இலங்கையில் கால் போத்தல் ம துபானத்திற்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் சட்டத்தை அமைப்பதற்கு சுற்றாடல் அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
எதிர்வரும் வாரம் உரிய ம துபான நிறுவனங்களை அழைத்து கால் போத்தலை மாற்றியமைக்குமாறு ஆலோசனை வழங்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அவ்வாறு மாற்றம் ஏற்படவில்லை என்றால் கால் போத்தல் ம துபான விற்பனையை தடை செய்வதற்கு அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சந்தையில் உணவு பொருட்கள் அல்லாத ஷெஷே பக்கட்களை தடை செய்வதற்கு எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தாய், தந்தையினை இழந்த நிலையில் 18 வருடத்திற்கு மேலாக வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் வசித்து வந்த இரு யுவதிகளுக்கு அன்பகத்தின் பொறுப்பாளர் சாமி அம்மா தலைமையில் இன்று (30.08.2020) காலை திருமணம் இடம்பெற்றது.
பகீர்தா என்ற யுவதி 18 வருடங்களாகவும் துர்க்கா என்ற யுவதி 19 வருடங்களாகவும் வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தின் வசித்து வந்துள்ளனர். இவர்கள் திருமண வயதினை அடைந்தமையினால் அன்பகத்தின் பொறுப்பாளர் சாமி அம்மாவின் ஏற்பாட்டில் திருமணம் இடம்பெற்றது.
குறித்த திருமண நிகழ்வு வேப்பங்குளம் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமிகள் இந்து அன்பக மண்டபத்தில் நடைபெற்றிருந்ததுடன் ஜெயரூபன் , கார்த்திக் ஆகிய இரு இளைஞர்களே அன்பத்தில் வசித்த யுவதிகளை திருமணம் முடித்தவர்களாவார்கள்.
பகீர்தா என்ற யுவதிக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களும் அவரது துணைவியாரும் தாய் தந்தையாகவும்,
துர்க்கா என்ற யுவதிக்கு வவுனியா நகரசபை செயலாளர் இராசையா தயாபரன் அவர்களும் அவரது துணைவியாரும் தாய் தந்தையாக பொறுப்பேற்று திருமணத்தினை நடத்தி வைத்தனர்.
இந் திருமண நிகழ்வில் இரு மணமகன் வீட்டாரின் உறவினர்களும், வவுனியா மாவட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் , பொதுமக்கள் , அன்பகத்தில் உள்ள சிறார்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இவ் திருமண நிகழ்வினை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் சிறப்பாக முறையில் ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் வவுனியா நகரசபையினரின் படகு சவாரி உட்பட பல்வேறு செயற்றிட்டங்களை உள்ளடக்கிய சுற்றுலா மையம் இன்று (30.08.2020) காலை 9.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இச் சுற்றுலா மையத்தினை வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் நடா வெட்டி திறந்து வைத்தார்.
இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்தில் படகு சவாரி , நீருக்கு நடுவில் பிரமாண்ட சிற்றுண்டிச்சாலை , சிறுவர்களுக்கான விநோத விளையாட்டுக்கள் , மீன் மசாஜ், 3டி சினிமா விடியோ கேம்ஸ் என்பன உள்ளங்கியுள்ளன.
முல்லைத்தீவில் மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பேர் ப லியாகியுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் இன்று (29.08.2020) மாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வீதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உ யிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒரு இளைஞன் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உ யிரிழந்தார்.
முல்லைத்தீவு நகரை அண்டிய பகுதிகளில் இன்று மாலை வீசிய கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக இரண்டு உந்துருளிகளில் வீதியால் பயணித்த நால்வர் மீது சிலாவத்தை பகுதியில் மரம் ஒன்றின் கிழை ஒன்று முறிந்த வீழ்ந்துள்ளது.
இதன்போது 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான கொக்குத்தொடுவாய் மேற்கினை சேர்ந்த இ.ஜெம்சி விகேந்திரன் என்ற குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளதுடன்,
நீராவிப்பிட்டியினை சேர்ந்த 21 அகவையுடைய எட்வேட் எமில்டன் என்ற இளைஞன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனும் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் குறித்த சம்பவத்தில் 2 பேர் ப லியாகியுள்ளதோடு, மேலும் இருவர் காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் காதலை நிராகரித்த காதலியை பழிவாங்குவதற்காக பெண் தொழில் அதிபரின் படங்களை மார்பிங் செய்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்ட பிளஸ் 2 மாணவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
சென்னை குமரன் நகரை சேர்ந்தவர் ராணி (41). தொழிலதிபரான இவருக்கு சில நாட்களாக இரவு நேரங்களில் மோசமான அழைப்புகள் வந்துள்ளது. அதுமட்டுமின்றி, சமூக வலைத்தளத்தின் மூலம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகளவில் வந்துள்ளது.
