வவுனியாவில் உணவகமொன்றின் சிற்றுண்டிக்குள் (முட்டை ரோல்) பாவனைக்கு ஒவ்வாத வினோத முட்டை நுகர்வோரால் இனங்காணப்பட்டு வவுனியா நகரசபையின் பொதுச் சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
வவுனியா பஜார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகத்துடன் கூடிய சிற்றுண்டிச்சாலை ஒன்றில் நேற்று(09.09) மாலை தேனீர் அருந்தச் சென்ற வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட பரிமாறப்பட்ட சிற்றுண்டிக்குள் இருந்த முட்டை விநோதமாக இருந்துள்ளது.
குறித்த முட்டை றப்பரினாலான முட்டை போன்ற தோற்றத்தில் இருந்ததுடன் அதன் இயல்பும் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தமையை உணர்ந்த வாடிக்கையாளர்கள் வவுனியா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்ததை தொடர்ந்து,
குறித்த சிற்றுண்டிச்சாலைக்கு விரைந்த பரிசோதகர் நீண்ட ஆய்வின் பின்னர் குறித்த சிற்றுண்டிகளை கையகப்படுத்தி மேலதிக நடவடிக்கைகளுக்காக எடுத்து சென்றுள்ளனர்.
குறித்த வாடிக்கையாளர்கள் தாம் உட்கொண்ட சிற்றுண்டியின் உள்ளிருக்கும் முட்டையின் குறைபாட்டை உணவகத்தின் உரிமையாளருக்கு தெரியப்படுத்தியபோதும் அதை பொருட்படுத்தாத உரிமையாளர்,
அவர்களால் வீசப்பட்ட சிற்றுண்டி மற்றும் அவருக்கு பிரித்து காண்பிக்கப்பட்ட சிற்றுண்டிக்கும் பணத்தை அறவிட்டுவிட்டு ஏனைய வாடிக்கையாளர்களுக்கும் பரிமாற முற்பட்டமையை தொடர்ந்தே இது தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு முறையிடப்பட்டுள்ளது.
பேருந்துக்களுக்கான முன்னுரிமை வீதி ஒழுங்கை முறை மீண்டும் அமுல் செய்யப்படவுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இந்த முறை மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பிலும் புறநகர்களிலும் வாகன நெருக்கடியை தவிர்க்கும் வகையில் இந்த முறை கைக்கொள்ளப்படவுள்ளது.
ஏற்கனவே இந்த முறை மேல்மாகாணத்தில் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
MT New Diamond கப்பலில் சீரற்ற வானிலை காரணமாக மீண்டும் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக, இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை மற்றும் இந்திய கரையோர காவல்படை அறிவித்துள்ளது.
கப்பலில் தற்போது எவ்விதமான தீயோ, புகையோ தென்படவில்லை என, இலங்கை விமானப்படை, கடற்படை, இந்திய கரையோர காவல்படை ஆகியன கூட்டாக அறிவித்துள்ளன.
விமானப்படைத் தளபதி வைஸ் மார்ஷல் ரவி ஜயசிங்கவின் ஆலோசனைக்கமைய மேற்கொண்ட விமானப்படை அனர்த்தப் பணியில், குறித்த கப்பலின் தீயணைப்பிற்காக வான் வழியாக விமானத்தின் மூலம்,
4 இலட்சத்து 40 ஆயிரம் லீற்றர் நீர் தெளிக்கப்பட்டுள்ளதோடு, 4,500 கிலோ கிராம் உலர் இரசாயன பொருள் வீசப்பட்டதாக இலங்கை விமானப்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 7 நாட்களாக, இலங்கை விமானப்படையின் பீச் கிங் (Beech king 200) விமானம், MI 17 வகை ஹெலிகொப்டர், Bell 212 வகை ஹெலிகொப்டர் ஒன்று, Y12 விமானம் ஒன்று ஆகியவற்றின் பயன்பாட்டுடன், 100 மணித்தியாலத்திற்கும் அதிக பறப்புக் காலத்தை மேற்கொண்டு, இப்பணிகளில் ஈடுபட்டு வருவதாக, விமானப்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களை எதிர்கொண்டு, தொடர்ந்தும் இப்பணிகளில் இலங்கை விமானப்படை ஈடுபட்டு வருவதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த கப்பலை சங்கமன்கண்டியிலிருந்து, இழுவைக் கப்பல்கள் மூலம் ஆழ்கடல் நோக்கி இழுத்துச் செல்லப்படுவதாக, கடற்படை இன்று காலை அறிவித்திருந்தது.
குறித்த கடல்பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில் இப்பணிகள் இடம்பெற்று வருவதாக கடற்படை அறிவித்துள்ளது.
