வவுனியா மாவட்டத்தில் 32 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவில்லை!!

புலமைப் பரிசில் பரீட்சை..

இலங்கையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 18 ஆயிரத்து 387 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த போதிலும் 488 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 897 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 4 ஆயிரத்து 818 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

இதேபோன்று வவுனியா மாவட்டத்தில் 3 ஆயிரத்து 46 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 3 ஆயிரத்து 14 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 570 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 2 ஆயிரத்து 531 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 439 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 2 ஆயிரத்து 325 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 107 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் ஆயிரத்து 961 மாணவர்கள் மட்டுமே பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

இவற்றின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் 146 மாணவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 114 மாணவர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 157 மாணவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 39 மாணவர்களும், வவுனியா மாவட்டத்தில் 32 மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

 

கொழும்பில் கொரோனா பரவும் ஆபத்து!!

கொரோனா..

கொழும்பு நகரில் சில இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கொழும்பில் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து அதிகரித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

கொம்பனித் தெரு, யூனியன் பிளேஸ் வீடமைப்புத் தொகுதியில் வசிக்கும் பெண்ணாருவருக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வீடமைப்பு தொகுதி முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பெண்ணின் கணவருக்கு சொந்தமான சபுகஸ்கந்த பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் கடமையாற்றும் 30 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோதமி பெண்கள் பாடசாலையில் 8 ஆம் ஆண்டில் பயிலும் மாணவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அந்த மாணவி வெயாங்கொடை எழுவாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பதுடன் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை கடுவலை பஹல போமிரிய பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவருக்கும் கொரோனா தொற்றியுள்ளது. இந்த பெண் மாகொல பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்து வருகிறார். நிறுவனத்தில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்றி இருக்கலாம் என சுகாதார தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த பெண் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் றிஜ்வே சிறுவர் மருத்துவமனையிலும் கொரோனா நோயாளிகள் சிலர் கண்டறியப்பட்டனர்.

-தமிழ்வின்-

வவுனியாவில் பற்றி எரியும் வயல்கள் : புகைமண்டலமாக காட்சியளிக்கும் வீதிகள்!!

பற்றி எரியும் வயல்கள்..

வவுனியாவில் அறுவடை செய்யப்பட்ட வயல்கள் தற்போது எரியூட்டப்பட்டு வருகின்றமையால் அதனை சூழவுள்ள பகுதிகள் பெரும் புகை மூட்டமாகக் காணப்படுகின்றன.

புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகே ஏ9 வீதியில் அமைந்துள்ள விவசாயத்திணைக்களத்தின் அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு சொந்தமான வயல்கள் கடந்த சில நாள்களாக எரியூட்டப்பட்டு வருகின்றன.

வயல்கள் எரியூட்டப்படுவதால் பேருந்து நிலையப் பகுதி , ஏ-9 வீதி என்பன புகைமூட்டமாகக் காட்சியளிக்கின்றன. அதனால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

தற்போது வெப்பமான காலநிலை வவுனியாவில் நிலவி வருகின்ற நிலையில் இவ்வாறு வயல்கள் எரியூட்டப்படுதால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் பெறுவதில் மக்கள் சிரமம்!!

மக்கள் சிரமம்..

வவுனியாவில் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு வைத்தியர் உரிய நேரத்திற்கு வராமையால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு இன்றைய தினம் காலை 8.30 மணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதன்படி 8.30 மணியில் இருந்து 30 இற்கும் மேற்பட்டோர் மருத்துவ சான்றிதழைப் பெறுவதற்கு அங்கு சென்ற போதும் மதியம் 11.30 வரை மருத்துவ சான்றிதழை பெறுவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வைத்தியர் அங்கு சமூகமளிக்கவில்லை.

இதனால் கொவிட் – 19 அச்சுறுதலுக்கு மத்தியிலும் மருத்துவ சான்றிதழ் பெறச் சென்றோர் கூட்டமாக அங்கு நீண்ட நேரம் கூடி நின்றதை அவதானிக்க முடிந்தது.

