198 புள்ளிகளைப் பெற்று காலி மஹிந்த கல்லூரி மாணவன் முதலிடம்!!

1st

வெளிவந்துள்ள 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி 198 புள்ளிகளைப் பெற்று காலி மஹிந்த கல்லூரியின் மாணவன் சந்தரு தத்சரா பலஹேவா அகில இலங்கை ரீதியில் அதிக புள்ளிகள் பெற்ற மாணவராக முன்னிலையில் இருப்பதாக இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இனப்பிரச்சினை குறித்து கூட்டமைப்புடன் மட்டும் பேச முடியாது : கெஹெலிய ரம்புக்வெல!!

keheliya

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது என்பதற்காக தேசிய பிரச்சினைத் தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆளும் கட்சி கூட்டமைப்புடன் தனித்துப் பேச்சு நடத்த முடியாது என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

ஒரு கட்சியுடன் மட்டும் தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயம் குறித்து பேசுவதில் அர்த்தம் இல்லை. அது சாத்தியமற்ற விடயமாகும் என்றார்.

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி ஈட்டியுள்ளதால் அரசாங்கம் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது என்பதற்காக தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் கூட்டமைப்புடன் தனித்துப் பேச்சு நடத்த முடியாது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவை விடுத்து ஆளும் கட்சியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தாது. அவ்வாறு ஆளும் கட்சியினதும் தமிழ்க் கூட்டமைப்பினது பிரதிநிதிகள் மட்டும் பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை. அவ்வாறு பேச்சு நடத்தப்படமாட்டாது.

மாகாண சபை என்ற முறையில் வட மாகாண சபையின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேச்சு நடத்துவார். அது வழமையான விடயமாகும். நாட்டின் ஏனைய மாகாண சபைகளுடனும் ஜனாதிபதி அவ்வாறான பேச்சுக்களை நடத்திவருகின்றார். அதேபோன்று வட மாகாண சபையுடனும் பேச்சு நடத்துவார் என்றார்.

தேசிய பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமாகும். அந்த வகையில் அவ்வாறான தீர்வுக்கான இணக்கப்பாட்டைக் காண்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவே சிறந்த இடமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை வட மாகாண சபையின் முதலமைச்சராக விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுக்க தீர்மானிப்பின் அது சிறந்த முடிவாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

வடக்கில் சிங்களவர்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று சான்றுகள் : களனி பல்கலைக்கழக தொல்பொருள் பேராசிரியர்!!

inscriptions

வடக்கில் சிங்களவர்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று சான்றுகள் காணப்படுவதாக களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பேராசிரியர் சந்திம அம்பன்வல தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவில் 2010ம் ஆண்டு கிடைக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் ஆதி சிங்களவர்கள் வடக்கில் வாழ்ந்தமைக்கான வரலாற்று சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

கிறிஸ்துக்கு முந்திய காலம் முதலே வடக்கில் சிங்களவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். மூன்று கல்வெட்டுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் ஒன்று தமிழ் மொழியிலானது. ஏனைய இரண்டும் சிங்கள மொழியிலானது.

இந்தக் கல்வெட்டுக்கள் முழுமையாக இன்னமும் மொழி பெயர்க்கப்படவில்லை. புகைப்படங்களின் அடிப்படையில் தகவல்களை வெளியிட்டுள்ளேன்.

விரைவில் நெடுந்தீவிற்கு சென்று கல்வெட்டுக்கள் குறித்து மேலதிகமாக ஆய்வு செய்யப்படும் என பேராசிரியர் தெரிவித்துள்ளா

மது போத்தல்களுடன் இணையத்தில் பரவும் நடிகை திரிஷாவின் சர்ச்சை படங்கள்!!

trisha

நடிகை திரிஷா மது போத்தல்கள் முன் இருப்பது போன்ற சர்ச்சை படங்கள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ஐதரபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த மது விருந்தில் இந்த படங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விருந்துக்கு திரிஷா தனது தோழிகளுடன் சென்று இருந்தார். அவருடன் நடிகைகள் சங்கீதா, மகேஸ்வரி போன்றோரும் போய் இருந்தனர். விடிய விடிய இந்த விருந்து நடந்தது. திரிஷா உட்கார்ந்திருந்த மேஜையில் கிளாசில் மது ஊற்றி வைக்கப்பட்டு இருந்தது.

