காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண் : வீட்டு வேலைக்கு வந்த இடத்தில் நேர்ந்த சோ கம்!!

காரில் இருந்து..

தமிழ்நாடு தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள சானூரப்பட்டி கடைவீதி அருகே உடலில் ர த்த கா யங்களுடன் வடநாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று மதியம் நடந்து வந்தார்.

அப்போது அந்த பகுதியில் ஆ ர்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த மாதர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும், பா துகாப்பு பணியில் இருந்த செங்கிப்பட்டி போலீசாரும் அப்பெண்ணை மீ ட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த பெண்ணிடம் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட வி சாரணையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த அந்தப்பெண் பெங்களூருவில் குடும்பத்தினருடன் தங்கி இருந்ததாகவும், தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கு ஒரு நபர் அழைத்து வந்து 5 மாதங்களுக்கு முன்பு சேர்த்து விட்டுள்ளார்.

அந்த வீட்டின் உரிமையாளர், அவரது மனைவி ஆகியோர் அந்த பெ ண்ணை து ன்புறு த்தி உ ள்ளனர். நேற்று மதியம் வா கனத்தில் ஏற்றி அந்த பெ ண்ணை கொ டுமைக ள் செய்து செங்கிப்பட்டி அடுத்த பூதலூர் பிரிவு சாலை அருகே விட்டு சென்றதாக போலீசாரிடம் அந்த பெ ண் கூறினார்.

அதன் பேரில், செங்கிப்பட்டி போலீசார், அப்பெ ண் பா லி ய ல் ப லாத் காரம் செய்யப்பட்டாரா? சம்மந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் யார், பெ ண்ணை காரில் கொண்டு வந்து தா க் கி ய வ ர் க ள் யார்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாதர் சங்கத்தினர் அப்பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும், பெண்ணை தா க் கி ய வ ர் க ளை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

நடிகைகளுடன் தொடர்பு : அதிகாரி வேடமிட்டு இளைஞன் செய்த மோசமான செயல்!!

அதிகாரி வேடம்..

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, லட்சக்கணக்கில் மோ சடியும் செய்து அந்த பணத்தில் இளம் நடிகைகளுடன் ஒன்றாக இருந்த போலி ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

தமிழகத்தின் ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதி தனராஜ் – டெய்சி. இருவருமே ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களது மகன் சைமன் ஆந்திராவில் மருத்துவ கல்லூரி ஒன்றில் பேராசிரியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் டெய்சிக்கு ஜார்ஜ் பிலிப் என்பவர் அறிமுகமாகி உள்ளார். இவர் சென்னையில் உள்ள சுகாதாரத்துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

அரசு பணியில் இருப்பதால், டிஎன்பிஎஸ்சியில் வேலை பார்த்து வரும் நவாப்பன் உள்ளிட்டோரை நன்றாக தெரியும், அவர்கள் மூலமாக நிறைய பேருக்கு அரசு வேலை வாங்கி தந்துள்ளதாக டெய்சியிடம் கூறி உள்ளார்.

இதை நம்பிய டெய்சியும் தன்னுடைய மருமகன், சகோதரியின் மகன், உறவினர் உட்பட 3 பேருக்கு அரசு வேலை வாங்கி தர முடியுமா என்று கேட்டுள்ளார்.

அதற்கு ஜார்ஜ் ஒப்புக்கொண்டதுடன் ஆளுக்கு 5 லட்சம், அதாவது 3 பேருக்கும் 15 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன்படியே டெய்சியும், பணமும், சர்டிபிகேட்டுகளும் தயார் செய்து காத்திருந்தபோது, ஜார்ஜும், நவாப்பனும் ஒரு காரில் அதிகாரிகள் கெட்டப்பில் சென்றுள்ளனர்.

சுழல் விளக்கு ஜீப்பில் இருவரும் இறங்கி வருவதை பார்த்த டெய்சியும் அதிகாரிகள் என்றே நம்பி பணத்தை தந்துள்ளார். பணி நியமன ஆணை எங்கே என்று கேட்டபோது, 2 பேருமே தாங்கள் வந்த ஜீப்பிலேயே அங்கிருந்து மா யமாகியுள்ளனர்.

இதனால் அ திர்ச்சி அடைந்த டெய்சி, பொலிசாருக்கு உடனே புகார் அளித்துள்ளார். இதையடுத்து, மாவட்டம் முழுதும் தீவிர க ண்காணிப்பு நடத்தப்பட்டது.

