மீண்டும் உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

தங்கத்தின் விலை தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளதாக பங்குச் சந்தை நிலவரங்கள் குறிப்பிடுகின்றன. கடந்த வாரம் தங்கத்தின் விலை குறைவடைந்திருந்தது.

கொரோனாவிற்குப் பின்னர் உலகம் முழுவதும் போக்குவரத்துக்கள் முற்றாக முடங்கிய நிலையில் இறக்குமதிகள் முழுமையாக தடைப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலை உயர்வடைந்திருக்கின்றன.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில், நேற்றைய நிலவரப்படி ஒரு பவுண் தூய தங்கத்தின் விலை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இதேபோன்று, ஆபரணத் தங்கத்தின் விலை 910 ரூபாவால் அதிகரித்து 91 ஆயிரத்து 660 ரூபாவாக பதிவாகியிருக்கிறது.

இலங்கையில் மீண்டும் கொரோனா ஆபத்து அ ச்சுறுத்தல் : பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையில் மீண்டும் கொரோனா..

இலங்கை சமூகத்திற்குள் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என்ற போதிலும் ஆ பத்து நீங்கவில்லை என வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

இதனால் உரிய முறையில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு ஸ்தாபனத்தின் விசேட வைத்தியர் ஜுட் ஜயமஹ தெரிவித்துள்ளார். சமூகத்திற்குள் பரவலாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நேற்றைய தினம் 6 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்படும் பெண்கள்!!

இணையத்தளம் ஊடாக..

கொழும்பு, ராஜகிரிய ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட வி பச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்த பெண்கள் நால்வர் கைது செய்யப்பட்டதாக நுகேகொட விசேட கு ற்ற வி சாரணை பிரிவு தெரிவித்துள்ளது. ஆயுர்வேத மசாஜ் நிலையம் என இணையத்தளம் மற்றும் வார இறுதி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு பகிரங்கப்படுத்தப்படுகிறது.

அங்கு வரும் நபர்களுக்கு மிகவும் நுட்பமான முறையில் பெண்களை விற்பனை செய்வதாக மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு சில நபர்களினால் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்படுகின்றது. அதன் பின்னர் அவர்களை அந்த நிறுவனத்திற்கு அருகில் வரவழைத்து பாதுகாப்பு கமரா பயன்படுத்தி அந்த நபர்கள் தொடர்பில் வி சாரணை நடத்திய பின்னர் நிறுவனத்திற்குள் அழைத்து வருவதறகு் நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

கொரோனா தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளில் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 8ம் திகதி முதல் வழமை போல் மீண்டும் தொடங்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பல கட்டங்களாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். செப்டம்பர் 02ம் திகதி தொடக்கம், 06 முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான கல்வி நடவடிக்கைகள் வழக்கம் போல் ஆரம்பமாகியது.

ஆரம்ப வகுப்புகளின் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் நாளை பாடசாலைக்கு வருவார்கள், கல்வி நடவடிக்கைகள் வழக்கம்போல நாளை முதல் தொடங்கும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பாடசாலை மாணவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை தவிர்க்கின்றனர் என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால் நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் ஏற்படும் அபாயம் இருப்பதாக தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

 

New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ : சற்று முன்னர் வெளியான அறிவிப்பு!!

கப்பலில் ஏற்பட்ட தீ..

இலங்கை கடற்பரப்பில் திடீரென தீப்பிடித்த MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அம்பாறை, சங்கமன்கண்டி இறங்கு துறையில் இருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியத்தில் 2 இலட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக்தொன் மசகு எண்ணெய்யுடன் இந்தியா நோக்கிச் சென்ற பனாமா நாட்டுக்குச் சொந்தமான ‘MT New Diamond என்ற கப்பலில் கடந்த 3ம் திகதி தீப்பரவல் ஏற்பட்டது.

இலங்கைக் கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கைத் துறைமுக ஆணையம், இந்தியக் கடற்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படை ஆகியவை இணைந்து மேற்கொண்ட பாரிய தீயணைப்பு முயற்சிகளை மேற்கொண்டிருந்தன.

