விக்ரம் நடித்திருக்கும் இருமகன் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி இருந்தது. பாடல்கள் ரசிகர்களிடம் ஒருபக்கம் வரவேற்பு பெற்று வர, இன்னொரு பக்கம் டிரைலரை பல லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
டிரைலர் வெளியாகி இரண்டு நாளுக்குள் 2 மில்லியன் பார்வையாளர்கள் பெற்றுள்ளது. இதனால் விக்ரம் ரசிகர்கள் டுவிட்டரில் #IruMillionHitsForIruMuganTrailer என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.
சந்தானம் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாகவும் வெற்றி பெற்றுவிட்டார். இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிரமாத்தையே தத்தெடுத்து உதவி செய்யவுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.இச்செய்தி தற்போது வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது,
திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் போயிங் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து துபாய் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் துபாய் செல்லும் பல்வேறு நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து துபாய் புறப்படும் 4 விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டது.
இதேபோல் துபாயில் இருந்து பிற நாடுகளுக்கு புறப்படும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை வரவேண்டிய இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டது.
இந்த விமானம் காலை 7 மணிக்கு துபாய்க்கு புறப்பட்டு செல்லும், இந்த சேவையும் ரத்து செய்யப்பட்டது. துபாய் விமான விபத்து காரணமாக விமானங்கள் வருவதிலும் தாமதம் ஏற்பட்டது. ஏர்இந்தியா விமானம், வளைகுடா நாடுகளான ரியாத், சவுதி, குவைத், சார்ஜா ஆகிய விமான சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னைக்கு அதிகாலை 3.45 மணிக்கு, லண்டனில் இருந்து வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் காலை 8.30க்கு வந்தது. 5 மணிக்கு லண்டனுக்கு புறப்பட வேண்டிய இந்த விமானம் தாமதமாக 10.30 மணிக்கு புறப்பட்டது. மேலும், நேற்று இரவு 8.30 மணிக்கு வரவேண்டிய எமிரேட்ஸ் விமானம் 5 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. அதிகாலை 2.30 மணிக்கு வரவேண்டிய மற்றொரு விமானம் காலை 8 மணிக்கு வந்தது.
கொடைக்கானலில் பள்ளி கட்டணம் செலுத்துமாறு ஆசிரியர் வற்புறுத்தியதால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கொடைக்கானலை சேர்ந்த சரோஜா என்பவரின் மகன் ராஜேஸ்வரன், அங்கிருக்கும் தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
ராஜேஸ்வரன் பள்ளி கட்டணம் செலுத்தாத காரணத்தினால், அவனை கடந்த 3 நாட்களாக பள்ளிக்குள் தலைமை ஆசிரியர் அனுமதிக்கவில்லை.இதனால் மனமுடைந்த மாணவன் பூங்கா ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான், தனது மகனின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுத தாய், எனது மகனின் மரணத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியரே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.
நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சைகளின் மேற்பார்வையாளர் ஒருவர் திடீர்மரணமடைந்த சம்பவம் ஒன்று பண்டாரவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் 54 வயதான ஒருவரே மாரடைப்புகாரணமாக உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்டாரவெல புனித ஜோசப் வித்தியாலயத்தில் கடமையிலிருந்த ஒருவரே இவ்வாறுமரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாணவர்களின் பரீட்சைகளுக்கு எவ்வித தடைகளும் ஏற்படவில்லைஎன்றும் பரீட்சைகளின் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் போது, பரீட்சார்த்திகள் மேற்கொள்ளும் மோசடிகள் மற்றும் அவர்களுக்கு உதவி வழங்கும் நபர்கள் தொடர்பில் கிடைக்கப் பெறும் அனைத்து முறைப்பாடுகள் குறித்தும் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான முறைப்பாடுகளை வழங்க 24 மணித்தியாலங்களும் செயற்படும் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.இதன்படி, முறைப்பாட்டாளர்கள் 1911 என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் இலக்கத்திற்கோ அல்லது பாடசாலை பரீட்சை நிலையங்களின் 0112 784 208, 0112 784 537 , 0113 188 350 மற்றும் 0113 140 314 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அழைப்பினை ஏற்படுத்தி தகவலளிக்க முடியும்.
