35,000 அடி உயரத்தில் விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த இலங்கை கிரிக்கெட் வீரர்..!

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ஒருவர் நடு வானில் பறக்கும் விமானத்தில் குழப்பம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கழிவறை என நினைத்து 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை திறக்க முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கிரிக்கட் வீரர் அதிக மது போதையில் இருந்ததாக விமானப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கட் வீரரின் நடவடிக்கையினால் ஏனைய பயணிகள் பீதியடைந்துள்ளனர். சக வீரர்கள் அவரைத் தடுக்க முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நான்கு மணித்தியாலங்களகாக குறித்த வீரர்கள் மது அருந்திக் கொண்டிருந்ததாகத் பயணியொருவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான விமானத்தில் சென் லூசியாவிலிருந்து கெட்விக் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நடு வானில் விமானக் கதவுகளை இழுத்து திறப்பது சாத்தியமில்லை என விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தவறுதலாக இவ்வாறு கதவை திறக்க முயற்சித்ததாக குறித்த கிரிக்கட் வீரர் தெரிவித்துள்ளார். கிரிக்கட் வீரரின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது குரோஷியா..!

குரோஷியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக சேர்ந்துகொண்டுள்ளதை ஒட்டி, அந்நாட்டு மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 28வது உறுப்பு நாடாக குரோஷியா அதிகாரபூர்வமாக சேர்ந்துகொண்ட உள்ளூரின் நள்ளிரவு நேரத்தில் மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடினார்கள்.

அதன்பின்னர் உடனடியாக, சக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான ஸ்லோவேனியா மற்றும் ஹங்கேரியின் எல்லைகளில் இருந்த சுங்கச் சாவடிகள் அகற்றப்பட்டன.

மற்ற ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் உள்ள நாடுகளுடனான எல்லைகளில் ஐரோப்பிய ஒன்றியக் கொடிகள் ஏற்றப்பட்டன.

இந்த நாளை வரலாற்று முக்கியத்துவம் மிக்க நாள் என்று குரோஷிய அதிபர் ஈவோ யூசிபோவிச் வர்ணித்தார்.

யூரோ வலய நாடுகளில் ஏற்கனவே நிலவும் பொருளாதாரப் பிரச்சனைகளாலும் உள்நாட்டு நிதிப் பிரச்சனைகளாலும் குரோஷியா ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வது அவதானிகளால் பெரிதளவில் வரவேற்கப்படவில்லை.

2007-ம் ஆண்டில் பல்கேரியாவும் ரொமானியாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துகொண்டதிலிருந்து குரோஷியா தான் இப்போது புதிய நாடாக சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் சூதாட்ட விடுதி முற்றுகை: 83 பேர் கைது..!

கொழும்பு 7, தர்மாபால மாவத்த பிரதேசத்தில் சட்டவிரோத சூதாட்ட விடுதி ஒன்று சுற்றி வளைக்கப்பட்டு 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (01) இரவு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இச் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 80 பேர் மற்றும் அவ் விடுதியை நடத்திச் சென்ற மூவர் என 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கிருந்து 95 ஆயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (02) மருதானை பொலிஸாரினால் மாலிகாஹந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

நாளையுடன் நிறைவடையும் சவூதி வழங்கிய மன்னிப்புக்காலம் – திருப்பி அனுப்பப்படுவார்களா இலங்கையர்கள்?

சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு பணியாளர்களின் மூன்று மாத மன்னிப்புக் காலம் நாளையுடன் (ஜுலை 3) முடிவடையவுள்ள நிலையில் தம்மீதான சட்ட ரீதியான நடவடிக்கையை தவிர்ப்பதற்கு மேலும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் போராடி வருகின்றனர்.

சவூதி மன்னர் அப்துல்லாஹ்வினால் கடந்த ஏப்ரல் 3 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட மூன்று மாத மன்னிப்பு காலத்திற்குள் அங்கு தங்கியிருக்கும் சட்டவிரோத பணியாளர்கள் தாம் தங்கியிருப்பதை சட்ட ரீதியாக்குவதற்கு அல்லது நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு தங்கியிருப்போர் கருப்புப்பட்டியல் அல்லது சிறை மற்றும் அபராதத்தில் இருந்து தவிர்ப்பதற்கே இந்த மூன்று மாத மன்னிப்புக்காலம் விதிக்கப்பட்டது.