தொடர்ந்து எஸ்பி பட்டினம் பகுதியில் ஜார்ஜ், நவாப்பனை கைது செய்தனர். விசாரணையில், நாவப்பன் செங்கம் பகுதியை சார்ந்தவர் என்பதும், ஐஏஎஸ் அதிகாரி வேஷமிட்டதும் தெரியவந்தது.

உயர் அதிகாரிகள் என்று ஏமாற்றி பலரை நாவப்பன் மோ சடி செய்ததும் தெரியவந்தது. இவருக்கு செங்கத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர்தான் மோசடிக்கு உதவி உள்ளார்.

இந்த மோ சடி பணத்தை வைத்து கொண்டு இவர்கள் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்ட துணை நடிகைகள், சின்னத்திரை நடிகைகளுடன் இருந்துள்ளனர்.

அந்த புகைப்படங்கள் எல்லாம் அவர்களது ஸ்மார்ட் போனில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. திரைப்படம் எடுக்க போகிறோம் என்று சொல்லியே அந்த நடிகைகளை வலையில் விழ வைத்துள்ளனர்.

சுமார் 50-க்கும் மேற்பட்டோரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக இவர்கள் ஏமாற்றி பணம் பறித்துள்ளது தெரியவந்துள்ளது. கைதானவர்களிடம் தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.

வெளிநாட்டில் வசிக்கும் கணவன் : அறைக்குள் தூங்கச் சென்ற மனைவி : அதிகாலையில் மாமியார் கண்ட காட்சி!!

வெளிநாட்டில் வசிக்கும் கணவன்..

வெளிநாட்டில் பணிபுரியும் கணவருக்கு கொரோனா பா திப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற ம னக் க வலையில் கேரளாவில் வசிக்கும் மனைவி த ற்கொ லை செ ய்து கொ ண்டது சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு நந்தியார் குளங்கரை பகுதியை சேர்ந்தவர் பிஜூகுமார். சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரேமா கோவிந்த் (40). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிரேமா இரு தினங்களுக்கு முன்னர் இரவு சாப்பிட்டு விட்டு தனது குழந்தைகளுடன் படுக்கையறைக்கு தூ ங்க செ ன்றார்.

பின்னர் விடிகாலையில் பிரேமாவின் மாமியார் சவுதமினி தூ க்கத்தில் இருந்து எ ழுந்த போது வீட்டு சமையலறை தி றந்திருப்பதை க ண்டு அங்கு சென்று பா ர்த்தார்.

அப்போது அந்த இடத்தில் பிரேமா தீ யி ல் க ரு கி இ றந்த நி லையில் கா ணப்பட்டதை கண்டு மாமியார் அ திர்ச்சி யில் உ றைந்தார், அவர் அருகில் ம ண்ணெண் ணெய் போ த்தல் இ ருந்தது. ச ம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் பிரேமாவின் ச டலத்தை கைப்ப ற்றி வி சாரணை ந டத்தினர்.

அதில் சவுதியில் பிஜூகுமார் அ றையில் த ங்கிருந்த ஒருவருக்கு கொரோனா தொ ற்று ஏ ற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பிஜூகுமார் க ண்காணிப்பில் வைக் கப்பட்டு உ ள்ளார்.

இதை அறிந்த பிரேமா மிகுந்த ம னக்க வலை அடைந்தார். உடன் பணியாற்றும் ஆசிரியையிடம் தனது கணவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

இதோடு ம னநலப் பி ரச்சனைக்கு பிரேமா சிகிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையிலேயே க ணவரை நினைத்து க வலைப்ப ட்டு அவர் தற் கொ லை செய்து கொண்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் பிரேமா எழுதி வைத்திருந்த கடிதத்தில், மனநிலை பிரச்சனையில் இருந்து தன்னால் மீ ள மு டியவில்லை எனவும் கணவருக்கு தான் தொ ல்லையாக இருக்க விரும்பவில்லை எனவும் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது பிஜூகுமார் சவுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் மனைவியின் இறுதிச் சடங்கில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என தெரியவந்துள்ளது.

வவுனியாவில் உயர்மன்ற தீர்ப்பையடுத்து வெடி கொழுத்தி கொண்டாட்டம்!!

உயர்மன்ற தீர்ப்பையடுத்து..

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் தேர்தல் திகதியிட்ட வர்த்தமானி என்பவற்றை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று(02.06.2020 மாலை நிராகரித்தைத் தொடர்ந்து வவுனியா நகரில் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி மகிழ்ந்தார்கள்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் தேர்தல் திகதியிட்டமை தொடர்பாக வெளியான வர்த்தமானிக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யபட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் 5 நீதியரசர்கள் முன்னிலையில் கடந்த 10 நாட்களாக இடம்பெற்று வந்த நிலையில் தீர்ப்பு வெளியாகியது.

