நடிகர் தனுஷ் யாருடைய மகன் என்ற சர்ச்சை நிலவி வரும் நிலையில் தனுஷ் படித்த பள்ளியின் முதல்வர் உண்மை உடைத்துள்ளார்.
நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி, தனுஷ் மதுரையில் 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது ஊரை விட்டு சென்னைக்கு ஓடி வந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் தனுஷ் படித்த தாய் சத்யா பள்ளியின் முதல்வர் சுதா விஜய்குமார் கூறியதாவது, தனுஷ் எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை எங்கள் பள்ளியில் தான் படித்தார். தனுஷின் தாய் விஜயலட்சுமி தினமும் பள்ளிக்கு வந்து அவரை அழைத்து செல்வார்.
தனுஷ் பத்தாம் வகுப்பு முடித்த பரிமாற்ற சான்றிதழ் பள்ளியில் தான் உள்ளது. அதில், தனுஷின் தாய் விஜயலட்சுமி கையொப்பம் போட்டுள்ளார். இதை பள்ளி சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.
தேவையெனில் தனுஷ் எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை படித்ததற்கான அனைத்து ஆதரங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைப்போம் என தெரிவித்துள்ளார்.
பாணந்துறை மற்றும் பாதுக்க பிரதேசங்களைச் சேர்ந்த இரு பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 50 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 20 மாணவர்கள் அடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மூளை மற்றும் மண்டையோட்டுப் பகுதிகளில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்றம் துமிந்த சில்வாவின் உடல்நிலை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ஒன்பது பேர் அடங்கிய சிறப்பு வைத்தியக் குழு துமிந்த சில்வாவின் உடல்நிலை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, துமிந்த சில்வா தொடர்ந்தும் வைத்திய சிகிச்சை பெறவேண்டிய நிலையில் உள்ளார்.
அவரின் மண்டையோட்டிலிருந்து உடைந்த செதில்கள் மூளையில் தங்கியுள்ளன. அதுமாத்திரமின்றி அவரது மூளையில் தோட்டாவின் துகல்கள் படிந்துள்ளன. இது அவரது உடலின் நோய் நிலைமையை அதிகரிக்கும்.
இதேவேளை துமிந்த சில்வா சாதாரணமாக நடமாடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிங்கப்பூர் வைத்தியசாலையில் அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட சுவாச உபகரணங்கள் பொருத்தப்படுதல் வேண்டும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மீது துப்பாக்கிச்கிச்சூடு நடத்தப்பட்ட போது துமிந்த சில்வாவின் தலையில் துப்பாக்கி தோட்டா துளைத்திருந்தது. இதன் போது இவருக்கு மண்டையோட்டுப்பகுதியில் சிங்கப்பூர் வைத்தியசாலையொன்றில் வைத்து சத்திரசிகிச்சை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தற்போது அரசியல் தலைவர்களிடையே யார் தேசத்துரோகி, யார் தேசப்பற்றாளர் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது என அமைச்சர் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் அரசாங்கத்துக்கு சொந்தமான 15ஆயிரத்துக்கும் அதிமான ஹெக்டேயர் நிலப்பரப்பை விற்பனை செய்தவர்களா அல்லது தற்போதைய ஆட்சியில் அரசாங்க நிலத்தில் மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பவர்களா தேசத்துரோகி எனவும் கேள்வியெழுப்பினார்.
எனவே கடந்த ஆட்சியாளர்களுடன் எமது நல்லாட்சியை ஒப்பிடும் போது தேசத்துரோகி யார் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும் என்றார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தை திரையிடும் தியேட்டர்களை தீ வைத்து கொளுத்திவிட்டு சிறைக்கு செல்ல தயார் என கன்னட நடிகர் ஜக்கேஷ் தெரிவித்துள்ளார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்த ஹிட் படமான என்னை அறிந்தால் சத்யதேவ் ஐபிஎஸ் என்ற பெயரில் கன்னடத்தில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு இன்று கர்நாடகாவில் வௌியீடப்பட்டுள்ளது.
தமிழ் படம் கன்னடத்தில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளதற்கு கன்னட திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட அஜீத்தின் படத்தை கர்நாடகாவில் வெளியிட்டால் அந்த படம் ஓடும் தியேட்டர்களுக்கு தீ வைத்துவிட்டு சிறைக்கு செல்லவும் தயார் என்று கன்னட நடிகரும், அரசியல்வாதியுமான ஜக்கேஷ் தெரிவித்துள்ளார்.
வாட்டாள் நாகராஜ் பிற மொழி படங்களை தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்வதை கண்டித்து வரும் வாரம் மாபெரும் பேரணி நடத்தப் போவதாக கன்னட சலுவாளிக் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி ஹீரோவான சிவராஜ் குமாரும் டப்பிங் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டப்பிங் படங்களுக்கு எதிராக போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடும் எதிர்ப்புக்கு இடையே சத்யதேவ் ஐபிஎஸ் படம் இன்று கர்நாடகாவில் ரிலீஸாகியுள்ளது. எதிர்ப்பு காரணமாக பெங்களூரில் மட்டும் படத்தை ரிலீஸ் செய்யவில்லை. ஆனால் தியேட்டர் பற்றாக்குறையால் பெங்களூரில் ரிலீஸ் செய்யவில்லை என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர் ஸ்ரீநிவாஸ் குச்சிபொட்லாவின் உடல் கடந்த செவ்வாய்க்கிழமை, அவரது சொந்த ஊரான தெலுங்கானாவுக்குக் கொண்டு வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவரது மனைவி சூனாயானா துமாலா (Sunayana Dumala) செவ்வாய்க்கிழமையன்று, தனது கணவரைப் பற்றி ஃபேஸ்புக்கில் உருக்கமான பதிவை பதிந்திருந்தார். அவற்றின் தமிழாக்கம்…
முகநூலில், நான் முதன்முதலில் எழுதும் பதிவு இது. மிகவும் கனத்த இதயத்துடன் இந்த வார்த்தைகளை எழுதுகிறேன்.
2017 பெப்ரவரி 22ம் திகதி – புதன்கிழமையன்று இரவில், என் நண்பன், என் நம்பிக்கை, என் உயிர்தோழன், என் கணவரை இழந்தேன்.
அவர் எனக்கு மிகப்பெரிய வழிகாட்டி, எனக்கு உறுதுணையானவர். எனக்கு மட்டுமல்ல, அவரைச் சுற்றியுள்ள அனைவருக்குமே!அவர் முகத்தில் எப்போதுமே புன்னகை ஒட்டிக்கொண்டிருக்கும்.
அனைவரையும் மதிப்பவர்; குறிப்பாக பெரியவர்களை! நாங்கள் 2006-ம் ஆண்டு, எங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மூலம் முதன்முறையாக சந்தித்தோம்.
பிறகு ‘ஆர்குட்’ வலைதளத்தின் நட்பாகி சாட்டிங் மூலம் பேசத் துவங்கினோம். பார்த்தவுடனே, இருவருக்கும் பிடித்திருந்தது; அவர் மிகவும் வசீகரமாக இருந்தார்.
இரண்டு சகோதரிகளுடன் பிறந்த நான், என் வீட்டுக்கு கடைக்குட்டி; சுதந்திரமாக வளர்க்கப்பட்டவள். நான் அமெரிக்காவுக்குச் சென்று படிக்க வேண்டும் என்று நினைத்த கனவை நனவாக்கியது, ஸ்ரீநிவாஸ்தான்!
ஒரு சுதந்திரமான, உறுதியான பெண்ணாக இன்று நான் இருப்பதற்கு முழுக்காரணம் அவர். திருமணத்துக்குப் பிறகு நானும் அவரும் அமெரிக்காவில் உள்ள கன்சாஸில் குடியேறினோம். கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்துதான், நான் பணிக்குச் செல்லத் துவங்கினேன்.
நான்கு ஆண்டுகள் வேலைக்குச் செல்லாமல், மீண்டும் பணிக்குச் செல்ல வேண்டும் என எண்ணிய போது, எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்து, நான் வேலைக்குச் செல்ல முழுக்காரணமாக இருந்தது அவர்தான்!
