கிங்பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா (62). இவர் இந்திய வங்கிகளில் தன்னுடைய விமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்காக ₹9,000 கோடி கடன் வாங்கினார்.
ஆனால், அதை முறையாக செலுத்தாத காரணத்தால், இவர் மீது வழக்கு தொடரப்பட்டதையடுத்து லண்டனில் தஞ்சம் அடைந்தர்ர்.
வங்கிகளில் பணத்தைத் திரும்பச் செலுத்தாமல் பண மோசடியில் ஈடுபட்டுள்ள விஜய் மல்லையா, சட்டரீதியான சவால்களைச் சந்தித்துவரும் சூழலில், தற்போது மூன்றாவதாக பிங்கி என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.
யார் இந்த பிங்கி லால்வாணி
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங் பிஷர் விமான நிறுவனத்தில், விமான பணிப்பெண்ணாக பிங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அதோடு, இவர் விஜய் மல்லையாவின் நெருங்கிய தோழியும் ஆவார். கிங் பிஷரின் சில விளம்பரப்படங்களிலும் இவர் தோன்றியுள்ளார்.
பிங்கி, விஜய் மல்லையாவின் கனவு தேவதை ஆவார். கடந்த 3 ஆண்டுகளாக மல்லையாவுடன் நெருங்கிய உறவில் இருந்த பிங்கி, கடன் பிரச்சனையால் 2016 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி லண்டனுக்கு ஓடியபோது,, அவருடன் சேர்ந்து பிங்கியும் சென்றார்.
அங்கு, லண்டனில் இருவரும் டேட்டிங்கில் இருந்துள்ளனர். தனது கடன் பிரச்சனை தொடர்பான விசாரணைக்கு லண்டன் நீதிமன்றத்தில் ஆஜராகும்போதெல்லாம், கூடவே பிங்கியும் செல்வார்.
சமீபத்தில் தான் இவர்கள் இருவரும் சேர்ந்து 3 காதல் நிறைவு தினத்தை கொண்டாடியுள்ளனர். தற்போது, இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர்.
விஜய் மல்லையாவின் முதல் மனைவி சமீராவும் விமான பணிப்பெண் என்பது குறிப்பிடத்தக்கது. 1986 ஆம் ஆண்டு சமீராவை திருமணம் செய்துகொண்டார், 1987 ஆம் ஆண்டு இவர்களுக்கு சித்தார்த் மல்லையா என்ற மகன் பிறந்தார்.
அதன் பின்னர், சமீராவை விவாகரத்து செய்தார். பின்னர், 1993 ஆம் ஆண்டு தனது பள்ளித்தோழியா ரேகா என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். ரேகா ஏற்கனவே விவாகரத்து ஆகி 2 குழந்தைகளுக்கு தாயும் ஆவார்.
அதன்பின்னர், சில ஆண்டுகள் கழித்து ரேகாவை விட்டு பிரிந்தார். தற்போது, 3 வயது காதலியும் கிடைத்துள்ளார்.
இந்தியாவில் மகனும், தாயும் ஒரே வகுப்பு படித்து தேர்வு எழுதிய ஆச்சரிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
பஞ்சாப்பின் Ludhiana பகுதியைச் சேர்ந்தவர் ரஜ்னி பாலா. 44 வயதான இவருக்கு ராஜ் குமார் என்ற கணவரும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
கடந்த 1989 ஆம் ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக 9 ஆம் வகுப்பு வரை மட்டும் படித்திருந்த ரஜ்னி பாலா, தற்போது தனது மகனுடன் சேர்ந்து அதாவது 29 வருடங்களுக்கு பின் மீண்டும் தன் படிப்பை துவங்கி தேர்வு எழுதியுள்ளார் .
இது குறித்து ரஜ்னிபாலா கூறுகையில், கடந்த 1989 ஆம் ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் 9 ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை. என்னுடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய படிப்பை தொடரும் படி கூறினார்.
