வைகாசி நிலவு : வற்றாப்பளை கண்ணகி அம்மன் சிறப்புக் கவிதை!!

பாண்டிய மன்னனின்..
பிழையான தீர்ப்பினால்
மதுரையை எரித்துவிட்டு – தல
தரிசனங்களின் தொடர்ச்சியாய்..
பத்தாவது இடத்தில்
பக்குவமாய் இருந்ததால்..
பத்தாப்பளையென்று
பெயரெடுத்தது நந்திக்கடலோரம்..
கற்புக்கரசி கண்ணகிக்கு
கோயிலுங் கண்டது.

நந்திக்கடலோரத்தில்
தண்ணியெடுத்துப்
பொங்கிநின்ற தனையனிடம்..
தலைகடிக்கிறது ஓர்தடவை
பார்மகனே என்றாளாம்.
பார்த்தவன்..
பதறியடித்து விழி
பிதுங்கி நின்றானாம்.
தலையெல்லாம் ஆயிரங் கண்கள்.
அதனால்த்தானே நாம்….
கண்கள் கொண்ட மண்பானையில்
கற்புரம் ஏற்றுகிறோம் – எம்
சீமாட்டி திருவருளால்
திருக்கோவிலும் அமைத்துள்ளோம்.

ஆரம்பத்தில்…
மடாலயமிது – இன்று
குருக்கள் முறைகொண்டு
கோபுர வாசலுடன்
வானுயர்ந்து நிற்கிறது
வாழ வழி தருகிறது.

ஆண்டு தோறும்
தொடர்ந்து வரும்
பங்குனித் திங்கள்களில்..
எண்ணில்லா மணிகளுடன்
மஞ்சத்தின் மீதேறி
பவனியுலா வருகிறாள்
பார் காத்து நிற்கிறாள்.

வருடா வருடம் கண்ணகிக்கு
வைகாசி விசாகத்தில்
வளர்ந்து நேர்ந்த திருக்குளிர்த்தி.
வைகாசி மாத
வளமான காற்றுடன்..
நளினம் பாடும்
நந்திக்கடலின் ஓசையுடன்..
மானிடத்து மேன் மகளுக்கு
மகத்தான திருக்குளிர்த்தி.

எங்குமில்லா..
உண்மையொன்று
இங்குள்ளது.
வைகாசியில் வரும்
ஓர் திங்கள்..
பாக்குத் தெண்டலெடுத்து
மறு திங்கள்..
பெருங்கடல்த் தீர்த்தமெடுத்து,
காட்டா வினாயகரில் – ஏழு
நாட்கள் காத்திருந்து,
விசாகத்திங்களன்று…
உலகிற்கே ஒளி கொடுக்கும்
உப்பு நீர்த்தீபம்
பக்குவமாய் எரிகிறது
பத்தாப்பளையில் எரிகிறது.

முழுக்குடம் எடுத்தாலென்ன..
அரைக்குடம் எடுத்தாலென்ன..
எடுத்த குடம் எரிகிறது..
திருக்குளிர்த்தி முடியும் வரை.

இவளுக்கென்றொரு கூத்தும்
இருக்கிறது எம்மவரிடம்..
கண்ணகி நாடகம்
கண்ணகி வழக்குரை
சிலப்பதிகாரம் – என்றெல்லாம்
சொல்லப்படும்..
கோவலன் கண்ணகி கதை
ஈரடி, மூவடி..
வட மோடி, தென் மோடி – பாங்கின்றி
” முல்லை மோடி” எனும்
மான்புப் பெயர்தாங்கி..
தனித்துவமாய் தரணியிலே
அம்மனிவள் முற்றத்திலே
பத்துக்கம்பம் கொண்ட
வெள்ளைகட்டி..
வட்டக்களரி அமைத்து
தீப்பந்த வெளிச்சத்தில்
நேர்த்தி வைத்து
பொங்கல் முடித்து
”கோவலன் நாட்டுக் கூத்து”
ஆடப்பட்டு வருகிறது..
பழைமை
பேணப்பட்டும் வருகிறது.

