மெட்ராஸ் கபே படத்தில் பிரபாகரனாக நடித்த அஜய் ரத்னத்துக்கு எதிர்ப்பு!!

ajay ratnam

ஜோன்ஆபிரகாம் நடித்த மெட்ராஸ் கபே படம் இந்தி, தமிழ் மொழியில் வருகிற 23ம் திகதி ரிலீசாகிறது. விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக இப்படத்தில் சித்தரித்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இதில் ஜோன் ஆபிரகாம் இந்திய “ரோ” அதிகாரியாக வருகிறார். கதாநாயகி நர்கிஸ் பக்ரி இங்கிலாந்து பத்திரிகை நிருபராக வருகிறார். அஜய் ரத்னம் பிரபாகரன் கரக்டரில் நடித்துள்ளார். பியூஷ் பாண்டே இந்திய அமைச்சரவை செயலாளராக வருகிறார். லீனா மரியா, டினு ஆகியோர் தமிழ் அகதிகளாக வருகின்றனர்.

இலங்கையில் அஜய் ரத்னம் விடுதலைப் புலிகளுக்கு யுத்த வியூகம் அமைத்து கொடுப்பது போன்றும் அவரை பிடிக்க ஜோன் ஆபிரகாம் துப்பறிவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்ட பிரபாகரன் வேடத்தில் அஜய்ரத்னம் நடித்ததற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

அக்கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் பிரபாகரன் விடுதலை போராட்ட வீரன். தமிழர்களின் அடையாளம். அப்பாவி சிங்களர்களை பிரபாகரன் கொன்றது இல்லை. பிரபாகரனை தீவிரவாதியாக்கி மெட்ராஸ் கபே படத்தை எடுத்துள்ளனர். இந்த படத்தில் பிரபாகரன் வேடத்தில் அஜய்ரத்னம் நடிக்க ஒப்புக்கொண்டது கண்டிக்கத்தக்கது.

இதில் நடிக்க மாட்டேன் என்ற அவர் மறுத்து இருக்க வேண்டும். ஆனால் அதை அவர் செய்யவில்லை. அஜய்ரத்னம் படங்களை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். இயக்குனர்கள் புதுப்படங்களில் அவரை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று குறிப்பிட்டு உள்ளார்.

பேஸ்புக்கின் குட்டை உடைத்த பாலஸ்தீனியருக்கு பரிசளிக்கும் ஹேக்கர்கள்!!

fb

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பேர்கின் பக்கத்தை ஹேக் செய்தவருக்கு சக ஹேக்கர்கள் பரிசளிக்கவிருக்கின்றனர். பேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு பிரச்சனை அதாவது பக் குறித்து அந்நிறுவனத்திடம் பாலஸ்தீனியரான கலீல் ஷ்ரியதே புகார் கொடுத்தார்.

ஆனால் அதை அவர்கள் கண்டுகொள்ளாததால் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பேர்கின் பக்கத்தை ஹேக் செய்து அவர் புகார் தெரிவித்தார். இதையடுத்து அந்த பக் சரி செய்யப்பட்டது.

வழக்கமாக இது போன்ற பக் குறித்து தெரிவித்தால் தெரிவிப்போருக்கு பரிசு வழங்கப்படும். ஆனால் கலீலுக்கு பரிசு வழங்கவில்லை. மாறாக அவரது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது.

இதையடுத்து உலக ஹேக்கர்கள் அவருக்கு பரிசளிக்க முன் வந்துள்ளனர். இந்நிலையில் பியான்ட் ட்ரஸ்ட்டின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மார்க் மெய்பிரட் ஹேக்கர்களிடம் இருந்து 642,957 ரூபா நிதி திரட்ட வழிவகை செய்துள்ளார்.

கலீலுக்கு பேஸ்புக் பரிசு அளிக்காதது நியாயமில்லை என்று மெய்பிரட் மற்றும் பல ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். கலீல் பாலஸ்தீனத்தில் உட்கார்ந்து 5 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு லேப்டாப்பில் ஆய்வு செய்கிறார். அநத் லேப்டாப்பை பார்த்தால் அது ஏற்கனவே பாதி உடைந்தது போல் இருக்கிறது என்று மெய்பிரட் தெரிவித்தார்.