அதை குடித்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. யாரோ மர்ம நபர் இதை படம் எடுத்து இணையத்தில் பரவவிட்டுள்ளார்.
இதனால் திரிஷா அதிர்ச்சியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விருந்தில் திரிஷா தகராறில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாயின.

திரிஷா விருந்தில் நடனமாடியதாகவும் அப்போது ஒருவருடன் மோதல் ஏற்பட்டு வாய்தராறில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. திரிஷாவை பலர் சமரசபடுத்தியும் கேட்கவில்லையாம். இதனால் ஹோட்டல் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர் என்றும் அவர்கள் கட்டாயப்படுத்தி திரிஷாவை அங்கிருந்து வெளியேற்றி காரில் அனுப்பி வைத்ததாகவும் கூறப்பட்டது.

நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்!!

Fruits-Vegetables

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இலங்கையில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.

அந்த அளவில் நீரிழிவு மக்கள் மத்தியில் பரவிக் கொண்டே வருகிறது. இதற்கு உணவில் அதிகப்படியான சர்க்கரையை சேர்த்துக் கொள்வது ஒரு முக்கிய காரணமாகும். மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை.

அதிலும் ஆரோக்கியம் என்று நினைக்கும் காய்கறிகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த காய்கறிகளே உயிருக்கு ஆப்பு வைத்துவிடும்.

ஏனெனில் சில காய்கறிகளில் ஸ்டார்ச் எனப்படும் மாப் பொருள் அதிகம் இருக்கும். இத்தகைய காய்கறிகள் இனிப்பாக இருக்கும். அதற்காக இனிப்பாக இருக்கும் அனைத்து காய்கறிகளையுமே நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்பதில்லை. உதாரணமாக பூசணிக்காய் இனிப்பாக தான் இருக்கும்.

ஆனால் இதனை நீரிழிவு நோயாளிகள் பயப்படாமல் சாப்பிடலாம். மேலும் சில காய்கறிகளில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் நிறைந்திருக்கும். இத்தகைய உணவுகளை நீரிழிவு நோயாளிகள் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது.

சரி இப்போது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாத சில காய்கறிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து நீரிழிவு இருந்தால் அவற்றை உணவில் சேர்ப்பதை தவிர்த்துவிடுங்கள்.

உருளைக்கிழங்கு..

உருளைக்கிழங்கில் மாப்பொருள் அதிகம் நிறைந்திருப்பதால் இந்த உணவுப் பொருளை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

சேனைக்கிழங்கு..

பொதுவாக கிழங்குகள் அனைத்திலுமே மாப்பொருளானது அதிகம் இருக்கும். அதிலும் சேனைக் கிழங்குகளை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சொல்ல முடியாத அளவில் அதிகரிக்கும். எனவே இந்த கிழங்கை உணவில் சேர்க்கக்கூடாது.

பீன்ஸ்..

பீன்ஸ் இனிப்பாக இல்லாவிட்டாலும் இதில் ஸ்டார்ச் மிகவும் அதிகம் உள்ளது. அதற்காக பீன்ஸ்களை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென்பதில்லை. ஆனால் அவற்றை நீரில் வேக வைத்து அதுவும் அளவாக சாப்பிட வேண்டும்.

பீட்ரூட்..

பீட்ரூட் ஒரு வேர் காய்கறி என்பதால் இது மண்ணில் உள்ள அனைத்து இனிப்புக்களையும் உறிஞ்சி மிகவும் இனிப்பான சுவையில் உள்ளது. அதற்காக இதனை அறவே தவிர்க்க வேண்டுமென்பதில்லை. ஏனெனில் இதில் மற்ற நன்மைகளும் அடங்கியிருப்பதால், இதனை 2-3 வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டாலே போதும்.

ஸ்குவாஷ் (Squash)..

ஸ்குவாஷ் ஒரு இனிப்புச் சுவையுடைய குளிர்கால காய்கறி. இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் அதிகம் உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் இந்தக் காய்கறியில் எவ்வளவு தான் நன்மைகள் இருந்தாலும் அறவே தவிர்க்க வேண்டும்.

பச்சை பட்டாணி..

பச்சை பட்டாணியில் ஸ்டார்ச் அதிகம் நிறைந்திருப்பதால், இந்த உணவுப் பொருளையும் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

தக்காளி..

