கிளிநொச்சியில் வீதியில் மயங்கி விழுந்த வர்த்தகர் : கண்டுகொள்ளாத மக்கள்!!

 
கிளிநொச்சி பிரதான வீதி ஓரத்தில் நேற்றிரவு வர்த்தக தொழில் அதிபர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். இவர் மயங்கிக் கிடப்பதை மது மயக்கத்தில் இருப்பதாக கருதிய பாதசாரிகள் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவ்வழியே சென்ற இளைஞன் ஒருவர் இச்சம்பவத்தை கிளிநொச்சி பொலிஸ் தலைமையக பிரதான பரிசோதகரிடம் நேரில் சென்று தெரிவித்துள்ளார்.

இத்தகவல் அறிந்த பொலிஸ் தலைமை அதிகாரி சம்பவ இடத்திற்கு உடனடியாக பொலிசார் இருவரை அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் அங்கு சென்று அவதானிக்கும் போது அவ்வழியே சென்ற பொதுமக்கள் அவ்விடத்தில் குழுமினார்கள் அப்பொழுது குறித்த தொழில் அதிபர் யார் என்பதை அங்கு நின்ற சிலர் அடையாளம் கண்டுள்ளனர்.

சிறிது நேரத்தின் பின் தொழில் அதிபர் மயக்கம் தெளிந்த நிலையில் அவரை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்வதற்கு தொழில் அதிபரின் உறவினர் ஒருவர் பொலிஸரிடம் அனுமதி கேட்டுள்ளார்.

இந்நிலையில் அவரை அழைத்துச் செல்பவரின் பெயர் விபரங்களை பொலிஸார் பதிவுசெய்துள்ள நிலையில் அவர் பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்

இதேவேளை குறித்த சம்பவ தகவலை வழங்கிய இளைஞனுக்கு கிளிநொச்சி பொலிஸ் தலைமைய பிரதான பரிசோதகர் பாராட்டு தெரிவித்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிடுள்ளார்.

வவுனியா மன்னார் வீதியில் விபத்து : இருவர் படுகாயம்!!

 
வவுனியா பட்டானிச்சூர் பாடசாலைக்கு அருகே இன்று (29.04.2017) காலை 8 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த கனரக வாகனத்தினை பட்டானிச்சூர் பாடசாலைக்கு அருகே அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் முந்திச்செல்ல முற்ப்பட்டது.

முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கில் மன்னார் வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கில் மீது கனரக வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திவந்தவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மின்னலுக்கு பின் இடி இடிப்பது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?

மழை பெய்யும் போது அதை ரசிப்பவர்களை விட இடி இடிக்கும் போது அதை கண்டு அஞ்சுபவர்களே அதிகம். ஆனால் அப்படி மின்னல் நிகழும் போது, இடி ஏற்படுவது ஏன்? என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

மின்னல் ஏற்பட்ட பின் இடி இடிப்பது ஏன்?

பூமியில் மழை மற்றும் வெயில் இல்லாமல் திடீரென்று குளிர்ச்சியான காற்று, மேலே எழும்பும். அந்த ஈரமான காற்று மேலே செல்வதற்கு, தனக்கு தேவையான ஈரப்பதத்தை தனக்குள்ளே எடுத்துக் கொள்ளும்.

இதனால் அதிகமாக குளிர்ச்சி அடைந்து அந்த நீர்த்துளிகள் வானத்தில் மேகங்களாக உருவாகின்றது.

இவ்வாறு கீழ் இருந்து மேலே சென்ற நீர்த்துளிகள் ஏற்கனவே வானில் இருக்கும் மேகத்துடன் உராயும் போது, 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் டிகிரி செண்டி கிரேடு வரை வெப்பம் ஏற்படுகிறது.

இந்த வெப்பத்தின் காரணமாக அந்தப் பகுதி விரிவடைந்து பயங்கரமான வெளிச்சம் நிகழும் போது, சத்தம் ஏற்படுகிறது.