சவூதியில் இலங்கையர் உட்பட ஆசிய நாட்டவர்களே அதிகம் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மன்னிப்புக் காலத்தில் முதல் இரு மாதங்களில் அங்கு தங்கியிருந்த 1.5 மில்லியன் சட்டவிரோத வெளிநாட்டு பணியாளர்கள் மன்னிப்பைப் பெற முன்வந்ததாக சவூதி தொழில்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனினும் சவூதியில் தங்கியிருக்கும் சட்டவிரோத வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து அறிவிக்கப்படவில்லை. ஆனால், இது இரண்டு மில்லியனாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

சவூதி அண்மையில் கொண்டு வந்த சட்டவிரோத குடியிருப்பாளர்களை வெளியேற்றும் சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஆரம்பம் தொட்டு சுமார் 180,000 சட்டவிரோத பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியதோடு மேலும் 200,000 அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

எனினும் மூன்று மாத மன்னிப்புக்காலம் நிறைவடையும் தருவாயிலும் பல பணியாளர்களும் சவூதியில் இருந்து வெளியேற அல்லது தமது பணியாளர் அந்தஸ்தை சட்டரீதியாக்குவதற்கு எதிர்பார்த்து தத்தமது தூதரகங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.

சவூதி அறிமுகப்படுத்திய புதிய சட்டத்தின் படி வெளிநாட்டு பணியாளர்கள் தமது தொழில் வழங்குனரிடம் மாத்திரமே அனுசரணை பெற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சவூதி தனது மன்னிப்புக் காலத்தை நீடிக்குமா என்ற எதிர்பார்ப்புடன் மேலும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் காத்துள்ளனர். மன்னிப்புக்காலம் நிறைவடைந்ததும் சட்டவிரோத பணியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாக சவூதி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

உலகில் அதிக எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதியில் எட்டு மில்லியன் வெளிநாட்டு பணியாளர்கள் உள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் குறிப்பிடுகின்றன. இந்த பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து வேலையின்றி இருக்கும் மில்லியன் கணக்கான சவூதி நாட்ட வர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவே அந்நாட்டு அரசு கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அரபுலகில் மிகப்பெரிய பொருளாதார சக்தியான சவூதியில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 12.5 வீதத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் மன்னிப்புக் காலத்திற்கு பின்னரும் சவூதியில் தங்கியிருக்கும் சட்டவிரோத வெளிநாட்டு பணியாளர்கள் இரண்டு வருடத்திற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என சவூதி அரசு எச்சரித்திள்ளது. எனினும் இந்த புதிய சட்டம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு சாதகமானது என பொருளியல் ஆய்வாளர் பதல் அல் பவ்வனைன் குறிப்பிட்டுள்ளார்.

“தொழிற்சந்தையை சவூதி நாட்டவர்களுக்கு திறந்து விடவும் வெளிநாட்டு பணியாளர்கள் தமது அனுசரணையாளரிடம் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதை தடுக்கவும் இந்த புதிய சட்டம் உதவுகிறது” என அவர் நியாயப்படுத்தியுள்ளார்.

முத்தரப்பு கிரிக்கெட்: காயமடைந்த டோனி எஞ்சிய போட்டிகளில் இருந்து நீக்கம்..!

இலங்கை, இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மேற்கிந்தியத் தீவுகளிள் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில் பங்கேற்று வருகின்றன.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது.

இப்போட்டியின்போது, டோனிக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக விக்கட் காப்பாளர் பணியை தினேஷ் கார்த்திக்கிடம் ஒப்படைத்தார்.

இந்த தசைப்பிடிப்பு சரியாகாததால் எஞ்சிய போட்டிகளில் இருந்து டோனி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அம்பதி ராயுடு அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். கோலி அணித்தலைவர் பொறுப்பில் இருந்து அணியை வழிநடத்துவார்.