அவர் விமான போக்குவரத்துத் துறையில் புதுமை செய்ய வேண்டும் என எப்போதும் ஆர்வமாக இருந்தார். அவருக்கு ’ராக்வெல் கொல்லின்ஸ்’ (Rockwell Collins) என்ற நிறுவனத்தில்தான் முதலில் வேலை கிடைத்தது.
பல நாட்கள், அவர் இரவு சாப்பாட்டுக்கு மட்டுமே வீட்டுக்கு வருவார்; பிறகு, அதிகாலையில் கிளம்பி விடுவார். அதன்பிறகு, மறுநாள் அதிகாலை 2 அல்லது 3 மணிக்குத்தான் வீடு திரும்புவார்.
நாங்கள் முன்பு இருந்த, லொவா நகரத்திலுள்ள ‘சிடர் ரபிட்ஸ்’ என்ற அழகிய சிறிய பகுதி அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், நாங்கள் பெரிய நகரத்துக்கு இடமாற நினைத்தோம்.
ஏனென்றால், எனக்கு வேலை கிடைத்து, என் கனவை தொடர வேண்டும் என நாங்கள் விரும்பினோம். இதற்குச் சிறந்த இடமாக ’கன்சாஸ்’ இருக்கும் என்று நினைத்தோம்.
நிறைய கனவுகளுடன் இங்கு வந்தோம். எங்களுடைய கனவு இல்லத்தை கட்டினோம்; அதில் ஒரு கதவுக்கு, அவரே சாயம் பூசினார். அவருக்கு வீட்டில் வேலை செய்வது மிகவும் பிடிக்கும்.
இந்த வீடு அவர் கட்டியது; எங்கள் குழந்தைகளுடன் ஒரு குடும்பமாக நாங்கள் வாழ, அவர் எடுத்து வைத்த முதல் அடி. ஆனால், எங்கள் கனவில் ஒரு பேரிடி வந்து விழும் என எதிர்பார்க்கவில்லை.
அன்றிரவு காவல்துறையினர் எங்கள் வீட்டுக்கு வந்து, என் கணவரை யாரோ ஒருவர் சுட்டுக்கொன்றார் என தெரிவித்த போது, என்னால் நம்பவே முடியவில்லை.
‘கண்டிப்பாக தெரியுமா’, ‘உண்மையைத்தான் சொல்கிறீர்களா?’, ‘நீங்கள் யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று தெளிவாக தெரிந்துதான் பேசுகிறீர்களா?’, ‘நான் அடையாளம் காண்பதற்கு ஏதேனும் படங்களைக் காட்டுங்கள்’, ‘அவர் 6’ 2” உயரத்தில் இருந்தாரா?’, என காவல்துறையினரைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு இருந்தேன்.
அவர்கள் எல்லாவற்றுக்கும் ‘ஆமாம்’ என்றே பதிலளித்துக்கொண்டு இருந்தார்கள். கன்சாஸில் வேறு யாரையும் தெரியாது என்பதால், டல்லாஸில் உள்ள அவரின் சகோதரரை அலைபேசியில் அழைத்தேன்.
காவல்துறையினர் கூறியதை அவர் சகோதரரிடம் நான் கூறிய போது, நான் ‘ஜோக்’ செய்வதாக அவர் நினைத்தார். என் நண்பர்கள் என்னுடன் இருந்தார்கள்; அவர்கள் என்னை விட்டு ஒரு நொடிகூட செல்லவில்லை.
எப்போதும் அன்பாக இருக்கும் அவருக்கு கடைசியாக பிரியாவிடை சொல்ல, அவரின் நண்பர்கள் கலிஃபோர்னியா, நியூ ஜெர்ஸி, டென்வர், லொவா, மின்னேசோடா ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்தார்கள்.
இந்த மார்ச் 9ம் திகதியுடன், அவருக்கு 33 வயதாகி இருக்கும். அன்று நாங்கள் நியூஜெர்ஸியில், அவரின் உறவினருக்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்துக்குச் செல்லவிருந்தோம்.
அதற்காக, கடந்த வாரயிறுதியில் ஷாப்பிங் செய்யத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தற்போது எல்லாமே தலைகீழானது. அவரின் சவபெட்டியுடன் நான் இந்தியா திரும்பிக்கொண்டு இருந்தேன்.
