வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்தில் குறுக்காக நின்ற பாரஊர்தியால் வாகன நெரிசல்!!

 
வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே இன்று (05.05.2017) பிற்பகல் 4 மணியளவில் பாதையின் குறுக்கே பாரவூர்தி நின்றதனால் பாரிய வாகன நெரிசல் காணப்பட்டது.

கண்டி வீதியுடாக யாழ் நோக்கி பயணித்த எரிபொருள் பாரவூர்தியில் ஏற்ப்பட்ட இயந்திர கோளாறு காரணமாக வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே தரித்து நின்றது. இதனால் அவ்விடத்தில் பாரிய வாகன நெரிசல் காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது வாகனத்தின் இயந்திரத்தின் ஏற்ப்பட்ட பழுதினை திருத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களின் தொடர் போராட்டம்!!

 
வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 1994ம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வந்த 51 சுகாதார தொண்டர்கள் நேற்று (04.05.2017) பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்து இன்று (05.05.2017) இரண்டாவது நாளாகவும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாம் கடமையாற்றி பல உயிர்களை காப்பாற்றிய எங்களுக்கு நியமனம் இல்லையா?, நீண்ட காலமாக சேவை ஆற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா?, வெயில் மழை பாராமல் ஊதியம் இல்லாமல் கடமையாற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா?, வவுனியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்திய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா? என பல்வேறு பதாதைகளை தாங்கியபடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை போராட்டத்தினை தொடரவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வவுனியா பஸ் நிலையத்தில் அனாதரவான நிலையில் நின்ற சிறுவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில்!!

 
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (05.05.2017) மதியம் தனியாக நின்ற சிறுவன் ஒருவனை பேருந்து நிலைய நேரக்கணிப்பாளர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் தனியாக நின்று அழுதுகொண்டிருந்த சிறுவன் ஒருவனை வவுனியா சாலையின் இ.போ. ச நேரக்கணிப்பாளர் அழைத்து விசாரித்தபோது வீடு செல்வதற்கு செட்டிகுளத்திலிருந்து தனியார் பேருந்தில் வந்துள்ளதாகவும் தனது பெயர் மயில்வாகனம் சுகாதாரன் 10 வயது எனவும் கிளிநொச்சி அக்கராஜன்குளம் என்று தெரிவித்தார்.

குறித்த சிறுவன் தற்போது பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவில் ஒப்படைக்கப்பட்டள்ளார். சிறுவனைப்பற்றிய தகவல் தெரிந்தால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தொடர்பு கொள்ளவும்.

வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!

 
மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக வவுனியா வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இன்று (05.05.2017) காலை 8 மணி தொடக்கம் நாளை காலை 8 மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு முழுமையாக இயங்கவில்லை.

40 வயதுக்குள் நீங்கள் கட்டாயம் அனுபவித்து விட வேண்டிய விடயங்கள் எவை தெரியுமா?

சொந்தக் காலில் நில்

அப்பா, அம்மா, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும்.

நால்வருக்கு உதவ வேண்டும் என்பதில்லை, யாருடைய உதவியும் இன்றி வாழ்வது என்பதே ஓர் பெரிய கெளரவம் தான்.

உலகம் சுற்றும் வாலிபன்

குறைந்தபட்சம் சிங்கபூர், மலேசியாவாவது சென்று வந்துவிட வேண்டும். புது இடம், புதிய கலாச்சாரம் உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள, புத்துணர்ச்சி அடைய பெருமளவு உதவும்.

பேரார்வம்

பேரார்வம் என்பது உங்கள் வேலையை குறிப்பது. ஆரம்பத்தில், வேலை வேண்டும் என்பதற்காக ஏதாவது வேலையில் சேர்ந்திருக்கலாம். ஆனால், 30 வயதுக்குள்ளாவது உங்களுக்கு பிடித்த துறை / தொழில் / வேலையில் சேர்ந்துவிட வேண்டும்.

தோல்வி

தோல்வியில் கற்காத பாடத்தை நீங்கள், வேறு எங்கும் கற்க முடியாது. தோல்வி உங்களை ஒழுங்குப்படுத்தும் ஆசான்.

ஓர் தோல்வியையாவது நீங்கள் சந்தித்துவிட வேண்டும். இல்லையேல், 30 வயதை கடந்த வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை கையாள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படலாம்.

