வவுனியாவில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் ரதனுக்கு எதிராக துண்டுப் பிரசுரம்!!

வடமாகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட இளைஞர் அணி தலைவரும் வவுனியா நகரசபைப் பதில் தலைவருமாகிய எம்.எம் ரதனுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டும் விநியோகிக்கப்பட்டும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா மாவட்டத்தில் எங்கும் பரவலாக நேற்றும் இன்றும் இத்துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்ட இத் துண்டுப் பிரசுரத்தில் ரதனின் தெரிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பல வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

vav1

இரவோடு இரவாக மீண்டும் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் சீனிவாசன்!!

seenivasan

செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக மீண்டும் என்.சீனிவாசன் பொறுப்பேற்றுக் கொண்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் இதுவரை இடைக்காலத் தலைவராக இருந்து வந்து ஜக்மோகன் டால்மியாவின் பொறுப்புகள் முடிவுக்கு வந்துள்ளன. ஐபிஎல் ஆட்ட நிர்ணய விவகாரத்தில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் பெயர் அடிபட்டு அவரை மும்பை போலீஸார் தேடத் தொடங்கியதும் சீனிவாசனுக்கு சிக்கல் வந்தது.

அவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. ஆரம்பத்தில் முடியாது என்று கூறி வந்தார் சீனிவாசன். ஆனால் நெருக்கடி அதிகரிக்கவே, விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். மேலும் அந்த கமிஷனின் விசாரணை முடியும் வரை தான் பதவியிலிருந்து ஒதுங்கியிருப்பதாகவும், அதுவரை ஜக்மோகன் டால்மியா இடைக்காலத் தலைவராக இருப்பார் என்றும் அறிவித்தார்.

இந்த நிலையில் விசாரணைக் கமிஷன் தனது அறிக்கையை வாரியத்திடம் ஒப்படைத்தது. அதில் குருநாத் மெய்யப்பன், ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் நல்லவர்கள், தவறு செய்யவில்லை, அப்பாவிகள் என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் அந்த அறிக்கையில் சீனிவாசனுக்குச் சொந்தமான இந்தியா சிமென்ட்ஸ் மீதும் எந்தத் தவறும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து மீண்டும் தலைவர் பதவியை ஏற்க முடிவு செய்தார் சீனிவாசன். விசாரணைக் கமிஷன் அறிக்கையை மேற்கோள் காட்டி மீண்டும் பதவியேற்கப் போவதாக வாரிய உறுப்பினர்களுக்கு அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் நேற்று இரவு 8 மணியளவில் மீண்டும் தலைவர் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் நிரபராதிகள், தவறு செய்யாதவர்கள் என்று எப்படி பிசிசிஐயின் விசாரணைக் கமிஷன் கூறலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.

ஆகஸ்ட் 2ம் திகதி வாரியத்தின் செயற் கூட்டம் கூடுகிறது. அப்போது மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை காட்டி பிரச்சினை எழுப்ப நிர்வாகிகள் பலர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

 

கண்ணுக்குள் இருந்த ஒன்றரை அடி நீள புழு!!

worm

தமிழ்நாடு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஒருவரின் கண்ணில் உயிரோடு இருந்த ஒன்றரை அடி நீளமுள்ள புழுவை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் நீக்கி சாதனை படைத்துள்ளனர்.

உடுமலைப் பேட்டையை அடுத்த கோமங்கலத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கண் வலியால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே வலி அதிகரித்ததையடுத்து பழனிசாமி அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார்.

அப்போது அவரது கண்ணிற்குள் ஒன்றரை அடி நீளப் புழு ஒன்று இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதைக்கேட்டு பழனிசாமியும் அவரது குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், பழனிசாமியின் கண்ணிற்குள் இருந்த புழுவை வெற்றிகரமாக அகற்றினர்.

இதேபோல் நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்சி நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட குதிரையின் கண்ணில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருந்தது. இதனையடுத்து குதிரைக்கு மருத்துப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அந்தக் குதிரையின் கண்ணிற்குள் நீண்ட புழு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மருத்துவர் ஜெயசீலன் தலைமையிலான குழுவினர், குதிரைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதில் புழு வெற்றிகரமாக அகற்றப்பட்டு, குதிரை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதிக நேரம் தொலைபேசியில் பேசுபவர்களுக்கு ஆபத்து!!

mobile

தினசரி கையடக்கத் தொலைபேசியில் பேசுவோருக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவை உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் இஸ்ரேலில் உள்ள டெல்அவில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி யனிவ் ஹம்ஷானி தலைமையிலான குழுவினர் ஒரு புதிய ஆய்வு நடத்தினர்.

அதன்படி அதிக நேரம் கையடக்கத் தொலைபேசியில் பேசுபவர்களை புற்று நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் நீண்ட நேரம் கையடக்கத் தொலைபேசியில் பேசுபவர்களிடமும், பேசாதவர்களிடமும் இருந்து எச்சில் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களில் அதிக நேரம் கையடக்கத் தொலைபேசியில் பேசுபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான அறிகுறி இருந்தது தெரியவந்தது. கையடக்கத் தொலைபேசியில் பேசும் போது காதுகளின் அடியில் உள்ள சுரப்பிகள் மற்றம் திசுக்கள் பாதிக்கப்பட்டு மரபணு கோளாறினால் புற்று நோய் கட்டிகள் ஏற்பட வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீசாந்த், சவானின் பிணையை இரத்து செய்ய கோரி மனு!!

