நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் 3 கொ.லை ச.ம்பவங்கள் பதிவாகி உள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற கொ.லை.க.ள் இரண்டும் த.வறான உறவு காரணமாக இடம்பெற்ற கொ.லை.க.ள் என தெரியவந்துள்ளது.
திஸ்ஸமஹாராம சந்தகிரிகம பிரதேசத்தில் 48 வயதுடைய பெண் ஒருவர் தனது காதலனின் தா.க்.கு.த.லா.ல் உ.யிரிழந்துள்ளார். இதேவேளை, ஹிதோகம, ஹீனாபோவாகம பிரதேசத்தில் 45 வயதுடைய நபர் ஒருவர் தவறான உறவு காரணமாக கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர். குறித்த நபர் வெ.ட்.டி கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர்.
உ.யிரிழந்த நபர் தொடர்பில் இருந்த பெண்ணின் கணவரே அவரை வெ.ட்.டி கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர். அத்துடன் பொத்துஹெர ரத்கல்ல பிரதேசத்தில் 64 வயதுடைய தனது தந்தையின் க.ழு.த்.தை நெ.ரி.த்.து 45 வயதுடைய மகன் கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர். சம்பவங்கள் தொடர்பில் வி.சாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மத்திய, சபரகமுவ, மேல், வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் ஆகிய 18 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல், இடியுடன் கூடிய சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் சில இடங்களில் கடும் மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என்றும், இடியுடன் கூடிய மழைக்காலங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிமை மையம் எதிர்வுகூறியுள்ளது.
அதன்படி, கிளிநொச்சி, முல்லைதீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், புத்தளம், குருநாகல், மாத்தளை, கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரஎலிய, கொழும்பு, களுத்துறை, ரத்னபுரி, காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இந்த சீரற்ற வானிலை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழைக்காலங்களில் நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்தவெளி போன்ற திறந்தவெளி பகுதிகளைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழைக்காலங்களில் கம்பி தொலைபேசி மற்றும் இணைக்கப்பட்ட மின்சார சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், சைக்கிள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
புத்தாண்டு தினத்தில் வவுனியா, வைரவபுளியங்குளத்தில் எழுந்தருளியிருக்கும் ஆதிவிநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிலும் தேர்த்திருவிழாவிலும் ஈடுபட்டனர்.
தமிழ் – சிங்கள புத்தாண்டு தினம் இன்றாகும். புத்தாண்டை முன்னிட்டு வவுனியா ஆதிநாயகர் ஆலயத்தில் தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியாவில் உள்ள முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகிய வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
மகோற்சவப் பெருவிழாவின் 9 ஆம் நாளான இன்று தேர்த் திருவிழா மகோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ சோம கணேசராஜக் குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
ஆதிவிநாயகர் பெருமானுக்கு மேளதாள வாத்தியங்கள் முழங்க விசேட அபிடேகங்கள் இடம்பெற்று உள்வீதி வலம் வந்த ஆதிவிநாயகப் பெருமான், வெளி வீதியில் பிரவேசித்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து அடியாவர்களுக்கு அருள்பாலித்துடன்,
பக்த அடியார்கள் சிதறு தேங்காய் அடித்தும், அங்க பிரதிஸ்டை செய்தும், கற்பூரச் சட்டி ஏந்தியும், ஆதிவிநாயகப் பெருமானை அரோகரோ கோசத்துடன் வழிபட ஆதிவிநாயகர் பெருமான் தேரில் வலம் வந்து அடியார்களுக்கு புத்தாண்டு தினத்தில் அருள்பாலித்தார்.
புத்தாண்டு தினத்தில் இத் தேர் திருவிழா இடம்பெற்றமையால் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த அடியவர்கள் விநாயகப் பெருமானை வழிபட்டதுடன், தமக்குள் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
வடக்கு, கிழக்கு, தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் புதுவருடப் பிறப்பு மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கமைய வவுனியா இந்து ஆலயங்களில் இன்று (14.04.2021) காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
வவுனியா கந்தசாமி ஆலயம் மற்றும் வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயங்களில் விசேட அபிசேக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அடியவர்கள் நெய் எண்ணை ஏற்றி வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். அதேபோல் வவுனியா வாழ்மக்கள் புதுவருட கொண்டாட்டங்களும் வான வேடிக்கைகளும் இடம்பெற்றன.