ரஜினி சுப்பர் ஸ்டாராக வளர்ந்த கதை : நடிகர் மோகன்ராமன்..!!

rajni

ரஜினி சினிமாவுக்கு வந்து 38 வருடங்கள் ஆகிறது. இன்று நாடே சுப்பர் ஸ்டார் என கொண்டாடும் அவரது ஆரம்ப கால வாழ்க்கை கரடுமுரடானது.

சிவாஜிராவ் கெய்க்வாட் ஆக பெங்களூரில் வசித்த காலங்கள் கஷ்டமாகவே நகர்ந்தன. இதுகுறித்து சென்னை தின விழாவில் நடிகர் மோகன்ராமன் பேசிய விவரம் வருமாறு:–

ரஜினி பார்த்த முதல் வேலை ஆபீஸ் பியூன். தொடர்ந்து நிறைய சிறுசிறு வேலைகளில் இருந்தார். அதன் பிறகு கண்டக்டர் ஆனார்.
ரஜினி பணியாற்றிய பஸ்சில் ராஜ்பகதூர் டிரைவராக இருந்தார். அவருக்கு சினிமா பார்க்க பிடிக்கும். இருவரும் ஒரே நாளில் லீவு போட்டுக் கொண்டு சிவாஜி கணேசன் படம் பார்க்க போய் விடுவார்கள்.

ரஜினி நாடகங்களில் நடித்தார். அவரது நடிப்பு ஆர்வத்தை ராஜ்பகதூர் ஊக்குவித்தார். ரஜினி நடிப்பு கல்லூரியில் சேர்ந்து நடிப்பதற்கும் அவரே பண உதவி செய்தார். கட்ட பொம்மன் படத்தில் உள்ள வசனங்களை பேசி பயிற்சி எடுத்தார்.

டைரக்டர் கே.பாலச்சந்தர் ஒருநாள் ரஜினி படித்த கல்லூரிக்கு சென்றார். அங்கு ரஜினி வேகமாக பேசி நடித்த ஸ்டைல் அவருக்கு பிடித்தது. அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

அதன் பிறகு சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற பெயரை ரஜினிகாந்த் என மாற்றினார் பாலச்சந்தர். மேஜர் சந்திரகாந்த் என்ற பெயரில் படம் எடுத்து இருந்தார். அந்த தலைப்பை மனதில் வைத்தே ரஜினிகாந்த் என்ற பெயரை தேர்வு செய்தார்.

தியாகராயநகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் டிக்கெட் வாங்கிதான் முதலாவதாக நடித்த படத்தை பார்க்க போனார். யாராவது தன்னை அடையாளம் கண்டு கொள்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்தார்.

10 வயது சிறுமி மட்டும் அவரை அடையாளம் கண்டார். அந்த சிறுமிதான் ரஜினியின் முதல் ரசிகை. 1975 மார்ச் 27ம் திகதி ஹோலி பண்டிகை அன்றுதான் ரஜினிகாந்த் பெயரை பாலச்சந்தர் சூட்டினார். அந்த நாளைதான் சூப்பர் ஸ்டார் பிறந்த நாளாக கொண்டாட வேண்டும்.

ரஜினி படப்பிடிப்பில் அடிக்கடி சிகரெட்டை மேலே சுண்டி விட்டு வாயில் பிடித்து புகை பிடிப்பது உண்டு. இந்த ஸ்டைல் பாலச்சந்தரை கவர்ந்தது. தனது படங்களில் அதை பயன்படுத்தினார்.

ரஜினிக்கு பிடித்த பாடல் ரா…ரா.ரா. ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா.இவ்வாறு அவர் பேசினார்.

கதாநாயகனர்கள் எல்லோரும் ஆரம்பத்தில் மென்மையான கரக்டர்களில் நடித்தே உயர்ந்தார்கள். ஆனால் ரஜினி வில்லனாக இருந்து கதாநாயகனாக சினிமாவுக்கு வருவதற்கு முன் மேடை நாடகததில் துரியோதனனாக நடித்தார்.

மூன்று முடிச்சு படத்தில் வில்லன் வேடம். பிறகு புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபது வரை படங்களில் மென்மையான கரக்டரில் வந்தார். பில்லா படத்துக்கு பிறகுதான் அக்சன் ஹீரோ ஆனார்.

