ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலில் 61 பேர் பலி : ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு!!

Afcan

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 61 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இன்று நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தெஹ மஸங் சதுக்கத்தில் சிறுபான்மை ஹசாரா சமூகத்தினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்வழிப்பாதை திட்டத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான ஹசாரா சமூகத்தினர் கலந்துகொண்டனர்.

அமைதியாக போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், கூட்டத்திற்குள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதனால் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தூக்கி வீசப்பட்டு இரத்த வெள்ளத்தில் துடித்தனர்.

ஏராளமானோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலரது கை, கால்கள் சிதைந்தன. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து உயிருக்குப் பயந்து அனைவரும் அங்குமிங்கும் ஓடினர்.

தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. 207 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொது சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாகவும் கூறியுள்ளார்.

தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு சர்வசேத பொது மன்னிப்பு சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘சிலர் கூறுவதுபோல், ஆப்கானிஸ்தானில் சண்டை குறையவில்லை, ஆனால் அதிகரித்துள்ளது. நாட்டில் மனித உரிமைகளுக்கான விளைவுகள் நமக்கெல்லாம் எச்சரிக்கையாக அமைந்துள்ளது’ எனறும் பொது மன்னிப்பு சபை கூறுகிறது.

இந்த படுகொலை ஆழ்ந்த வேதனை அளிப்பதாக அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார். ‘அமைதியாக போராட்டம் நடத்துவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது.

ஆனால், சந்தர்ப்பவாத தீவிரவாதிகள் கூட்டத்திற்குள் ஊடுருவி பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பொதுமக்களை கொன்றுவிட்டனர்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

முச்சக்கர வண்டிகளின் இறக்குமதி மட்டுப்படுத்தப்படுகின்றது!!

Auto

நாட்டில் முச்சக்கர வண்டிகள் 15 இலட்சமாக அதிகரித்துள்ளதால் முச்சக்கர வண்டிகளின் இறக்குமதி மட்டுப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் நிமல்ஸ்ரீபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்களின் நன்மை கருதி அறிமுகப்படுத்தப்படவுள்ள ஆசனப்பட்டியை கட்டாயமாக்குவதற்கான சட்டமூலமானது எதிர்வரும் வாரங்களில் பாராளுமன்றில் முன்வைக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முச்சக்கரவண்டிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பில் தேசிய சபைக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று பத்தரமுல்லயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே போக்குவரத்து அமைச்சர் நிமல்ஸ்ரீபால டீ சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் தற்சமயம் பாவனையிலுள்ள முச்சக்கரவண்டிகளில் பெரும்பாலானவை தொழிநுட்ப கோளாறுகளுடனே பயணிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டில் இரட்டைச் சதமடித்த முதல் இந்திய அணித் தலைவரானார் கோலி!!

Kholi

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2 ஆவது நாளில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. அணித் தலைவர் விராட் கோலி அபாரமாக ஆடி இரட்டைச் சதங்களைப் பெற்றுள்ளார்.

இந்தப் போட்டியில் இரட்டைச் சதமடித்ததன் மூலம் வெளிநாட்டு மண்ணில் இரட்டைச் சதமடித்த முதல் இந்திய அணித் தலைவர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

முன்னதாக 1989 இல் ஒக்லண்டில் நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முகமது அசாரூதின் 192 ஓட்டங்கள் குவித்ததே இந்திய அணித் தலைவர் ஒருவர் வெளிநாட்டில் எடுத்த அதிகபட்ச ஓட்ட சாதனையாக இருந்தது.

இதுதவிர, மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் இரட்டைச் சதம் கண்ட 3 ஆவது வெளிநாட்டு அணித் தலைவர், 27 வயதில் மேற்கிந்தியத் தீவுகளில் இரட்டைச் சதமடித்த இளம் அணித் தலைவர் என்ற பெருமைகளும் கோலிக்குக் கிடைத்துள்ளன.

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா : வவுனியா நெற்றில் நேரடி ஒளிபரப்பு!!

 

 

Banner

வவுனியாவின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான  புதுக்குளம்  மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழா நாளை (24.07.2016) ஞாயிற்றுகிழமை மற்றும் நாளை மறுதினம் (25.07.2016) திங்கட்கிழமை  ஆகிய  இருதினங்களிலும் பாடசாலை அதிபர் த.சுபாஸ்கரன்  தலைமையில் இடம்பெறவுள்ளது.