புத்தாண்டை முன்னிட்டு கந்தசாமி ஆலயத்தில் குருக்கள் உமாஸ்ரீ தலைமையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. விசேட தீப ஆராதனைகளுடன் புதுவருட வழிபாடுகள் இடம்பெற்றதுடன், கலந்து கொண்டோர் அமைதியாக தமக்குள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
காலை வேளையிலேயே இந்து ஆலயங்களிலும் அமைதியான முறையில் வழிபாடுகள் இடம்பெற்றதுடன் மக்களால் சமூக இடைவெளிகள் பேணப்பட்டு பொலிசார் மற்றும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைவாக வழிபாடுகள் இடம்பெற்றன.
கேரளாவில் வங்கியில் பணிபுரிந்த பெண் ஊழியர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தோக்கிலங்காடி கனரா வங்கியின் கிளை மேலாளாராக பணிபுரிந்து வந்தவர் கே. ஸ்வப்னா(38).
இவர் நேற்று முன் தினம் வங்கியில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்.டா.ர். காலை 9 மணிக்கு வேலைக்கு வந்த பெண் ஊழியர் ஒருவர், மேலாளர் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.தை.க் க.ண்.டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.தா.ர்.
உடனடியாக உடன் பணியாற்றியவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஸ்வப்னாவை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர்களால் ஸ்வப்னாவை கா.ப்பாற்ற முடியவில்லை.
இதையடுத்து அவரது உ.ட.ல் பி.ரே.த ப.ரிசோதனைக்காக குத்துப்பரம்பா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவல்அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் த.ற்.கொ.லை.க்.கு முன் ஸ்வப்னா எழுதிய கடிதத்தை கை.ப்.ப.ற்.றி.ன.ர்.
அதில், வேலை பளு காரணமாக த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இறந்த ஸ்வப்னாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள 5000 ரூபாய் பணத்தை பெறச் சென்ற மக்கள் பலர் பணம் பெற முடியாது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற அவலநிலை வவுனியா தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவில் பதிவாகியாகியுள்ளதுடன், இதன் காரணமாக அங்கு குழப்ப நிலையும் ஏற்பட்டிருந்தது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழ் – சிங்களப் புதுவருடத்தை முன்னிட்டு நாடாளாவிய ரீதியில் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவை பெறும் குடும்பங்கள், விசேட தேவையுடையோரை கொண்ட குடும்பங்கள்,
சிறுநீரக நோய்க்கான கொடுப்பனவை பெறும் நபர்கள் உள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபாய் வீதம் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவில் குறித்த பணத்தைப் பெறுவதற்கு அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்ட தரப்பினர் பலரும் கடந்த இரு தினங்களாக ஒன்று கூடிய போதும் அவர்களுக்கு முழுமையாக பணம் வழங்காது சமுர்த்தி பயனாளிகளுக்கு மட்டுமே கொடுப்னவு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (12.04) சென்ற பலரை இன்று (13.04) வருமாறு உத்தியோகத்தர்கள் அறிவித்த போதும் இன்றும் சமுர்த்தி பயனாளிகளுக்கு மட்டும் கொடுப்பனவை வழங்கிவிட்டு ஏனையவர்களை 15 ஆம் திகதி வருமாறு தெரிவித்திருந்தனர்.
இதனால் அங்கு புதுவருட கொண்டாட்டத்திற்காக பணம் பெற வந்த சிலர் தமக்கு புது வருடத்திற்கு தான் அரசாங்கம் குறித்த பணத்தை வழங்குகின்றது. ஆனால் நீங்கள் அதனை தராமல் 15 ஆம் திகதி தருவது என்ன நியாயம். எம்மை வேண்டும் என்றே அலைக்கழிக்கிறீர்கள்.
வேறு பகுதிகளில் பல கிராம அலுவலர்களும், அரச உத்தியோகத்தர்களும் இரவிரவாக நின்று கொடுப்பனவுகளை வழங்குகின்ற போதும் இங்கு மட்டும் நீங்கள் பணத்தை உரிய காலத்தில் வழங்காது இழுத்தடிப்பதாக தெரிவித்து தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கிராம அலுவலர் பொலிசாரை அழைத்து நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன், பொலிஸ் பாதுகாப்புடன் சமுர்த்தி பயனாளிகளுக்கு மட்டும் கொடுப்பனவு வழங்கப்பட்டு ஏனையவர்கள் திரும்பி அனுப்பப்பட்டனர்.
இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவித்தபோது, தாம் புதுவருடத்திற்கு மக்களுக்காக அரசாங்கம் தந்த பணத்தை தருமாறு கேட்ட நிலையில் அமைச்சர், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ, எமது மாவட்ட திலீபன் எம்.பி யாரிடம் என்றாலும் சொல்லுங்கள்.
இப்படி தான் செய்ய முடியும் எனத் தெரிவித்து எமக்கு புதுவருடத்திற்கு பணத்தை தராது கிராம அலுவலர் இழுத்தடிப்பதாக தெரிவித்தனர். இது தொடர்பில் கிராம அலுவலரை தொடர்பு கொண்டு கேட்க முயன்ற போதும், மக்கள் முழுமையாக செல்வதற்கு முன்னரே கிராம அலுவலர் 4.30 மணியளவில் அங்கிருந்து சென்றுவிட்டார்.
வவுனியா நகரில் நகரசபை சுத்திகரிப்பு வாகனத்தினால் தர்மலிங்கம் வீதியூடான போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் வரை பாதிப்படைந்திருந்தமையினால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.
சித்திரை புத்தாண்டு நாளையதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் புத்தாடை,, பொருட்கள் கொள்வனவில் மக்கள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வவுனியா நகரின் பஜார் வீதி , ஹொரவப்பொத்தானை வீதி, மணிக்கூட்டு கோபுர சந்தி, புகையிரத நிலைய வீதி, குருமன்காடு ஆகிய இடங்களில் இரவு நேரத்திலும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.
தர்மலிங்கம் வீதியில் இன்று (13.04.2021) இரவு 8.00 மணியளவில் நகரசபையின் சுத்திகரிப்பு வாகனம் வர்த்தக நிலையங்களின் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையில் சுமார் 1மணி நேரமாக மேற்கொண்டிருந்தனர்.
அதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்ததுடன் மக்களின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்பட்டது. இதனை அவதானித்த பொதுமக்கள் சிலர் நகரசபை வாகனத்தினை சற்று ஒரமாக நிறுத்துமாறு கோரிய போதும்,
நகரசபை ஊழியர்கள் அவர்களின் கருத்தினை செவிமடுக்காது வீதியில் வாகனத்தினை நிறுத்தி கழிவுகளை அகற்றும் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
மக்களின் நடமாட்டம் குறைவடைந்த பின்னர் கழிவுகளை அகற்றாது மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயற்படாது புத்தாண்டு தினத்தில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் வர்த்தக நிலைய கழிவுகளை அகற்றிய விடயம் தொடர்பில் வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் பொருட் கொள்வனவுக்காக அதிகளவிலான மக்கள் வருகை தந்தையடுத்து சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து சுகாதார நடைமுறைகளை கண்காணிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
தமிழ் – சிங்கள புதுவருடமானது நாளை பிறக்கவுள்ள நிலையில் புத்தாடைகள், பட்டாசுகள், மரக்கறிகள், இனிப்பு வகைகள் என்பவற்றை கொள்வனவு செய்வதற்காக வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் வருவதனால் நகரில் சன நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றது.
வர்த்தக நிலையங்களில் அதிகரித்த மக்கள் கூட்டத்தையும் அவதானிக்க முடிகிறது. இதனையடுத்து கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் வகையில்,
சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார பரிசோதகர்கள் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல் வழங்கி வருவதுடன், சுகாதார நடைமுஐறகளை கண்காணித்தும் வருகின்றனர்.
அத்துடன், பொலிசாரும் சுகாதார நடைமுறைகளைக் கண்காணிப்பதுடன் முகக் கவசம் அணியாது வருபவர்களை மறித்து முககவசத்தை அணியுமாறு வலியுறுத்துவதுடன், அவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களில் முககவசம் அணியாத 200 இற்கும் மேற்பட்டவர்களுக்கு வவுனியா பொலிசாரால் எச்சரிக்கை வழங்கப்பட்டு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க பொதுக் கூட்டத்தில் களேபரம் ஏற்படக் காரணம் என்ன என்பதையும், முன்னாள் தலைவரும், நகரசபை உறுப்பினருமான நா.சேனாதிராஜா கடிதம் மூலம் வெளிப்படுத்தியதே நடந்தது எனவும் என சங்கத்தின் முன்னாள் பதில் தலைவர் செ.சபாநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம் நேற்று (11.04) இடம்பெற்ற நிலையில் அங்கு ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் பதில் தலைவராக கடந்த 2020 ஆம் ஆண்டு 3 ஆம் மாதம் முதலாம் திகதியில் இருந்து செயற்பட்டு வருகின்றேன்.
