உலகில் எட்டில் ஒருவர் பட்டினியால் வாடுவதாக ஐநா அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலவும் சூழல் குறித்து ஆராய்ந்த இந்த அறிக்கை 80 கோடி மக்கள் மோசமான பசியால் வாடுவதாகத் தெரிவித்துள்ளது.
சுறுசுறுப்பான, ஆரோக்கியமான வாழ்க்கையை பேணக்கூடிய அளவுக்கு உண்ணும் வசதியில்லாதோரே இந்தப் பட்டியலில் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட எண்ணிக்கையை விட சற்றே குறைவு என்றாலும், 2015ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டிய வளர்ச்சி இலக்குகளை தொடாமல் போகக் கூடிய சாத்தியம் இருப்பதைத்தான் இது காட்டியுள்ளதாக இந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் ஷேவாக், கம்பீரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
மோசமான போம் காரணமாக மூத்த வீரர்கள் ஷேவாக், கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் ஷகீர்கான் ஆகியோர் தொடர்ந்து அணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இதில் யுவராஜ் சிங் மட்டும் தற்போது அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ளார் மற்ற வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டனர். தங்களையும் தெரிவு செய்து விடுவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த ஷேவாக், கம்பீருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
எனவே இவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது, ஷேவாக் கடைசியாக கடந்த ஜனவரி மாதம் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
கம்பீர் இங்கிலாந்து தொடருக்கு நீக்கப்பட்டார். அதன்பிறகு அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கவில்லை.
ஷகீர்கான், ஹர்பஜன் சிங்கும் இதே நிலையில்தான் உள்ளனர். ஆனால் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை அவர்கள் மீண்டும் இடம்பெற முடியாது என்று கூறிவிட இயலாது.
சீனாவில் 40 அடி ஆழ்குழாயில் விழுந்த 2 வயது சிறுவன் ஒருவன் அப்பிள் ஐபோன் கமரா உதவியுடன் மீட்கப் பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
சீனாவில் யுன்னான் மாகாணத்தில் மெங்ஷி நகரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வயலில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் ஒருவன் எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.
சிறுவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் ஆழ்குழாய் கிணற்றுக்குள் மிக நீளமான கயிற்றை இறக்கி அதை பிடித்து கொள்ளும்படி சிறுவனுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதற்குள் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புபடை மற்றும் பொலிசார் ஆழ்குழாய்க்குள் சிறுவன் சிக்கியிருக்கும் இடத்தையும், அவனின் நிலைமையை அறியவும் முடிவு செய்தனர்.
நீளமாக கயிறு ஒன்றில் அதிநவீன அப்பிள் ஐபோனில் கமராவை ஓன் செய்து உள்ளே இறக்கியுள்ளனர். இதில் சிறுவன் சுமார் 40 அடி ஆழத்தில் சிக்கியிருப்பது தெரியவந்தது. உடனடியாக, ஆழ்குழாய்க்குள் சிறுவன் மூச்சு திணறாமல் இருக்க ஒக்சிஜன் சிலிண்டரும், இருட்டில் பயப்படாமல் இருக்க டோர்ச் விளக்குகளும் அடிக்கப்பட்டன.
அதை தொடர்ந்து குதிரைக்கு இடப்படும் சேணம் போன்று அமைத்து அதை சிறுவன் சிக்கியிருந்த தூரம் வரை பலமான கயிற்று மூலம் இறக்கினர். அதன் மூலம் சிறுவனை உயிருடன் பத்திரமாக மீட்கப் பட்டான். லேசான சிராய்ப்புகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட அச்சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கைப்பேசிகளை உருவாக்குவது போன்று தற்போது ஸ்மார்ட் கடிகார உற்பத்தியும் சூடு பிடித்துள்ளது.
இதன் அடிப்படையில் அப்பிள், சம்சுங், சொனி என்பவற்றினை தொடர்ந்து தற்போது அன்ரோயிட் இயங்குதளத்துடன் கூடிய A.I ஸ்மார்ட் கடிகாரங்கள் அறிமுகமாகவுள்ளன.