மூன்று பிள்ளைகளுக்கு தாய், நான் எப்படி படிப்பை தொடர முடியும் என்று நினைத்தேன். தற்போது மருத்துவமனையில் உதவியாளராக இருக்கும் எனக்கும் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு அடிப்பைடை தகுதியாவது தேவை, அதுமட்டுமின்றி என்னுடைய மாமியார் படிக்காத காரணத்தினால் அவரும் என்னை படிக்கும் படி ஊக்குவித்தார்.
என்னுடைய கணவர் எனக்கு பெரிதும் உதவியாக உள்ளார். அதிகாலையில் சீக்கிரமாக எழுந்து எனக்கும், மகனுக்கு படிப்பை சொல்லித் தருவார். என் இரண்டு மகள்களும் உதவுவதால், நிச்சமயமாக 10ம் வகுப்பை தாண்டி பட்டப் படிப்பை தொடருவேன் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவரது கணவர் கூறுகையில், நான் 17 ஆண்டுகளுக்கு பின்னர் என்னுடைய பட்டப் படிப்பை படித்து முடித்தேன். என்னால் முடிந்த போது ஏன் என் மனைவியால் முடியாது என்று நினைத்தேன், அதன் காரணமாகவே அவரை ஊக்குவித்து படிப்பதற்கு அனுப்பி வைத்தாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இளம் பெண் ஒருவர் மார்க்கெட்டில் கணவர் கண் முன்னால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லியின் கோவிந்தபுரி பகுதியை சேர்ந்த உமேஷ் துபி என்பவர் தனது மனைவி சுமன் (26) என்பவருடன் அங்குள்ள மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த அஜய் (23) மற்றும் பிஜேந்தர் (24) என்ற இரு இளைஞர்கள் சுமனை உரசியபடி நின்று அவரிடம் சில்மிஷம் செய்துள்ளனர். இதை பார்த்து கோபமடைந்த உமேஷ் அவர்களை தட்டிகேட்ட நிலையில் இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர்.
பின்னர் மார்க்கெட்டிலிருந்து வெளியில் வந்து சாலையில் சுமனும், உமேஷும் சென்று கொண்டிருந்த போது மீண்டும் அவர்களை கத்தியுடன் அஜய் மற்றும் பிஜேந்தர் வழிமறித்துள்ளனர்.
பின்னர் உமேஷ் மீது லேசாக கத்தியால் வெட்டியுள்ளார், இதை பார்த்து கணவரை பாதுகாக்க சென்ற சுமனை இருவரும் கத்தியால் குத்தினார்கள். இதையடுத்து கணவர் கண் எதிரிலேயே ரத்த வெள்ளத்தில் சுமன் கீழே சரிந்தார்.
இதன்பின்னர் சுமன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டத்தை மருத்துவர்கள் உறுதி செய்தனர். சிறிய அளவில் காயம்பட்ட உமேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்தில் ஈடுபட்ட அஜய் மற்றும் பிஜேந்திரை பொதுமக்கள் அடித்து உதைத்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இருவர் மீதும் ஏற்கனவே திருட்டு வழக்கு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம், அம்புலன்ஸ் மூலமாக விரைவாக கொண்டு செல்லப்பட்டு பெண்ணொருவருக்கு பொருத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளானதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, செந்தில்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்தனர்.
இதற்கிடையே, அயோத்தியாப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு சிறுநீரகம் தேவை என்ற தகவல் தெரிய வந்தது.
அதன் பின்னர், அப்பெண்ணின் குடும்பத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, அரியானூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குறித்த பெண் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, உறுப்பு தானத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. செந்தில்குமார் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கும், சிறுநீரகம் தேவைப்படும் பெண் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கும் இடையே, சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவு இருந்தது.
