில் தனக்கு மணமகள் தேவை என்று திருமண தகவல் மைத்தில் பதிவு செய்துள்ளார். அதன் படி இதைக் கண்ட திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள் போன்றோர் அவருடைய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
இதை கார்த்திக் ராஜ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு திருமண ஆசைக்காட்டி தொடர்ந்து பேசி வந்துள்ளார். அப்படி தான் கோயமுத்தூர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்த பெண்ணைப் பார்ப்பதற்காக, திருவண்ணாமலையில் இருந்து கோயமுத்தூர் வந்த கார்த்திக் ராஜ், குறித்த பெண்ணிடம் 7 பவுன் நகையை அவசர சூழ்நிலைக்காக வாங்கிச் சென்றுள்ளார். ஆனால், அதன் பின் அதை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அப்பெண் உடனடியாக அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போது, திருவண்ணாமலைக்கு சென்று கார்த்திக் ராஜை பிடித்து விசாரணை நடத்திய போது, கவுண்டம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் உள்பட பல பெண்களிடம் திருமண ஆசைவார்த்தை கூறி நகைகளை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.
இது குறித்து பொலிசார் கூறுகையில், கார்த்திக் சினிமா பாணியில் பெண்களிடம் நடித்து, திருமணம் ஆசை காட்டி, அவர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல பெண்களிடம் பழகி உள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தனது இந்த மோசடி விளையாட்டை தொடங்கி இருக்கிறார். தனக்கு தொடர்பு கொண்டு பேசும் பெண்களிடம், எனக்கு வங்கியில் பணம் வர வேண்டி உள்ளது, ஆனால் அது வர சிறிது வாரங்கள் ஆகும். ஆனால் எனக்கு கடன் பி ரச்சினை உள்ளதால், நகையை கொடுங்கள், அதை நான் அடமானம் வைத்து கடனை கொடுத்து விடுகிறேன்.
வங்கியில் இருந்து பணம் வந்ததும், நகையை மீட்டு உங்களிடம் திரும்ப கொடுத்து விடுகிறேன் என்று கூறி கோயமுத்தூரைச் சேர்ந்த 3 இளம்பெண்கள், பொள்ளாச்சி, ஈரோடு, ராஜபாளையம், சிவகாசி, பெரம்பூர், பெங்களூரு உள்பட பல இளம் பெண்கள், விதவைகள் என்று பலரிடம் 50 பவுன் நகையை வாங்கி மோ சடி செய்து உள்ளான்.
இவர் மோ சடி செய்த நகையை அடகு வைக்கவும், விற்பனை செய்யவும் இவரது நண்பர் பிரசாந்த் என்பவர் கூட்டாளியாக செயல்பட்டுள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த அவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர்கள் 2 பேரிடம் இருந்தும் தற்போது 13 பவுன் நகை மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள ரிதீதென்ன 2ஆம் பரம்பரைக் கிராமத்தில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் உ யிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் முஹம்மது இஸ்மாயில் நுஷ்ரத் (வயது 43) என்ற மூன்று பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண்ணே கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.
இவர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டு மரணமடைந்துள்ளதாக வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த புதன்கிழமையன்று இந்தப் பெண் திடீரென சுகவீனமடைந்துள்ள நிலையில் இடுப்பின் ஒரு பகுதி அவருக்கு செயலிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்காரணமாக வியாழனன்று அவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சனிக்கிழமை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உ யிரிழந்துள்ளார்.
ரிதீதென்ன 2ஆம் பரம்பரைக் குடியேற்றப்பகுதி, ஓமடியாமடு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நீராடுவதற்கும் ஏனைய பாவனைக்கான நீரைப் பெறுவதற்கும் அருகிலுள்ள கடவத்தமடு குளத்தைப் பயன்படுத்துகின்றனர்.
குளத்தைச் சூழ அடர்ந்த புற்புதர்களைக் கொண்ட இந்தப் பகுதியில் எலிகள் அதிகளவில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வவுனியா – பூந்தோட்டம் சாந்தசோலை உப வீதியில் அமைந்துள்ள சைக்கிள் திருத்தகத்தை இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்கள் தீயிட்டு எரித்துள்ளனர்.
குறித்த வர்த்தக நிலையம் தீயில் எரிவதை அவதானித்த அயலவர்கள் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்ததுடன், நகரசபையின் தீயணைப்பு வாகனத்திற்கும் தகவல் வழங்கியுள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் வியாபார நிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரியவருகிறது. சம்பவ இடத்தை பார்வையிட்ட வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழிலை இழந்த இலங்கையர்கள் சிலர் டுபாயில் உள்ள செட்டா என்ற பூங்காவில் தங்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இலங்கையர்களுக்கு தங்குமிடம் உட்பட அடிப்படைத் தேவைகள் எதுவும் இன்றி பூங்காவில் தங்கியுள்ளனர். அவர்களில் பலர் மூன்று மாத Visit Visa பெற்றுக் கொண்டு டுபாய் சென்றுள்ளனர்.
அங்கு சென்றவர்களால் தொழில் ஒன்றை பெற்றுக் கொள்ள முயற்சித்த போதிலும் தொழில் பெற முடியாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தொழிலை இழந்தவர்களும் தொழில் கிடைக்காத இலங்கையர்களும் பூங்காவில் தங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளராக காசிலிங்கம் கீதநாத் பிரதமர் மகிந்த ராஜபக்சவால் இன்றைய தினம் நியமிக்கப் பட்டுள்ளார்.
பிரதமர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது காசிலிங்கம் கீதநாத் எதிர்க்கட்சித் தலைவரின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு பணிப்பாளராகவும்,
தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச 2015 முதல் 2019 வரை இந்தியாவிற்கு மேற்கொண்ட அனைத்து சுற்றுப்பயணங்களையும் திட்டமிட்டு செயற்படுத்தி அதற்கான ஏற்பாடுகளை செய்ததுடன்,
இன்று வரையான இந்திய – இலங்கையின் வலுவான இணைப்புக்களில் மிகமுக்கிய பங்கு வகிக்கும் ஒருவராகவும் உள்ளவர் என தெரியவருகிறது.
பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மிக நெருக்கமாக நீண்டகாலம் பணியாற்றிவரும் கீதநாத் காசிலிங்கம் வடக்கு – கிழக்கு சார்ந்த அபிவிருத்தி விடயத்திலும் பிரதமர் சார்பில் நேரடியாக வேலைத் திட்டங்களை அமுல்படுத்தும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரதமர் சார்பில் தமிழர் ஒருவர் ஒருங்கிணைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கையில் முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள் தொடர்பில் பதிவு ஒன்று மேற்கொள்ளுமாறு, முச்சக்கரவண்டி சாரதிகளிடம் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வாகனத்தில் பயணிக்கும் நபர்கள் தொடர்பில் பதிவொன்றை பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸார், முச்சக்கர வண்டி மற்றும் போக்குவரத்து சேவை வழங்கும் வாடகை முச்சக்கர வண்டி சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முறையை இதுவரையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிக்கும் ஒவ்வொரு பயணிகள் தொடர்பிலும் பதிவொன்றை பதிவு செய்துக் கொள்ளுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தங்கள் வாகனத்தில் பயணித்தவர் யார் என்பதனை அறிந்து கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் எந்த இடத்தில் ஏறினார்கள், எந்த இடத்தில் இறங்கினார்கள் என்பதனை கையடக்க தொலைபேசியில் அல்லது புத்தகம் ஒன்றில் குறித்து வைத்துக்கொள்ளுமாறு பொலிஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.