மறதி நோயால் பாதிக்கப்பட்ட 100 வயது ரசிகைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அமிதாப் பச்சன்..!!

bachan

பெர்னடைன் டிசோசா என்ற பெண் தனது சிறுவயது முதலே அமிதாப்பின் பரம ரசிகையாக இருந்து வருகிறார். தற்போது வரும் 18ம் திகதி 100 வயதை எட்டும் இவர், முதுமை காரணமாக வரும் அல்சைமர் என்னும் மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

குடும்ப உறுப்பினர்களை எல்லாம் மறந்துவிட்ட நிலையிலும் அவருக்கு அமிதாப்பின் பெயர் மட்டும் நினைவில் இருக்கின்றது. அவருக்கு சாப்பாடு கொடுக்கக்கூட அமிதாப் அவரை வந்து பார்க்கப் போகின்றார் என்று சொல்லியே உணவு ஊட்டுவதாக அவரது குடும்பத்தினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அவரை சந்தோஷப்படுத்த விரும்பிய அவரது குடும்பத்தினர், டிசோசா பற்றி அமிதாப்பிற்கு ஒரு தகவல் அனுப்பியிருந்தனர். அவருக்கு 100 வயதாவதை ஒட்டி அமிதாப் தனது ரசிகைக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இத்தனை தள்ளாத வயதிலும் முதுமை மறதி நோயினால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் தன்னுடைய பெயரை மட்டும் அவர் ஞாபகம் வைத்திருப்பதை அறிந்த அமிதாப் மிகவும் மனம் நெகிழ்ந்து போனார். உடனடியாக தன்னுடைய ரசிகைக்கு வீடியோ மூலம் வாழ்த்துச் செய்தியையும் அனுப்பியுள்ளார்.

வினோதினி மீது ஆசிட் வீச்சு – சுரேஷுக்கு ஆயுள் தண்டனை..!

vinodiniமிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட காரைக்கால் அமில வீச்சு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிவிட்டு சென்னை திரும்புவதற்காக பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த பொறியியல் பட்டதாரி வினோதினி மீது சுரேஷ் ஆசிட் வீசினார்.

படுகாயமடைந்த வினோதினி பின்னர் பிப்ரவரி 12 ஆம் நாளன்று சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார்.

அவர்கள் காதலித்ததாகவும், பல உதவிகள் தான் செய்ததாகவும், ஆனால் பொறியாளரான பிறகு தன்னை உதாசீனப்படுத்தினார் வினோதினி, திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தார், எனவே ஆத்திரப்பட்டு ஆசிட் வீசியதாக சுரேஷ் கூறினார்.

சம்பவம் அகில இந்திய அளவில் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது. சம்பவத்திற்கு மறுநாளே சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்ட் 12 ஆம் நாள் நிறைவடைந்து, இன்று கூடுதல் அமர்வு நீதிபதி வைத்தியநாதன் வினோதினி கொலைக்காக சுரேஷுக்கு ஆயுள் தண்டனையும், வினோதினி, மற்றும் உடனிருந்த இருவரைக் காயப்படுத்தியதற்காக 4 ஆண்டு கால சிறை தண்டனையையும் விதித்தார்.

சுரேஷுக்கு மரண தண்டனை கோரியிருந்த அரசு தரப்பு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்தார்.

என்னவளே..

ennavale

என்னால்
உனக்கு காதல்
பிறக்கவில்லை
என்றாலும்
உன்னால்
எனக்கு பல
கவிதை பிறக்கிறது..

துயர் மரணித்தது
மகிழ்வு பிறந்தது
உன் விழி மொழி
கண்டு
காதல் விஷம்
ஏறிக்கொள்கிறது
உன் அழகுண்டு..

தனி வரவை
எதிர்பார்தேன்
சகி ககிதம்
வருகிறாய்
நெஞ்சில் தனிதம்
எழுகிறது
தணிய மறுக்கிறது
இருந்தும்
சகித்துக்கொள்கிறேன்…

-திசா.ஞானசந்திரன்-

தவறுகளை சுட்டிக் காட்டும் பேனா!!(வீடியோ)

ஆங்கில எழுத்துக்களை எழுதும் போதோ அல்லது அவற்றினை பயன்படுத்தி சொற்களை உருவாக்கும் போதோ ஏற்படும் தவறுகளை அதிர்ச்சியின் மூலம் சுட்டிக் காட்டும் பேனா சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமாகி இருந்தது.