குறித்த கப்பலில் இருந்த மாலுமி உட்பட 22 பேர் இலங்கைக் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளனர். பணியாளர் ஒருவர் கா ணாமல் போயிருந்த நிலையில் அவர் உ யிரிழந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்திம் இரவு 7 மணியளவில் தீப்பரவல் கட்டுக்குள்கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை : இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

சீரற்ற வானிலை..

சீரற்ற வானிலை தொடர்பில் 14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

10 ஆ ண்டுகளாக பூ மிக்கு கீழ் உ ள்ள அ றையில்.. கு ழந்தைக ளுக்கு பெ ற்றோரால் ந டந்த கொ டுமை!!

சூ ரிச்சில் ..

சூ ரிச்சில் ப ல ஆ ண்டு களாக த ங்கள் கு ழந்தைகளை ப ட்டினி போ ட் டு கொ டு மை ப் ப டு த் திய பெ ற்றோர் சி றையில் அ டைக்க ப்பட்டு ள்ளனர். சூ ரிச்சி லுள்ள ஒ ரு கு டும்ப த்தில் 7 பி ள்ளைகள் இ ருந்திருக்கி றார்கள். அ வர்களில் 5 பே ரை ப ல ஆ ண்டு களாக ப ல்வேறு கொ டு மை க ளு க் கு ஆ ளாக்கி வ ந்து ள்ளனர் அ வர்க ளின் பெ ற்றோர்.

ஆ னால், இ ப்போ து வி டயம் வெ ளியில் வ ந்ததும் க ணவனும் ம னைவியும் ஒ ருவரை ஒ ருவர் மா றி மா றி கு ற்றம் சா ட்டிக்கொ ள்கிறா ர்கள்.

கு ழந்தைகளை பூ மிக்க டியிலுள்ள அ றை ஒ ன்றில் ப ல நா ட்களாக அ டை த் து வை த் து ப ல நா ட்கள் ப ட்டினி போ ட்டதா கவும் நீ திம ன்ற த்தில் தெ ரிவிக்க ப்பட்டது.

இ ந்த வ ழக்கில் த ற்போது 49 வ யதுள்ள அ ந்த க ணவ னுக்கு 14 1/2 ஆ ண்டு களும் ம னைவி க்கு 12 ஆ ண்டுக ளும் சி றைத் த ண் ட னை வி திக் கப்ப ட்டுள்ளது.

தீ ர்ப்புக்குப் பி ன் கு ழ ந் தை க ள் அ ரசு கா ப்பகத்தில் அ னுமதிக்க ப்படலாம். இ தற்கி டையில், 10 ஆ ண்டுகளுக்கு மு ன்பே, அ ந்த கு ழ ந் தை க ள் ப ட்டினியாக ப ள்ளிக்கு வ ருவதாக ப ள்ளி சா ர்பில் பு கா ர் தெ ரிவிக்கப்ப ட்டிரு க்கிறது.

ஆ னால் அ தை யா ரும் பெ ரிதாக எ டுத்துக்கொ ண் ட து போ ல் தெ ரியவி ல்லை. வி சாரணையை மே ற்கொண் டுள்ள நீ திபதி, அ திகாரிகள் ப க்கம் த வ று இ ருப்பதை க ண்டு ள்ளதாக தெ ரிவித்து ள்ளார்.

 

15 குழந்தைகளை பெற்றெடுத்துவிட்டு 16வது குழந்தையுடன் கர்ப்பமாக இருக்கும் பெண்!!

16வது குழந்தை..

அமெரிக்காவில் 15 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் 16வது குழந்தையுடன் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர்களின் பெரிய குடும்பம் குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் Carlos. இவர் மனைவி Patty Hernandez (38). இந்த தம்பதிக்கு 15 குழந்தைகள் உள்ள நிலையில் Patty 16வது முறையாக கர்ப்பமாக உள்ளார். இதில் 5 ஆண் குழந்தைகள் மற்றும் 10 பெண் குழந்தைகள் அடக்கமாவார்கள்.

இவர்களில் 6 பேர் இரட்டையர்கள் ஆவர். குழந்தைகள் அனைவரின் பெயரும் C என்ற எழுத்தில் தான் தொடங்குகிறது. Pattyக்கு அடுத்தாண்டு மே மாதம் 16வது குழந்தை பிறக்கவுள்ளது.