ஒரே மாலையில், நான் ‘மனைவி’ என்ற அங்கீகாரத்திலிருந்து ‘விதவை’யானதை என்னால் இன்னும் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை.
அவருக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். எங்கள் குடும்பத்தை விரிவுப்படுத்த வேண்டும் என சில வாரங்களுக்கு முன் தான், மருத்துவரை சந்தித்தோம்.
‘நாம் ‘இன்-விட்ரோ’ முறைப்படி குழந்தைப்பெற்றுக்கொள்ள வேண்டுமானால், பணத்தை சேமிக்க வேண்டும்’ – இதுதான் அவர் என்னிடம் கடைசியாக பகிர்ந்துக்கொண்ட வார்த்தைகள்!
உண்மையிலேயே, நமக்கு ஒரு குழந்தை இருந்திருக்க வேண்டும் உன்னைப் போல் அவன் இருந்திருக்க வேண்டும். அவனைப் பார்த்துக்கொண்டு, உன்னைப் போலவே வளர்த்திருப்பேன்.
ஸ்ரீனு, என் காதலே, நீ இல்லாத அந்த வெற்றிடத்தை எப்படி நிரப்பப்போகிறேன் என்று தெரியவில்லை.
ஆனால், நிச்சயம் உன் பெருமையை தாழ்த்தும்படி நடந்து கொள்ள மாட்டேன். என்னுடைய முக்கியமான மின்னஞ்சல்கள் அனைத்தையும் நீதான் திருத்தம் செய்வாய். ஆனால், இன்று முதல் முறையாக, அதனை நானே செய்கிறேன்.
வேடிக்கையாக இருக்கிறது. நான் உன்னை காதலிக்கிறேன்… நீ எப்பொழுதும் எனக்கு சொந்தமானவன்!
கடைசியாக ஒரு கேள்வி – அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்கள் அனைவரிடமும் இருக்கும் கேள்வி இது.
நாங்கள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்களா? நாங்கள் கனவு கண்டுக்கொண்டிருக்கும் அதே நாடா இது?
எங்கள் குடும்பத்தை, குழந்தைகளை வளர்ப்பதற்கு இது இன்னும் பாதுகாப்பான இடமாகத்தான் இருக்கிறதா?”, என்று கேட்டு அந்த பதிவை முடித்திருந்தார்.
மேலும், அவர் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
அவர் மீண்டும் அமெரிக்கா செல்வார் எனவும் அந்த பதிவில் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இந்திய பெண்ணை அமெரிக்கர் ஒருவர் தகாத வார்த்தைகளை பேசி இனவெறி தாக்குதல் நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த இளம் பெண் ஏக்தா தேசாய் மீது அமெரிக்கர் ஒருவர் இனவெறி தாக்குதலை நடத்தியுள்ளார்.
இது குறித்து ஏக்தா தேசாய் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், நான் அமெரிக்காவின் நியூயோர்க் ரயில் நிலையத்தில் உள்ள ரயிலில் பயணம் செய்தேன். என்னுடன் 100 பேர் அப்போது பயணம் செய்தார்கள்.
அதில் ஒரு அமெரிக்கர் நான் இந்தியர் என்பதை அறிந்து என் அருகில் வந்து தகாத வார்த்தைகளால் இனவெறியை தூண்டும் வகையில் பேசினார்.
இதை அருகிலிருந்தவர்கள் யாரும் தட்டி கேட்கவில்லை. நான் அதை கண்டுகொள்ளாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். பின்னர் அருகிலிருந்த ஆசிய பெண்ணிடமும் அவர் இதை செய்தார் என அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கர் இனவெறியுடன் பேசிய வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இது சம்மந்தமாக பொலிசார் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என தெரிகிறது.
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த சீனிவாஸ் என்பவர் அமெரிக்கர் ஒருவரால் சுட்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகமான மது போதையில் இருந்த ஒருவர் உணவை உண்ண அதிசக்தி வாய்ந்த மின்சார கம்பம் ஒன்றின் மீது ஏறிய சம்பவம் நாவலப்பிட்டி நகரில் நேற்று நடந்துள்ளது.