ஆனால், 15 நிமிடங்களில் சிறுநீரகத்தை கொண்டு வர வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், முக்கிய சாலைகளில் போக்குவரத்து சிறிது நேரத்திற்கு நிறுத்தப்பட்டு, இரண்டு அம்புலன்ஸ் வாகனங்களில் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது.
அம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மருத்துவர்கள், தாதிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் விரைந்து செயல்பட்டதால், 9 நிமிடங்களிலேயே அம்புலன்ஸ் வாகனம் மருத்துவமனையை அடைந்து குறித்த பெண்ணுக்கு சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
வவுனியா வடக்கு நெடுங்கேணி மருதேடை பிரதேசத்தில் குடிநீர் வழங்கும் நிலையமொன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் செயலாளர் க.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், தியாகராஜா, மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மருதேடை மக்களின் நீண்ட நாள் பிரச்சனையாக இருந்த குடி நீர்ப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக வடமாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியத்தின் கீழ் 4.5 மில்லியன் ரூபா பெறுமதியில் இக்குடிநீர் வழங்கும் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது மருதேடை பொது விளையாட்டு கழக இளைஞர்களிற்கு வடமாகாணசபை உறுப்பினர்களினால் விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா மடுக்குளத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட முதிரை பலகைகள், முதிரைமரக் குற்றி (தீராந்தி) மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும், சாரதியையும் கைது செய்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது,
வவுனியா ஈச்சங்குளத்தில் இரவு நேர கடமையில் ஈடுபட்ட பொலிஸார் முதிரை மரப் பலகைகளை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்றினை நிறுத்துமாறு சைகை செய்துள்ளனர். எனினும், சைகையினை மீறி அவ்வாகனம் மிக வேகமாக சென்றுள்ளது.
இவ்வாறு சென்ற வாகனத்தினை ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய குழுவினர் துரத்திப் பிடித்துள்ளனர். இதன்போது, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் சுமார் இரண்டரை இலட்சம் பெறுமதியான முதிரை மரப் பலகைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் பண்டாரிக்குளத்தை சேர்ந்த 22 வயதுடைய வாகன சாரதியை கைது செய்து, இன்று வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் கல்வி கற்ற இராசேந்திரம் பிரதீபன் என்னும் மாணவன் கல்வி பொதுத்தராதர சாதராணதரப் பரீட்சையில் 9ஏ பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளார். இது தொடர்பில் குறித்த மாணவன் இன்று கருத்து தெரிவிக்கையில்..
இறுதி யுத்தத்தின் போது(2009) எனது தாயும் மூன்று சகோதரர்களும் படையினரின் எறிகணைத் தாக்குதலினால் உயிரிழந்துள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் என் மனதை பெரிதும் பாதித்திருந்த நிலையில் என் தந்தையின் அரவணைப்பினாலும் அதிக ஊக்கத்தினாலும் இன்று 9A பெறுபேறுகளை பெற்றுள்ளேன்.
தொடர்ந்து கணிதத்துறையில் கல்வியை கற்று ஒரு விமானியாக வருவதே என் எதிர்கால இலட்சியம் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்வி பொதுத்தராதர சாதராணதரப் பரீட்சையில் முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் தோற்றிய 12 மாணவர்களில் இரண்டு மாணவர்கள் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
அத்துடன் 8 மாணவர்கள் சித்தியடைந்து தொடர்ந்து உயர்தரத்தில் கற்பதற்கு தகுதி பெற்று, முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக குறித்த பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
வவுனியா செட்டிகுளம் முகத்தான் குளம் பகுதியில் உள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்த கும்பாபிஷேக நிகழ்வு இன்று (30.03.2018) இடம்பெற்று வருகின்றது.
இன்று குறித்த ஆலயத்தில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மனின் திருவுருவ சிலைக்கு ஆராதனை செய்யும் பொழுது திடீரென அங்கு தோன்றிய நாக சர்ப்பம் அம்மனின் சொருபத்தில் ஏறி ஆராதனை முடியும் மட்டும் காட்சியளித்துள்ளது.
