தனக்கு யாரும் அழுத்தங்கள் கொடுக்க வேண்டாம்! ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு!!

அண்மையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பல்வேறு நியமனங்களுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நியமனங்கள் அனைத்தும் எமது நாட்டு இறையான்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை செயற்படுத்துவதற்காக மிகவும் சிறந்த விடயங்களை கருத்திற்கொண்டே வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று நியமிக்கப்பட்டவர்களின் தேசப்பற்று, தகைமைகள் மற்றும் பின்புலம் பரீட்சிக்கப்பட்டு சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் அரசாங்கத்தின் கொள்கையை சிறப்பாக முன்னெடுப்பதற்கு இயலுமான வகையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஆழமாக சிந்தித்து நியமிக்கப்பட்ட நியமனங்களை மாற்றி, பல்வேறு அழுத்தங்களின் காரணத்தினால் வேறு ஒருவரை அதற்காக நியமிப்பதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் தம்மிடம் இல்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதனால் சில நியமனங்களுக்கு எதிராக அதனை மாற்றுமாறு தமக்கு அல்லது அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்க வேண்டாமென ஜனாதிபதி அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.

நியமனங்களுக்கு எ திரான கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை முன்வைப்பதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள கடமைகள், விடயதானங்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு முடியாமல் போகும்.

அத்துடன், சமுதாயத்தில் அந்நபர்கள் பற்றி தப்பான எண்ணங்கள் ஏற்படுவதினால் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களும் வீணடிக்கப்படுமென்பதே தனது கருத்தாகுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

-தமிழ்வின்-

வவுனியா செட்டிகுளம் துட்டுவாகை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நுழைவாயில் திறப்புவிழா!!

ஆலய நுழைவாயில் திறப்புவிழா..

வவுனியா – செட்டிகுளம், துட்டுவாகை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நுழைவாயிலை திறந்து வைக்கும் நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது.

இந் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. பல இலட்ச ரூபாய் செலவில் இந்நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆலய நிர்வாக சபைத்தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மதகுருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர் மற்றும் கிராமமட்ட அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

கண்டி மாவட்ட வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு கோரி வழக்கு!!

கடந்த பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளை மீண்டும் எண்ணி, புதிய முடிவுகளை வெளியிடுமாறு கோரி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் முதலாம் இலக்க சுயேட்சைக்குழுவில் போட்டியிட்ட மஹசோன் படை என்ற அமைப்பின் தலைவர் அமீத் வீரசிங்க இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் பிரதிவாதிகளாக கண்டி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி உட்பட 19 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் போது பல முறைகேடுகள் நடந்துள்ளதாக அமீத் வீரசிங்க தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக தான் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை இழந்ததாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.

இந்த நிலைமைக்கு நானும் பொறுப்பு : சந்திரிகா கவலை!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலைமைக்கு தானும் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலைமை குறித்து வருத்தப்படுகிறேன். சில நேரங்களில், இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு என்ன நேர்ந்தது என்பதற்கும் நானும் பொறுப்பு என்று நினைக்கிறேன்.

அது நான் செய்த காரணத்தினால் அல்ல, நான் செய்யாத காரணத்தினால் தான் அவ்வாறு எண்ணத் தோன்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 69வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நான் ஒன்பது ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடவில்லை. அரசியலுக்கு மீள வரக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தேன்.

எனினும், மறைந்த மாதுலுவே சோபித தேரர் உள்ளிட்ட பல மக்கள் மற்றும் குழுக்களால் கட்டாயப்படுத்தப்பட்ட பின்னர் 2015 இல் தான் மீண்டும் அரசியலுக்கு திரும்பியிருந்தேன்.

அந்த நேரத்தில் நாட்டையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் அழிப்பதை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று நினைத்திருந்தேன்.

தவறு செய்ததற்காக வெளியேற்றப்பட்டவர்களால் நான் ஐக்கிய தேசிய கட்சிக்கு சென்றதற்காக விமர்சிக்கப்பட்டேன். நான் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தேன் என்று பலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

எனினும், 2015 ஆம் ஆண்டில், நாங்கள் ஏராளமான சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பல தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் ஒரு பாரிய கூட்டணியை உருவாக்கினோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணியின் ஒரு பகுதி மட்டுமே.

