இலங்கையில் வீதிகளில் பயணிக்கும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவ்வாறு பயன்பாட்டில் உள்ள முச்சக்கர வண்டிகளை குறைத்து சிறிய மோட்டார் வாகனங்களை அறிமுகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். தற்போது பயன்பாட்டிலுள்ள Two Stroke இயந்திரங்களை முச்சக்கர வண்டிகளை உரிமையாளர்களிடமிருந்து அரசாங்கம் மீளவும் பெற்றுக் அழிக்கவுள்ளது.
அல்லது பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு மீள் சூழற்சி மேற்கொள்ள வழங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கார்மலை எனும் காட்டுப்புறப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் மாடு மேய்க்கும் கூலித்தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளார் என கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. மேலும் கிருஷ்ணபிள்ளை பஞ்சாயுதம் என்ற 50 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாடுகளை மேய்பதற்காக சென்ற நிலையிலேயே காட்டு யானை தாக்குதலுக்கு இழக்காகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா அரபாநகரில் ஆதரவற்ற இஸ்லாமிய சிறுவர்களுக்கான சிறுவர் இல்லம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானால் நேற்று (18.03) திறந்து வைக்கப்பட்டது.
பல்வேறு இடர்பாடுகளுடன் செயற்பட்டு வந்த குறித்த சிறுவர் இல்லத்தினை வாமி நிறுவனத்தின் அனுசரனையில் நூர் நிறுவனத்தினால் ஏழு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
மௌளவி கே.எம்.அஜாத் தலைமையில் இடம்பற்ற இந்நிகழ்வில் வாமி நிறுவனத்தின் சவுதி தலையைத்தின் உத்தியோகத்தர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், நகரசபை உறுப்பினர் பாரி, வாமி நிறுவனத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் நஜிமான் சாகீப், ஐஎஸ்ஆர்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜனாப் மிகிலார் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பொள்ளாச்சி சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி வருவதையடுத்து தற்போது ஒன்றாக செல்லும் காதல் ஜோடிகள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
குறித்த காட்சியில் இளம் பெண் ஒருவரும் ஆணும் இருசக்கர வாகனத்தில் ஒன்றாக சேர்ந்து கொண்டிருந்த தருணத்தில் பொதுமக்கள் மடக்கி பிடித்து அவர்களை விசாரணை செய்து காணொளியாக வெளியிட்டுள்ளனர்.
இதனால் இனிமேல் வெளியே ஜோடியாக செல்லும் இளம்பெண்களும், ஆண்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் இவ்வாறு சிக்கி பரிதாபநிலைக்குச் செல்ல வேண்டும்.
பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் மகள் பாரிஸ் ஜாக்சன் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Leaving Neverland என்ற ஆவணப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ஆவணப்படத்தில் சிறு வயது குழந்தைகளை மைக்கேல் ஜாக்சன் தவறாக பயன்படுத்தியாக கூறப்பட்டிருந்தது.
இந்த ஆவணப்படத்திற்கு மைக்கேல் ஜாக்சனின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் மைக்கேல் ஜாக்சனின் மகன் பாரிஸ் ஜாக்சன், இந்த ஆவணப்படத்தால் அதிக மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இவர் கை மணிக்கட்டு நரம்பை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அவசர ஊர்தி மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இது பொய்யான தகவல் என பாரிஸ் ஜாக்சன் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஜக்கா ராகவேந்திர நாகராஜு (42). இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்னதாக ஈஸ்வரம்மா (38) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதியினருக்கு வைஷ்ணவி (13 வயது) மற்றும் வரலட்சுமி (12 வயது) என்கிற இரண்டு மகள்கள் இருந்தனர். இருவரும் அருகாமையில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். சில வருடங்களாகவே தம்பதியினர் சொந்தமாக மளிகைக்கடை ஒன்றினை வைத்து நடத்தி வந்தனர். ஆனால் அதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து, கடன் கொடுத்த பலரும் குடும்பத்தினருக்கு அதிக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர்.
கடன்களை அடைப்பதற்காக நாகராஜு கடந்த 3 வருடங்களாக பெங்களூரில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்ய ஆரம்பித்துள்ளார். கிடைக்கும் சமயங்களில் எல்லாம் வீடு திரும்பியுள்ளார். கடனையும் சிறிது சிறிதாக அடைத்து வந்துள்ளார். ஆனால் அதில் பெரிய அளவிற்கு வருமானம் எதுவும் இல்லாத காரணத்தால், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் 10 நாட்களுக்கு முன் வீடு திரும்பிய நாகராஜு, கடனை திருப்பி அடைக்க இன்னும் கால அவகாசம் தருமாறு கடன் கொடுத்தவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
வீட்டிலிருந்து ஒரு மாதிரியான துர்நாற்றம் வருவதை அறிந்த பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர், உடனடியாக கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது நகராஜு தன்னுடைய மகள்களுடன் சடலமாக கிடந்துள்ளார். அதேசமயம் அவருடைய மனைவி ஈஸ்வரம்மா பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததோடு, வேகமாக ஈஸ்வரம்மாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஜேர்மன் நாட்டிற்கு புகலிடம் கோரியுள்ள லெஸ்பியன்கள் மீண்டும் தங்கள் தாய்நாட்டிற்கு திரும்பி சென்றால் உயிருக்கு ஆபத்து என தெரிவித்துள்ளனர். நைஜீரியா மற்றும் உகாண்டாவை சேர்ந்த 48 வயதான Diana Namusoke மற்றும் 27 வயதான Johnson ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர்.
இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டதையடுத்து Diana Namusoke தனது குடும்ப வாழ்க்கை விட்டு தனது தோழியுடன் இணைந்துள்ளார். அந்நாட்டில் இருந்தால் லெஸ்பியன் உறவு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது மற்றும் தங்கள் உயிருக்கு ஆபத்து என கருதி ஜேர்மன் நாட்டிற்கு புலம்பெயர்ந்துள்ளனர்.
புகலிடம் கோரி Federal Office for Migration and Refugees (BAMF) இல் விண்ணப்பித்துள்ளனர். BAMF மற்றும் பெண்களின் மேல் முறையீட்டு உரிமை நீதிமன்றம், இவர்கள் இருவரையும் லெஸ்பியன்கள் என நம்பவில்லை. ஏனெனில் Namusoke மற்றும் Johnson ஆகியோர் “தங்கள் அனுபவங்களைப் பற்றிய இடைவெளியைப் பதிவு செய்யவில்லை, இதனால் இவர்களது புகலிடக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் அவைத் தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன் 2018ம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இன்று வவுனியா கோதண்டர் நொச்சிகுளம் அ.த.க.பாடசாலைக்கு போட்டோபிரதி இயந்திரம்,
புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு போட்டோபிரதி இயந்திரம், இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு பாண்ட் உபகரண தொகுதி, கந்தபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு அலுவலக தளபாடங்கள், கோவில்குஞ்சுக்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு அலுவலக தளபாடங்கள், கற்குழி ஞானம் முன்பள்ளிக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் என்பன வவுனியா மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் து.நடராஜசிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் சந்திரபத்மன், வவுனியா நகரசபை உறுப்பினர் லக்ஸ்சனா நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.
நாட்டின் பல பகுதிகளில் அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல் , சப்ரகமுவ , வடமேல், ஊவா, மத்திய மாகாணங்களில் அடைமழையுடன் கூடிய காலநிலை நிலவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யுமென திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அடைமழை பெய்யும் போது கடும் இடி , மின்னல் தாக்கங்களும் ஏற்படுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஏற்படும் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இந்த காலநிலை நாளை வரை தொடரும் என திணைக்களம் இன்று மாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திஸ்ஸமஹாராம – கதிர்காமம் வீதியில் 7 ஆவது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக் ரக வாகனத்தில் உந்துருளி மோதி நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
திஸ்ஸமஹாராம – கொடிகஹாவெவ பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து இடம்பெற்ற இடத்தில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
வருடத்தில் அந்த இடத்தில் மாத்திரம் 5 பேர் வரை உயிரிழப்பதாக அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே அந்த இடத்தை “உயிர் பலி வளைவு” என பிரதேவாசிகள் அழைக்கின்றனர்.
அளுத்கம – பாதகொட பகுதியில் முச்சக்கரவண்டியொன்றும், பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த யுவதியின் சகோதரர் காயமடைந்து நாகொட மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, அளுத்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் – தலைமன்னார் வீதியில் புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
உந்துருளியொன்றும் பாரவூர்தியொன்றும் மோதி இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது உந்துருளியில் பயணித்த இவரும் பாரவூர்தியின் கீழ் சிக்குண்டிருந்த நிலையில், அப்பகுதியில் இருந்த பிரதேசவாசிகள் இருவரையும் போராடி மீட்டுள்ளனர்.
எனினும் உந்துருளி செலுத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரின் மனைவி சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் மன்னார் – ஆண்டாங்குளம் பகுதியை சேர்ந்த 49 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
கம்பஹா மாவட்டம், சீதுவை பிரதேசத்தில் இயங்கி வரும் மசாஜ் நிலையத்திற்கு சென்ற ஒருவரின் பணத்தை கொள்ளையிட்டதாக கூறப்படும் இரண்டு பெண்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சீதுவை, லியனகாமுல்ல பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையத்திற்கு சென்ற நபரின் பணப் பையில் இருந்து 50 ஆயிரம் ரூபாயை தந்திரமான முறையில் கொள்ளையிட்டுள்ளதாக சீதுவை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கொள்ளையிடப்பட்ட பணத்துடன் இரண்டு பெண்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு, மருதானை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
15 வயதான பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தலவத்துஓயா – குருதெனிய பிரதேசத்தில் இந்த சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மாணவியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்துரட்ட பிரதேசத்தை சேர்ந்த மாணவியை 30 வயதான முச்சக்கர வண்டி சாரதியே கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு, அவர்களின் கடமைக்கு தடை ஏற்படுத்திய 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியாலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு மேற்கொண்டவர்களை கைது செய்வதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். எனினும் , அவர்களின் கடமைக்கு தடை ஏற்படுத்திய சந்தேக நபர்கள் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து பெண்கள் மூவர் உட்பட 5 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அரியாலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பூப்புகார் மயானத்திற்கு அருகே ஆயுதங்களுடன் நின்ற தென்னிலங்கையினை சேர்ந்த ஐவரை இன்று (17.03.2019) அதிகாலை 1 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பூப்புகார் மயானத்திற்கு அருகாமையில் புதையல் தோண்டுவதாக வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மது ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நள்ளிரவில் அலவாங்கு, மண்வெட்டி, கோடாலியுடன் நின்ற தென்னிலங்கையினை சேர்ந்த 32, 35, 43, 48, 54 வயதுடைய ஐவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.