முதலீடு

சம்பாதித்த பணத்தை, வருமானம் ஈட்டும் வகையில் எதிலாவது முதலீடு செய்து வைத்துவிட வேண்டும். அதை செலவு செய்யாமல், வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டும்.

தீய பழக்கம்

ஏதேனும் ஒரு கெட்டப் பழக்கத்தையாவது 30 வயதுக்குள் நிப்பாட்டி விட வேண்டும். புகை, மது, கெட்ட வார்த்தை பேசுதல், பெண்மையை கொச்சையாக எண்ணுதல் என எதையாவது ஒன்றையாவது.

எந்த கெட்டப் பழக்கமும் இல்லையா?. நீங்களே உங்களுக்கு ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், தூய நல்லவர்களை இந்த உலகம் கேலி கிண்டல் தான் செய்யும்.

உண்மையான நட்பு

எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும், உங்கள் அருகில் நின்று தோள் கொடுக்க ஓர் தோழமை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான தோழமை அமைத்துக் கொள்ள வேண்டும்.

பிடிக்காவிடில் பிரிவு

ஓர் நபருடன் பழகுவது பிடிக்கவில்லையா, உங்கள் சுற்றதிர்காகவும், அலுவலக நண்பர்களுக்காகவும் விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்களா?. வேண்டவே வேண்டாம். முற்றிலுமாக பிரிந்துவிடுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நல்லது நினைக்கும் நபர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு இனி நீங்கள் பயணம் செய்வது தான் நல்லது.

சேமிப்பு

பெரும்பாலும் 30 வயதை கடக்கும் போது, சிலர் திருமணம் ஆகியும், சிலர் குழந்தை குட்டி என இருப்பார்கள். எனவே, அடுத்த தலைமுறைக்கான சேமிப்பை அளவிற்கு குறையாமல் எடுத்து வைக்க வேண்டும். இது உங்களுடைய கடமை.

கைதேர்ந்தவர்

நீங்கள் செய்யும் பணியில் நீங்கள் கைதேர்ந்தவர் என்ற நற்பெயருடன் விளங்க வேண்டும். அட, அவரு கிட்ட இந்த வேலைய கொடுங்க, சரியா செய்வார் என நால்வர் கூற வேண்டும்.

ஆராய்ந்து செயல்படுதல்

கனிமங்களை ஆராய தெரிந்தவர்கள் தான் ஆராய்ச்சியாளர்கள் என்றில்லை. மனிதர்களை ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

நேரம் பொன் போன்றது

நேரத்தை அளந்து செலவு செய்ய வேண்டும். 30 வயதுக்கு மேல் நேரத்தை வீண் விரயம் செய்வது, உங்கள் வாழ்க்கையில் பெரும் இழப்பாக அமையும்.

 

நீங்களாக இருங்கள்

மற்றவர்களுக்காக உங்களை மாற்றி அமைத்துக் கொண்டு வாழ தேவையில்லை. நீங்கள் நீங்களாக வாழ வேண்டிய தருணம் இது.

படிப்பில் உயரம்

உங்கள் துறை சார்ந்த படிப்பில், முழுமை அடைந்திருக்க வேண்டும். பி.எச்.டி முடித்தால் முழுமை என்றில்லை. இன்றைய அப்டேட் என்ன என்று அறிந்து வைத்திருந்தாலே போதுமானது.

17 வருடங்கள் உண்ணாவிரதம் இருந்த பெண் பிரித்தானிய காதலரை மணக்கிறார்!!

மணிப்பூரில் ராணுவ சிறப்பு சட்டத்தை நீக்க வலியுறுத்தி 17 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த இந்தியாவின் இரும்பு பெண் பிரித்தானியாவை சேர்ந்த தனது காதலரை மணக்கவுள்ளார்.

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் இரோம் சர்மிளா (45). இரும்பு பெண்மணி இவர் மணிப்பூரில் ராணுவ சிறப்பு சட்டத்தை நீக்க வலியுறுத்தி 17 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

சமீபத்தில் நடைபெற்ற மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட சர்மிளா படுதோல்வியடைந்தார்.

இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக சர்மிளா பிரித்தானியாவை சேர்ந்த டெஸ்மெண்ட் கவுடின்கோ (54) என்னும் நபரை காதலித்து வந்தார்.