எவ்வாறாயினும், 2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்றைய அரசாங்கத்தின் திட்டத்தை முற்றிலுமாக அழித்ததாக சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற ஒரு கட்சியை முற்றிலுமாக அழிக்க முடியாது எனவும், சுதந்திர கட்சியை வலுப்படுத்துவதற்காக ஒரு இளைய தலைமுறையை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாகவும்” அவர் மேலும் கூறியுள்ளார்.

-தமிழ்வின்-

திருமணமான முதல் நாள் இரவில் கணவனால் மனைவிக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

திருமணமான முதல் நாள் இரவில்..

தமிழகத்தில் திருமணமான முதல் நாள் இரவிலேயே மனைவி பற்றி கணவன் தவறாக பேசி து ன்புறுத் தியதால் பு துப்பெ ண் த ற் கொ லை செ ய் து கொ ண்டிருக்கிறார்.

வேலூர் மாவட்டத்தின் கோவிந்தரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சந்திரலேகா. பட்டதாரியான இவருக்கும் முனைவர் பட்டம் பெற்ற பாலாஜி என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 23 ஆம் திகதி திருமணம் நடந்தது.

திருமணமான முதலிரவில் மனைவியிடம், நீ கற்புடன் தான் இருக்கிறாயா? இவ்வளவு அழகாக இருக்கும் நீ இதற்கு முன்னர் யாரையும் காதலிக்கவில்லையா? யாருடனும் உறவு வைத்துக்கொண்டதில்லையா பாலாஜி கேட்டுள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத சந்திரலேகா அ திர்ச்சியடைந்துள்ளார். பின்னர் சந்திரலேகாவின் ஆண் நண்பர் ஒருவர் சந்திரலேகா வீட்டிற்கு சென்று அவருக்கும் அவரின் கணவர் பாலாஜிக்கும் திருமண வாழ்த்துகளை கூறி சந்திரலேகாவின் நற்குணங்கள் குறித்து சநதிரலேகாவின் கணவர் பாலாஜியிடம் எடுத்து கூறியுள்ளார்.

சந்திரலேகாவைப்பற்றி உயர்வாக பேசிவிட்டு சென்றபிறகு கணவன்-மனைவிக்கு இடையில் வா க்குவாதம் ஏற்பட்டதோடு சந்திரலேகா மீது பாலாஜிக்கு ச ந்தேகம் அதிகமானது.

இதனால் மனமுடைந்த சந்திரலேகா சில தினங்களுக்கு முன்னர் தனது தாய் வீட்டிற்கு சென்று தன் மனதில் உள்ளதையெல்லாம் கடிதமாக எழுதி வைத்துவிட்டு உடலில் ம ண்ணெ ண்ணய் ஊ ற் றி த ற் கொ லை செ ய் து கொ ண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் சந்திரலேகாவின் கணவர் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வி சாரணை நடத்தி வருகின்றனர்.

 

பரிதாபமாக உ யிரிழந்த 5 மாத கர்ப்பிணிப் பெண்!!

திவ்யா..

இந்தியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் பேருந்தை பிடிக்க முயன்று புடவை சிக்கி உ யிரிழந்த சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பேராவூரில் உள்ள ஆஸ்டர் மிம்ஸ் மருத்துவமனையின் செவிலியராக பணிபுரிந்து வந்தவர் திவ்யா.

26 வயதான இவர் தினமும் காலை மருத்துவமனைக்கு தயாராகி செல்வது வழக்கம். அதன் படி இன்று காலை 7 மணியளவில் மருத்துவமனைக்கு செல்ல தயாராகியுள்ளார். அதன் படி அவர் செல்லும் பேருந்து வந்த போது, பேருந்தை காட்டி நிறுத்தி ஏறும் போது, எதிர்பாரதவிதமாக அவரின் புடவை மாட்டி பேருந்தின் கீழ் விழுந்து விபத்தில் சிக்கினார்.

இதனால் படுகாயமடைந்த அவர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியவந்ததால், பொலிசார் விரைந்து வந்த பார்த்த போது, அவர் 5 மாத கர்ப்பிணி பெண் என்பது தெரியவந்துள்ளது. பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளத்தில் பாதுகாப்பான புகையிரத பாதை அமைக்குமாறு கோரிக்கை!!

பாதுகாப்பான புகையிரத பாதை..

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பற்ற ரயில்கடவை பாதைக்கு பதிலாக அதனை மூடிவிட்டு புதிதாக பாதுகாப்பான புதிய பாதுகாப்புகடவை அமைக்குமாறு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று (02.09.2020) காலை 11 மணியளவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு முன்பாக கவனயீர்ப்பு போ ராட்டம் ஒன்றினை நடத்துவதற்காக கூடியிருந்தனர்.

