வவுனியா ஈச்சங்குளம் தவசியாகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி அதிபர் திரு.ச.நித்தியானந்தம் தலைமையில் 02.02.2017 இன்று நடைபெற்றது.
மேற்படி பாடசாலையின் விளையாட்டு போட்டியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் பிரதமவிருந்தினராககலந்து கொண்டதுடன் பழைய மாணவர்கள் பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோரும் கொண்டனர்.
வவுனியா இ.போ.ச சாலை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு தொடர்பாக கேட்டறிந்து கொள்வதற்கு நேற்று (02.02.2017) இ.போ.ச வவுனியா சாலைக்கு சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான செ. மயூரன், ஜி. ரி. லிங்கநாதன் ஆகியோர் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன்,
இன்று (03.02.2017) வவுனியா வரும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கிணேஸ்வரன், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரன் ஆகியோர் இ.போச சாலை ஊழியர்களைச் சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்துள்ளனர்.
சந்தையில் விற்கப்படும் அனைத்து விதமான உணவு பொருட்களிலும் இரசாயனம் மற்றும் கலப்படங்கள் அதிகமாக கலக்கின்றார்கள்.
அந்த வகையில் சீனாவில் தயாரிக்கப்படும் போலியான ப்ளாஸ்டிக் அரிசிகள் மற்றும் கலப்படம் மிக்க உணவுப் பொருட்களை இந்தியா, வியட்நாம், சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.
இது போன்ற போலியான அரிசிகள் தாவரம் மற்றும் மரங்களில் இருந்து, கிடைக்கும் ஒட்டும் தன்மைக் கொண்ட ஒருவகை ஆர்கானிக் பிசின் மூலமும், உருளைக்கிழங்கை தொழிற்சாலைகளில் இருந்து தயாராகும் ரெசினையும் கலந்து தாயாரிக்கின்றார்கள்.
எனவே இப்படி தயாரிக்கப்படும் ப்ளாஸ்டிக் அரிசிகள் இயற்கையான அரிகளோடு கலக்கும் போது, அதை நம்மால் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது.
இதை அறியாமல் ப்ளாஸ்டிக் அரிசியை சமைத்து சாப்பிடும் போது, நமது உடம்பின் ஜீரண உறுப்புகளின் அனைத்து செயல்பாடுகளும் கடுமையான பாதிப்புகளை அடையச் செய்கிறது.
இது குறித்து, சிங்கப்பூரின் விவசாய மற்றும் கால்நடை உணவு அதிகார மையம் கூறியதாவது, இறக்குமதி செய்யப்படும் அரிசி மற்றும் உணவுகள் பரிசோத்த பின்னரே பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது.
இது வரையில் செய்த சோதனையின் மூலம் ப்ளாஸ்டிக் அரிசிகள் ஏதும் சிக்கவில்லை. எனினும் நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றோம் என்று கூறியுள்ளார்.
ஆனால் இதுவரை சீனாவின் உற்பத்தி செய்யப்படும் ப்ளாஸ்டிக் அரிசிகளின் விற்பனைகள் ஆதார பூர்வமாக சிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் நாம் சமைக்கும் போது, அது ப்ளாஸ்டிக் அரிசியாக இருந்தால், அது அதிக வெப்பம் காரணமாக விறைப்பாக கடிமடைந்துக் காணப்படுவதுடன், தண்ணீரில் போடும் போது, மேல் பகுதியின் மிதந்தவாறு இருக்கும்.
எனவே மக்கள் சமைக்கும் போது, மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னணி நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் தமது வருவாயை காலாண்டு அடிப்படையில் வெளியிடுவது வழக்கமாகும். அதேபோன்று தாம் விற்பனை செய்த பொருட்களின் எண்ணிக்கையை அறிக்கைப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளன.
இதே போன்று அப்பிள் நிறுவனம் கடந்த வருடத்தின் நான்காம் காலாண்டில் விற்பனை செய்த ஐபோன்களின் எண்ணிக்கை தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி சுமார் 78.3 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது 2015ம் வருடத்தின் நான்காம் காலாண்டுப் பகுதியில் விற்பனை செய்ததை விட சற்று அதிகமாகும்.
இதேவேளை சாம்சுங் நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் அப்பிள் நிறுவனம் முன்னணியில் திகழ்கின்றது.
காரணம் 2015ம் ஆண்டில் இதே காலாண்டுப் பகுதியில் 81.3 மில்லியன் ஸ்மார்ட் கைப்பேசிகளை விற்பனை செய்திருந்த சாம்சுங் நிறுவனம், 2016ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் 77.5 மில்லியன் கைப்பேசிகளையே விற்பனை செய்துள்ளது.