தற்போது அவரை திருமணம் செய்து கொள்ள சர்மிளா முடிவெடுத்துள்ளார். சமீபத்தில் பிரித்தானியா செல்வதற்காக சர்மிளா பாஸ்போர்டுக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.

ஆனால், சில காரணங்களால் அவருக்கு பாஸ்போர்ட் கிடைக்கவில்லை. இதனால், தனது திருமணத்தை கேரளாவில் நடத்த சர்மிளா முடிவெடுத்துள்ளார். இதற்காக டெஸ்மெண்ட் விரைவில் இந்தியா வரவுள்ளார்.

வைரலாகும் இளைஞரின் தற்கொலை வீடியோ!!

சென்னையில் நபர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் கடைசியில் கொமடியில் முடிந்துள்ளது.

சென்னை அடையாற்றுப் பாலத்து மேல் நேற்றிரவு 11 மணியளவில் திடீரென இளைஞர் ஒருவர் பாலத்தின் மேல் ஏறி அடையாற்றில் குதித்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இளைஞரின் இந்த செயலை பார்த்த அருகில் அங்கு கூட்டமாக கூடினர். ஆனால், தமிழ்நாட்டில் நிலவி வரும் வறட்சியால் ஆற்றில் முட்டியளவு மட்டுமே தண்ணீர் இருந்துள்ளது.

இதனால், இந்த இளைஞரின் தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இந்தக் காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துப் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிரான்ஸ் அழிந்து விடும் : உலகின் அதிபயங்கர ஏவுகணையை தயாரித்துள்ள ரஷ்யா!!

உலகின் மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை தரும் வகையில் சக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்துள்ள ரஷ்யா அதை அடுத்த ஆண்டு வெளியிடவுள்ளது.

ரஷ்யா ஏற்கனவே Satan என்னும் சக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்து வெளியிட்டு உலக நாடுகளை மிரள செய்தது. இந்நிலையில், Satan 2 என குறிக்கும் வகையில் RS-28 Sarmat என்னும் உலகின் கனமான மற்றும் சக்திவாய்ந்த ஏவுகணையை தயாரித்து வருகிறது.

Sarmat ஏவுகணை இதுவரையில்லாத அளவில் 11,000 மைல்கள் போகும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஏவுகணை பிரான்ஸின் ஒரு பகுதியையே அழிக்கும் அளவுக்கு திறன் கொண்டதாகும்.

தொழில்நுட்பத்தை பொருத்தவரையில் உலகின் பெரிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பாக கருதப்படும் தென் கொரியாவின் THAADஐ விட Sarmat சிறந்தவகையில் தயாரிக்கபட்டுள்ளது.

இந்த ஏவுகணை அடுத்த வருடம் வெளியிடப்படவுள்ளது. இது குறித்து ரஷ்யாவின் ராணுவ அதிகாரி Alexei Leonkov கூறுகையில், Sarmat ஏவுகனை தயாரிப்பின் மூலம் ரஷ்யா ஜனாதிபதி புடினின் எதிரிகள் அவரை கண்டு பயப்படுவார்கள்.

அமெரிக்க ராணுவத்தை எளிதாக இந்த ஏவுகணை ஜெயித்து விடும் என கூறியுள்ள Alexei, இந்த ஏவுகணையில் 10லிருந்து 15 வரையிலான ஆயுதங்களின் பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஒவ்வொரு பாகங்களும் 750 கிலோ டன் கொண்ட பிரம்மாண்ட எடையில் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொறுமையை சோதிக்காதீர்கள்: சீண்டினால் விளைவு விபரீதமாகும் : எச்சரிக்கும் வடகொரியா!!

எங்கள் பொறுமையைச் சோதிக்காதீர்கள். அணு ஆயுத ஏவுகணை தொடர்பாக எங்களோடு மோதினால் கடும் விளைவுகளைச் சந்திக் நேரிடும் என சீனாவிற்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வடகொரியாவின் அரச ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வடகொரியாவின் பொறுமையை சோதிக்கும்படி சீனா நடந்து கொண்டால் அதற்கான கடும் விளைவுகளை அந்நாடு சந்திக்கும்.