தக்காளி சேர்க்காத உணவுகளை பார்க்கவே முடியாது. இருப்பினும் இது இனிப்புச் சுவையுடையதால் இதனை பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் உணவுகளிலும் தக்காளியை அளவாக பயன்படுத்த வேண்டும்.

சோளம்..

சோளத்தில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஸ்வீட் கோன். இதன் பெயரிலேயே, இது மிகவும் இனிப்பானது என்பது தெளிவாக தெரிவதால், இதனை நீரிழிவு நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், இதில் எண்ணற்ற அளவில் ஸ்டார்ச் நிறைந்துள்ளது.

வாழை வகைகள்..

வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவற்றை அதிகம் சமைத்து சாப்பிடுவோம். ஆனால் இந்த உணவுப் பொருட்களிலும் ஸ்டார்ச் அதிகம் நிறைந்துள்ளது. குறிப்பாக வாழைப்பழத்தில் இனிப்புச் சுவை அதிகம் உள்ளது. எனவே இந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரைவள்ளி கிழங்கு..

உருளைக்கிழங்குடன் ஒப்பிடுகையில் சர்க்கரைவள்ளி கிழங்கில் ஸ்டார்ச் குறைவாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இத்தகைய கிழங்கை அறவே தவிர்க்க வேண்டும்.

நயன்தாராவை போல் நடிகை அனுஷ்காவின் 2 காதலும் தோல்வி!!

anuska

நயன்தாராவை போல் நடிகை அனுஷ்காவின் 2 காதலும் தோல்வி அடைந்துள்ளன. இதனால் அவர் சோகத்தில் இருக்கிறார். அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் சிங்கம், தெய்வத் திருமகள், வேட்டைக்காரன், வானம், சிங்கம் 2, அலெக்ஸ் பாண்டியன், தாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது இரண்டாம் உலகம் படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் ருத்ரமா தேவி என்ற சரித்திர படத்தில் நடிக்கிறார். அனுஷ்காவுக்கு 31 வயது ஆகிறது. இயக்குனர் கிரிஷை, அனுஷ்கா காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாயின. கிரிஷ் தெலுங்கில் பிரபல இயக்குனராக உள்ளார். அனுஷ்காவின் வானம் படத்தை இவர்தான் இயக்கினார். அப்போது நெருக்கம் ஏற்பட்டது.

இருவரும் தன்மையில் சந்தித்து காதல் வளர்த்து வந்தனர். இந்த நிலையில்தான் தற்போது இருவருக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலை முறித்துக் கொண்டு பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரிடமும் யார் உயர்ந்தவர் என்ற ஈகோ ஏற்பட்டதால் காதல் முறிந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தெலுங்கு ஒளிப்பதிவாளர் ஒருவரையும் அனுஷ்கா காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார்கள். சினிமாவுக்கு முழுக்கு போடுமாறு ஒளிப்பதிவாளர் திடீர் நிபந்தனை விதித்ததால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது என்று தெலுங்கு சினிமா வட்டாரம் கூறுகிறது.

நயன்தாரா இனிமேல் என் வாழ்க்கையில் காதல் இல்லை என்று கூறியபடி சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அவரைப் போல் அனுஷ்காவும் இனி நடிப்புதான் என் வாழ்க்கை என்று கூறி வருகிறாராம்.

கிளிநொச்சி – கொழும்பு ரயிலில் கொள்ளை!!

train

கிளிநொச்சிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நான்கு பயணிகளிடமிருந்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. பயணிகளுக்கு மயக்க மருந்து அளித்து, பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. தங்க ஆபரணங்கள், செல்லிடப் பேசிகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்களின் பொருட்களே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரயிலில் நண்பர்களான இளைஞர்களே பணம் பொருட்களை அபகரித்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு குழந்தைக்கு மேல் பெற்றவர்களிடம் 16 கோடிக்கு மேல் அபராதம்!!

chinese-babies-hospital

சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றவர்களிடம் இருந்து 16 740 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள தடை உள்ளது. இதை மீறுபவர்களை தண்டிப்பதற்காக குறிப்பிட்ட அளவிலான தொகை அபராதமாக வசூலிக்கப்படுகிறது. குடும்ப கட்டுப்பாட்டுத் துறையினர் இந்த அபராதத்தை வசூலிக்கின்றனர்.