இந்த தம்பதி வாரத்துக்கு குடும்பத்தினருக்கு தேவையான மளிகை சாமான்கள் மற்றும் துணிகளுக்காக மட்டும் £375 செலவிடுகிறார்கள். இதோடு குடும்பத்தினருடன் சேர்ந்து பயணிக்க ஒரு பேருந்தை வாங்க திட்டமிட்டுள்ளனர்.

Patty கூறுகையில், அனைத்து குழந்தைகளையும் கவனித்து கொள்வது மிகவும் சவாலான விடயம். ஒரே நேரத்தில் பலரும் அழும் போது அது எனக்கு மன அழுத்தத்தை கொடுக்கும், ஆனாலும் தாயாக இருப்பதை ஆசிர்வாதமாக கருதுகிறேன்.

2008 ஆண்டு முதல் முறையாக கர்ப்பமடைந்தேன்.ஒரு குழந்தை பிறந்த அடுத்த 3 மாதத்துக்கு பின்னர் பொதுவாக மீண்டும் கர்ப்பமடைந்து விடுவேன்.

எல்லா குழந்தைகளும் என்னுடையது தானா என என்னிடம் பலரும் கேட்பார்கள், எனக்கு இவ்வளவு குழந்தைகள் பிறக்கும் என நான் நினைக்கவே இல்லை என கூறியுள்ளார்.

 

ஹொட்டலில் மயக்கத்தில் இருந்து கண்விழித்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி : வாழ்க்கையை புரட்டிப்போட்ட சம்பவம்!!

மயக்கத்தில் இருந்து..

லண்டனில் பெண் ஒருவரை 62 வினாடிகள் கொண்ட வீடியோ எடுத்து அவர் வாழ்க்கையே பாழாகி போகும் நிலைக்கு தள்ளிய நபர் சட்டத்துக்கு முன்னர் கொண்டு வரப்பட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு Emily Hunt (41) என்ற பெண் கிழக்கு லண்டனில் உள்ள சொகுசு ஹொட்டலுக்கு தனது தந்தையுடன் சென்றார். பின்னர் இரவு 10 மணியளவில் ஹொட்டல் அறையில் Emily Hunt மயக்கத்தில் கிடந்துள்ளார். கண்விழித்த போது தான் எப்படி அங்கு வந்தேன் என்றே அவருக்கு தெரியாமல் இருந்துள்ளது.

இதையடுத்தே Christopher Killick (40) என்பவர் அந்த அறையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். Christopher, Emily-ஐ மோசமான நிலையில் வீடியோ எடுத்தது தெரியவந்தது, இது தொடர்பாக Christopher கைது செய்யப்பட்டார்.

தனக்கு நேர்ந்த விடயம் குறித்து Emily கூறுகையில், இந்த சம்பவம் எனக்கு ஆழ்ந்த குழப்பமான நிலையை கொடுத்ததோடு மனதை பலவீனப்படுத்தியது.

இதன்பிறகு த ற் கொ லை எண்ணம் கூட தோன்றியது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் வாழ்க்கையை பாழக்கி புரட்டி போட்டுவிட்டது. என் வேலையை இழந்து கடினமான சூழலுக்கு தள்ளப்பட்டேன் என கூறினார்.

சம்பவத்தின் போது போ தையில் இருந்த Emily-ஐ Christopher நைசாக அறைக்கு அழைத்து வந்தது சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தது, மேலும் அப்பெண்ணுக்கு அந்த நபர் போ தை மருந்துகளையும் கொடுத்திருக்கிறார்.

Christopher மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு £5,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதோடு £2,000 அபராதம், £85 நீதிமன்ற செலவுகளை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் 30 மாத சமூக உத்தரவின் கீழ் மறுவாழ்வு அமர்வுகளில் Christopher கலந்து கொள்ள வேண்டும் எனவும், குற்றவாளிகள் பதிவேட்டில் 5 ஆண்டுகளுக்கு கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணியாதவர்களை சவப்பெட்டியில் படுக்க வைத்து வினோத தண்டனை : எந்த நாட்டில் தெரியுமா?

முகக் கவசம் அணியாதவர்களை..