இன் நிகழ்வுகளில் முதல்நாள்  வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவும் இரண்டாம்நாள் இந்திய துணைத்தூதர்  நடராஜன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

மேற்படி நிகழ்வுகளை வவுனியா நெற் இணையம் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நெற் நேரடி ஒளிபரப்பு என்ற பக்கத்தை சொடுக்குவதன்மூலம் புலம்பெயர் தேசங்களில் உள்ள பாடசாலையின் உறவுகள் பார்வையிடமுடியும் என்பதை தெரிவித்து க்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பை பார்வையிட இங்கு கிளிக் செய்க

 13719537_1770727859815581_9049790489620017822_o    333 444  13738295_1770727889815578_3588436987180249967_o

 

வவுனியாவில் 8 வயதுச் சிறுவன் கிணற்றில் விழுந்து மரணம்!!(2ம் இணைப்பு)

 
வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் கிணற்றிலிருந்து 8வயது சிறுவனின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா மூன்றுமுறிப்பு அரச பேரூந்து தரிப்பிட நிலையத்திற்கு அரகிலுள்ள பகுதியில் வசித்துவந்த அமித் விக்கிரமசிங்க மவிந்து என்ற 8 வயதுடைய தரம் நான்கில் கல்வி கற்று வந்த குறித்த சிறுவன் நேற்று பாடசாலை சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

தாய் கூலிவேலைக்கு சென்றுள்ளார் தந்தை சாரதியாக பணியாற்றுகின்றார். பாடசாலையிலிருந்து பாட்டி வீட்டிற்கு செல்வது வழமை எனினும் சம்பவ தினம் குறித்த சிறுவன் பாட்டி வீட்டிற்கு செல்லாது சிறிது தூரத்திலிருக்கும் தனது வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் நேற்று மாலை 6 மணியளவில் தாய் வீட்டிற்கு வந்தபோதும் குறித்த சிறுவனைக் காணாமல் அயலில் தேடியுள்ளார். எனினும் சிறுவனைக் காணவில்லை.

கணவருக்கு தகவல் வழங்கியதுடன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த பகுதியிலிருந்த தந்தையின் நண்பர்கள் சிலர் கிணற்றுக்குள் தேடுதலை மேற்கொண்டபோது சிறுவன் இறந்த நிலையில் கிணற்றுக்குள் அடியிலிருந்து மீட்கப்பட்டு உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் சிறுவன் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தினை பார்வையிட்டதுடன் விபத்து மரணம் என்று விசாரணையில் தெரியவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணையின் பின்னர் நாளை சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_2681 IMG_2682 IMG_2683 IMG_2684

உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை!!

baby

ஆக்ராவில் ஆறு வயது பெண் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள தாரியா கிராமத்தை சேர்ந்த வினோத் சிங் என்பவர், நேற்றிரவு தனது பெண் குழந்தை தானு பாகலுடன் வீட்டு வராண்டாவில் தூங்கிகொண்டிருந்துள்ளார்.

காலையில் கண்விழித்து பார்த்தபோது, தனது மகளை காணவில்லை, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும், குழந்தை கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஆடு மாடுகளை மேய்க்க சென்ற நபர், குழந்தை ஒன்று புதைக்கப்பட்ட நிலையில், தலை மற்றும் கால் வெளியில் தெரிந்தபடி மயங்கி கிடந்துள்ளதை பார்த்து மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

விரைந்து வந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அக்குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பொலிசில் புகார் அளித்ததையடுத்து, மனநலம் சரியில்லாத நபர் இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டிருக்ககூடும் என்ற சந்தேகத்தில் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 புதுமுக வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை அணி!!

SL Team

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாமில் 5 புதுமுக வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

18 வயதான வேகப்பந்து வீச்சாளர் அசித பெனார்ண்டோ மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான விஷ்வ பெர்னாண்டோ இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன் துடுப்பாட்ட வரிசையில் ரொஷான் சில்வா மற்றும் சகலதுறை ஆட்டக்காரரான தனஞ்சய டி சில்வா இணைத்தக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இடது கை பந்தவீச்சாளர் லக்ஷான் சந்தகன் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இலங்கை டெஸ்ட் குழாமின் முழுவிபரம்

அஞ்சலோ மத்தியுஸ் (அணித்தலைவர்) தினேஸ் சந்திமால் (உப தலைவர்) திமுத் கருணாரத்ன, கவுசல் சில்வா, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, ரொஷான் சில்வா, நுவான் பிரதீப், விஷ்வ பெர்னாண்டோ,அசித் பெர்னாண்டோ, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, லக்ஷான் சந்தகன், சுரங்க லக்மால்

ஜெர்மனி தாக்குதல் : 10 பேரை சுட்டுக்கொன்ற நபர் 18 வயது ஈரானிய-ஜெர்மானியர் எனத் தகவல்!!

