‘நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்’ நவம்பர் 14 ம் திகதி நீரிழிவு நோயாளர் தினமாக உலகலாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகலாவிய ரீதியில் பல கோடிக்கணக்கான நீரிழிவு நோயாளர்கள் காணப்படுகின்றனா்.
அந்த வகையில் நீரிழிவு நோயை வெல்லவும் நீரிழிவு நோயுடன் வாழ்வை மகிழ்ச்சிகரமாக முன்னெடுக்கவும் எனும் தொனிப்பொருளில் நீரிழிவு மற்றும் அகஞ்சுரக்கும் தொகுதிகளின் பிரிவின் ஒழுங்கமைப்பின் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் கண் தொடர்பான ஆலோசனை மண்டபத்தில் இன்று (14.11.2019) காலை 10.30 மணியளவில் நீரிழிவு நோயாளர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
நீரிழிவு மற்றும் அகஞ்சுரக்கும் தொகுதிகளின் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் மகேசி அமரவர்த்தன தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்ததுடன்,
வைத்தியசாலையின் அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள் , வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது நீரிழிவு நோய் தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டதுடன் நீரிழிவு நோயினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் விளக்கம் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் – கைதடி, நுணாவில் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உ யிரிழந்துள்ளார். குறித்த விபத்தின் போது குருநகர், கனகசிங்கம் வீதியை சேர்ந்த எம்.லக்கி எனும் (42) வயதுடைய ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தரை டிப்பர் வாகனமொன்று மோதித் தள்ளியதிலேயே இந்த அ னர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த நபர் ப டுகாயமடைந்ததும், 119 அவசர நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்தபோதும், நோ யாளர் காவு வண்டி சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லையென பொது மக்கள் கு ற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் குறித்த வீதியில் சென்ற வாகனங்களை மறித்து உதவிகோர முயன்றபோதும், உதவ யாரும் முன் வரவில்லை எனவும், நீண்ட நேரத்தின் பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் வழியில் அவர் உ யிரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்தின் பணிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட செயலகத்தில் வாக்கு என்னும் பிரிவு , வாகனப்பிரிவு, மின்சார சபை பிரிவு, பொலிஸ் நிலைய பிரிவு, ஒழுங்கமைப்பு பிரிவு, வழங்கல் பிரிவு, தொடர்பாடல் பிரிவு,
பெறுபேற்றினை அறிவிக்கும் பிரிவு, ஊடகப்பிரிவு என அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு மாவட்ட செயலக வளாகத்தினுள் பொலிஸ் பா துகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் கடமைகளை இலகுபடுத்தும் முகமாக வவுனியா மாவட்ட செயலக வாயிலின் முன்பகுதியில் பிரிவுக்களுக்கான வரைபடமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நாளைய தினம் வவுனியாவிலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் பெட்டிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை வளாகத்தில் டெங்கு அ பாயநிலை காணப்படுவதனால் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை மூடப்படுவதாக வவுனியா தெற்கு வலயகல்விப் பணிப்பாளர் முத்து இராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலையில் சுகாதார ப ரிசோதகர்கள் மேற்கொண்ட சோ தனை நடவடிக்கையின் போது டெங்கு நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து உடனடியாக பாடசாலையை சுத்தம் செய்யுமாறு சுகாதார பணிமனையினரால் குறித்த பாடசாலைக்கு கடிதம் மூலம் இன்று மாலை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாணவர்களின் பா துகாப்பு கருதி நாளைய தினம் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை மூடப்படுவதுடன்,
சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களின் மாகாண ரீதியான நாளைய பரீட்சைகளை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனியா தெற்கு கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஐஐடி மாணவி த ற்கொ லை செய்துகொண்ட வழக்கில் அ திரடி திருப்பமாக, அவருடைய செல்போனில் பேராசிரியர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த ஃபாத்திமா லத்தீஃப் என்கிற மாணவி கடந்த ஆண்டு மத்திய அரசால் நடத்தப்பட்ட தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் சேர்ந்தார்.
முதலாமாண்டு படித்து வந்த ஃபாத்திமா நவம்பர் 9-ம் திகதியன்று விடுதியில் உள்ள அறையில் தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டார். இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்,
கடந்த மாதம் நடைபெற்ற இன்டெர்னல் தேர்வில் அவர் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாலே த ற்கொ லை செய்துகொண்டதாக கூறப்பட்டது.