எங்களுடன் வைத்திருக்கும் உறவினை சீனா பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விடுத்து எங்கள் அணு சோதனையில் தேவையற்ற தலையீடுகளை ஏற்படுத்த முனைந்தால் கடுமையான விளைவுகளும், விபரீதங்களும் ஏற்படும்.
பெய்ஜிங் தன் நாட்டின் பாதுகாப்புக்காக நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடகொரியாவின் தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து, அமெரிக்கா அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்தது.

எனினும் வடகொரியா அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் தன்னுடைய சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

இந்நிலையில் சர்வதேச நாடுகள் பலவும் வடகொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்ததுடன், அதனை கைவிடுமாறும் கேட்டனர்.

ஆனால், இதுவரை வடகொரியா அவர்களின் வேண்டுகோள்கள் எதனையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. குறிப்பாக, அமெரிக்கா, ரஸ்யா, சீனா போன்ற நாடுகள் நேரடியாகவே தங்கள் கண்டனத்தை வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் வடகொரியாவின் செயற்பாடுகள் தொடர்ந்தும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

இதனால் சீனா தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டது. இருப்பினும் இது குறித்து அந்நாட்டு அரச ஊடகம் சீனாவிற்கு எச்சரிக்கை விடும் அளவிற்கு கடுமையாக சாடியுள்ளது.

இதேவேளை, வடகொரியாவின் இந்தச் செயற்பாடுகளால் கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் நிலவிவருகிறது.

வவுனியாவில் நால்வர் மரணம் : அச்சத்தில் மக்கள்!!

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தட்டான்குளம் கிராமத்தில் கடந்த 45 நாட்களுக்குள் சிறுநீரக நோயினால் நால்வர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கிராமத்தில் உள்ள குடிநீர் காரணமாகவே சிறுநீரக நோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அந்த பகுதி மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

யுத்தம் காரணமாக 1995ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெயர்ந்த வடபகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் வவுனியா பூந்தோட்டம் மற்றும் நெளுக்குளம் போன்ற நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர்.

இதே வேளை மீண்டும் அந்த மக்கள் 2006ஆம் ஆண்டு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன், வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு தட்டான்குளம் பகுதியில் மீள்குடியேற்றப்பட்டிருந்தனர்.

அன்றிலிருந்து இந்த பிரதேசத்தில் வாழ்ந்து வரும் மக்களில் நூற்றுக்கும் அதிகமானோர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 45 நாட்களுக்குள் சிறுநீரக நோய் காரணமாக நால்வர் மரணமடைந்துள்ளதுடன், பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து இந்த பிரதேச மக்கள் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என சம்பந்தப்பட்ட பலரிடம் முறையிட்டும் எந்த தீர்வும் கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில் தமது பிள்ளைகளை என்றாலும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கிராமத்திலிருந்து மக்கள் வெளியேற தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியில் வியக்க வைக்கும் அதிநவீன பேருந்து! இலங்கையிலும் அறிமுகம்!!

 
உலகில் காணப்படும் அதிக நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய பேருந்து இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஜெர்மனியில் தயாரிக்கப்படும் Volkner Mobil நவீன வசதிகளை கொண்ட பேருந்தே இலங்கையில் அறிமுகமாகவுள்ளது.
இந்த பேருந்து நடமாடும் வீடொன்றிற்கு சமமானதென்பது விசேட அம்சமாகும்.

அனைத்து விதமான வசதிகளையும் கொண்ட நவீன பேருந்தில் படுக்கை அறை, குளிக்கும் அறை, உணவு அறை மற்றும் வீட்டு பொருட்கள் அடங்கிய வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இங்கு சபாரி ரக மோட்டார் வாகனம் ஒன்றை நிறுத்துவதற்கான நிறுத்துமிட வசதியும் காணப்படுகின்றது. 40 அடி நீளமான இந்த பஸ் வண்டி இலங்கை பெறுமதியில் 23 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா துறைக்கு சொந்தமான கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரினால் இந்த பேருந்த இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வவுனியாவில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : குற்றவாளிக்கு 15 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை!!

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.

இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் 1000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக இந்தியாவில் இருந்து வருகைத்தந்த சிறுமியின் உறவினர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 1000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-தமிழ்வின்-

இரண்­டரை வயது குழந்­தை­யுடன் 23 வயது இளைஞன் கடத்தல் : விடுவிப்பதற்கு 30 இலட்சம் கப்பம் கோரல்!!