பரீட்சார்த்திகள் மேற்கொள்ளும் மோசடிகள் மற்றும் அவர்களுக்கு உதவி வழங்கும் நபர்கள் மாத்திரமன்றி பரீட்சை நிலையங்களில் நடைபெறும் பல்வேறு விதமான மோசடிகள் தொடர்பிலும், இந்த இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி கூறமுடியும் என, டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மாதம் 8ஆம் திகதி தனது 10 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளதாக குறித்த குழந்தையின் தாய் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.கொழும்பு காலிமுகத்திடல் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை நேற்று சிலாபம் பிரதேசத்தில் கைக்குழந்தை ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும், காணாமல் போன குழந்தை குறித்த குழந்தையாக இருக்கலாம் எனவும் கோட்டை பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் சிலாபம் மற்றும் கோட்டை பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஒருமாத காலமாகியும் தனது குழந்தையைக் காணாமல் குறித்த தாய் மிகவும் மனவேதனையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் போயுள்ள குழந்தை நேற்று கோட்டை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதான கிருலப்பனையைச் சேர்ந்த நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை தற்போது தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
நேற்று எமிரேட்ஸ் விமானம் திருவனந்தபுரத்திலிருந்து சென்று துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது விமானம் விபத்துகுள்ளாகி ஒரு பகுதி தீப் பிடித்தது.
உடனடியா தீயணப்பு படை வீரர்கள் தீயை அணைத்ததோடு மீட்பு பணியில் ஈடுபட்டு 282 பயணிகளை காப்பாற்றினர். மிகபெரிய விபத்தில் சிறப்பாக செயல்ப்பட்ட வீரர்களையும் துரிதமாக செயல்பட்டு எமிரேட்ஸ் நிறுவனத்தாரையும் பாராட்டினர்.
இந்த விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ராசல் அல் கைமாவை சேர்ந்த ஜாசிம் இஸ்ஸா முஹம்மது ஹசன் என்பவர் உயிரழந்தார். அவரின் தியாகம் போற்றத்ததக்கது என பல்வேறு தரப்பினரும் மறைந்த அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று (04.08.2016) காலை மருத்துவப்பீட மாணவ செயற்பாட்டுக்குழு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எற்பாடு செய்த கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
தனியார் பல்கலைக்கழகம், தனியார் பாடசாலை, தனியார் வைத்தியசாலை மருத்துவ வியாபாரிகளுக்கு ஏற்ற விதத்தில் கல்வி, சுகாதாரத்தை நடாத்திக் கொள்கின்றனர். பாடசாலையில் அறவிடப்படும் பணம் குறைந்ததா? வைத்தியசாலைகளில் மருந்திற்கான வரிசை குறைந்ததா? வரி இன்னும் கூடியது இவை அனைத்தும் எமக்குத் தேவையான விதத்தில் நடைபெறவில்லை என்று தெரிவித்து ஒரு இலட்சம் பேரிடத்தில் கையெழுத்து பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக ஒரு தொகை வௌிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்டதாக கூறப்படும் இருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை சிங்கப்பூர் நோக்கி செல்லவிருந்த விமானத்தில் இவர்கள் புறப்படத் தயாராக இருந்ததாக, விமான நிலையத்தின் பிரதி சுங்கப் பணிப்பாளர் பராகிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட வௌிநாட்டு நாணயங்களின் பெறுமதி மூன்றரைக் கோடி ரூபாவுக்கும் அதிகம் என கூறப்படுகின்றது.
இதேவேளை சந்தேகநபர்கள் கொழும்பைச் சேர்ந்த 35 மற்றும் 49 வயதான இருவராகும்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் நேற்று (03.08.2016) புதன்கிழமை கட்சியின் வவுனியா மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது.
