திருமணமாகி 4 மாதத்தில் கணவனுக்கு நடந்த விபரீதம் : வசமாக சிக்கிய மனைவி!!

புதுக்கோட்டை..

புதுக்கோட்டை மாவட்டத்தில் கணவனை கொலை செய்து கிணற்றில் வீசிய மனைவியை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள போரம் கிராமத்தில் வசித்து வருபவர் பாண்டித்துரை.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த புது தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 20ஆம் தேதியில் இருந்து பாண்டியனை காணவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் பொலிஸ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த வகையில் நந்தினியை பொலிஸ் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீஸ் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், கணவனை கொன்று கிணற்றில் வீசியதாக நந்தினி கூறியதை கேட்டு பொலிஸ் அதிர்ச்சியடைந்தனர். கடந்த 20ஆம் தேதி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் பாண்டியன்துரை மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த நந்தினி கத்தியை எடுத்து கணவனை குத்தி கொலை செய்துள்ளார். இதனால் செய்த கொலையை யாருக்கும் தெரியாமல் மறைக்க கணவரின் சடலத்தை வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் வீசியுள்ளார்.

பிறகு கணவர் காணவில்லை என்று கூறி நாடகமாடியுள்ளார். இதையடுத்து நந்தினி கூறிய கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நந்தியை பொலிஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை மக்களிடம் இராணுவத் தளபதி விடுக்கும் கோரிக்கை!!

இராணுவத் தளபதி..

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை மக்கள் புரிந்து கொண்டால் மற்றுமொரு பாதிப்பை எதிர்கொள்ள நேரிடாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாடு மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் மேற்கொண்ட அர்ப்பணிப்பு தொடர்பில் நாட்டின் புத்திசாலித்தனமான மக்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நாட்களை நாங்கள் வீட்டில் செலவழித்தபோது பெரும் தியாகங்களை செய்ய வேண்டியிருந்தது என்பதை இலங்கையின் புத்திசாலித்தனமான மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் நாடு திறக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் கொவிட் தொற்றுக்குள்ளாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

மக்கள் நிலைமைகளை புரிந்துக் கொண்டால் நாட்டில் இன்னுமொரு கொவிட் தொற்று ஏற்படாமல் தவிர்க்க முடியும். மக்கள் அவதானமின்றி செயற்பட்டால் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்து விடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கோர விபத்து : வைத்தியசாலைக்கு சென்ற பெண் பரிதாபமாக பலி!!

கொழும்பில்..

கொழும்பில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்தில் படுகாயம் அடைந்த பெண் உயிரிழந்துள்ளார். கஹதுடுவ, ரிலாவல சந்திக்கு அருகில் இடம் கோர விபத்தில் 63 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை இந்த பெண் பாதுகாப்பற்ற முறையில் வீதியை கடக்கும் போது வேகமாக வந்த பேருந்து ஒன்றில் மோதுண்டுள்ளார். அந்த பேருந்து நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையின் ஊழியர்களை ஏற்றி செல்லும் பேருந்து என தெரியவந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற இடத்திலேயே இந்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் மஹரகம கண் வைத்தியசாலைக்கு சென்ற போதே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார். விபத்து தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாலி கட்டிய 21 வயதான மனைவியை 500 ரூபாய்க்கு விற்ற கணவன் : பின்னர் நடந்த விபரீதம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் தாலி கட்டிய மனைவியை ரூ 500க்கு விற்ற கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் தான் இந்த கொடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் அதிகாரி மதன்லால் கட்வர்சா கூறுகையில், 21 வயதான இளம்பெண் எங்களிடம் வந்து ஒரு புகாரை கொடுத்தார். அதில் இரு தினங்களுக்கு முன்னர் இரவு 9 மணிக்கு லக்கி ஹொட்டலுக்கு நானும் என் கணவரும் சென்றோம்.

அப்போது அங்கு வந்த நபர் என் கணவரிடம் ரூ 500 கொடுத்தார். இதையடுத்து என்னை அந்த நபருக்கு விற்றுவிட்டார். பின்னர் அவர் என்னை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று சீரழித்தார் என தெரிவித்துள்ளார்.