மேலும் ஆராதனை முடிந்தவுடன் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றுவிட்டது. இச்சம்பவத்தை கேள்விப்பட்ட மக்கள் குறித்த அதிசயத்தை காண்பதற்கு கோவிலுக்கு படையெடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது.
இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 2 ஆண்டுகளுக்கு முன்பு, ‘கியூரியாசிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.
செவ்வாய் கிரகத்தில் உள்ள காட்சிகளை படம் பிடித்து அனுப்புவதற்காக, அந்த விண்கலத்தில், ‘மாஸ்ட்கேம்’ என்ற கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ரோவர்’ விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
இந்த படங்களை ஆராயும் நிபுணர்கள் அடிக்கடி பல்வேறு விதமான யூகங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
ஒரு படத்தில், விலங்குகளின் தொடை எலும்புகள் கீழே கிடப்பது போன்று தோன்றுகிறது. படத்தைப் பார்த்த நிபுணர்கள் டைனோசர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து மறைந்து விட்டன. டைனோசருக்கும் முன்பே, செவ்வாய் கிரகத்தில் பெரியவகை விலங்குகள் வாழ்ந்து இருக்கலாம் என்று வேற்றுகிரகவாசிகள் பற்றி ஆராயும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
‘செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கு இதுவே சாட்சி’ என்று ஆன்லைன் பத்திரிகை ஒன்றில் ஒருவர் கட்டுரை எழுதி உள்ளார்.
சமீபத்தில் அனுப்பிய புகைப்படம் ஒன்றில் பாறைகளுக்கு இடையே எகிப்தில் இருப்பதை போன்ற பிரமிடு போன்ற தோற்றமுடைய ஒரு அமைப்பு இருந்து உள்ளது.
இது குறித்து வேற்றுகிரக உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் ஆய்வாளர்கள் கூறும் போது பண்டைய நாகரிகத்தினர் கட்டிட பிரமிடைப்போல அது மிகவும் நேர்த்தியாக கட்டபட்டு உள்ளது. அது ஒளியின் தந்திரமாக தெரியவில்லை ஒரு அறிவார்ந்த கட்டிடமாக உள்ளது. இந்த பிரமிடு கார் அளவில் உள்ளது. ஆனால் பெரிய அமைப்பு முறை செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் இருக்கலாம். இதனால் பண்டைய எகிப்து நாகரிகத்தினர் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்து இருக்க கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். என்ற தகவலை வெளியிட்டனர்.
தற்போது சமீபத்தில் அனுப்பி உள்ள படத்தை ஆராய்ந்த நிபுணர்கள் செவ்வாய்கிரக பாறைகளில் மனித எலும்பு வடிவங்கள் படிந்து இருக்கிறது. அது சிறிய வடிவிலான தலை மற்றும் சிறிய அளவிலான உடல் பகுதி மற்றும் இரண்டு குழந்தைகளின் கைகள் போல் எலும்புகள் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். அதே போன்ற அமைப்புடன் மற்றொரு வடிவமும் காண்படுகிறது. இது பல மீட்டர் நீளம் உள்ளதாக உள்ளது. என கூறி இருந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் அனுப்பி உள்ள படத்தில் செவ்வாய் கிரக மேற்பரப்பில் ஆயிரகணக்கான உயிரினங்கள் மொத்தமாக மேய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்று உள்ளது.
இது குறித்து சதி கோட்பாட்டாளர் நீல் எவன்ஸ் கூறும் போது, இது செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஆதராமாகும். இது செவ்வாய் கிரகத்தில் சுற்றுச்சூழல் ஆற்றலை வளர்க்கும் ஒரு நம்பிக்கையாகும் என்று நான் நம்புகிறேன். என கூறினார்.
