வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையின் உறுப்பினர்களின் வரவேற்பும் முதல் அமர்வும்!!

வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையின் உறுப்பினர்களின் வரவேற்பும் முதல் அமர்வும் நேற்றைய தினம் (25.04.2018) காலை 9 மணியளவில் செட்டிகுளம் பிரதேச சபைக்கு முன்பாக ஆரம்பித்து உறுப்பினர்கள் விருந்தினர்கள் அனைவருக்கும் மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்று பிரதேச சபையில் நிகழ்வுக்காக அமைக்கப்பட்ட பிரத்தியேக பகுதியில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தேசியக் கொடியினை சுதந்திர கட்சியின் அமைப்பாளர் வாசல, மாகாண கொடியினை ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா, சபைக் கொடியினை தவிசாளர் அந்தோணி ஆகியோர் ஏற்றி வைத்தவுடனும் சமய தலைவர்களின் ஆசீர்வாத்த்துடனும் நிகழ்வுகள் ஆரம்பமாகின

இந்நிகழ்வில் ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் சுதந்திர கட்சியின் அமைப்பாளர் வாசல, ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி, கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் நெல்சன், அக்கட்சியின் சர்வதேச அமைப்பாளர்களில் ஒருவரான மலரவன் ஆகியோர் கெளரவிருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்

செட்டிகுளம் பிரதேச சபையை முதன்முறையாக சுதந்திர கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட ப.உதயராசா தலைமையிலான ஸ்ரீரெலோ கட்சி சபையை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை : மாணவன் வைத்தியசாலையில்!!

 

வவுனியா குடியிருப்பு பகுதியில் தன்னுடைய இல்லத்தில் தனியார் கல்வி நிலையம் ஒன்றை நடாத்தி வரும் பிரபல பாடசாலையில் கற்பித்து வரும் ஆசிரியை ஒருவரிடம் கல்வி பயிலும் ஒன்பது வயதுடைய தரம் நான்கில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக கல்வி நிலையத்திற்கு சமூகம் தராதமையையடுத்து நேற்றைய தினம் (25.04.2018) மாணவனை குறித்த ஆசிரியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

ஆசிரியை தாக்கியதில் மாணவனின் மூக்காலும், காதாலும் இரத்தக் கசிவு ஏற்பட்டதுடன் மாணவனின் கன்னம் கண்டல் காயத்துக்குள்ளாகி மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் பெற்றோரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியை கடந்த காலங்களிலும் மாணவர்களை கடுமையாக தாக்குகின்றார் என்ற குற்றச்சாட்டும் பெற்றோர் மத்தியில் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விடுமுறைக்காக இலங்கைக்கு வந்துவிட்டு கனடா சென்ற பெண் பலி!!

கனடாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் இலங்கை பெண் ஒருவர் உள்ளடங்குவதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தது.

கடந்த 24ஆம் திகதி ரொரான்டோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 46 வயதான ரேனுகா அமரசிங்க என்ற இலங்கை பெண் படுகொலை செய்யப்பட்டார். அவர் இலங்கையின் ஹொரண, குடாஉடுவ, கரவ்ஹேன பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாய் ஆவார்.

இந்நிலையில் சகோதரியின் மரணம் தொடர்பில் இலங்கையிலுள்ள சகோதரர் ஊடகங்களுக்கு தகவல் அறிவித்துள்ளார், “நான் 1991ஆம் குவைத் நாட்டிற்கு தொழிலுக்கு சென்றார். 1994ஆம் ஆண்டு எனது மனைவியும், ரேனுகாவும் குவைத்திற்கு வரவழைத்தேன். நான் பணிபுரிந்த இடத்தின் உரிமையாளர் கனடாவுக்கு செல்லும் போது 2001ஆம் ஆண்டு எனது சகோதரியையும் அழைத்துச் சென்றார்.

கடனாவில் 5 வருடங்கள் தங்கியிருந்த பின்னர் அவருக்கு குடியுரிமை கிடைத்தது. சகோதரி திருமணம் செய்த பின்னர் ரொரன்டோவில் இருந்து வேறு பிரதேசத்திற்கு சென்றார்.