இவ்வாறான சந்தர்பத்தில் தோன்றும் ஒளியை மின்னல் என்றும், ஒலியை இடி என்றும் நாம் கூறுகின்றோம்.

சிகிச்சைக்காக எமிரேட்ஸ் செல்லும் 500 கிலோ எடை குண்டு பெண்!!

எகிப்து நாட்டை சேர்ந்தவர் இமான் அகமது, 500 கிலோ எடையுடன் அவதிப்பட்டு வந்த இமான் உடல் எடை குறைப்பு சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை முறைகளின் மூலம் 242 கிலோ எடை குறைந்ததாக மருத்துவர்கள் கூறிவந்த நிலையில், இமானின் சகோதரி சாய்மா சலீம் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

இதையடுத்து மும்பை மருத்துவமனையில் இருந்து வெளியேறி எமிரேட்ஸ் மருத்துவமனைக்கு செல்கிறார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து இமானுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் முப்பாஷல், கார்கோ விமானத்தில் வந்த இமான் உடல் எடையினை அறுவை சிகிச்சை மூலம் 242கிலோவாக குறைத்து தற்போது பிஸினஸ் கிளாஸில் பயணிக்குமாறு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

என்னையும் கொன்றுவிடுங்கள் : தாய், சகோதரியை கொன்ற இளைஞர் கதறல்!!

சென்னையில் தனது அம்மா மற்றும் சகோதரியை கொலை செய்த இளைஞருக்கு பொலிசார் கவுன்சிலிங் கொடுத்து வருகிறார்கள்.

சென்னையில் சைதாபேட்டையை சேர்ந்தவர் ஹேமலதா, இவருக்கு ஜெயலட்சுமி என்ற மகளும், பால முருகன் என்ற மகனும் உள்ளனர். ஹேமலதாவின் கணவர் கடந்த வருடம் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார்.

அப்பாவின் இழப்பை தாங்க முடியாமல் தவித்து வந்துள்ளார் பாலமுருகன். இந்நிலையில், அப்பாவின் முதலாமாண்டு நினைவு தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பாலமுருகனின் மனநிலை மேலும் பாதித்துள்ளது.

இதையடுத்து தனது அம்மா ஹேமலதாவிடம், நாமும் அப்பா சென்ற இடத்துக்கே சென்று விடுவோம் என கூறியுள்ளார்.
அதன் பின்னர் பாலமுருகனை ஹேமலதா சமாதானபடுத்தியுள்ளார். ஆனாலும் சமாதானம் ஆகாத பாலமுருகன் தன் குடும்பத்தினரை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள கேளம்பாக்கம் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அங்கே அவரை பொலிசார் பிடித்துள்ளனர். அப்போது பொலிசாரிடம் பாலமுருகன், தப்பு பண்ணிட்டேன் சார். நானும் சாக வேண்டும். அப்பா, அம்மா, தங்கை என எல்லோரும் இறந்த பின்னர் நான் மட்டும் ஏன் வாழ வேண்டும் என கதறியுள்ளார். இது குறித்து பொலிசார் கூறுகையில், பாலமுருகனை சமாதானப்படுத்தி கவுன்சலிங் கொடுத்தோம்.

இன்னும் அவர் மன அழுத்தத்தில் உள்ளதால் வேறு எந்தவித தவறான முடிவையும் எடுப்பதற்கு முன்பு மேலும் கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

உயிர் காத்த தோழனை தினமும் பார்க்க வரும் பருந்து!!

பருந்தின் உயிரை ஒருவர் காப்பற்றியதையடுத்து அது தினமும் அந்த நபரின் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

தமிழ்நாட்டின் பொள்ளாச்சி அருகில் இருக்கும் கிராமத்தில் வசித்து வருபவர் அனில்குமார். கள் இறக்கும் தொழிலாளரான அனில்குமார் 5 மாதங்களுக்கு முன்னர் கள் பானையை இறக்கி கொண்டிருக்கும் போது ஒரு பருந்து குஞ்சு சிறகு ஒடிந்து காலில் அடிபட்ட நிலையில் பறக்க முடியாமல் திணறியிருக்கிறது

அந்த பருந்தை காப்பாற்றிய அனில்குமார் அதை தன் வீட்டுக்கு அழைத்து சென்று காயங்களை குணமாக்கி 3 மாதங்களுக்கு தன் வீட்டிலே அதை வைத்துள்ளார்.

