மாடி ஏற முடியாமல் படியிலேயே படுத்துத் தூங்கும் குண்டு மனிதர்!!

1

அயர்லாந்தைச் சேர்ந்த 44 வயதான ரிட்சி டோயில் என்பவர் தனது உடல் எடையால் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளார். தனது சொந்த வீட்டில் படுத்துத் தூங்கக் கூட அவரால் முடியவில்லை. அதாவது வீட்டுக்குள்ளேயே போக முடியவில்லை.

காரணம் பல மாடிப் படிகளை ஏறிக் கடக்க முடியாமல் படியிலேயே படுத்துத் தூங்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாராம். நடந்து நடந்து காலெல்லாம் புண்ணாகி பார்க்கவே படு பரிதாபமாக இருக்கிறது இவரது நிலை. அந்த பரிதாபத்துக்குரியவரின் பெயர் ரிட்சி டோயில். 44 வயதாகும் இவர் பான்ட்ரி என்ற ஊரில் வசித்து வருகிறார்.

தனக்கு கீழ்த்தளத்தில் ஏதாவது ஒரு வீட்டை ஒதுக்கிக் கொடுக்குமாறும் அவர் நகராட்சிக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். படியே இல்லாத வீடாக இருந்தால் ரொம்பப் புண்ணியமாகப் போகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொஞ்சம் கூட இவரால் நடக்க முடியாதாம். அப்படியே நடந்தாலும் உடனே ஒட்சிசன் ஏற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு விடுமாம். கடந்த ஒரு வருடமாக மாடியில் உள்ள வீட்டுக்குப் போக முடியாமல் படியிலேயே கழித்து வருகிறார் இவர்

தனது நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக கூறும் டோயில் தனக்கு கீழ்த்தளத்தி்ல இருப்பது போல வீடு கிடைத்தால் நல்லது என்று அதற்காக விண்ணப்பித்து போராடி வருகிறார். மாடிப் படியிலேயே தங்கியிருப்பதால் சாலையில் போகும் வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை மாசு வேறு இவரை சிரமப்படுத்தி வருகிறதாம்.

தனது உடலில் கார்பன் மோனாக்சைட் விஷம் ஏறி வருவதாக வைத்தியர்கள் கூறியுள்ளதாகவும் சொல்கிறார் டோயில். கீ்ழ்த்தளத்தில் உள்ள பாத்ரூமுக்கு மட்டுமே அவர் நடந்து போகிறார். மற்றபடி மறுபடியும் படியிலேயே வந்து செட்டிலாகி விடுகிறார்.

தற்போது அயர்லாந்தில் பயங்கர வெயில் காலம். எனவே காற்று இல்லாமல் வியர்வையில் குளித்துக் கொண்டிருக்கிறாராம் ரிட்சி. அது வேறு இவரை கஷ்டப்படுத்துகிறதாம்.

எப்போதும் குடித்துவிட்டு ஊர் சுற்றும் மகனை கொன்ற தந்தை!!

murder

எப்போது பார்த்தாலும் குடித்து விட்டு ஊரைச் சுற்றி வந்த மகனை கொன்று விட்டார் தந்தை. வேலூரில் இந்த பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது.

சத்துவாச்சாரி பகுதியில் மரக்கடை வைத்திருப்பவர் குருலிங்கம். இவர் தனது மரக்கடையில் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் வெளியாகி இறந்து கிடந்தார். இதையடுத்து போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் குருலிங்கத்தின் தந்தை நடராஜன் சிக்கினார். அவரிடம் விசாரித்ததில் அவர்தான் குருலிங்கத்தைக் கொன்றது தெரிய வந்தது. அவரும், இன்னொரு மகன் குமரேசனும் சேர்ந்து குருலிங்கத்தை கட்டையால் அடித்துக் கொன்றுள்ளனர்.

குருலிங்கம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். எந்த வேலையையும் உருப்படியாக செய்யாமல் ஊரைச் சுற்றி வந்துள்ளார். பலமுறை நடராஜன் அறிவுரை கூறியும் அவர் கேட்கவில்லை. 2 நாட்களுக்கு முன்பு இரவு குருலிங்கத்திற்கும், நடராஜனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.

