தலவாக்கலை – வட்டகொட, மடக்கும்புர புதிய மிடில் பிரிவில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ள நிலையில், உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை எனவும், வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமடைந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இரண்டு வீடுகளிலும் உள்ள 11 பேர் தற்காலிகமாக அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக இப்பகுதிக்கான மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு, திருத்த பணிகளை மின்சார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் தோட்ட நிர்வாகமும், பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் நகரில் வெட்டப்பட்ட பாம்பின் தலைக்கு உயிர் வந்து இளைஞரை கடித்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் கடந்த மாதம் 27ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் நகரை சேர்ந்தவர் ஜெனீபர் சுட்கிளிப் என்ற பெண்ணின் கணவர் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது குறித்த இளைஞர் செல்லும் பாதையில் சினேக் எனப்படும் கிளுகிளுப்பை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது.அதை பார்த்த அவர் பாம்பின் தலையை வெட்டியுள்ளார். அதை அங்கிருந்து அகற்றி தூக்கிச் சென்றுள்ளர். அப்போது வெட்டிய பாம்பின் தலைக்கு உயிர் வந்து அவரை கொத்தியுள்ளது.
கிளுகிளுப்பை பாம்பின் விஷம் கடுமையானது. அது அவரது உடலில் வேகமாக பரவியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை, அவர் கண் பார்வையை இழந்து விட்டார். உடலில் உள்ள உறுப்புகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவத்தால், சிகிச்சை வழங்கிய வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதுடன், உயிர் பிழைக்க மாட்டார் எனவும் அறிவித்துள்ளனர்.
மூன்று வயது பெண் குழந்தையொன்றை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குழந்தையின் நெருங்கிய உறவினரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மாத்தளை பதில் நீதவான் வசந்தா தர்மகீர்த்தி இன்று குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வீட்டில் இருந்து காணாமல்போன குழந்தையை கிராமவாசிகள் தேடி சென்றபோது அருகில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் சந்தேகநபர் நிர்வாணமாக காணப்பட்டுள்ளார்.
அதேவேளை சற்று தொலைவில் குழந்தை இருப்பதை கிராமவாசிகள் கண்டுள்ளனர். குழந்தை வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த கிராமவாசிகள் சந்தேகநபரை கடுமையாக தாக்கி பற்களை உடைத்துள்ளனர்.
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்ஸவப் பெருவிழா – 2018 விஞ்ஞாபனம்
அம்பிகையின் மஹோற்ஸவப் பெருவிழா 14.06.2018 வியாழக்கிழமை துவஜாரோகணம் (கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் மஹோற்ஸவப் பெருவிழா இடம்பெற்றும்.
18.06.2018 திங்கட்கிழமை 5ம் நாள் இரவு முத்துச்சப்பரத் திருவிழா
20.06.2018 புதன்கிழமை 7ம் நாள் இரவு கைலாசவாகனத்திருவிழா
23.06.2018 சனிக்கிழமை 10ம் நாள் காலை கைலாசவாகனத்திருவிழா
இரவு திருமஞ்சத் திருவிழா
24.06.2018 ஞாயிற்றுக்கிழமை 11ம் நாள் காலை கருட சர்ப்ப பூஜை
இரவு பூந்தண்டிகையில் அம்பாள் எழுந்தருளல்
26.06.2018 செவ்வாய்க்கிழமை காலை கைலாசவாகனத்திருவிழா மாலை சப்பரதத் திருவிழா
யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட பாரிய மோதல் காரணமாக 24 பேர் காயமடைந்துள்ளனர்.
