நாட்டில் 9ஆவது நாடாளுமன்ற தேர்தலிற்கான வாக்குப்பதிவு நடவடிக்கைகள் வவுனியாவில் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாகவும், சுமூகமாகவும் இடம்பெற்று வருகின்றன.
வாக்களிப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தமது வாக்கை செலுத்திவருவதுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை அளித்தார்.
வாக்களிப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இம்முறை தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி அதிகமான மக்கள் வாக்களிக்க வேண்டும். அதன் மூலம் உறுதிமிக்க அரசியல் தலைமைத்துவம் ஒன்று வரும் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடவடிக்கைகள் வவுனியாவில் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாகவும், சுமூகமாகவும் இடம்பெற்று வருகின்றன.
வாக்களிப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதுடன், முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் முதல் நபராக தனது வாக்கை அளித்துள்ளார்.
இதேவேளை தேர்தல் கண்காணிப்பு பணிகளில் உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வவுனியா குழுமாட்டுச் சந்தி காத்தான் கோட்டம் பகுதியில் நள்ளிரவில் இடம்பெறவிருந்த பாரிய அனர்த்தம் மின்சாரசபையினர் அதிரடியாக செயற்பட்டமையினால் தவிர்க்கபட்டுள்ளது.
மரக்காரம்பளை வீதியூடாக குழுமாட்டுச் சந்தி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வாகனம் காத்தான் கோட்டம் அம்மன் ஆலயத்திற்கு அருகே வீதியினை விட்டு விலகி வீதியின் அருகேயிருந்த அதிஉயர் வலு கொண்ட மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் அதிஉயர் வலு கொண்ட மின்சார கம்பிகள் அறுத்து தொங்கியதுடன் மின்கம்பமும் கீழே விழும் நிலையில் காணப்பட்டது. எனினும் விபத்தினை ஏற்படுத்திய வாகனம் அவ்விடத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளது.
அவ்விடத்தில் ஒன்றுகூடிய கிராம மக்கள் உடனடியாக இலங்கை மின்சாரசபைக்கு தகவல் வழங்கியமையினையடுத்து உடனடியாக செயற்பட்ட மின்சார சபையினர் மின்சாரத்தினை துண்டித்து நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் தப்பித்து சென்ற வாகனம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் குறித்த வாகனத்தின் சாரதி விபத்துக்குள்ளான வாகனத்துடன் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
விபத்துச் சம்பவம் காரணமாக அப்பகுதியில் சுமார் இரண்டு மணிநேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உறக்கமின்றி சாரதிவாகனம் செலுத்தியமையினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளைலிருந்து தெரியவருவதாகவும் மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இன்று (05.08.2020) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அதிகளவிலான மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
கிரமப்புறங்களை சேர்ந்த மக்கள் அதிகாலையிலேயே ஆர்வத்துடன் சென்று வாக்களிப்பில் ஈடுபட்டு வருவதுடன் நகர் புறங்களில் வாக்களிப்பானது மந்தகதியில் நடைபெற்று வருகின்றது.
குறிப்பாக வைரவப்புளியங்குளம், குருமன்காடு, நெளுக்குளம், கூமாங்குளம் ஆகிய பகுதியில் மக்கள் வரிசையில் நின்று அதிகாலையிலேயே ஆர்வத்துடன் வாக்களித்திருந்ததுடன் வவுனியா நகர்புறங்களில் அமைந்துள்ள சில வாக்களிப்பு நிலையங்கள் அதிகாலை தொடக்கம் மக்கள் மந்தகதியிலேயே வாக்களித்து வருகின்றனர்.
வவுனியாவில் 141 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு 4200 பா துகாப்பு படையினர் பா துகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் தேர்தல் கடமையில் 1500க்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களும் பணியாற்றி வருகின்றனர்.
வவுனியாவில் இன்று காலை 7 மணிமுதல் வாக்களிப்பு ஆரம்பமாகி அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றதுடன் உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களும் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியாவில் காலநிலையை பொறுத்தவரையில் வாக்களிப்புக்கு சாதகமான காலநிலை காணப்படுகின்றது.
த மிழகத்தி ல் ஆ று வ ய து ம களை கொ லை செ ய்துவிட் டு த ற் கொ லை க் கு மு யன் ற தா ய் அ தற்கா ன கா ரணத் தை தெ ரிவித் தது பொ லிசாரை அ திர்ச்சி யில் ஆ ழ்த்தியு ள்ளது.