அப்போது அங்கு குமரசேனும் இருந்துள்ளார். சண்டை முற்றியதில், குமரேசனும், நடராஜனும் சேர்ந்து கட்டையை எடுத்து சரமாரியாக குருலிங்கத்தை அடித்தனர். இதில் அவர் உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிய வந்தது.

மானாட மயிலாட புகழ் கீர்த்தியை மணக்கும் சாந்தனு!!

santhanu

சாந்தனு பாக்யராஜ் மானாட மயிலாட புகழ் கீர்த்தியை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இயக்குனர் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு சக்கரக்கட்டி படம் மூலம் ஹீரோவானார்.

அவர் சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது வாய்மை, அமளி துமளி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சாந்தனுவுக்கும் மானாட மயிலாட புகழ் கீர்த்திக்கும் விரைவில் திருமணம் நடக்கப் போகிறதாம். கீர்த்தியின் அம்மா ஜெயந்தி ஒரு நடனப் பள்ளியை நடத்தி வருகிறார்.

அங்கு சாந்தனு அடிக்கடி செல்வாராம். அப்போது தான் கீர்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம்.

மஞ்சுளாவை இழந்து வாடும் குடும்பத்துக்கு நன்றி – வாய் உழறிய விஜய்காந்த்!!

vijayakanth

மஞ்சுளாவின் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும்போது வார்த்தை தடுமாறி நன்றி என்று கூறிவிட்டார்.

இதனால் சுற்றியிருந்தவர்கள் சங்கடத்தில் நெளிய நேர்ந்தது. விஜயகுமார் – மஞ்சுளா தம்பதிகளுக்கு மிக வேண்டிய நெருக்கமானவர்களில் ஒருவர் விஜயகாந்த். குடும்பத்தில் ஒருவரைப் போலத்தான் பழகினார்.

இந்தநிலையில் மஞ்சுளா மறைந்த செய்தி அறிந்ததுமே மனைவியுடன் விஜயகுமாரின் வீட்டுக்கு விரைந்து வந்தார் விஜயகாந்த். விஜயகுமாரை கட்டிப்பிடித்து அழுதார். அவருக்கு ஆறுதல் கூறினார்.

உடன் வந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் விஜயகுமார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் விஜயகாந்தை தொலைக்காட்சி செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு ஏகப்பட்ட மைக்குகளை முகத்துக்கு நேரே நீட்டினர்.

அப்போது அவர் பேசுகையில்,

நடிகை மஞ்சுளா எம்ஜிஆர், சிவாஜி போன்ற முன்னணி கலைஞர்களோடு பணியாற்றினாலும் கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் பழகினார். அவர் குடும்பத்தில் ஒருவராக இருந்தோம். எப்போது அவரது வீட்டுக்கு வந்தாலும் மோர், நல்ல உணவு தந்து உபசரிப்பார்.

குறிப்பாக அவர் தன் மூன்று பெண் பிள்ளைகளையும் பையனுக்கு நிகராக வளர்த்தார். இப்படி சொல்லிக் கொண்டே வந்த விஜயகாந்த், என்ன சொல்றதுன்னே தெரியல மஞ்சுளாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த நன்றி என்றவர் சட்டென சுதாரித்து “நன்றிங்கறேன்” என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இருபதுக்கு-20 தரவரிசையில் இலங்கை தொடர்ந்து முதலிடம்!!

sl

சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள இருபதுக்கு 20 தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஜூலை 27-ம் திகதியன்று பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகளிடையே 2 இருபதுக்கு 20 போட்டிகள் நடைபெற உள்ளன.

அதற்கு முன்னதாக இன்று இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் 134 புள்ளிகளுடன் இலங்கை அணி முதலிடத்திலும், 127 புள்ளிகளுடன் மேற்கிந்திய தீவுகள் அணி 2வது இடத்திலும் இருக்கின்றன. இந்திய அணி 121 புள்ளிகளுடன் தொடர்ந்து 3வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

118 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 4, 113 புள்ள்களுடன் இங்கிலாந்து 5, தென்னாப்பிரிக்கா 112 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளன.

