இன்று..

வாழ்வின் இறுதி அத்தியாயங்களில் -உயிருடன் ஊசலாடிக் கொண்டிருக்கும் -எம் ஈழத்து உறவுகளை -இன்னும் என்ன செய்ய போகின்றாய்? உண்மைகள் மறைக்கப்படும் இரவுகள் தொடர்ந்து கொண்டே விடிகின்றது எம் முற்றம்.. எங்கோ மண் பிறாண்டி துடிப்படங்கும்-நாயின் ஓலமும் இரும்புச் சப்பாத்துகளின் இரக்கமற்ற உதைப்புகளும் சொல்லித் தருகின்றன எம் மீதான பார்வைகளை.. எதை எதையோ எழுத நினைத்த-என் கரங்கள் அடங்கிப்போயிற்று ஒரு...

என்னவளே..

என்னால் உனக்கு காதல் பிறக்கவில்லை என்றாலும் உன்னால் எனக்கு பல கவிதை பிறக்கிறது.. துயர் மரணித்தது மகிழ்வு பிறந்தது உன் விழி மொழி கண்டு காதல் விஷம் ஏறிக்கொள்கிறது உன் அழகுண்டு.. தனி வரவை எதிர்பார்தேன் சகி ககிதம் வருகிறாய் நெஞ்சில் தனிதம் எழுகிறது தணிய மறுக்கிறது இருந்தும் சகித்துக்கொள்கிறேன்... -திசா.ஞானசந்திரன்-

என் காதலி போலவே..

உன்னால் நொந்துதான் காலணி செய்தார்கள் உன்னை நீக்கியே மீனினை உண்பார்கள்.. உன்மேல் அழகுறும் மலர்தனைக் கொய்வார்கள் உன்னைப் பிரித்துதான் சுளைதனை சுவைப்பார்கள்.. உன்னை விலக்கியே எலுமிச்சம் கனிதனைப் பறிப்பார்கள் தாகம் நீக்கிடும் பானமும் செய்வார்கள்.. உன்னை கிளையுடன் வெட்டி வேலி அமைப்பார்கள் பயிர்களைக் காத்துதான் பயன் பல பெறுவார்கள்.. நீ இருக்கும் இடமெலாம் இன்பமும் இனிமையும் இருக்கும் இருந்தும் நீ முள்ளு என் காதலி...

மழை நாள்..

வானம் கிழிந்து போனது வீதிகளை மேவி வெள்ளம் வீடுகளில் முட்டியது மரமெல்லரம் பாறி நிலமெல்லாம் நீர் கசிவாய் சிதம்பியது.. கடும் குளிரை இதம் செய்த உன் முதற்பார்வை என்னுள் உரசியது சுகமாக.. காலப் புயலொன்று கடுகதியில் வீசியதால் இலையுதிர் காலத்து சருகை போல் எங்கோ விசிறப்பட்டு கிடக்கிறது எம் உறவு.. இருந்தும் அன்பு மட்டும்இன்னும் இன்னும் கசிந்து...

ஒரு பயணத்தில்..

ஒரு பயணத்தின் முடிவுகள் முடிவிலியாய்.. பேருந்து பயத்தின் நெருசல்களின் உரசல்களால் யார் யாரோ விட்டு சென்ற வியா்வை நாற்றங்கள் இன்னும் என்னுள் அருவருக்க...... காலைத் தேநீரும் காலவதியாகி களைப்பும் இளைப்பும் சடுதியாய் வந்துவிட தோற்றுப் போன பயணத்தின் வெறுமை தனிமையை நொந்து கொள்ள கரை தொட்டும் கடல் மேவும் அலையாகி நுளைவாயில் நோக்கி நடந்து கொண்டிருந்தேன் அத்தனை வெறுமைகளையும் விழுங்கி .. கொட்டும் வெயிலையும் குளிருட்டி கணப்பொழுதொன்றை கனதியானக்கியது அவன் வருகை உயிரள்ளிப்...

சேலை நுாலும் என் சாலை ஆகின்றது..