தற்போதைய அரசியல் அமைப்பு விவகாரங்களில் இன்றைய நிலை தொடர்பாக கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனால் தெளிவாக கூறப்பட்டதுடன், இவ் அரசியல் அமைப்பு விவகாரங்கள் சரியான முடிவுக்கு வரும்வரை இவ் விடயங்களை குழப்பும் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்க கூடாது எனவும் தெரிவித்ததுடன், தலைவரின் கருத்துக்களை மத்தியகுழு ஏற்றுக்கொண்டதுடன், தீவிரமான கருத்துக்களையும் மத்தியகுழு முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற சமகால பிரச்சனைகள் தொடர்பாகவும் ஆழமாக கலந்துரையாடப்பட்டது..
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பாகவும், கிராமங்கள் தோறும் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தல் தொடர்பாகவும் தீவிரமாக ஆராயப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய மத்தியகுழு கூட்டத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் திரு சு.சதானந்தம், உப தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு ச.வியாளேந்திரன் (எஸ்.எஸ்.அமல்), உப தலைவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்), உப தலைவரும் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வை.பாலச்சந்திரன், உப தலைவர் பத்தன் ஆகியோருடன் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளரும் முல்லைத்தீவு மாவட்ட வட மாகாண சபை உறுப்பினருமான க.சிவநேசன்(பவன்), செயற்குழு உறுப்பினரும் வவுனியா மாவட்ட வட மாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோருடன் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
அம்பாறை பிரதேசத்தில் நேற்றைய தினம் உயர்தரப்பரீட்சையில் தோற்றிய மாணவி ஒருவரை அம்பாறை கல்வி காரியாலயத்திற்கு முன்பாக இருவர் முச்சக்கரவண்டி மூலம் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.
எனினும் குறித்த பாதையில் சென்ற பொதுமக்கள் மற்றும் அருகில் இருந்த பொலிஸாரும் மாணவியை மீட்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த முச்சக்கரவண்டியில் சாரதியுடன், மற்றுமொரு இளைஞரும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடத்தலை மேற்கொண்ட இளைஞனும் இம்முறை உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிவரும் மாணவன் என்றும், குறித்த மாணவிக்கும், மாணவனுக்கும் ஏற்கனவே காணப்பட்ட காதல் தொடர்பு தற்போது முறிந்துள்ளதாகவும் இதன்காரணமாகவே குறித்த மாணவன், மாணவியை கடத்துவதற்கு முற்பட்டிருந்ததாகவும் முச்சக்கரவண்டியின் சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த முச்சக்கரவண்டியில் இருந்து பாடசாலை சீருடை, போத்தல் வகைகள் ,கைத்தொலைபேசிகள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஐந்து வருட காலத்தில் மூன்று மனைவிகளை திருமணம் செய்த நபரை மாத்தளை குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் கடந்த மூன்று மாதங்களாக மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து 33 வயதான இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக 14 வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன் இரண்டு வழக்குகளில் நீதிமன்றம் இவருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் இந்த தண்டனை விதிக்கப்பட்டு 14 பிடி விராந்துகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
வீடுகளை உடைத்து பொருட்களை கொள்ளையிட்ட 14 குற்றச்சாட்டுக்களையும் இந்த சந்தேக நபர் எதிர்நோக்கியுள்ளார்.
மனைவியை தாக்கி பாரதூரமான காயங்களை ஏற்படுத்தியமை, மனைவிகள் மற்றும் பிள்ளைகளுக்கு நீதிமன்றம் வழங்குமாறு உத்தரவிட்ட இழப்பீட்டு தொகைகளை வழங்காமல் தவிர்த்து வந்தமை போன்ற வழக்குகளுக்கும் இந்த நபருக்கு எதிராக நடந்து வருகிறது.