ஆனால் இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்த ஃபாத்திமாவின் பெற்றோர் மற்றும் அவருடைய இரட்டை சகோதரி ஆயிஷா லத்தீப், கோட்டூர்புரம் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
மேலும், ஃபாத்திமாவின் செல்போனை ஆராய்ந்த போது, த ற்கொ லைக்கு காரணம் பேசிரியர் சுதர்சன் பத்மநாபன் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல மிலிந்த் பிராமே, ஹேமசந்திரன் காரா ஆகிய பேராசியர்கள் தன்னை து ன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவமானது கேரளா மட்டுமில்லாது தமிழகத்திலும் பலத்த அ திர்வலைகளை கிளப்பியுள்ளது. சம்பவம் தொடர்பாக ஃபாத்திமாவின் பெற்றோர் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் தூ க்கிட்டு த ற்கொ லைக்கு முயன்ற சக ந ண்பனை சாதுர்யமாக செயல்பட்டு கா ப்பாற்றிய பள்ளி மாணவனுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரையூரில் இருக்கும் உடையார்கூட்டம் கிராமத்தை சேர்ந்தவர் வழிவிடுமுருகன் (48). இவருக்கு வடிவேலன்(13) என்ற மகன் உள்ளார். அவர் அங்கிருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை மாலை பள்ளி முடிந்தப்பின் வடிவேலன் சக நண்பர்களுடன் அங்கிருக்கும் புளிய மரத்தின் அருகே விளையாடியுள்ளார்.
அப்போது அங்கு மரத்தில் அமர்ந்திருந்த வடிவேலனின் வகுப்புத் தோழரான மாணவர் ஒருவர் தனது தந்தை ம றைந்த சோ கத்தில் இருந்ததால், தி டீரென த ற்கொ லை செய்ய முடிவு செய்து, உடனடியாக மரத்தில் து ண்டை க ட்டி தூ க்கு மா ட்டிக்கொண்டு த ற்கொ லைக்கு முயன்றுள்ளார்.
இதைக் கண்ட அங்கிருந்த மாணவர்கள் ப யத்தில் அ லறி அ டித்து ஓ ட, வடிவேலன் மட்டும் துணிச்சலாக சக நண்பனை கா ப்பாற்றும் எண்ணத்தில் சமயோசிதமாக ஓடிச்சென்று மாணவன் க ழுத்தில் து ண்டு இறுகாவண்ணம் தூ க்கி பி டித்துக்கொண்டார்.
மாணவனை தூக்கிப்பிடித்துக்கொண்டே, ஓடும் சக மாணவர்களை பார்த்து யாரையாவது அழைத்துவாருங்கள் அதுவரை நான் தாங்கிப்பிடித்துக் கொள்கிறேன் என கூறியதால், அவர்கள் அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்து தூ க்கில் தொ ங்கிய மாணவனை மீ ட்டனர்.
அதன் பின் மாணவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவன் தற்போது அ பாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், உ யிருக்கு எந்த ஒரு ஆ பத்தும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தூ க்கிட்ட சக நண்பனை துணிச்சலுடன், சமயோசிதமாக சிந்தித்து கா ப்பாற்றிய மாணவர் வடிவேலன் குறித்து கேள்விப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்,
மாணவரையும், அவரது பெற்றோரையும் தனது அலுவலகத்துக்கு அழைத்தார். பெற்றோருடன் வந்த மாணவர் வடிவேலனை பாராட்டி, புத்தகம் ஒன்றை பரிசாக அளித்தார்.
அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் வடிவேலன் பெயரை அரசு விருது பட்டியலுக்கு பரிந்துரைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் சி றுவனின் மூக்கிற்குள் சென்ற மீனை மருத்துவர்கள் ப த்திரமாக அகற்றினார்கள்.புதுக்கோட்டை மாவட்டம் மண்ணவேளாம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அருள்குமார், ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.
அருள்குமார் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் தனது நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தான். அப்போது தனது மூ க்கிற்குள் ஏதோ செல்வதை உ ணர்ந்த அருள்குமார் வ லியால் து டித்தபடி இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளான்.
இதனை தொடர்ந்து அவனை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அருள்குமாரை ப ரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் மூ க்கிற்குள் சோ தனை செய்தனர். அப்பொழுது உள்ளே ஏதோ ஒன்று இருப்பது போல் தெரிய வந்தது.
பின்னர் அவனுக்கு தொடர் சி கிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மூ க்கில் உ யிருடன் இருந்த மீன் குஞ்சை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், குளிக்கும்போது அருள்குமாரின் மூக்குக்குள் மீன் சென்றுள்ளது.
இதையடுத்து துரிதமாக செயல்பட்டு மிகுந்த சி ரமத்துக்கு இடையே மீனை வெளியில் எடுத்தோம் என கூறியுள்ளனர்.
வவுனியா நகர்ப்பகுதியில் மாலை வேளையில் அதிகளவு டெங்கு நுளம்பு பெருக்கெடுத்து வருகின்றன.
அதனை அழித்தொழிப்பதற்கு வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டம் சுகாதார துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா கதிரேசு வீதி, வைரவப்புளியங்குளம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள், கல்வி நிலையங்கள், வீடுகள் போன்றவற்றிக்கு முன்பாகவும்,
கால்வாய்களுக்குள்ளும் , நகரையண்டிய பகுதிகளிலும் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை புகை மூலம் விரட்டியடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெங்கு நுளம்பைக்கட்டுப்படுத்த பொதுமக்கள், வியாபார நிலைய உரிமையாளர்கள், ஊழியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் கோரியுள்ளனர்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் நெஞ்சு வ லி காரணமாக இரண்டு நாட்களில் நான்கு மருத்துவர்களை நாடியும் ப லனின்றி இ ளைஞர் ஒருவர் ப ரிதாபமாக ம ரணமடைந்த சம்பவம் குடும்பத்தாரை உ லுக்கியு ள்ளது.
கேரளாவின் எடப்பாள் பகுதியில் பெற்றோர் மற்றும் மனைவியுடன் குடியிருந்து வருபவர் 30 வயதான பிரசாந்த். இவரே செவ்வாய் அன்று விடிகாலை நான்கு மணியளவில் மா ரடைப்பு காரணமாக ம ரணமடைந்தவர்.
இரு தினங்களுக்கு முன்னர் நெஞ்சு வ லி மற்றும் உடல் வ லி காரணமாக இவர் எடப்பாளில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து நான்கு வெவ்வேறு மருத்துவர்களை நாடியுள்ளார் பிரசாந்த்.
ஆனால் மருத்துவர்கள் அனைவரும் ப ரிசோதனைக்கு பின்னர் வ லி நிவாரணி அளித்து அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தின்போது பிரசாந்தின் பெற்றோர்கள் விருந்து ஒன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு தமிழகத்தின் சென்னை நகருக்கு சென்றுள்ளனர்.
நிறைமாத கர்ப்பிணியான மனைவி சில தினங்களுக்கு முன்னரே தாய்வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் பிரசாந்தும் அவரது சகோதரரும் மட்டுமே குடியிருப்பில் இருந்துள்ளனர். திங்களன்று இரவு தூங்கச் சென்ற பிரசாந்த், விடிகாலை 3 மணியளவில் நெஞ்சு வ லியால் க டுமையாக அ வதிப்பட்டுள்ளார்.
உடனே எடப்பாளில் உள்ள ம ருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் இ ளைஞரின் உ யிரை கா ப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பிரசாந்த் திருமணம் செய்து கொண்டுள்ளார். முதல் பிரசவம் என்பதால் மனைவியை அவரது தாயாரின் வீட்டில் சில தினங்களுக்கு முன்னரே அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
உலக நாடுகளில் உள்ள அதிகளவான இரட்டையர்களை ஒன்றுகூடச் செய்து கின்னஸ் உலக சாதனை படைக்க இலங்கையை சேர்ந்த இரட்டையர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை இரட்டையர்கள் அமைப்பின் தலைவர்களான உபுலி கமகே மற்றும் ஷமலி கமகே ஆகியோரே இவ்விதமான முற்சியை முன்னெடுத்துள்ளனர். கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இரட்டையர்கள் அமைப்பின் கூட்டத்தில் வைத்து இவர்கள் கருத்துரைக்கையில்,
இலங்கை இரட்டையர்கள் அமைப்பினை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திததி பிரம்மாண்டமான மாநாடொன்றை நடத்த தீர்மானித்துள்ளோம்.
இலங்கை இரட்டையர்கள் அமைப்பின் 28,000 உறுப்பினர்களோடு, உலக நாடுகளில் உள்ள இரட்டையர்களையும் இலங்கைக்கு அழைத்து இந்த மாநாட்டினை நடத்தவுள்ளோம். இதன்மூலம், அதிக அளவில் இரட்டையர்களை ஒன்றுகூடச் செய்து கின்னஸ் உலக சாதனை படைக்க திட்டமிட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த இரட்டையர்கள் அமைப்பானது இலங்கையில் கடந்த 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பா துகாப்பற்ற புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் யாழ்.தேவி புகையிரதத்துடன் மோ துண்டு ப லியாகியுள்ளார்.
யாழ்ப்பாணம், நாவலர் வீதியில் உள்ள புகையிரத கடவையில் இன்று காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த உணவக உரிமையாளரான 31 வயதுடைய நிலாந்தன் என்பவர் உ யிரிழந்துள்ளார்.