தி ருவண்ணாம லையை அ டுத் த கீ ழ்சிறுபா க்கத்தைச் சே ர்ந்த கலையரசன், ம னைவி சுகன்யாவிடம் கோ ழிக்க றி கு ழம்பு வை க்க சொ ல்லிவி ட்டு நி லத்தி ற்கு செ ன்று வா ழையிலை கொ ண்டு வீ டு தி ரும்பியுள் ளார்.
வீ ட்டுக் கு பி ன்புற ம் உ ள்ள க ழிவறையில் ம னைவியும், ம களும் க ழு த் த று ப ட் ட நி லையில் து டி த் து கொ ண்டிருbந்ததை க ண்டு அ தி ர் ச் சி அ டை ந்த அ வர், அ ருகி ல் செ ன்று பா ர்த்த பொ ழுது 6 வ யது ம கள் நிவேதா ப ரிதாபமா க உ யிரிழந்து ள்ளார்.
ர த் த வெ ள்ள த்தில் உ யி ரு க் கு து டி த் து கொ ண்டிரு ந்த சுகன்யா தி ருவண் ணாமலை அ ரசு ம ருத்துவம னையில் அ னுமதிக்க ப்பட்டு மே ல் சி கிச்சை க்காக செ ன்னைக்கு கொ ண்டு செ ல்லப்ப ட்டார்.
மே லும், ஓ ராண்டு க்கு மு ன்னர் உ யிரிழ ந்த மா மனார்- மா மியார் த ங்களிடம் வ ந்துவிடுமா று தொ டர்ந் து க னவில் அ ழைத்து வ ந்ததா ல், ம களை கொ லை செ ய்து வி ட்டு தா னும் த ற் கொ லை க் கு மு யன்றதா க சுகன்யா பொ லிசாரி டம் வா க்குமூல ம் அ ளித்துள் ளதாக கூ றப்படுகி றது. இ து கு றித்து பொ லிசார் மே லும் வி சார ணை ந டத்தி வ ருகின்ற னர்.
ம களை கொ லை செ ய்த த ந்தை ஒ ருவருக்கு நுவரெலியா மே ல் நீதிமன்ற நீ திபதி பிரமில ரத்நாயக்க இ ன்று ம ரண த ண்டனை வி தித்து தீர்ப் பளித்து ள்ளார்.
நுவரெலியா – ராகலை ஹல்கன்னோயாவை சே ர்ந்த 41 வ யதான சோமசுந்தரம் சுரேஷ் எ ன்ற இ ரண்டு பி ள்ளைகளின் த ந்தைக்கே இ ந்த ம ரண த ண்டனை வி திக்கப்பட்டு ள்ளது.
2014 ஆ ம் ஆ ண்டு 10ம் மா தம் 24 ஆ ம் தி க தி இ ரவு த னது வீ ட்டில் மூ ன்றரை வ யதான சுரேஷ் இ ந்தியா எ ன்ற த னது ம களின் க ழுத்தை நெ ரி த் து கொ லை செ ய்த கு ற்றத்தி ற்காக கு ற்றவாளி க்கு இ ந்த ம ரண த ண்டனை வி திக்கப்பட்டு ள்ளது.
கு ற்றவா ளியின் ம னைவி க டந்த 2014ஆம் கு வைத் நா ட்டுக்கு வே லைக்கு செ ன்றுள்ளார். அ ந்த பெ ண் ம ற்றுமொ ரு இ லங்கை ந பருடன் ம றைமுக உ றவை வை த்து கொ ண்டு த னது கு ழந்தைகளை க வனிக்காது இ ருந்துள் ளதால்,
கு ற்றவா ளி த னது மூ ன்றரை வ யதான ம களின் க ழு த் தை நெ ரி த் து கொ லை செ ய்துள்ளார். இ ந்த கொ லை தொ டர்பாக ராகலை பொ லிஸார் நுவரெலியா மே ல் நீ திமன் றத்தில் வ ழக்கை தா க்கல் செ ய்திருந் தனர்.
நாடாளுமன்ற தேர்தலானது நாளை(05.08.2020) நடைபெறவுள்ள நிலையில் அனைத்து மக்களும் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
வவுனியா வர்த்தக சங்கம், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
இதன்போது, கொவிட் 19 அ ச்சுறுத்தல் காரணமாகவும், அரசியல்வாதிகள் சிலரின் செயற்பாடு காரணமாகவும் பொது மக்கள் சிலர் வாக்களிப்பில் ஆர்வம் காட்டாத நிலை காணப்படுகின்றது. இது ஜனநாயக நாடு ஒன்றில் ஆரோக்கியமான செயற்பாடு அல்ல.
மக்கள் தாம் விரும்பும் சிறப்பான பிரதிநிதியை தெரிவு செய்ய வாக்குரிமையை பயன்படுத்துவது அவசியம் ஆகும். அதற்கு அமைவாக வவுனியா மாவட்ட மக்கள் எந்தவித அ ச்சமுமின்றி வாக்களிக்க வேண்டும்.
அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம், பொலிசார் மற்றும் சுகாதார பிரிவினர் ஏற்படுத்தியுள்ளனர். இதனால் வீணான குழப்பங்களை தவிர்த்து அனைத்து மக்களையும் வாக்களிக்குமாறும் பொது அமைக்குகள் கோரியுள்ளன.
ஆள்பவனை தீர்மானிக்க வேண்டியது ஆளப்படுகின்றவனே. அவ்வாறு தீர்மானிப்பதற்கு உள்ள ஒரேயொரு வாய்ப்பு தேர்தல். அந்தத் தேர்தலில் உங்களிடமுள்ள ஒரேயொரு ஜனநாயக ஆ யுதம் உங்கள் வாக்கே.
அந்த ஆ யுதத்தைப் பயன்படுத்தி உங்களை ஆளப் போகிறவர்களை தெரிவு செய்ய நீங்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லாவிட்டால், அதன் கருத்து உங்களை ஆளப் போகிறவர்கள் நீங்கள் அல்லாது வேறு ஒருவர் தீர்மானிக்க அனுமதிக்கிறீர்கள் என்பதாகும் அதாவது உங்கள் உரிமையை நீங்களே மீறுகிறீர்கள் என்பதாகும்
ஆகவே வாக்களிப்பு நிலையத்திற்கு கட்டாயம் அனைவரும் சென்று வாக்கினை கட்டாயம் வேண்டுமேனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் கிருமி நீக்கும் செயற்பாடுகள் இன்று(04.08.2020) முன்னெடுக்கப்பட்டது.
நாட்டின் 16 ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாளை காலை நடைபெறவுள்ள நிலையில் வவுனியாவில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள ஒரு இலசத்து 19 ஆயிரத்து 811 வாக்காளர்களும் வாக்களிக்க 141 வாக்களிப்பு நிலையங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிலையங்களில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், வாக்களிப்பு நிலையங்களில் கிருமி நீக்கம் செய்யும் வகையில் மருந்து விசிறப்பட்டது.
தேர்தல் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து சுகாதாரப் பிரிவினர் கிருமி நீக்கும் மருந்துகளை தெளித்து வாக்களிப்பு நிலையங்களை சுத்தப்படுத்தினர்.
நாளை(05.08.2020) இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான தெளிவூட்டும் கலந்துரையாடல் ஒன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் சில்வா, வடமாகண பிரதிதேர்தல் ஆணையாளர் லலித் ஆனந்த, ஏற்றுமதி அமைச்சின் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த வடமாகண பிரதித் தேர்தல் ஆணையாளர் லலித் ஆனந்த இம்முறை தேர்தலில் வாக்குப்பெட்டிகளை மிகவும் பாதுகாப்பான முறையில் எடுத்து வருவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையில் வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களிற்கு கொண்டுவரப்படும் போது கட்சிகளின் முகவர்கள் அந்த வாகனங்களில் பயணிக்கமுடியும் என்று தெரிவித்ததுடன்,
வாக்கெண்ணும் நடைமுறைகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் வேட்பாளர்களிற்கு தெளிவூட்டியிருந்தார்.
திருகோணமலை இருந்து மட்டக்களப்பிற்கு சட்டவிரோதமாக முருகன் சிலை ஒன்றை க டத்தி சென்று விற்பனை செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று திங்கட்கிழமை இரவு திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பிற்கு சட்டவிரோதமாக ஜம்பொன் முருகன் சிலையை க டத்தி சென்று விற்க முயன்றபோதே குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரை பொலிசார் கைது செய்துள்ளனர்
இந்நிலையில் குறித்த நபர் பொலிஸ் உத்தியோகத்தில் இருந்து இடைநிறுத்திய திருகோணமலை முள்ளிப்பொத்தானையைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனவும்.
புதையலில் இருந்து கிடைத்த சிலை எனவும் அதனை ஒரு நண்பர் தந்தாகவும் இதனை விற்பதற்காக மட்டக்களப்பிற்கு வந்ததாகவும் தெரிவித்ததாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதையடுத்து கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் யாழ். தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளார்.
நேற்றைய தினம் மிகவும் ஆரோக்கியமாக குழந்தை பிறந்துள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜுலை மாதம் 7ஆம் திகதி சவுதி அரேபியாவில் இருந்து வந்த அந்த பெண் யாழ். தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இதன்போது குழந்தை பிரசவிக்கும் நாள் நெருங்கும் போது அதிகாரிகள் அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குறித்த பெண்ணுக்கு வைத்தியர்கள் மிகவும் பா துகாப்பான முறையில் குழந்தையை பிரசவித்துள்ளனர். தற்போது தாயும் குழந்தையும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள மாவட்டங்களாக இலங்கையின் ஏழு மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தை தேசிய டெங்கு நோய் தடுப்பு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் அருண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இந்த நிலையில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 23934 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்பட்ட பூனை தொடர்ந்தும் சிறைச்சாலை வளாகத்துக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூனை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலைக்கு வெளியில் இருந்து பிடிக்கப்பட்டது.
இதன்போது பூனையின் கழுத்தில் பிணைக்கப்பட்டிருந்த நிலையில் 1 கிராம் ஹெ ரோய்ன் போ தைப்பொ ருள், தொலைபேசிக்கான சிம் அட்டைகள் என்பன மீட்கப்பட்டன.
இந்தப்பூனையை பயன்படுத்தி சிறைச்சாலைக்குள் போ தைப்பொ ருட்களை க டத்தும் முயற்சியே இதுவென அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து குறித்த பூனை சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. எனினும் அது அங்கிருந்து தப்பிச்சென்று விட்டதாக நேற்று செய்தி வெளியாகி இருந்தது.
இந்நிலையிலேயே குறித்த பூனை தொடர்ந்தும் சிறைச்சாலை வளாகத்துக்குள் சுதந்திரமாக சுற்றி திரிவதாக சிறைச்சாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொலநறுவை, லங்காபுர பிரதேசத்தில் மற்றுமொரு கொரோனா நோயாளி நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக பொலநறுவை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் குமாரவங்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த நோயாளி லங்காபுர பிரதேச செயலயத்தில் கடமை செய்த சிவில் பாதுகாப்பு அதிகாரியின் 5 வயதுடைய மகள் என தெரியவந்துள்ளது. சிவில் பாதுகாப்பு பிரிவு அதிகாரி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நேற்று முன்தினம் மேற்கொளள்ப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளில் உறுதியாகியது.
அதன் பின்னர் அவரது மனைவி மற்றும் மகளுக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளுக்கமைய மகளுக்கும் கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளளார்.
அதற்கமைய லங்காபுர பிரதேசத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 12ஆகும் என சுகாதார பிரிவின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பிரபல திரைப்பட நடிகராக W.ஜயசிறி என்பவருக்கு லொத்தர் சீட்டிழுப்பில் 85000 அமெரிக்க டொலர் பணப்பரிசு கிடைத்துள்ளதாக கூறி பணம் கொ ள்ளையடிக்கப்பட்டுள்ளது.
85000 அமெரிக்க டொலர் பணப்பரிசு கிடைத்துள்ளதாக கூறி அவரது 12 லட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்தை மோ சடியான முறையில் ஏமாற்றிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பாணந்துறை ஹிரண பிரதேசத்தை சேர்ந்த நடிகரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டிற்கமைய வி சாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
ICC நிறுவனத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட உலக கிண்ண போட்டிக்காக இந்த லொத்தர் சீட்டிழுப்பில் மேற்கொள்ளப்பட்டதாக கூறி பணம் மோ சடி செய்யப்பட்டுள்ளது.
இந்த மோ சடி தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் மாவட்ட கிராமிய மக்களின் இரத்தத்தில் ஈயம் கலந்துள்ளதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் விசேட வைத்திய ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார்.
இந்த மக்களின் இரத்தத்தில் டெசி லீட்டர் ஒன்றிற்கு 3 – 9 மைக்ரோ கிராம் அளவு ஈயம் கலந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பகுதி மக்களுக்கு நரம்பியல் கோளாறுகள், சிறுநீரக செயற்பாட்டில் தடை ஏற்படுதல், அதிக இரத்த அழுத்தம் போன்ற நோய் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈயம் இரத்தத்தில் உள்ளமையினால் பிள்ளைகளின் மூளை வளர்ச்சி மட்டம் குறைவடைவதாக உறுதியாகியுள்ளது. உணவு மற்றும் குடிக்கும் நீரில் ஈயம் உள்ளமையினால் இரத்தத்தில் ஈயம் கலந்துள்ளமை உறுதியாகியுள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் மாவட்டத்தின் கிராமிய பகுதிகள் சிலவற்றில் தெரிவு செய்யப்பட்ட சிலரிடம் மேற்கொள்ள பரிசோதனையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.