கோலி தலைமையிலான இந்திய அணி இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. இலங்கை நேரப்படி இப்போட்டி இரவு எட்டு மணியளவில் ஆரம்பமாகும்.

இரு அணிகளும் தமது முதல் போட்டியில் மண்ணைக் கவ்வியமையால் இன்றைய போட்டியில் இரு அணிகளும் கட்டாய வெற்றிபெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றன.

அண்மைகாலமாக இலங்கை அணிக்கெதிரான போட்டிகளில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வினோத முறையில் நாடு கடந்து மாட்டிக்கொண்டவர்..!

அமெரிக்காவிற்கு மெக்சிக்கோ மூலமாக பலர் நாடுகடத்தப்படுவது வழமை. இறுக்கமான காவல்துறை (பொலிஸ்) கட்டுப்பாடு இருந்தாலும் பலர் நூதனமான முறையில் அமெரிக்க மெக்சிக்கோ எல்லையை தாண்டிவிடுவார்கள். அப்படி நூதனமாக தாண்ட முட்பட்டு அகப்பட்டவரின் புகைப்படத்தைத்தான் கீழே பாக்கிறீர்கள்!

immig1

ஆம், வாகனத்தின் இருக்கையில் அமர்வது வழமை, ஒழிவதென்றால் பினால் ஒழிந்துகொள்வார்கள். ஆனால் இந்த மனிதர் வாகன இருக்கைபோன்றே தன்னை அலங்கரித்து நாடுகடக்க முட்பட்டுள்ளார்! துரதிஷ்ட வசமாக பொலிஸாரின் மோப்ப நாய்விழித்துக்கொண்டதன் விளைவாக அகப்பட்டுவிடார்.

இது தொடர்பாக எல்லை காவலர்கள், ” இது ஒரு அகப்பட்ட நூதன சம்பவம், இப்படி பலர் நூதனமான முறையில் எல்லையை தாண்டி இருக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.

ஆசியத் தடகளப் போட்டி : புனேயில் ஜுலை 3 -7 வரை..!

ஆசியத் தடகளப் போட்டிகள் இந்தியாவின் புனே நகரில் இம்மாதம் மூன்றாம் திகதி தொடங்கி ஏழாம் திகதி வரை நடைபெறவுள்ளன.

ஆசியாவில் நடைபெறும் முன்னணி தடகளப் போட்டியாக இது பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் 43 ஆசிய நாடுகளிலிருந்து சுமார் 600 வீரர்கள் பங்குபெறுகின்றனர். புனே ஸ்ரீ ஷிவ் சத்திரபதி விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இந்த 20 ஆவது ஆசியத் தடகளப் போட்டியை மராட்டிய மாநில அரசும், இந்தியத் தடகளச் சம்மேளனமும் இணைந்து நடத்துகின்றன. ஆசியத் தடகளப் போட்டிகள் 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்ற போட்டியில் பட்டம் வென்ற 14 வீரர்கள் புனே போட்டியில் தமது பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள போட்டியிடுகிறார்கள் என்று இந்தியத் தடகளச் சம்மேளனம் கூறுகிறது. புனேவில் நடைபெறவுள்ள இந்த ஆசியத் தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்கள் அடுத்த மாதம் மாஸ்கோவில் நடைபெறவுள்ள உலகத் தடகளப் போட்டிகளில் பங்குபெறும் தகுதியை பெறுவர்.

இதனிடையே ஆசியத் தடகளச் சம்மேளனத் தலைவர் பதவிக்கான போட்டியில், இந்தியாவில் சுரேஷ் கல்மாடி தோல்வியடைந்துள்ளார். புனேயில் ஆசியத் தடளப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், ஆசியத் தடகளச் சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கல்மாடி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து கத்தார் நாட்டு தடகளச் சம்மேளனத்தின் தலைவரும், ஆசிய அமைப்பின் துணைத் தலைவராகவும் இருக்கும் தல்ஹான் ஜுமான் அல் ஹமாத் அவர்கள் போட்டியிட்டார்.