இது அப்பிள் நிறுவனம் 2016ம் ஆண்டு 4ம் காலாண்டில் விற்பனை செய்த கைப்பேசிகளின் எண்ணிக்கையிலும் குறைவாகும்.
அத்துடன் சம்சுங் நிறுவனத்தின் விற்பனையும் 2015ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016ம் ஆண்டு வீழ்ச்சியடைந்துள்ளது.
வங்கதேசத்தில் எட்டு வயது சிறுவன் ஒருவன் அரிய வகை தோல் வியாதியால் உடல் முழுவதும் கல் போன்று மாறிவரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்தவன் Mehendi Hassan (8) . இச்சிறுவனுக்கு அரிய வகை தோல்வியாதி ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சிறுவனின் உடல்களில் உள்ள தோல்களில் தடித்த செதில் போன்றும், மணல்களில் இருக்கும் கற்களை போன்று காணப்படுகிறது.
இந்த வகை நோய் தாக்கத்தினால் அச்சிறுவன் பெரிய வலியை தாங்கி வருவதாகவும், இதனால் அவன் துடி துடித்து போவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சிறுவனின் தாயார் Jahanara Begum கூறுகையில், தன்னுடைய மகனை மற்ற குழந்தைகள் நிராகரிக்கின்றனர். இதற்கு காரணம் தன் மகனுக்கு இருக்கும் இந்த நோய் அவர்களுக்கு வந்துவிடுமோ என்று அச்சப்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.
இவன் எட்டு வருடங்களாக தங்கள் வீட்டை விட்டு அதிக அளவு வெளியே போவதில்லை என்றும் தன் மகன் வெளியே சென்றால் மக்கள் அனைவரும் ஒரு வித அச்சத்துடனே பார்க்கின்றனர் என்று மனம் உருகி கூறியுள்ளார்.
மேலும் இந்த ஊரில் உள்ள யாருக்கும் தன் மகனை பிடிக்காது என்றும் தன் மகன் முன்னால் சாப்பிடக் கூடாது என்று கூறுவார்கள் எனவும் கூறியுள்ளார்.
இந்த நோயினால் வலி தாங்க முடியாமல் தினந்தோறும் அழுவான் என்றும், இதுவே அவனுடைய அழிவுக்கு காரணமாகிவிடுமோ என்ற அச்சம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இவன் பிறந்து 12 நாட்கள் இருந்த போது இது போன்று சிறிய அளவில் வந்ததாகவும், இதை தானும் தன் கணவரும் கொசுக்கடியாக இருக்கும் என்று அஜாக்கிரதையாக இருந்துவிட்டதாக கண் கலங்கினார்.
அதன் பின்னர் தற்போது இது விஸ்வரூபம் எடுத்துள்ளது, தாங்களும் பல மருத்துவர்களிடம் சென்று விட்டதாகவும், இது சரியாவது போல் தெரியவில்லை என கூறியுள்ளார்.
தன் கணவர் ஒரு வேன் டிரைவர் என்றும் தங்கள் அன்றாட வாழ்விற்கே அவருடைய சம்பாத்தியம் சரியாகிவிடும் எனவும் அதில் இவனுக்கு வேறு ஒரு தடவை மருத்துவமனை சென்றால் மருத்துவச் செலவும் (£10) ஆகும் என கூறியுள்ளார்.
இதனால் கடந்த ஒரு வருடமாக எந்த மருத்துவரிடமும் தாங்கள் அழைத்துச் செல்லவில்லை. இதனால் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், யாரேனும் உதவினால் நன்றாக இருக்கும், அதுமட்டுமின்றி அரசாங்கமும் உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.
சிம்பாப்வேயில் இளம்பெண் ஒருவருக்கு தவளைப் போன்ற ஒரு உயிரினம் பிறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிம்பாப்வேயின் Gokwe பகுதியைச் சேர்ந்தவர் Precious Nyathi(36). இவர் அங்குள்ள பகுதியில் தொழிலாளராக வேலை செய்துள்ளார். மேலும் இவர் கடந்த எட்டு மாதங்களாக கர்ப்பமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு திடீரென்று குழந்தை பிறந்துள்ளது. அது தவளைப் போன்ற உயிரினம் போல் இருந்துள்ளது. இதனால் கிராம மக்கள் அதை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அது இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவரது கணவர் Nomore கூறுகையில், தன் வீடு முழுவது கிராம மக்கள் சூழ்ந்திருந்தனர். அவர்களை எல்லாம் தாண்டி தன் வீட்டிற்குள் சென்ற போது தனக்கு அதிர்ச்சி காத்திருந்தது எனவும், ஏனெனில் தன் மனைவிக்கு பிறந்திருந்தது குழந்தை இல்லை தவளை போன்ற உயிரினம். இதனால் தான் பெரியதொரு சாபத்திற்கு உள்ளானேன் என்று கூறியுள்ளார்.