வல்வெட்டிதுறை, நெடியகாடு பிரதேசத்தில் அமைந்துள்ள மைதானத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதல் காரணமாக காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டிதுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெடின்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த மைதானத்தில் தினமும் மாலை கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன
நேற்றிரவு இரு குழுக்களுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு முற்றிய நிலையில் இளைஞர் மீது மற்றுமொரு இளைஞர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இதனால் அங்கிருந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் மோதி கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நீண்ட தூரம் சென்றமையினால் மைதானத்தில் இருந்த மட்டைகள் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் படுகாயமடைந்த 21 இளைஞர்கள் யாழ், ஊரனி வைத்தியசாலையிலும், ஏனைய 3 பேர் பருத்தித்துறை, மந்திகை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் தொடர்பில் ஒருவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொக்குவிலில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், வாள்வெட்டில் ஈடுபட்ட குழுவை சேர்ந்த ஒருவர் அந்தப் பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவொன்றே வாள்வெட்டை நடத்தியுள்ளது. வாள்வெட்டை நடத்திய குழுவை பிரதேச இளைஞர்கள் துரத்திச் சென்ற நிலையில் அந்தக் குழுவில் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதனால் அப் பகுதியில் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்தை நோக்கி பொலிஸார் விரைவதாகவும் யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து, அம்பேபுஸ்ஸ முகாமிற்கு இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் இராணுவ கேர்ணல் ரத்தனபிரிய பந்துவிற்கு அப்பகுதி மக்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் இன்று தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்த பதிவில்,
சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மற்றும் விஸ்வமடு மக்கள் ஆகியோர் கண்ணீருடன் கேர்ணல் ரத்தனபிரிய பந்துக்கு பிரியாவிடை கொடுத்துள்ளனர்.
பாதுகாப்பு படைகளில் வடக்கில் உள்ள மக்களை உண்மையில் நேசிக்கும் அதிகாரிகள் இருப்பதுடன், அவர்களை நேசிக்கும் மக்களும் இருக்கின்றனர்.
இந்த நெகிழ்ச்சி சம்பவம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக தம்புள்ளையை சேர்ந்த நபரொருவர் எனக்கு இந்த புகைப்படங்களை அனுப்பியிருந்தார் என தெரிவித்துள்ளார்.
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா வரும் சனிக்கிழமை 16.06.2018 அன்று மிகவும் பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக இளைஞர்கள் இன்று (10.06.2018) மாபெரும் சிரமதானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை 9 மணிக்கு ஆரம்பித்து இடம்பெற்றுவரும் இச் சிரமதானப் பணி மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளதுடன், பிரதான வீதிகள், ஆலயத்தைச் சூழவுள்ள பகுதிகளை பெருமளவிலான இளைஞர்கள் துப்பரவு செய்து வருகின்றனர்.
இவ்வாறு பிரதேச இளைஞர்கள் முன்வந்து சிரமதானப் பணியில் ஈடுபடுவதை பார்த்த பிரதேச மக்கள் இவ் இளைஞர்களின் முயற்சியை பாராட்டிச் சென்றதை காணமுடிந்தது.
வவுனியா நரசிங்கர் ஆலயத்தின் திருவிழாவின் பெரும்பாலான வேலைகளை பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக இளைஞர்கள் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதேச இளைஞர்களை ஒருங்கிணைத்து நல்வழிப்படுத்தும் முயற்சியில் ஆலயங்கள், விளையாட்டுக்கழகங்கள், சனசமூக நிலையங்கள் ஈடுபடுவது பாராட்டத்தக்கது.
நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், கடுகன்னாவவில் தென்னங் கொப்பு தலையில் வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு கடுகன்னாவ – இலுக்குவத்த, ரம்மலக பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த பெண் ரம்மலக பிரதேசத்தினை சேர்ந்த 45 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது. மேலும், சீரற்ற காலநிலையினால் மக்கள் பெரிதும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், கடுகன்னாவவில் தென்னங் கொப்பு தலையில் வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு கடுகன்னாவ – இலுக்குவத்த, ரம்மலக பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கண்டி நாவலப்பிட்டியில் பெண் வைத்தியர் ஒருவரின் காதலால் விபரீத சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
பெண் வைத்தியர் ஒருவர் இன்னுமொரு ஆண் வைத்தியருடன் மோட்டார் வாகனத்தில் பயணிப்பதனை குறித்த பெண் வைத்தியரின் கணவர் அவதானித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன், அவர்கள் பயணித்த மோட்டார் வாகனத்தை மோதிவிட்டு சென்றுள்ளார்.