இதில் 18-20எனும் வாக்கு வித்தியாசத்தில் தல்ஹான் ஹமாத் வெற்றி பெற்றார். கடந்த 13 ஆண்டுகளாக ஆசியத் தடகளச் சம்மேளனத்தின் தலைவர் பதவியில் சுரேஷ் கல்மாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.2010ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளின் போது முறைகேடுகளில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் பேரில் கைதாகி பத்து மாதங்கள் சிறையில் இருந்த சுரேஷ் கல்மாடி தற்போது பிணையில் வெளிவந்துள்ளார்.

நினைவுகளின் கனவுத் தொடர்…

வானம்
சூரிய குளியலுக்காய் தயாராகியது..

நிலவு இலவச மின்சாரத்தை
இடை நிறுத்திக் கொண்டது..

நட்சத்திரங்கள்
தலையணை தேடின..

சேவல்களும் குயில்களும்
செய்தி அறிவித்தன..

கதிரவன் வரவேற்பு
புன்னகைக்காய்
மொட்டுக்கள்
உதடுகள் அசைக்கத்
தொடங்கின..

அவள் விழிகளுக்கு மட்டும்
இன்னும் விடியவில்லை
ஏனெனில்..
அவன் நினைவுகளின்
கனவுத் தொடர்
இன்னும் முடியவில்லை..

-திசா.ஞானசந்திரன்-

மீண்டும் நடிக்க வருகிறார் லைலா..!

தமிழில் பிதாமகன் உள்பட பல படங்களில் நடித்தவர் லைலா. மார்க்கெட் சீராக இருந்தபோதே நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு திருமணம் செய்து கொண்டார் லைலா. இப்போது அவருக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறாராம். கணவர் மற்றும் மகனை பராமரிப்பதிலேயே முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறாராம் லைலா.

இந்த நேரத்தில் தனது புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதற்கு லைலாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறாராம் டைரக்டர் பாலா.ஆனால், நடிப்பது பற்றி இன்னமும் அவருக்கு சரியான பதில் சொல்லவில்லையாம் அவர். மாறாக, சினிமாவில் நான் நிறைய சம்பாதித்திருக்கிறேன். அதனால் இப்போது சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தைக்கொண்டே நல்ல படங்கள் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருப்பதாக கூறினாராம். அப்படி நான் தயாரிக்கும் படங்களில் என்னை மாறுபட்ட கோணங்களில் வெளிப்படுத்தும் கேரக்டர்கள் இருக்கிறபட்சத்தில் நடிக்கும் முடிவில் இருக்கிறேன் என்றும் தனது எதிர்கால திட்டத்தை சொன்னாராம் லைலா.

அதற்கு, நல்ல யோசனைதான் என்று சொன்ன பாலா, பிதாமகன் படத்தில் உனது கேரக்டர் எப்படி மனதில் நின்றதோ அதை மிஞ்சும் ஒரு கேரக்டர் எனது புதிய படத்தில் உள்ளது. அதில் லைலா நடித்தால் சரியாக இருக்கும் என்பது எனது எண்ணம். விருப்பம் இருந்தால் நடிக்கலாம், இல்லையேல் வேறு நடிகை பார்த்துக்கொள்கிறேன் என்று லைலாவின் விருப்பத்துக்கே விட்டு விட்டாராம் பாலா. ஆக, பாலா படத்தில் நடிப்பதா?வேண்டாமா? என்பது குறித்து தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கிறாராம் லைலா.

அமெரிக்கா கண்காணிப்பு: ஸ்நோவ்டன் கசியவிட்டுள்ள புதிய தகவல்..!