இந்த படத்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆராய்ந்தேன், பூமியில் இடங்களில் பறவைகள் பார்வைக் காட்சிகளை அதை ஒப்பிடும்போது, அது வட துருவத்திற்கு அடுத்ததாக இருக்கிறது.
இந்த படங்கள் அனைத்தும் குறைந்த ரிசுலேசன் கொண்டதாகும். இருந்தாலும் இதில் நீங்கள் தெளிவான நீர் கோடுகள் பார்க்க முடியும், ஏரிகள், தாவரங்கள் அல்லது சில வகையான வாழ்க்கை வடிவங்கள் நீர் ஆதாரத்தின் மீது வெளிப்படும் விதமாக இருக்கும்.
நீல் அவரது YouTube சேனலில் டிஸ்க்லோக் ஸ்கிரீன் என்ற பெயரில் அசல் காட்சிகள் வெளியிட்டார்.
விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கிய இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் நடித்திருந்தார்கள்.
மேலும், சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.
இப்படம் வெளியாகும் முன்பே, டீசர், டிரைலர், பாடல்கள், என பல சாதனைகளை படைத்தது. தற்போது இப்படத்திற்கு பிரிட்டன் நாட்டில் பெரிய கவுரவம் ஒன்று கிடைத்துள்ளது.
பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழா 2018க்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த வெளிநாட்டுப் படம் பிரிவில், விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதை தட்டிச்சென்றுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா, ராகவா லாரன்ஸ் ஜோடியாக ‘காஞ்சனா3’ படத்தில் நடித்து வருகிறார். அனிதா உதீப் இயக்கத்தில் ‘90எம்.எல்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த படத்திற்கு சிம்பு இசையமைக்க இருக்கிறார்.
மேலும் ‘களவாணி-2’ படத்தில் விமல் ஜோடியாகவும் நடிக்கிறார். இந்த நிலையில், பாடல் ஆசிரியரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவருமான சினேகன் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் ஓவியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
சினேகன் நாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு ‘பனங்காட்டு நரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் சினேகன் ஜோடியாக ஓவியாவை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.
எனினும் சினேகன் ஜோடியாகவோ அல்லது முக்கிய கதாபாத்திரத்திலோ ஓவியா நடிப்பார் என்றும் கூறப்படுகிறது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேண்டுமென்று சேதப்படுத்தப்பட்ட நாணய நோட்டுக்களை மாற்றும் சேவையை நாளைய தினத்திற்கு (2018.03.31) பின்னரும் தொடர்ந்து முன்னெடுப்பதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
வேண்டுமென்று சேதப்படுத்தப்பட்ட நாணயத்தாள்களை 2018.03.31ஆம் திகதிக்குப் பின்னர் மாற்றிக்கொள்வது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள பாரியளவான கோரிக்கைகளையும் பொதுமக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளையும் கருத்திற்கொண்டு இலங்கை மத்திய வங்கியானது வேண்டுமென்று சேதப்படுத்தப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட மற்றும் உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்களை மாற்றும் சேவையினை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, அத்தகைய நாணயத்தாள்களை இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தில் அல்லது அனுராதபுரம், மாத்தளை, மாத்தறை, திருகோணமலை, நுவரெலியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் அமையப் பெற்றுள்ள பிரதேச அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு அல்லது முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் சேர்த்து பின்வரும் விலாசத்திற்கு அத்தகைய நாணயத்தாள்களை பதிவுத் தபால் மூலம் அனுப்புமாறு இத்தால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.
தொடர்புடைய விண்ணப்பப் படிவத்தினை இலங்கை மத்திய வங்கியின் வெப்தளத்திலிருந்து (www.cbsl.gov.lk), பிரதேச அலுவலகங்களிலிருந்து அல்லது ஏதேனும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிக் கிளையிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், சிறிய புள்ளியொன்றின் அல்லது கோடொன்றின் வடிவில் அடையாளமிடப்பட்டுள்ள நாணயத் தாள்கள் வேண்டுமென்று உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களாக கருத்திற்கொள்ளப்படமாட்டாது என்பதுடன் அத்தகைய நாணயத் தாள்களை கொடுக்கல்வாங்கல்களுக்காக தொடர்ந்தும் பயன்படுத்த முடியும்.