1.2GHz Processor,உட்பட 3G வலையமைப்பு போன்ற தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ள இதன் ஆரம்ப விலையானது 279 டொலர்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களின் இருதயங்களைச் சாப்பிடும் அளவிற்கு கொடூரமாக உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராகவே சிரியாவில் போர் நடைபெற்று வருவதாக ஐ.நா.சபை கூட்டத்தில் தெரிவித்துள்ளார் சிரிய வெளியுறவுத்துறை அமைச்சர்.
சமீபத்தில் சிரியாவில் அதிபர் பஷர்- அல் ஆசாத்துக்கு எதிராக போராடும் மக்கள் மீது ராணுவம் ரசாயன குண்டு வீசி தாக்கியதில் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் பலியாகினர். இப்பிரச்சினை உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்கா சிரியாவின் மீது தாக்குதல் மிரட்டல் விடுத்தது. அதனைத் தொடர்ந்து ரசாயன ஆயுதங்களை அழிக்க சிரியா சம்மதித்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொண்ட சிரியா வெளியுறவுத் துறை அமைச்சர் வாலித் அல்- மொயல்லம் அங்கு கூறியதாவது..
சிரியாவில் வன்முறையில் ஈடுபட்டு வரும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக போர் நடைபெற்று வருகிறது. அதை சில நாடுகள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன. ராணுவத்துடன் போரிட்டு வரும் தீவிரவாதிகள் அரசுக்கு ஆதரவாக இருக்கும் பொதுமக்களை கடத்தி சென்று அவர்களை கொலை செய்கின்றனர்.
பின்னர், அவர்களின் இருதயங்களை சாப்பிடுகின்றனர். அதுமட்டுமின்றி கடத்தப்பட்டவர்களின் உடல் உறுப்புகளை தனித்தனியாக பிரித்தெடுக்கின்றனர். கை, கால்களை மட்டும் அவர்களின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்து மிரட்டுகின்றனர்.
இக்காட்சிகள் அடங்கிய வீடியோ கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் ஒரே கருமுட்டையில் உருவான ஒரே உருவத்திலான 3 பெண் குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறந்த அபூர்வ பிரசவம் நிகழ்ந்துள்ளது.
இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ்சில் பான்டிபூல் பகுதியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் கில்பெர்ட். கர்ப்பத்தை உறுதி செய்வதற்காக மருத்துவமனைக்குச் சென்றவருக்கு சோதனையில் ஒரே கருமுட்டையில் ஒரே மாதிரியான 3 குழந்தைகள் கர்ப்பப் பையில் உருவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோன்று ஒரே கருமுட்டையில் ஒரே மாதிரியான 3 குழந்தைகள் உருவாவது ஆபூர்வமான மருத்துவ விந்தை எனவும் 20 கோடி பெண்களில் ஒருவருக்குதான் இது நடைபெறும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து கில்பெர்ட்டை முழுமையாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் இக்குழந்தைகளை தாங்கி சுமந்து பெற்றெடுக்கும் வகையில் கில்பெர்ட் உடல் நிலை இல்லை என்பதைக் கண்டறிந்தனர்.
எனவே இக்குழந்தைகளை கருக்கலைப்பு செய்து விடுவது நல்லது என அறிவுரையும் வழங்கினார்கள். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத கில்பெர்ட்டும் அவரது கணவரும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் குழந்தைகளை வளர்க்க முடிவு செய்தனர்.
அதன்படி மருத்துவர்களின் ஒத்துழைப்போடு கடந்த மார்ச் மாதத்தில் நியூபோர்ட்டில் உள்ள ரோயல் ஜிவென்ட் மருத்துவமனையில் கில்பெர்ட்டுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்தன.
தலா 1.75 கிலோ எடை இருந்த அக்குழந்தைகளுக்கு பியான், மட்டிசன், பாய்ஜ் என பெயரிடப்பட்டுள்ளது. 6 வாரங்கள் மருத்துவமனை பராமரிப்பில் இருந்த தாயும் குழந்தைகளும் சமீபத்தில் வீடு திரும்பினர்.