பெண் வைத்தியரின் கணவரும் ஒரு வைத்தியராக பயணியாற்றுகின்ற நிலையில், மனைவியுடன் சென்ற வைத்தியருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபரான கணவர் 10000 ரூபா பணமும், 2 லட்சம் ரூபா 2 சரீர பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த 3 வைத்தியர்களும் பலஹிலவ்வ பிரதேசத்தின் வைத்தியசாலையில் ஒன்றாக சேவை செய்பவர்களாகும்.
வைத்தியசாலையில் நீண்ட காலமாக சேவை செய்யும் 47 வயதுடைய வைத்தியரின் 44 வயதுடைய மனைவி திருமணமாகாத வைத்தியருடன் தொடர்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் வைத்தியர்கள் மூவருக்கும் இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் உள்ளது.
சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை மற்றும் அதனை சூழவுள்ள கடற் பிரதேசத்தில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நீடிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
இன்றைய தினம் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும். சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு அதிகமான அடை மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடும் காற்று காரணமாக பல பிரதேசங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குருணாகல் – குடாகல்கமுவ பிரதேசத்தில் 40 வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
நுவரெலியா, ஹட்டன் மற்றும் மாத்தறை பிரதேசங்களில் மரங்கள் விழுந்தமையினால் பல வீதிகளில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் மின்சார தூண்கள் மீது மரங்கள் உடைந்து விழுந்துள்ளமையினால் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் ஆபாச காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதன் காரணமாக பேருந்தில் பயணித்த பெண்கள் உட்பட பயணிகள் பெரும் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
பெண் ஒருவர் குறித்த பேருந்தில் ஏறிய சந்தர்ப்பத்தில் பாலியல் சம்பந்தமான படங்கள் மற்றும் ஆபாசமான காட்சிகள் ஒளிபரப்பாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து குறித்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பேருந்து ஹஸலக பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு சொந்தமானதென கண்டறியப்பட்டுள்ளது.
வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து இன்று (09.02.2018) காலை 10 மணியளவில் சந்தேகநபரொருவர் தப்பியோடியுள்ளார்.
பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபரொருவரை வவுனியா பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற சமயத்தில் குறித்த நபர் தப்பியோடியுள்ளார்.
அவரை கந்தசுவாமி ஆலய வீதி, மில் வீதி, பஜார் வீதிகளில் பொலிஸார் தேடியபோதிலும் சந்தேகநபரை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அமெரிக்காவில் மனிதர்கள் நடமாடும் பூங்கா அருகே 12 அடி நீள முதலையின் வயிற்றில் ஒரு பெண்ணின் முழுக்கைகள் அறுவை சிகிச்சை மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டேவி யில் உள்ள சில்வர் ஏரி ரோட்டரி பார்க் பகுதியில் தனது நாய்களை நடைப்பயிற்சிக்கு கூட்டிக் கொண்டு வந்த பெண்ணை அந்த ஏரியில் இருந்த முதலை நீருக்குள்ளே இழுத்திருக்கிறது.
இதனை நேரில் கண்ட நபர் ஒருவர் உடனடியாக 911 ற்கு அழைத்திருக்கிறார். காலை 9.45 மணி அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகிறது.
உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்ணை காப்பாற்றுவதற்காக தேடிய போது அந்நீரில் முதலை மட்டுமே நீந்தி வருவதையும் பெண்ணை காணவில்லை என்பதையும் அறிந்து கொண்டனர்.
பெண்ணை நீரில் மூழ்கி தேட வேண்டும் என்றால் முதலை அகற்றப்பட வேண்டும் என்பதற்காக அந்த முதலையை வலை வைத்து பார்க் ஊழியர்கள் பிடித்தனர். அப்போது அந்த முதலையை அறுவை சிகிச்சை செய்த போது அதன் வயிற்றில் பாதிக்கப்பட்ட பெண்ணின் முழுக்கை ஒன்று கிடைத்திருக்கிறது. அந்தக் கைகள் பாதிக்கபட்ட பெண்ணின் கைகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்த நபர் கூறுகையில் கைகளில் நாய்கள் வைத்திருந்த பெண் ஒருவரை முதலை நீருக்குள் இழுத்ததை பார்த்தேன். அதன் பின் பெண்ணை காணவில்லை. நாய்கள் ஏரியின் கரையில் நகராமல் ஏரியையே பார்த்து சப்தமிட்டு கொண்டிருந்தன என்று கூறினார். இரண்டு நாய்களில் ஒரு நாய்க்கு முதலையால் கடிபட்ட காயங்கள் உள்ளன.
