கணவன் பற்றிய உண்மையை ஆதாரத்துடன் கண்டுபிடித்த மனைவி எடுத்த வி.பரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் வ.ரதட்சனை கொ.டு.மை.யா.ல் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட இளம் மனைவி சம்பவத்தில், அது கொ.லை.யா.க இ.ருக்கலாம் என்ற ச.ந்தேகத்தின் பேரில் பொலிசார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்தவர் அன்பரசன் (27). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சித்ரா (24) என்பவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் கோயமுத்தூர் கருமத்தம்பட்டி அருகே உள்ள உஞ்சப்பாளையம் இந்திரா நகரில் வேலை நிமித்தமாக குடிவந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர், அப்போது கணவர் அன்பரசன் பல பெண்களுடன் தொ.டர்பில் இருப்பதற்கான ஆதாரங்கள் சித்ராவிற்கு கிடைத்துள்ளது. இதனால், இது குறித்து சித்ரா அவரிடம் கேட்ட போது, அன்பரசன், சித்ராவிடம் நகைகளை கேட்டு வ.ற்புறுத்தியுள்ளார்.

மேலும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இளைய மகளுக்கு பிறந்த நாளில் சித்ராவின் சகோதரர் வெள்ளிக் கொலுசு ஒன்று வாங்கி வந்துள்ளார். தங்கத்தில் கேட்டால் வெள்ளியில் கொடுக்கிறீர்களா என அன்பரசன் மற்றும் அவரது தயார், தந்தை, சகோதரி ரோகிணி ஆகியோர் சித்ராவை மி.ரட்டியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சித்ரா தனது பெற்றோரிடம் வே.தனையுடன் கூறியுள்ளார். அப்போது சனிக்கிழமை தேனி வரும்போது அழைத்து செல்வதாக பெற்றோர் சித்ராவிடம் கூறியுள்ளனர்.

இது போன்ற சூழ்நிலையில் தான், இரு குழந்தைகளையும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் கோவிலுக்கு அனுப்பி விட்டு கடந்த வியாக்கிழமை மாலை சித்ரா வீட்டில் தூ.க்.கு.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார்.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவன் அன்பரசன் சித்ரா தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதாக, சித்ராவின் பெற்றோர்களுக்கும் பொலிசாருக்கும், தகவல் தெரிவித்துள்ளார்.

திருமணமாகி நான்கு ஆண்டுகளில் சித்ரா இ.றந்ததால் ச.ந்தேக ம.ரணம் என பொலிசார் வ.ழக்கு பதிவு செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடற்கூராய்வு செய்யப்பட்டு சித்ராவின் .உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது வரை அன்பரசன் உ.டலை பார்க்க வரவில்லை என சித்ராவின் உறவினர்கள் கு.ற்றம் சா.ட்டினர்.

தனது மகள் இ.றப்புக்கு காரணமான அவரது கணவர் அன்பரசன், சகோதிரி ரோகிணி , மாமியார் , மாமனார் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். சித்ரா கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டி.ரு.க்.க.லா.ம் என்ற கோ.ணத்திலும் பொலிசார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், பி.ரே.த ப.ரிசோதனை அறிக்கையில் கொ.லை.யா?, த.ற்.கொ.லை.யா? எ.ன்பது குறித்து தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலட்சியக் கனவுடன் யாழ்.பல்கலையில் படித்துப் பட்டம் பெற்று வெளியேறிய இளம் யுவதியின் நெகிழவைக்கும் செயல்!!

யாழ் பல்கலைக்கழக யுவதி..

இலங்கையில் யாழ் பல்கலைக்கழக யுவதி ஒருவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.தென்னிலங்கையைச் சேர்ந்த Lakmali என்ற பெண்ணின் பட்டமளிப்பு விழா புகைப்படங்களே இவ்வாறு பலரையும் கவர்ந்துள்ளது.

படித்துப் பல்கலைக்கழத்தில் பட்டம்பெறுவது என்பது மிகவும் சாதாரண விடயம் அன்று. நீண்ட நாள் கனவு மற்று லட்சியத்துடன் செயல்படுபவரே தங்களுக்கான இலக்கினை அடைகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் வசதியான வீட்டு பிள்ளைகளைவிட வறிய குடும்பத்தில் உள்ள பிள்ளைகளே நம் நாட்டில் கல்வியில் சிறந்து விளங்குகின்றார்கள். வசதியான வீட்டு பிள்ளைகளுக்கு படித்தால் போதும் என நினைப்பார்கள்.