ஆனால் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றவர்களிடம் அபராதம் வசூலிப்பதற்கு ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சீனாவின் ஜிஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணியான வூ யூசூ என்பவர் சீனாவில் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த அரசுகள் இத்தொகையை தங்களுடைய செலவினத்துக்கு பயன்படுத்திக் கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

சீனாவில் ஒவ்வொரு மாகாண அரசிடமும், கடந்த ஆண்டு குடும்பக் கட்டுப்பாட்டை மீறியதற்காக பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகை குறித்த விவரத்தை தருமாறு கடந்த ஜூலை 31ம் திகதி கடிதம் எழுதியிருந்தேன்.

எனக்கு கிடைத்த தகவலின்படி 19 மாகாண அரசுகள் கடந்த ஆண்டில் 16 740 கோடியை அபராதத் தொகையாக வசூலித்துள்ளன. 12 மாகாண அரசுகள் பதில் தெரிவிக்கவில்லை. இந்த அபராதத் தொகை தேசிய அளவில் வசூலிக்கப்படுவதால் தங்களிடம் புள்ளிவிவரம் இல்லை என்று தெரிவித்துள்ளன.

அபராத வசூலில் ஜியாங்ஷி மாகாணம்தான் முதலிடத்தில் உள்ளது. இந்த மாகாணத்தில் மட்டும் 343 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ஷிசுவான் மாகாணமும், பியூஜியன் மாகாணம் 3வது இடத்திலும் உள்ளன. பெற்றோர்தான் தாங்கள் எத்தனை குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். அவ்வாறின்றி மற்றவர்கள் அதை நிர்ணயம் செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் பேட்டியில் கூறியுள்ளார். இதற்கிடையே, சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் மீண்டும் கர்ப்பமாக இருக்கும் பெண்களை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று கருக்கலைப்பு செய்வதாகவும், இரண்டாவது குழந்தையை அதிகாரிகளே எடுத்து சென்று அநாதை விடுதிகளில் சேர்த்து விடுகின்றனர் என்றும் புகார்கள் எழுந்துள்ளன. அநாதை விடுதிகளில் சேர்க்கப்படும் குழந்தைகள், வெளிநாட்டு தம்பதிகளுக்கு பெரும் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் கருத்து கூறியுள்ளனர்.

சீனாவில் 2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்குப்படி குடும்பங்களில் அதிகபட்சமாக 1.181 குழந்தை பிறக்கிறது. அதாவது அதிகபட்சமாக ஒரு குழந்தைதான். நகரங்களில் குழந்தை பிறப்பு மிக குறைவாகவும், கிராமங்களில் சற்று அதிகமாகவும் உள்ளன.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் இணையதில் வெளியானது!!

exam

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பரீட்சை பெறுபேறுகள் www.doenets.lk என்ற இணையதளத்திற்கூடாக பார்வையிட முடியும்.

மன்னார் அடைக்கலமாதா திருச்சொரூபம் திருட்டு!!

matha

மன்னார் – நானாட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித அடைக்கலமாதா ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 178 வருடங்கள் பழைமை வாய்ந்த அடைக்கலமாதா திருச் சொரூபம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இனந்தெரியாத நபர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி தொடக்கம் 7 மணி வரையுமான நேரப்பகுதிக்குள் குறித்த ஆலயத்தினுள் சென்ற இனந்தெரியாத நபர்கள் கண்ணாடிக் கூண்டினுள் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை அடி உயரம் கொண்ட அடைக்கலமாதா திருச்சொரூபத்தை வெளியில் எடுத்து அச்சொரூபத்திற்கு போடப்பட்டிருந்த ஆடை களையப்பட்டு அதே இடத்தில் வைக்கப்பட்ட நிலையில் சொரூபம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஆலயத்தில் பணி புரிகின்ற ஒருவர் ஆலையத்தினுள் சென்று பார்த்த போது மாதாவின் சொரூபம் அங்கு இல்லாதமை தெரிய வந்தது. உடனடியாக குறித்த ஆலயத்தின் நிர்வாக சபையினர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இந்த நிலையில் முருங்கன் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை குறித்த ஆலயத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது இராணுவத்தினரும் வருகை தந்திருந்தனர்.

நேற்று மாலை 3.30 மணியளவில் தடையங்களை கண்டறியும் பொருட்டு மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாய் நீண்ட தூரம் ஓடிய போதும் எவ்வித தடயங்களும் மீட்கப்படவில்லை.