அத்துடன், 10.30 இற்கு பின்னர் செல்வோருக்கு மருத்துவ சான்றிதழ் பெற முடியாது எனவும் மறுநாள் வருமாறும் அங்கு கடமையில் இருக்கும் உத்தியோகத்தர்கள் திருப்பி அனுப்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவ சான்றிதழை பெறுவதற்காக உணவருந்தாது உணவுக் கட்டுப்பாடுகளுடன் இருந்து காலை சென்றும் மதியம் வரை வைத்தியர் வராமையால் பலருக்கும் உடல் சோர்வு மற்றும் உடல் நலக் குறைவு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபைக்கு முன்பாக ஒன்ற கூடிய 30க்கு மேற்பட்ட முச்சக்கரவண்டிகள் : நடந்தது என்ன?

முச்சக்கரவண்டிகள்..

வவுனியா நகரசபை தமக்கு அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்து 30க்கு மேற்பட்ட முச்சக்கரவண்டிகள் வவுனியா நகரசபை முன்பாக ஒன்று கூடியதினால் அவ்விடத்தில் சற்று பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

வவுனியா நகரசபைக்கு முன்பாக இன்று (13.10.2020) மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரின் அபிவிருத்தியினை கருத்தில் கொண்டும் ஏனைய சில மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள வாடகைக்கார் பயன்பாட்டினையடுத்து வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதியில் வாடகைக்கார் செலுத்துவதற்கு நபர் ஒருவருக்கு வவுனியா நகரசபையினரினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் வாடகைக்காருக்கான அனுமதியினை இரத்து செய்யக்கோரி வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் வவுனியா நகரசபைக்கு முன்பாக 30க்கு மேற்பட்ட்ட முச்சக்கரவண்டிகளில் ஒன்று கூடியதினால் அவ்விடத்தில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டிருந்தது.

அதன் பின்னர் வவுனியா நகரசபை தவிசாளர் காரியாலயத்தில் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினருக்கும் வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் மற்றும் நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

வாடகைக்காருக்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தினை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் எதிர்வரும் நகரசபை கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுப்பதாக வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் மற்றும் நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் தெரிவித்தமையினையடுத்து அவர்கள் அவ்விடத்தினை விட்டு கலைந்து சென்றனர்.

வவுனியாவில் உழுந்தினை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்வோம் : இ.விஜயகுமார்!!

உழுந்திற்கான உத்தரவாத விலை குறைவடைந்தால் கமநல அபிவிருத்தித் திணைக்களம் அதனை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யும் என்று வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் அதிகளவான உழுந்து உற்பத்தியில் ஈடுபடுவது வவுனியா மாவட்டமே.

தற்போது ஒரு கிலோ உழுந்தின் விலை 800 ரூபாய்க்கு மேல் உள்ளமை நாம் அறிந்ததே. எனினும் அறுவடையின் போதும் உத்தரவாத விலையேனும் விவசாயிகளிற்கு கிடைப்பதில்லை.

கடந்த காலத்தில் ஆகக்கூடுதலாக ஒரு கிலோ 140 ரூபாவிற்கே விற்க முடிந்தது. இம்முறை 2020/2021 பெரும்போகத்தின் போது அரசின் உத்தரவாத விலையான கிலோ ஒன்றிற்கு 220/= ரூபாயினை விட குறையுமாயின்,

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களம் அதனை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யும் எனவே பயமின்றி இம்முறை உழுந்து உற்பத்தியினை மேற்கொள்ளுங்கள்.

கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையிடம் இருந்து உழுந்து செய்கைக்கான காப்புறுதியை செய்து கொள்ள முடியும்.