பாதிக்கப்பட்ட பெண் பெயர் மாட்சுகி எனவும் அவரது வயது 47 எனவும் தெரிய வந்துள்ளது. வெளியூர் சென்றிருக்கும் கணவருக்கு அவசரமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் சம்பவ இடத்தை நோக்கி விரைந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவரது மகனுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாட்சுகியின் மற்ற உறவினர்கள் மற்றும் சகோதரர் பாதிக்கப்பட்ட பகுதியில் நின்று மாட்சுகி பற்றி தகவல் கிடைக்குமா என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மாட்சுகி வழக்கமாக இந்த பார்க்கில் அதிகம் தனது நாய்களோடு தென்படுவார் என்று அங்குள்ளோர் கூறினர். சம்பந்தப்பட்ட முதலையை கடந்த வாரத்தில் இருந்தே பலர் பார்த்துள்ளனர். இருப்பினும் பூங்கார் ஊழியர்களின் கவன குறைவால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்க படுகிறது.
மக்கள் நடமாடும் பார்க்கில் இது போன்ற ஆபத்தான விலங்குகள் வசிப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குழந்தைக்கடத்தல்காரர்கள் என்று தவறாக நினைத்த நபர்களை அடித்தே கொன்ற ஊர் மக்கள். அசாம் மாநிலம் கவுகாத்தியில் அங்லாங் அருகில் உள்ள டோக்மோகோ பகுதியில்தான் மேற்கண்ட சம்பவம் நடந்துள்ளது.
கவுகாத்தியில் குழந்தை கடத்தல்கள் அதிகமாக நடந்த நிலையில் சம்பந்தப்பட்ட பகுதியில்தான் கடத்தல்காரர்கள் நடமாடுவதாக சமூகவலைத்தளங்கள் மூலமாக வதந்திகள் பரவியது.
இந்நிலையில் டோக்மோகோ மிகுதியில் அபிஷித் நாத் எனும் இளைஞரும் நிலோட்ப்பாள் தாஸ் எனும் இளைஞரும் அவர்களது காரில் சென்றிருக்கின்றனர்.
அவர்களை குழந்தைக்கடத்தல் காரர்கள் என நினைத்த ஊர்மக்கள் அவர்களை காரில் இருந்து வெளியே இழுத்து அடித்துள்ளனர். அடி தாங்காமல் ஒரு கட்டத்தில் இவ்விரு இளைஞர்களும் இறந்து விட்டனர். இது சம்பந்தமான வீடியோ காட்சிகளும் தற்போது வெளிவந்துள்ளது.
அதில் ஒரு இளைஞர் நாங்களும் அசாம் வாசிகள் தான் எங்களை அடித்தே கொன்று விடாதீர்கள் என்று கெஞ்சுகிறார். தனது அப்பா அம்மா பெயரை கூறி தங்களை விட்டுவிடும்படி கதறுகிறார்.
ஆனால் உள்ளூர்வாசிகள் தொடர்ந்து தாக்கியதால் அவர்கள் இருவருமே உயிர் இழந்தனர். இந்த சம்பவத்தை அம்மாநில முதலமைச்சர் கடுமையாக கண்டித்ததோடு பொலிஸ் விசாரணையையும் மேற்கொள்ள ஏற்பாடு செய்திருக்கின்றார்.
வதந்திகளை நம்பி அப்பாவி மக்களை கொல்வது வாடிக்கையாகவே ஆகிவிட்டது. கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பொறியாளர் எனவும் மற்றவர் வியாபாரி எனவும் தெரிவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.