இலங்கைக்கு போர்க் கப்பல் வழங்கப்படுவது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு மேல் நீதிமன்றம் விபரம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள எட்டிமங்கலத்தை சேர்ந்த சட்டத்தரணி பி.ஸ்டாலின் லே நீதிமன்ற கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், இலங்கை அரசுக்கு 2 போர்க்கப்பல்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்குவதை கைவிடக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன்.
மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்க தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், வேணுகோபால் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் சட்டத்தரணி பீட்டர் ரமேஷ்குமார் ஆஜராகி வாதிடுகையில், “தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு சிறைபிடிக்கப்படுகின்றனர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தால் அந்நாட்டுக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இலங்கையை நட்பு நாடாகக் கருதக்கூடாது, பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என தமிழக அரசே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்நிலையில், இரண்டு போர்க் கப்பல்களை இலங்கைக்கு அளிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
எனவே, இலங்கைக்கு கப்பல் வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும்,“ என்றார்.
மத்திய அரசு சார்பில் சட்டத்தரணி ராமச்சந்திரன், தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆகியோர் ஆஜராகினர்.
இலங்கைக்கு போர்க் கப்பல் வழங்கப்படுவது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு மேல் நீதிமன்றம் விபரம் தெரிவிக்க வேண்டும்.
மேலும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பாக மேல் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு நகலையும் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு சட்டத்தரணிக்கு நிதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு வரும் 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நீல நிறத்திலான லுங்கி, மஞ்சள் கலர் சட்டை மற்றும் பச்சை கலர் கண்ணாடி என அதிரடியாக தோற்றமளித்துள்ளார் டோனி. இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அனைவருமே படு ஸ்டைலாக வந்துள்ளனர்.
நல்ல நீல நிறத்திலான லுங்கி, மஞ்சள் கலர் சட்டை மற்றும் பச்சை கலர் கண்ணாடி என அசத்தலாக இருந்தார் டோனி. இவருடன் அவரது மனைவி சாக்ஷியும் காணப்பட்டார்.
சுரேஷ் ரெய்னாவோ மஞ்சள் கலரில் டிசேட்டும் கீழே கட்டம் போட்ட பைஜாமாவும் அணிந்து இருந்தார்.
இதேபோன்றே அல்பி மோர்க்கலும் சுற்றி திரிந்தார்.
ஆனால் அஸ்வினோ லுங்கிக அணியாமல், பைஜாமாவில் வித்தியாசமாக காணப்பட்டார். இவருடன் துணைக்கு மைக்கல் ஹஸியும் இருந்தார்.
ரவீந்திர ஜடேஜாவுக்குத்தான் லுங்கி செம பொருத்தம். முறுக்கி விட்ட மீசையும், உருட்டுப் பார்வையும், சிவப்பு, கருப்பு, வெள்ளை கட்டம் போட்ட லுங்கியுமாக பயங்கரமாக காட்சியளித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஏன் இந்த புதுக் கோலத்தில் காணப்பட்டனர் என்று குழப்பம் வரலாம். அதாவது, ஆடை வாரம் என்று ஒன்றை கொண்டாடினர் சென்னை அணியினர். அதன் பொருட்டே இப்படி ஆடை மாற்றம்.
கம்போடியாவில் போலி கடனட்டையைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கை மற்றும் மலேசியாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டு போலி கடனட்டைகள் மூலம் 50ஆயிரம் டொலருக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மலேசியாவைச் சேர்ந்த டெல்வின் ஜோசப் (30), இலங்கையைச் சேர்ந்த அருணாசலம் வினோராஜ் (34) ஆகியோரே இணைந்து கூட்டு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் மலேசியாவைச் சேர்ந்த டெல்வின் என்பவரே இம் மோசடிக்கு முக்கிய புள்ளி என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து கைது செய்யப்பட்ட இலங்கையரான வினோராஜ் தெரிவிக்கையில்..
டெல்வின் ஜோசப், கைது செய்யப்படுவதற்கு ஒருமாதத்திற்கு முன்னர் தான் எனக்கு அறிமுகமானார். அவர், கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி கைது செய்யப்பட்டார்.
அவர் இதுவரையில் எனக்கு 36 போலியான கடனட்டைகளைத் தந்துள்ளார். அவற்றை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதாகவம் அவற்றை டெல்வினிடமே கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்தப் பணத்திலிருந்து தனக்கு 10 வீதம் மட்டுமெ அவர் கொடுப்பதாகவும் மீதியை அவர் வைத்திருப்பதாகவும் வினோராஜ் குறிப்பிட்டார்.
பொலிஸார் 40 ஆயிரம் டொலர் அல்லது 50 ஆயிரம் டொலர் மோசடி செய்துள்ளதாக தன்னைக் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அது உண்மையில்லை என கம்பொடியாவின் ஃப்னோம் பென் மாநகர நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கு விசாரணையை ஒக்டோபர் 11ம் திகதிக்கு ஃப்னோம் பென் மாநகர நீதிமன்ற நீதவான் ஒத்திவைத்துள்ளார்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் திருவனந்தபுரத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் ராஜா ராணி படம் பார்த்துள்ளார்.
புதுமுக இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் உள்ளிட்டோரை வைத்து எடுத்த படம் ராஜா ராணி.
படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. படத்தை பார்த்தவர்கள் இயக்குனர் கதை சொன்ன விதம் வித்தியாசமாக இருந்தாலும் படத்தை பார்க்கையில் அதுவும் குறிப்பாக ஜெய்யின் கதாபாத்திரத்தை பார்க்கையில் மௌன ராகம் கார்த்திக் நினைவுக்கு வருகிறார் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரம் சென்று அங்குள்ள கைராலி திரையரங்கில் ராஜா ராணி படத்தை பார்த்துள்ளார்.
ஸ்டாலின் திரையரங்கில் இருந்து வெளியே வந்ததை பார்த்த செய்தியாளர்கள் தமிழ் படத்தை பார்க்க நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் வந்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவரோ படம் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
ஒரே மரத்தில் 250 வகையான அப்பிள்களை காய்க்க செய்யும் வினோத மரத்தை வளர்த்து தோட்டக்காரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
ஜேர்மனியின் வெஸ்ட் சஸ்சக்ஸ் பகுதியில் உள்ள சித்ஹாம் என்ற இடத்தை சேர்ந்தவர் பவுல் பார்னெட்(40). இவர் தனது தோட்டத்தில் வினோத மரம் ஒன்றை வளர்த்துள்ளார். இதில் பல்வேறு வகையான 250 வகையான அப்பிள்கள் ஒரே மரத்தில் காய்த்துள்ளன.
இதுகுறித்து பவுல் பார்னெட் கூறுகையில் நான் ஆரம்பத்தில் ஒரு சிறுவர் பாடசாலையில் தோட்டக்காரனாக பணிபுரிந்தேன். அந்த சிறுவர் பாடசாலை பல ஏக்கர் பரப்புடைய நிலப்பரப்பில் அமைந்திருக்கும். அதில் ஒரு வரிசையில் சுமார் 90 அப்பிள் மரங்கள் நடப்பட்டிருக்கும்.
அப்போதிருந்தே நான் அப்பிள் மரங்களை வளர்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவ்வளவு மரங்களை வளர்ப்பதற்கு ஏற்ற பரந்த நிலபரப்பு என்னிடம் இல்லை. எனவே எனது வீட்டின் தோட்டத்தில் இருக்கும் அப்பிள் மரத்தையே பல்வேறு ரகங்களை கொண்ட அப்பிளை காய்க்கும் மரமாக வளர்க்க திட்டமிட்டேன்.