மது போதையில் காணப்பட்ட இந்த நபர் சோறு பொதி மற்றும் தண்ணீர் போத்தலுடன் மின் கம்பத்தில் ஏறியுள்ளார்.
இந்த சம்பவத்தால் நாவலப்பிட்டி நகரில் ஒரு குழப்பான நிலைமை ஏற்பட்டது. மது போதையில் ஒருவர் மின் கம்பத்தில் ஏறுவதை கண்ட இலங்கை மின்சார சபையின் ஊழியர் ஒருவரும் நகரில் இருந்த இளைஞர்களும் நாவலப்பிட்டி மின்சார சபை அலுவலகத்திற்கு அறிவித்து மின்சாரத்தை துண்டித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாருக்கு அறிவித்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து நபரை காப்பாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நகர சபை ஊழியர்கள் மின் கம்பத்தில் ஏறி மிகவும் சிரமத்திற்கு மத்தியில் மதுபோதையில் இருந்த நபரை மின் கம்பத்தில் இருந்து கீழே இறக்கியுள்ளனர்.
மது போதையில் இருந்த நபரை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பின்னர் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
50 வயதான இந்த நபர உலப்பனை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குவைத்தில் இலங்கை பெண் ஒருவரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த பெண் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டுள்ளதாக அரபு டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர் மாடி கட்டடம் ஒன்றிலேயே இரு இலங்கையரும் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த கட்டடத் தொகுதியில் தீ பிடித்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு படையினர் பொலிஸாரின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர்.
இதன் பின்னரே குறித்த அறையில் எரிந்த நிலையில் இலங்கைப் பெண் மீட்கப்பட்டு பெப்டைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதித்தை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி குறித்த இலங்கைப் பெண் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அதிகாரியிடம் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த இலங்கைப் பெண் அதே நாட்டை சேர்ந்த நபர் ஒருவருடனேயே தங்கி வந்துள்ளார் என்று பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.
இருப்பினும் சம்பவம் தொடர்பில் இலங்கைப் பிரஜையிடம் விசாரணை மேற்கொண்ட போது, பெண் தீ மூட்டி தற்கொலை செய்ய முயற்சித்தார். எனவே அவரை காப்பாற்ற முயற்சித்த போதே தன் கை மற்றும் கால்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அவரது சாட்சியத்தில் நம்பிக்கை இல்லை என்பதால் குறித்த நபரை அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் 22 வயது இளைஞர் ஒருவர் தன்னை வேற்றுக்கிரகவாசி (ஏலியன்) போல் மாற்றிக்கொள்வதற்காகப் பல நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றார்.
வேற்றுக்கிரகவாசிகள் இருக்கின்றார்களா இல்லையா என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் பலர் ஆம் என்றே பதிலளிக்கின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த வின்னி ஓ எனும் 22 வயது இளைஞர் தன்னை வேற்றுக்கிரகவாசி போல் மாற்றிக்கொள்வதற்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்போவதாகவும் தன்னுடைய பிறப்புறுப்பை விரைவில் அகற்றிவிடப் போவதாகவும் கூறியுள்ளார்.
இவர் தன்னுடைய 17 வயதில் இருந்து இந்த முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக முதன்முறையாக தன்னுடைய உதட்டில் பல்வேறு சாயங்களைப் பூசி தயார்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
பகுதி நேர மாடல் ஆன இவர் வேற்றுக்கிரகவாசி போன்று மாறவேண்டும் என்பதற்காக அதிகத் தொகையை செலவிட்டுள்ளார்.
இந்நிலையில், தனது பிறப்புறுப்பு மற்றும் தொப்புள் போன்றவற்றை நீக்க 130,000 டொலர்களை செலவு செய்யவுள்ளதாகக் கூறியுள்ளார்.
தன்னுடைய கவனம் முழுவதும் வேற்றுக்கிரகவாசியாக மாறவேண்டும் என்பதே என்றும் பிறப்புறுப்பு இல்லாமல் இருப்பது சாத்தியம் எனவும் ஆனால் அதற்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாகவும் வின்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பயன்படுத்துவதற்காக பிரத்தியேக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட லிமோசின் ரக கார் தயாராகியுள்ளது. இந்த கார் இம்மாத இறுதியில் வௌ்ளை மாளிகைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீஸ்ட் என அழைக்கப்படும் இந்தக் காரில் எதிரிகளின் குண்டுத் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் வடிவமைப்பு, விபத்தில் இருந்து காப்பாற்றும் தொழில்நுட்பங்கள் என பல பிரமிக்க வைக்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
காரின் மொத்த எடை 8 டன்னாகும். 8 அங்குல தடிமன் கொண்ட ஸ்டீல் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் எடை போயிங் 757 விமான எடைக்கு சமமாகும்.
துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகளால் துளைக்கப்பட்டாலும் அவை தொடர்ந்து இயங்கும் தன்மை கொண்டவை.
இதுமட்டுமல்லாது, இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டால் மூச்சுத்திணறல் ஏற்படாதவாறு ஆக்சிஜன் வழங்கும் வசதியும் இந்த காரில் உள்ளது.
ட்ரம்ப் பயன்படுத்தவுள்ள இந்த காரின் விலை 1.2 மில்லியன் பவுண்ட்களாகும். ராக்கெட் தாக்குதலால் கூட இந்த காரை ஒன்றும் செய்ய முடியாது என்பது பிரமிக்க வைப்பதாக உள்ளது.
மேலும் உள்ள வசதிகளாவன…
* அதிபர் மற்றும் 4 பேர் வரை இந்த காரில் பயணம் செய்யலாம். இடையே கண்ணாடி தடுப்புகள் இருக்கும். இதன் அவசரகால பொத்தான்கள் அனைத்தும் அதிபர் இருக்கை அருகே இருக்கும். அவரவர் அருகே ஓக்சிஜன் பெறுவதற்கான பொத்தான்கள் உள்ளன.
* கதவுகள் மூடப்பட்டவுடன் இரசாயனத் தாக்குதலால் கூட பாதிக்கப்படாத வகையில் 100 சதவீதம் பாதுகாப்பானதாகும்.
* ஆபத்துக்காலத்தில் மிக வேகமாகவும், 180 டிகிரி சுழன்று தப்பிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் காரை பயிற்சி பெற்ற இரகசிய பாதுகாப்புப்படை ஓட்டுனர் இயக்குவார்.
* ஐந்து அடுக்குகள் கொண்ட கண்ணாடி மற்றும் பாலிகார்பனேட்டால் ஆன புல்லட் ப்ரூஃப் ஜன்னல்கள், ஓட்டுனர் அருகில் உள்ள ஜன்னல் மட்டும் 3 அங்குலம் கீழே இறங்கும்.
* ஓட்டுனர் கட்டுப்பாட்டு அறையில் மட்டும் தகவல் தொடர்பு மற்றும் ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும்.
* தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கும்
* அதிபரின் இருக்கையில், துணை அதிபர் மற்றும் பென்டகனுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் சட்டலைட் போன் வசதி உள்ளது.
* டீசல் தாங்கி வெடித்து சிதறாமல் இருக்கும் வகையில், தனித்துவமான நுரை உடைய தீயணைப்புக் கருவி பொருத்தப்படும்.
* இராணுவ தரம் கொண்ட சுமார் 5 இன்ச் தடிமன், இரட்டை கடினத்தன்மை கொண்ட ஸ்டீல், அலுமினியம் மற்றும் டைட்டானியத்தால் ஆனது.
* துப்பாக்கிகள், கண்ணீர் புகை குண்டுகள், ஆபத்து காலத்தில் தேவைப்பட்டால் உடனடியாக பயன்படுத்தும் வகையில் இரத்தம் அடங்கிய பைகள்.
* வெடிகுண்டு தாக்குதலை எதிர்கொள்ளும் வலுவூட்டப்பட்ட ஸ்டீல் பிளேட் பாதுகாப்பு
* தோட்டாக்கள் துளைத்தால் பஞ்சராகாத டயர். டயர் சிதறடிக்கப்பட்டாலும், உலோக ரிம்டுடன் இயங்கும் சக்கரம்.
* கண்ணீர்புகை குண்டு வீசும் கருவி
* இரவு நேரத்திலும் தெளிவாக தெரியும் வகையில் இயங்கும் கேமரா.
மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் திரைப்பட நடிகர் தனுஷ் தங்களது மூத்த மகன் என்று உரிமை கோரி மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியர் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இதையடுத்து மேலூர் நீதிமன்றம் தனுஷ் வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியர், மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் திரைப்பட நடிகர் தனுஷ் தங்களது மூத்த மகன் என்று உரிமை கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷ் உடலில் உள்ளதா என்பதை சரிபார்க்க ஆஜராகக் கூறி உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஆஜரான தனுஷின் உடலில் அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டன.
இதனிடையே, நடிகர் தனுஷுக்கும், தனக்கும் மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என்று கதிரேசன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், நடிகர் தனுஷ் என்னுடைய மகன் என்பதற்கு போதிய ஆதாரம் உள்ளது. அவரை 11ம் வகுப்பு வரை நான் படிக்க வைத்தேன்.
இந்தநிலையில், அவரது தற்போதைய சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு, உண்மையான பெற்றோராகிய எங்களை அவரது பெற்றோர் இல்லை என்று மறுத்து வருகிறார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது அவர் தாக்கல் செய்த பிறப்புச் சான்று மற்றும் பள்ளி மாற்றுச் சான்றுகள் போலியானது.
இத்தகைய சூழலில் மரபணு சோதனை நடத்தினால் மட்டுமே இருவருக்கும் இடையேயான உறவை துல்லியமாக கண்டறிய முடியும்.
எனவே, எனக்கும், நடிகர் தனுஷுக்கும் மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தனுஷ் வழக்கை மேலூர் நீதிமன்றம் விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தடை விதித்துள்ளது.
மேலூர் நீதிமன்ற உத்தரவுப்படி நாளை தனுஷ் நேரில் ஆஜராகத் தேவையில்லை.
தனுஷ் தொடர்பான அனைத்து வழக்குகளும் 9ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மனோ கணேசன் அமைச்சுப் பதவியை துறந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்தார்.
வவுனியா செட்டிகுளத்தில் கிராமிய சித்த மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள் என்று சொல்வதற்கு எங்களுக்கு தயக்கங்கள் இருக்கின்றது. ஏனெனில் அங்குள்ளவர்களுக்குள் ஒற்றுமையில்லை, கருத்து முரண்பாடுகள் உள்ளது என்று ஊடகங்கள் வாயிலாக கருத்துக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றது. அதனை நாம் பகிரங்கமாக ஒத்துக்கொள்கின்றோம்.
கடந்த காலங்களில் இல்லாத மாகாணசபைதான் தற்போது வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே எல்லோருடைய மனங்களையும் திருப்திப்படுத்தும் நிலையில் இல்லை. 4 வருடத்தில் எங்களால் முடிந்ததை செய்துகொண்டிருக்கின்றோம். பலதரப்பட்ட விமர்சனங்கள் உண்டு. அதனையும் தாங்கி விட்டுக்கொடுக்காமல் மூவின மக்களுக்கும் வாழும் வடக்கில் இன பேதங்களை மறந்து சேவையை செய்துகொண்டிருக்கின்றோம்.
இன்று முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் மீது விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்றது. மக்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் ஊழல் அமைச்சர்கள் என்ற கருத்து காணப்படுகின்றது. ஆனால் அப்படியல்ல. விசாரணை முடிந்த பின்னர்தான் யார் நிரபராதி யார் குற்றவாளி என்பது தெரியவரும் அதுவரை யாரையும் ஊழல் கண்ணோடு பார்க்க முடியாது. சமூக சேவை என்று வருகின்ற போது பல விமர்சனங்கள் வரும்.
இந்த நாட்டின் தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனே கணேசன் ரவிராஜ் கொலை வழக்கில் பாரதூரமான தீர்ப்பு வரும் பட்சத்தில் அதற்காக போராடுவேன் என கூறியிருந்தார். ஆனால் இன்று அவர் அந்த தீர்ப்பு வந்தும் அமைதியாக இருக்கின்றார். அது ஏன் என்று நான் ஒரு மாதத்திற்கு முன்னர் கேட்டிருந்தேன். அதற்கு அவர் தனது முகநூலிலும் ஊடங்களிலும் மயூரன் என்ற மாகாணசபை உறுப்பினரை தனக்கு தெரியாது என்றும் நான் அவரை பதவி விலகுமாறு கூறியதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை.
ஆனால் குறித்த அமைச்சரிடம் இன்று நான் பகிரங்கமாக கூறவிரும்புகின்றேன். நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்காது அமைச்சர் பதவியை துறந்து சேவை செய்யுங்கள். அத்துடன் நான் தமிழில் சொன்னதை புரிந்துகொள்ளமுடியாத நீங்கள் ஏன் மொழி அமைச்சராக இருக்கின்றீர்கள் என்பதும் தெரியவில்லை.
நீர்கொழும்பு நீதிமன்றத்தில் தமிழ் மொழி பேசும் இளைஞர் யுவதிகளை பணிக்கு நிமிக்க வேண்டும் என தொலைபேசியில் உரையாடியிருந்தேன். கடிதமும் அனுப்பியிருந்தேன். அப்படியிருக்கும்போது நீங்கள் என்னை தெரியாது என்கிறீர்கள். தங்களுக்காகவே இந்த அமைச்சுப்பதவி வடிவமைக்கப்பட்டது. ஆனால் நீங்கள் இந்த அமைச்சராக வந்த பின்னரே எழுதும் எழுத்துக்கள் பிழையாக காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் நீங்கள் அமைச்சு பதவியை துறக்கவேண்டும் என தெரிவித்தார்.
வவுனியாவில் இரவு, பகலாக போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (03.03.2017) 8வது நாளாகவும் தமது உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் மேற்கொண்ட சாகும் வரையான உணவு தவிர்ப்புப் போராட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டதுடன் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முன்னோற்றம் ஏற்படாத நிலையில் அவர்கள் மீண்டும் தமது போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் ஆகியோரில் ஒருவர் நேரில் வந்து சாதகமான பதில் வழங்கும் பட்சத்தில் மட்டுமே தமது போராட்டத்தை நிறுத்துவதாகவும், அதுவரை தமது உறவுகளைத் தேடிய போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் செயற்பாட்டில் நான்காவது நாளாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் செயன்முறையும் நடைபெற்று வருகின்றது.
வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் இன்று (03.03.2017) அதிகாலை 12 மணியளவில் பிரதேச செயலாளரின் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பணம், நகைகள் என்பனவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா ஓமந்தை அரச ஊழியர்கள் வீட்டுத்திட்ட பகுதியில் வசித்துவரும் முல்லைத்தீவு பிரதேச செயலாளர் எஸ்.குணபாலனின் வீட்டில் இன்று அதிகாலை ஜன்னல் கம்பியினூடாக உட்புகுந்த திருடர்கள் அலுமாரியில் வைக்கப்பட்ட கோவிலுக்குரிய இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாவினையும் மனைவியின் தாலி உட்பட 16 பவுண் தங்க நகையினையும் திருடிச் சென்றுள்ளனர்.
இன்று காலை வீட்டில் பார்த்தபோது திருட்டு இடம்பெற்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஓமந்தைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜ.பி.சுரேஸ்த சில்வாவிற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களுடன் கைரேகை நிபுணர்களும் விரைந்துடன் ஓமந்தை குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஜ.பி. மகிந்த தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா மாவட்ட இளைஞர் கழகமும் ரூபவாகினி கூட்டுத்தாபனமும் இணைந்து நடாத்திய வவுனியா மாவட்ட இளைஞர் கழகங்கழுக்கிடையிலான 8 அணிகள் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியில் கூமாங்குளம் சுப்பஸ்ரார் விளையாட்டுக்கழகம் மாவட்டரீதியில் முதல்நிலையில் வெற்றி பெற்று தேசிய ரீதியில் நடைபெற இருக்கும் கரப்பந்தாட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இவ் வெற்றியின்மூலம் இவர்கள் கிராமத்துக்கும் மட்டுமல்லாது வவுனியா மாவட்டத்திற்கும் பொருமை சேர்துள்ளார்கள். அதுமட்டுமல்லாது கடந்தவருடங்களுடன் இரண்டாவது தடவைகள் தேசிய போட்டிகளில் வவுனியா மாவட்ட ரீதியில் பங்குபெற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது