ஆசைக்காட்டி நான்கு சிறுமிகளை வல்லுறவுக்கு உட்ப்படுத்திய முதியவர் சிக்கினார்!!

abuse

கண்டி-ராஜகல பகுதியில் நான்கு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 65 வயது நபர்(முதியவர்) ஒருவரை சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு பிரிவு கைது செய்துள்ளது.

பழங்கள் மற்றும் பணம் வழங்கி குறித்த சிறுமிகளுக்கு ஆசைக்காட்டி அவர்களை வல்லுறவுக்கு உட்ப்படுத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“சூனியம் செய்து கொன்று விடுவேன்” என குறித்த நபர் சிறுமிகளையும் அவரது குடும்பத்தையும் அச்சுறுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தென்தெனிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது,இந்த மாதம் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் லேதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரே காரில் பயணித்த 17 பேர்!!(வீடியோ இணைப்பு)

c1

ரஷ்­யாவில் கார் ஒன்றில் 17 பேர் பய ணம் செய்து வியக்க வைத்­துள்­ளனர். யூரல் மலைக்கு அருகில் தொழி­லா­ளர்­க­ளான இவர்கள் காரிலிருந்து இறங்கும் காட்சி அடங்­கிய வீடியோ இணை­யத்தில் வெளியா­கி­யுள்­ளது.

மிக நெரி­ச­லான சூழ்­நி­லையில் பய­ணித்த போதிலும் மகிழ்ச்­சி­யுடன் காரி­லி­ருந்து இறங்கும் காட்சி வீடி­யோவில் பதி­வா­கி­யுள்­ளது.

காரின் டிக்­கி­யிலும் மூவர் பய­ணித்­தனர். இவர்கள் தம்­முடன் கிட்டார் உட்­பட இசைக்­க­ரு­வி­க­ளையும் மேற்­படி காரில் ஏற்றிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

c2 c3

சுயமாக தன்னை சமநிலைப்படுத்தக்கூடிய மோட்டார் சைக்கிள் பி.எம்.டபிள்யூ நிறுவனத்தால் அறிமுகம்!!

11

சுய­மாக தன்னை சம­நி­லைப்­ ப­டுத்­தக்­கூ­டிய மோட் டார் சைக்­கிளை பி.எம்.டபிள்யூ நிறு­வனம் அறிமுகப்­படுத்­தி­யுள்­ளது. அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்­தின் சான் ட்ட மோனிக்கா நகரில் நடை­பெற்ற கண்­காட்­சி­யொன்றில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இந்த மோட்டார் சைக்கிள் காட்சிப்படுத்­தப்­பட்­டது.

ஜேர்­ம­னியைச் சேர்ந்த பி.எம்.டபிள்யூ வாகனத் தயா­ரிப்பு நிறு­வ­ன­மா­னது தனது 100 ஆவது ஆண்டு நிறைவு கொண்­டாட்­டங்­களின் ஒரு அம்­ச­மாக இந்த மோட்டார் சைக்­கிளை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

Motorrad Vision Next 100 எனும் இந்த மோட்டார் சைக்­கி­ளா­னது மிகப் பாது­காப்­பா­னது எனவும் இதை செலுத்­தும்­போது தலைக்­க­வனம் அணியத் தேவை­யில்லை எனவும் இந் ­நி­று­வனம் தெரி­வித்­துள்­ளது.

மோட்டார் சைக்கிள் சுய­மாக சம­நி­லைப்­ப­டுத்­தப்­ப­டக்­ கூ­டி­ய­வாறு இதன் சக்­க­ரங்கள் வடிவமைக்கப்பட்­டுள்­ளன. மோட்டார் சைக்கிள் நிறுத்­தப்­பட்­டி­ருக்­கும்­போ­து­ கூட இது சரிய மாட்­டாது எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

“இந்த சுய சம­நி­லைப்­ப­டுத்தல் பொறி­முறை மூலம் இம்­ மோட்டார் சைக்­கிளை செலுத்­து­ப­வர்கள் எந்த நேரத்­திலும் பாது­காக்­கப்­ப­டுவர்.

இதனால் இத் ­தொ­ழில்­நுட்பம் மூலம் எதிர்­கா­லத்தில் தலைக்­க­வசம் அணி­யா­மலும் மோட்டார் சைக்­கி­ளோட்­டிகள் பயணம் செய்­யக்­கூ­டி­ய­தாக இருக்கும்” என பி.எம்.டபிள்யூ நிறு­வன மோட்டார் சைக்கிள் பிரிவின் வடி­வ­மைப்புப் பணிப்­பாளர் எட்கார் ஹென்ரிச் தெரி­வித்­துள்ளார்.

இம்­ மோட்டார் சைக்கிள் சூழ­லுக்கு மாசு ஏற்­ப­டுத்தும் வாயு எத­னையும் வெளியிடமாட்டாது.
எவ்வாறெனினும் இது ஓட்டுநர் இன்றி சுயமாக செலுத்தப்படக்கூடிய மோட்டார் சைக்கிள் அல்ல எனவும் எட்கார் ஹென்ரிச் தெரிவித் துள்ளார்.

12

தனது மகள், வளர்ப்பு மகள், நாய், கோழிகளை வல்லுறவுக்குட்படுத்திய நபருக்கு சிறைத்தண்டனை!!

raped

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மகள், வளர்ப்பு மக்கள், நாய், கோழிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச் சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இத் துர்நடத்தை குறித்து தனது மனைவியிடம் மேற்படி நபர் ஒப்புக்கொண்டிருந்தார் என நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.

3 வயதான தனது மகளை வல்லுறவுக்குட்படுத்திய இந் நபர், 9,11 வயதுக்கிடைப்பட்ட தனது வளர்ப்பு மகள் உறங்கிக் கொண்டிருந்த போது அச் சிறுமியையும் வல்லுறவுக்குட்படுத்தினாராம்.

அத்துடன் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், கோழிகளையும் இவர் வன்புணர்வில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந் நபரின் முன்னாள் மனைவியான பெண் நீதிமன்றில் சாட்சிய மளிக்கியில், “எனது அப்பாவிப் பிள்ளைகள் இத்தகைய உடல், உள ரீதியான கொடூரமான வன்முறைகளுக்கு ஆளாக வேண்டியவர்கள் அல்லர்” எனத் தெரிவித்தார்.

இவ் வழக்கை விசாரித்த நீதிபதி போல் மஸ்கெட், மேற்படி நபருக்கு 6 வருடங்கள் மற்றும் 7 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

விபத்தில் சிக்கி உயிர்தப்பிய கங்கனா ரனாவத்!!

kangana-ranaut

பொலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரனாவத் விபத்தில் சிக்கி உயிர்தப்பியுள்ளார்.

அமெரிக்காரில் இடம்பெற்று வரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பிய போது விபத்து ஏற்பட்டுள்ளது.

ஓட்டுநருக்கு ஏற்பட்ட தொடர் இருமல் காரணமாக, அவர் நிலைதடுமாறி காரை வீதியோரத்தில் இருந்த மதிலில் மோதியுள்ளார்.

இந்த விபத்தில், தலையில் காயமடைந்த கங்கனா ரனாவத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வீதியில் பெண்ணை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த கொடூரம்!!