நீதிக்காய் கோபங்கொண்டு
மதுரையை எரித்தவள்
எம்மையும் விடுகிறாளா..?
திருக்குளிர்த்தி
திருப்தி அளிக்காவிடில்
சின்னம்மை
பெரியம்மையென்று
அக்கினியை எம் மீது
அள்ளி வீசுகிறாள்.
அசைவம் விலக்கி
வேப்பிலை தடவி
நேர்த்தி வைத்து
வேண்டிக் கொண்டால்
வேதனை தராது
விலகியே போயிடுவாள்.

முல்லைக்கொரு
நங்கையாயிருந்த..
நந்திக்கடலோர ஆச்சிக்கு
பொங்கிப் படையலிட..
பெருங்கடல் அலையாய்
பக்தர்கள் வருவாரே..
முக்தி நெறி பெறுவாரே..

உலகினில்..
இதுவுமோர் அற்புதம்.
பத்தாப்பளை..
பக்தியின் உறைவிடம்.

– வே. முல்லைத்தீபன்-

வவுனியா நகரில் கடை உடைக்கப்பட்டு திருட்டு!!

வவுனியா ஹொரவப்பொத்தான வீதி இறம்பைக்குளம் பகுதியில் உள்ள கடையொன்றினை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

நேற்றைய தினம் வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த கடையினை உடைத்து 80000 ரூபா பணம் மற்றும் மடிக்கணினி ஒன்றும் களவாடப்பட்டுள்ளது. குறித்த பகுதியிற்கு விரைந்த தடகவியல் பொலிஸார் மற்றும் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினர் மோப்பநாய் மூலம் கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர்.

நேற்றுமுன்தினம் (26.05) இரவுவேளையே கடையுடைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், வவுனியா நகரில் ஒருவார காலத்திற்குள் நடந்த இரண்டாவது கொள்ளை சம்பவம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உயிராபத்துடன் விளையாடும் சிலரின் அதிர்ச்சிப் புகைப்படங்கள்!!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் தற்போதும் மழை பெய்து வருவதால் ஆபத்தான நிலை நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

அடைமழையைத் தொடர்ந்து நீர்த்தேக்கங்களின வான் கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதனை அறிந்து கொள்ளாத சிலரின் அறியாமை குறித்து புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள கொட்டுகச்சி, கச்சிமடுவ நீர்த்தேக்கத்தின் மதில் மீது நின்று, சிலர் மீன் பிடித்துள்ளனர்.

குறித்த பகுதி ஆபத்தான பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அதனை கருத்திற் கொள்ளாமல் நீரில் அடித்துச் செல்லும் மீன்களை பிடிப்பதற்கு சிலர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு தன்னுயிரை மாய்ந்த மாணவன்!!

யாழ்ப்பாணத்தில் ஆடம்பரத்திற்காக மிகவும் விலை உயர்ந்த கையடக்க தொலைபேசி வாங்கிக் கொடுக்க மறுத்தமையினால் மாணவன் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

நீர்வேலி தெற்கைச் சேர்ந்த 17 வயதான கிருஸ்ணபிள்ளை கோபு என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி தாயாரிடம் இலட்ச ரூபா பெறுமதியான தொலைபேசியை வாங்கித் தருமாறு கோரியுள்ளார். எனினும் அதற்கு தாய் மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் அறைக்குள் சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

தூக்கில் தொங்கிய மகனை உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் சேர்ந்த போதும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவனின் குடும்பத்தார் கமத்தொழிலில் ஈடுபடுகின்றனர். அவரிடம் ஏற்கனவே இரண்டு தொலைபேசிகள் உள்ளதாகவும், இறப்பு விசாரணையின்போது கூறப்பட்டுள்ளது.

மரண விசாரணையை, திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

உலக சாதனையாளர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழரின் புதிய முயற்சி!!

60இற்கும் மேற்பட்ட உலக சாதனைகளை படைத்து, உலக சாதனையாளர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழரான சுரேஷ் ஜோக்கிம் “உலக சமாதானத்திற்கான மரதன்” என்ற கருப்பொருளில் பல நாடுகளை கடந்து லண்டனை வந்தடைந்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் கிருஸ்மஸ் தினத்தன்று பெத்லகேமிலிருந்து ஆரம்பித்த அவரது பயணத்தின் தொடர்ச்சி கடந்த 26ஆம் திகதி லண்டனில் இடம்பெற்றுள்ளது.