குறித்த கப்பலில் இருந்து ஒரு கிலோமீற்றர் வரையான கடற்பரப்பில் காணப்பட்ட டீசல் கசிவை, இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான டோனியர் விமானம் மூலம், விசேட இரசாயனத்தைப் பயன்படுத்தி சமனிலைப்படுத்தப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, தேசிய நீரியல்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமைத்துவ (NARA) நிறுவனத்திற்குச் சொந்தமான, கடல் ஆராய்ச்சி கப்பலொன்றும் குறித்த பகுதிக்கு வந்து மேலதிக விசாரணைகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அனர்த்த முகாமைத்துவம் குறித்து விசேட பயிற்சியை பெற்ற, இலங்கை கடற்படையின் குழுவொன்று இன்று குறித்த பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மூவர் தற்போது குறித்த கப்பலில் அது தொடர்பில் க ண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக, கடற்படை அறிவித்துள்ளது.
இலங்கை கடற்படை மற்றும் இந்திய கரையோர காவற்படை ஆகியவற்றிற்கு சொந்தமான கப்பல்கள், இழுவைக் கப்பல்கள் மற்றும் விமானங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளைச் சேர்ந்த மீட்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ குழுக்களின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை அனைவருடன் இணைந்து தொடர்ந்தும் இப்பணிகளில் இலங்கை கடற்படை ஈடுபடும் என, கடற்படை ஊடகப்ப பிரிவு அறிவித்துள்ளது.
ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் இலங்கைக்கான புதிய சாதனையை யுபுன் அபேயகோன் நிலைநாட்டியுள்ளார்.
நேற்று முன்தினம் (08.09) இடம்பெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் குறித்த தூரத்தை10 தசம் ஒன்று – ஆறு வினாடிகளில் பூர்த்தி செய்து இந்தச் சாதனையை புரிந்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்த சாதணை ஹிமாஷ ஏஷான் வசமிருந்தது. அவர் 100 மீற்றர் தூரத்தை 10 தசம் இரண்டு – இரண்டு வினாடிகளில் பூரணப்படுத்தியிருந்தார்.
யுபுன் அபேயகோன இத்தாலியில் தற்போது பயிற்சி பெற்று வருகிறார். இவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல் தோட்டம் பகுதியில் காருடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா – மன்னார் பிரதான வீதியில் சாம்பல் தோட்டம் பகுதியில் இன்று (09.09.2020) இரவு 8.40 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா – மன்னார் பிரதான வீதியில் நெளுக்குளம் பகுதியிலிருந்து பூவரசங்குளம் பகுதியில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் கற்பகபுரம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த காருடன் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காரின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கில் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த செக்கட்டிப்புலவு பகுதியினை சேர்ந்த 26,28,30 வயது மதிக்கத்தக்க மூன்று இளைஞர்களே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்தாலியில் இலங்கையர்கள் இருவருக்கு தலா 377 யூரோ என்ற கணக்கில் 754 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பெறுமதியில் அது ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை விடவும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது.
இத்தாலி, பிரேஷியா நகரத்தில் முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காலும் இருந்த இரண்டு இலங்கையர்களுக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த இலங்கையர்கள் இருவரும் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது வீதி பரிசோதனையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளினால் வாகனம் நிறுத்தப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டது.
அதில் ஒருவர் முகக் கவசம் வைத்திருந்த போதிலும் அதனை உரிய முறையில் அணியாமல் இருந்ததுடன் மற்றைய நபரிடம் முகக் கவசம் இல்லாதமையினாலும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அ மீரகத்தில் வேலை தேடி வந்து பூங்கா ஒன்றில் தங்கும் ப ரிதாப நிலைக்கு த ள்ளப்பட்ட இலங்கையர்களுக்கு தன்னார்வலர்களால் உதவி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துபாய் மாகாணத்தில் அமைந்துள்ள அல் ஹூதைபா பூங்காவில் இருந்தே இருபதுக்கும் அ திகமான இ லங்கையர்கள் பா து கா ப்பான தங்கும் இடங்களுக்கு மா ற்றப்பட்டுள்ளனர்.
துபாய்க்கு வந்து தங்குவதற்கு இ டமின்றி, வேலை கிடைக்காமல் அ வதிக்கு உள்ளாகி, பூங்காவில் தவித்தவர்களுக்கு ச மூகப் ப ணியாளர்கள், இலங்கையின் சஹானா நல அ மைப்பு மற்றும் இலங்கை துணைத் தூ தரகமும் இணைந்து உதவிக்கரம் நீ ட்டியுள்ளதாக தெருய வந்துள்ளது.