இதனால் இதைக் கண்டு அ திர்ச்சியடைந்த அப்பெண் தொழிலதிபர் இது குறித்து உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சைபர் க்ரைம் பொலிசார் உதவியுடன் நடத்தப்பட்ட வி சாரணையில், ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவன் தான் இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது.
அதன் பின் பொலிசார் சிறுவனை பிடித்து விசாரித்த போது, அந்த மாணவன் தன்னுடன் பள்ளியில் படித்து வந்த குறித்த பெண் தொழிலதிபர் மகளை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளான்.
தனது காதல் குறித்து மாணவன் பெண் தொழிலதிபர் மகளிடம் வெளிப்படுத்தி உள்ளார். ஆனால், அந்த மாணவி, என் அம்மாவுக்கு காதலிப்பது எல்லாம் பிடிக்காது என்று கூறி மாணவனின் காதலை நிராகரித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியின் அம்மாவான தொழிலதிபரை பழிவாங்க முடிவு செய்தார்.
அதன்படி இன்ஸ்டாகிராமில் போலியாக காதலியின் அம்மா பெயரில் 2 கணக்கு தொடங்கி, அதில் காதலியின் அம்மாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து நிர்வாண Video Call அழைப்புக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் என்று காதலியின் அம்மா செல்போன் எண்ணை பதிவு செய்துள்ளார்.
அதோடு மட்டுமின்றி பல்வேறு மோசமான இணையதளத்தில் பல வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அந்த வீடியோவை காதலியின் அம்மாவிற்கு அனுப்பியதும் தெரியவந்தது.
அதைதொடர்ந்து பொலிசார் பள்ளி மாணவன் மீது ஐபிசி 354, 509, ஐடி சட்டம் 66,67 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அ திரடியாக கைது செய்தனர். அதன் பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பிரபல நடிகை சுசந்தா சந்திரமாலி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது பேஸ்புக் ப்கத்தில் கருத்து பதிவிட்டு தனது மருத்துவ நிலையை தனது ரசிகர்களுக்கு உறுதிப்படுத்தினார்.
ஆரம்ப கட்டத்தில் மருத்துவர்கள் இந்த நோயைக் கண்டறிந்ததைக் குறிப்பிட்டு, பல மாதங்களாக தாம் சிகிச்சை பெற்று வருவதாக சுசந்தா கூறுகிறார்.
இலங்கையின் சிங்களத் திரைப்படங்களிலும், சின்னத் திரைகளிலும் தனது திறமையை வெளிக்காட்டி இலங்கை வாழ் திரைப்பட சினிமாத்துறை ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளவர் பிரபல நடிகை சுசந்தா சந்திரமாலி என்பது குறிப்பிடத்தக்கது.
சலுகை அடிப்படையிலான வாகன உரிமப்பத்திரங்கள் மூலம் உள்நாட்டில் வரிசலுகையுடன் புதிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, வாகன உரிமையாளர்கள் தம்மிடம் உள்ள வாகன இறக்குமதி சலுகை பத்திரத்தினை கொண்டு உள்நாட்டு வாகன விற்பனையாளர்களிடம் வரி சலுகையுடன், புதிய வாகனம் ஒன்றினை கொள்வனவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வாகன இறக்குமதியாளர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு மட்டுமே போதுமான வாகனங்களை வைத்திருப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் கூறுகிறது. சங்கத்தின் துணைச் செயலாளர் பிரசாத் குலதுங்க இதை கூறியுள்ளார்.
2020 மார்ச் 19 முதல் அரசாங்கம் விதித்த வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் பற்றாக்குறை உள்ளது.
இலங்கையில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை 3000 – 4000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. வாகன இறக்குமதியாளர்கள் 10,000 – 15,000 வாகனங்களை பங்குகளில் வைத்திருந்தனர்.