இதனையடுது;து, பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் வேட்பாளர் ஜனக நந்தகுமார ஆகியோர் வவுனியா பழைய பேரூந்து நிலையம், நகரப்பகுதி என்பவற்றில் தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்து வெடி கொழுத்தி தீர்ப்பு குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வவுனியா கனகராயன்குளத்தில் அடாத்தாக அமைக்கப்பட்ட உணவகத்தை அகற்ற உத்தரவு!!

தாவூத் உணவகம்..

வவுனியா கனகராயன்குளம் ஏ9 பிரதான வீதியில் அமைந்துள்ள சர்சைக்குரிய தாவூத் உணவகத்தை அங்கிருந்து அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உணவகம் அமைந்துள்ள காணியை காலி செய்யுமாறு வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தால் அறிவுறுத்தல் கடிதம் ஒட்டப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில்,

அரச காணியில் அதிகாரமில்லாமல் ஆட்சிசெய்தல் அல்லது குடியிருக்கிறீர் எனக் கருதுவதால் 1979 ஆண்டின் அரச காணிகள் ஆட்சி மீளப்பெறுதல் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 7 மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் அக்காணியை காலி செய்யும்படியும்,

அக்காணியை காலியான நிலையில் பிரதேச செயலரிடமோ, அல்லது குடியேற்ற உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தரிடமோ ஒப்படைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காணியை நபர் ஒருவர் அடாத்தாக கையகப்படுத்தி வைத்திருப்பதுடன், இது குறித்த சர்ச்சையில் முன்னாள் போராளியொருவரையும் அவரது உணவகத்தை சேர்ந்தவர்கள் தாக் கியிருந்தனர்.

இந்த விவகாரத்தில் பொலிசாரும் பக்கச்சார்பாக நடப்பதாக அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விமர்சனம் தெரிவித்திருந்தமை குரிப்பிடத்தக்கது.

பொலன்னறுவையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!!

விபத்தில்..

பொலன்னறுவை, பக்கமுன பகுதியில் இன்று (02.06.2020) முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் படைத்தரப்பை சேர்ந்த இருவர் பலியாகியுள்ளனர்.

இவர்கள் இருவரும் பயணம் செய்த மோட்டார்சைக்கிள், எதிரே பயணித்த பேருந்து ஒன்றுடன் மோதியதால் இந்த இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த இரண்டு படையினரும் 27 மற்றும் 28 வயதை கொண்டவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தையடுத்து பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை சுகாதார அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள புதிய கொரோனா நோயாளிகள்!!

கொரோனா நோயாளிகள்..

இலங்கையில் திடீரென கொரோனா நோயாளர்கள் அதிகரித்துள்ளமை எதிர்பார்க்காத ஒன்று என சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து கொரோனா நோயுடன் பெருமளவானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரொனா வைரஸ் தொற்றுடன் வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படுவது தற்போதைய நிலைமைக்கு பொருத்தமற்றதாகும். இதுவொரு ஆபத்தான நிலை என அவர் எச்சரித்துள்ளார்.

இதன் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடாக நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1663 ஆகும். இதில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் சுமார் 500 பேர் வரையில் உள்ளனர். அடுத்து வரும் வாரங்களில் வெளிநாடுகளிலிருந்து வரவுள்ளோரினால் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் சுகாதார நிலைமைக்கு அமைய 2500 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டால் அது பெரும் அபத்தான நிலையாக மாறும் என எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோர விபத்தில் ஒருவர் பலி : மற்றொருவர் படுகாயம்!!

விபத்தில் ஒருவர் பலி..

திருகோணமலை- கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் சேருவில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலுமொருவர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பகின்றது.

மோட்டார் வாகனமொன்று, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைச்சிளில் பயணித்த இருவரில் ஒருவர் பலியானதோடு மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பகின்றது.

குறித்த விபத்தில் கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த டி எல் சதாத் 52 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவரே பலியானதோடு மற்றொருவர் கந்தளாய் பேராறு பகுதியைச்சேர்ந்த ஏ.எம்.மாஹாத் வயது (40) என்பவர் பலத்த காயங்களுடன் அதி தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாயில் இருந்து வான்எல பகுதிக்கு ம து போ தையில் வெள்ளை வானொன்றில் பயணித்த இளைஞர்கள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் சென்று மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதன்போது மோட்டார் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாடாளுமன்றை கலைப்பு தொடர்பில் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!!

உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு..

ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்தத் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த,

வர்த்தமானியையும் பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும் செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நிறைவுக்கு வந்துள்ளது. இந்த சூழ்நிலையிலேயே இந்த தீர்ப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

ஒரு மாதத்தின் பின்னர் இலங்கையில் சமூகத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள்!!