இதன்போது காயங்களுக்குள்ளான அவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உ யிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ச ட்டவிரோதமான முறையில் படகு வழியாக தலைமன்னாரிலிருந்து இந்தியா செல்ல முயன்ற 8 இலங்கையர்கள் நேற்று இலங்கை க டற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகள் இருந்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் காலி துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு படகு வழியாக போர் காலங்களில் வெளியேறிய இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக, பிரான்ஸ் நிர்வாகத்தின் கீழ் உள்ள ரீயூனியன் தீவு, அவுஸ்திரேலியாவை நோக்கிய ச ட்டவிரோத படகுப் பயணங்கள் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
செவ்வாய் பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் இடம் பெயர்ந்துள்ளதால் 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் பாதிப்புகள் யாருக்கு என்பதைப் பார்ப்போம்.
மேஷம் : உங்க ராசி நாதன் செவ்வாய் பகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவீர்கள்,ராசிக்கு ஏழாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளதால் இது ருசக ராஜயோகம்.
திருமணம் நடைபெறுவதில் இருந்த த டங்கள் நீங்கும். காரணம் மங்களகாரகன் செவ்வாய் பார்வை உங்க ராசியின் மீது வி ழுகிறது. அவரது எட்டாம் பார்வை உங்க குடும்ப ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. உங்க தொழில் ஸ்தானத்தின் மீது செவ்வாயின் பார்வை விழுவதால் புதிய வேலைகள் கிடைக்கும். உங்களின் பெர்சனாலிட்டி அதிகரிக்கும்.
பணவரவு அதிகரிக்கும் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். உங்களின் அப்பாவின் உ டல் நலனில் அக்கறை செலுத்தவும். உஷ்ண கிரகம் செவ்வாய் கூடவே சூரியன் வேறு கேட்கவா வேண்டும் வார்த்தைகளில் அனல் பறக்கும் வீட்டில் மனைவியிடம் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.
கொஞ்சம் நேரம் சரியில்லை வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளிடம் ச ண்டை வரலாம். பேச்சில் அமைதியை கடைபிடியுங்கள். வயிற்று உ பாதைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம். உடல் நலனில் அக்கறை தேவை. மகிழ்ச்சியில் குறைவு இருக்கும். மன அ ழுத்தம் அதிகரிக்கலாம். செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.
ரிஷபம் : ஆறாம் வீடு எதிரி ஸ்தானம், அந்த வீட்டில் சனியோ செவ்வாயோ அமர்வது அற்புதமான அமைப்பு. ரிஷபம் சுக்கிரனின் வீடு.
உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் நுழைந்திருக்கிறார் செவ்வாய். இதுவும் சுக்கிரனின் வீடு எனவே நீங்கள் எ திரிகளை தைரியமாக எதிர்கொண்டு வெல்வீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. நீண்ட காலப் பி ரச்சினைக்குத் தீர்வு ஏற்படும்.
குடும்ப வாழ்க்கையில் அமைதியாக இருக்கும். காதலில் வெல்வீர்கள் பாஸ். சட்ட போ ராட்டங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் சற்று ப லவீனமடையும். சேர்த்து வைத்த பணத்தை பத்திரப்படுத்துங்கள். உங்களின் முகப்பொலிவு அதிகரிக்கும்.
கடன்கள் கேட்ட இடத்தில் கிடைக்கும். எ திரிகளை அடையாளம் கண்டு ஓட ஓட வி ரட்டுவீர்கள். மாணவர்களுக்கு இது அற்புதமான பெயர்ச்சி போட்டி தேர்வுகளில் வெல்வீர்கள். வீட்டிற்குத் தேவையான எலக்ட்ரானிக் பொருட்களை ஆறாம் இடம் நோய் ஸ்தானம் என்பதால் உங்க உடல் நலனில் அக்கறை தேவை. நீண்ட காலப் பி ரச்சினைக்குத் தீர்வு ஏற்படும்.
மிதுனம் : மிதுன ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது நல்லதல்ல. செவ்வாயின் பார்வை உங்க ராசிக்கு விரைய ஸ்தானம், லாப ஸ்தானம், ஆயுள் ஸ்தானத்தின் மீது விழுகிறது.
வேலை செய்யும் இடத்தில் வா க்குவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்திலும் வேலை செய்யும் இடத்திலும் எ திர்ப்புகள் வலுக்கும். ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். ச வால்களை சந்திக்க வேண்டியிருக்கும். குழந்தைகளின் உடல் நலனில் பி ரச்சினை வரலாம்.
மனசு அமைதியை இழக்கும். நிதானம் அவசியம். பங்குச் சந்தையில் உங்களுக்கு சந்தோஷ செய்தி கிடைக்கலாம். குறுகிய கால முதலீடுகள் வேண்டும். நீண்ட கால முதலீடுகள் லாபத்தை தரலாம். அமைதியா இருங்க. பொறுமையாக எதையும் கையாளுங்க. ச வால்களை சாதனைகளாக மாற்றுவீர்கள். கர்ப்பிணிப்பெண்கள் கவனமாக இருக்கவும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள் அற்புதமாக இருக்கும்.