கடந்த 20 வருடங்களாக மிகவும் கவனத்தோடு பல்வேறு ரக அப்பிள் மரங்களின் ஒட்டு ரகங்களை வைத்து எனது அப்பிள் மரத்தை வளர்த்து வருகிறேன். தற்போது 20 அடி உயரம் வளர்ந்துள்ள எனது ஒரே அப்பிள் மரத்தில் சமையலுக்கு பயன்படும் அமெரிக்க அப்பிள் முதல் 1883ம் ஆண்டு ரகத்தைச் சேர்ந்த வித்திங்டன் பில்பாஸ்கெட், 1908ம் ஆண்டைச் சேர்ந்த எட்டீஸ் மேக்னம் போன்ற பல்வேறு ரகங்களும் எனது மரத்தில் காய்த்து குலுங்குகின்றன என பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இவரது மரத்தில் காய்க்கும் அப்பிள்களை பொதுமக்கள் வந்து ஆர்வத்துடன் பார்த்து வாங்கி சுவைத்து நன்றாக இருப்பதாக பாராட்டுகின்றனர். இந்த மரம் தற்போது ஜேர்மனியில் பிரபல்யமடைந்து வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகித்தவர் யார் என்ற விவரத்தை வெளியிட்டுள்ளார் மைக்கல் ஹஸி.
ஐபிஎல் சூதாட்ட வழக்கில் பிசிசிஐயின் தலைவர் சீனிவாசனின் மருமகனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து குருநாத் சென்னை அணியின் சிஇஓ இல்லை கிரிக்கெட்டில் ஈடுபாடு உடையவர் மட்டுமே என சீனிவாசன் தெரிவித்து வந்தார்.
இந்த விவகாரத்தால் தனது பதவியை ராஜினாமா செய்த சீனிவாசன் மீண்டும் மூன்றாவது முறையாக தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில் மைக்கல் ஹஸி, அன்டர்நீத் தி சதன் கிராஸ் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இதில் சென்னை அணியை நிர்வகித்தவர் குருநாத் மெய்யப்பன் தான் அவருக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்கியது அவரது மாமனார் சீனிவாசன் தான் என தெரிவித்துள்ளார். இவர் சூதாட்டத்தில் பெட் கட்டும் போது சென்னை அணியின் இரகசியங்களை ஆட்ட யுக்திகளை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு கடலில் கடற்படையினர் மீதான தாக்குதலுக்கு தலைமைத்துவம் வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கொன்றில் சந்தேக நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் இதற்கான தீர்ப்பினை வழங்கினார்.
பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த செல்லப்பா இன்பகுமார் (37) என்பவர் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குறித்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.
2001 செப்டெம்பர் மாதத்திற்கும் நவம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் சந்தேக நபர் செல்லப்பா இன்பகுமார் முல்லைத்தீவு கடற்புலிகள் பிரிவில் பதில் கடற்புலிகள் தலைவராக செயற்பட்ட போது கடற்படையினர் மீதான தாக்குதலுக்குத் தலைமை வகுத்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.
வழக்கு தொடுநரான சட்டமா அதிபரால் சந்தேக நபரின் ஒப்புதல் வாக்கு மூலம் மட்டுமே குற்றச்சாட்டுக்கான சாட்சியமாக முன் வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேகநபர் செல்லப்பா இன்பகுமார் ஒப்புதல் வாக்கு மூலத்தை சுயமாக வழங்கவில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டதால் ஒப்புதல் வாக்கு மூலத்தை சாட்சியமாக ஏற்க நீதிமன்றம் அனுமதி வழங்காது நிராகரித்தது.
இந்நிலையில் குற்றச்சாட்டை நிருபிக்க வேறு சாட்சியங்களின்மையால் சந்தேக நபரை குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்வதாக நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் தீர்ப்பு வழங்கினார்.
எந்த ஒரு பிரச்னையையும் சமாதானமாக பேசி முடிக்கும் சாமர்த்தியமும், அனுபவ அறிவும் மிகுந்தவர் நீங்கள். இந்த மாதம் வீடு, வாகனம் வாங்கும் யோகத்தை தருவதுடன் உடல் ஆரோக்கி யத்தையும், மன வலிமையையும் மேம்படுவதாக அமையும். இதுவரை உங்கள் மனதை வாட்டி வந்த சிக்கல்கள் தீரும்.
உங்கள் ராசியாதிபதியான குரு தற்போது ராசிக்கு 4ல் அமர்ந்து பல இலாபங்களை தரப்போகிறார். அத்துடன் பணவரத்தும் திருப்தி தருவதாக உள்ளது. வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் செல்ல நேரிடலாம்.வியாபாரத்தில் திட்டமிட்ட காரியங்களை செய்து முடிக்க தாமதம் ஏற்படும்.