அவ்விடத்திற்கு விஐயம் மேற்கொண்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புகுழு தலைவருமான குலசிங்கம் திலீபன் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியதுடன் பாதுகாப்பான முறையில் உடனடியாக புதிய பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

குறித்த இடத்திற்கு ரயில்வே திணைக்கள அதிகாரிகள்,ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியா தெற்கு பிரதேசசபை தவிசாளர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் விஐயம் மேற்கொண்டிருந்தனர்.

அதிகாலையில் கண்விழித்து பார்த்த க ணவர்… திருமணமான 10 மாதத்தில் ம னைவி செ ய் த கா ரியம்!!

தேவிகா…

கல்லூரி கட்டணம் செலுத்த காதல் க ணவர் பணம் அளிக்காததால் 20 வயது இ ள ம்பெ ண் த ற் கொ லை செ ய் துகொ ண்ட ச ம் பவ ம் பெ ரு ம் ப ர பர ப்பை ஏ ற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மா வட் டம் வீ ரா ம்பட்டினம் அப்துல் கலாம் நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் 20 வயதான தேவிகா. இவர் கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியார் ம ரு த்துவ கல்லூரியில் லேப் டெக்னீசியன் படிப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் தேவிகா கடந்த 10 மாதங்களுக்கு முன் வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகனை காதலித்து திருமணம் செ ய்து கொ ண்டுள்ளார். தற்போது இந்த கொரோனா ஊரடங்கில், க ணவன் ம னைவி இருவருக்கும் கல்லூரி ப டிப்பு தொடர்பாக அ டி க் க டி ச ண் டை எழுந்துள்ளது.

இந்நிலையில் அ திர் ச்சியளி க்கும் வகையில் நேற்று இரவு அனைவரும் தூ ங்கி கொண்டிருக்கும் சமயத்தில் தேவிகா தூ க் கு மா ட்டி த ற் கொ லை செ ய் துக் கொ ண்டுள் ளார்.

தேவிகாவின் க ணவர் பாலமுருகன் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது தேவிகா தூ க் கி ல் தொ ங் கு வ தை க ண் டு வீட்டில் இருந்தவர்கள் அ தி ர்ச் சி யடைந்து, அரியாங்குப்பம் கா வல் நி லை ய த்தி ற் கு த கவ ல் தெ ரிவி த் து ள்ளனர்.

ச ம் ப வ இடத்திற்கு வந்த கா வ ல் து றையி னர் தேவிகாவின் உ டலை கை ப்ப ற் றி பி ரேத ப ரிசோ த னை க் காக அ ர சு ம ருத் து வ ம னைக்கு அ னு ப்பி வைத்தனர்.

மேலும் இந்த ச ம்ப வ ம் கு றித் து வழ க் கு பதி வு செ ய் த அ ரியா ங் கு ப்பம் போ லீசா ர் நட த் தி ய மு தற் க ட்ட விசா ர ணை யில், தேவிகா தனது கல்லூரி ப டிப் பி ற்கு கட்டணம் செலுத்த தன் கணவரிடம் ப ண ம் கே ட்டு ள் ளார்.

த ற்போ தை ய ஊரடங்கு நீ தி நெ ரு க்க டி யா ல் க ணவ ர் பாலமுருகனால் ப ண ம் கொ டு க்க மு டிய வி ல் லை. சி றிது நா ட்க ள் பொறு க் கு மா ரும் கூ றியு ள் ளார்.

ஆனால் இதனை காரணம் காட்டி க ண வன் ம னை வி இ ரு வரு க் கும் அ டிக் க டி அ டிக் க டி த கரா று ஏ ற்ப ட் டுள்ளது. இதன் கா ர ணமா க ம னமு டை ந் த தேவிகா த ற்கொ லை செ ய் துள் ளது தெரியவந்துள்ளது.

திருமணமான 10 மாதங்களிலேயே தேவிகா எடுத்த இந்த வி பரீ த மு டி வு அப் ப குதி ம க் களை யும், அவரின் கு டு ம்ப த்தாரை யும் பெ ரும் சோ க த் தில் ஆ ழ்த் தி யு ள்ளது.

 

உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு அழைத்துசெல்லாத க ண வன் : கு ழ ந் தையுடன் சேர்ந்து ம னை வி எ டு த்த சோ க மு டிவு!!