இந்நிலையில் மேலும் சில தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக மற்றுமொரு பேனா உருவாக்கப்பட்டுள்ளது. இது பொருத்தமான அதிர்ச்சிகளின் மூலம் தவறுகளை சுட்டிக்காட்டக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Lernstift எனப்படும் இப்பேனாவானது கற்றலில் ஈடுபடும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் போன்றவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியாகியது தலைவா – தமிழகமெங்கும் விஜய் ரசிகர்கள் கோலாகலம்..!

thalaivaவிஜய்யின்  தலைவா படம் தமிழ்நாடு முழுவதும் இன்று ரிலீசானது. கடந்த 9–ந்தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டனர். தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் படம் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு பல்வேறு தடைகளை தாண்டி தற்போது திரைக்கு வந்துள்ளது.

சென்னையில் 20–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 400–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. அனைத்து தியேட்டர்களிலும் விஜய் கட்–அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

ரசிகர்கள் காலை காட்சி பார்க்க அதிகாலையிலேயே தியேட்டர்களில் குவிந்தனர். அசோக்நகரில் விஜய் படப்பெட்டியை ரசிகர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அங்குள்ள பிள்ளையார் கோவிலில் பூஜை செய்து சாரட் வண்டியில் படப்பெட்டியை ஏற்றினர். பின்னர் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தார்கள்.

உதயம் தியேட்டரில் வந்து படப்பெட்டி இறக்கப்பட்டது. அங்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தினர். படம் பார்க்க வந்தவர்களுக்கு ரசிகர்கள் லட்டு வழங்கினர்கள்.

ரசிகர் மன்ற நிர்வாகிகள் ரவிராஜா, ஏ.சி.குமார், பி.டி.செல்வகுமார், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் கலந்து கொண்டனர். எழும்பூர் ஆல்பட் தியேட்டரில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர். மதுரை திருப்பரங்குன்றத்தில் ரசிகர்கள் அலகு குத்தி படம் பார்க்க சென்றனர்.

வீராட் கோலி சிறந்த தலைவராக உருவாகுவார் – டோனி..!

doniஇந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக வீராட் கோலி சிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் கேப்டனாக பணியாற்றினார். டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட அந்த போட்டியில் இந்தியா 5 ஆட்டத்திலும் வென்று முத்திரை பதித்தது.

இந்த நிலையில் வீராட் கோலியை கேப்டன் டோனி பாராட்டியுள்ளார். சிறந்த கேப்டனாக உருவாகுவார் என்று கூறியுள்ளார். இது குறித்து டோனி கூறியதாவது:–

கடந்த ஒரு ஆண்டில் வீராட் கோலியிடம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆக்ரோஷத்துடன் செயல்படுவது அவரை பற்றிய சிறந்த விஷயமாக கருதப்படுகிறது.

இது கேப்டன் பதவியிலும் அவருக்கு உதவியாக இருக்கிறது. அவரது அணுகுமுறை பீல்டிங்கில் நல்ல மாற்றத்தை தந்தது. சிம்பாப்வே தொடரில் அவரது செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. கோலி சிறந்த கேப்டனாக உருவாகுவார்.

அனைத்து இளைஞர்களை கொண்ட அணியை நான் உருவாக்கியதாக கூறப்படுவதை ஏற்க முடியாது.

அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு உடல் தகுதி மற்றும் திறமையே காரணம். அதிக வயது என்பது பிரச்சினை இல்லை. 40 அல்லது42 வயது வீரராக இருந்தாலும் உடல் தகுதியே முக்கியம். உடல் தகுதியுடன் இருந்தால் தான் சிறப்பாக பீல்டிங் செய்ய முடியும்.

அனைத்து காலக்கட்டத்திலும் விளையாடிய சிறந்த வீரர்களை வைத்து கனவு அணியை தேர்வு செய்வது கடினம். அதனால் கனவு அணியை தேர்வு செய்ய மாட்டேன். இந்திய அணிக்காக விளையாடிய அத்தனை வீரர்களையும் மதிக்க வேண்டும். இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

ஊக்க மருந்து சர்ச்சையில் ஜெசி ரைடர் – 6மாத தடை..!

raiderநியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெசி ரைடர். சர்ச்சைகளில் சிக்கி கொள்வது அவருக்கு வாடிக்கையான ஒன்றாகும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரைடர் மதுபான பாரில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டார். இதுதொடர்பான மோதலில் அவர் கடுமையாக தாக்கப்பட்டார். ஆபத்தான நிலைக்கு சென்று அவர் உயிர் பிழைத்து வந்தது ஆச்சரியமே.