கொரோனா நோயாளிகள்..

இலங்கையில் இதுவரை மொத்தமாக 1643 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் இராணுவ சிப்பாய்களாகும். அண்மையில் கொரோனா தொற்று உறுதியாகிய இராணுவ அதிகாரியுடன் செயற்பட்ட இருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தொற்று நோய் பிரிவின் இயக்குனர் தெரிித்துள்ளார்.

குறித்த இருவருக்கு ராஜகிரிய ஆயுர்வேத நிலையத்தில் வைத்து கொரோனா தொற்றியுள்ளதாக கண்டுபிடி்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக முல்லைத்தீவு மற்றும் கற்பிட்டி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த இராணுவ சிப்பாய்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த ஒரு மாத காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் கடற்படை சிப்பாய்களுக்கு மாத்திரமே கொரோனா தொற்று ஏற்பட்டமை அடையாளம் காணப்பட்டது.

எனினும் நேற்றைய தினம் சமூகத்திற்குள் இரண்டு பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோழி மற்றும் முட்டை விலைகள் அதிகரிப்பு!!

கோழி மற்றும் முட்டை..

நாட்டின் பல இடங்களில் மேல் தோல் நீக்கிய ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 630 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சில இடங்களில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 650 முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டு வாரம் என்ற குறுகிய காலத்தில் 150 ரூபாயால் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு வாரங்ளுக்கு முன்னர் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 480 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையானது ஒரு வாரத்தில் 550 ரூபாவாக அதிகரித்தது. இதனையடுத்து அடுத்த சில தினங்களில் விலைகள் துரிதமாக அதிகரித்துள்ளதுடன் நேற்றைய தினம் 630 ரூபாய் வரை கோழி இறைச்சியின் விலை அதிகரித்திருந்தது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் கோழி உற்பத்தி வீழ்ச்சியடைந்து காணப்பட்டதுடன் தட்டுப்பாடும் நிலவியது. அத்துடன் இறக்குமதி வரியும் அதிகரிக்கப்பட்டமை கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு காரணம் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே ஒரு கோழி முட்டையின் விலை 20 ரூபாயாக அதிகரித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு முட்டை 13 முதல் 15 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பவற்றின் விலைகள் அடுத்த சில தினங்களில் மேலும் அதிகரிக்கலாம் என சந்தை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்கு ஆண்டுகளாக நாடுகட த்தப்படும் அ ச்சத்தில் அவுஸ்திரேலியாவில் பிறந்த சிறுவன்!!

அவுஸ்திரேலியாவில் வங்கதேச பெற்றோருக்கு பிறந்த சிறுவன், கடந்த நான்கு ஆண்டுகளாக நாடுக டத்தப்படும் அ ச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் நிலையில், நாடுக டத்தலை தடுக்கக்கோரி அவுஸ்திரேலிய அரசுக்கு சிறுவனின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

2012ம் ஆண்டு வங்கதேசத்தில் மெஹதி ஹசன் பூஹூயன் என்பவருக்கும் சுல்தானாவுக்கும் திருமணம் நடந்த பின்னர், பூஹுயன் அவுஸ்திரேலியாவில் மாணவர் விசாவில் இருந்த பொழுது அவர்களுக்கு அடியன் பூஹூயன் என்ற குழந்தை பிறந்துள்ளது.

அக்குழந்தை பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பது பிறந்து சில மாதங்களில் அறியப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற மெஹதி ஹசன் பூஹூயனுக்கு நிரந்தர திறன்வாய்ந்தவர்களுக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பூஹூயன் குடும்பம் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்ட நிலையில், சிறுவன் அடியனின் உடல்நிலைக் காரணமாக விசா மறுக்கப்பட்டுள்ளது.

சிறுவனுக்கு உள்ள உடல்சார்ந்த குறைப்பாடு, அவுஸ்திரேலியாவுக்கு பாரமாக இருக்கக்கூடும் என அவுஸ்திரேலியா கருதும் நிலையில், வங்கதேசத்திற்கு நாடுக டத்தப்படுவோம் என்ற அ ச்சத்திலேயே கடந்த நான்கு ஆண்டுகளாக சிறுவனின் குடும்பம் வாழ்ந்து வருகின்றது.

வழக்கமான மழலையர் பள்ளியில் கல்வி கற்கும் தனது மகனுக்கு சிறிய அளவிலான உதவி மட்டுமே தேவைப்படுகிறது என்கிறார் சிறுவனின் தந்தை பூஹூயன்.