கடகம் : கடகம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். வேலையில் உயர்வு காணப்படும். மனைவி அல்லது கணவருக்கு பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். நான்காம் வீடு தாய் ஸ்தானம் இது சுக ஸ்தானம் கூட. அம்மாவின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.
எதிர் பா லினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ச ண்டை வரை போகலாம். வாயைக் கட்டுவது நல்லது. திருமண வாழ்க்கையில் உரசல்கள் ஏற்படலாம். உடல் நலப் பி ரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. குடும்பத்தில் உறவினர்களால் மன அமைதிக்கு பங்கம் வரலாம். ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யலாம். வீடு மனை வாங்கலாம் லாபம் கிடைக்கும்.
சிம்மம் : சிம்மம் ராசிக்கு 3வது வீட்டில் நுழைந்திருக்கிறார் செவ்வாய். இது முயற்சி ஸ்தானம். உங்க தைரியம் தன்னம்பிக்கை கூடும்.
பொருளாதாரம் மேம்படும். வெளியூர் பயணங்களுக்கு வாய்ப்புண்டு. வேலையில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும், இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சின்னச் சின்ன வா க்குவாதங்கள் வரலாம். உரசல்களை தவிர்த்து விடுங்கள். வேலை விசயமாக சிறு பயணம் செல்வீர்கள்.
பயணங்களினால் நன்மைகள் நடக்கும். உங்க உடல் நலம் மேம்படும். நோய்கள் பி ரச்சினை தீரும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
கன்னி : கன்னி ராசிக்கு இரண்டாம் இடத்தில் செவ்வாய் நுழைந்துள்ளார். இரண்டாம் வீடு குடும்ப ஸ்தானம், தன ஸ்தானம், வாக்கு ஸ்தானம். வாக்கில் உஷ்ண கிரகம் இருப்பதால் நாக்கில் கவனம். கோபமாக சுள்ளென்று பேச வேண்டாம்.
மனைவியுடன் மோ தல் மூளும் வாய்ப்புகள் உள்ளன. பிசினஸில் ஈடுபட்டுள்ளோருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். குழந்தைகளின் உடல் நலனில் கவனம் தேவை. கணவர் அல்லது மனைவி அல்லது பெற்றோரில் யாராவது ஒருவருக்கு உடல் நலக் கு றைபாடுகள் ஏற்படலாம் வேலையில் பி ரச்சினை வர வாய்ப்புள்ளது.
கவனமாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் சவாலான சூழ்நிலை ஏற்படும். கடினமான பணிகளை செய்ய வேண்டியிருக்கும். வியாபார பேச்சுவார்த்தை சுமாராகவே இருக்கும். முதலீடுகளில் லாபம் கிடைக்கும். உடல் நலக்கோ ளாறுகள் ஏற்படும் உணவில் கவனம் தேவை.
துலாம் : செவ்வாய் உங்கள் ராசியில் நுழைந்திருக்கிறார். ராசியில் ஏற்கனவே உஷ்ண கிரகம் இருப்கிறார் கூடவே செவ்வாய் இணைவதால் கோ பம் அதிகரிக்கும். உ டல்நலம் பாதிக்கப்படலாம். மற்றவர்களை அடக்கி ஆளுவீர்கள்.
அதேசமயம் யாருடனவாவது ச ண்டை மூள வாய்ப்புள்ளது. கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு அமர்வான் எனவே ச ண்டை போடாதீங்க கோ பத்தை தவிர்த்து விடுங்கள். எனக்கு ஏன் இப்படி என்ற மன அ ழுத்தம் இருக்கலாம். வாகனங்களை ஓட்டும்போது கவனம் தேவை.
மனைவியுடன் ச ண்டை வரும் கவனம் ப்ளீஸ். உ டல் நலத்தில் அக்கறை தேவை. சுறுசுறுப்பா வேலை பாருங்க. இல்லாட்டி சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த இடப்பெயர்ச்சி காலத்தில் முருகப்பெருமானை செவ்வாய்கிழமைகளில் வணங்குங்கள் நல்லது நடக்கும்.
விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்களே… உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12வது வீட்டில் அமர்ந்துள்ளார். 12 ஆம் இடம் செலவு, விரைய ஸ்தானம், மோட்சம், தூக்கம் ஆகியவைகளை குறிக்கும் இடம். பிசினஸ் செய்பவர்களுக்கு திடீர் செலவுகள் வரலாம்.