பேஸ்புக் விபரீதம் – திருமணமான ஒரே மாதத்தில் தமிழ் பெண் தற்கொலை!!

facebook

பேஸ்புக்கில் இளைஞர் ஒருவர் செய்த விளையாட்டு விபரீதமாகி ஒரு பெண்ணை தூக்கில் தொங்கவைத்த சம்பவம் சென்னையில் நடந்தேறியுள்ளது. நாகப்பட்டினம் திருத்துறை பூண்டியைச் சேர்ந்த ரமேஷ்பாபுவுக்கும் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த அனு என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

தற்போது ஆடி மாதம் என்பதால் சென்னைக்கு வந்துள்ளார் அனு. அனுவின் பேஸ்புக் பக்கங்களை ரமேஷ் பாபு பார்த்த போது அவர் வேறு ஒரு இளைஞருடன் இருக்கும் புகைப்படம் இருந்துள்ளது.

இது தொடர்பாக நடந்த பஞ்சாயத்தில் தம்முடன் வேலை பார்த்த ஒரு இளைஞர்தான் அப்படியான ஒரு புகைப்படத்தை உருவாக்கி போட்டிருக்கிறார் என்று விளக்கமாக கூறியிருக்கிறார்.

ஆனால் ரமேஷ்பாபுவுக்கு சந்தேகம் தொடர்ந்துள்ளது. இதனால் மனம் உடைந்த அனு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

124 ஆண்டுகளின் பின் இலங்கையில் புதிய வகை நுளம்பு கண்டுபிடிப்பு!!

mos

பொரளை வைத்திய பரிசோதனை நிலையம் இலங்கையில் புதிய நுளம்பு இனமொன்றை கண்டுபிடித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் நுளம்பு குறித்து மேற்கொண்ட பரிசோதனையில் இந்த புதிய நுளம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்புகள் பரவிக் கிடக்கும் இடங்களில் இந்த புதிய நுளம்பு இனம் காணப்படுகின்றது. இந்த புதிய நுளம்பு இனம் டெங்கு நுளம்பு முட்டைகளை உண்பதாக முதல்கட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்பை போல் காணப்படும் இப்புதிய நுளம்பு மனித இரத்தம் உரிஞ்சுகிறதா என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சுமார் 124 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையில் புதிய நுளம்பு இனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் இதுவரை 17 நுளம்பு வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வைத்தியரைக் கொன்று ஆணுறுப்பை வெட்டி மனைவிக்குப் பார்சலாக அனுப்பிய பெண்!!

a

இந்திய உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு அரசு மருத்துவரைக் கொலை செய்த பெண் அவரது ஆணுறுப்பை வெட்டி வைத்தியரின் மனைவிக்குப் பார்சல் அனுப்பிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் இந்தக் கொலையைச் செய்தது இந்தப் பெண் தான் என்று போலீஸாருக்குத் தெரியாமல் இருந்தது. பின்னர் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பின்னர்தான் இக்கொலையில் ஒரு பெண்ணுக்குச் சம்பந்தம் இருப்பது தெரிய வந்தது. கொடூர கொலையை செய்துவிட்டு தலைமறைவான அந்தப் பெண்ணை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கான்பூரைச் சேர்ந்தவர் வைத்தியர் சதீஷ் சந்திரா. 42 வயதான இவர் கான்பூர் தெஹத் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் ரெனியா என்ற இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பிணமாகக் கிடந்தார்.

கொலையான சதீஷ் சந்திராவின் ஆணுறுப்பு தனியாக துண்டித்து எடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கொடூரக் கொலையால் கான்பூர் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரியும் அவர்கள் வேலை நிறுத்ததிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்தான் இக்கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கொலையைச் செய்தது ஒரு பெண் என்ற தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. சம்பவத்தன்று இந்தப் பெண் வைத்தியருடன் தென்பட்டுள்ளார். சல்வார் அணிந்திருந்தாராம். மேலும் அவருக்கு வயது 20களில் இருக்கலாம் என்றும் தெரிகிறது.