இதன்மூலம் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட யுத்த அழிவுகளை உலகின் முன்கொண்டு வரும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுரேஷ் ஜோக்கிம், வறுமை, நோய், யுத்தம் இல்லாத உலகம் எனும் உயரிய நோக்கங்களுக்காக இந்த மரதன் ஓட்டப்போட்டி மூலம் உலகின் கவனத்தினை ஈர்க்க கடும் சவால்கள் மத்தியில் உலகின் 72 நாடுகளில் தன் பயணத்தினை மேற்கொண்டுள்ளார்.

பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தன் பயணத்தை தொடரும் சுரேஷ் அடுத்ததாக அயர்லாந்தில் மரதன் ஓட்டத்தினை நாளை முன்னெடுப்பதோடு பின் தென் அமெரிக்காவின் சிலி (CHILE) நாட்டிலிருந்து அமெரிக்காவின் பல நகரங்களில் பயணித்து இறுதியில் செப்டெம்பரில் கனடாவில் தனது உலகப் பயணத்தை பல்லாயிரம் மக்கள் மத்தியில் முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.

வவுனியா நெளுக்குளம் பகுதியில் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன் பொலிசில் சரண்!!

வவுனியா நெளுக்குளம் பகுதியில் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன் பொலிசில் சரணடைந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்..

வவுனியா நெளுக்குளம் குழுமாட்டு சந்தி பகுதியில் உள்ள ஒருவர் தனது மனைவியை  கத்தியினால் வெட்டிய பின் நெளுக்குளம் பொலிஸாரிடம் சரண்டைந்துள்ளார்.

கணவன் வெட்டியதில் படுகாயமடைந்த மனைவி வவுனியா பொதுவைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் இன்று காலை (28.05.2018) இடம்பெற்றுள்ளது மேலும் இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உனக்கு அவ்வளவு திமிரா : பிரபல நடிகை சங்கீதாவை திட்டிய பிரபல இயக்குனர்!!

விஜய்யின் டான்ஸ்க்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் நடிகை சங்கீதாவின் டான்ஸ்க்கு தீவிர ரசிகராம். இருவருக்கும் இடையே குடும்ப உறவு போன்ற நல்ல நட்பு.

சங்கீதா தெலுங்கில் மிக உச்சத்தில் இருந்த நேரம். அப்போது தான் இயக்குனர் பாலா எடுத்த பிதாமகன் படத்தில் கஞ்சா வியாபாரியாக நடித்திருந்தார்.

முதலில் அவருக்கு வாய்ப்பு வந்த போது கையில் 8 படங்கள் இருந்ததால் திகதி கொடுக்க முடியாமல் சங்கீதா பிதாமகன் படத்தை வேண்டாம் என சொல்லிவிட்டார்.

ஆனால் முதலில் அவருக்கு பதிலாக பல நடிகைகள் நடிக்க வைத்து பார்த்திருக்கிறார்கள். ஆனால் யாரும் அந்த கஞ்சா வியாபாரி கதாபாத்திரத்திற்கு செட்டாகவில்லை.

எதேச்சையாக படப்பிரச்சனையால் ஃபிரீயாக இருந்த சங்கீதா மறுமுறை இயக்குனர் பாலாவை நலம் விசாரிக்க உடனடியாக கிளம்பி மதுரைக்கு வா என சொல்லிவிட்டாராம்.

பின் இவரும் அங்கு செல்ல மேக்கப் போட்டு நடிக்க வைத்திருக்கிறார்கள். அது ஓகே ஆக இது ரியல் அல்ல ட்ரையல் என சொல்லி பாலா அதிர்ச்சி கொடுத்தாராம். படத்தில் நீங்க தான் நடிக்கனும் என சொல்லிவிட்டாராம்.

ஆனால் அதற்கு முன் சங்கீதா படத்தின் கதை பற்றி கேட்ட போது, உனக்கு எவ்வளவு திமிரு? என்கிட்டயே கதை கேட்கிறாய் என நேரடியாகவே உரிமையுடன் கேட்டுவிட்டாராம்.