வண்டி வாகனத்தில் செல்லும் போது க வனமாக போங்க இல்லாட்டி விபத்தின் மூலம் மருத்துவ செலவுகளும் வரும். திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன ச ண்டை வரலாம். மனைவியுடன் வா க்குவாத த்திற்கு வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் யோகம் கூடும்.
அல்சர் போன்ற உபாதைகளுக்கு வாய்ப்புண்டு. உறக்கம் கெடும் இதனால் மன அமைதி கெடும். பண விசயத்தில் முக்கிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். கவனமாக இல்லாவிட்டால் உடல் நல பா திப்பும் ஏற்படும்.
தனுசு : தனுசு ராசிக்காரர்களே இனி உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் செவ்வாய். நிறைய பலன்களை எதிர்பார்க்கலாம்.
கோர்ட் வ ழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பு உயரும். மனைவியுடன் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சொத்துப் பி ரச்சினைகள் தீரலாம். அடுத்த 6 வாரங்களுக்கு உங்களுக்கு யோகம்தான்.
பணவரவு அதிகரிக்கும். முன்னோர்கள் சொத்துக்களை விற்பனை செய்வதில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு நன்மைகள் நடைபெறும் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும். செவ்வாய்கிழமையன்று துர்க்கா தேவியை செவ்வரளி பூக்களைக் கொண்டு வணங்க நன்மைகள் நடைபெறும்.
மகரம் : மகரம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். வேலையில் முன்னேற்றம் கிடைக்கும்.
பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு அதிகம். உயர் பதவிகளை அடைவீர்கள். பொறுப்புகள் கூடும். பி ரச்சினைகளை விட்டு தள்ளியே நில்லுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சில பி ரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.
பத்தாம் வீட்டில் செவ்வாய் அமர்வது ராஜயோகம் வரும் காலம். நல்ல நேரம் வந்து விட்டது. அரசு பணியாளர்கள், கா வல்துறையினர், தீயணைப்புத்துறையினருக்கு நன்மைகள் நடைபெறும் காலம். உறவினர்களிடம் உற்சாகமாக இருப்பீர்கள். அம்மா வழி உறவினர்கள் அன்புடன் இருப்பார்கள். வீடு வாசல் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு நன்மைகள் நடைபெறும்.
கும்பம் : கும்பம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். வேலையில் மாற்றம் ஏற்படலாம்.
பொருளாதாரம் வலுப்பெறும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. பிசினஸில் பெரிய அளவில் லாபம் இருக்காது என்றாலும் நிநி நிலைமை நிலையாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்த்து விடுங்கள்.
வெளியூர் செல்லும் வாய்ப்பு வரும். காதல் திருமண வாழ்க்கை சுமாராக இருக்கும். உங்க கருத்தை உங்க வாழ்க்கை துணை புரிந்து கொள்வார். வெளியூர் செல்லும் வாய்ப்பு வரும். திருமணமான தம்பதிகள் சந்தோஷமாக இருப்பீர்கள்.
செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமான வணங்க நன்மைகள் நடைபெறும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வணங்கலாம்.
மீனம் : மீனம் ராசிக்கு 2 மற்றும் 9ம் வீடுகளுக்கு அதிபதியான செவ்வாய் இப்போது உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் அமர்ந்துள்ளார். செவ்வாய் பார்வை குடும்ப ஸ்தானம், தன ஸ்தானத்தை பார்ப்பதால் பணம் வரும் வாய்ப்பு ஏற்படும்.
தைரியம் கூடும். எதிலும் திருப்தி இருக்காது. க டுமையாக உழைக்க நேரிடும். இ ரத்தம் தொடர்பான பி ரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம் அதிகம் தேவை. மன அ ழுத்தம் கூடும். எதிர்பாராத லாபம் ஒன்றை சந்திப்பீர்கள்.
எதிர்பாராத லாபம் ஒன்றை சந்திப்பீர்கள். விபத்துகாரகர் எட்டில் அமர்வதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவ னம் தேவை. ஏற்கனவே சூரியன் வேறு அங்கே சஞ்சரிக்கிறார். கூடவே செவ்வாய் இணைவதால் சிறு சிறு விபத்துகள் ஏற்படும்.
காரமான உணவுகள் எண்ணெய் பலகாரங்களை சாப்பிட வேண்டாம் வயிறு பி ரச்சினைகள் வந்து விடும் கவனம் தேவை. வியாழக்கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபடவும்.
பிரபல சின்னத்திரை நட்சத்திர கா தல் ஜோடிகளான அன்வர்- சமீரா மிக எ ளிமையான முறையில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
பிரபல டிவியின் பகல்நிலவு என்ற சீரியலில் அறிமுகம் ஆனவர்கள் அன்வர்- சமீரா, இதற்கு முன்பே இவர்கள் நிஜத்திலும் காதலர்கள் தான்.