இறுதியாக களையப்பட்டு கிடந்த மாதாவின் ஆடையினை முருங்கன் பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர். குறித்த சொரூபம் திருடிச் செல்லப்பட்ட சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை கடந்த வியாழக்கிழமை அதிகாலை மன்னார் முருங்கன் பிராதன வீதியில் உள்ள ரஜ மஹா விகாரையில் 6 புத்தர் சிலைகள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இன்று தந்திச் சேவைக்கு விடைகொடுக்கிறது!!

SL post

இலங்கை தபால் நிலையங்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த தந்திச் சேவை இன்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்தார்.

இதன்படி சுமார் 2000 வருடங்கள் பழமை வாய்ந்த தந்திச் சேவைக்கு இலங்கை இன்று விடை கொடுக்கிறது.

தபால் திணைக்களத்திற்கு ஏற்பட்ட செலவு மற்றும் தந்திச் சேவை குறித்து மக்கள் அதிகம் அக்கறை கொள்ளாமை காரணமாக தந்திச் சேவை நிறுத்திக் கொள்ளப்படுவதாக தபால் மாஅதிபர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு போர் கப்பல்கள் வழங்குவதை தடுக்குமாறு நீதிமன்றில் மனு!!

madurai

இலங்கைக்கு போர்க்கப்பல்களை விற்கும் இந்திய அரசின் முடிவிற்கு தடை கோரி மதுரை மேல் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சட்டத்தரணி ஸ்டாலின் தாக்கல் செய்த பொதுநல மனுவில் இந்திய அரசு 2 போர்க்கப்பல்களை இலங்கைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தமிழகத்தில் இலங்கை அரசின் மீதான எதிர்ப்புணர்வை அலட்சியப்படுத்தும் வகையில் உள்ளது. இக்கப்பல்களை இலங்கை கடற்படை, இந்திய மீனவர்களுக்கு எதிராக பயன்படுத்தும். இலங்கையை நட்பு நாடு என்று கூறக்கூடாது என தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழகத்தில் இலங்கை ராணுவத்தினர் பயிற்சி பெற எதிர்ப்பு எழுந்தது. இதனால், அவர்களை அரசு திருப்பி அனுப்பியது. இலங்கை கடற்படை 97 இந்திய மீனவர்களை கைது செய்து, சிறையில் அடைந்துள்ளது. இதுவரை ராமேஸ்வரம் மீனவர்கள் 500 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

போர்க்கப்பல்களை விற்பனை செய்தால் இலங்கையின் செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பு அளிப்பதாக அமையும். போர்க்கப்பல்கள் விற்பனை செய்யும் முடிவை கைவிட வலியுறுத்தி மத்திய அமைச்சரவை செயலாளர் தமிழக தலைமைச் செயலாளருக்கு மனு அளித்தேன்.

இலங்கைக்கு போர்க்கப்பல்களை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

இந்தியாவில் எதிர்த்தால் அமெரிக்காவில் விஸ்வரூபம் 2 படத்தை டி.டி.எச்சில் வெளியிடுவேன்’: கமல்!!

kamal

நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். மூலம் நேரடியாக தொலைகாட்சிகளில் ஒளிபரப்ப ஏற்கனவே திட்டமிட்டார். இதற்காக பொது மக்களிடம் இருந்து கட்டணமும் வசூலிக்கப்பட்டது. ஆனால் திரையரங்க அதிபர்கள் எதிர்த்ததால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

டி.டி.எச்.களில் ஒளிபரப்பாகாமல் திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டன. தற்போது விஸ்வரூபம் 2 படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கமலஹாசன் இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தையாவது 3 மொழிகளிலும் டி.டி.எச் மூலம் ஒளிபரப்பிவிட வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார்.

திரையரங்குகளில் திரையிடுவதற்கு முந்தைய நாள் டி.டி.எச்.களில் ஒளிபரப்பும் முடிவில் இருக்கிறார். இதை திரையரங்க அதிபர்கள் ஏற்பார்களா என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த இந்திய திரைப்பட தொழில் வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியொன்றில் கமல் பங்கேற்று பேசும் போது விஸ்வரூபம் 2 படத்தை டி.டி.எச்சில் வெளியிடுவேன் என்று அறிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது..