அங்கிருந்த கிராம தலைவர்கள் அனைவரும் இதை எரித்து விட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் ஒரு பேப்பரில் வைத்து எரித்துள்ளனர்.
மேலும் இது குறித்து அப்பெண் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை தரப்பில் எந்த ஒரு தெளிவான விளக்கமும் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தோனிஷியாவில் காதலனுடன் சேர்ந்து உறவு வைத்துக் கொண்ட காதலிக்கு பொது மக்கள் முன்னிலையில் 26 சவுக்கடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தோனிசியாவின் Banda Aceh பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் அவருடைய காதலரும் திருமணத்திற்கு முன்னர் உறவு வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்தோனிசியாவில் Sharia law பின்பற்றப்பட்டு வருகிறது. ஷரியா சட்டம் பின்பற்றப்படுவதால் அதிக கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆகாத இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் செல்லக் கூட செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இப்பெண் இஸ்லாமிய விதிகளை மீறியதால், பலர் முன்னிலையில் அவருக்கு 26 சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. தண்டனையின்போது அப்பெண் உடல் முழுவது உடைகளை உடுத்திக் கொண்டு ஒரு மேடை மீது பலர் முன்னிலையில் முன்னிறுத்தப்பட்டார்.
அவருக்கு சவுக்கடி கொடுக்கும் நபர் தொடர்ந்து சவுக்கடி கொடுத்துக் கொண்டிருந்த போது, வலி தாங்கமுடியாமல் அப்பெண் துடித்து கதறியது, மனதை உருகவைத்தது.
அப்பெண் கிழே விழுந்தும், தண்டனைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்ட பின்னரே அவர் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இதே போன்று தான் இவருடைய காதலருக்கும் இதே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பராக் ஒபாமா மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக வேண்டும் என்று அமெரிக்க மக்களிடையே நடத்திய கருத்துக்கணிப்பில் 52 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இவர் பொறுப்பேற்று 13 நாட்களை கடந்துள்ள நிலையில், அவரின் செயல்பாடுகள் பலருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை.
இதனால் ஜனாதிபதியான பின்பும் டிரம்பிற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் அமெரிக்காவிற்கு யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
இதற்கு காரணம் டிரம்ப் மீது எழுந்துள்ள அதிரடி குற்றச்சாட்டுக்கள். அண்மையில் கூட 500,000 மேலானோர் மிகப்பெரிய குற்றச்சாட்டுகளை டிரம்ப் மீது எழுப்பினர். இது டிரம்பிற்கு பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதுமட்டுமின்றி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்களின் வாக்குகளை டிரம்ப் குறைவாகவே பெற்றிருந்தார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்க மக்களில் 53 சதவீதம் பேர் பராக் ஒபாமாவே மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக வரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக டிரம்ப் 43 சதவீதமும் தெரிவித்துள்ளனர்.
மேலும் 35 சதவீதம் பேர் கடந்த வாரம் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் அது தற்போது 40 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த கருத்துக் கணிப்பு விவகாரம் டிரம்புக்கு தெரிந்திருந்தால் பெரிதும் அதிர்ச்சிகுள்ளாவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும் டிரம்ப் அண்மையில் அறிவித்த இஸ்லாமியர்கள் தடை விவகாரத்தில் வெறும் 26 சதவீதமானோர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். 48 சதவீதத்திற்கு மேலானோர் டிரம்பின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்று கூறப்பட்டது.
ஆனால், அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் டிரம்பிற்கு எதிரான போராட்டங்களுக்கெல்லாம் மூல காரணம் ஹில்லாரி கிளிண்டனின் ஆதரவாளரும் செல்வந்தருமான ஜார்ஜ் சாரஸ் என டிரம்ப் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலில் கச்சா எண்ணெய் கலந்து மிகப்பெரும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான கடல் வாழ் உயரினங்கள் செத்து மிதக்கும் நிலையில் விலங்குகள் நலத்திற்கு குரல் கொடுக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் பீட்டா எங்கே என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த மாதம் 28ம் திகதி சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எண்ணெய் கப்பலில் இருந்த 40 டன் கச்சா எண்ணெய் கடலில் கசிந்து கடற்பரப்பு முழுதும் பரவியது.
தற்போது எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை எண்ணெய் படலம் பரவி கடல் மாசுபட்டுள்ளது. இயந்திரம் கொண்டு சுத்தம் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால் கடலோர காவல் படையினர், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது பக்கெட் கொண்டு கச்சா எண்ணெய்யை சுத்தம் செய்து வருவதால் 7 நாட்கள் ஆகியும் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் மீன்பிடி தொழிலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
7 நாட்கள் ஆகியும் எந்த அரசியல் கட்சியினரும் கடலை சுத்தம் செய்ய முன்வரவில்லை. தூய்மை இந்தியா திட்டம் என்று சொல்லும் மத்திய மோடி அரசு, சமூக தொண்டாற்றும் உயரிய அமைப்பு என சொல்லிக்கொள்ளும் ஆர்எஸ்எஸ் ஆகியன அந்த இடத்திற்கே வரவில்லை.
விபத்து நடந்த பகுதியை பார்வையிட்ட மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூட தனது கட்சியினரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்படி கூறவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
திமுக, அதிமுக ஆகிய பழமையான கட்சிகளும் இதுவரை சுத்தம் செய்வது குறித்து மவுனம் காக்கின்றன. கச்சா எண்ணெய் படலத்தில் சிக்கி ஏராளமான ஆமைகள், நண்டுகள், மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளன.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்று மல்லுக்கட்டிய பீட்டா அமைப்பினர் எங்கே போனார்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழரின் கலாச்சாரத்தை முடக்க அத்தனை முனைப்புடன் இருந்த பீட்டா அமைப்பு இப்போது உயிரினங்கள் சாகும் போது எங்கே சென்றார்கள் என்றும் பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர்.
இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விளங்கியவர் குமார் சங்ககார. இவர் இலங்கை அணி விளையாடும் மூன்று வித போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் தொடர்களில் பங்குபெற்று வருகிறார்.
இந்நிலையில் சங்ககாரவிடம் பந்துவீச்சாளர்கள் குறித்து கேள்வி வைக்கப்பட்டுள்ளது. அவர் கூறுகையில், தான் சந்தித்ததிலே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வசிம் அக்ரமின் பந்துவீச்சு தான் அபாயகரமாக இருந்தது.
அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது கடினம் என்றும் வித்தியாசமாக வீசுவார் என்று கூறியுள்ளார். அவரிடம் உலகில் உள்ள எந்த துடுப்பாட்டக்காரர்களை பற்றிக் கேட்டால் சட்டென்று விடை வரும் என்றும் அவர் ஒரு கிரிக்கெட் மேதை என புகழாரம் சூட்டியுள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சேன் வோன் பந்து வீச்சை எதிர் கொள்வது கடினம் என்றும் அதைத் தொடர்ந்து இந்திய வீரர் ஷகிர்கான் மற்றும் இங்கிலாந்து வீரர் கிரீம் சுவானின் பந்து வீச்சுகளை தான் எதிர் கொள்வதற்கு சிரமப்பட்டதாக கூறியுள்ளார்.
ஒரு வகையில் தான் அதிர்ஷ்டகாரன், எனென்றால் தலை சிறந்த பந்துவீச்சாளர்களான முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸ் தங்கள் அணியில் இருந்துவிட்டனர். இல்லையென்றால் கடினம் தான் என கூறியுள்ளார்.
போலீசின் காட்டுமிராண்டித்தனத் தாக்குதலால், மெரினா சுற்று வட்டார அப்பாவிகள் அதிர்ச்சியிலிருந்தும் காயங்களின் வலியிலிருந்தும் இன்னும் மீளமுடியாமல் இருக்கிறார்கள்.
ஐஸ்அவுஸ் பகுதி வாத்தியார் சின்னையா தெரு, மெக்கானிக் மகேந்திரன்,
அன்னைக்கு கலவரமா இருந்திச்சி…. கடைய மூடிட்டு என்னோட அக்காவைக் கூட்டிட்டுவர வண்டில போனப்போ, போலீஸ்காரங்க வண்டிய லத்தியால அடிச்சாங்க. கீழ விழுந்த என்னை, பத்து போலீஸ்காரங்க சேந்து அடிச்சாங்க. கால் உடைஞ்சு போச்சு. எப்படியும் கால் சரியாகி, எலும்பு கூடுறதுக்கு மூணு மாசம் ஆகும். அதுவரைக்கும் என் குடும்பத்துக்கு யார் சோறு போடுவா?” என வேதனையைக் கொட்டினார்.