தொடர்ந்து மற்றொரு தொலைக்காட்சியில் தயாரிப்பாளராகவும் களமிறங்கி அசத்தி வந்தனர்.
இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக சமீரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். மிக எளிமையான முறையில் சொந்த பந்தங்களுடன் சமீராவின் வீட்டிலேயே இந்த திருமணம் நடந்து முடிந்துள்ளது.
திருமணம் என்ற பெயரில் ஆ டம்பர செலவில்லாமல் அந்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவலாம் என்பதே இதற்கு காரணமாம்.
இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கையில் பார்த்தாலும் கைத்தொலைபேசி காணப்படுகின்றது. இருந்தாலும் இது இன்றை உலகில் ஆ ளை கொ ல்லும் அ ரக்கனாக மாறிவிட்டது.
ஏனென்றால் சமீபத்தில் நடத்தில் ஆய்வொன்றில் கைத்தொலைபேசி மோ கத்தால் பல்வேறு புதிய பா திப்புகள் பரவிக் கொண்டிருப்பதாக நி புணர்கள் எ ச்சரிக்கை செய்துள்ளனர்.
அதில் செல்பி மோ கத்தால் பரவும் ‘செல்பிடிஸ்’, வீடியோ கேம் பிரியர்களுக்கு ‘கேம் டிஸ்ஸார்டர்’, செல்போனை பிரிய நேர்ந்தால் ‘நோமோபோபியா’ மன க லக்கம் என பல்வேறு புதிய பா திப்புகள் முக்கிய இடம் பெறுகின்றனர். அந்தவகையில் தற்போது செல்போன் மோ கத்தால் ஏற்படும் நோ ய்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
மொபைல் எல்போ : ஸ்மார்ட்போன்களின் இயக்கங்களுக்கு பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களை அதிகமாக பயன்படுகின்றது. இதனால் பெருவிரலில் மற்றும் முன்கை, மணிக்கட்டுகளில் அதிக வ லி ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க ஆர்தோபெடிக் அகாடமி இதை மொபைல் எல்போ பி ரச்சினை என்று வரையறுக்கிறது. இது அடுத்தகட்டமாக ‘கார்பெல் டன்னல் சிண்ட்ரோம்’ எனப்படும் ந ரம்பு பா திப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது. இதுபோன்ற பி ரச்சினையை தவிர்க்க தட்டச்சு செய்வதை குறைத்துக்கொண்டு குரல் ‘மெஸேஜ்’ அனுப்புவதன் மூலம் விரல்களுக்கான வேலையை குறைக்கலாம் அறிவுறுத்தி உள்ளனர்.
கேமிங் டிஸ்ஸார்டர் : உலக சுகாதார அமைப்பு செல்போன் விளையாட்டுகள் மற்றும் வீடியோ கேம் விளையாட்டுகளில் மூ ழ்கி உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் ‘கேமிங் டிஸ்ஸார்டர்’ எனும் தீ விர விளையாட்டு ஆ ர்வத்துக்கு உள்ளானவர்கள் என்கிறது . இதனால் தூ க்க கு றைவு, அலுவலக வேலை மற்றும் பொ றுப்புகளில் பி டிப்பின்மை, அன்றாட வாழ்க்கையில் ச லிப்பு கொண்டவர்களாக இவர்கள் காணப்படுகிறார்கள்.
பிளேஸ்டேசன் மற்றும் கன்சோல், வீ.ஆர். போன்ற விளையாட்டு கருவிகளுடன் வீடியோ கேம் விளையாடுபவர்கள் எளிதில் பா திக்கப்படு கிறார்கள் என்று தெரியவருகிறது. அவர்கள் விரைவில் சோ ர்வடைந்துவிடுகிறார்கள். கண்கள், மூட்டுகளில் பா திப்பு ஏற்படுகிறது.
செல்பிடிஸ் : நாட்டிங்கம் டிரென்ட் யுனிவர்சிட்டி ஆய்வாளர்கள், சிலரால் செல்பி எடுக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தவே முடிவதில்லை என்றும், சிலர் அதிகபட்சம் ஒரு நாளைக்கு 6 செல்பிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிடுகிறார்கள் என்றும் மதிப்பிட்டு உள்ளனர்.
பலருக்கு தினசரி ஒரு செல்பி படமாவது சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டும் என்னும் மனநிலைக்கு மாறி உள்ளனர். இல்லாவிட்டால் அவர்கள் க வலையில் தள்ளப்படுகிறார்கள் இத்தகைய தீவிர செல்பி மனப்போக்கை நிபுணர்கள், ‘செல்பிடிஸ்’ பா திப்பு என்று வரையறுக்கிறார்கள்.
டெக்ஸ்ட் நெக் : அளவுக்கு அதிகமாக தலையை சாய்த்து வைப்பது கழுத்து தசை பா திப்புக்கு காரணமாகிறது. அப்போது கழுத்தில் 60 பவுண்ட் அழு த்தம் ஏற்படுவதாக மதிப்பிடுகின்றனர். இது கழுத்து தசைகளில் பிடிப்பு, வ லி ஏற்பட காரணமாகிறது. இந்த பா திப்பு ‘டெக்ஸ்ட் நெக்’ என்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது.
இதிலிருந்து விடுபட கண்களுக்கு நேரான அல்லது சற்று கீழிறங்கிய நிலையில் திரைகளை வைத்து பணி செய்வதும், பார்வையிடுவதும் கழுத்து பா திப்புகள், கண் பா திப்புகளை குறைக்கும் என்று அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
நோமோபோபியா : பயணங்களாலோ அல்லது வேலைச் சூழலாலோ ஒருவருக்கு சிறிது நேரம் செல்போனை பயன் படுத்த முடியாத சூழலை உருவாக்கினால் அவர் ம னக்க லக்கத்திற்கு உள்ளாகுவதுண்டு.
இந்த பா திப்பை ‘நோமோபோபியா’ என்று வரையறுக்கிறார்கள். இந்த வார்த்தை புதிதாக கேம்பிரிட்ஜ் அகராதியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தீவிர மனப்போ க்கு மன அ ழுத்தத்தையும், பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். 53 சதவீத செல்போன் பயன்பாட்டாளர்கள், சிறிது நேர செல்போன் பயன்பாட்டு குறைவு சூழலுக்கும், அதிக க லக்கம் அடைவதாக தெரியவந்துள்ளது.
கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் : கணினிகள், செல்போன் திரைகளை மணிக்கணக்கில் பார்வையிடும் போது கண்களில் ஏற்படும் பாதிப்பை இப்படி அழைக்கின்றனர். குறிப்பாக அதிகமாக எலக்ட்ரானிக் திரைகளை பார்ப்பதனால் கண்கள் உலர்வடைதல், கண் வ லி மற்றும் பார்வைச் சி தைவு ஏற்படுகின்றன.
மேலும் இந்த பி ரச்சினையை எ திர்கொள்ள அவர்கள் 20-20-20-20 என்ற ம ருத்துவ முறையை பின்பற்ற வேண்டும். அதாவது 20 நிமிடத்திற்கு ஒருமுறை, 20 அடி தூரத்தில் உள்ள பொருளைப் பார்த்து, 20 முறை, குறைந்தபட்சம் 20 விநாடிகள் கண்சிமிட்ட வேண்டும் என்பதுதான்.
தமிழகத்தில் அஇஅதிமுக நிர்வாகியின் குடும்ப நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட கட்சி கொடிக் கம்பத்தால் 30 வயது பெண் லொறியில் சிக்கி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் அவினாசி சாலையிலே இவ்விபத்து நடந்துள்ளது. விபத்துக்குள்ளான அனுராதா, கோகுலம் பார்க்கில் பணியாற்றி வருகிறார், நவம்பர் 11ம் திகதி காலை தனது இரு சக்கர வாகனத்தில் பணிக்கு புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அஇஅதிமுக நிர்வாகியின் குடும்ப நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பம் சாலையில் விழுந்துள்ளது. இதைக்கண்ட அனுராதா, கம்பத்தை சுற்றிச் செல்ல முயன்ற போது நிலைதடுமாறி விழ பின்னால் வந்த லொறியில் சிக்கியுள்ளார்.
சம்பவயிடத்தில் இருந்தவர்கள் அனுராதாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். விபத்தில் லொறி அனுராதாவின் இரண்டு கால்கள் மீதும் ஏறியதில் க டுமையான பா திப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 30 வயதான பெண் அனுராதா ஒருவரின் ஊதியத்தை நம்பியே ஒட்டுமொத்த குடும்பமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையில் அனுராதாவிற்கு 7 மணிநேரம் அ றுவை சி கிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், 48 மணிநேரம் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும், அதன் பின் அவருக்கு காலில் ஏதேனும் பா திப்பு இருக்கிறதா என்பது குறித்து தெரியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து என வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், லொறி ஓட்டுநரை கைது செய்துள்ளனர். எனினும், சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், காவல் நிலையத்தில் அனுமதிப் பெற்று தான் அந்த கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் சென்னையில் சுபஸ்ரீ என்ற 23 வயதான பெண், அஇஅதிமுக பேனர் விழுந்து விபத்துக்குள்ளாகி உ யிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அ திர்வலைகளை ஏற்படுத்தியது நினைவுக் கூரதக்கது.