கொலைக்குப் பிறகு இந்தப் பெண் அங்குள்ள குரியர் நிறுவனத்திற்குப் போய் ஒரு பார்சலைக் கொடுத்துள்ளார். அந்தப் பார்சல் வைத்தியரின் மனைவி பெயருக்கு அனுப்பப்பட்டது. வைத்தியரின் மனைவி பார்சலைப் பிரித்துப் பார்த்தபோது அதில் ஆணுறுப்பு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பார்சல் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உடனடியாக இந்த ஆணுறுப்பை மருத்துவமனையில் ஒப்படைத்த போலீஸார் இது வைத்தியருடையதா என்பதைப் பரிசோதிக்க கோரியுள்ளனர். தற்போது இந்தப் பெண் குறித்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. காதல் பிரச்சினையா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

7.2 கோடி வயதுடைய டைனோசரின் வால் சிக்கியது உடம்பு எங்கே?? (படங்கள் இணைப்பு)

மெக்சிகோ நாட்டு பாலைவனம் ஒன்றில் 7.2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் வால் பகுதி படிமமாக கிடைத்துள்ளது. அந்த வாலுக்குரிய டைனோசரின் உடல் எங்கேயாவது இருக்கிறதா என்ற ஆராய்ச்சியில் தற்போது விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

மிகவும் அரிதாக இந்த வால் பகுதியானது முழுமையாக, பாதுகாக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ளது விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மெக்சிகோவில் டைனோசரின் படிமம் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த டைனோசர் வாலானது, பாசில் எனப்படும் படிம வடிவில் கிடைத்துள்ளது. வடக்கு மெக்சிகோவில் உள்ள பாலைவனப்பகுதியில் இந்த படிமம் காணப்படுகிறது. இந்த வால் பகுதியானது 5 அடி நீளத்திற்கு உள்ளது. மெக்சிகோவில் கிடைத்த முதல் டைனோசர் படிமம் இதுதான்.

இது டைனோசரின் ஒரு வடிவமான ஹாட்ரசோர் என்ற வகையைச் சேர்ந்ததாகும்.இதன் வால் பகுதியானது துண்டாகவில்லை. மாறாக முழுமையாக அப்படியே கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 20 நாட்கள் கஷ்டப்பட்டு மண்ணைத் தோண்டி இந்த படிமத்தை தற்போது முழுமையாக வெளிக்கொணர்ந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

வால் பகுதியின் எலும்புகள் அப்படியே கல்லாகியுள்ளன. பாறை வடிவில் காணப்படும் இவை அனைத்தும் சேதமடையாமல் முழுமையாக கிடைத்துள்ளன. வால் பகுதிக்கு அருகில் சில எலும்புகள் சிதறிக் கிடந்தன. அவை அந்த டைனோசரின் இடுப்பு பகுதி என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதன் வாய்ப் பகுதியில் ஆயிரக்கணக்கில் பற்கள் இருந்ததாம். இந்த பற்களை வைத்து தான் உண்ணும் ஆகாரத்தை முதலில் நன்றாக பொடித்து கூழாக்கி விடுமாம் இந்த டைனோசர். பிறகுதான் வயிற்றுக்குள் தள்ளுமாம்.

du6 du5 di d4 d3 d2

 

நானியின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய கமல்..!

naaeeநான் ஈ நாயகன் நானிக்கு, தன் ஆதர்ச நடிகர் கமல்ஹாஸனைச் சந்திக்க வேண்டும் என்று சிறுவனாக இருக்கும் போதிலிருந்தே ஆசையாம். ஆனால் சந்தர்ப்பம் அமையவில்லை.

நானி ஒரு நடிகராக உருவான பிறகு, தனது முன்மாதிரியாக நினைத்தது கமல்ஹாஸனைத்தான். அப்போதும் கூட கமலைச் சந்திக்கும் வாய்ப்பு நானிக்கு அமையவில்லை.

சமீபத்தில் ஹைதராபாதில் யாஷ்ராஜ் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நானிக்கு, பக்கத்து ப்ளோரில் கமல்ஹாஸன் தன் விஸ்வரூபம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் தகவல் தெரிந்தது.

இதுதான் கமலைச் சந்திக்க சரியான சமயம் என்று முடிவு செய்து, அனுமதி கேட்டார் நானி. உடனே வரச் சொன்ன கமல், நானியை அன்புடன் வரவேற்று உபசரித்தார்.

