வரலாற்றுச்சிறப்பு மிக்க தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் தேர்த்திருவிழா!!

தேர்த்திருவிழா..

வரலாற்றுச்சிறப்பு மிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய மகோற்சவ பெருவிழா இடம்பெற்றுள்ளது.

இதனை முன்னிட்டு காலை முதல் விசேட பூஜைகள் மற்றும் யாகங்கள் இடம்பெற்றிருந்தன.

இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், பலரும் தமது நேர்த்திகடன்களை நிறைவேற்றிக் கொண்டனர்.

வவுனியாவில் கேரள க ஞ் சா மற்றும் இரண்டு வா ள்களுடன் இளைஞன் கைது!!

இளைஞன் கைது..

கேரள க ஞ் சா மற்றும் இரண்டு வா ள்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இளைஞர் நேற்று இரவு (31.08) கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, மாமடு, நெடுங்குளம் பகுதியில் ச ந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற 20 வயது இளைஞன் ஒருவரின் பொதியினை சோ தனை செய்த போது 575 கிராம் கேரள க ஞ் சா மீ ட்கப்பட்டதுடன், ம றைத்து வைக்கப்பட்டிருந்த இரு வா ள்களும் கைப்ப ற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிசார் கைது செய்யப்பட்ட இளைஞனை வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

தனிநாயகம் அடிகளாரின் நினைவு தினம்..

வவுனியாவில் தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் 40ஆவது நினைவு தினம் வவுனியாவில் இன்று (01.09.2020) காலை 8.30 மணியளவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின் சிலையடியில் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இந்நினைவு தின நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது, அடிகளாரின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தமிழருவி அவர்களின் நினைவுபேருரையும் இடம்பெற்றது.

இந் நிகழ்வு வவுனியா நகரசபையின் உப தலைவர் சு. குமாரசாமி தலைமையில் இடம்பெற்றதுடன் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் இரண்டாவது நாளாக காற்றுடன் கூடிய மழை!!

காற்றுடன் கூடிய மழை..

வவுனியாவில் நிலவிய கடும் வெப்ப நிலையான காலநிலையின் பின்னர் இன்று இரண்டாவது நாளாக (01.09.2020) பிற்பகல் பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் வறட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில் மழை பொழிந்தமையினால் விவசாயிகளும் பொதுமக்களும் மனமகிழ்வடைந்துள்ளனர்.

இதேவேளை வவுனியா கணேசபுரம் , சமயபுரம் ஆகிய பகுதியில் நேற்றையதினம் (31.08) மாலை கடும் காற்றுடன் ஆலங்கட்டி மழை காரணமாக 55 குடும்பங்களைச் சோந்த 154 பேர் பாதிப்படைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மழையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தேடிச் சென்ற அரசியல் பிரமுகர்கள்!!

மழையினால்..

வவுனியாவில் நேற்று (31.08) மாலை கடும் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையினால் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கணேசபுரம் , சமயபுரம் பகுதிகளை சேர்ந்த 55 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இந் நிலையில் அவர்களின் நிலமைகளை இன்று (01.09) மதியம் 12.30 மணியளவில் அரசியல்வாதிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் பாதிப்படைந்த வீடுகளை பார்வையிட்டதுடன் அம் மக்களுடனும் கலந்துரையாடினார்கள்.

சேதமடைந்த வீடுகளை புனரமைப்பு செய்வதற்காக மதிப்பீடுகளை வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் அப்பகுதி கிராம சேவையாளரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

 

வவுனியாவில் வீடுபுகுந்து முச்சக்கரவண்டிக்கு தீ வைத்தமை தொடர்பில் காருடன் இருவர் கைது!!

இருவர் கைது..

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வீடு ஒன்றிக்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தமை தொடர்பில் காருடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (01.09) குறித்த இருவரும் முல்லைத்தீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரிக்குளம், மாடசாமி கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர் சைக்கிள் என்பன நேற்று (31.08) அதிகாலை 3 மணியளவில் தீயில் எரிந்துள்ளன.

தமது வாகனங்கள் தீயில் எரிவதை அவதானித்த வீட்டு உரிமையாளர் தீயை அணைக்க முயன்ற நிலையில் முச்சக்கர வண்டி முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மோட்டர் சைக்கிள் சிறிய சேதத்துடன் மீட்கப்பட்டது.

இது தொடர்பில் வவுனியா கு ற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானமடு அவர்களின் வழிப்படுத்தலில் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பிரதான பொலிஸ் பரிசோதகர் தாமசிறி தலைமையில்,

உதவிப் பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் திசாநாயக்கா, பொலிஸ் சார்ஜன்ட்களான பந்துல (12515), விக்கிரமசிங்க (36099), திசாநாயக்கா (37348), சுமனசேனர (33088), குமார (722287), எக்கநாயக்கா (68694) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் தீவிர வி சாரணைகளை முன்னெடுத்து இருந்தனர்.

இதனடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் கார் ஒன்றுடன் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.