பின்னர் காயம் குணமாக அந்த பருந்து காட்டுக்குள் பறந்து சென்று விட்டது. அதன் பின்னர் தினமும் காலையில் 7.30 மணியில் இருந்து 8 மணிக்குள் தவறாமல் அனில்குமார் வீட்டுக்கு வந்து, அவரிடம் இரை வாங்கி உன்கிறது.

மேலும் அனில்குமார் வீட்டில் இருக்கும் வரை விளையாடும் பருந்து அவர் வெளியில் சென்ற பின்னர் பறந்து சென்று விடுகிறது.

இதுகுறித்து அனில்குமார் கூறுகையில், என் வீட்டுக்கு வரும் பருந்துக்காகவே மீன், கோழி இறைச்சி, கோழிக் குடல் போன்றவற்றை அதிகாலையில் கடைக்கு சென்று வாங்கிக்கொண்டு வந்து வைத்துவிடுவேன்.

நான் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது அருகிலிருக்கும் மரத்தில் உட்கார்ந்து கொண்டு எனக்காக அது காத்திருக்கும்.

என் வண்டி சத்தம் கேட்டவுடன் என் வீட்டுக்கு பருந்து வந்து விடும் . ஒரு மாதத்துக்கு மேலாக இது நடந்துகொண்டு இருக்கிறது.

என் மீது பருந்து உட்காரும் போது அது எந்தளவு என் மீது பாசம் வைத்துள்ளது என்பதை உணருகிறேன் என அனில்குமார் கூறியுள்ளார்.

இயக்குநரை கொலை செய்ய சதி : மொடலுக்கு 3 ஆண்டுகள் சிறை!!

இயக்குநரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கில் மும்பை மொடல் அழகிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த மொடல் ப்ரீத்தி ஜெயின், இந்தி பட இயக்குநர் மாதூர் பந்தர்கரை கொலை செய்வதற்கு குண்டர்களுக்கு பணம் கொடுத்ததாக அவர் மீது 2005-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

மாதூர் பந்தர்கரை கொலை செய்ய குண்டர்களுக்கு 75,000 ரூபாய் பணம் வழங்கியதாகவும், அவர்கள் பந்தர்கரை கொலை செய்யாததால் ப்ரீத்தி ஜெயின் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.

பணத்தைத் திரும்பத் தராத குண்டர்கள், காவல்துறையில் தெரிவித்ததையடுத்து, ப்ரீத்தி ஜெயின் மீதும் அவரது உதவியாளர்கள் இருவர் மீது காவல்துறை கொலை செய்ய சதி செய்ததாக வழக்குப்பதிவு செய்தது.

இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், மும்பை நீதிமன்றம் ப்ரீத்தி ஜெயின் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

மேலும் ப்ரீத்தி ஜெயினுக்கு 10,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. 15,000 ரூபாய் செலுத்தி ஜாமீனில் செல்லலாம் என்றும் உத்தரவிட்டது. மேலும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஏரியில் படகு கவிழ்ந்து கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் பலி!!

இந்தியாவில் ஏரியில் படகு கவிழ்ந்தது ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் திம்மராஜ் ஏரியிலே இக்கோர விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த 13 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் நீரில் மூழ்கி மாயமான மேலும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது வரை உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

சுற்றுலா சென்றவர்களுக்கு இப்படி ஒரு பரிதாபம் நிகழ்ந்துள்ளது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை!!

கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்து நடத்துனரான கணேசமூர்த்தி கலைச்செல்வன் (34) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது, குடும்பப் பிணக்கே இந்த தற்கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

எனினும் தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருதாக அவர்கள் கூறியுள்ளனர். இதேவேளை, சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மைய நாட்களாக இலங்கையில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முகநூல் பயன்பாடு தொடர்பில் 850 முறைப்பாடுகள்!!