வாழை இலை நீர் விரும்பும் கிளிகள்.. அதைவிட்டு உன் வாய் வழி நீர் விரும்புகின்றது.. காலை எழு கதிரவன் கதிர்களும் உன் தோள் தொட்டு குளிர்கின்றது.. சோலை மலரும் மலர்களும் உன் வாசம் நுகர்கின்றது.. மாலை வருகின்ற மேகம் உன் செவ்விதழ் குழைகின்றது.. சேலை இணைகின்ற நுாலும் என் சாலை ஆகின்றது.. ஆலை இடுகின்ற கரும்பும் உன்னில் ஆசைப்படுகின்றது.. வேலை ஏதுமின்றி எனக்கும் உன்னைக் காதலிப்பதே வேலையாகிறது.. பாலையாய் உன் ஈரமில்லா இதயம்...

என்னுள் இசையாகிறாய்..

திஸ்ட்ட நடையில் துள்ளித்திரிந்தேன் உனைப்பார்த்ததும் சதுஸ்ட்ட நடையாகி கல்யானி இசைக்கிறேன்.. ராகமாலிஹாவாய் குளைகின்றாய் நீலாம்பரியாய் தோளிடுகின்றேன் வளைந்து மடியில் வீணையாகின்றாய் என் விரல் மூக்கின் நுணிபட மூச்சு மோகனம் பாடுகிறது.. நான் தட்டிடுவேனெ தவிலாகின்றாய் தொட்டிட மனம் நாயனமாகின்றது விரல் முட்டிட முட்டிகள் தபேலாவாகின்றது இசை கொட்டிட மெட்டிட உன் கண்களில் வரி தேடுகிறேன்.. எதுகையும் மோனையுமாய் கண்கள் தொடங்கி கண்டைக்கால் வரை கவிதை பெருகுகின்றது.. உலகிலேயே...

நினைவெல்லாம்…

இதயம் கனக்கிறசோகமாய் மாலைக்குருவி பாடிச்செல்கிறது.. அது உன்னை பற்றிய கவிதைகளை ஞாபகப்டுத்துகிறது.. நினைவுத்துயர் சூழும் வேளைகளில் உன் பாடல்களை திரும்பபாடுகிறது இந்த மாலை.. நிலவிருந்து எனைத் தழுவும் ஒளியி்ல் உன் தன் கைகளா? -வேலணையூர்-தாஸ்-

யுடோபியா கிரகத்தில் சாதி (குட்டிக்கதை)..!

யுடோபியா கிரகத்தில் மக்கள் முப்பது வெவ்வேறு வண்ணங்களில் தோல் நிறங்கள் கொண்ட முப்பது சாதிகளாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுள் தலைவரை தேர்ந்தெடுப்பது ஜனநாயக முறையில் நடந்தது. சாதி விட்டு சாதி திருமணம் செய்தால் எட்டு கைகள்...

நினைவுகளின் கனவுத் தொடர்…

வானம் சூரிய குளியலுக்காய் தயாராகியது.. நிலவு இலவச மின்சாரத்தை இடை நிறுத்திக் கொண்டது.. நட்சத்திரங்கள் தலையணை தேடின.. சேவல்களும் குயில்களும் செய்தி அறிவித்தன.. கதிரவன் வரவேற்பு புன்னகைக்காய் மொட்டுக்கள் உதடுகள் அசைக்கத் தொடங்கின.. அவள் விழிகளுக்கு மட்டும் இன்னும் விடியவில்லை ஏனெனில்.. அவன் நினைவுகளின் கனவுத் தொடர் இன்னும் முடியவில்லை.. -திசா.ஞானசந்திரன்-

ந(ர)கரத்தில் வாழ்ந்தாலும் நான் கிராமத்தில் பிறந்தவனே…..

வாய்கால் தண்ணீரில் மூழ்கிக் குளித்து வரும் சிறுநீரையும் கலக்க விட்டு மேல் தண்ணீர் விலக்கி இருகைகள் இணைத்து அள்ளிப் பருகுவேன் அப்போது புது உற்சாகம் என்னுள் பிறக்கும்.. இப்போ கூல்வாட்டர் குடிக்கின்றேன் குனிர் காய்ச்சல் அடிக்கின்றது... ஒல்லித் தேங்காய்க்கு பூவரசம் தடி சீவி கொம்புகள் அமைத்து முள்முருக்கம் சோத்தியிலே வண்டி செய்து தங்கையை அதில் அமர்த்தி வெட்ட வெளி வெயில் எல்லாம் இழுத்து...