நடுக்குப்பம் நான்காவது தெருவைச் சேர்ந்த மணிவாசகம்மாள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டு விழுந்ததில், அவருக்கு தோல் உரிந்து, ஒரு வாரமாக மூச்சுத் திணறலுடன் மருத்துவமனையில் இருந்திருக்கிறார்.
மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம், ரூதர்புரம் தினகரன்,
என் மகன் கிருபாகரன் 2 மாணவன். அவன் போராட்டத்திலே இல்லை. சும்மா இருந்த பையனைப் பிடிச்சிட்டுப்போன போலீஸார், சிறையில் அடைச்சிட்டாங்க. படிக்கிற பையனோட வாழ்க்கையே போச்சு. ஸ்டேசன்ல வச்சு போலீஸ் அடிச்சதுல அவனோட கை உடைஞ்சுபோச்சு. ஜாமீன் எடுக்க பத்தாயிரம் ரூபாயும், இரண்டு ஆர்.சி. புக்கும் வேணுமாம். அப்போதான் ஜாமீன் வாங்க முடியுமாம் என்றார் வருத்தமாக.
அதே பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள்,
போலீஸ்காரங்க சுத்திச் சுத்தி வந்து வீட்டுக் கதவை ஒடைச்சி வீட்ல சும்மா இருக்கிற ஆம்பளப் பசங்கள புடிக்கிறதால, பயந்து போன என்னோட மூத்த மகன் சக்திவேலு அவங்க பாட்டி ஊருக்குத் தப்பிச்சி ஆட்டோவுல போனப்போ எதிரே வந்த வேன் மோதி, செத்துப்போயிட்டான். எம்புள்ளைக்கு 26 வயசு. இன்னும் மூணு மாசத்துல கல்யாணம்பண்ணிப் பார்க்கிறதுக்குள்ள போலீஸ் அராஜகத் துல இல்லாமலே போயிட்டானேப்பா…என மகனை இழந்த துயரத்தில் கதறினார்.
மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த பொற்கொடியை பெண் என்றும் பார்க்காமல் ஆண் போலீசாரும் பெண் போலீசாரும் தாக்கியதில் அவருக்கு கை, காலில் எலும்பு முறிவு, உடல் முழுவதும் இரத்தம் கட்டிய காயம்.
சிறுவன் மணி சொல்வதைக் கேட்கும் எந்தக் கல்நெஞ்சக்காரனின் மனமும் கரைந்துவிடும், அவ்வளவு துயரம்.
என் பேர் மணி. அம்பேத்கர் பாலத்துகிட்டதான் வீடு. 2 படிக்கிறேன். அன்னைக்கு அக்கா வீட்டுக்குப் போயிட்டு வந்தப்போ போலீஸ்காரங்க ஜீப்புல ஏத்திக் கொண்டுபோயி செம அடி அடிச்சாங்க. வலி தாங்க முடியாம மயங்கிட்டேன். வேற 20 பேரயும் போலீஸ்காரங்க புடிச்சாங்க. எல்லாரையும் அடிச்சது இல்லாம பேண்ட் சட்டையக் கழட்டி ஒண்ணுக்குப் போற எடத்துலயும் அடிச்சாங்க. வலி தாங்கமுடியாம கத்தினேன். உயிரோடு வீட்டுக்குப் போவோமானு சந்தேகமா இருந்துச்சி.
எங்க ஏரியா செல்வா அண்ணா வேலைக்கி போயிட்டு நைட் வீட்டுக்கு வந்தப்போ அவரையும் புடிச்சிட்டு வந்துட்டாங்க. ரொம்ப சீரியஸ் ஆனதுனால அவரை மட்டும் தனி வேன்ல ஏத்திட்டுப் போனாங்க. அவ்வளவுதான் தெரியும்.
எங்களை யெல்லாம் புழல்ல போட்டாங்க. தினமும் செங்கல்பட்டு போயி கையெழுத்து போடணுமாம். என்னோட படிப்பே அவ்வளவுதான் போல! அடுத்த மாசம் முழு ஆண்டுத் தேர்வு…”’என வறுமையிலும் கதறிய அந்த மாணவப் பிள்ளைக்கு ஆறுதல் சொல்ல வார்த்தை நம்மிடம் இல்லை.
மணி சொன்ன செல்வாவை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சந்தித்தோம். ஐ.சி.யு. வார்டில் இருந்த செல்வாவுக்கு ஆபரேஷன் செய்து காப்பாற்றியுள்ளனர், மருத்துவர்கள்.