பிரிட்டனின் கார்டியன் செய்தி நாளிதழுக்கு கசியவிடப்பட்டுள்ள புதிய தகவல்களின்படி, பிரான்ஸும் கிரேக்கமும் இத்தாலியும் அமெரிக்காவின் உளவுத்துறைக் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஐரோப்பாவைச் சேராத-கூட்டாளி நாடுகளும் அமெரிக்காவின் என்எஸ்ஏ புலனாய்வுத்துறையினால் இலக்குவைக்கப்பட்டுள்ளதாக கசிந்துள்ள ஆவணமொன்று கூறுகிறது.இதில் ஜப்பான், மெக்ஷிகோ, தென்கொரியா, இந்தியா மற்றும் துருக்கி உள்ளிட்ட அமெரிக்காவின் ஏனைய கூட்டாளி நாடுகளும் அடங்குகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவலகங்களும் அமெரிக்காவினால் கண்காணிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனிய சஞ்சிகையொன்று தகவல் வெளியிட்டுள்ள நிலையில், இப்போது இந்த புதிய தகவல் கசிந்துள்ளது.கார்டியனுக்கு கசியவிடப்பட்டுள்ள 2010- ரகசிய ஆவணமொன்றின்படி, 38 வெளிநாட்டுத் தூதரகங்களும் என்எஸ்ஏ-இன் கண்காணிப்பு பட்டியலில் இருந்துள்ளன.
அமெரிக்கா இதுபற்றி உரிய விளக்கமளிக்க வேண்டுமென்று பல நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

அமெரிக்க புலனாய்வுத் துறையின் முன்னாள் கணினி நிபுணரான ஸ்நோவ்டன் தான் இந்தத் தகவல்களையும் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.அமெரிக்கா அவரது பாஸ்போர்ட்டை மீளப்பெற்றுக்கொள்வதாக அறிவித்தபடியால், ஈக்வடோரில் தஞ்சம் கோரியிருந்த ஸ்நோவ்டனால் ரஷ்யாவை விட்டு இன்னும் வெளியேற முடியாதநிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.

அழிந்த தரவுகளை மீட்டெடுக்க ஒரு மென்பொருள்..!

உங்கள் கணனி வந்தட்டு(hard drive) , USB (விரலி), SD card ( தரவு அட்டைகள்) என்பவற்றில் அழிந்துபோன தரவுகளை மீட்டெடுக்க உதவும் மிகச்சிறிய அளவிலான ஒரு சிறந்த மென்பொருளை இங்கு நீங்கள் தரவிறக்கிகொள்ளலாம்.

format பண்ணப்பட்ட hard drive, பழுதடைந்த hard drive போன்றவற்றில் இருந்து தரவுகளை மீட்க முடிகின்றமையுடன், USB , SD , ஏனைய removable discks களில் அழிக்கப்பட்ட தரவுகளையும் மீட்க முடியும்.

அளவு : 4Mb

தரவிறக்க :  Download

பள்ளிக்கு செல்லும் குட்டி ஐஸ்..!

அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராயின் செல்ல மகள் ஆராத்யா.
இவரை தற்போது பிளே ஸ்கூலில் சேர்த்துள்ளார்கள்.

தினமும் குழந்தையை பள்ளிக்கு தயார் செய்து அழைத்து செல்வதுடன், வீட்டிலும் நிறைய விளையாட்டு பொருட்கள் வாங்கி வைத்துள்ளனர்.

பள்ளியில் மிஸ் சொல்லி கொடுக்கும் விஷயங்களை உடனே கிரகித்து கொள்கிறாளாம் ஆராத்யா.

இதே போன்றே ஆமிர்கான்- கிரண் ராவ் தம்பதியின் குழந்தையும் பிளே ஸ்கூலுக்கு செல்கிறதாம்.

குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்ள பாடிகாட் ஒருவரையும் ஏற்பாடு செய்திருக்கிறாராம் ஆமிர்கான்.

முயற்சியை நம்புங்கள், வாழ்வில் உயரலாம்: மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை..!

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை கடந்த 33 ஆண்டுகளாக +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசிளித்து ஊக்கப்படுத்தி வருகிறது.
நேற்று சென்னை சர்.பிடி.தியாகராயர் அரங்கில் நடந்த 34வது ஆண்டு விழாவில் தமிழகத்தில் தரமான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை இனம் கண்டு 25 மாணவர்களுக்கு தலா 10ஆயிரம் ரூபாயை சிவகுமார், சூர்யா, கார்த்தி மூவரும் இணைந்து வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் சூர்யா பேசுகையில், இந்த நிகழ்ச்சிகளை நாங்கள் சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறோம். அப்பா செய்கிற உதவிகளைப் பார்த்து நாமும் செய்ய வேண்டும். அதுவும் கல்விக்கு செய்யும் உதவியே சிறந்தது என்று உணர்ந்தோம்.

அப்பாவை விட சில மடங்காவது அதிகம் செய்தால் தான் வளர்ச்சி. அகரம் பவுண்டேஷன் அப்பாவின் பொறுப்பை பகிர்ந்து கொண்டது.

தரமான மதிப்பெண்கள் பெற்ற அடித்தட்டு மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கு உதவுவது என்று முடிவு செய்தது. தன்னாலான பணிகளைச் செய்து இதுவரை 650 மாணவர்களின் கல்லூரிக் கனவை நனவாக்கியிருக்கிறது.

மேலும் “விதை” திட்டத்தின் கீழ் பண உதவி மட்டுமின்றி மாணவர்கள் சமூகத்தை எதிர்கொள்ளும் பயிற்சியையும் அளித்து வருகிறது.

நான் பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நம்நாட்டுச் சூழல் மாறாமல் இருப்பது வருத்தம்தான்.

இன்றும் மின்சார வசதி இல்லாமல், பணவசதி இல்லாமல் சிரமப்படுகிறார்கள். இவர்களுக்கு உதவ முடிகிறதே என்று சந்தோஷப்பட்டாலும் நிலைமை இன்றும் மாறாமல் இருப்பதில் வருத்தப்பட வேண்டியும் இருக்கிறது.

இந்தப் பணியை அகரம் எடுத்து நல்ல முறையில் செய்ய விரும்புகிறது. இதுவரையில் அகரம் பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது.

ஒரு நடிகனாக நடித்தோம் போனோம் என்பதில் பெருமையில்லை. இதுமாதிரி செயல்கள் செய்வதால்தான் வாழ்க்கை முழுமை அடைவதாக உணர முடியும்.

நீங்கள் எல்லாருமே போராட்டங்களை சந்தித்து வந்திருக்கிறீர்கள். போராட்டங்களை விட்டுவிட வேண்டாம், போராட்டத்தை நம்புங்கள் சின்ன சின்ன முயற்சிகளை நம்புங்கள். அதற்கும் மரியாதை கொடுங்கள்.

என் அப்பா அறிவுரை கூறும் போது 25 வயதுவரை எதற்கும் அடிமையாகாமல் இருந்து விட்டால் அவன் எதற்கும் எப்போதும் அடிமையாக மாட்டான் என்று கூறுவார்.

இது பருவ வயது, உங்களுக்குள் பல விஷயங்கள் உள்ளே வந்து விழும். நல்லதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். கெட்டவற்றை அணை போட்டு தடுத்து விடுங்கள்.

பழக்கம்தான் நம்மை அடையாளப்படுத்தும். பழக்கமாக நுழைந்த எதுவும் நம்மை அடிமைப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் நல்ல பழக்கங்களுக்கு மட்டுமே அடிமையாக இருங்கள்.

இங்கே நிறைய மதிப்பெண் எடுத்தவர்கள் வந்திருக்கிறீர்கள். மதிப்பெண் எடுப்பது மட்டுமே சாதனை இல்லை. ஒழுக்கமும் முக்கியம். நல்ல மனிதனாகவும் இருக்க வேண்டும். வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். பிறரை மதியுங்கள் உலகில் என்ன நடக்கிறது என்று காது கொடுத்து கேளுங்கள்.

இந்த ஊக்க உதவி செயல்களை எடுத்து நடத்த முடியும் என்பது பெரிய ஆசீர்வாதமாக உணர்கிறேன். இதே பணியை என் மகளும் செய்து இந்த ஆசீர்வாதங்களை பெற ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அத்துடன் உத்தரகாண்ட் பேரழிவு நிவாரணத்துக்காக பிரதமர் நிவாரணநிதியாக 10 லட்ச ரூபாய் வழங்குவதாகவும் சூர்யா அறிவித்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடிகர் கார்த்தி அனைவரையும் வரவேற்று அறக்கட்டளை வளர்ந்த வரலாற்றை எடுத்துக் கூறினார்.

சிவகுமார் பேசும் போது, படித்து மேதையான அப்துல்கலாம், சீனிவாச சாஸ்திரி பற்றியும் படிக்காது மேதையான காமராஜர், எம்.ஜி.ஆர், இளையராஜா போன்றவர்கள் பற்றியும் விளக்கினார்.

சிவகுமார் அறக்கட்டளை–அகரம் அமைப்புகள் மூலம் வாழை என்ற அமைப்புக்கு 2 லட்ச ரூயாயும், பேராசிரியர் கல்விமணி என்கிற கல்யாணி திண்டிவனத்தில் நடத்தும் தாய் தமிழ்ப் பள்ளிக்கு ஒரு லட்சரூபாயும் வழங்கப்பட்டன.

ஆல் இன் அழகு ராஜாவில் பாவனா..!

ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் பாவனா நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சகுனி, அலெக்ஸ் பாண்டியன் என தொடர்ந்து படங்கள் தோல்வி அடைந்ததால், வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் கார்த்தி.

இந்நிலையில் அவர் ஒரே நேரத்தில் பிரியாணி, ஆல் இன் அழகு ராஜா என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இதில் பிரியாணியில் ஹன்சிகாவுடனும், அழகு ராஜாவில் காஜல் அகர்வாலுடனும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அழகு ராஜா படத்தில் பாவனாவும் இணைகிறாராம்.

படத்தில் புதுசாக பாவனாவை உள்ளே கொண்டு வந்திருப்பது கார்த்தி தானாம்.

படமே முடிந்த பின்பும் கதையில் மேலும் பல திருத்தங்கள் செய்து இப்போது இருபது நாட்கள் ஷுட்டிங் கிளம்புகிறார்களாம்.

இதற்காக பாவனா தொடர்ச்சியாக இருபது நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

இளையராஜாவின் வாழ்க்கையை படமாக்கும் எஸ்.ஜே.சூர்யா..!

எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்து, இசையமைக்கும் படம் இசை.
இந்நிலையில் இப்படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது இசை படம் முழுவதும், இசைஞானி இளையராஜா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாம்.

இதில் ஏ.ஆர்.ரஹ்மான் தோற்றத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.

இசைஞானி என்பதில் ஞானியைத் தூக்கிவிட்டு இசை என்று படத்திற்கு தலைப்பு வைத்துள்ளாராம் சூர்யா.

படத்தில் இளையராஜாவை ரசிகர்கள் கடவுளாக நினைத்து வணங்கியது, போஸ்டர் அடித்து ஒட்டியது உள்ளிட்ட பல சம்பவங்கள் இடம்பெறுள்ளதாம்.

மேலும் வைரமுத்துக்கும், இளையராஜாவுக்கும் இடையேயான பிரச்னைகள் மற்றும் மெல்லிசை மன்னனுடனான உறவு குறித்த காட்சிகளும் படத்தில் வருகிறதாம்.

குறிப்பாக அந்த காலத்தில் ராமராஜன், மோகன் ஆகியோர்களின் படங்கள் ஓட இளையராஜாவின் இசை தான் காரணம் என்பதையும் கூறியிருக்கிறாராம் சூர்யா.

காட்டுதீயை அணைக்க சென்ற அமெரிக்க வீரர்கள் 25 பேர் உடல் கருகி பலி..!.

கலிஃபோர்னியாவை அடுத்து அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் காட்டுத் தீ அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப் படைவீரர்கள் 25 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர்.

அரிசோனா மாநிலத் தலைநகர் பீனிக்ஷிலிருந்து130 கிலோமீட்டர் தொலைவில் பரவிய காட்டு தீயை, அருகே உள்ள நகரங்களுக்கு செல்லாமல் தடுக்க தீயணைப்புப் படைவீரர்கள் போராடினார்கள்.

கடந்த வெள்ளியன்று மின்னல் தாக்குதலினால் ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ, கடுமையான காற்று, காற்றில் குறைந்தளவு ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வேகமாக பரவத் தொடங்கியது.

அதிக வெப்பம் காரணமாக உள்ளூர்வாசிகள் எல்லோரும் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.இப்போது சுமார் 1000 ஏக்கர் அளவில் பரவியுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் கிட்டத்தட்ட 200 பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

THE BLACK FOREST FIRE CONTINUES TO BURN NORTHEAST OF COLORADO SPRINGS, CO.