lady

இந்தியாவில் ஒடிஷா மாநிலத்தில் புவனேஸ்வரில் கிராம மக்கள் ஒன்றிணைந்து இளம் பெண்ணொருவரை வீதியில் வைத்து நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் புவனேஸ்வர் அருகே தேராபதர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தின் முன்னர் அந்த பகுதியில் உள்ள சிறுமி ஒருவருக்கு காலிசி தேவதை ஆட்கொண்டதாக அக்கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து குறித்த சிறுமி அந்த கிராமத்தில் உள்ள பக்தர்களின் கோரிக்கைகளுக்கு பதில் கூறி வந்துள்ளார். திடீரென்று, அந்த கிராமத்தில் ஒரு பெண்மணி மத்திரவாதம் செய்து வருவதாகவும், இதனால் கிராமத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அதுமட்டுமின்றி அவரது அருகாமையில் இருந்த ஒரு மரத்தில் இருந்து சில இலைகளை பறித்துக் கொண்டு அவர் குறிப்பிட்ட அந்த பெண்ணின் வீடு நோக்கி நடக்க துவங்கியுள்ளார்.

அந்த சிறுமியை தொடர்ந்து ஒட்டு மொத்த கிராமமும் பிந்தொடர்ந்துள்ளது. குறித்த சிறுமி ஒரு வீட்டின் முன்பு வந்து நின்று, அந்த வீட்டின் பெண்மணியை வீட்டுக்கு வெளியே வரச் செய்து, அவர்தான் மந்திரவாதி எனவும், அவரால் பல உயிர்கள் அக்கிராமத்தில் பறிபோனதாகவும் குறிப்பிட்டார்.

சிறுமி கூறுவதை அருள்வாக்கு என கருதியிருந்த மக்கள், ஆத்திரத்தில் குறிப்பிட்ட இளம் பெண்ணை அவரது தலை முடியில் பிடித்து பிரதான வீதியின் நடுவே இழுத்து வந்து, கூடியிருந்த அத்தனை நபர்களும் அவரை தாக்கத் துவங்கியுள்ளனர். வலியால் துடித்த அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். அத்துடன் விட்டுவிடாது குறித்த பெண்ணின் ஆடைகளை களைந்து அந்த பொதுமக்கள் கூட்டத்தின் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் மயக்கமடைந்த குறித்த இளம் பெண்ணை வீதியோரத்தில் அப்படியே விட்டுவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனிடையே கிராம தலைவர் ஒருவர் இதுகுறித்து கேள்வியுற்று, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இணைந்து பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.

சம்பவம் குறித்து வழக்கு பதிந்த பொலிஸார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க விமானங்களில் இந்த வகை போன்களை கொண்டு செல்ல முடியாது!!

mobile

விமானப் பயணத்தின்போது பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் சம்சுங் நிறுவனத்தின் கலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்ஃபோன்களைக் கொண்டு வர தடை விதிப்பதாக அமெரிக்க அரசு அதிரடியாக அறிவித்தது.

இதுகுறித்து அமெரிக்கப் போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:

சம்சுங் நிறுவனத்தின் கலக்ஸி நோட்-7 ரக ஸ்மார்ட்ஃபோன்கள் திடீரென தீப்பிடிப்பதாக எழுந்த புகாரையடுத்து விமானங்களில் அதன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

இந்த வகை செல்லிடப்பேசிகளை பயணிகள் மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் விமானப் பயணத்தின்போது எடுத்துவர தடை விதிக்கப்படுகிறது. மேலும், இந்த வகை செல்லிடப்பேசிகளை சரக்கு விமானங்களிலும் கொண்டு செல்லக் கூடாது. இந்த உத்தரவு சனிக்கிழமை (அக்.15) நண்பகல் முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த உத்தரவை மீறும் பயணிகளிடமிருந்து கலக்ஸி நோட்-7 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்படும் என்பதோடு, அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும்.

இந்த தடை உத்தரவால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படும் என்றாலும், பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி இந்த தடை உத்தரவு உடனடியாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்கப் போக்குவரத்து அமைச்சகம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனம், கேலக்ஸி நோட்-7 ரக ஸ்மார்ட்ஃபோன்களை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. இந்த செல்லிடப்பேசிகளில் பொருத்தியுள்ள பேட்டரிகள் திடீரென வெடித்து தீப்பிடிப்பதாக உலகின் பல்வேறு இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 25 இலட்சம் கேலக்ஸி நோட்-7 ரக செல்லிடப்பேசிகளைத் திரும்ப பெறுவதாக அறிவித்ததுடன், அதன் தயாரிப்பை முற்றிலும் நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

 
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் நேற்று (15.10.2016) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் இரவு 7 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தின் காரணமாக வீதியால் நடந்து சென்ற முதியவர் ஒருவரும், மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இளைஞனும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை விபத்துக்குள்ளான மோட்டர் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய வாகனம் தப்பிச் சென்றுவிட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

1 2 3

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய தீர்த்தோற்சவம் !(படங்கள்,காணொளி)

வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் நேற்று  (15.10.2016 சனிகிழமை ) காலை தீர்த்தோற்சவம் மிக சிறப்பாக இடம்பெற்றது.

காலை உற்சவம் ஆரம்பமாகி  ஒன்பது மணியளவில் தம்பப் பூசை இடம்பெற்று தொடர்ந்து  ஒன்பதரை மணிக்கு  பொற்சுண்ணம் இடிக்கபட்டு பத்து  மணியளவில் வசந்தமண்டப பூசை இடம்பெற்று ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஸ்ணு  பகவான் உள்வீதி வலம் தீர்த்தம் ஆடும் இடத்திற்கு  எழுந்தருளி  பதினொரு  மணியளவில் தீர்தோற்சவம் இடம்பெற்றது. மாலையில் கொடியிறக்க வைபவமும் இடம்பெற்றது.

-பிரதேச நிகழ்வுகளுடன் கஜன்–

IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF

கணவனின் கடனை அடைப்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்!!

positute

காலி மக்குலுவ பிரதேசதத்தில் இயங்கி வந்த பாலியல் தொழில் நிலையம் ஒன்றை காலி பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

காலி பிராந்திய மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பில் பாலியல் தொழில் ஈடுபட்ட பெண்ணும் அதன் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவன் பெற்றுக்கொண்ட கடனை செலுத்துவதற்காக தான் இந்த தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெண் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

நாராம்பலை பிரதேசத்தில் தொழில் புரிந்து கொண்டிருந்த போது கணவன் வெளிநாடு செல்வதற்காக, வாடகைக்கு தங்கியிருந்த வீட்டுப் பெண்ணிடம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாவை கடனாக பெற்றார்.

என்னை பிணையாக வைத்து கொண்டு அந்த பெண், எனது கணவருக்கு பணத்தை கொடுத்தார்.

தற்போது நான் 100க்கு 15 வீதம் வட்டியை செலுத்தி வருகின்றேன். வட்டி பணத்தை கொடுக்கும் வரை வீட்டில் உள்ள அந்த பெண், அலுமாரியில் உள்ள உடைகளை கூட அணிய இடமளிக்க மாட்டார்.

பிள்ளையை பராமரித்து கொண்டு வருகின்றேன். எனக்கு எவரும் உதவுவதில்லை எனவும் அந்த பெண் கூறியுள்ளார்.

பஸ்சை துரத்திப் பிடிக்கும் அவசரத்தில் உயிரை விட்ட தந்தை!!

accident

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலிம்நகர் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த விபத்தின் போது பஸ் சில்லுக்குள் சிக்குண்டு இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் பலியாகியுள்ளார். இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொத்துவிலைச் சேர்ந்த எம்.ஜ.கால்டீன் என்ற விவசாயியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கண்டியில் இருந்து பொத்துவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சை நிறுத்தி ஏற முயன்றபோதே தவறி வீழ்ந்து பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் ஆசிய நாட்டு சிறுமி கோமா நிலையில் : காரணம் என்ன?