அன்னைக்குப் பிடிச்சிட்டுப் போனப்போ ஸ்டேசன் போனதும் அடிச்சாங்க. செத்துட்டேன்னுதான் நினைச்சேன். கண்ணு முழிச்சிப் பார்த்தா சுடுகாட்டுல இருந்தேன். யாரோ ஒருத்தர் உதவியால விடியகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்து, மறுநாள் 24-ந் தேதி காலையில ஆஸ்பத்திரியில சேர்ந்தேன். நான் நடக்கவே எப்படியும் ஆறு மாசமாகும்” என்றார் வேதனையுடன்.
மீனாம்பாள்புரம் வாசுகி,
சம்பவம் நடந்தப்போ வீட்டுல சமைச்சிட்டு இருந்தேங்க. கதவ உடைச்சிட்டு உள்ளபூந்த பெண் போலீஸ்காரங்க, “எங்கடீ உங்க வீட்டு ஆம்பள’னு கேட்டு அடிச்சாங்க. என்னோட வயசக்கூடப் பாக்கல. அவ்வளவு கேவலமா பேசினாங்க. ராயப்பேட்டை ஆஸ்பிட்டலுக்குப் போயி “போலீஸ் அடிச்சி இப்படி ஆயிடுச்சி’னு சொன்னோம். வைத்தியமே பாக்காம டிஞ்சர் போட்டு அனுப்பிட்டாங்க. தனியார் ஆஸ்பிட்டல் போனா கை, கால் எலும்பு உடைஞ்சிருக்குனு சொன்னாங்க. கட்டுப் போட்டுட்டு வந்திருக்கேன். பக்கத்து வீட்டு திலகவதி, சாந்திக்கும் மண்டை, கை, கால் எலும்பு உடைப்புதான்.
அ.தி.மு.க. தலைமையகம் உள்ள லாயிட்ஸ் சாலையில் பழம் விற்கும் மதுரை,
பல வருஷமா இங்க வியாபாரம் செய்றேன். அன்னிக்கி போலீஸ் அடிச்சதுல என்னோட கால் எலும்பே உடைஞ்சு போச்சி. நின்னுதான் வியாபாரம் செய்யணும். இனி பிழைப்பு எப்படினு தெரியல? என அழுகையை அடக்கிக்கொண்டு பேசினார்.
எழும்பூர் டாக்டர் சந்தோஷ்நகர் பொன்னம்மாளை பிடித்துவைத்த போலீசார், சில வீடியோக்களைக் காட்டி அதில் உள்ளவர்களை அடையாளம் காட்டச் சொல்லி அடித்துள்ளனர். பெண் போலீசார் அவரது ஆடையைக் கழற்றி தொடையில் லத்தியால் தாக்கியுள்ளனர்.
போலீசின் அடக்குமுறைக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்களின் ஆன்ம ஆவேசமும் குமுறலும் நீதிதேவதையின் மனசாட்சியை உலுப்புமா?
அவுஸ்திரேலிய நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்மைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரும், செல்வம் அடைக்கலநாதன் அந்நாட்டு பிரதமருக்கும், அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புலம்பெயர் தமிழ் மக்களின் பாரம்பரியத்தை அங்கீகரித்து அவுஸ்திரேலிய நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை மற்றும் உலகம் பூராவும் உள்ள தமிழ் பேசும் மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்துடன், அமைச்சரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்களது இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும், நன்றிகளையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துகொள்கின்றேன் என அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி விலை குறைக்கப்பட்டுள்ளபோதும், அதன் பிரதிபலன் நுகர்வோரைச் சென்றடையவில்லைஎன நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரிசி விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கமைய அரிசிவிற்பனைநடைபெறவில்லை. நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நிதியமைச்சர்ரவிகருனாநாயக்கா இவ்வாறு தெரிவித்தார்.
சில அரிசி மொத்த விற்பனையாளர்களின் மோசடிச் செயற்பாடுகள் காரணமாகவேஅரிசிக்கான விசேட சுங்க வரி குறைக்கப்பட்டது. இருப்பினும், அதன் நன்மைகள் பொதுமக்களை சென்றடையவில்லை.
அரிசிக்கு தட்டுப்பாட்டு ஏற்படுவதை தடுப்பதற்காகவே அரிசியை இறக்குமதி செய்வதற்குஅரசாங்கம் தனியாருக்கு அனுமதி வழங்கியது.