இந்தோனேஷியாவில் முகக்கவசம் அணிய மறுக்கும் நபர்களுக்கு த ண்டனை அளிக்கும் விதமாக அவர்கள் சவப்பெட்டியில் சில நிமிடங்கள் படுக்க வைக்கப்பட்ட நிலையில், தற்போது அதை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது இடங்களில் முகக்கவசம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள்து,

அந்த வகையில், இந்தோனேஷியாவின் தலைநகர் Jakarta-வில் முகக்கவசம் அணியாமல் மறுக்கும் நபர்கள் பிடிக்கப்பட்டு, சவப்பெட்டியில் சில நிமிடங்கள் படுக்கவைக்கப்பட்டனர்.

இதன் மூலம் அவர்கள் செய்ய கூடிய தவறு எவ்வளவு பெரிய ஆபத்தானது என்பதை உணர வைப்பதற்காக பொலிசார் இப்படி செய்தனர்,

கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை பொலிசாரிடம் சிக்கியவர்களுக்கு இந்த தண்டனை கொடுக்கப்பட்டது. இதுமட்டுமின்றி முகக்கவசம் இல்லாமல் பிடிபடும் மக்களுக்கு, சமூக சேவை செய்வது மற்றும் அபராதம் போன்றவையும் உள்ளது.

அதிகாரியான Pasar Rebo என்பவர், கு ற்றவாளிகள் தானாக முன்வந்து அபராதம் செலுத்தவோ அல்லது சமூக சேவையைப் பெறவோ சவப்பெட்டியில் வைக்க விரும்புவதாகக் கூறினார்.

அவர்கள் சமூகப் பணிகளைத் தேர்வுசெய்தால், அவர்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது பொது வசதிகளை சுத்தம் செய்ய வேண்டியிருந்தது.

அவர்கள் ஏன் அபராதம் செலுத்தவில்லை என்ற போது, ​​அவர்களிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளனர். இப்படி கொடுக்கப்படும் த ண்டனை கடும் விமர்சனங்களை சந்தித்து வந்ததால், கடந்த வெள்ளிக்கிழமை இது நீக்கப்பட்டது.

மேலும், Jakarta-வில் உள்ள பிற மாவட்டங்கள் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இறப்பு விகித தரவுகளைக் கொண்ட மினி சவப்பெட்டி நினைவுச்சின்னங்களை கட்டியுள்ளது நினைவுகூரத்தக்கது.

தமிழ் சிறுமியின் படிப்பு நான்கு ஆண்டுகளாக உதவி வரும் பிரதமர் மோடி : பலருக்கும் தெரியாத தகவல்!!

தமிழ் சிறுமி..

தமிழகத்தில் ஏழை சிறுமி ஒருவரின் படிப்பிற்காக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னுடைய சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் பவித்ரமாணிக்கம் கிராமத்தில் உள்ள திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு ரஷிதா என்ற மகள் உள்ளார்.

ரஷிதா கடந்த 2016-ஆம் ஆண்டு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்க ஆசைப்பட்டு விண்ணப்பித்தார். ஆனால், பள்ளி நிர்வாகம் ரக்ஷிதாவின் விண்ணப்பத்தை ஏற்கவில்லை.

இதனால் உடனடியாக ரஷிதாவும், குணசேகரனும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உதவி கேட்டு கடிதம் அனுப்பினர். இந்த கடிதத்தைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக மாணவிக்குப் பள்ளியில் இடம் ஒதுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

பிரதமரின் உத்தரவால் ரக்ஷிதாவை சேர்த்துக்கொண்டது பள்ளி நிர்வாகம். ஆனால், பள்ளிக் கட்டணத்தைக் கட்டாத சிறுமியைப் பள்ளிக்கு வெளியே நிற்க வைத்தது நிர்வாகம்.

உடனே குணசேகரன் மீண்டும் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். அதிலிருந்து மாணவி ரக்ஷிதாவின் கல்விக் கட்டணத்தை பிரதமர் மோடியே ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் செலுத்தி வருகிறார்.

பிரதமரின் உதவியால் நான்கு வருடங்களாகப் படித்துவரும் சிறுமி ரக்ஷிதா, தான் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றியைத் தெரிவிக்க ஆசைப்படுகிறேன். தன்னைப் போன்ற ஏழை, எளிய மாணவர்களும் படிக்கப் பிரதமர் உதவி புரியவேண்டும் என்று கூறியுள்ளார்.