இலங்கையில் இருந்து வந்தவர்கள் அனைவருமே விசிட் விசா மூலம் வேலை தேடிவந்துள்ளார்கள் என கூறப்படுகிறது. சமூக நல அமைப்புகள் மூலம் பூங்காவில் தங்கியிருந்தவர்களுக்கு தேவையான உதவிகளை ஏற்பாடு செ ய் துள்ளோம் என்கிறார் துபாய்க்கான இலங்கை துணைத் தூதர் நலிந்தா விஜரெத்ன.
வேலை தேடி வந்தவர்களில் பெரும்பாலானோருக்கு ஊர் திரும்புவதற்குப் பணமில்லை. குளிப்பதற்குக்கூட வசதியின்றி தவித்துள்ளார்கள். மேலும், துபாய் உள்ளிட்ட மா காணங்களில் க டு மை யான வெ ப் பம் வா ட்டிவரும் நிலையில் இவர்கள் பூங்காவில் த ங்கியிருப்பது அப்பகுதி மக்கள் பலரை க வலை அ டைய செ ய் து ள்ளது எனவும், அவர்கள் எடுத்த மு யற்சியே, தற்போது இ லங்கையர்கள் மீ ட் க ப்பட்ட காரணமாக அமைந்த்து எனவும் கூறப்படுகிறது.
ம ட்டுமின்றி அப்பகுதியில்; உள்ள மக்கள் அ ளித்த உ ணவை வைத்து நாட்களைக் க ட த்தி யுள்ளார்கள். தற்போது அவர்கள் அனைவரும் செப்டம்பர் 10 ம் திகதியன்று இ லங்கை செல்வதற்கு விமானப் பயண ஏ ற்பா டுகள் செ ய் ய ப்ப ட் டுள்ளன என இ லங்கை து ணைத் தூதரக வ ட்டாரங்கள் தெ ரிவிக்கின்றன.
இந்தியாவில் 5 வ யது சி று மியை க ல் லைத் தூ க் கி போ ட் டு 11 வ யது சி று வன் கொ லை செ ய் த ச ம் ப வம் ந டந் து ள்ளது. ம த்திய பி ரதேச த்தில் இ ச் சம் ப வம் ந டந்ததாக தெ ரிகிறது, செ ல்போனில் வி ளையாடிய போ து சி று வனை சி று மி வீ ழ் த் தியதாக தெ ரிகிறது.
இ தனால் ஆ த் தி ரம டைந்த சி றுவன், சி றுமியின் த லையில் க ல்லைப் போ ட்டு ந சு க் கியு ள்ளான், இ தில் ர த் த வெ ள் ளத்தில் சி று மி உ யி ரிழ ந்தாள்.
இ தனையடுத்து சி று வ னை கை து செ ய் த பொ லி சா ர், வி சா ரி த்ததில் அ வனது செ ல்லப்பிரா ணியை (எ லி) கொ ன் று வி ட்டதா கவும் அ தனாலேயே அ வளை கொ ன் று விட் டதாகக் கூ றி யுள்ளான். சி றுமியின் உ ட லை க் கை ப் பற் றிய லாசுடியா ந க ர் போ லீ ஸா ர் பி ரே தப் ப ரி சோத னைக்காக அ னுப்பி வை த்தனர்.
வவுனியா வை த்தியசா லையில் சி கிச்சை க்காக அ னுமதிக்கப்பட்ட கு டும்பஸ்தர் ஒருவர் சி கி ச்சை ப லனி ன்றி நேற்று மதியம் உ யி ரிழந்த நி லையில் அவர் மா ர டை ப்பி னால் உ யிரி ழந்துள்ளதாக தெரி யவந்துள்ளது.
மகாறம்பைக்குளம் – புளியடிபகுதியை சேர்ந்த கு றித்த கு டும்பஸ்தர் க டந்த மூ ன்று நா ட்களிற்கு மு ன்பாக நா ய் க டி க் கு இ லக்காகி யுள்ள நி லையில் அ தற்கான த டு ப் பூ சி யை போ டுவதற்காக வவுனியா வை த்தியசா லைக்கு நே ற்றையதி னம் அ வர் செ ன்றுள்ளார்.
அவருக்கு நா ய்க டி த்த தற்கான த டுப்பூ சி நேற்று காலை போடப்பட்ட நிலையில் அதன் பின்னர் வீட்டிற்கு சென்ற நி லையில் அ வருக்கு சுக வீன ம் ஏற்பட்டுள்ளது. இதனால் உ டன டியாக வவுனியா வை த்தியசாலை யில் அ னுமதிக்கப்பட்ட போ தும் சி கி ச்சை ப லனி ன்றி அ வர் உயி ரிழ ந்துள்ளார்.