புகாரையடுத்து குற்றவாளியான சோனு சர்மாவை பொலிசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் காப்பகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இச்சம்பவத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சகோதரனுக்கு திருமண நிகழ்வு : சடலங்களாக மீட்கப்பட்ட இளம் தம்பதி!!

இளம் தம்பதி..

கம்பஹா, மீரிகம பிரதேசத்தில் இளம் தம்பதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீரிகம, லின்தர பிரதேசத்தில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் 26 வயதுடைய கணவன் மற்றும் 23 வயதுடைய மனைவி என தெரியவந்துள்ளது.

பெண்ணின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்த நிலையில் அவரது உடல் கீழே இறங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதுடன் அருகில் கணவனின் உடல் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுளளனர்.

சடலங்கள் தொங்கிய இடத்தில் இருந்த பத்திரிகையில் “குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள் தம்பி”என கணவனால் எழுதப்பட்டிருந்ததனை அவதானிக்க முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற நிலையில் அவர்களுக்கு 4 வயதில் மகன் ஒருவர் உள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சகோதரனின் திருமணம் நடைபெறுவதால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அங்கு சென்றுள்ள போதிலும் அந்த பெண் மட்டும் வீட்டில் இருந்தார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமணத்திற்கு சென்ற கணவர், தங்களின் 4 வயது மகனை திருமண வீட்டில் விட்டு விட்டு வீடு திரும்பியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த வீட்டில் பிற்பகல் வேளையில் யரோ முனங்குவது போன்று சத்தம் கேட்பதாக பொலிஸாருக்கு அயலவர்கள் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் அம்மம்மாவின் வீட்டிற்கு நித்திரைக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

கூமாங்குளம் பகுதியில்..

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது கூமாங்குளம் பல்லவன் வீதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த இளைஞர் நேற்று இரவு கூமாங்குளத்தில் உள்ள தனது அம்மம்மாவின் வீட்டில் இரவு நித்திரைக்கு சென்றுள்ள நிலையில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். எனினும் மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மீண்டும் பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்துவது குறித்து ஆலோசனை!!

பயணக்கட்டுப்பாடு..

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பயணக்கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டை திறந்த பின்னர், முடிவடையும் சில வாரங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதை நிலைமையில், கோவிட் வைரஸ் தொற்று நோய் மீண்டும் அதிகரித்தால் அது கட்டுப்படுத்த முடியாத மட்டத்திற்கு செல்லலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இறுதியாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதுடன் அது சில தடவைகள் நீடிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்கானது கடந்த முதலாம் திகதி நீக்கப்பட்டதுடன் நாடு வழமை போல் திறக்கப்பட்டது. எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

முடங்கிய பேஸ்புக் : 121.6 பில்லியன் ரூபா வீழ்ச்சி : 5ம் இடத்திற்கு தள்ளப்பட்ட Mark Zuckerberg!!

முடங்கிய பேஸ்புக்..

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன நேற்று இரவு முதல் சுமார் ஆறு மணி நேரங்கள் சர்வதேச ரீதியில் செயலிழந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் வழமைக்கு திரும்பியிருந்தன.

இந்த நிலையில் பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஸக்கர்பேர்க்கின் (Mark Zuckerberg) தனிப்பட்ட சொத்து 7 பில்லியன் அமெரிக்க டொலரினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து அவர் உலக செல்வந்தர்கள் பட்டியலில் ஒரு இடம் பின்தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த பட்டியலில் மார்க் ஸக்கர்பேர்க்கை ஐந்தாவது இடத்திற்கு பின்தள்ளி பில் கேட்ஸ் (Bill Gates) நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் தெரியவருகிறது.