பிரான்சில் 4 வயது குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஹீரோ : குவியும் பாராட்டுக்கள்!!

 

பிரான்சில் அடுக்கு மாடிக் கட்டிடத்தின், நான்காவது மாடியில் தொங்கிக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் Rue Marx-Dormoy பகுதியில் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த சனிக்கிழமை 4 வயது குழந்தை ஒன்று நான்காவது மாடியில் அழுத நிலையில் தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது இதைக் கண்ட Mamoudou Gassama(22) என்ற இளைஞர் உடனடியாக, அதவாது 30 நொடிகளில், ஒரு ஸ்பைடர் மேன் போன்று, கட்டத்தின் மீது ஏறிச் சென்று குழந்தையை காப்பாற்றியுள்ளார்.

இது தொடர்பான காட்சியை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இது குறித்து உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கையில், இந்த சம்பவத்தின் காரணமாக Mamoudou Gassama-வுக்கு உடலில் ஆங்காங்கே சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தையின் அப்பா வெளியில் ஷொப்பிங் சென்ற போதே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தை எப்படி அங்கே வந்தது, என்பது குறித்து சரிவர தெரியாத காரணத்தினால் பொலிசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகனை வரவழைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெற்றோ ர்: உருக்கமான கடிதம் சிக்கியது!!

தமிழகத்தில் மகனை வரவழைத்துவிட்டு, கடன் தொல்லை தாங்க முடியாமல் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கே.கே.நகர் அய்யப்ப நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (62). வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வரும் இவருக்கு லீலா என்ற மனைவியும், ராஜேஷ் என்ற மகனும் உள்ளனர்.

ராஜேஷ் இன்ஜினியரிங் முடித்த நிலையில், தற்போது ஐ.ஏ.எஸ் போட்டித் தேர்வுக்காக சென்னையில் தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால், வெங்கடேசன் மிகுந்த வேதனையில் இருந்துள்ளார்.

அதுமட்டுமின்றி தொழிலுக்காக வாங்கிய கடன்களையும் கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து வெங்கடேசன் மனைவியுடன் தற்கொலை செய்து கொள்வதற்கு முடிவு எடுத்துள்ளார்.

அதன் பின் சென்னையில் இருக்கும் ராஜேசிடம் போனில் தொடர்பு கொண்டு, பழனி கோவிலுக்கு போக வேண்டும் என்று கூறி வரவழைத்துள்ளனர்.

இதன் காரணமாக நேற்று முன் தினம் இரவு வந்த ராஜேஷ் வீட்டின் கதவை பூட்டிருப்பதை பார்த்துவிட்டு, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார்.

அப்போது தந்தை வெங்கடேசன், தாய் லீலா இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதுள்ளார்.

இதைக் கேட்டு அக்கம், பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் அவர்கள் வீட்டில் கடிதம் ஒன்று இருப்பதை பொலிசார் கண்டுள்ளனர். அதில், எங்களது உடல்களை மீண்டும் இந்த வீட்டிற்கு கொண்டு வர வேண்டாம்.

நாங்கள் இறந்ததை உறவினர்கள் யாருக்கும் சொல்ல வேண்டாம் என மிகுந்த வேதனையுடன் எழுதியுள்ளனர்.

கை, கால்கள் கட்டிப் போட்டு இளைஞர் கொடூர முறையில் கொலை!!

தமிழகத்தில் இளைஞர் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு கொடூர முறையில் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரமாவட்டம், செங்கல்பட்டு பெரியநத்தம் மும்மலைப் பகுதியில் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கழுத்தறுத்து இறந்து கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த பொலிசார், கொலை செய்யப்பட்டு கிடந்தது, தட்டான்மலை தெருவை சேர்ந்தவர் உமாபதி மகன் தான் நவீன்குமார்(18) என்பது தெரியவந்துள்ளது.