இந்த நிலையில் ஜெசி ரைடர் ஊக்க மருந்து பயன்படுத்திய தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் உள்ளூர் போட்டியில் விளையாடியபோது ஊக்க மருந்து பயன்படுத்தியது சோதனையில் தெரியவந்தது. உடல் எடையை குறைக்க அவர் ஊக்க மருந்தை உட்கொண்டு இருப்பதாக கூறப்பட்டது.

நியூசிலாந்து விளையாட்டு தீர்ப்பாயம் இதுதொடர்பாக விசாரணை நடத்தியது. இதில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.

அதன்படி நியூசிலாந்து விளையாட்டு தீர்ப்பாயம் ரைடருக்கு 6 மாதம் தடை விதித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த தடை அமுலுக்கு வந்தது. அக்டோபர் மாதத்தின் அவரது தடை முடிகிறது. அதன்பிறகு அவரால் விளையாட முடியும்.

29 வயதான ரைடர் 18 டெஸ்டில்1269 ரன் எடுத்துள்ளார். சராசரி40.93 ஆகும்.39 ஒருநாள் போட்டியில் 1,100 ரன் எடுத்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சர்வதேச போட்டியில் விளையாடினார்.

வலிப்பு நோயால் பாதிப்பு – உமர் அக்மல் மருத்துவமனையில்!

umarபாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் உமர் அக்மல். இவர் வெஸ்ட்இண்டீசில் நடைபெறும் கரீபியன் ´லீக்´ போட்டியில் விளையாட சென்றபோது விமானத்தில் சுய நினைவு இல்லாமல் மயங்கி விழுந்தார்.

ஆண்டிகுவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு பல்வேறு பரிசோதனை செய்யப்பட்டது. வலிப்பு நோயால் அவர் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து உமர் அக்மலுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. வெஸ்ட்இண்டீசில் இருக்கும் அவரை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இணையத்தை கலக்கும் சூர்யா பாடிய முதல் பாடல் (வீடியோ இணைப்பு)..!

suryaநடிகர் சூர்யா முதல் முதலாக பாடியுள்ள பாடலொன்று இணையத்தில் வெளிவந்து இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஏற்கனவே நடிகர் தனுஷ் பாடிய கொலைவெறி பாடல் முழு உலகையுமே ஒரு புரட்டு புரட்டி எடுத்தது. அதன்பின்னர் அண்மையில் சிவகர்த்திகேயன் பாடும் வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

அந்த வரிசையில் தற்பொழுது சூர்யாவும் இணைந்துள்ளார்.

“கொஞ்சும் காலையில் கண்கள் திறந்ததுமே..” எனத் தொடங்கும் இந்தப் பாடலை அவர் பாடும் வேளையில் பாடகர் கார்த்திக், பாடலாசிரியர் பா. விஜய் உள்ளிட்டோர் அருகில் இருப்பதைக் காணலாம்.

தொண்டமான் – திகாம்பரம் ஆதரவாளர்களிடையே மீண்டும் மோதல்..!

partyஹட்டன் நகரத்திலுள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதான காரியாலயம் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத சிலரால் தாக்குதலுக்கு உள்ளானதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

அந்த குழுத் தாக்குதலின் போது, சுமார் 200 பேர் வரை கலகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதுடன், காரியாலத்தின் உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

கலகத்தடுப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் இடம்பெற்ற வேளையில் 2 பொலிஸார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதான காரியாலயத்தின் பாதுகாப்பு கடமையில் இருந்துள்ளனர்.

இதுதவிர, கொட்டகலையில் உள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் வேட்பாளர் ஒருவரது வீடும் தாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று அதிகாலை பொகவந்தலாவையில் உள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் காரியாலயமும் ஒரு கும்பலாம் தாக்கப்பட்டதாக அந்த கட்சி சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, நேற்று ஹட்டன் – திம்புலபத்தனை – கொமர்சல் பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றது.

குறித்த மோதல் நிலை தொடர்பாக இரண்டு தரப்பினரிடமிருந்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்றைய சம்பவத்தில் 14 வாகனங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்தசம்பவத்திற்கு பின்னர் நேற்றிரவு 9 மணியளவிலும் தமது காரியாலயத்திற்கு சிலர் தாக்குதல் மேற்கொண்டு சேதம் ஏற்படுத்தியதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த சம்பவங்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உடமைகள் மற்றும் சில வாகனங்களும் தாக்குதல்களுக்கு உள்ளானதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெட்ராஸ் கஃபே படத்தை மலேசியாவில் திரையிடக்கூ​டாது: மலேசியத் தமிழர்கள் போராட்டம்..!