சாதாரணமாகத் தேய்வடைதல், சாதாரணமாக கிழிதல் அல்லது இயற்கை அனர்த்தங்களின் காரணமாக சேதமடைந்த நாணயத்தாள்களை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் பெற்றுக்கொள்ளும் சேவை எவ்விதமாற்றங்களுமின்றி தொடர்ந்தும் இடம்பெறும்.
மேலும், வேண்டுமென்று சேதமாக்கப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட மற்றும்/அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்களை கண்டுபிடிப்பதற்காக நாணயத்தாள் செயன்முறைப்படுத்தல் இயந்திரங்களை அளவுத்திருத்தம் செய்வதற்கு அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், தன்னியக்கக் கூற்றுப் பொறி (ATM) அல்லது வேறு நாணயத்தாள் கையாளுகின்ற இயந்திரங்களிலிருந்து பொதுமக்கள் உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாளொன்றினைப் பெற்றுக்கொள்கின்ற சந்தர்ப்பங்களில் அத்தகைய நாணயத்தாளை அருகிலுள்ள வங்கிக் கிளையில் மாற்றிக்கொள்ளலாம் என்று இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் விவகாரம் பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் இதையே பதிவிட்டவண்ணம் இருக்கிறார்கள்.
நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இருவரும் காதல் வயப்பட்டதும், பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்துகொண்டதும் பழைய கதை. இருவருக்கும் ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டது என்றும் கிசுகிசுத்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் நயன்தாரா பேசும்போது, “எனது வருங்கால கணவருக்கு நன்றி” என்று சொன்ன வார்த்தை சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதன்மூலம் விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதை அவர் உறுதிப்படுத்தி இருப்பதாக கூறப்பட்டது.
கேரளாவில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்க ரகசியமாக நிச்சயதார்த்தம் நடத்தியதாக தகவல் கசிந்துள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகே இருவரும் அமெரிக்காவுக்கு பறந்து ஜாலியாக சுற்றிவிட்டு கேரளா திரும்பி உள்ளனர். அமெரிக்காவில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டனர்.
இந்த படங்கள் குறித்த கேள்விக்கு, “நான் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறேன்” என்று விக்னேஷ் சிவன் பதில் அளித்தார்.
நயன்தாராவுக்கு இப்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, தெலுங்கில் ‘சை நரசிம்ம ரெட்டி’ என்று கைநிறைய படங்கள் இருக்கிறது. அஜித்குமாரின் விசுவாசம் படத்துக்கும் ஒப்பந்தமாகி உள்ளார்.
மறைந்த ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாறு படத்திலும் அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க பேசி வருகின்றனர். அடுத்த சில மாதங்கள் சினிமாவில் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருப்பார் என்றும், இந்த வருடம் இறுதியில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடக்கும் என்றும் இருவருக்கும் நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.
திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கும் முடிவில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
மங்கோலியா நாட்டில் இருந்து சீனாவை தாக்கும் மணற் புயலினால் உருவான காற்று மாசு காரணமாக தலைநகர் பீஜிங் மற்றும் சில மாகாணங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
மங்கோலியாவின் எல்லையோர பகுதியில் உள்ள கோபி பாலைவனப் பகுதியில் இருந்து சீனாவை மணற் புயல் தாக்கும் என சீன வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் இருந்து தொடர்ந்து வீசிய மணற் புயலினால் தலைநகர் பீஜிங் உட்பட சுமார் 15 இலட்சம் சதுர கிலோமீட்டர்கள் அளவுக்கு மணல் மற்றும் தூசினால் ஏற்பட்ட மாசு நிறைந்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.