இது தொடர்பான தகவல்களுக்கு உதவி பணிப்பாளர்-கதிர்காமநாதன்- 0779779038 அவர்களது குறித்த இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

ஒரு ஏக்கருக்கு 50,000/= வரையான காப்புறுதி தொகைக்காக 2,250/= இனை கட்டண தொகையாக செலுத்தி கட்டாயமாக பயிர் காப்புறுதியினை மேற்கொள்ளுங்கள்.

விதை உழுந்தினை வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தின் விதைகள் மற்றும் நடுகை பொருட்கள் பிரிவில் பெற்றுக்கொள்ளலாம். என்றார்.

 

காதலிக்கும் போது எடுத்த புகைப்படத்தை வைத்து திருமணமான பெண்ணின் வாழ்க்கையை கெடுத்த காதலன்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் காதலித்த போது எடுத்த புகைப்படங்களை அனுப்பி இளம்பெண்ணின் திருமண வாழ்க்கையை கெடுத்ததோடு, அவரை கொ டூ ர மா க அ டி த் த ந பர் கை து செ ய்யப்பட்டுள்ளார்.4

திருவள்ளூரை அடுத்த புட்லூரை சேர்ந்தவர் விஜி (29). இவரும் சந்தோஷ் சாம்ராட் என்பவரும் கல்லூரி படிக்கும்போது காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமணம் செய்வதாக கூறி சந்தோஷ் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதால் விஜி வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து, அவர்களது திருமண வாழ்க்கையை கெடுக்கும் வகையில் காதலித்தபோது எடுத்த புகைப்படங்களை சந்தோஷ், விஜியின் கணவருக்கு அனுப்பினார். இதனால் விஜிக்கு விவாகரத்தானது.

இந்நிலையில், காதலித்த விடயம் முதல் திருமணம் நடந்து விவாகரத்து ஆனது வரை அனைத்து தகவல்களையும் சொல்லி விஜிக்கு 2வது திருமணம் செய்ய அவரது தந்தை ஏற்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சந்தோஷ் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் எனவும் ரூ 2 லட்சம் பணம் கொடுத்தால் வெளியிட மாட்டேன் என்று விஜியின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனால் அ திர்ச்சி அடைந்த விஜி இதுகுறித்து 2வதாக திருமணம் செய்ய உள்ள மாப்பிள்ளையிடம் கூறினார். அதற்கு அவர் இந்த விவகாரத்தை திருமணத்திற்கு முன்பே முடிக்க வேண்டும். இல்லையேல் திருமணம் வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

இதனையடுத்து, விஜி, சந்தோஷை சந்தித்து பேச சென்ற போது, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜியின் தலைமுடி மற்றும் கையில் ச ர மா ரி யா க வெ ட் டி னா ர். பின்னர் அங்கிருந்து த ப் பி த லை ம றை வா னா ர். இதுகுறித்து விஜி அளித்த புகாரின் பேரில் பொலிசார் சந்தோஷை கைது செய்துள்ளனர்.

டிரம்புக்கு சிலை வைத்து கடவுளாக வழிப்பட்டு வந்த இந்திய பக்தனுக்கு நேர்ந்த சோகம்!!

புஸ்சா கிரு‌‌ஷ்ணா..

இந்தியாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு சிலைவைத்து வணங்கி வந்தவர் மாரடைப்பால் ம ரணமடைந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தை சேர்ந்தவர் 38 வயதான புஸ்சா கிரு‌‌ஷ்ணா. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 6 அடி சிலையை நிறுவிய புஸ்ஸ கிருஷ்ணா, பக்தனாக டிரம்பின் சிலையை வழிப்பட்டு வந்தார்.

எனது கடவுள் இந்தியாவுக்கு வந்ததால் பெருமைப்படுகிறேன். நான் டிரம்பை கடவுளாக வணங்குகிறேன், விரைவில் அவரை சந்திப்பேன் என்று நம்புகிறேன்.