அதன் தலைவர் அகளங்கன் அவர்கள் அவுஸ்ரேலியா சென்று வர முடியாமல் இருப்பதால் நான் பதில் தலைவராக இருந்து பொதுச் சபை கூட்டத்தை கூட்டியிருந்தேன்.
அந்த பொதுச் சபைக் கூட்டம் யாப்பின் அடிப்படையில் உரிய நேரத்தில் நடத்த வேண்டிய தேவை இருந்தது. பதில் தலைவர் பதவி என்பது அங்கீகாரம் உடைய பதவி அல்ல. தலைவருடைய அனுமதி பெற்று செயற்பட வேண்டியுள்ளது.
இந்த நிலையில் இந்த சங்கத்தின் நடவடிக்கைகளை செயலாளர், பொருளாளர், ஆட்சி மன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் கொண்டு சென்றோம்.
கொரோனா நோய் தாக்கம் காரணமாக எமது வருமானங்கள் முடங்கிய நிலையிலும் சிறப்பாக செயற்பட்டோம். தலைவர் லெவளிநாடு சென்ற நிலையில் பொதுச்சபை கூட்டம் நடைபெற்றது.
பதில் தலைவர் என்ற வகையில் நான் ஒரு அறிக்கையை கணக்காய்வுப் புத்தகத்தில் வெளியிட்டேன். அந்த அறிக்கையில் ஒரு குடும்பத்தை நான் பிழையாக சொல்லியிருப்பதாக தெரிவித்து நகரசபை உறுப்பினராக இருக்கும் முன்னாள் தலைவர் சேனாதிராஜாவின் இரண்டு சகோதாரர்களான தர்மராஜா, வில்வராஜா ஆகியோர் கூட்டம் ஆரம்பித்த உடனேயே பல தரப்பட்ட பிரச்சனைகளை எழுப்பி கூட்டத்தை நடத்த விடாது செயற்பட்டனர்.
சபையில் இருந்த பெரியவர்கள் இதில் தலையிட்டு புதிய தலைமை உருவாகட்டும் என்று ஆலோசனை கூறிய பின்னரும் அவர்கள் இருவரும் குழப்பம் விளைவித்து நான் வெளியிட்ட அறிக்கையை நடராஜா மண்டபத்தில் நடராஜா சிலை முன்பாக தீயிட்டு எரித்தார்கள்.
நான் வெளியிட்ட அறிக்கை அனைத்து பொதுச்சபை உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரதும் கோரிக்கை இந்த அறிக்கையை வெளியிடக் கூடாது என்பதே.
நான் குறிப்பிட்ட விடயங்கள் என்னைப் பொறுத்தவரை எமது சமய, சமூக விழுமியங்களை மீறியதாக இருக்கவில்லை. நான் 14 மாதங்கள் பதில் தலைவராக இருந்த போது அனுபவ ரீதியாக பெற்ற விடயங்களையே எழுதியுள்ளேன்.
முன்னாள் தலைவர் சேனாதிராஜா அவர்கள் ஒரு கடிதம் எழுதினார். தலைவர் அகளங்கன் வரும் வரை கூட்டம் நடத்த வேண்டாம் எனவும் அவ்வாறு நடத்தினால் வேறு பிரச்சனை வரும் எனவும் கடிதம் எழுதினார்.
அந்த காலத்தில் இருந்து அவர்கள் திட்டமிட்டு தனது ஏனைய சகோதரர்களை வைத்து இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். ஒரு சமய நிறுவனம் நடராஜா சிலை முன்னால் அந்த ஆண்டின் அறிக்கையை எரிப்பது மிகவும் பிழையான விடயம்.
இந்த அறிக்கையில் உள்ள எனது தகவல் யாருக்கும் மனவருத்தத்தை தந்தால் நான் அதற்கு மன்னிப்பு கேட்கிறேன் எனக் கூட்டத்தில் தெரிவித்த போதும், அவர்கள் என்னை கூட்டத்தை நடத்த விடாது தீயிட்டு எரித்துள்ளார்கள்.
தீயிட்டு எரித்த அதே தியாகராஜாவை துணைத்தலைவராக தெரிவு செய்துள்ளார்கள். இந்த சங்கம் எங்கே பயணிக்க போகிறது. நிறைந்த தீ வைப்பு சம்பவங்களுக்கு அடித்தளம் இட்டுள்ளார்கள். இந்த சங்கம் இளைஞர்களுக்குரியது என்ற பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கின்றது. இருந்தும் முதியவர்கள் இதை நடத்த வேண்டும் என பொதுச்சபை கூறுகிறது.
25 வருடங்களுக்கு மேலாக சேனாதிராஜா அவர்களே தலைவராக இருந்துள்ளார். அதன் பின் அவரது தம்பி அகளங்கன் 3 வருடங்களை கடந்து தலைவராக இருந்துள்ளார்.
இந்த நிலையில் இவர்கள் நடந்து கொண்ட விதம் எனது மனதை புண்படுத்தியதை விட இந்து சமூகம் என்ற சமூகத்தை இவர்கள் புண்படுத்ததியுள்ளார்கள்.
நான் தனிப்பட்ட ரீதியில் அறிக்கை வெளியிடவில்லை. ஒரு கூட்டு நிறுவனம் என்ற அடிப்படையில் தான் வெளியிட்டுள்ளேன். பிழை சரிகளை பேசலாம். ஆனால் தீயிட்டு எரிப்பதை ஏற்க முடியாது.
மீண்டும் அவரை துணை தலைவராக தெரிவு செய்தது ஏற்க முடியாது. அவரது உறவினர் ஒரு சபையை சேர்ந்தவர். அவர் கூட சண்டைக்கு வந்தார். இந்த சம்பவங்களை பொதுச்சபை அங்கீகரிக்கின்றதா?.
துணைத் தலைவரை புதிய தலைவராகிய பத்தமநாதன் சத்தியநாதன் ஏற்றுக் கொள்கின்றாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் – சிங்களப் புத்தாண்டு புதன்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு மக்கள் ஆலய தரிசனம் மேற்கொண்டு மரக்கறி உணவுகளை அதிகம் சமைத்து உண்டு விரும்தோம்பல் செய்வது வழக்கம்.
இதனை சாதகமாக பயன்படுத்தி வவுனியாவில் மரக்கறி விற்பனையாளர்கள் மரக்கறிகளின் விலையை சடுதியாக உயர்த்தி விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக நேற்றைய தினம் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி 240 ரூபாய்க்கும், 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதேபோல் அனைத்து மரக்கறிகளின் விலையும் ஒரேநாளில் சடுதியாக அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டினுள் முச்சக்கரவண்டியொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (12.04.2021) திங்கட்கிழமை இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கூமாங்குளம் பிரதான வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி வைரவப்புளியங்குளம் குளக்கட்டினை அண்மித்த சமயத்தில் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து குளக்கட்டினிலிருந்து கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டியினை மீட்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளது.
தமிழ் – சிங்கள புதுவருடம் புதன் கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வவுனியா நகருக்கு வருகை தரும் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி புத்தாடைகள்,
இனிப்பு பொருட்கள், வெடிகள் என்பவற்றையும் மரக்கறிகளையும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
இதனால் வவுனியா நகரம் சனநெரிசல் மிக்கதாக காணப்படுவதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளில் பொலிசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வவுனியா, சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தின் நடராஜர் மண்டபத்தில் நடராஜர் உருவம் எரியூட்டப்பட்மை இந்து மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா, சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் நேற்று (11.04) சுத்தானந்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நடராஜர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தில் 14 மாதங்கள் பதில் தலைவராக இருந்து பொதுச்சபைக் கூட்டத்தை ஒழுங்குபடுத்திய செ.சபாநாதனால் நடராஜர் உருவம் பொறிக்கப்பட்ட நிலையில் ‘என் பார்வை அறிக்கையும் ஆண்டறிக்கையும்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
இது தொடர்பில் அதிருப்தி அடைந்த சங்கத்தின் துணைத் தலைவர் நா.தியாகராஜா மங்கள விளக்கேற்றிய தீபச் சுடரில் நடராஜர் உருவம் பொறிக்கப்பட்ட புத்தகத்தை தீயிட்டு எரித்து இந்து மதத்துக்கு அவதூறு எற்படுத்தினார்.
இது தொடர்பில் இந்து மக்கள், இளைஞர்கள் பலரும் அதிருப்தியை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.