குருவின் சுக ஸ்தான இருப்பால் புதிய வீடு கட்டும் பணி அல்லது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெறும். வாகனங்களை மாற்றுவீர்கள். பொன்னும், பொருளும் தருவார். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெயரும், புகழும் கிடைக்கும். உங்களது சேமிப்பும் குறையலாம். விருப்பத்திற்கு மாறாக இடமாற்றம் உண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பணியாட்களால் பொருள் நஷ்டம் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.
சுக்கிரனின் சஞ்சாரம் அனைத்து வகையிலும் நன்மையை அளிக்கும். பணவரத்து பலவழிகளிலும் இருக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மனைவியின் உடல்
நிலையில் கவனம் தேவை. பல்வேறு வகையிலும் புகழ் உண்டாகும். சொத்துக்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. பெண்கள் இந்த மாதம் அதிகமாக விருந்து, சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடக்கும்.
மாணவர்கள் ஆர்வமுடன் பாடங்களை படிப்பார்கள். கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். சக மாணவர்களின் உதவியும் கிடைக்கும். கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொருளாதாரரீதியாகவும் சிறப்பாக பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த புகழும் பாராட்டும் கிடைக்கும்.
பரிகாரம் : முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்னை தீரும்.
சந்திராஷ்டமம் : 7, 8 ஆகிய திகதிகளில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடாதீர்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீ காலபைரவாய நமஹ” என்ற மந்திரத்தை 15 முறை சொல்லவும்.
சிறப்பு பரிகாரம் : வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு தேங்காயில் நெய் விளக்கு ஏற்றவும்.
ஒரு பார்வையிலேயே மற்றவரை எடைபோடும் திறமையுள்ள நீங்கள், எடுத்த காரியத்தில் எந்த தடை வந்தாலும் பின்வாங்க மாட்டீர்கள். இந்த மாதம் உங்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல விதமாக வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
பணவரத்து குறையலாம். வாகனம், வீடு மூலம் செலவுகளும் அவ்வப்போது ஏற்படலாம். குரு பார்வையின் பலனால் பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் குறையும். அதன் மூலம் வருமானம் கிடைக்கும். குழந்தைகளின் புத்திசாதூர்யம் அதிகரிக்கும்.
எழுத்துத் துறையில் இருப்பவர்கள் திறமை முழுமையாக வெளிப்படும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். கணவன் – மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களோடு இருந்த பிரச்னைகள் தீரும். தற்போது உங்கள் ராசிக்கு 3ல் சஞ்சாரம் செய்யும் கேதுவின் மூன்றாம் பார்வையால் மனதில் அவ்வப்போது ஏதாவது கவலை இருந்து கொண்டேயிருக்கும்.
குடும்பத்தில் குழப்பம், பணதட்டுப்பாடு போன்றவை வந்து நீங்கும். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது. குடும்பத்தில் பல ஆறுதலான விஷயங்கள் நடக்கும். எவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டாலும் எதிர்ப்புகள் இருக்காது. தொழில் போட்டியும் இருக்காது.
சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு இந்த மாதத்தின் முற்பகுதியில் பல நன்மைகள் நடக்கும். பிற்பகுதியில்தான் வீண் அலைச்சலும் செலவும் உண்டாகும். எதிலுமே எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.
மாணவர்கள் மிகவும் கவனமாக அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால், கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும்.
பரிகாரம் : விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
சந்திராஷ்டமம் : 5, 6, 31 ஆகிய திகதிகளில் வாகனத்தை நிதானமாக இயக்குங்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீகைலாஸவாசினே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை கூறவும்.
சிறப்பு பரிகாரம் : மரிக்கொழுந்து வாங்கி அம்மனுக்கு சாற்றி வாருங்கள். இயன்றவர்கள் பச்சை நிறத்தில் பட்டும் வாங்கி சாற்றலாம்.