அரிசிக்கு விதிக்கப்பட்ட விசேட சுங்கவரியும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பணிப்புரைக்கு அமைய குறைக்கப்பட்டது.இரண்டு கட்டங்களாக இவை குறைக்கப்பட்டன.
முதலில் ஐந்து ரூபாய் குறைக்கப்பட்டது.இதன்போது 76 ரூபாவுக்கு அசிரியை விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மேலும் 10 ரூபாவால் அரிசியின் விலை குறைக்கப்பட்டது. ஆனால், அரிசியைஎவ்வளவு விலைக்கு விற்க வேண்டும் என் இதன்போது அறிவிக்ககப்படவில்லை.
வரி குறைக்கப்பட்ட பின்னர் ஒரு கிலோ அரிசியை 65 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும்.இருப்பினும் மொத்த விற்பனையாளர்கள் கூடிய விலைக்கே அரிசியை தற்போது விற்பனைசெய்கின்றனர்.
இதுவரை 23 ஆயிரத்து 800 மெற்றின் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மொத்தஅரிசி விற்பனையாளர்கள் தமது இருப்பிலிருந்த அரிசியை பதுக்கியுள்ளனர்.
அரிசி விலை குறைக்கப்பட்டதன் பிரதிபலன் நுகர்வோரைச் சென்றடையவில்லை. இதுதொடர்பில் நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நிதி அமைச்சர்ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.
நாடு முழுவதிலும் போலி இலக்கத் தகடுகளுடன் கூடிய மோட்டார் சைக்கிள்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பதிவு செய்யாது போலி இலக்கத் தகடுகளை பயன்படுத்தி நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கும் மற்றும் பொலிஸாருக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறு சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டு வரும் மோட்டார் சைக்கிள்களை பதிவுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி குற்றச் செயல்கள் இடம்பெறுவதாகவும், வாகன விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவற்றைக் கருத்திற் கொண்டு அமைச்சரவை அனுமதியூடாக இவ்வாறான மோட்டார் சைக்கிள்களை பதிவுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்.
வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிள் உதிரிப் பாகங்கள் தருவிக்கப்பட்டு அவை பொருத்தப்பட்டு, அவற்றுக்காக போலி இலக்கத் தகடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
இலங்கையில் அதிகளவான வீதி விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்கள் ஊடாக இடம்பெறுகின்றன.
வாகனங்களை பதிவுக்கு உட்படுத்துவதற்கு சலுகைக் காலமொன்று வழங்கப்பட்டிருந்தது.எதிர்வரும் நாட்களில் மீளவும் இவ்வாறான சலுகைக் காலமொன்று வழங்கப்படும் என ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வீதிப் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு புள்ளிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் முறையொன்றும் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
சென்னை ஹோட்டல் சிப்பந்தி (வெய்ட்டர்) ஒருவர் வழங்கிய ஆலோசனையின் பலனாகவே சச்சின் டெண்டுல்கரின் துடுப்பாட்டம் நுட்பத் திறன்மிக்கதாக மாறியது. அவரது ஆலோசனையைப் பின்பற்றியதன் மூலம் சச்சினின் துடுப்பாட்டம் பிரகாசமடைந்தது. இது குறித்த தகவலை சச்சின் டெண்டுல்கரே வெளியிட்டதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவகை பிரதான சர்வதேச கிரிக்கெட் அரங்குகளில் துடுப்பாட்ட உலக சாதனையாளரான சச்சின் டெண்டுல்கருக்கு ஹோட்டல் சிப்பந்தி ஒருவர் ஆலோசனை வழங்குவதென்பது வழமைக்கு மாறானதாக இருக்கலாம். ஆனால் அந்த ஆலோசனை தன்னை வெகுவாக முன்னேற வைத்ததாக அவரே கூறுகின்றார்.
ஒரு முறை நான் சென்னை சென்றிருந்தபோது ஹோட்டலில் வைத்து சிப்பந்தி ஒருவர் தன்னை அணுகி ஆலோசனை ஒன்று வழங்கலாமா என தன்னிடம் கேட்டதாக சச்சின் கூறுகின்றார்.
‘‘நான் ஹோட்டலில் இருந்தபோது என்னை அணுகிய ஹோட்டல் சிப்பந்தி, நீங்கள் துடுப்பை சுழற்றும்போது உங்களது முழங்கை காப்பில் (எல்போ கார்ட்) துடுப்பின் கைப்பிடிப் பகுதி படுவதால் அதன் சுழற்சி தடுக்கப்படுகின்றது என என்னிடம் சுட்டிக்காட்டினார். அவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. அவரது கணிப்பு மிகவும் சரியானது’’ என சச்சின் தெரிவித்தார்.