10-ஆம் வகுப்பு படித்துவிட்டு, நண்பர்களுடன் சேர்ந்து போதைக்கு அடிமையாகி கஞ்சா புகைப்பது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்ட வந்த நவீன்குமார் மீது, ஏற்கனவே அடிதடி வழக்குகள் உள்ளதால், முன்விரோதம் காரணமாக யாரேனும் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் நவீன்குமாரை கை, கால்களை கட்டி முகம், கழுத்து, தலை, பிறப்பு உறுப்பு உள்ளிட்டவைகளை கொடூரமாக அறுத்து கொலை செய்துள்ளதால், இது கள்ளக்காதல் விவகாரமாக கூட இருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பிரதேச ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு!!

யாழில் பிரதேச ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்கானவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.கொழும்புத்துறை துண்டிப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (28) அதிகாலை 4.30மணியளவில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோப்பாய் பகுதியைச் சேர்ந்த செல்வராசா ராஜேந்திரன் (வயது 56) என்பவர் மீதே வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது.

யாழில் சட்டவிரோத கேபிள் இணைப்புக்கள் செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழில் இருந்து இயங்கும் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் துணை பத்திரிகை நிறுவனமான காலைக்கதிர் பத்திரிகையின் ஊடகவியலாளரும், பத்திரிகை விநியோகத்தருமான இவர் இன்று அதிகாலை 4.30 கொழும்புத்துறை துண்டிப் பகுதிக்கு பத்திரிகை விநியோகிப்பதற்காக வந்துள்ளார்.

இதன்போது, 5 மோட்டார் சைக்கிளில் 10 ற்கும் மேற்பட்டவர்கள் வந்து கோடரி மற்றும் வாள்களினால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அதன்போது உயிருடன் விட்டால் தப்பு என்றும் வயரினாலும் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கானவர் சம்பவ இடத்தில் இருந்து கத்திய போது, வாள்வெட்டுக்காரர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கானவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கானவர் 3 பிள்ளைகளின் தந்தையார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேருந்துகளில் பயணிப்போருக்கு மிக முக்கிய அறிவிப்பு!!

மீதிப்பணம் அல்லது பற்றுச்சீட்டு வழங்காத பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் தொடர்பில் அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு தமது ஆணைக்குழு தயாராக உள்ளதாக ஆணைக்குழுவின் மேல் மாகாண சபை தலைவர் துசித குலரத்ன தெரிவித்துள்ளார்.

உரிய விலையை விடவும் அதிக கட்டணம் அறிவிடும் பேருந்து தொடர்பில் அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்தால் 0115559595 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

53 இளைஞர்கள் 8 யுவதிகளுடன் கொண்டாடிய பிறந்தநாள் : சுற்றிவளைத்துப் பிடித்த பொலிஸார்!!

சட்டவிரோதமான போதைப்பொருட்களை பாவித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 53 இளைஞர்களையும் 8 யுவதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெயங்கொடை நகரில் நேற்று முன்தினம் (26.05) காலை குடிபோதையில் விபத்துக்குள்ளான மோட்டார் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

குறித்த நபரிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து வெயங்கொடை நகரில் உள்ள விடுதியொன்றில் சட்டவிரோதமான போதைப்பொருட்களை பாவித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 53 இளைஞர்களையும் 8 யுவதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நண்பருடைய பிறந்த நாள் கொண்டாட்டங்களில் இவ்வாறு போதைப்பொருள் பாவித்ததாக குறித்த இளைஞர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெயங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாள் ஒன்­றுக்கு 22,000 சிறு­வர்கள் பட்­டி­னியால் உயிரிழப்பு : அதிர்ச்சியூட்டும் ஆய்வு!!

உலக சனத்­தொ­கையில் நாள் ­ஒன்­றுக்கு ஒரு பில்­லியன் சிறு­வர்கள் உண­வின்றி பட்­டி­னியால் வாடு­வ­துடன் நாள் ஒன்­றுக்கு 22000 சிறு­வர்கள் பட்­டி­னியால் உயி­ரி­ழப்­ப­தாக சர்­வ­தேச நிறு­வ­ன­மொன்று மேற்­கொண்ட ஆய்வில் தெரி­ய­வந்­துள்­ளது. குறித்த ஆய்வில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

சர்­வ­தேச அளவில் 2754 பெரும் செல்­வந்­தர்கள் இருக்­கின்­றார்கள். அவர்கள் உலகின் 9.2 ட்ரில்­லியன் அமெ­ரிக்க டொலர் பணத்தில், ஒன்­பது கோடி இரு­பது இலட்சம் அமெ­ரிக்க டொலர்­களை உரி­மை­யாக வைத்­தி­ருக்­கின்­றார்கள். இவர்­களின் சொத்து 2016 ஆம் ஆண்­டை­விட 24% அதி­க­ரித்­துள்­ளது.