ஆனால் வறிய குடும்பத்து பிள்ளைகளைதான் தாம் சாதிக்கவேண்டும் என்கின்ற லட்சியத்தை கனவாககொண்டு அதில் பயணிப்பார்கள்.அத்துடன் தமது லட்சியம் ஈடேறியவுடன் அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

அதுபோலதான் யாழ் பல்கலைகழகத்தில் கல்வி பயின்று பட்டம் பெற்ற லக்மாலி எனும் குறித்த யுவதி தனது பட்டமளிப்பு விழா உடையுடன் எடுத்த புகைப்படங்களே இவ்வாறு சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இது குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள லக்மாலி, யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள். நான் இன்று இந்த வெற்றியைப் பெற அவர்களும் காரணம்.என் வாழ்நாளில் அவர்களை என்றும் மறக்கமாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந் நிலையில், பலரும் குறித்த யுவதிக்கு வாழ்த்துக்களைக் கூறிவருகின்றனர்.

காலையில் திருமணம் முடிந்து மணமகள் வீட்டிற்கு சென்ற மணமகனுக்கு நேர்ந்த வி.பரீதம்!!

விக்னேஸ்வரன்…

இந்திய மாநிலமான தமிழகத்தில் திருமணமான அன்றே மகமகன் மா.ர.டை.ப்.பா.ல் உ.யி.ரி.ழ.ந்த ச.ம்.ப.வ.ம் சோ.க.த்.தை ஏற்.ப.டு.த்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் இளஞ்செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. தற்போது திருச்சி மாவட்டம் சமயபுரம் கோணலையில் வசிக்கின்றனர்.

இவர்களின் மகன் விக்னேஸ்வரன்(27).இவருக்கும் சாயல்குடி அருகே க.டு.கு சந்தையைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கடந்த புதன் கிழமை காலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

மணமக்கள் கடுகுசந்தை மணமகள் வீட்டிற்கு வந்தனர். மதியம் 3:00 மணிக்கு மணமகன் விக்னேஸ்வரனுக்கு நெ.ஞ்.சு.வ.லி ஏற்.ப.ட்டு ம.ய.ங்.கி வி.ழு.ந்.துள்ளார்.

உடனே சாயல்குடி அ.ர.சு ஆரம்ப சுகா.தார. நிலையத்திற்கு கொண்டு செல்லும் வ.ழி.யி.லேயே உ.யி.ரி.ழ.ந்தார். விக்னேஸ்வரனின் இ.று.தி ச.ட.ங்.கு நேற்று மாலை 4:00 மணிக்கு நடைபெற்றுள்ளது.

காலையில் தி ரு மண ம் முடிந்து மாலையில் மணமகனின் இ.ற.ப்.பு இ ரு வீட்டார், உறவினர்கள், கிராம ம.க்.க.ளி.டையே. பெ.ரு.ம் சோ.க.த்.தை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது.

குடும்பப் பெண்கள் 15 பேரை காதல் வலையில் வீழ்த்தி டாக்ஸி ஓட்டுனர் செய்த செயல்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் டிக்டாக் அ.டிமைகளாகக் கிடந்த குடும்பப் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களிடம் பணம் ப.றித்து வந்த இளைஞர் குறித்த அ.திர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஊட்டியைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுனரான கார்த்தி லதா, சுதா, வானி, சுந்தரி, சனா, கவிதா, அம்முராஜி, ரோஜா, லைலா, விதிதா, ராதே, அனு, புஷ்பா, கோகிலா இவர்களுடன் ஒரு வட மாநில பெண் என 15 குடும்ப பெண்களுடன் டிக்டாக் மூலம் நட்பாகி பின்னர் காதல் வலையில் வீ.ழ்த்தியுள்ளான்.

பின்னர் அவர்களின் வீடியோவை வைத்து மி.ர.ட்.டி ப.ணம் ப.றித்திருக்கிறான் கார்த்தி. அந்தவகையில் திருமணமான பெண்கள், ஐ.டி நிறுவன ஊழியர், அடகுக்கடை அதிபர் மனைவி, என கார்த்தியின் கைவரிசையால் முகவரி இ.ழந்த பெண்கள் பலர் என்று கூறப்படுகின்றது.

டிக்டாக் த.டை செய்யப்பட்டதால் இவனது காதல் கணக்குகள் முடித்து வைக்கப்பட்ட நிலையில் டகாடக் என்ற செயலி மூலம் மீண்டும் காதல் லீ.லையை கார்த்தி தொடர்ந்துள்ளான்.

இந்த நிலையில் இவனால் ஏ.மாற்றப்பட்ட 10க்கும் மேற்பட்ட பெண்கள் வாட்ஸ் அப் மூலம் ஒன்றிணைந்து களவாணி கார்த்தி எப்படி எல்லாம் பெண்களை காதலித்து ஏ.மாற்றினான் என்பதை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டதோடு,

அவன் பெயரிலேயே போ.லியான 2 கணக்குகளை தொடங்கி அவனை பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்தி வருகின்றனர். போலியான வாக்குறுதிகளைக் கொடுத்து காதலித்த பெண்களை வீடியோ எடுத்து பணம் ப.றித்து வந்த கார்த்தி தனது பழைய காதலிகளின் பழிவாங்கும் செயலுக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் ப.தறித்து.டித்து வருகின்றான்.

போதுமான அளவு ஓடியோ வீடியோ ஆதாரங்கள் உள்ள நிலையிலும் கார்த்தி மீது பொலிசார் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. கார்த்தியை கை.து செய்யப்பட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

ஷாப்பிங் மால் கார் பார்க்கிங்கில் பெண் மாவட்டக் கலெக்டர் செய்த செயல்!!

ரோகிணி சிந்தூரி..

இந்தியாவில் மைசூரு மாவட்ட துணை ஆணையர் ரோகிணி சிந்தூரி, பொது இடத்தில் பஞ்சர் ஆன தனது SUV காரின் டயரை யாருடைய உதவியும் இல்லமல் தானே மாற்ரம் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இருப்பினும், இந்த வீடியோ எங்கே படமாக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் இது ஒரு ஷாப்பிங் மாலின் வாகன நிறுத்துமிடம் போல் தெரிகிறது.

ரோகிணி சிந்தூரி ஒரு எளிமையான சுடிதார் உடையணிந்து, தனிப்பட்ட வேலைக்காக தனது வெள்ளை ஸ்கார்பியோ காரில் சென்றுள்ளார். சென்ற இடத்தில் அவனது கார் டயர் பஞ்சராகியுள்ளது. அந்த நிலையில், அவரே ஜாக்கி மற்றும் ஸ்பேனரைப் பயன்படுத்தி ஸ்டெப்னி டயரை மாற்ரிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் வந்த ​​ஒரு அடையாளம் தெரியாத நபர் ‘மேடம், நீங்கள் டி.சி ரோஹினி சிந்தூரி தானே?’ எனக் கேட்டுள்ளார். ஆரம்பத்தில், அவள் பதிலளிக்கவில்லை. ஆனால், அந்த நபர் அவரை ‘மேடம்’ என்று பலமுறை அழைத்த பிறகு, சிரித்த முகத்துடன் திரும்பியுள்ளார் ரோகிணி சிந்தூரி.

அ.திர்ச்சியான அந்த நபர் “மேடம் நீங்களா பஞ்சர் போடுகிறீர்களா?’ அதற்கும் அவர் அமைதியாக புன்னகைத்துள்ளார். பிளாட் டயரை மாற்றுவது அவ்வளவு எளிதானது அல்ல என்று வாகன ஓட்டிகளுக்குத் தெரியும்.

ஜாக்கி மூலம் வாகனத்தை தூக்குவது, சக்கரத்தின் போல்ட்டை அகற்றி புதிய டயரை மாற்றுவது சற்று கடினம். பெரும்பாலும் பெண்கள் இந்த வேலையை செய்வதில்லை. குறிப்பாக ஆண்களாக இருந்தாலுமே, பொது இடத்தில் ஒரு கலெக்டர் இந்த வேலையை செய்வார்களா என்பது சந்தேகம் தான்.