‘‘திறந்த மனதுடன் இருந்தால் பல விடயங்களில் முன்னேறமுடியும். முழங்கை காப்பு எனக்கு அசௌகரியத்தைக் கொடுக்கின்றது என்பதை உணர்ந்திருந்தேன். ஆனால் நானாகவே மாற்ற முன்வரவில்லை. சில வருடங்களின் பின்னர் எனது முழங்கை காப்பில் பந்துபட்டபோது நான் பெரும் உபாதைக்குள்ளானேன். அதன் பின்னரே முழங்கை காப்பினுள்ள இருந்த திட்டு போதாது என்பதை உணர்ந்தேன்.
அத்துடன் துடுப்பை இலகுவாக சுழற்றக்கூடிய விதத்தில் முழங்கை காப்பின் வடிவத்தையும் மாற்றி அமைத்தேன். நமது தேசத்தில் வெற்றிலை விற்பவரிலிருந்து பிரதம நிறைவேற்று அதிகாரிவரை ஆலோசனை வழங்கக்கூடியவர்கள். ஆனால் அவற்றை ஏற்கும் மனப்பக்குவம் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும்’’ என்றார் சச்சின்.
தொற்றா நோய் வரிசையில் மிக முக்கியமான இடத்தை புற்றுநோயானது பிடித்துள்ளது. இலங்கையில் புற்று நோய் காரணமாக ஒரு நாளுக்கு நான்கு தொடக்கம் ஒன்பது பேர் வரை இறக்கின்றனர் என்று பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜே.எம்.டபிள்யூ. ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.
பெப்ரவரி 04 ஆம் திகதி உலக புற்றுநோய் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று சுகாதார,போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..
உலகம் முழுவதும் ஏழில் ஒரு மரணத்தை ஏற்படுத்துகின்ற காரணியாக புற்றுநோய் காணப்படுகின்றது. உலக புற்றுநோய் அறிக்கையானது 14.1 மில்லியன் புதிய புற்றுநோயாளர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆண்டு தோரும் 8.2 மில்லியன் மக்கள் புற்றுநோயினால் இறக்கின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டும் உலக புற்றுநோய் தின பிரசார தொனிப்பொருளாக “என்னால்முடியும், நம்மால் முடியும்” என்பது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொனிப்பொருளுடனான 2017 ஆம் ஆண்டுக்குரிய உலக புற்றுநோய் தினம், புற்றுநோய்க்குரிய சிகிச்சை தீர்வுகளை கண்டறியவும் இதற்கெதிரான போராட்டத்தில் ஒரு உயிர்ப்பான அணுகுமுறையை கையாளவும் வழிவகுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இலங்கையை பொறுத்தமட்டில் கடந்த காலங்களை விட தற்போது புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் தொகை அதிகமாகியுள்ளது. இதில் ஆண்களுக்கு பொதுவாக வாய்குழி,தொண்டை,வாதனாளி, நுரையீரல் போன்றவற்றில் புற்றுநோய் ஏற்படுகின்றது இதற்கு புகையிலை, புகைப்பிடித்தல், மது, பாக்குவகைகள் ஆகியவற்றின் பாவனை காரணங்களாக அமைகின்றன.
பெண்கள் மார்பக புற்றுநோய்,கருப்பை கழுத்து புற்றுநோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான பிரதான காரணமாக உடல் எடை அதிகரிப்பு, பாலியல் தொற்றுக்கள் என்பன உள்ளன.
புற்றுநோயை இழிவளவாக்குவதற்கு நாடளாவிய ரீதியில் பல்வேறு வேளைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. கராப்பிட்டிய, குருணாகல், இரத்தினபுரி, கண்டி ஆகிய பிரதேசங்களில் புற்றுநோய் சத்திர சிகிச்சைக்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
புற்றுநோயை கட்டுப்படுத்த மதுசாரம்,புகையிலை,பாக்கு வகை போன்றவற்றில் அரசாங்கம் தடைகளை வலுப்படுத்த வேண்டும். இரசாயன பாவனைகளை உணவு உற்பத்தியில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்கள் அதிக உரைப்பான, சூடான உணவுகளை உண்பதை தவிர்த்துக் கொள்வது அவசியமாகும். இரசாயனம் கலந்த உணவுப் பாவனையை தவிர்ப்பதனாலும் புற்றுநோயை இழிவளவாக்க முடியும் என்றார்.