அவருக்கு த வ றுத லான த டுப்பூ சி யை ஏற்றிய மையாலேயே ம ர ணம் ஏற்பட்டதாக அவரது உ றவினர்கள் கு ற்ற ம் சு மத்திய நி லையில் வவு னியா வை த்தியசா லை யில் கு ழப்பமான நி லமை ஏ ற்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பாக வி சார ணைகளை முன்னெ டுத்த வவுனி யா நகர தி டீர் ம ர ணவிசா ரணை அதிகாரி சிவநாதன் கிசோர் உ யி ரிழ ந்தவரின் ம னை வியிடம் வா க்கு மூ லத்தி னை ப தி வு செ ய்தி ருந்தார்.
அவரது வா க்குமூல த்தில், தவ றான த டுப்பூ சியினை செ லு த்தியமை யாலேயே தனது க ணவர் ம ர ண மடைந்த தாகவும், அவரது மர ணத்தில் ச ந்தே கம் இ ரு ப்பதாகவும் தனது வா க்கு மூ லத்தி னை ப தி வு செய்திருந்தார்.
இத னையடுத்து ச ட லத்தி னை உ டற்கூ ற்று பரி சோ த னை க்கு உ ட்ப டுத்து மாறு ம ர ண வி சா ரணை அதிகாரி சிவ நாதன் கிசோர் உ த்தரவிட்டிருந்தார். ச டல ம் உ ட ற்கூ ற்று ப ரிசோ த னை க்கு உட்படுத்தப்பட்டது.
அதன் அ றி க்கையின் பிர காரம் குறித்த கு டும்பஸ்த ரது ம ரண ம் மா ரடை ப்பினால் ஏற்ப ட்டுள்ளமை உ று தி ப்ப டுத்த ப்பட்டதன் பின்னர் ச டலம் உற வி னர்களிடம் ஒப்ப டைக்க ப்பட்டுள்ளது.
ச ம்ப வத்தி ல் புளியடி ப குதியை சேர்ந்த சிவ பாலன் (வயது 49) என்ற குடும்பஸ்தரே உ யிரிழ ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் இன்று(09.09.2020) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நெளுக்குளம் பகுதியிலிருந்து நகர் நோக்கி மன்னார் வீதி வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வேப்பங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த வேளை அதே திசையில் வந்த மோட்டார் சைக்கிள் முன்பாக சென்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பில் பலத்த மழை பெய்கின்றது. இந்நிலையில் கொழும்பின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நள்ளிரவு 12.30 மணி முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், கடும் காற்றும் வீசுவதாகவும், இதனால் வீதியோரங்களில் உள்ள மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வீதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே கொழும்பு – நவகம்புர பகுதியில் குடியிருப்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள. இதேவேளை, சீரற்ற காலநிலை தொடர்பில் கொழும்பு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய குறைவு ஒன்று ஏற்படவுள்ளதாக காலி மாவட்ட தங்க நகை தொடர்பான சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணக் கைத்தொழிலாளர்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த 14 சதவீத வருமான வரி மற்றும் 15 சதவீத தங்க இறக்குமதி வரிகளை நீக்குவதற்கு அரசாசங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் காலங்களில் தங்கம் ஒரு பவுணின் விலை நூற்றுக்கு 15 வீதத்தில் குறைவடையும் சங்கத்தின் தலைவர் விசும் மாபலகம தெரிவித்துள்ளார்.
இந்த வரி நிவாரணம் காரணமாக தங்க நகை செய்பவர்களுக்கும் நன்மை ஏற்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கொ ரோனா வை ரஸ் பரவல் காரணமாக உலக சந்தையில் தங்கத்திற்கு அதிக கி ராக்கி ஏற்பட்டுள்ள நிலையில், விலையும் தி டீரென அதிகரித்துள்ளது.
இலங்கையில் தற்போது 24 கரட் ஒரு பவுன் தங்கம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தா ய் தி ட்டிய ம ன வி ரக்தி யில் வி ஷ ம் அ ரு ந் தி த வறான மு டிவு எ டுத்ததில் இ ளைஞரொ ருவர் உ யிரி ழந்து ள்ளார். இ ந்த ச ம்பவ த்தில் கோப்பாய் ம த்தி ப குதியைச் சே ர்ந்த குகதாஸ் தினேஷ்(வ யது 18) எ ன்ற இ ளைஞனே உ யிரிழந்து ள்ளார். இ ந்த ச ம்பவம் தொ டர்பில் மே லும் தெ ரியவருவ தாவது,
கோப்பாய் ம த்தி ப குதியில் வ சித்து வ ரும் கு றித்த இ ளைஞன் க டந்த 12ஆ ம் தி க தி மா வா போ தை ப் பொ ரு ளு ட ன் கோ ப்பாய் பொ லிஸாரால் கை து செ ய்யப்ப ட்டுள்ளார். அவ் வாறு கை து செ ய்யப்ப ட்ட இ ளைஞன் பொ லிஸ் பி ணையில் செ ன்று ள்ளார்.