திரைப்படங்களை டி.டி.எச் மூலம் தொலைகாட்சிகளில் ஒளிபரப்புவது எதிர்காலத்துக்கு அதை எடுத்துச் செல்வது ஆகும். டி.வி.யில் ஒளிபரப்பும்போது அதற்கு தகுந்த கட்டணம் வசூலிக்கப்படும். டி.வி. மூலம் வீட்டில் மட்டும் மக்கள் பார்க்கும் நிலைமை இருக்காது. தியேட்டர்களிலும் படம் திரையிடப்படும். ஆனாலும் இந்த முறையை எதிர்க்கிறார்கள்.

எல்லோருக்குமே வீட்டில் சமையல் அறைகள் இருக்கிறது. ஆனாலும் எதற்காக நிறைய ஹோட்டல்கள் இருக்கின்றன. விஸ்வரூபம் 2 படத்தை டி.டி.எச்.களில் ஒளிபரப்ப திட்டமிட்டு உள்ளேன். இந்தியாவில் அதை அனுமதிக்காவிட்டால் அமெரிக்காவில் டி.டி.எச்.களில் ஒளிபரப்பு செய்வேன் என்று கமலஹாசன் பேசினார்.

டெல்லியில் ஓடும் ரயில் முன் பாய்ந்து உயிர் பிழைத்த பெண்!! (வீடியோ)

Capture

டெல்லியில் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்த பெண் சிறு காயம் கூட ஏற்படாமல் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் யூன் 9ம் திகதி மாலை 5 மணி அளவில் அந்த ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அருகில் இருக்கும் பகுதியில் வசிக்கும் அப்பெண் ஒரு மெட்ரோ ரயில் அந்த நிலையத்தை நெருங்கியப்போது அதன் முன் பாய்ந்துள்ளார்.

அந்த ரயில் சென்றப்பின் அப்பெண் சிறு காயம் கூட ஏற்படாமல் தப்பித்தது அந்த நிலைய கண்காணிப்பு காமெராவில் பதிவாகியுள்ளது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள இந்த காணொளி தொடர்பாக கருத்து தெரிவித்த டெல்லி மெட்ரோ செய்தி தொடர்பாளர் அனுஜ் தயால் அப்பெண் தற்கொலைக்கு முயற்சித்திருக்கலாமென கூறியுள்ளார்.

கூட்டமைப்பின் போனஸ் ஆசனத்தை அடுத்த 5 வருடங்களுக்கு பகிரவுள்ளோர் விபரம்!!

northern_mapமாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு 28 ஆசனங்களை பெற்றுக் கொண்டதுடன் 2 போனஸ் ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது.

இந் நிலையில் ஜந்து மாவடங்களிலும் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பலரும் போனஸ் ஆசனத்தில் ஒன்றை தமக்கு வழங்க வேண்டும் என தமது ஆதரவாளர்களுடன் சென்று கூட்டமைப்பின் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

இந் நிலையில் ஒரு போனஸ் ஆசனம் இன நல்லறவை ஏற்படுத்தும் நோக்கில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த முஸ்லிம் பிரதிநிதி அஸ்மினுக்கு வழங்குவதாக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

மற்றைய போனஸ் ஆசனத்தை ஜந்து கட்சிகளுக்கும் ஒரு வருடம் வீதம் ஜந்து பேருக்கு வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் போனஸ் ஆசனத்தை வரும் 5 வருடங்களுக்கு பகிரவுள்ளோர் விபரம்..

மேரி கமலா குணசீலன் (முல்லைத்தீவு- த.வி.கூட்டணி)
எம்.பி.நடராஜா (வவுனியா- ஈபிஆர்எல்எவ்)
கு.ரவி (வவுனியா- ரெலோ)
எஸ்.சிவகரன் (மன்னார்- தமிழரசுக் கட்சி)
எஸ்.சிவநேசன் (முல்லைத்தீவு- புளொட்)

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியில் இடம்பிடித்த யுவராஜ் சிங்!!

Yuvraj Singhஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள அவுஸ்திரேலிய அணி ஒரே ஒரு சர்வதேச 20-20 மற்றும் ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

இத்தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களை தெரிவு செய்ய, பி.சி.சி.ஐ தெரிவுக்குழு சென்னையில் இன்று கூடி வீரர்களை தெரிவு செய்தது. எதிர்பார்த்தது போலவே, யுவராஜ் சிங்கிற்கு இடம் கிடைத்துள்ளது.

அணி விபரம்:

டோனி, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராத் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, வினய் குமார், அமித் மிஸ்ரா, அம்பட்டி ராயுடு, முகம்மது சமி, ஜெயதேவ் உனக்தத்.