குடும்ப பிரச்சனை காரணமாக இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் நீதி மன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

398 பேருடன் இலங்கை வந்த விமானத்தில் 54 பேருக்கு கொரோனா!!

கொரோனா..

கட்டாரில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3071ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டாரில் இருந்து வந்த மேலும் 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியதாக நேற்றைய தினம் உறுதியாகியது. அதற்கமைய கட்டாரில் இருந்த வந்த 54 பேர் நேற்று மாலை முதல் இன்று காலை 10 மணி வரை வரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 398 பேருடன் கட்டாரில் இருந்து இலங்கை வந்த விமானத்தில் 54 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய மழையினால் 55 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் பாதிப்பு!!

காற்றுடன் கூடிய மழை..

வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய மழையினால் 55 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று (31.08) பிற்பகல் வவுனியாவில் ஆலங்கட்டி பெய்ததுடன், சில பகுதிகளில் கடும் காற்றும் வீசியது.

இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தின் கணேசபுரம், சமயபுரம், நெளுக்குளம் ஆகிய பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக 55 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

அத்துடன் 5 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 50 வீடுகளின் கூரைகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது. மேலும், இரு ஆலயங்களின் கூரைப்பகுதியும் சேதமடைந்துள்ளது. வீதிகள், வீடுகளில் நின்ற பயன்தரு மரங்கள் பலவும் முறிந்து வீழ்ந்துள்ளன.

இந்நிலையில், பாதிப்படைந்த மக்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் மாவட்ட செயலகம் ஊடாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இலங்கையும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்றுநோய் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய மற்றும் நியுஸிலாந்து போன்ற மிகவும் முறையாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்திய நாடுகளில் கூட மீண்டும் கொரோனா தொற்று காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு ஊரடங்கு வரை செல்ல வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகவும் இந்த நிலமையில் சிறிய தீவான எமது நாட்டில் எவ்வித பாதுகாப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவ்வாறு இல்லாவிடின் கடந்த மாதங்களை போன்று மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

திருகோணமலையில் இளைஞர் ஒருவர் திடீர் மரணம்!!

அன்பழகன் தனூசியன்..

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் திடீரென்று ம ரணம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உ யிரிழந்தவர் மனையாவெளியை அண்மித்த பகுதியைச் சேர்ந்த அன்பழகன் தனூசியன் (19வயது) எனவும் தெரியவருகின்றது.

வவுனியாவிலிருந்து சக உறவினர்கள் திருகோணமலைக்கு சுற்றுலா வருகை தந்திருந்த போது அதில் வந்த ஒருவர் தொலைபேசியில் சந்தோசமாக உரையாடிக் கொண்டிருந்துள்ளார்.

பின்னர் திடீரென தொலைபேசி துண்டிக்கப்பட்டதாகவும், இதனையடுத்து அவரது வீட்டுக்கு அருகே சென்றபோது தவறுதலாக விழுந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவந்ததாகவும் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

உ யிரிழந்த இளைஞரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பி ரேத ப ரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு : வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பம்!!

வேலைவாய்ப்பு..

வறுமைக் கோட்டில் வாழும் ஒரு லட்சம் பேருக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள செயலணி மூலம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் பொருளாதாரத்தை வலுவடைய செய்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

கல்வி கற்காதவர்கள் அல்லது சாதாரண தரத்திற்கும் குறைவான கல்வி மட்டத்தில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 40 வயதிற்கும் உட்பட்டவர்களுக்கு இவ்வாறு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சமுர்த்தி நிவாரணம் பெற தகுதியான எனினும் கிடைக்காத குடும்பங்களுக்கு இந்த வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிவக்கப்படுகின்றது.

தகுதியானவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு தொழில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 6 மாத பயிற்சி காலத்தினுள் 22500 ரூபாய் சம்பளம் கிடைக்கும் நிலையில் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் 35000 ரூபாய் சம்பளமும் கொடுப்பனவுகள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

10 வருடங்கள் தொடர்ந்து பணியாற்றும் மக்களுக்கு அரசாங்கத்தினால் ஓய்வூதியம் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் ஒரு பகுதி வாழ் மக்களை வியப்பில் ஆழ்த்திய இயற்கை!!

ஆழங்கட்டி மழை..

பலங்கொட கல்தோட்டை, வெலிஓய நகரத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் நேற்று மாலை ஆழங்கட்டி மழை பெய்துள்ளது.

ஒரு மாத கால வறட்சியின் பின்னர் நேற்று குறித்த பகுதியில் மழை பெய்துள்ளது. இதன்போது ஆழங்கட்டிகளும் கொட்டியதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் 3.30 – 4.00 மணி வரையிலான காலப்பகுதியில் இந்த ஆழங்கட்டி மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வெலிஓய பிரதேசத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஆழங்கட்டி மழையை பார்த்ததில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

வவுனியாவில் கடும் காற்றுடன் பெய்த மழை காரணமாக 39 வீடுகள் சேதம்!!

கடும் காற்றுடன் மழை..

வவுனியாவில் நேற்று (31.08) மாலை கடும் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக 5 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 34 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று பிற்பகல் வவுனியா, கணேசபுரம் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையின் போது கடும் காற்று வீசியுள்ளது. இதனால் 39 வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் உடமைகளும் நாசமடைந்துள்ளன.

கணேசபுரம் பகுதியில் 5 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 32 பகுதியளவில் சேதமடைந்துள்ளது மேலும் சமயபுரம் பகுதியில் 2 வீடுகள் பகுதியளவில் மாத்திரம் சேதமடைந்துள்ளதாகவும் மொத்தமாக 39 வீடுகள் சேதமடைந்துள்ளதாக பிரசே செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதிக்கு விஐயம் மேற்கொண்ட அப்பகுதி கிராம சேவையாளர் நா.ஸ்ரீதரன் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை திரட்டியுள்ளதுடன் அவர்களுக்குரிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஈச்சங்குளம் விநாயகர் ஆலய இரதோற்சவம்!!

இரதோற்சவம்..

வவுனியா ஈச்சங்குளம் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலய இரதோற்சவம் இன்று (31.08.2020) காலை 9.30 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.

வந்தோரை வாழவைக்கும் வவுனியா மண்ணில் ஈச்சங்குளம் – சாஸ்திரிகூழாங்குளம் மக்களின் வழிபாட்டுக்குரிய ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் கந்த கணேசதாஸக் குருக்கள் தலைமையில் இரதோற்சவம் இடம்பெற்றது.

அந்தணச் சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓதி விசேட அபிடேக தீபராதனைகளை நிகழ்த்த, விநாயகப் பெருமான் உள்வீதி வலம் வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து வெளிவீதியில் தேரில் எழுந்தருளிய விநாயகப் பெருமானை பக்த அடியார்கள் அரோகரா கோசத்துடன் ஆண்களும், பெண்களுமாக வடம் பிடித்து தேரில் இழுத்துச் சென்றனர்.

பக்த அடியார்கள் தேவார திருவாசங்களை ஓதியும், கற்பூரச் சட்டிகளை ஏந்தியும் விநாயகப் பெருமானை வழிபட. விநாயகப் பெருமானும் அடியார்களுக்கு அருள்பாலித்தார்.

குறித்த இரதோற்சவத்தின் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என 300க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையில் க ஞ் சா மூலம் அதிகளவில் அந்நிய செலாவணியை சம்பாதிக்க முடியும் : அமைச்சர் பந்துல!!

அமைச்சர் பந்துல..

க ஞ் சா ப யிரில் இருந்து ம ருந்துகளை தயாரித்து ஏற்றுமதி செய்தால், அனைத்து ஏற்றுமதி பொருட்களை விட அதிகளவான வெளிநாட்டு அந்நிய செலாவணியை க ஞ் சா மூலம் சம்பாதிக்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் க ஞ் சா ப யன்படுத்துவது த டை செ ய்யப்பட்டி ருப்பதன் காரணமாகவே வி ஷத்துடன் கூ டிய க ஞ் சா வை பொது மக்கள் ச ட்டவி ரோதமாக பயன்படுத்த நேரிட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். உலகில் உள்ள வேறு நாடுகள் அதிகளவில் க ஞ் சா வை ஏற்றுமதி செய்கின்றன.

அரசுக்கு எ திராக ப லமாக மோ தி ய த ன் காரணமாக பிரித்தானிய ஆட்சியாளர்கள் இலங்கையில் க ஞ் சா வு க் கு மு ற்றாக த டை வி தித்தனர் என்பது வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், பல்துறை சார்ந்த தொழில்களை எப்படி உருவாக்குவது என்று மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

கோவிற் – 19 தொற்றுள்ள நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக அனுமதியின்றி எமது நாட்டிற்குள் நபர்கள் உட்பிரவேசித்தலை தடுப்பதற்காக உதவுமாறு பொலிஸாரினால் வவுனியாவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

காய்ச்சல், வரட்டு இருமல், சளி, மூச்சுத் திணறல் இருக்கும் நபர்கள் கொரோனா தொற்றாக இருக்கலாம் எனவே அவர்களிடமிருந்து அவதானமாகவிருங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்களை தங்கவைத்தல், பாதுகாப்பளித்தல்,

போக்குவரத்திற்காக உதவியளித்தல் , மறைத்திருந்திருப்பதற்காக உதவி புரிதல் நல்ல செய்யலாகாது எனவே மேற்குறித்த விடயங்கள் தொடர்பாக தகவல் கிடைத்தால் அல்லது அறிய கிடைத்தால் இல்லாவிடில் காணக்கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவித்தல் வேண்டும்.

199 அல்லது 1933 அல்லது 011 2444480 அல்லது 011 2444481 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறும் அல்லது 071 – 8558875 என்ற வட்சப் இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு பொலிஸாரினால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுவரொட்டிகள் வவுனியா நகர், புதிய பேருந்து நிலையம் போன்ற இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.