 

இராணுவத்தில் கணவர் : தனியாக வசித்த இளம் மனைவியை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்!!

இளம் மனைவி..

இந்தியாவில் கணவர் இராணுவத்தில் பணிபுரியும் நிலையில் மனைவி வீட்டில் இல்லாத போது திருடர்கள் உள்ளே புகுந்து பணம், நகைகளை கொ ள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் பூர்னியா மாவட்டத்தை சேர்ந்தவர் ரவீந்திரா மிஸ்ரா. இவர் இராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். வருடத்தில் ஒருமுறை மட்டும் விடுமுறைக்கு வீட்டுக்கு வருவார்.

இதையடுத்து ரவீந்திராவின் மனைவி அபர்னா தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். நேற்று பகல் 12 மணிக்கு தனது மாமியார் வசிக்கும் வீட்டுக்கு குழந்தையை எடுத்து கொண்டு அபர்னா சென்றார்.

பின்னர் மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்து கதவை திறந்த போது அபர்னா அதிர்ச்சியடைந்தார். காரணம் வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதன் உள்ளே இருந்த பணம், நகைகள் கொ ள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதோடு எல்.இ.டி டிவியையும் கொ ள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து அபர்னா பொலிசில் புகார் அளித்தார், பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்த பார்த்தனர்.

அப்போது வீட்டின் மேற்கூரை வழியாக கொள்ளையர்கள் புகுந்ததை தெரிந்து கொண்டனர். மேலும் ரவீந்திரா இராணுவத்தில் இருப்பதை ஏற்கனவே அறிந்திருந்த கொ ள்ளையர்கள், அவர் மனைவி வெளியில் சென்றதையும் நோட்டமிட்டே இந்த கொள்ளை சம்பவத்தை நிறைவேற்றியதை பொலிசார் கண்டுபிடித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

 

10 ஆண்டுகளில் 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் : விசாரணையில் அ திர்ச்சி!!

10 ஆண்டுகளில்…

இந்தியாவில் பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளில் 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்தவர் கிஷோர். 66 வயதாகும் இவர் கட்டுமான ஒப்பந்தக்காரராக இருக்கிறார்.

இவரின் கடந்த ஆண்டு உ யிரிழந்த நிலையில், தனிமையில் வாடி வந்துள்ளார். அப்போது டெல்லியை சேர்ந்த மேட்ரிமோனியல் ஏஜென்சி ஒன்று செய்தித்தாளில் அளித்த ஒரு விளம்பரத்தில், மூத்த குடிமக்கள் மற்றும் விவாகரத்து செய்யப்பட்ட நபர்களுக்கு உரிய துணையை தேடித் தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்ததை இவர் கவனித்துள்ளார்.

அதன் பின் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, அதன் உரிமையாளர் மஞ்சு கன்னா அவருக்கு ஏற்ற மணமகள் என்று கூறி மோனிகா மாலிக் என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதையடுத்து சில வாரங்கள் சந்தித்து பேசிய பிறகு இருவரும் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் திருமணம் செய்து கொண்டனர். கிஷோரின் வீட்டில் மோனிகா மாலிக் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், திருமணம் முடிந்த 2 மாதங்கள் கூட முடியாத நிலையில், மோனிகா மாலிக் வீட்டில் இருந்த 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்துடன் வீட்டைவிட்டு ஓடியுள்ளார்.

இதை அறிந்து அதிர்ச்சியடைந்த கிஷோர் உடனடியாக அந்த மேட்ரிமோனியல் ஏஜென்சியை தொடர்பு கொண்டபோது, ஏஜென்சியை சேர்ந்தவர்களும் அவரை மிரட்டியதோடு, கிஷோர் மீது பொய்யான வழக்கு பதிவு செய்துவிடுவோம் என அச்சுறுத்தியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து கிஷோருக்கு மோனிகாவின் முந்தைய கணவரைப் பற்றிய தகவல் கிடைக்க, அவரைத் தொடர்புகொண்டபோது அவரும் இதேபோல் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.

பின்னர் கிஷோர் பொலிசார் மோனிகா மீது புகார் அளிக்க, விசாரணையில் ​​மோனிகா கடந்த 10 ஆண்டுகளில் 8 முதியவர்களை இதேபோல ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் IPC பிரிவு 419 (ஆள்மாறாட்டம் மூலம் மோ சடி), 420 (மோ சடி), 380 (தி ருட்டு), 384 (மி ரட்டி பணம் ப றித்தல்), 388 (அ ச்சுறுத்தலால் மி ரட்டி பணம் ப றித்தல்) மற்றும் 120 பி (கி ரிமினல் சதி) ஆகியவற்றின் கீழ் மோனிகா, அவருடைய குடும்பத்தினர் மற்றும் திருமண நிறுவனம் மீது வழக்குபதிவு செய்து பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

33 வயது மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்த இளம் பெண் : பெற்றோரின் பிடிவாதத்தால் நடந்த துயரம்!!

திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்..

தமிழகத்தில் பெற்றோர் 33 வயது மதிக்கத்தக்க நபரை திருமணம் செய்து கொள்ளும் படி வ ற்புறுத்தியதால், அவர் பி ளே டா ல் க ழு த் தை அ று த் து உ யிரை மா ய்த்துக் கொ ண் ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த புதூர் மேடு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். விவசாயியான இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில், மூத்த மகளின் பெயர் கல்பனா. இவர் வேலூரில் இருக்கும் டிகேஎம் பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருக்கு கடந்த ஒரு ஆண்டுகளாகவே திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். அதன் படி கடந்த வாரம் ஒரு மாப்பிள்ளை வந்து இவரை பார்த்து சென்றுள்ளார்.

33 வயதாகும், அவர் பேங்க் ஒன்றில் வேலை பார்ப்பதாகவும், பெண்ணை பிடித்துவிட்டதாகவும், திருமணத்திற்கு சம்மதம் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால் கல்பனாவோ மாப்பிள்ளைக்கு வயது 33 என்பதால், இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று கூறியுள்ளார். இருப்பினும் கல்பனாவின் பெற்றோர் இவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று க ட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதனால் கல்பனா மிகுந்த வே தனையில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்றிரவு வழக்கம் போல் கல்பனா தன்னுடைய அறைக்கு தூங்க சென்றுள்ளார்.

அதன் பின் சில மணி நேரங்களில் அவரின் அறையில் இருந்த ப யங்கர அ ல ற ல் ச த்தம் கேட்டுள்ளது. இதைக் கேட்டு அ திர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரின் அறைக்குள் சென்று பார்த்த போது, போர்வையால் உ டலை மூடிக் கொண்டு தன் க ழு த் தை பி ளே டா ல் கல்பனா வெ ட் டி க் கொண்டிருப்பதைப் பார்த்து கூ ச்சலிட்டனர்.

இந்த ச த்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக வீட்டின் உள்ளே நுழைந்து, கல்பனாவை அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இரத்தம் ஏற்கனவே அதிகம் வெளியேறியதால், அவர் ஏற்கனவே இ றந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குளத்தில் நீராடச் சென்ற சிறுமி ம ரணம்!!

சிறுமி..

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்ற கிராமமான குகனேசபுரம் கிராமத்தில் குளத்தில் நீராடச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி ம ரணமடைந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலை பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்ற கிராமமான குகனேசபுரம் காலிகோவில் வீதி 06ம் குறுக்கை சேர்ந்த சன்முகநாதன் விஜய ரூகினியும், அவரது சகோதரியும் நேற்று மாலை ஆலம்குளத்திற்கு குளிக்கச்சென்றபோதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ம ரணமடைந்த சிறுமி சன்முகநாதன் விஜய ரூகினி (வயது 12) ஆலம்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 06ல் கல்வி பயின்ற மாணவி என்பதுடன் மூன்று பேர் உள்ள குடும்பத்தில் இச் சிறுமி மூன்றாவது பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி ஏ9 வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தி மீது சொகுசு கார் மோதி விபத்து!!

விபத்து..

கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அருகாமையில் நேற்று(05.09.2020) இரவு 9.00 மணியளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தி மீது அதே வழியாக வந்த சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் காரை செலுத்தி வந்த சாரதிக்கு எந்தவித காயமும் இல்லாம் அதிஷ்டவசமாக தப்பியுள்ளார்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்