கம்­பளை நகரில் இரண்­டரை வயது குழந்­தை­யுடன் இளைஞர் ஒரு­வரும் கடத்­தப்­பட்­டுள்­ள­தாக கம்­பளை பொலிஸ் நிலையத்தில் உற­வி­னர்­களால் முறைப்­பாடு செய்யப்பட்டுள்ளது.

மொஹமட் சல்மான் என்ற இரண்­டரை வயது குழந்­தையும் பது­ளை­யி­லி­ருந்து மருத்­துவ பரி­சோ­த­னைக்கு வந்­தி­ருந்த குறித்த குழந்­தையின் உற­வி­ன­ரான மொஹமட் அஸாம் என்ற 23 வயது இளை­ஞ­ருமே கடத்­தப்­பட்­டுள்­ளனர்.

சம்­ப­வ­தி­ன­மான புதன் கிழமை 2.30 மணி­ய­ளவில் கம்­பளை கங்­க­வட்ட வீதியில் அமைந்­துள்ள கடத்­தப்­பட்ட குழந்­தையின் தந்­தையின் வர்த்­தக நிலை­யத்­துக்கு சுமார் 50 யார் தூரத்தில் அமைந்­துள்ள அவரின் வீட்­டி­லி­ருந்து, குறித்த இளைஞன் குழந்­தை­யையும் தூக்­கிக்­கொண்டு பகல் உணவை எடுத்து வந்த போதே இரு­வரும் கடத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரிய வரு­கி­றது.

சம்­பவம் நடை­பெற்ற பின்னர் மதியம் 3.30 மணி­ய­ளவில் கடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் இளை­ஞனின் தொலை­பே­சி­யூ­டாக குறித்த குழந்­தையின் தந்­தையின் தொலை­பே­சி­யுடன் தொடர்பு கொண்ட கடத்தல் காரர்கள் குறித்த இரு­வரும் பத்­தி­ர­மாக இருப்­ப­தா­கவும் தாங்கள் மாலை 6 மணி­ய­ளவில் மீண்டும் தொடர்பு கொள்­வ­தா­கவும் கூறி தொலை­பே­சியைத் துண்­டித்து விட்­ட­தாக உற­வி­னர்கள் தெரி­வித்­தனர்.

இதே­வேளை கடத்தல் காரர்கள் கூறி­ய­தைப்­போன்று, மீண்டும் தொடர்பு கொள்­ளா­மை­யை­ய­டுத்து இது குறித்து கம்­பளை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்யப்பட்டுள்ளது. இதே­வேளை, குறித்த குழந்­தை­யையும் சிறு­வ­னையும் விடு­விப்­ப­தற்கு 30 இலட்சம் ரூபா கப்பம் கோரப்­பட்­டுள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது. இந்தச் சம்­பவம் தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

பரீட்சையில் மணமகன் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றதால் திருமணத்தை நிறுத்திய மணமகள்!!

மண­ம­க­னுக்கு வைக்­கப்­பட்ட எழுத்து பரீட்­சையில் பூஜ்­ஜியம் மதிப்பெண் பெற்­றதால் மண­மகள் கல்­யா­ணத்தை நிறுத்­தி­யுள்ள சம்­பவம் ஒன்று இந்­தி­யாவின் உத்­தர பிர­தேச மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

இந்­திய உத்­தர பிர­தேச மாநிலம் மணிப்­பூரி கிரா­மத்தில் பெற்­றோர்கள் நிச்­ச­யித்த திரு­ம­ணத்தில் மாப்­பிள்ளை 10ஆம் வகுப்பு வரையில் படித்­தவர். ஆனால், கல்­யாணப் பொண்ணு வெறும் ஐந்தாம் வகுப்பு வரை மட்­டுமே படித்­தவர் என்­பதால் மாப்பிள்ளை வீட்டு அதி­காரம் கொஞ்சம் தூக்­க­லா­கவே இருந்துள்­ளது.

அதே அதி­கா­ரத்­துடன் மண­ம­க­ளுக்கு எழுத படிக்க வருமா என மண­மகன் ஒரு சின்ன ஹிந்தி பரீட்­சை­யொன்றை நடத்­தி­யுள்ளார். இதில், நூற்­றுக்கு நூறு பெற்று மண­மகள் சித்­தி­ய­டைந்­துள்ளார். இத­னை­ய­டுத்து மண­மகன் திரு­ம­ணத்­துக்கு சம்­ம­தித்­துள்ளார்.