இவ்வாறான குற்றங்களுக்கு குற்றத்தை ஏற்றுக்கொண்ட இரண்டு வழக்குகளில் இவருக்கு ஆறு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் குருணாகல் மெல்சிறிபுர பிரதேசத்தில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்திய போது, இந்த நபர் மூன்று பேரை சட்டரீதியாக திருணம் செய்துள்ளதாகவும் ஆறு பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனால் இந்த நபருக்கு எதிராக பல திருமணங்களை செய்த குற்றச்சாட்டிலும் வழக்கு தொடரவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் நாளாந்தம் பயன்படுத்தும் மதுபான அளவை விட இலங்கை மக்கள் ஐந்து மடங்கு மதுபானத்தை அருந்துவதாக புகையிலை மற்றும் மதுசாரங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையை சேர்ந்த ஒருவர் தினமும் 3.3 லீற்றர் மதுபானத்தை அருந்துகிறார். ஐரோப்பாவில் ஒருவர் தினமும் 0.5 லீற்றர் மதுபானத்தையே அருந்துகிறார்.
இலங்கையில் மக்கள் தொகையில் 20 சத வீதமானவர்களே மதுபானம் அருந்துகின்றனர். ஐரோப்பாவில் 95 வீதமான மக்கள் மதுபானத்தை அருந்துகின்றனர்.
இலங்கையில் 37.1 வீதமான ஆண்களும் 2.4 வீதமான பெண்களும் 40 ஆயிரம் இளையோரும் மதுபானத்தை அருந்துகின்றனர்.
பெண்கள் மதுபானத்தை அருந்துவது 1.2 வீதத்தில் இருந்து 2.4 வீதமாக உயர்ந்துள்ளது எனவும் பாலித அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.
சூரியவௌ-விகாரகர பிரதேசத்தில் திருமண நிகழ்வின் விருந்தொன்றிட்காக கொண்டுவரப்பட்ட மான் இறைச்சி 25 கிலோவை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் நேற்று கைப்பற்றியுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய வீடொன்றை சுற்றிவளைத்த போதே குறித்த வீட்டின் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மான் இறைச்சியை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை துப்பாக்கியால் சுட்டே மானினைக் கொன்று இறைச்சியை எடுத்துள்ளதாக வனஜீவராசிகள் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று துபாயில் அவசரமாக தரையிறங்கிய போது விமானத்தின் பின்பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் பயத்தில் அலறித் துடித்தனர்.
நேற்று மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் ரக விமானம் 282 பயணிகள் மற்றும் 18 விமான குழு என 300 பேருடன் துபாய்க்கு சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் விமானி துபாய் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அவசரமாக விமானத்தை தரையிறங்க அனுமதி கேட்டார்.
உடனடியாக விமானத்தை தரையிறக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் விமானம் தரையில் தரையிறங்கும் பொழுது, திடீரென விமானத்தின் பின்பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பெரும் கூக்குரல் இட்டு கதறத் தொடங்கினர்.
இந்த விமானம் கேரளாவில் இருந்து புறப்பட்டுச் சென்றமையினால் அதற்குள் புலம்பெயர் தமிழர்களும் இருந்திருக்கின்றார்கள்.
இந்நிலையில் அவர்கள் விமானம் விபத்துக்குள்ளானதை உணர்ந்த பயணிகள் பெரும் பதட்டத்துடன், அல்லோலகல்லோலப்பட்டனர். இந்நிலையில் இது தொடர்பான காணொளிகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை குறித்த விமானத்தில் பிரித்தானிய குடியுரிமை பெற்ற இருபத்து நான்கு பேர் பயணித்திருக்கின்றார்கள். அதுதவிர, 20 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்த விமானத்தில் பயணித்திருக்கின்றார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பெரும்பாலான பயணிகள் இந்தியாவினை சேர்ந்தவர்கள். எவ்வாறெனினும், எந்தப் பயணிகளுக்கும் பாதிப்பில்லாத வகையில் மீட்கப்பட்டுள்ளனர்.