அதுமட்டுள்ள, தன்னுடன் நடித்துக்கொண்டிருந்த நாயகிகள் பூஜா குமார், ஆன்ட்ரியா இருவருக்கும் நானியை அறிமுகப்படுத்தியதோடு, சிறிது நேரம் நானி நடிக்கும் படங்கள் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தாராம்.

அவரது இந்த அன்பும் உபசரிப்பும் பேச்சும் தனக்கு வானில் பறப்பது போன்ற உணர்வைத் தந்ததாக நானி தெரிவித்தார்.

சொந்த தம்பியை கொலை செய்ய முயன்ற நவ்யா நாயர்..!

Navyaகொலிவுட்டில் அழகிய தீயே படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நவ்யா நாயர் தனது தம்பி கொலை செய்ய முயன்றதாக தெரிவித்துள்ளார்.
கேரளத்து நடிகையான இவர் மாயக் கண்ணாடி, ராமன் தேடிய சீதை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயான அவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து ஒரு புத்தகத்தை வெளியிடவிருக்கிறார்.

நவ்யா ரசங்கள் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் அவர் அதிர்ச்சியளிக்கும் ஒரு சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாகவே சிறு வயதில் பெற்றோரின் அன்பை பெற பிள்ளைகள் போட்டி போடுவது சகஜம்.

அவ்வாறு தான் நவ்யாயும் தனது பெற்றோரின் அன்பை பெற தன்னுடைய தம்பியுடன் போட்டி போட்டுள்ளார்.

அந்த போட்டியால் தம்பி மீது வெறுப்பு ஏற்பட்டு அவரை கீழே தள்ளி கொலை செய்ய முயன்றுள்ளார்.

இந்த விடயம் அவரது பெற்றோருக்கே இதுவரை தெரியாமல் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஷாருக்கானிடம் போட்டி போடும் சிவா..!

Sivaகொலிவுட்டில் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் சொன்னா புரியாது நடித்துவரும் சிவா, தனக்கு போட்டி ஷாருக்கான் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இப்படம் குறித்து சிவா கூறுகையில், ஆங்கில படங்கள் நிறைய தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.

ஜாக்கி சான், ஜெட்லி போன்றவர்கள் திடீரென்று சென்னை, நெல்லை, கோவை, மதுரை போன்ற இடங்களில் பேசுவது போல் தமிழ் பேசுகிறார்கள்.

நமது ஊரைச் சேர்ந்த டப்பிங் கலைஞர்கள் இவர்களுக்கு குரல் கொடுத்து வருகின்றனர்.

இதுபோல் ஆங்கில படங்களுக்கு தமிழ் டப்பிங் குரல் கொடுக்கும் வேடத்தில் நானும், வில்லன்களுக்கு குரல் கொடுப்பவராக பிளேடு சங்கரும் நடித்துள்ளோம்.

இப்படத்தில் இந்தி பாடல் ஒன்று வருகிறது. அதை யாரை எழுத வைப்பது என்று இயக்குனர் கேட்டபோது ‘எனக்கு இந்தி தெரியும் நானே எழுதுகிறேன்’என்றேன்.

முதலில் நம்பாத இயக்குனர், பின்பு வேறு வழியில்லாம் ஒப்புக் கொண்டார். அந்த பாடலை நானே பாடியும் இருக்கிறேன்.

திரையுலகில் உங்களுக்கு யார் போட்டி என்று கேட்கிறார்கள். சென்னை எக்ஸ்பிரஸ் என்ற இந்தி படத்தில் ஷாருக்கான் தமிழ் வசனம் பேசி, பாட்டு பாடுகிறார்.

நான் இந்தி பாடல் பாடி, வசனம் பேசி இருக்கிறேன். ஆதலால் எனக்கு ஷாருக்கான் தான் போட்டி என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

17 வருடங்களுக்குப் பின்னர் ஒன்றுசேர்ந்த இலங்கைத் தமிழர் குடும்பம்..!