இந்த 2754 பேரில் 680 பேர் அமெ­ரிக்­கவைச் சேர்ந்­த­வர்கள். 90 பேர் ஆசியாக் கண்­டத்தைச் சேர்ந்­த­வர்கள். சுமார் 730 கோடி உலக சனத்­தொ­கையில் 1% செல்­வந்­தர்­க­ளிடம் சர்­வ­தேச பணம் 82% நிரம்­பி­யி­ருக்­கின்­றமையும் குறிப்பிடதக்கது.

சந்திரனில் 31 மணிநேரம் நடமாடி சாதனை படைத்த விண்வெளி வீரர் மரணம்!!

சந்திரனில் கால் பதித்து நடந்து சாதனை படைத்த 12 விண்வெளி வீரர்களில் ஒருவர் ஆலன் பீன். கடந்த 1969ம் ஆண்டில் சந்திரனுக்கு நாசா அனுப்பிய விண்கலத்தில் பயணம் செய்து, நிலாவில் கால் பாதித்த உலகின் நான்காவது விண்வெளி வீரர் என்ற பெருமையை தட்டிச் சென்றார்.

மேலும், சந்திரனில் 31 மணி நேரம் நடமாடி சாதனைப் படைத்தார். லன் பீன் கடந்த சிலமாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அமெரிக்காவின் ஹூஸ்டன் மருத்துவமனையில் கடந்த 2 வாரக் காலமாக சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி ஆலன் பீன் நேற்று காலமானார்.

இலங்கையின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியல்!!

 

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் முதல் 5 பணக்கார வீரர்களின் பட்டியல் இதோ

லசித் மலிங்க : இலங்கை கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ஆவார்.

லசித் மலிங்கவின் நிகர மதிப்பு மற்றும் ஐபிஎல்லில் அவரது சம்பளம் ஆகியவற்றினை அடிப்படையாக வைத்து அவரது சொத்து மதிப்பு 8.5 மில்லியன் டொலர் ஆகும்.

2016 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டியில் இவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் 1 மில்லியன் டொலர் ஆகும்.

அஞ்சலோ மத்தியூஸ் : இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் ஆவார். இவர், Samsung, Hewlett-Packard மற்றும் Ceylon Cold Stores ஆகியவற்றின் தூதுவராக இருந்துள்ளார்.

இவர் சமீபத்தில், Elephant House brand of Ice Creams – யின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவரது சொத்து மதிப்பு 7 மில்லியன் டொலர் ஆகும்.

ரங்கன ஹேரத் : இலங்கை கிரிக்கெட் அணியில் முத்ததையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக மிகச்சிறந்த பந்துவீச்சாளராக திகழ்கிறார்.

விளம்பர தூதுவர், ஒரு போட்டிக்கு விளையாட இவர் வாங்கும் சம்பளம் ஆகியவற்றின் அடிப்படையில் இவரது சொத்து மதிப்பு 5.3 மில்லியன் டொலர் ஆகும்.

தினேஷ் சந்திமல் : இவரின் ஒரு வருட சம்பளம் 600,000 டொலர் ஆகும். மேலும், பல்வேறு ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ள இவர் விளம்பரங்கள் மூலமாகவும் வருமானம் ஈட்டியுள்ளார். இவரது சொத்து மதிப்பு 4 மில்லியன் டொலர் ஆகும்.

அஜந்த மெண்டிஸ் : பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உள்ளார். சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தியதன் மூலம் இவரது வருவாய் அதிகரித்தது. இவரது சொத்து மதிப்பு 4.2 மில்லியன் டொலர் ஆகும்