சகோதரிக்கு 7 வயதில் மகன் ஒருவர் உள்ளார். எனது சகோதரியும் மகனும் புத்தாண்டை முன்னிட்டு இலங்கைக்கு வந்திருந்தனர். 3 வாரங்கள் வரை எங்களுடன் இருந்து விட்டு கடந்த 17ஆம் திகதி கனடாவுக்கு சென்றார்.

கனடாவுக்கு சென்று 7 நாட்களில் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மகனை பாடசாலைக்கு அழைத்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பும் போது இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இதற்கு முதல் மூன்றரை வருடங்களுக்கு முன்னரே அவர் இலங்கைக்கு வருகைத்தந்திருந்தார். இந்த முறையில் புத்தாணடிற்கு வந்தவர் அம்மாவையும் பார்த்து விட்டு, காலில் இருந்த பிரச்சினை ஒன்றுக்கு சிகிச்சையும் பெற்று கொண்டார்.

அவர் கனடா குடியுரிமை பெற்றவர். இதனால் அவரை இலங்கைக்கு அழைத்து வருவது குறித்து உரிய பதில் ஒன்று வழங்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதலில் ரேனுகா அமரசிங்க உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும், அதனை இலங்கை வெளிவிவகார அமைச்சு மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

மலேசிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இலங்கையருக்கு 20 வருட சிறைத்தண்டனை?

விமானம் ஒன்றுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த இலங்கை இளைஞர் இன்றைய தினம் அவுஸ்திரேலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்திற்கு இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

அவரது குற்றச்சாட்டிற்கான தண்டனை இன்றையதினம் அறிவிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டு ஜுன் மாதம் மலேசிய விமான சேவைக்கு சொந்தமான MH128 என்ற விமானம் பயணித்து சற்று நேரத்தில் மனோத் மார்க்ஸ் என்ற 26 வயதான இலங்கை இளைஞரால் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் Dandenong பகுதியில் வாழும் இளைஞனின் இந்த செயற்பட்டினால் மீண்டும் விமான மெல்போர்ன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.  இந்த இளைஞனை கைது செய்யும் வரை கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் பயணிகளை விமானத்திற்குள்ளேயே வைத்திருப்பதற்கு பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கையில் வெடி குண்டு உள்ளதாக இளைஞனை சோதனையிட்ட போது அவரிடம் ஸ்பீக்கர் போன்ற உபகரணம் ஒன்றே காணப்பட்டுள்ளது.

விமானத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்த மார்க்ஸ் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு குறைந்த பட்சம் 20 வருட சிறைத்தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் திடீரென நில அதிர்வு : வீடுகள் சேதம்!!

 

இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஹட்டன் – டிக்கோயா, தரவளை மேற்பிரிவு தோட்டத்தில் இன்று அதிகாலை திடீரென நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தின் போது 24 வீடுகள் கொண்ட தொடர் லய குடியிருப்பிலுள்ள 5 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், ஏனைய குடியிருப்புக்களில் சிறு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

அதிகாலை 5 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. இதன்பின்பே வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் உடைந்தன. இதன்போது பாதிக்கப்பட்ட வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவரின் மீது சுவர் இடிந்து விழுந்ததில் அவர் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் 40 வயதான சிவானந்தன் என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நில அதிர்வு மற்றும் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் நில அதிர்வு ஏற்பட்டமை தொடர்பில் தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் படுகாயம்!!

வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் சந்தியில் இன்று(26.04) காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் தனது மகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற தாயும் மகளும் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறிதது மேலும் தெரியவருகையில்,

இன்று காலை சூசைப்பிள்ளையார்குளம் சந்தியில் கந்தசாமி கோவில் வீதியிலிருந்து தனது மகளை பிளசர் ரக மோட்டார் சைக்கிலில் ஏற்றிச் சென்றபோது சூசைப்பிள்ளையார்குளம் வீதிவழியாகச் சென்ற காய்கறிகளை ஏற்றிய கன்டர் ரக வாகனத்துடன் சந்தியில் மோதியுள்ளது.

இதன்போது இறம்பைக்குளம் மகளிர் கல்லாரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியும் மோட்டார் சைக்கிலினைச் செலுத்தி வந்த தாயும் படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் வாகனத்தையும் சாரதியையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் படுகாயம்!!

வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் சந்தியில் இன்று(26.04) காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் தனது மகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற தாயும் மகளும் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறிதது மேலும் தெரியவருகையில்,

இன்று காலை சூசைப்பிள்ளையார்குளம் சந்தியில் கந்தசாமி கோவில் வீதியிலிருந்து தனது மகளை பிளசர் ரக மோட்டார் சைக்கிலில் ஏற்றிச் சென்றபோது சூசைப்பிள்ளையார்குளம் வீதிவழியாகச் சென்ற காய்கறிகளை ஏற்றிய கன்டர் ரக வாகனத்துடன் சந்தியில் மோதியுள்ளது.

இதன்போது இறம்பைக்குளம் மகளிர் கல்லாரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியும் மோட்டார் சைக்கிலினைச் செலுத்தி வந்த தாயும் படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் வாகனத்தையும் சாரதியையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வளாக புத்தர் சிலை விவகாரம் : 5 பேர் கொண்ட விசாரணைக்குழு!!

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை வைக்க முற்றபட்டமை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து ஆராய 5 பேர் அடங்கிய விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

புத்தர் சிலை வைப்பு விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமை காரணமாக யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள குழு அடுத்துவரும் நாட்களில் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளதாக வவுனியா வளாக முதல்வர் கலாநிதி மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

திருமணப் பரிசாக வெடிகுண்டு அனுப்பி கொலை செய்த நபர் : வெளியான பின்னணித் தகவல்!!

 

இந்திய மாநிலம் ஒடிசாவில் திருமண பரிசாக வெடிகுண்டு அனுப்பிய விவகாரத்தில்கல்லூரி பேராசிரியர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் மணமகன் கொல்லப்பட்டுள்ளதுடன் மணப்பெண் படுகாயமடைந்தார்.

கைது செய்யப்பட்ட கல்லூரி ஆசிரியர் Punjilal Meher கொல்லப்பட்ட மணமகனின் தாயாருடன் ஒன்றாக பணிபுரிந்து வந்ததாகவும், தமக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வை கொல்லப்பட்ட மணமகனின் தாயாருக்கு நிர்வாகம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த Punjilal Meher திட்டமிட்டு பழிக்கு பழி வாங்கியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இணையத்தில் இருந்து வெடிகுண்டு தயாரிக்கும் முறையை தெரிந்து கொண்ட Meher தனது வீட்டிலேயே வெடிகுண்டு பார்சலை தயார் செய்துள்ளார்.

பின்னர் சுமார் 230 கிலோ மீற்றர் தொலைவு ரயில் பயணம் செய்து அங்கிருந்து வெடிகுண்டு பார்சலை மணமகனின் பெயருக்கு அனுப்பியுள்ளார்.

குறித்த பார்சலானது சுமார் 650 கி.மீற்றர் தொலைவு, 3 பேருந்துகளில் மாறி மாறி பயணம் செய்து இறுதியில் பிப்ரவரி 20 ஆம் திகதி தொடர்புடைய மணமகனிடம் வந்து சேர்ந்துள்ளது.

திருமணத்தன்று மாலை மணமகளுடன் இணைந்து பார்சலை திறந்து பார்த்த மணமகன் Soumya Sekhar Sahu(26) சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த இடத்திலேயே சுடுவேன் : கொந்தளித்த எங்க வீட்டு மாப்பிள்ளை பிரபலம்!!

பிரபல தொலைக்காட்சியில் நடந்து முடிந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தேவ சூர்யா, அந்நிகழ்ச்சியிலேயே தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து வெளிப்படையாக பேசினார்.

இந்நிலையில் காஷ்மீர் கத்துவா சிறுமி குறித்து பேசுகையில். அப்போது நான் மட்டும் இருந்திருந்தால் அனைவரையும் சுட்டிருப்பேன், அந்த இடத்திலேயே சுட்டிருப்பேன். நீயெல்லாம் வாழவே தகுதியில்லாத ஆள், மதத்தை காரணம் காட்டி அவர்களை வெளியே கொண்டுவர போராடுகிறார்கள்.

நீங்கள் சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் என்ன மதம் என்று கேட்டா காப்பாற்றுவோம், மனிதர்களின் உயிருக்கு மதிப்பளித்து தான் காப்பாற்றுவோம் என கொந்தளிப்புடன் பேசியுள்ளார்.

மேலும் சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பதாகவும், ஆர்யா நிகழ்ச்சியில் நடந்தது மட்டுமே தொலைக்காட்சியில் காட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பாலியல் வழக்கில் பிரபல சாமியார் குற்றவாளி : கண்ணீர் சிந்திய சிறுமியின் தந்தை!!

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

மத்தியப்பிரதேசம் சிந்த்வாரா பகுதியில் ஆசிரமம் நடத்திவருபவர் சாமியார் ஆசாராம் பாபு. கடந்த 2013ம் ஆண்டு ராஜஸ்தானில் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கிலிருந்து வெளியே வந்தவர், குஜராத்தில் 2 சகோதரிகளை வன்கொடுமை செய்த வழக்கில் சிக்கினார். மேலும் தனக்கு எதிராக சாட்சி சொல்ல வந்த நபரை சுட்டுக் கொன்ற வழக்கும் இவர் மீது பதியப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆசாராம் பாபுவை கைது செய்த பொலிசார் ஜோத்பூர் சிறையில் அடைத்தனர். நான்கு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சிறைக்கே சென்று ஆசாராம் பாபு குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இதை கேட்டதும் கண்ணீர் விட்ட சிறுமியின் தந்தை, கடந்த நான்கு மாதங்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை, அச்சுறுத்தலிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களது தொழிலும் மோசமாக பாதிக்கப்பட்டு விட்டது.

எனது மகளுக்கு நியாயம் கிடைத்துள்ளது, நீதியின் மேல் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது.

எங்களுக்கு ஆதரவாக இருந்த ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஆசாராம் பாபு விடுதலையாக வேண்டி வாரணாசி, போபால் உள்ளிட்ட அவரது ஆசிரமங்களில் பிரார்த்தனை நடைபெற்றதுடன், சிறைக்கு மாலையுடன் வந்த ஆதரவாளர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து கொலைகள் : கேரளாவை உலுக்கிய தாயின் வெறிச்செயல்!!

கேரளாவில் ஒரு குடும்பத்தில் நடந்த அடுத்தடுத்த கொலையில் தொடர்புடைய சௌமியா என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கண்ணூரை சேர்ந்த சௌமியா (27) என்பவர் தனது குடும்பத்தினருக்கு பல மாதங்களாக விஷம் கலந்துகொடுத்து அவர்களை கொலை செய்துள்ளார்.
இது கொலை என்று யாரும் கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக Slow Dose விஷம் கொடுத்து வந்துள்ளார்.

இதில், ஜனவிரி 31 ஆம் திகதி இவரது மகள் ஐஸ்வர்யா இறந்துள்ளார். மார்ச் 7 ஆம் திகதி தாய் கமலா மற்றும் ஏப்ரல் 13 ஆம் திகதி தந்தை குன்கிகிணான் இறந்துபோனார்.

இவர்கள் அனைவரும் இறந்துபோவதற்கு முன்னர், குமட்டல் மற்றும் அஜீரணம் பிரச்சனைகள் அறிகுறிகளாக இருந்துள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் இவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் கேரளாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனையடுத்து சௌமியா பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆனால், கொலைக்கான காரணத்தை தற்போதைக்கு சொல்ல இயலாது. இந்த மரணங்களுக்கு பின் இருக்கும் மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழ்க்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிலந்தி பர்கரை விரும்பி சாப்பிடும் மக்கள் : அமெரிக்க பாஸ்புட் கடையில் அலைமோதும் கூட்டம்!!

 

அமெரிக்காவில் உள்ள பாஸ்புட் கடையில் சிலந்தி பார்க்கரை மக்கள் அதிக ஆவலுடன் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் பல்லி, பாம்பு, முதலை இவற்றை உணவாக சமைத்து சாப்பிடுவார்கள் என்று கேள்வி பட்டிருப்போம். அது தொடர்பான வீடியோக்களை பார்த்த பின்பு தான் நாம் நம்பினோம்.

அந்த வகை உணவுகள் எல்லாம் ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் தான் பார்க்க முடியும். தற்போது அமெரிக்காவிலும் அந்த கலாச்சாரம் பரவ தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள பிரபலமான உணவகம் ஒன்றில் சிலந்தி பர்கர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பர்கரை சாப்பிடுவதற்காகவே விடுமுறை தினங்களில் மக்களின் கூட்டம் அலை மோதுகிறதாம்.

இந்த உணவகத்திற்கு செல்லும் பெரும்பாலனோர் சிலந்தி பர்க்கரை சாப்பிட்ட பின்பு அது தொடர்பான புகைப்படங்களை தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் பதிவேற்றம் செய்து என்ன ஒரு சுவை என்று பதிவிட்டு வருகின்றனர்.

இரண்டு மாதங்களுக்குமுன் காணாமல்போன பெண்ணின் கையைத் தூக்கிச் சென்ற நரி!!

 

தனது வாயில் ஒரு மனிதக் கையை கவ்வி வந்த ஒரு நரியைக் கண்டு பிரித்தானியாவின் கோவன் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதே பகுதியிலுள்ள ஒரு தெருவில் மனித உடலின் பாகங்கள் சிதறிக் கிடந்ததைக் கண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

கிளாஸ்கோவைச் சேர்ந்த ஜூலி ரெய்லி(47) என்னும் பெண்மணி இரண்டு மாதங்களுக்குமுன் மாயமானர். பொலிசார் அவரைத் தேடி வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்னும் சந்தேகத்தின்பேரில் 41 வயதுள்ள ஒரு மனிதன் கைது செய்யப்பட்டான்.

கிடைத்த உடல் பாகங்கள் ஜூலியுடையதுதானா என்பதை பொலிசார் அறிவிக்கவில்லை. பொலிசார் தனது வீட்டருகே நிற்பதைக் கண்ட ஒரு பெண்மணி விசாரித்தபோது பொலிசார் மனித உடல் பாகங்கள் கிடப்பதாகக் கூறியதை அடுத்து அந்தப் பெண்மணி தனது வீட்டருகே ஏதாவது கிடக்கிறதா என தேடியிருக்கிறார்.

அப்போது அவரது வீட்டின் பின்புறம் ஒரு தொடை எலும்பு கிடப்பதைக் கண்டிருக்கிறார். அதில் பற்களின் அடையாளம் இருப்பதைக் கண்ட அவர் அவை நரி கடித்ததால் ஏற்பட்ட அடையாளம் இருக்கலாம் என்று கூறினார்.

அவரைப் போலவே வேறு சிலரும் தங்கள் வீடுகளின் அருகே உடல் பாகங்கள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் அளித்தனர். பொலிசாரும் தடயவியல் நிபுணர்களும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பிலுள்ள தொடர்மாடிக்கு ஆபத்து : உடனடியாக மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை!!

 

கொழும்பு – 2, ஸ்டுவர்ட் வீதியில் அமைந்துள்ள அடிக்குமாடி வீடுகள் பாரிய ஆபத்தில் உள்ளமையினால் அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டுத் தொகுதியிலுள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு உடனடியாக அனுப்புமாறு மின்சக்தி எரிசக்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த கட்டடத்தின் ஆபத்தான நிலைமை மற்றும் எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கை தொடர்பில் நேற்று காலை அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே அமைச்சர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

“2012ஆம் ஆண்டு கட்டட ஆய்வு நிலையத்தினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கைகளுக்கமைய இந்த கட்டடங்கள் பாதுகாப்பற்ற நிலைமையில் உள்ளதாக கூறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் தற்போது இந்த நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது. இதனால் இந்த குடியிருப்பில் உள்ள மக்களுக்கு விரைவில் இந்த ஆபத்து தொடர்பில் அறிவித்து இந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய உரிய பிரிவுகளுக்கு அறிவித்துள்ளேன்.

அவர்களுக்கு தற்காலிக இடங்கள் வழங்குவதற்கு அவசியமான கொள்கைள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வழங்குவதற்கு அமைச்சரவை பத்தரம் ஒன்று சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த குடியிருப்பு மக்களை ஆபத்தில் இருந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் நாட்டுக்கு ஏற்படவுள்ள ஆபத்து!!

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் வெளிநாட்டு படுகடன் தொகை பாரியளவில் உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த வாரத்தில் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் மட்டும் வெளிநாட்டுக் கடன் தொகை 47 பில்லியன் ரூபாவினால் உயர்வடைந்துள்ளது.

கடந்த வாரம் அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி 157.46 ருபாவிலிருந்து 159.04 ரூபாவாக உயர்வடைந்துள்ளதனால் வெளிநாட்டுக் கடன் தொகை உயர்வடைந்துள்ளது.

கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு 48 பில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒருவார காலத்தில் இந்தளவு தொகை கடன் அதிகரித்துள்ளது என அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.