அடுத்து இதே பரீட்­சையை மண­ம­க­னுக்கும் நடத்த வேண்­டு­மென மணப்பெண் கூறி­யுள்ளார். இதற்கு மண­மகன் சம்­மதம் தெரி­வித்­துள்ளார்.

ஹிந்­தியில் ஐந்தே ஐந்து வார்த்­தை­க­ளுக்கு எழுத்து பரீட்சை வைத்­துள்ளார் மண­மகள். அதில் சித்­தி­பெற்று கூடிய மதிப்­பெண்ணை பெற்று விடுவார் என சுற்­றமும் நட்பும் காத்­தி­ருந்­தனர்.

ஆனால், திரு­மண வீட்டார் சற்றும் எதிர்­பார்க்­கா­த­வாறு மாப்­பிள்ளை எடுத்த மதிப்பெண் என்ன ‘பூஜ்­ஜியம்’. இத­னை­ய­டுத்து, உடனே கல்­யா­ணத்தை நிறுத்­து­மாறு மண­மகள் தெரி­வித்­துள்ளார். இரு வீட்­டாரும் எவ்­வ­ளவோ சமாதானங்கள் கூறினாலும், குறித்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை எனத் தெரிவித்து மணமகள் வெளியேறியுள்ளார்.

பாகுபலிக்காக 6000 பெண்களை நிராகரித்த பிரபாஸ்!!

பாகுபலி படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் சுமார் 6,000 பெண்களை பிரபாஸ் நிராகரித்ததாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த பாகுபலி-2 படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தின் வசூல் இதுவரையில் 700 கோடி இந்திய ரூபாவை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் 1000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் இந்திய சினிமாவில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார். பாகுபலி-2 படத்திற்காக, அவர் எடுத்துள்ள முயற்சி மற்றும் உழைப்பினைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

பாகுபலிக்காக 5 வருடங்கள் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் பிரபாஸ் தனது முழு பங்களிப்பையும் அளித்திருந்தார்.

இதனாலேயே பிரபாஸை பல மேடைகளில் பலமுறை ராஜமௌலி பாராட்டியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பாகுபலி-2 படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது பிரபாஸ் பணக்கஷ்டத்தில் இருந்ததாகவும் ராஜமௌலி தெரிவித்திருந்தார்.

இது ஒருபுறம் இருக்க, பாகுபலி படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, பிரபாஸ் தனது குடும்ப வாழ்க்கையில் இருந்தும் சற்றே ஒதுங்கி இருந்துள்ளார். பாகுபலி படத்தில் நடித்த அந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 6,000 பேர் பிரபாஸை திருமணம் செய்து கொள்ள தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் பாகுபலி படத்தில் நடிக்கும் ஒரே காரணத்திற்காக அனைத்து பெண்களையும் பிரபாஸ் நிராகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒளி பயணம் செய்யும் வேகத்தை படம் எடுக்கும் அதிவேக கெமரா கண்டுபிடிப்பு!!

ஒளி பயணம் செய்யும் வேகத்தை படம் எடுக்கும் அதிவேக கெமராவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சுவீடனில் உள்ள லுண்டு பல்கலைக்கழகத்தின் எலியாஸ் கிறிஸ் டென்ஸ்சன் தலைமையிலான குழுவினர் அதிவேக கெமராவை உருவாக்கியுள்ளனர்.

இந்த கெமரா மூலம் ஒளியின் பயணத்தை படம் எடுக்க முடியும். இந்த கெமரா மூலம் ஒரு வினாடிக்கு 1 இலட்சம் புகைப்படங்களை எடுக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒளியின் பயணத்தை படம் எடுக்கும் போது அதில் இருந்து வெளியாகும் பல ஒளிகள் ஒன்றிணைந்து ஒரு புகைப்படமாக வெளியாகிறது.

விலங்குகளின் மூளை செயல்பாடு, குண்டு வெடிப்பு, வேதியியல் பொருட்களில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றையும் இந்த கெமரா மூலம் படம் எடுக்க முடியும் என நிபுணர் எளபாஸ் கிறிஸ்டென்சன் கூறியுள்ளார்.