எவ்வாறாயினும், மார்ச் மாதத்தில் அரசாங்கம் விதித்த இறக்குமதி தடையைத் தொடர்ந்து, அடுத்த 06 மாதங்களுக்குப் பிறகு உள்ளூர் சந்தையில் வாகனங்களின் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று பிரசாத் குலதுங்க மேலும் தெரிவித்தார்.
வவுனியா – செட்டிக்குளம் பிரதான பாதையின் வீதியோரங்களில் பற்றைகள் சூழ்ந்து காணப்பட்டதினால் வீதி தெளிவின்னை காரணமாக வீதி விபத்துக்கள் ஏற்பட்டன.
இதனை கருத்தில் கொண்டு வீதி அபிவிருத்து அதிகார சபையினர் குறித்த வீதியில் இரு பகுதிகளிலும் காணப்பட்ட பற்றைகளை அகற்றும் நடவடிக்கையில் இன்று (29.08.2020) ஈடுபட்டிருந்தனர்.
குறித்த நடவடிக்கையின் காரணமாக வீதி விபத்துக்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்கள் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு அரசாாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் இதுவரையில் பல தரப்பினரிடம் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதனால் எதிர்வரும் மாதம் வரையில் விமான நிலையங்களை திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்க்கும் இலங்கையர்கள் அனைவரையும் அழைத்து வந்த பின்னர் விமான நிலையங்களை திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதற்கு முன்னர் விமான நிலையத்தை திறப்பதற்கு பல தடவைகள் தீர்மானிக்கப்பட்ட போதும், அதனை அமுல்படுத்தவில்லை.
பிராந்திய நாடான இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருவதால், விமான நிலையத்தை திறப்பது தாமதம் அடையும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நீண்ட காலத்தின் பின்னர் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் நேற்றைய தினம் பிறந்தது.
கொழும்பு டி சொய்ஸா பெண்கள் வைத்தியசாலையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் இந்த 5 குழந்தைகள் பிறந்துள்ளது.
கம்பஹா – பெபிலியாவல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய ரசாஞ்சலி ஜயவர்தன என்ற பெண்ணே இந்த குழந்தைகளை பெற்ற தாயாகும்.
இது அவரது முதலாவது குழந்தை பிரசவம் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஆசிரியரான அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நேற்று காலை 10 – 11 மணியளவில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 நிமிட காலப்பகுதியில் 5 குழந்தைகளும் பிறந்துள்ளது.
குறித்த குழந்தைகள் ஐவரும் சொய்ஸா டி பெண்கள் வைத்தியசாலையின் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகளின் தந்தை கருத்து வெளியிடும் போது, “இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது. எனது தேவைகளுக்காக பெற்ற குழந்தைகள். நான் யாரிடமும் உதவி கேட்க முடியாது.
யாராவது விரும்பினால் உதவி செய்யட்டும். அதனை ஏற்றுக் கொள்வேன். இதுவரையிலும் குழந்தைகள் தொடர்பில் ஒன்றும் யோசிக்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முதல் முறையாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் சேவை செய்த அதிகாரிக்கு ஒரே பிரவசத்தில் 5 குழந்தைகள் பிறந்த நிலையில், 2012ஆம் 2 தாய்மார்களுக்கு 5 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளது.
நேற்று பிறந்த குழந்தைகள் இலங்கையில் பதிவாகிய நான்காவது சம்பவமாகும்.
கன்னியாகுமாரி காங்கிரஸ் எம்.பியும், பிரபல தொழிலதிபரும் நடிகர் விஜய் வசந்தின் தந்தையுமான வசந்தகுமார் நேற்று மாலை ம ரணம் அடைந்தார் என்ற செய்தி தமிழக மக்களுக்கு பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் வசந்த் தனது தந்தையின் மரணம் குறித்து அளித்த பேட்டியில் ’தனது தந்தை கொரோனாவால் ம ரணம் அடையவில்லை என்றும் அவர் ம ரணத்துக்கு முன்பாகவே கொரோனாவில் குணமாகி விட்டார் என்றும் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது ’எனது தந்தை நேற்று மாலை 6.56 மணிக்கு காலமானார். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல் நலம் இல்லாமல் இருந்த நிலையில் அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாகப் போ ராடினார்கள்.
நேற்று மாலை திடீரென அவரது உடல் கவலைக்கிடமாக இருந்ததால் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை என்று கூறினார்.
