நியூசிலாந்தில் இறந்த நாயின் அஸ்தியை இந்தியாவிற்கு கொண்டு வந்த உரிமையாளர்!!

நாயின் அஸ்தியை..

நியூசிலாந்தில் இ றந்த நாயின் அஸ்தியை, அதன் உரிமையாளர் இந்தியாவில் உள்ள கங்கை நதியில் கரைத்து இறுதிச்சடங்கை நடத்தியுள்ளார்.

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தைச் சேர்ந்த பிரமோத் குமார் என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக நியூசிலாந்தின் ஆக்லாந்தில் வசித்து வருகிறார்.

இவர் 10 ஆண்டுகளாக தன்னுடன் லைக்கான் என்கிற நாயினை பாசமாக வளர்த்து வந்துள்ளார். சமீபத்தில் தன்னுடைய செல்லப்பிராணி இ றந்ததும், இந்து பாரம்பரியத்தின் படி தகனம் செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி லைக்கானின் அஸ்தியை நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்து கங்கை நதியில் கரைத்து இறுதிச்சடங்குகளை நடத்தியுள்ளார்.

பேருந்து மீது கண்டெய்னர் லொறி மோதி பயங்கர விபத்து : 20 பேர் உயிரிழப்பு!!

விபத்து

தமிழ்நாட்டில் பேருந்துடன் கண்டெய்னர் லொறி மோதி விபத்துக்குள்ளானத்தில் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே அமைந்து தேசிய நெடுஞ்சாலையிலே அதிகாலை 4.30 மணிக்கு இக்கோர விபத்து நடந்துள்ளது.

பெங்களுரிலிருந்து எர்ணாகுளம் நோக்கிச் கேரளா பேருந்து சென்றுக் கொண்டிருந்த நிலையில், எதிர் திசையில் சாலையின் மறுபக்கம் அதிகவேகத்தில் பயணித்த கண்டெய்னர் லொறி, நெடுஞ்சாலையின் குறுக்கே இருந்த பா துகாப்பு சுவரை உடைத்துக்கொண்டு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பேருந்தில் 48 பயணிகள் பயணித்ததாக கூறப்படும் நிலையில் தற்போது வரை 6 பெண்கள் உட்பட 20 பேர்  உ யிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விபத்தை அடுத்து கண்டெய்னர் லொறியை ஓட்டி வந்த நபர் தலைமறைவாகியுள்ளார். இறந்தவர்களை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

350 ஓட்டங்கள் குவித்து மிரள வைத்த இலங்கைவீரர் : 24 வருட சாதனையை முறியடித்தார்!!

அவிஷ்க தரிந்து

19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை சேர்ந்த வீரர் அவிஷ்க தரிந்து 350 ஓட்டங்களை குவித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். பாடசாலைகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போதே அவிஷ்க இந்த ஓட்டங்களை விளாசினார்.

லும்பினி கல்லூரிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வத்தளை சென். அந்தனிஸ் கல்லூரி வீரர் அவிஷ்க தரிந்து 285 பந்துகளில் 350 ஓட்டங்களை பெற்றார் இதில் 56 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும்.

அவிஷ்க குவித்த இந்த ஓட்டங்கள் பாடசாலைகள் கிரிக்கெட்டில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் ஒரு வீரர் பெற்ற அதிக ஓட்டமாகும்.

இதற்கு முன் தம்மிக்க வாஸ் என்ற வீரர் கடந்த 1996ல் 310 ஓட்டங்கள் குவித்ததே சாதனையாக இருந்த நிலையில் அவிஷ்க அதை முறியடித்துள்ளார்.

வ/புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி!

வ/புதுக்குளம் மகாவித்தியாலயத்தில்  கடந்த 18.02.2020 (செவ்வாய்கிழமை)அன்று   வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் திரு.ச. சுபாஸ்கரன்  தலைமையில் இடம்பெற்ற  விளையாட்டு போட்டியில் கடற்தொழில் மற்றும்நீரியல் வள மூலங்கள் அமைச்சர்கெளரவ .டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட துடன்  புதிதாக  அமைக்கபட்ட இரண்டு வகுப்பறைக் கட்டிடங்களையும் திறந்து வைத்ததுடன்  வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தை,தேசிய பாடசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேற்படி நிகழ்வில்  வவுனியா  வடக்கு வலயகல்விப் பணிப்பாளர் திருமதி.அ.சுரேந்திரன் சிறப்பு விருந்தினராவும் கலந்து கொண்டதுடன்  ஈழமக்கள் ஜனநாயக கட்ட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்கள் உறுப்பினர்கள் அயல்பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள்  ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். . 

கொரோனா வைரஸ் தாக்கம் : தாமரை கோபுரத்தை திறப்பதில் கால தாமதம்!!

தாமரை கோபுரம்

கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரம், பொது மக்களுக்காக திறந்து வைப்பது மேலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்ட பெரும்பாலான சீன ஊழியர்கள் சீன புத்தாண்டுக்காக சீனா திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் திட்ட இயக்குநர் சாந்தா குணானந்தா இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், புத்தாண்டுக்காக சீனாவுக்கு சென்ற பெரும்பாலான சீன ஊழியர்கள் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இன்னும் இலங்கைக்கு திரும்பவில்லை என்று கூறினார்.

இதன் காரணமாக தாமரை கோபுரத்தை பொது மக்களுக்காக திறப்பதில் மேலும் தாமதமாகியுள்ளது என்றார். திட்டம் தொடங்கி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால், கடந்த ஆண்டு செம்டம்பர் 16ம் திகதி இந்த கோபுரம் திறக்கப்பட்டது.

எதிர்வரும் மார்ச் முதல் பொது நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக தாமரை கோபுரம் அரசிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!!

தங்கத்தின் விலை

அமெரிக்க டொலருக்கு இணையாக தங்கத்தின் விலையிலும் தொடர்ச்சியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், இன்றும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுணுக்கு 350 ரூபாயால் உயர்ந்து 72 ஆயிரத்து 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க டொலரின் விலையில் ஏற்படும் மாற்றம் சர்வதேச தங்கத்தின் விலையை நிர்ணயிக்கிறது. அதனடிப்படையில் இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுணுக்கு 78 ஆயிரத்து 800 ரூபாவாக இன்று விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 78 ஆயிரத்து 400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஹோமாகம முன்னாள் நீதவானுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்!!

முன்னாள் நீதவானுக்கு..

ஹோமாகம முன்னாள் நீதவான் சுனில் அபேசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட பா துகாப்பு அதிகாரி ஆகியோருக்கு 16 ஆண்டுகள் க டூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இலஞ்சம் பெற்ற வழக்கில் கு ற்றவாளி என இனங்காணப்பட்ட நிலையிலேயே அவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவர்கள் மூன்று இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றமை சம்பந்தமான வழக்கை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

வவுனியாவில் பேருந்தில் இளைஞர் ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட க ஞ்சா : வீட்டில் விசேட சோ தனை!!

பேருந்தில்..

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்திலிருந்து கே ரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த க ஞ்சா பொதியினை உடமையில் மறைத்து வைத்திருந்த நிலையில் 24 வயதுடைய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் அனுராதபுரத்துக்கான பற்றிச்சீட்டினை பெற்றிருந்த நிலையில், பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோ தனையின் போது குறித்த இளைஞரிடமிருந்து 4 கிலோ க ஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட வி சாரணையில் குறித்த இளைஞர் வவுனியா, சுந்தரபுரத்தில் உள்ள வீட்டுல் மேலும் பல க ஞ்சா பொதிகளை மறைத்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளதை அடுத்து பொலிஸார் தே டுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.

வெளிநாட்டிருந்து வருகை தந்தவர்களுக்கு யாழில் ஏற்பட்ட நிலை!!

யாழில்..

வெளிநாட்டிருந்து வருகை தந்தவர்கள் தங்கியிருந்த வீடு பட்டப்பகலில் உ டைத்து 20 பவுண் தங்க நகைகளும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் தி ருடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம், கரவெட்டி, சாமியன் அரசடிப் பகுதியில் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தமது உறவினரின் வீட்டில் தங்கியுள்ளனர். வீட்டிலுள்ள அனைவரும் இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆலயத்துக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் பிற்பகல் 1.30 மணியளவில் வீடு திரும்பிய போது, வீட்டுக்குள் உள்ள பொருட்கள் ஆங்காங்கே வீசப்பட்டிருந்தன. வீட்டின் பின் கதவு உ டைக்கப்பட்டு திறக்கப்பட்டிருந்தது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தங்கியிருந்த அறையில் வைக்கப்பட்டிருந்த 20 பவுண் தங்க நகைகள், 400 ஸ்ரேலிங் பவுண்ட் நாணயத் தாள்கள், ஆயிரத்து 300 யூரோ நாணயத்தாள்கள் என்பன தி ருட்டுப் போயுள்ளன.

சம்பவம் தொடர்பில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் அதியுயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட தமிழர் : வரலாறு படைத்த சீனிவாசன்!!

சீனிவாசன்

அமெரிக்காவில் அதியுயர் பதவி ஒன்றுக்கு தமிழகத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கொலம்பியா சர்கியூட் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 52 வயதான ஸ்ரீ. சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் திருநெல்வேலியை சேர்ந்த இவர், அமெரிக்காவில் குடியுரிமை பெற்றுள்ளார். அமெரிக்காவில் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக இருந்தார். தாயார் சரோஜா, அதே பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியையாக பணியாற்றினார்.

அமெரிக்க முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஹார்வி வில்கின்சன்னிடம் குமாஸ்தாவாக இருந்தவர். 2011 ஆம் ஆண்டு முதல் முதன்மை துணை சட்டமா அதிபராக பதவி வகித்தார். ஒரு கட்டத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கும் பரிசீலிக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் அமெரிக்க முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகி இருப்பது இதுவே முதல் முறை. அந்த வகையில் தமிழரான சீனிவாசன் புதிய வரலாறு படைத்துள்ளார்.

இனி விசா கிடைக்காது : பிரித்தானியா உள்துறை அலுவலகம் விடுத்துள்ள அறிவிப்பு!!

பிரித்தானியா

பிரெக்ஸிட்டின் பின்னராக குடியேற்ற திட்டங்களின் கீழ், குறைந்த திறன்களைக் கொண்ட தொழிலாளர்களுக்கு விசா கிடைகப்பெறாது என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் உள்துறை அலுவலகம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 31ம் திகதியுடனான பிரெக்ஸிட்டின் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பிரஜைகள் சமமாக நடத்தப்படுவார்கள் என பிரித்தானிய உள்துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிக்கு அமைய புள்ளிகள் அடிப்படையிலான குடியேற்ற முறைமையை பிரித்தானியா விரும்புவதாக உள்துறை அலுவலக செயலாளர் பிரிடி பட்டேல் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின்கீழ், பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொள்ள விரும்பும் வெளிநாட்டவர்கள், ஆங்கில மொழி ஆற்றலை கொண்டிருக்க வேண்டும் என வலிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட அனுசரணையாளருடன், தொழில் திறனைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், அவர்களுக்கு 50 புள்ளிகள் வழங்கப்படும் என பிரித்தானிய உள்துறை அலுவலக செயலாளர் பிரிடி பட்டேல் தெரிவித்துள்ளார்.

யாழ் பலாலி விமான நிலையம் ஊடாக சென்னை செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

பலாலி விமான நிலையம்

யாழ்ப்பாணம் – சென்னைக்கு இடையே இம்மாத இறுதியில் தினமும் விமான சேவை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் எயார் நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் அதிகாரிகள் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் பிரதிநிதிகளை வணிகர் கழகத்தில் இன்று புதன்கிழமை சந்தித்தனர்.

தொடர்ந்து நடந்த ஊடக சந்திப்பில் மேற்படி கூறப்பட்டது. இதேவேளை யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் அதிக வரியுடனான கட்டணம் அறவிடப்படும் குற்றச்சாட்டை பலாலி விமான நிலைய அதிகாரிகள் இன்று மறுத்துள்ளனர்.

“யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கு பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் தற்போது வாரத்தில் 3 நாட்கள் இடம்பெறும் சேவை இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் மாத முதல் வாரத்திலிருந்து வாரத்தில் 7 நாட்களும் விமான சேவையை ஆரம்பிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவைக் கட்டணம் அதிகரித்துக் காணப்படுவதற்கு இரட்டை வரி காரணம் என ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுகிறது.

ஆனால் அது உண்மைக்குப் புறம்பானது. நாட்டில் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் (கட்டுநாயக்க, மத்தல) பயணி ஒருவரிடம் 60 டொலர் அறிவிடப்படுகிறது. எனினும் கட்டுநாயக்க மற்றும் அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையங்களிலிருந்து சென்னைக்கு புறப்படும் விமானங்கள் 150 பயணிகளுக்கு மேல் பயணிக்க முடியும்.

எனினும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடு பாதை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாக 70 பயணிகள் பயணிக்கும் விமானே சேவையில் ஈடுபட முடியும். அதில் சுமார் 50 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

இதனால் எரிபொருள் உள்ளிட்ட செலவுகள் காரணமாக சேவைக் கட்டணம் அதிகரித்துக் காணப்படுகிறது. அத்துடன், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கு பயணிக்கவுள்ளோர் 3 வாரங்களுக்கு முன்னர் முற்பதிவு செய்து கொண்டால் கட்டணம் குறைந்த பயணச் சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். குறுகிய காலத்துக்குள் பயணச்சீட்டை பதிவு செய்தால் அதிகளவு கட்டணம் அறவிடப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பரிதாப ம ரணம்!!

சுவிஸ்லாந்தில்..

சுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உ யிரிழந்துள்ளார். சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

குறித்த தாயின் தி டீர் ம ரணம் அவர் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. asel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

இதேவேளை நீரேந்து பிரதேசமொன்றில் இருந்துஅவரது உடல் மீட்கப்பட்டதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ப லி : சாரதி கைது!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி – ஏ9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த நபரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உ யிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வர்த்தகரை பரந்தனிலிருந்து முறிகண் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து மோ தியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த வர்த்தகரை சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் மயில்வாகனம் யோகராசா என்பவரே உ யிரிந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், பேருந்தின் சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

40க்கும் மேற்பட்ட பெ ண்களை வ லையில் வீ ழ்த்திய க ணவன் ம னைவியிடம் சி க்கியது எப்படி?

பெண்களை..

தமிழகத்தில் க ணவன் நாற்பதுக்கும் மேற்பட்ட பெ ண்களை மி ரட்டி அ வர்களுடன் த னிமையில் இருந்த வீ டியோவை ம னைவி க ண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த சம்பவத்தில், பல தி டுக்கிடும் த கவல்கள் வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (36). இவருக்கும் தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த பட்டதாரி பெ ண் தாட்சர் (32) என்பவருக்கும் கடந்த டிசம்பர் 2-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் எட்வின் ஜெயக்குமார், மனைவியிடம் சரியாக பேசாமல், செல்போனிலே அதிக நேரம் செலவிட்டதால், ச ந்தேகமடைந்த ம னைவி, ஜெயக்குமார் வீட்டில் இல்லாத நேரத்தில் சோ தனை செய்துள்ளார்.

அப்போது சி க்கிய சுமார் 15 செல்போன்களில், அவர் 40-க்கும் மேற்பட்ட பெ ண்களிடம் த னிமையில் இருந்த வீ டியோ சி க்கியதால், இது குறித்து பு கார் அளித்தார். இந்த ச ம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த ச ம்பவம் குறித்து பல தி டுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. எட்வின் ஜெயக்குமார் விராலிமலை இருக்கும் வங்கி ஒன்றில் கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

வங்கிக்கு பணம் எடுக்க, செலுத்த வரும் பெ ண்களில் அ ழகான வாடிக்கையாளர்களின் வங்கி புத்தகத்தில் உள்ள செல்போன் எண்களை எட்வின் குறித்து வைத்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதன் பின் இரவு வீட்டிற்கு சென்ற பின், அந்த பெ ண்களின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவர். இதில் யாரிடமிருந்து பதில் வருகிறதோ, அந்த பெ ண்களிடம் தன்னுடைய பேச்சை ஆரம்பிப்பார்.

அவர்களின் அன்பாக பேசி, நட்பில் வி ழவைத்து, இறுதியில் அவர்களை தன்னுடைய வ லை வி ழ வைத்துள்ளார். இப்படி பல பெ ண்களை அவர் தன்னுடைய வ லையில் வீ ழ்த்தியுள்ளார்.

தற்போது, ம னைவி புகார் அளித்ததால் எட்வின் வேலைக்கு செல்லவில்லை. இதேபோல் எட்வின் லீ லைகளுக்கு உடந்தையாக செயல்பட்ட அவரின் கா தலியும் சக ஊழியரான தேவிபிலோமினாவும் வேலைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து வங்கி மேலாளர் கூறுகையில், கடந்த 2 வாரமாகவே வங்கிக்கு எட்வின் வரவில்லை. இதுகுறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அதிகாரிகள் வி ரைவில் வி சாரணை மேற்கொண்டு அவர்கள் மீது ந டவடிக்கை எடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் எட்வின் ஜெயக்குமாரின், ம னைவியான தாட்சர், அவரின் செல்போன்களை கைப் பற்றிய போது, அதில் பெ ண் ஒருவர் இ றந்து கி டப்பது போன்றும் அருகில் எட்வின் நின்று கொண்டிருக்கும் நிலையில் கால் தெரிவது போலவும் புகைப்படம் இருந்தது.

இதனால் அந்த பெ ண் கொ லை செய்யப்பட்டுள்ளார் என்று கூறியதால், இது பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது த லைம றைவாக இருக்கும் எட்வின் குடும்பத்தினரை பொ லிசார்  தேடி வருகின்றனர்.

மேலும் வங்கிக்கு வரும் பெ ண்கள் மற்றும் வே லை பார்க்கும் பெ ண்களை அவர்களுக்கு தெரியாமல் ஆ பாசமாக பு கைப்படங்கள் எடுத்து எட்வின் ஜெயக்குமார் வை த்துள்ளார். இதற்கு ஊ ழியர் தேவிபிலோமினா உதவி செய்துள்ளார்.

இந்த பட்டியலில் பல பெ யர்கள் இடம் பெற்றுள்ளது. இதில் ஒருவர் க ர்ப்பமாகியுள்ளார். இதையறிந்த எட்வின், க ட்டாயப்ப டுத்தி க ர்ப்பத்தை க லைக்க வைத்துள்ளதாகவும் கூறப்படுவதால், எட்வினை கை து செய்து வி சாரித்தால் மட்டுமே இதன் உண்மை தெரியவரும்.

சுற்றுலா சென்ற நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உ யிரிழப்பு!!

சுற்றுலா சென்ற..

திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவர்கள் பதுளை, ஆளியெல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றிலிருந்து திருகோணமலை பகுதிக்கு சுற்றுலா வந்துள்ள நிலையிலேயே குறித்த அ னர்த்தம் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த குளத்தில் நீராடிய ஒன்பது மாணவர்களில் நான்கு பேரே இவ்வாறு நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உ யிரிழந்த மாணவர்களின் ச டலம் தற்போது பிரேத ப ரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,மேலதிக வி சாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.