அத்துடன் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 4.9 சதவீதத்தினால் சரிவை எதிர்நோக்கியுள்ளதாகவும் இதனபடி 121.6 பில்லியன் ரூபா வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், சர்வதேச ரீதியில் இந்தத் தடையானது, இதுவரை கண்டிராத மிகப்பெரிய தோல்வி என செயலிகளின் சேவைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து கண்காணிக்கும் டவுன் டிடெக்டர் (Down Detector) தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் விசேட தேவையுடையோருக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்!!

தடுப்பூசி..

வவுனியாவில் 12- 19 வயதிற்குட்பட்ட விசேட தேவையுடையோருக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

அதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்டத்தில் விசேட தேவைக்குட்பட்ட 12 – 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான பைஸர் தடுப்பூசி ஏற்றும் பணி வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று (05.10) முன்னெடுக்கப்பட்டது.

விசேட தேவைக்குட்பட்ட 60 பேருக்கு குறித்த பைஸர் தடுப்பூசிகள் முதல் கட்டமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி வெளியானது!!

பாடசாலைகள்..

பாடசாலைகளை திறப்பது குறித்து மாகாண ஆளுனர்கள் தீர்மானம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதன்படி எதிர்வரும் 21ம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு மாகாண ஆளுனர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

200 மாணவர்களுக்கு குறைந்த ஆரம்ப் பிரிவு பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகள் இவ்வாறு திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறைந்தளவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை முதலில் ஆரம்பிப்பதற்கான இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சருக்கும், மாகாணசபை ஆளுநர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

200இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு வகுப்புகளையும், 100 மாணவர்களை விட குறைவான பாடசாலைகளின் எல்லா வகுப்புகளையும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல அளவுகோல்களின் கீழ் 3,000 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் முடங்கிய பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்!!

உலகளாவிய ரீதியில்..

உலகளாவிய ரீதியில் பேஸ்புக், வட்ஸ்அப். இன்ஸ்டாகிராம் செயலிகள் செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதான இரண்டு செயலிகளும் திடீரென செயலிழந்தமையினால் மில்லியன் கணக்கான பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு ஏற்பட்டமை போன்று பாரிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நெருக்கடி காரணமாக பேஸ்புக் நிறுவனத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியா தோணிக்கல் சிவன் கோவில் தனிமைப்படுத்தப்பட்டது!!

தோணிக்கல் சிவன் கோவில்..

வவுனியா, தோணிக்கல் சிவன் கோவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கோவிட் பரவல் இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில்,

வவுனியா, தோணிக்கல் சிவன் கோவிலில் கோவிட் தொடர்பான சுகாதார வழிகாட்டல் சுற்றறிக்கையை மீறி 50 இற்கும் மேற்பட்டோர் வழிபாடுகளில் ஈடுபட்டதாக சுகாதாரப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்து விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சுகாதார அறிவுறுத்தல்களை மீறி குறித்த ஆலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்றதையடுத்து குறித்த ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டதுடன், ஆலயத்தில் நின்ற 25 பேரினது விபரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இந்திய – இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அருணோதயம் நகரம் பயனாளிகளிடம் கையளிப்பு!!

அருணோதயம் நகரம்..

இந்திய – இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வவுனியா, அருணோதயம் நகரம் குடியிருப்பு தினத்தை முன்னிட்டு பயனாளிகளிடம் இன்று (04.10) கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்க்ஷவின் தொலைநோக்கு கொண்ட வழிகாட்டலின் கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆசிர்வாதத்துடன் இலங்கை – இந்திய நட்புறவை மேலோங்கச் செய்யும் வகையில்,

இந்தியா நிதியுதவி வீடமைப்பு திட்டத்தின் கீழ் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வவுனியா மாவட்டத்தின் வெண்கல செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட மெனிக்பாம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகள் அடங்கிய ‘அருணோதயம்’ நகரானது உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்,

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கு.திலீபன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான காதர் மஸ்தான், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா,

வவுனியா வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர், அரச அதிகாரிகள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் குறித்த வீட்டுத்திட்டமானது உத்தியோகப்பூர்வமாக பயனாளிகளுக்கு கையளித்து வைக்கப்பட்டது.