மேலும் எனது தந்தை வசந்தகுமார் அவர்களின் இழப்பு எனக்கு மட்டுமின்றி அவர் மீது மரியாதை வைத்திருந்த அனைவருக்கும் ஒரு பேரிழப்பாகும் என்றார்.
மேலும் வசந்தகுமார் அவர்கள் ம ரணத்துக்கு முன்னரே கொரோனாவில் இருந்து குணமாகிவிட்டார் என்றும் அவருக்கு கடைசியாக செய்யப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். கொரோனாவில் இருந்து குணமானாலும் வேறு சில செகண்டரி நோய்களால் அவர் மரணம் அடைந்தார் என்பதையும் விஜய் வசந்த் உறுதி செய்தார்.
இந்த நிலையில் வசந்தகுமார் கொரோனாவால் ம ரணம் அடையவில்லை என்பதால் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தவும் இறுதிச்சடங்கில் பொது மக்கள் கலந்து கொள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி வசந்தகுமார் அவர்களின் உடல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அவருடைய திநகர் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு இருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் அவரது வீட்டின் முன் கூடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீதியில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டநர்கள் போக்குவரத்து விதிமுறைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிளில் பயணிப்போரினால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிலர் பொறுப்பற்ற வகையில் தலைகவசம் அணியாமலும், குறிப்பிட்ட வேகத்தை விடவும் வேகமாகவும் பயணிப்பதால் இந்த விபத்துக்கள் ஏற்பட்டுதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் விபத்துக்குள்ளான போதும் தெய்வாதீனமாக எவ்வாறு தப்பினார் என்பது தொடர்பான காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் இந்த காணொளி பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பின்னடைவு குறித்து ஆராய மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தவைரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று காலை 10.30 தொடக்கம் 5.30 வரை தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது.
இதில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட கட்சியின் மத்திய செயற்குழுவினர் கலந்து கொண்டனர். இதன் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
நடைபெற்0று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து ஆராய்ந்தோம். ஒவ்வொரு பிரதேசங்களிலும் இருந்து வந்தவர்கள் தமது பகுதிகளில் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கான காரணங்களை எடுத்து கூறினார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக விரைவில் ஒரு குழு நியமிக்கப்படும். அத்துடன் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கு கிடைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பிலும் மத்திய செயற்குழு ஒரு தீர்மானம் எடுத்தது.
தேசியப் பட்டியல் ஆசனம் தலைவரது அனுமதி பெறாது செயலாளர் பெயரை தெரிவு செய்து தேர்தல் திணைக்களத்திற்கு அறிவித்தது தவறு எனவும், அம்பாறை மாவட்டத்தின் கலையரசன் அவர்களுக்கு அந்த ஆசனத்தை வழங்கியது சரி எனவும், அதை அவர் தொடர வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தேவைப்பட்டால் அடுத்த செயற்குழுவில் செயலாளரது நடவடிக்கை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுப்போம். அதுவரை அவர் தொடர்ந்தும் பதவியில் இருப்பார்.
தேர்தல் காலத்தில் கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக இணையத்தளங்கள், ஊடகங்களில் கருத்துக்கள், செய்திகள் வெளிவந்தமை தொடர்பிலும், வேட்பாளர்கள், உறுப்பினர்கள் குறித்து பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் கருத்து வெளியிட்ட கட்சி உறுப்பினர்களுக்குனு ஒழுக்காற்று நடவடிககை எடுக்கப்படும்.
அது தொடர்பில் விசாரணை செய்ய சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பாகவும், 2020 ஆம் ஆண்டு எமது தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் அரசியல் தீர்வு, கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், மக்களது பிரச்சனைகள் தொடர்பில் விரைவில் மத்திய செயற்குழு கூடி ஆராய்வோம். தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மற்றும் பொதுக் குழுவை கூட்டுதல் தொடர்பில் அடுத்த செயற்குழுவில் முடிவு எட்டப்படும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர், கொறடா தொடர்பில் இங்கு எவரும் கேள்வி எழுப்பவில்லை. அதை நாங்கள் பாராளுமன்ற குழுவிற்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளோம். தேவைப்பட்டடால் இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேசுவோம் எனத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக பெருந்தொகை தங்கத்தை க டத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 6 கோடி 20 லட்சம் ரூபாய் பெறுமதியான 5 கிலோ 500 கிராம் நிறையுடை தங்கத்தை கடத்த முற்பட்ட போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் அனலைதீவு கடற்பரப்பில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.