இ ந் நி லையில் வே லைக்கு தொ டர்ச்சி யாக இ ளைஞன் செ ல்லாமல் இ ருந்ததால் தா யார் இ ளைஞனை பே சியுள் ளார். இ தனால் வி ரக்தி அ டைந்த கு றித்த இ ளைஞன் வீ ட்டை வி ட்டு க டந்த 13 ஆ ம் தி க தி வெ ளியேறியு ள்ளார்.
வீ ட்டை வி ட்டு வெ ளியே றிய இ ளைஞன் வீ ட்டுக்கு அ ருகில் உ ள்ள வா ழை தோ ட்டத்தில் வை த்து வி ஷ ம ருந்தியு ள்ளார். இ தைய டுத்து அ வர் உ டனடியாக கோ ப்பாய் வை த்தியசா லையில் அ னுமதிக்க ப்பட்டு அ ன்றைய தி னமே மா லை யா ழ்ப்பாணம் போ தனா வை த்தியசா லையில் அ னுமதிக்கப்ப ட்டுள்ளார்.
இ ந் நி லையில் அ ங்கு சி கிச்சை பெ ற்ற நி லையில் அ வர் இ ன்று சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்து ள்ளார். இ ந்த இ றப்பு தொ டர்பான வி சார ணைகளை யா ழ்ப்பாணம் போ தனா வை த்தியசா லையின் தி டீ ர் ம ர ண வி சாரணை அ திகாரி நமசிவாயம் பிறேம்குமார் மே ற்கொ ண்டார்.
நாட்டில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல வகையான காய்கறிகள் மற்றும் மீன்களின் மொத்த மற்றும் சில்லறை விலை கணிசமாக அதிகரித்துள்ளது உற்பத்தி பகுதிகளிலிருந்து வழங்கல் குறைவாக உள்ளமையே இதற்கான காரணம் என்று பொருளாதார மத்திய மையங்கள் தெரிவித்துள்ளன.
பாதகமான வானிலை காரணமாக ஏற்படும் இடையூறுகள் மரக்கறிகள் மற்றும் மீன்களின் மொத்த மற்றும் சில்லறை விலையில் உயர்வை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
போஞ்சி, கரட், தக்காளி, சிவப்பு வெங்காயம், பெரிய வெங்காயம், உலர்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் மொத்த மற்றும் சில்லறை விலை அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் மீன்களின் மொத்த மற்றும் சில்லறை விலையும் அதிகரித்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. தம்புள்ளை மற்றும் புறக்கோட்டை பொருளாதார மையங்களில் காய்கறி விலை அதிகரித்துள்ளது அதே நேரத்தில் நாரஹன்பிட்டி பொருளாதார மையத்தில் மரக்கறி விலை சற்று குறைந்துள்ளது.
ஒரு கிலோ கரட், 270 ரூபா, போஞ்சி, 170 ரூபா, தக்காளி 140 ரூபா, பெரிய வெங்காயம் 180 ரூபா உலர்ந்த மிளகாய் 450 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டன 1 கிலோ மீன் 220 முதல் 950 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது
“கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது பேலியகொட மற்றும் நாரஹன்பிட்டி சந்தைகளில் பெரும்பாலான மீன் வகைகளின் விலை அதிகரித்துள்ளது,
சில மீன் வகைகள் நீர்கொழும்பு சந்தையில் கிடைக்கவில்லை, சாதகமற்ற வானிலையால், மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதே இதற்கான காரணம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
குவைத் நாட்டில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் கடந்த மாதம் 26ம் திகதி நாடு திரும்பிய 100 பேர் வவுனியா பெரியகாடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அங்கு தங்க வைக்கப்பட்டிருப்பவர்களிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றிருந்தது. பரிசோதனை முடிவுகளின்படி இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரையும் வெலிகந்தை கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பம்பைமடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 157 பேர் நேற்றைய தினம் கொரோனா தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்களது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் இன்று இரவு முதல் மழையுடனான சீரற்ற வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையின் 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம் இதனை கூறியுள்ளது.
இதன்படி, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.