துருப்பிடித்த காதல்..

நீ வாழ்வின் வாசலில் நுழையும் போது நான் மரணத்தின் பிடியில் தள்ளப்படுவேன்.. உன் உபசரிப்பு வைப்பகத்தில் நான் ஏகாந்தத்தில் நுழைந்து துருப்பிடித்த என் இதயத்தில் காதல் சிலையொன்றை நிறுவி பூசிப்பேன்.. காதலை திராட்சை மதுவைப்போல் குடிப்பேன்.. அது என்னை பாலைவனத்திற்கு அழைத்துசென்று மேகங்கள் வானில் நீந்துவதைக்காட்டும்.. இரவு இரத்தில் காதல் பட்டுப்போன்ற உதடுகளால் ஒரு நீண்ட ஆழ்ந்த தவிக்கும் முத்தத்தை என் மீது பதித்து விட்டு தன் வலிய கரத்தால் அறைந்து விடுகிறது.. நீண்ட போரின் பின்னரான அமைதி மண்டையோடுகளையும் எலும்புகளையும் விட்டு செல்லவதைப்போல்.. இருந்தும் துன்ப உயிர் தனிமையில் ஆறுதல் கொள்ளவதெல்லாம் துருப்...

யார் இறைவன்..

  கொண்டவன் மீளாதுயிலினில் அவள் மீளா துயர்தனில் அவன் கொடுத்தவன் ஆறாப்பசிதன்னில்.. அடுப்பேறும் அயல் பாத்திரங்கள் அவள் தொட்டு பளபளக்கும் அவள் வீட்டு பாத்திரங்கள் எப்பொதும் மினுமினுக்கும்.. தேய்த்திடும் பாத்திரத்தில் தேடுவாள் ஒரு வாய் உணவு எதிர் வீட்டு வளவினில் நிலத்தினுள் சோறு.. கடைத்தெரு அவளும் சென்றால் காளையர் துன்பக்கேடு வந்திடு இரண்டு...

மரணம் தொடும்போது..

எட்டு வயது காதலும் எட்டாத நேசமும் பட்டு மாமியும் சிட்டு சிலுமிசமும்.. கொட்டும் அருவியும் கூவும் குயிலும் கொடுத்த கடனும்கொடுக்காத முத்தங்களும் கெடுத்த குடியும் கேட்டவன் சொல்லும்.. பள்ளியின் கடைசி நாளும் பட்டத்தின் பாராட்டும் வள்ளி திருமணமும் வடிவேலன் தீர்த்தமும் அம்மா அன்பும்...

பதினைந்தாம் பொருத்தம்..

எந்தக்கடையிலும் கிடைக்காத ஒன்றை தேடுகிறேன் எனக்கது கிடைக்காது என்று தெரிந்தும். எட்டாத கனி என உனை நினைத்தேன் இருந்தும் முயற்சித்தேன் எட்டிவிட்டேன் கட்டியும் அணைத்தேன். தொட்டிலில் புது சொந்தம் கிடைத்தது மட்டில்லை மகிழ்விற்கு இருந்தும் தொடரவில்லை.... தொடர்ந்தது கருத்துமோதல் இருண்டது என் மனவானம் விடிந்திட சூரியன் இல்லை.. தொலைந்தது நிம்மதி அதைத்தான் தேடுகின்றேன்.... இருமனம் சேர்ந்து திருமணம் கொண்டாலும் இருவர் பணமதும் சரியாய் பொருந்திட வேண்டும். பதின்நான்கு பொருத்தத்தில் புதிதாய்...

என் அறை

என் அறைக்குள் வர நினைக்கிறீர்களா சிறிது நேரம் தாமதியுங்கள் என் அறைக்குள் வருவதற்கு முன் தனிமைப் புத்தகத்தை ஒரு முறை எனினும் நீங்கள் வாசித்திருக்க வேண்டும் ஒரு தேநீர் குவளையோடு யன்னல் மழைய ரசித்து அருந்த தெரிந்திருக்க வேண்டும் ஒற்றை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நடமாட தெரிந்திருக்க வேண்டும் புழுதி வாசத்தை வெளியேறி...