இலங்கை செய்திகள்

அவுஸ்திரேலியாவிலிருந்து 1300 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!!

2012ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் இதுவரையில் 1300 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் 1100 பேர் பலவந்தமான முறையில் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருதற்கான காரணிகளை...

கடலில் தத்தளித்த 73 இலங்கையர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்!!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளான படகில் இருந்த 73 பேர் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்று காலை 8 மணியளவில் குறித்த நபர்கள் கரைக்கு அழைத்துவரப்பட்டனர். இதில் 17 சிறுவர்களும்...

இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை அகதித் தாயும் மகளும் விடுதலை!!

சட்டவிரோதமாக பட்கில் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றபோது கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்ணும் அவரது மகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவில் 04.3.2012 அன்று நடைபெற்ற அந்தோணியார் தேவாலய விழாவில் பங்கேற்று திரும்பிய ராமேஸ்வரம் பக்தர்களின்...

பேஸ்புக் விபரீதம் – திருமணமான ஒரே மாதத்தில் தமிழ் பெண் தற்கொலை!!

பேஸ்புக்கில் இளைஞர் ஒருவர் செய்த விளையாட்டு விபரீதமாகி ஒரு பெண்ணை தூக்கில் தொங்கவைத்த சம்பவம் சென்னையில் நடந்தேறியுள்ளது. நாகப்பட்டினம் திருத்துறை பூண்டியைச் சேர்ந்த ரமேஷ்பாபுவுக்கும் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த அனு என்பவருக்கும் கடந்த...

124 ஆண்டுகளின் பின் இலங்கையில் புதிய வகை நுளம்பு கண்டுபிடிப்பு!!

பொரளை வைத்திய பரிசோதனை நிலையம் இலங்கையில் புதிய நுளம்பு இனமொன்றை கண்டுபிடித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் நுளம்பு குறித்து மேற்கொண்ட பரிசோதனையில் இந்த புதிய நுளம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெங்கு நுளம்புகள் பரவிக் கிடக்கும்...

17 வருடங்களுக்குப் பின்னர் ஒன்றுசேர்ந்த இலங்கைத் தமிழர் குடும்பம்..!

17 வருட காலமாக பல்வேறு இன்னல்களையும், பிரிவையும், துயரத்தையும் சந்தித்த ஒரு இலங்கைத் தமிழர் குடும்பம் தற்போது ஒன்று சேர்ந்து சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 1996ம் ஆண்டு சேவலூர் அகதிகள் முகாமில் தங்கியிருந்த தங்களது...

10,000 இலங்கையர்கள் சவுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்..!

சுமார் பத்தாயிரம் இலங்கை பணியாளர்கள் சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 16000 இலங்கை பணியாளர்களில் 6000 பேர் நாடு...

அவுஸ்திரேலியா சென்ற படகு விபத்து – மூன்று இலங்கையர்கள் உட்பட 9 பேர் பலி..!

அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே கடலில் மூழ்கியதில் 5 குழந்தைகள், ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 9 அகதிகள் உயிரிழந்துள்ளனர். இதில் இரு பெண்கள் ஒரு குழந்தை...

மாகாண சபை வேட்பு மனு தாக்கல் இன்று ஆரம்பம்..!

வடக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான வேட்பு மனுத் தாக்கல்கள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன. இன்று முதல் எதிர்வரும் முதலாம் திகதி 12 மணி வரை அரசியல் கட்சிகள் தமது...

லண்டனில் இலங்கைத் தமிழரின் கடை தீக்கிரை!!(படங்கள்)

பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் இலங்கைத் தமிழர் ஒருவரின் பிரபலமான கடையினை இரண்டு முகமூடியணிந்த திருடர்கள் பெற்றோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இலங்கையைச் சேர்ந்த 48 வயதான ஜுட் ஜீவன் என்பவர் புலம்பெயர்ந்து...

அவுஸ்திரேலியா சென்ற படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு..!

இந்தோனேசிய ஜாவா தீவில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வடைந்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று மோசமான வானிலை காரணமாக இந்தோனேஷியாவின் ஜாவா தீவுக்கு அருகில் கடலில்...

யாழில் 13 படைமுகாம்களுக்கு மூடுவிழா! காணிகளும் மீளளிக்க ஏற்பாடு!

யாழ். மாவட்டத்தில் உள்ள 13 இராணுவ முகாம்கள் இந்த வாரம் மூடப்படவுள்ளதாக யாழ். கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் வெளியேறிய முகாம் அமைந்திருந்த காணிகளின் உறுதிப்பத்திரங்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும்...

வட-இலங்கை முதலமைச்சரை தீர்மானிப்பது நான் தான் – டக்ளஸ்!!

இலங்கையில் வட மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கக் கட்சிகளின் கூட்டணி வெற்றிபெற்றால் முதலமைச்சராக வர வேண்டியவரை தீர்மானிக்கும் அதிகாரமும் தார்மீகப் பொறுப்பும் தனக்கே இருப்பதாக ஈபிடிபி கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு...

வடமாகாண சபைக்கான தேர்தலில் ஈ.பி.டி.பி. கட்சிக்கு 20 ஆசனங்கள்!!

வடமாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் ஈபிடிபி கட்சிக்கு 20 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ் பொது நூலகத்தில் அரசாங்க தகவல்...

கடல் அலையின் சீற்றம் அதிகரிக்கக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை..!

தொடரும் தென் மேல் பருவப் பெயர்ச்சி காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கடும் மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒருசில தினங்களுக்கு இதே காலநிலை நீடிப்பதுடன், தென் கடற்பரப்பில்...

யாழில் பேரூந்துக்காக காத்து நின்ற இளம் பெண்ணை முத்தமிட்ட முதியவர்!!

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இளம் பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்டதுடன் அப்பெண்ணை முத்தமிட்ட முதியவரை இங்கு கூடியிருந்தவர்கள் அடி உதை கொடுத்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்....