இந்த நிலையில் ஒரு பெண் மாவட்ட கலெக்டர் ரோஹினி சிந்தூரி அதைச் செய்துள்ளார் என்பது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கிறது. அவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக நிலையில், அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

இலங்கையின் தலைநகரில் காணிகளின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள்!!

கொழும்பில்..

கொழும்பில் நில மதிப்புகள் 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சராசரியாக 4.6 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இரு ஆண்டு நில விலைக் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் நில மதிப்பீட்டு குறிகாட்டி (land value index) 2020ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 145.2 ஐ எட்டியது, இது ஆண்டுக்கு 4.6 சதவிகிதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது,அரை ஆண்டு அடிப்படையில் நில மதிப்பீட்டு குறிகாட்டி 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

எனினும், நில மதிப்பீட்டு குறிகாட்டியின் அதிகரிப்பின் அளவு சமீபத்திய காலங்களில் காணப்பட்ட வீழ்ச்சிக்கு ஏற்ப இருந்தது.கூடுதலாக, நில மதிப்பீட்டு குறிகாட்டி 2020 ஆம் ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது, இரண்டாவது பாதியில் 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

நில மதிப்பீட்டு குறிகாட்டியின் அனைத்து துணை குறிகாட்டிகளும் ஒட்டுமொத்த அதிகரிப்புக்கு பங்களிப்பு செய்துள்ளன. குடியிருப்பு நில மதிப்பீட்டு குறிகாட்டி அதிகபட்ச வருடாந்திர அதிகரிப்பு 4.7 சதவீதமாக பதிவாகியுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கிய நில விலைக் குறியீடு 1998 முதல் 2008 வரை ஆண்டு அடிப்படையிலும், 2009 முதல் 2017 வரை அரைகுறை அடிப்படையில் தொகுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, 2017 முதல், கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதன் புவியியல் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டது.

வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் 150 பேரிடம் வியாழக்கிழமை பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் முடிவுகள் இன்று (27.02) காலை வெளியாகிய நிலையில் அதில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், வவுனியா முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றைச் சேர்ந்த இருவரும், பொலிசார் ஒருவரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்திவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்ட ஊர் சுற்றும் ஓட்டப் போட்டி 2021!!

ஊர் சுற்றும் ஓட்டப் போட்டி..

வவுனியா மாவட்ட ஊர் சுற்றும் ஓட்டப் போட்டி வவுனியா பிரதேச செயலாளர் என்.கமலதாசன் தலைமையில் இன்று (27) நடைபெற்றது.

வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் சங்கம் மற்றும் வவுனியா மாவட்ட பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய இவ் ஊர் சுற்றும் ஓட்டப் போட்டியானது வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய முற்றலில் ஆரம்பமாகி நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன கலந்து கொண்டிருந்தார்.

ஆண் மற்றும் பெண் இருபாலருக்குமாக 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவ சான்றிதழ்களுடன் கலந்துகொண்ட ஊர் சுற்றும் ஓட்டப் போட்டியானது குடியிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய முற்றலில் ஆரம்பமாகி வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியை அடைந்து,

அங்கிருந்து வவுனியா குளக்கட்டு வழியாக பயணித்து பூந்தோட்டம் சந்தியை வந்தடைந்த ஓட்டப் பந்தய வீரர்கள் மீண்டும் குடியிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய முற்றலை வந்தடைந்தனர். இவ்வாறாக 10 கிலோமீற்றர் தூரத்தை மூன்று சுற்றுக்களாக ஓடி முடித்த வீரர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

முதல் 10 இடங்களுக்குள் வெற்றிபெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

ஆண்கள் பிரிவில் முதலாவது இடத்தை எஸ்.கிந்துசன், இரண்டாவது இடத்தை எஸ்.கபிலன், மூன்றாவது இடத்தை என்.நிசோபன் பெற்றுக்கொண்டனர்.

பெண்கள் பிரிவில் முதலாவது இடத்தை எஸ்.கேமம் பிரியா, இரண்டாவது இடத்தை ஜெ.தனுசிகா, மூன்றாவது இடத்தை எல்.கயாலினி பெற்றுக்கொண்டனர். வெற்றி பெற்ற ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அதிதிகளால் சான்றிதழ்களும், பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன், தலைவர் தமிழ் விருட்சம் அமைப்பு க.சந்திரகுமார் (கண்ணன்), வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் கெ.நவநீதன், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

திருமண நிகழ்விற்கு சென்ற பெண் ம.ரணம்!!

திருமண நிகழ்வில்..

கொட்டதெனியாவ பிரதேசத்தில் மண்டபத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பெண் உ.யிரிழந்துள்ளார். உ.யிரிழந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கோவிட் வைரஸ் தொற்றியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமண பந்தத்தில் இணைந்த புதுமணத்தம்பதியை தனிமைப்படுத்தவதற்கு திவுலபிட்டிய சுகாதார வைத்திய அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

உ.யிரிழந்தவர் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 76வயதுடைய பெண் ஒருவராகும் உ.யிரிழந்த பெண் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க உதவிய 8 பேரும் திருமணத்திற்கு வந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியாவில் கூகுள் மற்றும் முகப்புத்தக நிறுவனங்கள் கட்டணம் செலுத்துவதைக் கட்டாயமாக்கும் சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேற்றம்!!

அவுஸ்ரேலியாவில்..

செய்திகளைப் பகிர்வதற்காக கூகுள், முகப்புத்தகம் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டணம் செலுத்துவதைக் கட்டாயமாக்கும் சர்ச்சைக்குரிய சட்டத்தை அவுஸ்ரேலிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

பிற ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளைப் பகிரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அதற்கான கட்டணத்தை அந்த ஊடக நிறுவனங்களுக்கு அளிப்பதைக் கட்டாயமாக்கும் சட்டத்தை அவுஸ்ரேலிய நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபை நேற்று நிறைவேற்றியுள்ளது.

இதையடுத்து, பிற ஊடகங்களின் செய்திகளைப் பகிர்ந்து வரும் அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், முகப்புத்தகம் ஆகியவை அதற்கான கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இந்தச் சட்டத்துக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வரும் கூகுளும், முகப்புத்தக நிறுவனங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தங்களது எதிப்பை வெளிப்படுத்தும் வகையில், அவுஸ்ரேலியாவில் செய்திகளைப் பகிர்வதற்கு முகப்புத்தகம் நிறுவனம் தடை விதித்தது. இதன் மூலம், அரசாங்கத்தினன் சமூக வலைதள நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து முகப்புத்தகத்துக்கும் அவுஸ்ரேலிய அரசாங்கத்துக்கும் இடையே நடைபெற்ற தீவிர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சர்ச்சைக்குரிய சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, விளம்பரங்களைப் பகிர்வதற்கு விதித்திருந்த தடையை முகப்புத்தகம் விலக்கிக் கொண்டது. இந்தச் சூழலில், கட்டாய கட்டணச் சட்டத்துக்கு பிரதிநிதிகள் சபை இறுதி வடிவம் கொடுத்துள்ளது.

இதுவரை பிற ஊடகங்களின் செய்திகளை எந்தவித சிக்கலையும் எதிர்கொள்ளாமல் பகிர்ந்து, அதன் மூலம் வருவாய் ஈட்டி வந்த கூகுள், முகப்புத்தகம் ஆகிய நிறுவனங்கள் அவுஸ்ரேலியாவில் கட்டாய விளம்பரக் கட்டணச் சட்டத்தை முதல்முறையாக எதிர்கொண்டுள்ளது.

சுற்றுலா சென்ற ஒன்பது வயது சி.றுவன் கு.ழியில் வி.ழுந்து பரிதாபமாக ம.ரணம்!!

தியலும நீர் வீழ்ச்சிப் பகுதியில்..

பதுளை – கொஸ்லாந்தை மேல் தியலும நீர் வீழ்ச்சிப் பகுதியில் உள்ள நீர் நிறைந்த குழியில் விழுந்து 9 வ.யது சி.றுவன் ஒ.ருவர் உ.யிரிழந்துள்ளார்.

மாத்தறையில் இருந்து கொஸ்லாந்தை மேல் தியலும நீர் வீழ்ச்சி பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், குறித்த சி.றுவன் உ.யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொஸ்லாந்தை பொலிஸார் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன்போது உ.யிரிழந்த சி.றுவனின் ச.டலம் கொஸ்லாந்தை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து : மூவர் படுகாயம்!!

விபத்து..

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய போரதீவில் நேற்று இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பெரிய போரதீவு காளி கோவிலுக்கு முன்பாக களுவாஞ்சிகுடியில் இருந்து வந்த முச்சக்கர வண்டியும், 39ஆம் கிராமத்தில் இருந்து வந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 39ஆம் கிராமத்தில் இருந்து வந்த முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் ப.டுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேருக்கு நேர் முச்சக்கர வண்டிகள் மோதிய நிலையில் ஒரு முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து காரணமாக இரண்டு முச்சக்கர வண்டிகளும் கடும் சே.தத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், இது தொடர்பான வி.சாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா வடக்கு வலய கல்விப் பணிமனையில் சேவையாற்றி ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு!

வவுனியா வடக்கு வலய கல்விப் பணிமனையில் சேவையாற்றி கடந்த வருடம் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்றுமுன்தினம்  25.02.2021(வியாழன்)ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

திருமதி.தேவிகா உமாதேவன்- (பிரதிக் கல்விப் பணிப்பாளர் கல்வித் திட்டமிடல்),திரு.கந்தசாமி சத்தியநாதன்(நிதி உதவியாளர்),திரு.வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன்(பதவிநிலை அலுவலர்) ஆகியோர் கடந்த வருட இறுதிப் பகுதியில் அகவை அறுபதில் (60) தடம் பதித்து அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தனர். நாட்டில் நிலவும் கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக மேற்படி நிகழ்வினை உரிய தினத்தில் மேற்கொள்ள முடியாமல் போனது.

குறைந்தளவான வலய கல்விசார்,கல்விசார உத்தியோகத்தர்களின் பங்கு பற்றலுடன்  மேற்படி ஒய்வு பெற்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு சுகாதார நடைமுறைகளின் அடிப்படையில் மிக  எளிமையாக  இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை இராவணன் கல்வெட்டுக்கருகில் பழமை வாய்ந்த தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு!!

தமிழ் கல்வெட்டு..

திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்திற்கு அருகில் உள்ள இராவணன் கல்வெட்டுக்கருகில் பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு ஒன்று கடந்தவாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என யாழ். பல்ககலைகழகத்தின் வரலாற்றுத்துறை பேராசியர் ப.புஸ்பரட்ணம் தகவல் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் திருகோணமலை மத்திய கலாச்சார நிதியத்தின் ஆய்வு உத்தியோகத்தர்கள் தமிழ் கல்வெட்டு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

இக்கல்வெட்டு பற்றி யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியியல் பட்டதாரியான பிரசாத் நேரில் பார்வையிட்டு அந்த புகைப்படத்தை தனக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த கல்வெட்டில் ஒரு நீண்ட கல்வெட்டின் ஒரு பகுதியை அதாவது உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் அந்த கல்வெட்டுக்களில் உள்ள ஆறு வரி எழுத்துக்களை தெளிவாக வாசிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த கல்வெட்டு அங்கிருந்து ஆலயம் ஒன்றுக்கு அது பெரும்பாலும் கோணேஸ்வரர் ஆலயம் ஆக இருக்க வேண்டும்.

அரிசி ,நெல் என்பவற்றை தானமாக வழங்கியது பற்றி கூறுகின்றது அவ்வாறு வழங்கப்பட்ட நெல் அரிசி என்பவற்றின் அளவுகள் குறியீட்டு முறையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டு பற்றி மேலும் ஆய்வு செய்த தமிழகத்தில் முதன்மை கல்வெட்டு அறிஞரான சுப்பராயலு, கலாநிதி ராஜகோபால் போன்றவர்கள் இக் கல்வெட்டில் இற்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்டது என அடையாளப்படுத்தியுள்ளனர்.

இதிலிருந்து இக் கல்வெட்டு சோழர் ஆட்சி முடிந்ததன் பின்னரும் கோணேஸ்வரர் ஆலயம் அங்கு வாழ்ந்த சைவர்களால் பராமரிக்கப்பட்டது ஒரு முக்கிய ஆதாரமாக காணப்படுகின்றது.

தமிழகத்தில் பக்தி இயக்கத்தை தலைமை ஏற்று நடத்திய நாயன்மார்கள் தமிழகத்தை அடுத்து முக்கியமானது சைவ ஆலயங்கள் உள்ள இடங்களாக கிழக்கிலங்கையில்கேணேஸ்வரர் ஆலயத்தையும் வட இலங்கையில் திருக்கேதீஸ்வர ஆலயத்தையும் போற்றிப் பாடுகின்றன.

சோழர் ஆட்சியில் பொலனறுவை தலைநகராக இருந்தாலும் அவர்களுடைய அரசியல் இராணுவ நிர்வாக பண்பாட்டு நடவடிக்கைகள் திருகோணமலையை மையப்படுத்தியே நடைபெற்றமைக்கு அதிக ஆதாரங்கள் காணப்படுகின்றன.

அதனால்தான் சோழர்கால உப தலைநகராக திருகோணமலையை குறிப்பிடுகின்றனர் 1070 சோழராட்சி முடிந்ததன் பின்னர் பொலநறுவையில் சிங்கள மன்னர்களின் ஆட்சி ஏற்பட்டாலும் அவர்களும் தொடர்ந்து இந்து ஆலயங்களுக்கு ஆதரவு கொடுத்ததற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன.

இப்போது கிடைத்திருக்கின்ற இந்த கல்வெட்டு சோழர் ஆட்சியின் பின்னர் திருகோணமலையில் வாழ்ந்த இந்துக்களால் கோணேஸ்வரர் ஆலயம் பராமரிக்கப்பட்டு வந்ததற்கு நல்ல ஒரு சான்றாகக் காணப்படுகின்றது.

16ஆம் நூற்றாண்டிலிருந்து போத்துக்கேயர் ஒல்லாந்தர் உடைய ஆட்சியில் அவர்கள் கடைப்பிடித்த கலை அழிவு கொள்கையால் பல இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டன.

அவ்வாறு அழிக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்றாக கோணேஸ்வரர் ஆலயம் காணப்படுகின்றது.

இதை 1964 ஆம் ஆண்டு அளவுகளில் கோணேஸ்வரர் ஆலய கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆலய அழிபாடுகள், கல்வெட்டுக்கள், விக்கிரகங்கள் உறுதி செய்கின்றன.

இந்தநிலையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இக்கல்வெட்டானது மேலும் போத்துக்கேயர் ஆட்சியில் கோணேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டதற்கு ஒரு சான்றாகக் காணப்படுகின்றது.

எதிர்பாராத வகையில் மத்திய கலாச்சார நிதியத்தால் கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டு சூழலில் மேலும் சில கல்வெட்டுக்கள் சில கட்டட அழிபாடுகள் இருப்பதாக அறிய முடிகின்றது.

ஆகவே அந்த இடத்தில் மேலும் ஆய்வுகள் செய்வதன் மூலம் கோணேஸ்வரர் ஆலயத்தின் பழமையான வரலாற்றை அறிய கூடிய அரிய பல கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கலாம் என நம்பப்படுகிறது என்று கூறியுள்ளார்.

-தமிழ்வின்-

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் ம.ரணம் : அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

தா.பாண்டியன்..

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் (89) உ.டல் நலக் குறைவால் கா.லமானார். ஏற்கெனவே, சிறுநீரகப் பி.ரச்னையால் அ.வதிப்பட்டு வந்த தா.பாண்டியன் உடல் நலக்குறைவு காரணமாக புதன்கிழமை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.

அவருடைய உடல்நிலை க.வலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து தீ.விர சி.கிச்சையளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தொடர்ந்து தீ.விர சி.கிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (பிப்ரவரி 26ம் திகதி) கா.லமானார். தா.பாண்டியன் ம.றைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை!!

இலத்திரனியல் அடையாள அட்டை..

இலங்கையர்கள் அனைவரது தரவுகளும் உள்ளடக்கப்பட்ட இலத்திரனியல் சிப் கொண்ட அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அடையாள அட்டையை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும் என ஈ.ஸ்.ட.ர் தா.க்.கு.த.ல் தொ.டர்பான ஜனாதிபதி வி.சாரணை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் இந்த அடையாள அட்டையை வெளியிடுவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

உலகளாவிய ரீதியில் பல நாடுகள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை, தங்கள் நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.