ப யங்கரவாதத்திற்கு எ திரான போ ராட்டத்தில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார் என கடந்த ஆண்டு டிரம்ப் இந்திய வந்த போது புஸ்சா கிருஷ்ணா பேட்டியளித்திருந்தார்

இந்நிலையில், இன்று மேடக் மாவட்டத்தில் உறவினர் வீட்டில் டீ குடித்துக்கொண்டிருந்த போது புஸ்சா கிருஷ்ணா நிலை குலைந்த விழுந்துள்ளார்.

அவரை மருத்துவமனகை்கு கொண்டு சென்ற போது புஸ்சா கிருஷ்ணா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தாக குடும்பத்தினர் கூறினர்.

புஸ்சா கிரு‌‌ஷ்ணா திடீரென மாரடைப்பால் மரணமடைந்த செய்தி குடும்பத்தினரை மட்டுமின்றி அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கையில் தற்போது பரவும் புதிய வகை கொரோனா : வைத்தியர்கள் எச்சரிக்கை!!

கொரோனா..

தற்போது நாட்டில் பரவும் கொரோனா வைரஸின் வகை இலகுவாக மற்றவர்களுக்கு பரவ கூடியதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே அதன் பரவல் மிக வேகமாக காணப்பட கூடும் என அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார குறிப்பிட்டுள்ளார். இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸின் வீரியம் மிக அதிகம் என வைத்தியர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவரிடம் இருந்து இன்னுமொருவருக்கு வைரஸ் பரவியவுடன்,

பாதிக்கப்பட்ட மற்றவரின் உடலில் வைரஸ் மேலும் அதிகமாக வைரஸ்களை உற்பத்தி செய்யும் என தெரியவந்துள்ளது. இம்முறை ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் உடலுக்குள் தொற்றாத வகையில் மிகவும் பாதுகாப்பாக செயற்பட வேண்டியது அவசியமாகும்.

தொழிற்சாலையிலும் ஒரு சில வாரங்களாக ஊழியர்கள் ஒருவருக்கு ஒருவர் இடையில் வேகமாக கொரோனா தொற்று பரவியுள்ளது. எனினும் எங்கிருந்து ஆரம்பமானது என ஆராயப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகள் நூற்றுக்கு 70 வீதம் நோயாளிகளால் நிறைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

கணவனிடம் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியேறிய 22 வயது மனைவி : அடுத்த சில மணி நேரத்தில் நடந்த து யரம்!!

சத்யா..

தமிழகத்தில் பெற்ற கு ழந்தையை ஆ ற்றில் தூ க்கி வீ சி வி ட்டு கை யை அ று த் து த ற் கொ லை க் கு மு ய ன் ற இ ள ம் தா யாரின் செ யல் ப ரபர ப்பை ஏ ற்படுத்தியு ள்ளது.

கோவையை சேர்ந்தவர் வீரமணி. இவர் மனைவி சத்யா (22). இந்த தம்பதிக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் 14 மா த ஆ ண் கு ழந்தை உ ள்ளது.

இந்நிலையில் க ணவன், ம னைவி இ டையே க ருத்து வே றுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சத்யா த ன து கு ழந்தையை எடுத்துக்கொண்டு கணவரிடம் சொல்லாமல் அங்கிருந்து பு றப்பட்டு ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதிக்கு வந்துள்ளார்.

கொடுமுடியில் இருந்து கரூர் செல்லும் சா லையில் கு ழந்தையை தூ க்கிக்கொ ண்டு சத்யா ந டந்து வ ந்துள்ளார். அப்போது கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்குச்சாலை அருகே உள்ள நொய்யல் ஆற்றுபாலத்தில் ந டந்து வந்து கொ ண்டிருந்த போ து தி டீரென ந டுப்பால த்தில் நி ன்று த ன் கை யி ல் வை த்திருந்த கு ழந்தை டிஜய்யை நொய்யல் ஆ ற்றின் த ண்ணீரில் தூ க் கி வீ சியுள் ளார்.

பி ன்னர் தா னும் பி ளே டா ல் கை யை அ று த் து க் கொ ண் டு த ற் கொ லை க் கு மு யன்று ள்ளார். அ ப்போது கை யி ல் ர த் த ம் கொ ட்டியதா லும், ப சியால் இ ருந்ததாலும் ம ய க் க ம் அ டைந்து சத்யா கீ ழே வி ழுந்தார்.

இ தனை பா லத்தின் அ ருகே உள்ள சோ த னை சா வடியில் ப ணியில் இ ருந்த பொ லிசார் சத்யாவை மீ ட் டு ஆ ம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மு தலுதவி சி கிச்சை அ ளிக்கப்பட்டது.

பி ன்னர் அ வ ர் மே ல் சி கிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீ வி ர சி கிச்சை அ ளிக்கப்பட்டு வ ருகிறது. இந்நிலையில் ஆ ற்றில் தூ க் கி வீ ச ப் ப ட் ட கு ழந்தையை தீய ணைப்பு து றையினர் இரவு வரை தே டி யு ம் கி டைக்கவி ல்லை.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்ப காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவதற்கு காத்திருப்போருக்கு அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று அபாயம் காரணமாக பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கை திரும்புவதற்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காத்திருக்கின்றார்கள்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுகை அச்சம் காரணமாக வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்து வரும் நடவடிக்கைகளுக்கான காலஅட்டவணை மறுசீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகாரச் செயலாளர் அட்மிரால் ஜயனாத் கொலம்பகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மினுவன்கொடை கொவிட்-19 கொத்தணி காரணமாக நாட்டின் வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் நிரம்பியிருப்பதாகவும்,

இதனால் வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளுக்கான கால அட்டவணை தயாரிப்பு பணிகள் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமைகளை கருத்திற் கொண்டு இலங்கையர்களை மீள அழைத்து வருவதற்கான விமான பயணங்கள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என அட்மிரால் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

 

வவுனியாவில் பாதுகாப்பற்ற முறையில் நடமாடும் யாசகர்கள் : அச்சத்தில் வர்த்தகர்கள்!!

வவுனியா நகர் பகுதியில் யாசகர்கள் பலர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது பாதுகாப்பற்ற முறையில் நடமாடுவதால் கொவிட் -19 தொற்று ஏற்படும் என்ற அ ச்சத்தில் வர்த்தகர்கள் உள்ளனர்.

வவுனியா நகரையண்டிய பகுதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்த யாசகர்கள், வர்த்தகர்கள் மற்றும் நகரப்பகுதிக்கு செல்வோரிடம் யாசகம் கேட்கின்றனர்.

அத்துடன் வவுனியா நகரம் மற்றும் வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களின் முன்னால் இரவு வேளைகளில் உறங்குகின்றனர்.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது பாதுகாப்பற்ற முறையில் யாசகர்கள் நடமாடுவதாலும், வர்த்தக நிலையங்களின் முன்னால் உறங்குவதாலும் கொவிட் – 19 தொற்று ஏற்பட்டுவிடும் என அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வவுனியா பொலிசார் ஆகியோருக்கு தெரியப்படுத்தியும் ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும்,

யாசகர்கள் கடைகளின் முன்னால் தங்குவதால், தாம் தினமும் கடைகளின் முன்னால் கிருமி நீக்கம் செய்ய வேண்டியுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இருவருக்கிடையில் ஏற்பட்ட போட்டியால் நேர்ந்த விபரீதம்!!

விபத்து..

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மல்லியப்பு சந்தி பகுதியில் இன்று (12.10.2020) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அவர் சிகிச்சைக்காக டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், அட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி சென்ற காருடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இருவருக்கிடையில் ஏற்பட்ட போட்டியால் இருவரும் வேகமாக பயணித்துள்ளனர்.

இதனையடுத்து இரு சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டதில் ஒரு மோட்டார் சைக்களில் காரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் காரும், மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளன. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் த ப்பிச்சென்றுள்ளார். பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த முறையை விட வேகமாக பரவும் கொரோனா : வெளியானது நாடு முடக்கப்படாமைக்கான காரணம் வெளியானது!!

வேகமாக பரவும் கொரோனா..

கடந்த முறையை விட இம்முறை நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகமாக காணப்படுகின்ற நிலையில் நாட்டை இதுவரை முடக்காமலிருப்பதற்கான காரணம் வெளிவந்துள்ளது.

இந்த விடயத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

கடந்த முறையை விடவும் இம்முறை நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக காணப்பட்டாலும், நாட்டை முடக்காமல் இருப்பதற்கு அறிவியல் காரணம் காணப்படுகிறது.

அதன்படி இம்முறை கொரோனா வைரஸ் தொற்றினை எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் அரசாங்கம் இருப்பதுடன், சுகாதார துறையும் நோய் பரவலை தடுப்பதற்கு தேவையான முழுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

அத்துடன் மக்களும் இந்த தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த முறையை விட இம்முறை குறித்த வைரஸ் பரவல் தொடர்பான விழிப்புணர்வு அதிகமாக காணப்படுகிறது.

இதனாலேயே கடந்த முறை சிறியளவிலான பரவல் காணப்பட்ட போதே நாடு முடக்கப்பட்டது. எனினும் இம்முறை வேகமான பரவல் இருக்கும் போதும் நாடு முடக்கப்படாமல் இருப்பதற்கான காரணமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் திறக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் : பொலிஸார் நடவடிக்கை!!

தனியார் கல்வி நிறுவனங்கள்..

நாடு முழுவதும் கொவிட்-19 தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தனியார் கல்வி நிலையங்களையும் மூடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இவ் அறிவித்தலை மீறி வவுனியாவில் இயங்கிய தனியார் கல்வி நிறுவனங்கள் மீது பொலிஸார் அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் உத்தரவிற்கமைய இன்று (12.10.2020) மாலை வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையங்களை பார்வையிட்ட பொலிசார் அரச அதிபரின் உத்தரவை மீறி இயங்கிய மூன்று கல்வி நிலையங்களை மூடுமாறு பணித்ததுடன் அனுமதி பெறாது திறக்கப்பட்டமை குறித்து எ ச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.

இதன்போது தனியார் கல்வி நிலைய உரிமையாளர் ஒருவர் பொலிசாரிடம் தெரிவிக்கும் போது, நாம் இதுவரை பூட்டியிருந்தோம். இன்று தான் திறந்தோம்.

பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் சந்தேகம் கேட்க வந்ததால் திறந்தோம். அத்துடன் நான் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர் எனக்கு நிலமை தெரியும். இங்கு பிரச்சனை இல்லை என்பதால் திறந்தோம். ஊரடங்கு போட்டால் நாம் உதவி செய்வோம் என தெரிவித்தார்.

 

வவுனியாவைச் சேர்ந்த சிறுவன் விபத்தில் பரிதாப மரணம்!!

விபத்தில்…

வவுனியா கோவில்குஞ்சுக்குளத்தை பூர்வீகமாக கொண்டு லண்டனில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் விபத்தில் உ யிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் ஐக்கிய இராச்சியத்தின் கேய்ஸ் (Hayes) பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான்.

இந்நிலையில் நேற்று (11) இரவு 7 மணியளவில் தனது தாயுடன் நகர்ப்பகுதிக்கு சென்ற சிறுவன் பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட போது வேகமாக வந்த கார் மோதியுள்ளது.

இதனால் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளான்.

குறித்த சம்பவத்தில் வவுனியா பாலமோட்டை கோவில்குஞ்சுக்குளம் பகுதியை பூர்வீகமாக கொண்ட சசிகரன் அகர்வின் வயது 4 என்ற சிறுவனே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.