1

கனடா- நான்கு வயது சிறுமி பல் மருத்துவரிடம் சென்ற பின்னர் நினைவிழந்து கோமா நிலைக்கு திரும்பி விட்டாள் என எட்மன்டனை சேர்ந்த குடும்பம் தெரிவிக்கின்றது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இச்சிறுமி இந்நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது. அம்பர் அத்வால் என்ற இச்சிறுமி நினைவிழந்த நிலையில் கிளென்றோஸ் புனர்வாழ்வு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்து. அண்மையில் சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டாள் என இவளின் உறவினரான அமன் பிரீட் சிங் தெரிவித்தார்.

2016 செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி இவளிற்கு மூளை காயம் ஏற்பட்டுள்ளதாக MRI சோதனையில் தெரிவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆனாலும் காயத்தின் தீவிரம் உறுதிப்படுத்தப்படவில்லை.

அதே மாதம் பல் மருத்துவத்திற்காக சென்ற அம்பர் சிகிச்சையை தொடர்ந்து கோமா நிலைக்கு சென்று விட்டாள். வழக்கமான பல் சோதனையின் பின்னர் விசேட நிபுணருக்கு பரிந்துரைக்கப்பட அவளை பரிசோதித்த நிபுணர் செயல் முறை செய்ய வேண்டும் என கூறியதுடன் ஒரு கடைசி நேர ரத்து இருப்பதால் அன்றே சிகிச்சை செய்யலாம் என கூறப்பட்டது.

சிறுமி காலை உணவு சாப்பிட்டு விட்டாள் என தெரிவிக்கப்பட்ட போதிலும் பொதுவான மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. சத்திர சிகிச்சையின் போது அம்பர் ஆக்சிஜன் குறைபாட்டினால் அவதிப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டாள்.

இவளிற்கு மயக்க மருந்து கொடுத்த பல் வைத்தியர் டாக்டர் வில்லயம் மேத்தர் நோயாளிகளிற்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததென குளோபல் செய்தி உறுதிப்படுத்தியது.

மதிப்பாய்வுரை செய்யும் வரை மேலதிக விபரங்கள் மறுக்கப்பட்டுள்ளன.

“உங்கள் மருத்துவரை சரியாக தெரிவு செய்யுங்கள்.யாருடைய தவறு என தெரியாது.எத்தகைய செயல் முறைக்கு ஆளாக போகின்றோம் என முன்னதாக கண்டறியுங்கள்”என அமன் பிரீட் சிங் அறிவுறுத்துகின்றார்.

2

கோஹ்லி போல் தோன்றிய ரசிகர் : ஆச்சரியத்தில் உறைந்த கோஹ்லி : வியப்பூட்டும் வீடியோ!!

kholi

இந்தூரில் நடந்த இந்தியா, நியூசிலாந்து  அணிக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோஹ்லியை போல் தோற்றம் கொண்ட இளைஞர் ஒருவர் மைதானத்தில் தோன்றி ஆச்சரியம் அளித்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

இந்திய டெஸ்ட் அணித்தலைவரும் நட்சத்திர வீரருமான விராட் கோஹ்லி தனது ஆக்ரோசமான ஆட்டத்தினால் மட்டுமின்றி ஸ்டைல் மற்றும் உடற்பயிற்சியின் மூலமும் பல ரசிகர்களை கவர்ந்து சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், இந்தூரில் நடந்த போட்டியின் போது கோஹ்லியை போல் தோற்றம் கொண்ட இளைஞர் ஒருவர் மைதானத்தில் தோன்றி ஆச்சரியப்படுத்தினார், பல ரசிகர் அவருடன் புகைப்படம் எடுக்க மல்லுக்கட்டினர்.

உடை மாற்றும் அறையில் இருந்து தன்னை போல் இருப்பவரை கண்ட கோஹ்லி கைதட்டி சிரித்தபடி அதை ரசித்து பார்த்தார்.