German

ஜெர்மனியின் மியூனிச் நகரில் வணிக வளாகத்தில் 10 பேரை சுட்டுக்கொன்ற நபர் 18 வயது ஈரானிய-ஜெர்மானியர் என்றும் அவர் பல ஆண்டுகளாக மியூனிச்சில் வசித்து வந்ததாகவும் ஜெர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய நபர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என கூறப்பட்டிருந்தது. இருப்பினும், பொலிஸார் அவரை சுட்டுக் கொன்றதாகக் கூறியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் 16 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதின்ம வயது அகதி பவரியா மாகாணத்தில் ரயிலில் மக்களை ஒரு கோடாரி மற்றும் கத்தி கொண்டு தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து மியூனிச்சில் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

1

German police officers guard a bar with Eintracht supporters in the city center in Darmstadt, Germany, Saturday, April 30, 2016. The supporters were banned from the German Bundesliga soccer match between Darmstadt 98 and Eintracht Frankfurt due to misbehavior in the first leg match. (AP Photo/Michael Probst)

3

சீனாவில் பலத்த மழை : 80 பேர் உயிரிழப்பு, மில்லியன் கணக்கானோர் வௌியேற்றம்!!

China

சீனாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக 80ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் மில்லியன் கணக்கானவர்கள் தமது வீடுகளை இழந்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

சீனாவின் த்ரீகோர்ஜஸ் அணையின் நீர் மட்டம் 164 மீட்டரை அடைந்துள்ளது. கடுமையான வானிலையால், ஹூபை, லியோனிங், ஹெபெய் மற்றும் ஹெனான் மாகாணங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

விபத்துக்களில் இருந்து உயிர் பிழைக்கும் சுப்பர் மேன்!!(படங்கள்)

11

உலகளாவிய ரீதியில் வாகனப் பாவனை அதிகரித்துள்ள நிலையில், விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உயிரிழப்புக்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், மனிதனின் உடலமைப்பு எவ்வாறு இருந்தால் விபத்துக்களில் இருந்து உயிர் பிழைக்க முடியும் எனும் ஆராய்ச்சியை அவுஸ்திரேலிய நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர்.

அதன் முடிவில், ”சுப்பர் மேன்” எனும் விந்தையான மனித சிற்பத்தை உருவாக்கிக் காட்டியுள்ளார்கள். அதனை அவுஸ்திரேலியாவில், விபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளிலும் பயன்படுத்தி வருகின்றார்கள்.

அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர், கார்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தும் நிபுணர் ஆகியோருடன் சேர்ந்து மெல்போர்ன் நகரைச் சேர்ந்த பிரபல சிற்பக் கலைஞர் பேட்ரிசியா பிசினினி இணைந்து இந்த விந்தையான மனித சிற்பத்தை உருவாக்கியிருக்கின்றனர்.

இந்த செயற்கை மனிதனுக்கு கிரஹாம் என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த செயற்கை மனிதனின் உடலின் ஒவ்வொரு உறுப்பும், எலும்புகளும் வாகன விபத்தின்போது மோதல்களைத் தாங்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தட்டையான முகம், விபத்தின்போது அதிர்வுகளைத் தாங்கும் வகையில் கழுத்து இல்லாத உடலமைப்பு மற்றும் மூளையைக் காக்கும் விதத்தில் பெரிய மண்டை ஓட்டு அமைப்புடன் இந்த சிற்பத்தை உருவாக்கியிருக்கின்றனர்.

வலிமையான தேக அமைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மனிதனின் நெஞ்சுக்கூட்டில் காற்று அறைகளுடன் கூடிய எலும்புகளும் உள்ளன.

இதன்மூலமாக, இதயத்தைப் பாதுகாக்க முடியும் என்பதுடன், மோதல் அதிர்வுகளைக் காற்று அறைகள் உள்வாங்கிக்கொள்ளும் என்கின்றனர். அத்துடன், சிராய்ப்புகளைத் தவிர்க்கும் தடிமனான தோல் அமைப்பும் உள்ளது.

முழங்காலுக்கும், கணுக்காலுக்கும் இடையில் கூடுதலாக ஒரு மூட்டு எலும்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது பாதசாரிகள் விபத்தில் சிக்கும்போது அடிபட்டால் கூட இந்த கூடுதல் மூட்டு எலும்பு தப்பிப்பதற்கு உதவும் என்கின்றனர்.

12 13 14 15 16 17

தலைக்கு பூசும் சாயத்தை குடித்து இலங்கைப் பெண் தற்கொலை!!

Dead

தமிழகத்தின் தாரமங்கலத்தில், தலைக்கு பூசும் சாயம் குடித்த இலங்கை தமிழ் பெண் உயிரிழந்துள்ளார்.

தாரமங்கலம் அடுத்த, பவளத்தானூர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் காளிமுத்து. அவரது மகள் பவித்ரா (17). பிளஸ் 2 முடித்துள்ளார்.

அவரது குடும்பத்தில் உள்ள பிரச்சினையால் மனமுடைந்து காணப்பட்ட அவர், கடந்த, 14ம் திகதி, தலைக்கு பூசும் சாயத்தை குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவித்ரா, நேற்று உயிரிழந்தார்.

