வவுனியா செய்திகள்

வவுனியா மாணவி தமிழ் தினப் போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடம் : மாணவிக்கு கௌரவிப்பு!!

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற தமிழ் தினப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய மாணவி பா.குமுதினியை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (31.10) இடம்பெற்றது. பாடசாலை அதிபர் திருமதி கே.நந்தகுமார் தலைமையில்...

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவர் கைது!!

வவுனியாவில் கஞ்சா விற்பனை செய்யும் வியாபாரி ஒருவரை பொலிசார் இன்று (31.10) அதிகாலை 3 மணியளவில் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து பியத்தலாவ நோக்கிச் சென்ற...

வவுனியா வர்த்தகர்களுக்கு வழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

வவுனியா வர்த்தகர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று இன்று (31.10.2018) காலை 9.30 மணியளவில் ஓவியா விருந்தினர் விடுதியில் வவுனியா வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் அனுசரணையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வர்த்தகர் சங்கத்தின் வேண்டுகோளின்...

வவுனியாவில் பாடசாலை மாணவனை பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் மேற்கொண்ட அதிபர் கைது!!

வவுனியாவில் பாடசாலை மாணவனை பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் மேற்கொண்ட பாடசாலை அதிபரை நேற்று (30.10.2018) மாலை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வெங்கல...

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் பிரகாசம் சஞ்சிகை வெளியீடும்!!

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும், பிரகாசம் சஞ்சிகை வெளியீடும் இன்று (30.10) நகரசபை கலாச்சார மண்டபத்தில் கல்லூரின் அதிபர் திருமதி பா.கமலேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதன் போது கல்வி, கலை, விளையாட்டுக்களில்...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்விக் கண்காட்சி!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கல்விக் கண்காட்சி இன்று(30.10) காலை 9.30 மணியளவில் பாடசாலையில் ஆரம்பப்பிரிவு அதிபர் திருமதி நா.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆரம்பப்பிரிவு மாணவர்களினால் உருவாக்கப்பட்ட பல ஆக்கங்கள்...

வவுனியாவில் ஜனாதிபதி செயலக ஆலோசனைக்கு அமைவாக சிறுவர்களை பாதுகாப்போம் என்னும் தொனிப்பொருளில் செயலமர்வு!!

ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கு அமைவாக சிறுவர்களை பாதுகாப்போம் என்னும் தொனிப்பொருளில் வவுனியா அல் - இக்பால் மகாவித்தியாலயத்தில் செயலமர்வு ஒன்று இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கு அமைவாக வவுனியா, வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகத்தால்...

வவுனியா மாவட்ட செயலகத்தில் மாபெரும் தொழிற்சந்தை : ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்பு!!

வவுனியா மாவட்ட செயலகத்தில் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் தொழிற்சந்தை நிகழ்வு இன்று (30.10.2018) காலை 8 மணி தொடக்கம் மதியம் 2 மணிவரை இடம்பெற்றது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். ஹனீபா...

வவுனியாவில் யானைகளின் அட்டகாசம் : மூன்று வீடுகள் சேதம்!!

வவுனியா சேமமடு கிராமத்திற்கு அயல் கிராமமான பரசங்குளம் கிராமத்தில் இன்று(30.10) அதிகாலை காட்டு யானைகள் கிராமத்தினுள் புகுந்து 3 வீடுகளை சேதப்படுத்தியதுடன் நெற்செய்கை வயல்களையும், வாழை, தென்னை போன்ற பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது. அயல்கிராமமான இளமருதங்குளம்...

வவுனியா நகரசபையின் அசமந்தப்போக்கினால் தினசரி இரண்டுக்கு மேற்பட்ட விபத்துக்கள்!!

வவுனியா நகரப்பகுதியில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்து வருவதால் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களும் பயணிகளும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக, மாவட்ட செயலகத்திற்கு அருகே, மன்னார் வீதி, புகையிரத நிலைய வீதி,...

வவுனியா வைத்தியசாலையில் பராமரிப்பு இன்மையால் நிர்வாக கட்டிடத்திற்குள் கழிவு நீர் கசிவு : ஊழியர்கள் வெளியேற்றம்!!

வவுனியா பொது வைத்தியசாலையின் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்திற்குள் கழிவு நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த நிர்வாக கட்டிடத்திற்கு மேலே சத்திரசிகிச்சை கூடம் அமைந்துள்ள நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நிர்வாக...

வவுனியாவில் வீட்டிலிருந்து முப்பது கஞ்சா செடிகள் மீட்பு : ஒருவர் கைது!!

வவுனியா குடாகச்சகொடிய பகுதியில் இ்ன்று (29.10.2018) மதியம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது முப்பது கஞ்சா செடிகளை வீட்டில் வளர்த்து வந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மடுகந்தை பொலிஸ் காவலரண்...

வவுனியாவுக்கு தேசிய ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டையில் மூன்று பதங்கங்கள்!!

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட வீர, வீராங்கனைகள் நான்கு வெண்கலப் பதக்கங்களை தனதாக்கி கொண்டுள்ளனர். கொழும்பு சுகதாச விழையாட்டு உள்ளரங்கில் 04.10.2018 நடைபெற்ற தேசிய வூசூ...

வவுனியாவில் மலையக தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக1000 ரூபாவை வழங்க கோரி மனிதச் சங்கிலிப் போராட்டம்!!

தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (29.10.2018) காலை 10 மணியளவில் மனித சங்கிலிப் போராட்டம் இடம்பெற்றது. இலங்கை நாட்டின் மிக முக்கிய பொருளாதாரமாகவும் முதுகெலும்பாகவும்...

வவுனியா தமிழீழ விடுதலை இயக்கத்தின் அமைப்பாளருக்கு ஆவா குழு அச்சுறுத்தல்!!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரான நாகராஜனுக்கு ஆவா குழுவினர் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக வவுனியா மாவட்ட தலைமை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. தமிழீழ விடுதலை இயக்கத்தின்...

வவுனியாவில் ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்களுக்கு விடுமுறை வழங்க கோரிக்கை!!

வவுனியாவிலுள்ள தனியார் வகுப்பு நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்குமாறு வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ். சுஜன் தெரிவித்துள்ளார். நேற்று வவுனியா வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர் நிலையங்களில் பணியாற்றும் இவ்வருடம் தரம் ஐந்து...