தற்போது, குறித்த நிகழ்வு வீடியோவாக இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

மாணவியை மிருகத்தனமாக கொன்ற காவலர் : 21 ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!!

girl

பிரான்சில் 21 ஆண்டுகளுக்கு முன் மாணவி ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் Legrand Lylian என்ற காவலருக்கு 30 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 1995ம் ஆண்டு மே 24ம் திகதி லீல் நகர மையத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 18 வயது மாணவியான Stephanie Fauviaux, சால்வையால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் குளியல் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்த கொலை வழக்கில், 17 வருடங்கள் நடந்த விசாரணையில் சால்வையில் இருந்தது LeGrand Lylianவின் டிஎன்ஏ என அடையாளம் காணப்பட்டு அவர் தான் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது.

சம்பவத்தின் போது LeGrand Lylianவுக்கு 23 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த வழக்கில் North Assize நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது, குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட LeGrand Lylianவுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு தலா 30,000 யூரோ(22 லட்சம்), சகோதரன் மற்றும் சகோதரிக்கு தலா 15,000 யூரோ(11 லட்சம்) வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தற்போது, நைஸ் நகர உதவி அதிகாரியாக பணியாற்றி வரும் LeGrand Lylianனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் வன்முறை தூண்டும் வகையில் பதிவிட்டால் 80 லட்சம் அபராதம்?

fb

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக வன்முறை தூண்டும் வகையில் பதிவிடுபவர்களுக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்திற்கு ஜேர்மன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் கூட்டணி கட்சி தலைவரான Volker Kauder என்பவர் தான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் பேசியபோது, ‘பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் புலம்பெயர்ந்தவர்கள் மீதான வன்முறை கலந்த இனவெறி தாக்குதல் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

ஆனால், இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்கள் எடுக்க முன்வரவில்லை.

இந்நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை பலன் அளிக்கவில்லை. இனிமேல் எதையும் பொறுத்துக்கொள்ள முடியாது.

இனிவரும் காலத்தில் பேஸ்புக்கில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளை வெளியிடக்கூடாது. இவ்வாறு வெளியிடப்படும் பதிவுகளை ஒரு வார காலத்திற்குள் பேஸ்புக் நிறுவனம் நீக்க வேண்டும்.

மேலும், இதுபோன்ற பதிவிடும் நபர்களின் ஒவ்வொரு பதிவிற்கும் தலா 50,000 யூரோ(80,46,038 இலங்கை ரூபாய்) அபராதம் விதிக்க வேண்டும் என Volker Kauder வலியுறுத்தியுள்ளார்.

இளைஞனின் பாலியல் தொல்லையால் இரண்டு குழந்தையின் தாய் எடுத்த விபரீத முடிவு!!

lady

தமிழ்நாட்டில் திருமணமான பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததால் மன உளைச்சலில் அப்பெண் தற்கொலை செய்து செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரின் மனைவி தீபா (28) இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

அதே பகுதியில் ராஜீவ்காந்தி (27) என்னும் இளைஞர் வசித்து வந்தார், இவர் வேலை ஏதும் செய்யாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இருநாட்களுக்கு முன்னர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தீபாவை ராஜீவ்காந்தி வழிமறித்து அவர் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அவரிடம் இருந்து விடுபட்டு வீட்டுக்கு ஓடிய தீபா நடந்த விடயங்களை அவர் கணவரிடம் அழுது கொண்டே கூறியுள்ளார்.

கணவனும் மனைவியும் உடனே இது பற்றி பொலிஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளனர். ஆனால் ராஜீவ்காந்தியை விசாரித்த பொலிசார் அவரை கைது செய்யவில்லை.

ஏற்கனவே இந்த விடயத்தில் மன உளைச்சலில் இருந்த தீபா ராஜீவ்காந்தி கைது செய்யபடாததால் இன்னும் மனம் வெதும்பி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் அறிந்து அங்கு வந்த பொலிசாரிடம் தீபாவின் உறவினர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர், எனினும் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்த ராஜீவ்காந்தியை கைது செய்த பொலிசார் சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.