“அவனது நிலை நன்றாக உள்ளது. அவனால் ஓட முடியும், படிக்க மற்றும் எழுத முடியும்,” எனக் கூறியிருக்கிறார் பூஹூயன்.

நிராகரிக்கப்பட்ட விசா தொடர்பாக நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்ட நிலையில், 2018ம் ஆண்டு இறுதியில் தீர்ப்பாயமும் குடிவரவுத்துறை முடிவினையே உறுதிச்செய்திருக்கிறது.

இச்சூழலில், அவுஸ்திரேலியாவில் வாழ் வேண்டும் என்ற நம்பிக்கையை இழக்காத பூஹூயன், அமைச்சரின் தலையீட்டைக் கோரியிருக்கிறார்.

இந்த விவகாரம் தற்போது சுங்கம் மற்றும் சமூகப் பா துகாப்பு தொடர்பான துணை அமைச்சர் ஜேஷன் வுட்டின் முடிவைச் சார்ந்து இருக்கிறது.

சஹன் குமார விவகாரம் : இரண்டு ஆண்டுகள் கடந்தும் நீடிக்கும் மர்மம்!!

சஹன் குமார..

பலாங்கொட பகுதியில் சஹன் குமார தர்மசிறி என்ற சிறுவன் கா ணாமல் போய் இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், சிறுவன் தொடர்பில் புலனாய்வுத்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவன் கா ணாமல் போனமை தொடர்பில் 2018ம் ஆண்டு ஜூலை மாதம் முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து அந்த பகுதியில் தீவிர தே டுதலை நடத்தியிருந்தனர். எனினும், சிறுவன் குறித்த தகவல்கள் எதுவும் கிடைத்திருக்கவில்லை. இதனையடுத்து, இராணுவம் பின்வாங்கியது. வி சாரணைகள் கு ற்றப் பு லனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறுவன் சிறுத்தைக்கு ப லி ஆகினானா? அல்லது புதையல் வேட்டை அல்லது வேறு ஏதேனும் கு ற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து வி சாரணை நடந்து வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, விறகு வெட்டுவதற்காக அருகில் உள்ள காட்டுக்கு சென்ற தந்தையை தேடி சென்ற சஹன் குமார தர்மசிறி என்ற சிறுவன் மீண்டும் வீடு தி ரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் குளத்து காணிகளை அபகரித்து அமைக்கப்பட்ட நிரந்தர வேலிகள் : அகற்றிய கமநல அபிவிருத்தி திணைக்களம்!!

குளத்து காணிகளை அபகரித்து..

வவுனியாவில் குளத்து காணிகளை அபகரித்து அமைக்கப்பட்ட நிரந்தர வேலிகளை அகற்றும் நடவடிக்கையில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் ஈடுபட்டுள்ளது.

அந்தவகையில் இன்று (02.06.2020) காலை தொடக்கம் நான்கு குளங்களின் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்து நிரந்தர மற்றும் தற்காலிக வேலிகளை அமைந்தவர்களுடைய வேலிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தலைமையிலான உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிசார் இணைந்து இச் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

குளங்களை பாதுகாக்கும் நோக்கோடு பட்டக்காட்டு குளம், வேப்பங்குளம், கோவில்குளம், ஓயார் சின்னக்குளம் ஆகிய குளங்களின் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்ட வேலிகளை அகற்று குறித்த காணிகள் மீட்கப்படுவதுடன்,

குளத்து காணிகளை அபகரித்து நிரந்தர கட்டடங்கள் அமைத்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புகையிரதத்தில் பயணம் செய்யும் அரச, தனியார் பணியாளர்களுக்கு ஓர் அறிவித்தல்!!

புகையிரதத்தில்..

எதிர்வரும் 10ஆம் திகதியின் பின்னர் தொடருந்தில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் எஸ்.பொல்வத்த தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் தொடருந்துகளில் பயணிப்பதற்காக சுமார் இருபத்து ஓராயிரம் பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். இவ்வாறு பதிவு செய்தவர்களில் நேற்றைய தினம் ஏழாயிரத்து 446 பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் எதிர்வரும் 10ஆம் திகதியின் பின்னர் அரச, தனியார் பணியாளர்கள் தொடருந்தில் முன் பதிவு அடிப்படையில் பயணம் செய்ய வேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு அறிகுறிகள் இன்றி கொரோனா தொற்று!!

கொரோனா தொற்று..

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் பெரும்பான்மையோருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களில் பெரும்பான்மையிருக்கு நோய் அறிகள் காணப்படாதவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை மிகவும் சிறப்பான முறையில் கண்கானிப்பதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரை மொத்தமாக 1,643 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.