மாதகலைச் சேர்ந்த இருவரும் தரகுப் பணத்துக்காக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இருவரும் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் அதி சுந்தர பஞ்சதள பஞ்ச கலச நூதன இராஜ கோபுர சகித புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வர்ண பந்தன சமர்ப்பண நவ (9) குண்டபக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நேற்று (சார்வரி மீ ஆவணி 12ம் நாள் (28.08.2020) வெள்ளிக்கிழமை காலை 6.05 – 7.28)மணியளவில் இடம்பெற்றது.
இயற்கை எழில் சூழ்ந்து நீர்வளம், நிலவளம், கனிவளம், மலைவளம் என இயற்கை வளங்களும் தன்னகத்தே கொண்டு விளங்கும் ஆசியா கண்டத்தின் இந்து சமுத்திரத்தின் முத்தென திகழ்கின்றதும் திருமூல நாயனாரால் சிவபூமி எனப் போற்றப்பட்டதும்,பஞ்ச ஈச்சரங்களை தன்னகத்தே கொண்டு விளங்கும் இலங்காபுரியில் ஆறாவதாகப் போற்றப்படுகின்ற வவுனியா – கோவில்குளம் எனும் திவ்ய சேத்திரத்தில் காசியில் இருந்து எழுந்தருளி அடியவர்களின் மனக்குறையினை அகற்றி இடர்களைந்து இன்னல்கள் தீர்த்து சித்திகள் அருளும் கோவில்குளம் சிவன் ஆலயத்தில் நாற்திசைகளிலும், புதிதாக அமைக்கப்பட்ட அதிசுந்தர இராஜகோபுரங்களுக்கும் விநாயகர் முதல் சண்டேஸ்வரர் வரையான மூர்த்திகளுக்கும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் பெருமானுக்கும் நிகழும் சார்வரி வருடம் ஆவணி 12ம் நாள் (28.08.2020) வெள்ளிக்கிழமை மூலநட்சத்திரமும் தசமி திதியும் அமிர்த சித்தயோகமும் கூடிய காலை 6.05 மணிமுதல் 7.28 மணி வரையுள்ள சிங்க லக்கின சுபமுகூர்த்தவேளையில் வேத, ஆகம முறைப்படி “சாகித்ய சிரோமணி”, “சிவாகம பாஸ்கரன்”, “நயினை குருமணி”சிவஸ்ரீ வை.மு. பரம முத்துக்குமாரசாமி குருக்கள் நயினை ஆதீன பிரதம குருமணி, ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில்,நயினாதீவு – வடகோவை) தலைமையில் பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்களின் சுகாதார அறிவுறுத்தல்களின் பிரகாரமும் பொலிசாரின் பாதுகாப்புக்கும் மத்தியில் இடம்பெற்ற கும்பாபிசேக நிகழ்வினை காண அதிகாலையிலே வவுனியாவின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஒர் கிராமத்தில் ம களை து ன்புறு த்திய கு ற்றச்சா ட்டில் பெ ற்றோரை பொலிஸார் கை து செ ய்துள் ளனர். கு றித்த ச ம்பவம் நேற்றையதினம் (28.08.2020) இடம்பெற்றுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கு றித்த 17 வ யதுடைய மா ணவி, பெ ற்றோர் த ன்னை து ன்புறு த்தியதாக தெ ரிவித்து பொலிஸ் நிலையத்தில் மு றைப்பாடு மே ற்கொண்டத னையடுத்து பொ லிஸார் மா ணவியை வவுனியா மாவட்ட பொது வை த்தியசா லையில் அ னுமதித்து ள்ளனர்.
ச ம்பவம் தொ டர்பிலான வி சாரணைகளை மே ற்கொ ண்ட செட்டிக்குளம் பொலிஸார் மா ணவியின் வா க்குமூல த்தினையடுத்து மா ணவியின் பெ ற்றோரை கை து செ ய்து பொ லிஸ் த டுப்புக் கா வலில் வை த்துள் ளனர்.
மே லதிக வி சாரணைகளின் பி ன்னர் பெ ற்றோரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆ ஜர்படுத்துவதற்குரிய ந டவடிக்கைகளை மே ற்கொண்டு வ ருகின் றனர்.