வவுனியா பிரதேச செயலகத்திற்குள் செல்ல தடுப்பூசி அட்டை கோரிய விவகாரம் : எழுத்து மூலம் விளக்கம் கோரியது மனித உரிமை ஆணைக்குழு!!

பிரதேச செயலகத்திற்குள்..

வவுனியா பிரதேச செயலகத்திற்கு செல்பவர்களிடம் கோவிட் தடுப்பூசி அட்டை கோரிய விடயம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு எழுத்து மூலம் விளக்கம் கோரியுள்ளதாக அதன் வடமாகாண இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று (04.10) ஊடகவியலாளர் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா பிரதேச செயலகத்திற்கு சேவை பெறுவதற்காக சென்ற பொதுமக்களிடம் நுழைவாயிலில் வைத்து தடுப்பூசி அட்டை பரிசோதிக்கப்பட்டதாகவும்,

தடுப்பூசி அட்டை உள்ளவர்களுக்கே பிரதேச செயலகத்திற்குள் சென்று சேவைகளை பெற அனுமதிக்கப்பட்டதுடன், ஏனையவர்களுக்கான சேவைகள் வாயில் வைத்தே வழங்கப்படுவதாக பொது மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் வெளிக் கொண்டு வந்திருந்தனர்.

தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில் எமது கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டையடுத்து இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் அவர்களிடம் எழுத்து மூலம் விளக்கோரி கடிதம் அனுப்பியுள்ளேன்.

அதில் குறித்த தடுப்பூசி அட்டை பரிசோதித்து அனுமதிக்கும் நடைமுறையானது எந்த சுற்று நிருபத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது எனவும், ஏனைய இடங்களில் அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லை. அதற்கான சுற்று நிருபங்கள் எவையும் இருக்கின்றனவா என்ற அடிப்படையில் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

தொலைபேசி மூலமும் பேசியிருந்தேன். ஆனால், பின்னர் குறித்த அறிவிப்பு நீக்கப்பட்டு வழமை போன்று மக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. வவுனியாவின் ஒரு பகுதியில் மட்டும் இவ்வாறான கட்டுப்பாடு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பொதுவான நிலைப்பாடாக வருகின்ற போது அதனை பரிசீலிக்கலாம்.

அத்துடன், மக்களுக்கு சரியான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அவர்களை தடுப்பூசி பெறச் செய்வதே சிறந்த செயற்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

இரகசிய தகவலின் அடிப்படையில் சு.ற்றிவளைக்கப்பட்ட விடுதி : இளம் பெண்கள் கைது!!

கட்டான..

கட்டான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 50 ஏக்கர் பிரதேசத்தில், பா.லியல் தொழில் விடுதியொன்று சு.ற்றிவளைக்கப்பட்டதுடன் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பா.லியல் தொழில் விடுதியை நடத்தி சென்ற இருவர், அதற்கு உடந்தையாக இருந்த நான்கு பெ.ண்கள் உள்ளடங்களாக அறுவரே இவ்வாறு கை.து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு, எப்பாவல, அநுராதபுரம், கொடக்கவெல, பகினிகஹவௌ மற்றும் கந்தர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24, 21, 36, 41, 23 மற்றும் 47 வயதுகளையுடைய அறுவரே இவ்வாறு கை.து செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு கு.ற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து இந்தச் சு.ற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வி.சாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்று கட்டான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு பலியான பிரபல நடிகை!!

சமந்தா ஏபாசிங்க..

பிரபல சிங்கள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகையான சமந்தா ஏபாசிங்க கோவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இன்று மரணடைந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு 54 வயது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒளிப்பரப்பான பிரபல தொலைக்காட்சி நாடகமான அசல்வெசியோ ( அயலவர்கள்) நாடகம் உள்ளிட்ட பல தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் சமந்தா ஏபாசிங்க நடித்துள்ளார்.

நாடக நடிகையான சமந்தா ஏபாசிங்க கோவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இன்று மரணடைந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு 54 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது.