அசாருதீனை பயிற்சியாளராக நியமித்தால் ஆட்ட நிர்ணயத்தில் எப்படி ஈடுபடுவது என்று இளைஞர்களுக்கு பயிற்சி கொடுப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ளி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான அசாருதீனுக்கு ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது.
இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் கடுப்புடன் வினோத் காம்ளி பதிவிட்டிருக்கிறார். அதில் ஏக்தா கபூர் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் பற்றி ஒரு படம் எடுக்க விரும்புகிறாராம்.
அந்த படத்துக்கு “Ali Baba mil gaya chalish choro se” என்றுதான் பெயர் வைக்கலாம். கிரிக்கெட் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதை குரோஞ்சி ஒப்புக் கொண்டுவிட்டார்.
ஆனால் நமது முன்னாள் அணித்தலைவர் மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அனேகமாக அவர் இளைஞர்களுக்கு எப்படி ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவது என பயிற்சி கொடுக்க விரும்புகிறார் என்று நினைக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு அசாருதீன் மீது அதிரடிப் புகாரைக் கூறியிருந்தார் காம்ளி. 1996ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இலங்கைக்கெதிரான அரையிறுதி போட்டியில் களத்தடுப்பு செய்ய அசாருதீன் முடிவெடுத்தது பற்றி சந்தேகம் எழுப்பியிருந்தார். அப்போது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பேராதனை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவன் மற்றும் மாணவியின் உடல் பாகங்கள் அக்குரஸ்ஸ வில்பிட வனப் பகுதியில் இருந்து இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
உடல் பாகங்கள் கிடைந்த இடத்தில் இருந்து கிடைத்த தேசிய அடையாள அட்டைகள் மூலம் உயிரிழந்தவர்கள் 23 வயதான கிஷான் சஜித் மற்றும் 26 வயதான திலினி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத் தெரிவிக்குழு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
பிரச்சினையை திசை திருப்பும் நோக்கில் அரசாங்கம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிகளை ஆரம்பித்துள்ளதாக ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பின அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் அரசாங்கம் இவ்வாறான பல்வேறு தெரிவுக்குழுக்களை நியமித்திருந்தது. எனினும் இவற்றின் மூலம் எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்காமைக்கான காரணத்தை அறியத்தருமாறு கட்சித் தலைவர் கூட்டத்தில் வினவப்பட்டிருந்தது.
நாட்டில் நிலவி வரும் இனப்பிரச்சினையை தமிழ், சிங்கள முஸ்லிம் மக்கள் ஏற்படுத்தவில்லை. எனவே இந்தப் பிரச்சினைக்கு அவர்கள் பொறுப்பதாரிகளல்ல.
நாட்டை ஆட்சி செய்த முதலாளித்துவ வர்க்கத்தின் அதிகார மோகமே பிரிவினைவாதத்தை தூண்டியது.
அரசாங்கத்தின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காகவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்ற மெய்யான நோக்கமும், அவசியமும் அரசாங்கத்திற்கு கிடையாது என்றே கருதுகின்றோம் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பங்களை விட்டு விட்டு ஊர் ஊராகப் போய் உல்லாசமாக இருந்து விட்டு கடைசியி்ல் விஷம் குடித்து செத்துப் போயுள்ளது ஒரு கள்ளக்காதல் ஜோடி.
திருச்சி அருகே உள்ள கம்பரசம்பேட்டையை அடுத்த மல்லாட்சிபுரம் கொடிங்கால் வாய்க்கால் பகுதியில் ஒரு இளம் பெண்ணும், ஆணும் இறந்து கிடந்ததை சிலர் பார்த்து போலீஸாருக்குத் தெரிவி்த்தனர். உடனடியாக ஜீயர்புரம் போலீஸார் விரைந்து வந்து உடல்களை மீட்டனர். இருவரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்தி தற்கொலை செய்தது தெரிய வந்தது.
அருகில் ஒரு மொபைல் இருந்தது. அதில் உள்ள எண்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் யார் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். அந்த ஆண், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள வடக்கு பொன்னம்பட்டியை சேர்ந்த செல்வராஜ். 40 வயதாகிறது. விவசாயி. இவருக்கு அழகுமலை என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இதே தெருவில் வசி்த்து வந்தவர் 35 வயதான சாந்தி. இவருக்கு மருதமுத்து என்ற கணவரும் 2 குழந்தைகளும் உள்ளனர். மருதமுதது மஸ்கட்டி்ல வேலை பார்த்து வருகிறார். இதனால் கணவர் துணையின்றி குழந்தைகள், மாமியாருடன் வசி்த்து வந்தார் சாந்தி. கணவர் இல்லா சாந்திக்கும், செல்வராஜுக்கும் இடையே கள்ளக்காதல் மூண்டது.
இது இரு வீட்டாருக்கும் தெரிய வந்து கண்டித்தனர். இந்த நிலையி்ல் 6 மாதங்களுக்கு முன்பு மருதமுத்து திரும்பி வந்தார். அதன் பிறகு அவர் மஸ்கட் போகவி்லை. இதனால் சாந்திக்கு சிக்கலானது. அடிக்கடி போய் செல்வராஜைப் பார்க்க முடியவி்ல்லை. தவி்த்தார். இதனால் ஊரை விட்டு ஓட முடிவு செய்தனர்.
இதையடுத்து உடம்பு சரியில்லை என்று பொய் சொல்லி விட்டு கடந்த 14ம் திகதி வீட்டை விட்டு வெளியேறினார் சாந்தி. அதேபோல செல்வராஜும் கிளம்பி வந்தார். கையில் இருந்த காசு தீரும் வரை விளையாடிக் கழித்தனர். கடைசியாக முக்கொம்பு வந்துள்ளனர். அங்கு வந்து தங்களது நிலையை நினைத்துப் பார்த்துள்ளனர்.
அவர்களுக்கே வாழ்க்கை வெறுத்து விட்டது. குளிர்பானத்தை வாங்கி விஷம் கலந்து குடித்து செத்துப் போனார்கள். இறந்து நான்கு நாட்களாகி விட்டதால் உடல் கருமையாகி பார்க்கவே படு கோரமாக காணப்பட்டனர் இந்த கள்ளக்காதலர்கள். துர்நாற்றமும் சகிக்கவில்லை. பொலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு இரு உடல்களையும் அனுப்பி வைத்து விசாரணையைத் தொடர்கின்றனர்.கள்ளக் காதலுக்கு கடைசியில் இதுதான் முடிவு போல..
ஆர்யா, நயன்தாரா நடித்துள்ள ராஜா ராணி படத்துக்கு ஏகப்பட்ட விளம்பரம் கிடைத்துள்ளது. ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் என பரபரப்பை கிளப்பி இருவரும் திருமணக் கோலத்தில் இருப்பதுபோன்ற படங்களை வெளியிட்டனர். அடுத்ததாக படத்தின் பாடல் எடுக்கப்பட்ட காட்சி என வெளியிட்டு அமர்க்களப்படுத்தினர்.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை வரும் 23ம் திகதி சென்னையில் பிரம்மாண்ட விழாவாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த அழைப்பிதழை இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் இப்படத்தின் இயக்குனர் அட்லி நேரில் கொடுத்து விழாவுக்கு அழைப்பு விடுத்தார். அவருக்கு ரஜினி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ராஜா ராணி படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நஸீம், சத்யராஜ், சத்யன் ஆகியோர் நடித்துள்ளனர். பொக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் இயக்குனர் அட்லி ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
அமெரிக்காவில் போர் அடித்ததால் அவுஸ்திரேலிய விளையாட்டு வீரரை கொன்ற 3 சிறுவர்கள் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போனை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் லேன்(22). அவர் அவுஸ்திரேலியாவில் கால்பந்து வீரராக இருந்தார்.
பின்னர் அதைவிட்டு விட்டு அமெரிக்காவுக்கு வந்து பேஸ்போல் வீரராக மாறினார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் நடைபயிற்சி சென்றபோது டங்கன் பகுதியில் பிணமாகக் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த பொலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த 15, 16, 17 வயது சிறுவர்கள் போர் அடித்ததால் கிறிஸ்டோபரை சுட்டுக் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து பொலீசார் அந்த 3 சிறுவர்களையும் கைது செய்தனர். அதில் 15, 16 வயது சிறுவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
17 வயது சிறுவன் சம்பவம் நடந்தபோது வாகனத்தை ஓட்டியதால் அவன் மீது கொலைக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது 17 வயது சிறுவன் தான் தான் கிறிஸ்டோபரை கொன்றதாகக் கூறினான்.
அதற்கு அவனை அமைதியாக இருக்குமாறு நீதிபதி கூறினார். கிறிஸ்டோபர் கொல்லப்பட்டதால் அவரது உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அவரது இறுதிச் சடங்கில் அவரது காதலி கலந்து கொண்டு கண்ணீர் விட்டார்.
கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
“நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஒப் சிசைய்ரோ” என்பது அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த அண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் .
சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது.
கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்றும் கூறுகிறார்.
நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கறிவேப்பிலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்..
இதில் நார்சத்து, விட்டமின், மினரல் ஆகியவை அடங்கியுள்ளன.
கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும்.
இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும்..
சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும்.
கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள்.
மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.
கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.
பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும்.
கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது.
குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.
வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.
கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.
கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.
செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் உள்ள தங்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்ற வலியுறுத்தி ஈழத் தமிழர்கள் 10 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்படுள்ளனர். இங்குள்ளோர் பலர் மீது வழக்குகள் கூட இல்லை. இருப்பினும் இங்குள்ள தமிழர்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்றாமல் தொடர்ந்தும் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே தங்களை திறந்த வெளிமுகாமுக்கு மாற்றக் கோரி பலர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளனர். இப்படி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதற்காகவே 3 ஈழத் தமிழரை நாடு கடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் காந்தி மோகன், காண்டீபன், பரமேஸ்வரன், ஜோன்சன், சுமன், ரமேஷ், சசிதரன், ஈஸ்வரன், பாலகுமார் , காளிதாஸ் ஆகியோர் இன்று காலை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். தங்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்றும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்பது போராட்டக்காரர்களின் கருத்து.
ஈழதமிழர் போராட்டங்களை இழிவாக சித்தரிக்கும் மெட்ராஸ் கஃபே என்ற படம் இம்மாதம் இறுதியில் வெளியாக இருந்தது. அப்படத்தை ஹிந்தியில் பார்த்த சில தமிழர்கள் மூலம் தகவல் அறிந்த தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் அப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து தமிழ் தன்னார்வ மைப்பின் சார்ப்பில் மதுரை நீதிமன்றத்தில் தொடரபட்ட வழக்கிற்கு இன்று தீர்ப்பளித்த நீதிபதி, மக்களின் உணர்வுகளுடன் விளையாடி உணர்ச்சிகளை தூண்டி கலவரத்துக்கு வழி வகுக்கும் படியான படங்கள் வெளியாகாமல் இருப்பதே நல்லது என அப்படத்திற்கு தடை விதித்தார்.
நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் ஒரு வாரத்துக்கு முன்பு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் திரைப்படம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திரையரங்குகளுக்கு மிரட்டல் கடிதம் வந்ததாலும், வெடிகுண்டு வைக்கப்படும் என தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாலும் திரைப்பட உரிமையாளர்கள் படத்தை திரையிட மறுத்தனர்.
இந்நிலையில் பல்வேறு முயற்சியின் காரணமாக, “தலைவா´ திரைப்படம் செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது.
இதற்கிடையே சென்னை கீழ்ப்பாக்கத்தில் அந்த திரைப்படம் திரையிடப்பட்ட ஒரு திரையரங்குக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் “தலைவா´ திரைப்படத்தை திரையிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.
இது குறித்து அந்த திரையரங்கு மேலாளர் ஜெயக்குமார், கீழ்ப்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தயார் என்று சொல்லி வருகிறாராம் புன்னகை இளவரசி சினேகா.
குடும்பப்பாங்கான வேடத்திலேயே பெரும்பாலும் நடித்து பெயர் பெற்றவர் நடிகை சினேகா.
திருமணத்திற்கு பின்பும் அதை மெயிண்டன் செய்ய விரும்பினார்.
ஆனால் ஹரிதாஸ் பட தோல்வியால் துவண்டு போன சினேகா கவர்ச்சிக்கு தயார் என்று மறைமுகமாக கவர்ச்சி புகைப்படங்களை தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வருகிறாராம்,
சினேகாவின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த இயக்குனர்கள் புகைப்படத்தில் இருப்பது போல படப்பிடிப்பிற்கும் ஒத்துழைத்தால் சான்ஸ் தருவதற்கு தயாராக இருக்கின்றனராம்.
ஆனால் சினேகாவின் கவர்ச்சி அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம் பிரசன்னா.
பிரசன்னாவின் எதிர்ப்பால் தயாரிப்பாளர்களும் வாய்ப்பு தருவதற்கு தயங்கி வருகின்றனரவாம்.
திரைப்பட இயக்குனர் சேரன் தனது மகளுடன் நடந்த பாசப்போராட்டத்தில் வென்றுள்ளார். இயக்குனர் சேரன் மகள் தாமினி, சந்துரு என்ற வாலிபருடன் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து சேரன் பொலிசில் அளித்த புகாரில், சந்துருவின் நடவடிக்கை சரியில்லை என்றும், அவரது காதலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே சந்துருவின் தாய் உயர்நீமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் 2 வாரங்களுக்கு தாமினி, தான் படித்த பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டில் தங்கி இருக்க உத்தரவிட்டனர்.
இதன்படி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அவர் தங்கியிருந்தார். தலைமை ஆசிரியரின் வீட்டில் தாமினி தங்கி இருந்த போது அவருக்கு தினமும் கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தாமினி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையில் சேரன் மகள் தாமினி தனக்கு காதலன் வேண்டாம் என்றும் தான் தந்தையுடன் செல்லவே விரும்புவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தனது மகளுடன் நடந்த பாசப்போராட்டத்தில் வென்றுவிட்டு விட்ட மகிழ்ச்சியில் உள்ளார் இயக்குனர் சேரன்.
இந்தியா சென்றுள்ள எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜிக்கும் இடையில் நேற்று புதுடில்லியில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்த இச்சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வலய தொடர்பு மற்றும் வலய பொருளாதாரம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அகில இந்திய காங்கிரஸ் குழுவின் செயலாளர் திக் விஜயசிங்கையும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
அத்துடன், பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் யஸ்வந்த் சிங்ஹாவையும் ரணில் சந்தித்து பேசியுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று சந்திக்கவுள்ளார்.