17 வருட காலமாக பல்வேறு இன்னல்களையும், பிரிவையும், துயரத்தையும் சந்தித்த ஒரு இலங்கைத் தமிழர் குடும்பம் தற்போது ஒன்று சேர்ந்து சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

1996ம் ஆண்டு சேவலூர் அகதிகள் முகாமில் தங்கியிருந்த தங்களது தாய் புஷ்பராணியிடமிருந்து பிரிந்து சென்னைக்கு வந்தனர் அவரது குழந்தைகளான தற்போது 23 வயதாகும் திணேஷ், 20 வயதாகும் திரானி, 19 வயதாகும் டென்னிஸ் ஆகியோர்.

அதற்குப் பின்னர் இவர்களால் மீண்டும் சந்திக்கவே முடியவில்லை. சில நாட்களுக்கு முன்புதான் இந்த நால்வரும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

தாயை விட்டுப் பிரிந்து வந்த மூன்று குழந்தைகளும் சென்னைக்கு வந்தனர். அங்கு தங்க இடம் இல்லாமல், ஆதரிக்க யாருமில்லாமல் சென்னை மத்திய ரயில் நிலையத்தில் தங்கியிருந்தனர். ஒரு முறை இவர்களை அணுகிய ஒரு நபர், இவர்களை வேறு ஒருவருக்கு விற்க முயன்றுள்ளார். ஆனால் சிலநல்ல உள்ளங்களின் உதவியால் இவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

தற்போது மீண்டும் தாயுடன் சேர்ந்துள்ள இந்த மூன்று பேரும் அளவில்லாத மகிழ்ச்சியை அடைந்துள்ளனர்.

இவர்கள் அனாதரவாக சென்னையில் திரிந்தபோது சென்னை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டியால் தத்தெடுக்கப்பட்டனர். அவர்களது உதவியால், திரானி பி.ஏ. படிப்பை முடித்தார். திணேஷ் கணித பட்டப்படிப்பை முடித்து தற்போது ஆடிட்டர் அலுவலகம் ஒன்றில் பணியாற்றுகிறார். டென்னிஸ் பிளஸ்டூ முடித்துள்ளார்.

மீண்டும் தாயுடன் சேர்ந்தது குறித்து திரானி கூறுகையில், மீண்டும் எங்களது தாயுடன் சேருவோம் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. எங்களது தாயார் உயிருடன் இருக்கிறாரா என்று கூட நாங்கள் பயந்து கொண்டிருந்தோம். இன்று அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டோம். மீண்டும் இலங்கை செல்ல கடவுச்சீட்டுக்காக காத்திருக்கிறோம் என்றார்.

புஷ்பராணி கூறுகையில், நாங்கள் 1996ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தோம். அப்போது இலங்கையில் போர் உக்கிரமடைந்திருந்தது. டென்னிஸ் இந்தியாவில்தான் பிறந்தான். திரானி இலங்கையில் பிறந்தவள். என்னால் எனது மூன்று குழந்தைகளையும் வைத்துப் பராமரிக்க முடியவில்லை. இதையடுத்து எனது கணவருடன் குழந்தைளை அனுப்பி வைக்க முடிவு செய்தேன்.

நான் சவூதி அரேபியாவில் வீட்டு வேலை பார்க்கப் போய் விட்டேன். நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் நான் மீண்டும் முகாமுக்குத் திரும்பினேன். அதன் பிறகு என்னால் எனது குழந்தைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் சென்று விட்டேன் என்றார்.

தாயாரை விட்டுப் பிரிந்த இந்த மூன்று சகோதர, சகோதரிகளும், தங்களது தந்தையுடன் சென்னைக்கு வந்தனர். அங்கு கூட்டத்தில் தந்தையிடமிருந்து பிரிந்து விட்டனர். அதன் பிறகு அவர்கள் தந்தையைப் பார்க்கவே இல்லை என்றார்.

தற்போது திரானிக்கு அவரது தாயார் இலங்கையில் மாப்பிள்ளை பார்த்து வைத்துள்ளாராம். நாடு திரும்பிய பின்னர் திருமணம் செய்யவுள்ளனராம்.

vavuniya

மீண்டும் உபாதைக்குள்ளாகிய அம்லா – நாளைய போட்டியில் ஆடுவது சந்தேகம்..!

amlaஇலங்கை – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு223 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால், தென் ஆப்பிரிக்க அணிக்கு டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 29 ஓவர்களில் 176 ஓட்டம்பெற்றால் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணி 21 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 104 ஓட்டம் எடுத்து இருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. பலத்த மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது.

டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இலங்கை அணி17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இலங்கை மண்ணில் தென்ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக சந்தித்த 11–வது தோல்வி இதுவாகும்.

இந்த ஆட்டத்தின் 43–வது ஓவரில் இலங்கை தலைவர் சன்டிமால் அடித்த பந்தை பவுண்டரி எல்லையில் தடுக்க முயன்ற தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹசிம் அம்லா தரையில் விழுந்தார். விழுந்த அவரால் எழுந்திருக்க முடியவில்லை.

அணி உதவியாளர்கள் உதவியுடன் களத்தை விட்டு வெளியேறிய அம்லாவுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இடது இடுப்பு பகுதியில் வலி அதிகமாக இருந்ததால் அவர் துடுப்பெடுத்தாட களம் இறங்கவில்லை.

இதுபோன்ற காயம் குணமடைய 3 முதல் 7 நாட்கள் பிடிக்கும். எனவே நாளை நடைபெறும் இலங்கைக்கு எதிரான 3–வது ஒருநாள் போட்டியில் ஏறக்குறைய அவர் விளையாட வாய்ப்பில்லை. 28–ந் தேதி நடைபெறும் 4–வது ஒருநாள் போட்டியிலும் அவர் ஆடுவது சந்தேகம் தான்.

முதல் ஆட்டத்தில் கழுத்து வலியால் அம்லா களம் இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சுமித், ஸ்டெயின் ஆகியோர் காயத்தால் இந்த தொடரில் இடம் பெறாத நிலையில் அம்லா மீண்டும் காயம் அடைந்து இருப்பது தென் ஆப்பிரிக்க அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.

எனக்கு நடிக்க கற்றுக் கொடுத்தது என் அண்ணன் – தனுஷ்..!

danushசிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற நடிகரான தனுஷ், தற்போது தமிழிலும் இந்தியிலும் பரபரப்பாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் இந்தியில் வெளியான ராஞ்சனா வெற்றிகரமாக ஓடி, வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது.

மேலும் தற்போது தமிழில் வெளியான மரியான் திரையரங்கில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மரியான் பட இயக்குநர் பரத் பாலாவும், தனுஷும் ரசிகர்களின் கேள்விக்கு சுவாரஷ்யமாக பதிலளித்துள்ளனர்.

உங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தது யார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு, தனது அண்ணன் செல்வராகவன் தான் கற்றுக் கொடுத்தார்.

மேலும் கமெரா முன்பு பயமில்லாமல் எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் அவரே தான் கற்றுக் கொடுத்தார்.

அதுமட்டுமின்றி உணர்ச்சிகளையும், பாவங்களையும் எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று அவரிடம் தான் கற்றுக் கொண்டேன்.

மேலும் இயக்குநர்கள் சூரஜ், சுப்ரமணிய சிவா மற்றும் பூபதி பாண்டியன் ஆகியோரால் தான், தனக்குள் இருந்த நகைச்சுவை நடிகன் உலகிற்கு தெரிந்துள்ளான்.

இதுமட்டுமின்றி சரியான நேரத்தில் இயக்குநர்களின் படங்களில் நடிக்க வைத்த கடவுளுக்கு என் நன்றிகள். எல்லாம் கடவுளின் ஆசிர்வாதம் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் தனுஷ்.

10,000 இலங்கையர்கள் சவுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்..!

saudiசுமார் பத்தாயிரம் இலங்கை பணியாளர்கள் சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 16000 இலங்கை பணியாளர்களில் 6000 பேர் நாடு திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு நாடு திரும்பிச் செல்ல பொது மன்னிப்புக் காலம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பரம் 3ம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் அமுலில் இருக்கும்.

இக்காலத்தில் சட்டவிரோதமாக சவுதியில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் என அமைச்சர் டிலாக் பெரேரா குறிப்பிட்டார்.