தாரமங்கலம் பொலிசார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலில் மோதி சிறுமி பலி!!

Rain

அம்பலன்கொட – கரித்தகந்தை பகுதியில் ரயிலில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனியார் வகுப்புக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் கொழும்பு கோட்டையில் இருந்து – காலி நோக்கி சென்ற ரயிலிலேயே இவர் மோதியுள்ளார்.

மேலும் சம்பவத்தில் பலியானவர் அம்பலன்கொட – கொடஹேன பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமி எனத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒரு கேள்வியால் பத்திரிக்கையாளரிடம் சண்டைப்போட்ட தீபிகா படுகோன்

deepika-padukone-tamasha759

பொலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோன். இவர் தற்போது கொலிவுட் படத்தில் கூட நடித்து வருகிறார்.இவர் பொலிவுட்டில் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான், நேற்று மடாரி படத்தின் ப்ரீமியர் ஷோவிற்கு ரன்வீர் சிங்குடன் வந்தார்.அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் தீபிகாவிடம் கேள்விகளாக கேட்க, அவரும் நிதானமாக பதில் அளித்தார்.

ஆனால், எப்போது உங்களுக்கு திருமணம் என்று கேட்க, என்ன ஆனது என்று தெரியவில்லை உடனே அவரிடம் சண்டைக்கு சென்றுவிட்டார்.இது மிகவும் முக்கியமா? நாட்டில் வேறு பிரச்சனையே இல்லையா? என கோபமாக பேசியுள்ளார்.

காதலியை ஆச்சரியப்படுத்த முயற்சித்து பொலிஸில் சிக்கிய இளைஞன்!!

n00002083-b
முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா அணிந்து விமான நிலையத்தில் நின்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.இளைஞரின் காதலி வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்துள்ளார்.

விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் இடத்தில் இந்த இளைஞர் புர்கா அணிந்து காத்து கொண்டிருந்துள்ளார்.புர்கா அணிந்திருக்கும் நபர் மீது சந்தேகம் கொண்ட பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அவரை கைது செய்து விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் இளைஞரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.வெளிநாட்டில் இருந்து வரும் தனது காதலியை ஆச்சரியப்படுத்துவதற்காக தான் புர்கா அணிந்து வந்ததாக இளைஞர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்

வவுனியாவில் தீயணைப்பு சேவை ஆரம்பம்!!

 
வவுனியா நகரசபையின் தீயணைப்புப் பிரிவு இன்றுமுதல்(23.07.2016) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபையின் செயலாளர் த.தர்மேந்திரா தெரிவித்தார்.

மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நன்கொடையினால் புதிய தீயணைப்பு வாகனம் மற்றும் அம்புலன்ஸ் சேவை நேற்று வெள்ளிக்கிழமை (22.07.2016) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வவுனியா நகரசபைச் செயலாளர் த.தர்மேந்திராவிடம் கையளிக்கப்பட்டது.

உடனடி தீயணைப்பு சேவைக்கு 0242225555 மற்றும் 0243245555 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு நகரசபை செயலாளர் தெரிவித்தார்.

1 13690768_1152635778166768_1088055169892022038_n 13770423_1152635744833438_637995509299797381_n 13782253_1152635798166766_761737133492903152_n

வவுனியா கிடாச்சூரி பாடசாலையை தேசிய மட்டத்திற்கு கொண்டு சென்ற மாணவிக்கு பாராட்டுக்கள்!!

13322065_1724145001179617_5617305843759261423_n-1

வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் இருந்து தேசியமட்டம் சென்று தேசியமட்டத்தில் நடாத்தப்பட்ட பாவோதல் நிகழ்ச்சியில் பங்குபற்றி 1ம் பிரிவில் 1ம் இடத்தை சசிக்குமார் தர்மிதா பெற்றுக்கொண்டார்.

இதன்மூலம் இவர் தனக்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்தது
மட்டுமல்லாது நகரப்புறப் பாடசாலைகளுக்கு சவாலாக கிராமப்புறப் பாடசாலை மாணவர்களினாலும் சாதிக்கமுடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இவருக்கும் இவரை வழிப்படுத்திய அதிபர் ஆசியைகளுக்கும் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா தனது வாழ்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்தி :  வவுனியா கிடாச்சூரி மாணவி தேசிய ரீதியில் தமிழ்த்தினப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை!!

 

12143322_115201452169805_5200397966765582437_n  13332736_1724144981179619_5955991199627274049_n (1) 13332736_1724144981179619_5955991199627274049_n 13606633_1737491633178287_1525147158050961537_n 13615128_1737491599844957_2694091547445523155_nghj IMG_2073 IMG_2075 IMG_2076