அத்துடன் பொறுப்பு வாய்ந்த இந்து அமைப்பு ஒன்றின் துணைத் தலைவர் இவ்வாறு நடந்து கொண்டமை தொடர்பில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாவட்ட மற்றும் பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
இந்து சமயத்தை அவமதிக்கும் வகையில் நடராஜர் உருவத்தை பொறுப்பு வாய்ந்து இந்து அமைப்பு ஒன்றின் முன்னாள் மற்றும் தற்போதைய துணைத்தலைவரான நா.தியாகராஜா எரித்தமை தவறான முன்னுதாரணம் என்பதுடன்,
ஓட்டுமொத்த இந்து மக்களையும் அவமதிக்கும் செயல் எனவும், இது தொடர்பில் இந்து அமைப்புக்கள் மௌனம் காப்பது ஏன் எனவும் இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன், அவரை உடனடியாக குறித்த சங்கத்தின் உறுப்புரிமையில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
சிறியளவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுகின்ற சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் மேற்கொள்வதற்கு பதிலாக பொலிஸாரினால் தண்டப்பணம் விதிக்கப்பட்டுகின்றன. பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பத்திரத்தினை எடுத்துச் சென்று அஞ்சல் அலுவலகங்களில் தண்டப்பணம் செலுத்தப்பட வேண்டும்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம் அஞ்சல் அலுவலகத்திற்கு தண்டப்பணம் செலுத்த செல்பவர்களை இங்கு தண்டப்பணம் செலுத்த முடியாது எனவும் வவுனியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று தண்டபணத்தினை செலுத்துமாறு பொதுமக்களை நெளுக்குளம் அஞ்சல் அலுவலக அதிகாரி திரும்பியனுப்புகின்றார்.
இதன் காரணமாக நெளுக்குளம் அஞ்சல் அலுவலகத்திலிருந்து சுமார் 5 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வவுனியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று போக்குவரத்து தண்டப்பணத்தினை செலுத்தி மீண்டும் 5கிலோ மீற்றர் தூரம் பயணித்து நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று சாரதி அனுமதிப்பத்திரத்தினை பெறவேண்டிய நிலமை சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் போக்குவரத்து தண்டப்பணம் செலுத்துவதற்குரிய வசதிகள் காணப்படுகின்ற போதிலும் நெளுக்குளம் அஞ்சல் அலுவலகத்தில் மாத்திரம் போக்குவரத்து தண்டப்பணம் செலுத்த முடியாத நிலைக்கு காரணம் என்ன என்பது தொடர்பில் சாரதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்தினை தொலைபேசியூடாக தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
சுயாதீன தமிழ் இளைஞர்களின் குருதிக்கொடை நிகழ்வு சமயபுரம் சனசமூக நிலைய மண்டபத்தில் இன்று (11.04.2021) ஞாயிற்றுகிழமை காலை நடைபெற்றது.
மருக்காரம்பளை கிராம அலுவலர் நா.ஸ்ரீதரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமதாசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்கள்.
ஏராளமான இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை இவ் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.
குருதிக்கொடையானது சமயபுரம் கிராம அபிவிருத்தி சங்கம், மணிபுரம் கிராம அபிவிருத்தி சங்கம், இளங்கோ விளையாட்டுக் கழகம், அகில இலங்கை சைவத்தமிழ் மன்றம், பாக்கியம் அறக்கட்டளை, சுயாதீன தமிழ் இளைஞர்கள் ஆகிய பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.
மேலும் இதில் பங்குபற்றிய குருதி கொடையாளர்களுக்கு “மனிதநேய மாண்பாளர்” பட்டம் வழங்கி சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு தினசரி 40க்கு மேற்பட்ட பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் தற்போது கொரோனா தொற்று காரணமாக பயணிகளின் எண்ணிக்கை குறைந்தளவில் காணப்படுகின்றது.
கொரோனா அச்சத்தினால் மக்கள் தற்போது சொந்த வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களில் அதிகளவில் பிரயாணத்தினை மேற்கொள்வதினால் தமிழ் இ சிங்கள புத்தாண்டு காலத்திலும் குறைந்தளவு பயணிகளுடன் பேரூந்துகள் தமது பயணத்தினை தொடர்கின்றன. இதன் காரணமாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
உள்ளூர் பேரூந்து சேவையில் பயணிகளின் எண்ணிக்கை கனிசமானளவு காணப்படுகின்ற போதிலும் வெளிமாவட்டங்களுக்கான பேரூந்துகள் குறைந்தளவு பயணிகளுடன் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து சேவையினை தொடர்கின்றன.