madrasமலேசிய அரசு சாரா தமிழ் இயக்கங்களின் முடிவின்படி தயாரிக்கப்பட்ட “மெட்ராஸ் கபே” படத்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக் கடிதம் இன்று மலேசிய உள்துறை அமைச்சுக்கும், மலேசிய திரைப்படத் தணிக்கை வாரியத்திற்கும் பதிவுத் தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொலை நகலிலும் அக்கடிதம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி மலேசியா தமிழர்களின் சார்பில் கொடுக்கப்பட்ட இந்த மனுவில்,

மெட்ராஸ் கபே படத்தை அமைதிப் பூங்காவாக இருக்கும் மலேசியாவில் இந்தப் படம் திரையிட அனுமதிக்கக் கூடாது என்றும் ராஜபக்ச உதவியுடன் வெளிவந்த இப்படம் தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாகவும், உடமைகளையும் உரிமைகளையும் இழந்து வாழும் ஈழத் தமிழர்களை களங்கப் படுத்துவதாகவும் அமைந்துள்ளது ஆகவே இப்படத்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோருகிறோம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மெட்ராஸ் கஃபே படத்திற்கு எதிராக உலகத் தமிழர்களின் போராட்டம் வலுத்துள்ளது. இப்போது மெட்ராஸ் கபே திரைபடத்தை எதிர்த்து மலேசியா தமிழர்களும் போராட்டத்தில் குதித்து தொடர்ந்து அதே போல் இங்கிலாந்திலும் சினி வேர்ல்ட் நிறுவனத்திடம் மெட்ராஸ் கபே படத்தை திரையிடக் கூடாது என்ற கோரிக்கையை தமிழர்கள் முன்வைத்துள்ளனர்.

இதனால் தினமும் சினி வேர்ல்ட் நிறுவனத்திற்கு பல அழைப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. கனடா நாடு டொரோண்டோவில் தமிழர்கள் இப்படத்தை திரையிடக்கூடாது என கோரிக்கை எழுப்பி உள்ளனர்.

ஐபோன்கள் குளிர்சாதனப்பெட்டிகளை விட அதிக அளவில் மின்சாரத்தை உறிஞ்சும்..!

iphoneஐபோன்கள் குளிர்சாதனப்பெட்டிகளை விட அதிக அளவில் மின்சாரத்தை எடுத்துக் கொள்வது தற்போதைய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பிரேக்த்ரூ இன்ஸ்டிடியூட், ஐபோன்கள் குறித்து ஆய்வொன்றை நடத்தியது.

இதில் ஆண்டுக்கு குளிர்சாதனப்பெட்டி 322 kWh (கிலோவாட் ஹவர்)மின்சாரத்தை பயன்படுத்துவதும், ஐபோன் 361 kWh மின்சாரத்தை பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.

உலகளவில் மின்சாரத்தில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் 10 சதவிகிதத்தை எடுத்துக் கொள்வதுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும்கம்பியற்ற இணைய இணைப்புகள் (Wireless Broadband) இந்த மின்சார பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும்.

தகவல் தொடர்புத் துறை நிலக்கரி மூலம் கிடைக்கும் மின்சாரத்தையே பெரிதும் நம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெனாசீர் பூட்டோவை கொலை செய்ய உதவினார் – முஷாரப் மீது குற்றச்சாட்டு..!

musharafபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொலை வழக்கில், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான முஷாரப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி நடத்திய முஷாரப் மீது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை சிறை வைத்தது உட்பட பல்வேறு சதி வழக்குகள் உள்ளன.

இதனையடுத்து நெருக்கடி முற்றவே இவர் சவுதியிலும், லண்டனிலும் தஞ்சம் அடைந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் வந்த முஷாரப் மீதான வழக்கின் விசாரணை தொடங்கியது.

இதனை தொடர்ந்து முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கில் முஷாரப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, கொலைக்கான முக்கிய காரணமாக இருந்ததாகவும், கொலை செய்யத் திட்டமிட்டதாகவும், கொலையாளிகளுக்கு உதவும் வகையில் செயல்பட்டதாகவும் ராவல்பிண்டி பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை முஷாரப் மறுத்துள்ளார்.

இவருடன் மேலும் 6 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கின் விசாரணை 27ம் திகதி மீண்டும் நடக்கிறது.

கடந்த 2007 ல் ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது பெனாசீர் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.