பொள்ளாச்சி…

பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம், தாளக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது ம னை வி தாமரைச்செல்வி. கூ லித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆனநிலையில் ஒன்றரை வயதில் ஒருபெ ண் கு ழந் தை இருந்தது.

இதையடுத்து, தாமரைச் செல்வியின் உறவினருக்கு நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி ந டந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்று தனது க ணவரிடம் கூறியுள்ளார் தாமரைச்செல்வி.

அதற்கு கதிரேசன், கொரோனா நோ ய் ப ர வி வரும் நிலையில், குழ ந் தை யுடன் திருமண வரவேற்புக்கு செல்ல வே ண் டாம் என கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, நேற்று மாலை கதிரேசன் அருகே உள்ள கோ ழிப் ப ண்ணைக்கு வேலைக்காக செ ன் று ள்ளார். வேலையை மு டி ந்து இன்று காலை வீடு திரும்பியவர் கதவை த ட் டி யுள்ளார்.

கதவை தி றக் கா ததால், வீட்டின் மேற்கூரையை பி ரி த்து பா ர்த் த போது, அவரது ம னை வி மற்றும் கு ழ ந் தை தூ க்கி ல் தொ ங் கிக் கொ ண் டிருந்தனர்.

இதைக்கண்டு ம ன மு டைந் து போன கதிரேசன் க த றி அ ழு து ள் ளார். த க வல றி ந்து ச ம் பவ இடத்திற்கு விரைந்து செ ன் ற நெ க ம ம் போ லீ சார் தமிழ்ச்செல்வி மற்றும் அவரது ஒன்றரை வயது கு ழ ந் தையின் உ ட லை மீட்டு பொள்ளாச்சி அ ர சு ம ரு த்து வ ம னை க்கு பி ரே த ப ரிசோ த னை க் காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக வ ழ க் குப் ப திவு செ ய் து வி சா ர ணை மே ற் கொண் டு வருகின்றனர். இச்ச ம் ப வம் அ ப் ப கு தியில் பெ ரு ம் சோ க த்தை ஏ ற் ப டு த்தியுள்ளது.

 

மக்களின் காணிகளுக்கு மூன்று மாதங்களுக்கு உறுதிகள் : ஜனாதிபதி தெரிவிப்பு!!

மக்கள் பயன்படுத்தி வரும் பிரச்சினைகள் இல்லாத காணிகளுக்கு மூன்று மாதங்களுக்குள் காணி உறுதிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காணி உறுதிகள் இல்லை என்பது நாடு முழுவதும் பல மாவட்டங்களில் தான் விஜயம் செய்த போது மக்கள் முன்வைத்த பிரதான பிரச்சினை என ஜனாதிபதி கூறியுள்ளார்.

பல பரம்பரைகளாக வாழ்ந்து வந்து, கமத்தொழிலில் ஈடுபட்டு வந்தாலும் காணி உறுதி இல்லாத காரணத்தினால், அவர்கள் கடும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த பிரச்சினையை தீர்க்க நாடு மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு பொருந்தும் வகையில் காணி கொள்கையில் திருத்தங்களை செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற காணி முகாமைத்துவ நடவடிக்கைகள், அரச துறைகள், காணி மற்றும் வளங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

காணி உறுதிகள் இல்லாத காரணத்தினால் மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன் நாட்டின் அபிவிருத்தியும் பாரிய பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளது.

கமத்தொழில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் போது காணி பயன்பாட்டு கொள்கை மிகவும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

கோர விபத்தில் மூன்று பேர் பலி : சாரதி கைது!!

கோர விபத்தில்..

கொழும்பு – மட்டக்குளி, மெதபார பிரதேசத்தில் சுமை ஊர்தியும் இரண்டு முச்சக்கர வண்டிகளும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பெண் உட்பட மூன்று பேர் உ யிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் மற்றும் ஒரு முச்சக்கர வண்டி சாரதி ஆகியோரே சம்பவத்தில் உ யிரிழந்துள்ளனர். வீதியில் பயணித்த சுமை ஊர்தி, எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மட்டக்குளி கதிரான வத்தை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான டிரோன் ரஞ்சித், ஜா-எல கப்புவத்தை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான அஜித் சில்வா மற்றும் மட்டக்குளி பாம் வீதியை சேர்ந்த 34 வயதான அமிதா சுந்தர்ராஜ் ஆகியோரே சம்பவத்தில் உ யிரிழந்துள்ளனர்.

தக்காளியை ஏற்றிய சுமை ஊர்தி முகத்துவாரத்தில் இருந்து மட்டக்குளி பிரதேசத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, எதிரில் வந்த இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் மோதியுள்ளது.

சுமை ஊர்தியில் ஒரு சக்கரத்தில் காற்று வெளியேறி இருந்ததால், சாரதியால் வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சுமை ஊர்தியின் சாரதியை மட்டக்குளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

திடீரென அதிகரித்த பெரிய வெங்காயத்தின் விலை!!

வெங்காயத்தின் விலை..

அண்மையில் இலங்கைச் சந்தையில் பாரிய குறைவாக விற்பனையாகிய வெங்காயத்தின் விலை தற்போது அதிகரித்துள்ளது. அதற்கமைய உள்ளூர் பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமின் விலை 105 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையில் கடந்த வாரங்களில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராம் 50 -55 ரூபாயில் விற்பனையாகியுள்ளது.

மாத்தளை, தம்புள்ளை, சீகிரியா மற்றும் நாவுல ஆகிய பிரதேசங்களில் பிரதேசங்களில் இருந்து பெரிய வெங்காயம் சந்தைக்கு கொண்டுவருவதற்கு ஆரம்பித்ததனை தொடர்ந்து இவ்வாறு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை : சில பகுதிகளுக்கு அபாயம்!!

காலநிலை தொடர்பில்..

நாட்டின் காலநிலை தொடர்பில் வளிண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையை வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல்நிலை காரணமாக அடுத்த 18 மணித்தியாலங்கள் அடைமழை பெய்யும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

சில மாவட்டங்களில் 200 மில்லி மீற்றருக்கும் அதிகமாக அடைமழை பெய்யலாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது 70 – 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் 200 மில்லி மீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், குருணாகலை, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, கேகாலை, கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழை மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்.

இதேவேளை, நாட்டின் 4 மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் நியாகம பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, வலல்லாவிட்ட, இங்கிரிய, அகலவத்த, ஹொரணை மற்றும் புளத்சிங்ஹள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் 2 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையான செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.

காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, நாகொட மற்றும் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடொன்றில் ஏற்பட்ட திடீர் விபத்து : இலங்கை இளைஞன் ப லி!!

இலங்கை இளைஞன்..

மத்திய கிழக்கு நாடொன்றில் ஏற்பட்ட விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் உ யிரிழந்துள்ளார். அபுதாபி நகரத்தில் திடீரென எரிவாயு தொட்டி வெ டித்தமை யினால் விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மாத்தறையை சேர்ந்த 28 வயதான இளைஞன் ஒருவரே உ யிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

அவரது சடலம் அபுதாபியில் உள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்க வேலைக்கு விண்ணப்பிப்போருக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!!

அரசாங்க வேலைக்கு விண்ணப்பிப்போருக்கு..

அரச வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பெறுவதற்காக எந்தவொரு நபருக்கும் இலஞ்சம் வழங்குவதனை தவிர்க்குமாறு ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையில்,

தொழில் பெறுவதற்காக எவரும் பணம் இலஞ்சம் வழங்கினால் அவர்களுக்கு தொழில் வழங்கும் நடவடிக்கை நிராகரிக்கப்படும். குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் தொழில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

அரசாங்கத்தினால் செயலணி ஒன்று அமைத்து வறுமையில் வாடும் குடும்பங்களின் பொருளாதாரத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

மட்டக்களப்பில் கடும் மழை : மின்னல் தாக்கத்தில் 27 பசு மாடுகள் ப லி!!

பசு மாடுகள்..

மட்டக்களப்பு – வாகரை மாவடி ஓடை பகுதியில் மின்னல் தாக்கத்தினால் பண்ணையாளர் ஒருவரின் 27 பசுக்கள் உ யிரிழந்துள்ளன.

மாவடி ஓடை பகுதியில் நேற்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதன்போது மின்னல் தாக்கத்தினால் தமது 27 பசு மாடுகள் இ றந்துள்ளதாக பண்ணையாளரான தம்பி ஐயா ரஞ்சன் தெரிவித்தார்.

இந்த சம்பவம் அந்தக் குடும்பத்தையே சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது. இறந்த பசு மாடுகளின் உ டலங்களை பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி கடற்படையினர் புதைத்தனர்.