இந்த ஆண்டில் இதுவரையில் முகநூல் பயன்பாடு தொடா்பில் 850 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முகநூல் தொடர்பிலான முறைப்பாடுகளில் 60 வீதமானவை பெண்களினால் செய்யப்பட்டுள்ளதாக பிரிவின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

போலியான கணக்குகளை தயாரித்தல், முகநூலில் படங்களை தரவிறக்கி வேறும் தேவைகளுக்கு பயன்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் முகநூல் தொடர்பில் 2200 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முகநூல் பயன்பாடு தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் 0112-691692 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டாருடன் கோபித்துக்கொண்டு கொழும்புக்கு தனித்து வந்த சிறுவன்!!!

வீட்டாருடன் கோபித்து கொண்டு பேருந்தில் ஏறி கொழும்புக்கு வந்த சிறுவன் ஒருவர் பொலிஸாரினால் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை பகுதியில் அனாதரவாக காணப்பட்ட நிலையில் நேற்று (28.04) பொலிஸாரினால் 11 வயது சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.

மஹியங்கனை, மாபாகடவெவ கேசெல்பொத்த யாய 11 மகா வித்தியாலத்தில் பயிலும் டி.எம். சஜித் விக்ரமசிங்க என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு கொழும்புக்கு வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சிறுவனின் தாய் கூலி வேலைக்கு சென்றுள்ளதுடன் சிறுவன் பாடசாலை முடிந்து பாட்டனாரின் வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 26ஆம் திகதி மாலை சிறுவன் வீட்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாவுடன் காணாமல் போயுள்ளதாக சிறுவனின் தாய் மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, வீட்டில் இருந்து வெளியேறிய சிறுவன் மஹியங்கனை நகரில் செல்போன் கடையொன்றில் 6 ஆயிரத்து 990 ரூபாவுக்கு தொலைபேசி ஒன்றை கொள்வனவு செய்துகொண்டு பேருந்து ஒன்றில் ஏறி கொழும்புக்கு புறப்பட்டு வந்துள்ளார்.

இவ்வாறு கொழும்பு வந்த சிறுவன் கோட்டை பகுதியில் அனாதரவான நிலையில் இருந்த போதே கோட்டை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சேறு பூசப்பட்ட ஆடம்பர ஜீன்ஸ்!!

ஜீன்ஸ் ஆடைகளில் துணி தேய்ந்ததைப் போல், கிழிந்ததைப் போல் இருப்பதெல்லாம் பெஷனாக இருப்பது தெரியும். இப்போது சேறு அப்பியதைப் போன்று காணப்படும் ஜீன்ஸ்களும் அறிமுகமாகியுள்ளன.

ஆமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நோர்ட்ஸ்ட்ரோம் (Nordstrom) எனும் ஆடை வடிவமைப்பு நிறுவனம் இந்த ஜீன்ஸ்களை வடிவமைத்துள்ளது.

இந்த ஜீன்ஸ்களைப் பார்த்தால் அது அடர்த்தியாக சேறு அப்பியதைப் போன்று காணப்படும், ஆனால், அவற்றில் இருப்பது உண்மையான சேறு அல்ல.

போலியான சேறுதான். அதிக விலையுள்ள ஆடம்பர ஜீன்ஸ் இது. இந்த ஆடை அணிந்திருப்பவரைப் பார்த்தால் சேறு நிறைந்த இடத்தில் வேலை செய்துவிட்டு வருபவரைப் போன்று தென்படுவார்.

போர்த்துக்கலில் தயாரிக்கப்பட்ட இந்த ஜீன்ஸ் விலை 425 டொலர்கள் (சுமார் 65,000 இலங்கை ரூபா) என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேற்று ஜீன்ஸ் வடிவமைப்புக்கு சிலர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இது தொழிலாளர்களை மலினப்படுத்தும் நடவடிக்கை என சிலர் விமர்சிக்கின்றனர்.

வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொலிஸார் குவிப்பு!!

 
வவுனியா உதைப்பந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாகவுள்ள இந்திரன் விடுதியில் இன்று (29.04.2017) காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இக் கூட்டத்தினை குழப்பும் விதத்தில் சிலர் ஈடுபட இருப்பதாக வவுனியா நீதிமன்றில் உத்தரவு பெற்று புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளர்.

இதனால் அவ்விடத்தில் சற்று பதட்டநிலை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!!

 
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் (28.04.2017) அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமாரவை சந்தித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்குமாறு பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய மகஜர் ஒன்றை கையளித்தனர்.

மஜரில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள்,

1.எமது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா?

2.உயிருடன் இருந்தால் அவர்கள் எந்த இரகசிய சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்?

3.உயிருடன் இல்லாவிட்டால் அவர்களுக்கு என்ன நடந்தது? யாரால்? எப்படி? கொலை செய்யப்பட்டு எங்கே புதைக்கப்பட்டுள்ளார்கள்? என்பவற்றை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்

4.காணாமல் ஆக்கப்பட்டுள்ள எமது உறவுகள் உயிருடன் இருப்பின் அவர்கள் தத்தமது குடும்பத்தினருடன் இணைந்து வாழ்வதற்கு உடனடியாக வழிவிடுவதோடு, சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்

5. படையினர் நிலை கொண்டுள்ள அனைத்து தமிழ் மக்களின் காணிகளும் உடன் ஒப்படைக்கப்பட வேண்டும்

மகஜரை பெற்றுக்கொண்ட வவுனியா அரசாங்க அதிபர் உடனடியாக இம் மகஜரை ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளவர்களுக்கு நிரந்தரத்தீர்வு!!

 
வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்கள் நெடுங்கேணி சின்ன அடம்பன் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளில் குடியமர மறுத்துவந்தனர்.

நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தினால் புதிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு திறப்புக்கள் வழங்கிவைக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.

எனினும் சின்ன அடம்பன் பகுதியில் குடியமருவதற்கு நலன்புரி நிலையத்திலிருந்த ஒரு பகுதியினர் மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து நேற்று மாலை 5.00 மணியளவில் நலன்புரி நிலையத்திற்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியதுடன் லைக்கா நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட வீடுகளில் வசிக்க முடியாததற்கான காரணத்தினையும் கேட்டறிந்து கொண்டதுடன் அரசாங்க அதிபர், திட்டப்பணிப்பாளர் ஆகியோருடன் தொலைபேசி மூலம் சுமூகமான கலந்துரையாடலை மேற்கொண்டு புளியங்குளம் பரசன்குளம் பகுதியில் லைக்கா நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட வீடுகளில் வசிப்பதற்கு விருப்பம் தெரிவித்த நலன்புரி நிலையத்திலுள்ள மக்கள் குடியமருவதற்கு ஏற்ப்பாடு செய்து கொடுக்கப்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் புளியங்குளம் பகுதியில் சென்று குடியமருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மக்களுக்கு நிரந்தரத்தீர்வினைப் பெற்றுக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா செட்டிகுளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய உற்சவம்!!

வவுனியா செட்டிகுள பிரதேசத்தில் எழில் மிக்க சின்னத்தம்பனை கிராமத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று (29.04.2017) சனிக்கிழமை எழுந்தருளி பிள்ளையார் வைப்பதோடு உள்வீதி வெளிவீதி சுற்றுதல் நகழ்வும் அதனை தொடர்ந்து 3 ஜாம பூஜையும் அன்னதானமும் வழங்கப்படுகின்றது.

இந்நிகழ்வை பக்த அடியார்களுக்கு அறியத்தருகின்றார்கள் ஆலய பரிபாலன சபையினர்

தலைவர்- லோகேஸ்வரன்
செயலாளர்- பரமநாதன்
பொருளாளர்- நவரெத்தினம்