IPL-Sreesanth

6வது ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் டெல்லி பொலிசார் நேற்று குற்றப் பத்திரிகையை சமர்ப்பித்தனர். 6 ஆயிரம் பக்கங்களை கொண்டதாக குற்றப்பத்திரிகை இருந்தது.

நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ராகீம், சோட்டா ஷகீல், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜீத் சண்டிலா, அங்கீத் சவான் உள்பட 39 பேரது பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் அஜீத் சண்டிலா உள்பட 9 பேர் இன்னும் சிறையில் தான் உள்ளனர். ஸ்ரீசாந்த், அங்கீட் சவான் உள்பட 21 பேர் பிணையில் விடுதலையாகி உள்ளனர்.

10 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் அனைவரும் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் மராட்டிய அமைப்பு ரீதியிலான குற்றதடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சூதாட்ட வழக்கில் ராஜஸ்தான் ரோயல்ஸ் தலைவர் ராகுல் டிராவிட் மற்றும் அந்த அணியை சேர்ந்த திரிவேதி, ஹர்மித் சிங் ஆகிய 3 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் உள்பட 21 பேரது பிணையை இரத்து செய்யக்கோரி டெல்லி பொலிசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

நடிகை ஸ்ரீதேவி வைத்தியாசலையில் அனுமதி!!

sridevi

நடிகை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் மற்றும் மகள்களுடன் அமெரிக்கா சென்று இருந்தார். அங்கு சில நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு இந்தியா திரும்ப தயாரானார். அப்போது திடீரென கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

வலது கால் மூட்டிலும் பலத்த அடிப்பட்டது. வலியால் நடக்க முடியாமல் அவதிப்பட்டார். இதையடுத்து பயணத்தை இரத்து செய்து விட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டுள்ளது. சில நாட்கள் வைத்தியசாலையிலேயே இருப்பார் என தெரிகிறது. ஸ்ரீதேவியின் 50வது பிறந்த நாளை அடுத்த மாதம் 13ம் திகதி மும்பையில் பிரமாண்டமாக கொண்டாட போனிகபூர் திட்டமிட்டு இருந்தார்.

ஸ்ரீதேவி வைத்தியசாலையில் இருப்பதால் விழாவை இரத்து செய்யலமா என்று யோசிக்கிறாராம்.

2 தலை, 2 முதுகெலும்பு, ஒரு இதயத்துடன் பிறந்த குழந்தை உயிரிழப்பு!!

baby

இந்தியாவின் ராஜஸ்தானில் இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. இக்குழந்தை பிறந்தப்போது, அதனை காப்பாற்ற முடியுமென மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24ம் திகதி அர்சி என்னும் 24 வயது இளம்பெண்ணுக்கு இரட்டை தலையுடன் கூடிய ஒரு ஆண் குழந்தை பிறந்தது. உடலில் இரண்டு தலை, இரண்டு முதுகெலும்பு மற்றும் இரண்டு நரம்பு மண்டலங்கள் இருந்த இக்குழந்தைக்கு ஓரேயொரு இதயம், தோள்பட்டை இருந்தது.

இக்குழந்தைக்கு பிறந்ததில் இருந்தே சரியாக மூச்சு விடமுடியாமல் தவித்தது. எனவே, குழந்தைக்கு செயற்கை சுவாசம் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிலும் இக்குழந்தை எளிதாக மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டது. இந்நிலையில் அக்குழந்தை உயிரிழந்தது. பொதுவாக இது போன்று பிறக்கும் குழந்தை உயிர் வாழ்வது கடினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அக்குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் அதிக முயற்சி செய்தும் பயனில்லாமல் போனது.

மதுபானங்களின் விலை திடீர் உயர்வு..

சாராயarrackம் மற்றும் பியர் ஆகிய மதுபானங்களுக்கான இறக்குமதி தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பியர் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

புதிய வரி விதிப்பால் சாராயம் 25 – 30 ரூபாவால் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சிகரெட்களின் விலையையும் நிதி அமைச்சு அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

ஆஷஸ் 3வது போட்டி நாளை :ஹாட்ரிக் வெற்றி பெறுமா இங்கிலாந்து.?

ashesஇங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்டில் 14 ஓட்டங்களாலும் 2-வது டெஸ்டில் 347 ஓட்டங்களாலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இதனால் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

இந்தநிலையில் இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. விமர்சனத்துக்கு உள்ளான கிளார்க் தலைமையிலான ஆஸி. அணி தொடரை இழக்காமல் இருக்கும் வகையில் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 70 பேர் கைது..!

arrest1சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 70 பேரை கடற் படையினர் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

இவர்கள் வாழைச்சேனை கடற்பரப்பில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகின் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த போது கடற்படையினர் இவர்களை கைது செய்து திருகோணமலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு நகரில் இதனோடு தொடர்புபட்ட மூன்று வான் மற்றும் ஒரு கார் ஆகியவற்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இவை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மீண்டும் நடிக்க வருகிறார் நக்மா..!

nakmaநடிகை நக்மா மீண்டும் திரையுலகில் தனது நடிப்புத் திறமையினை நிரூபிக்க வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1990களில் பாட்ஷா, பிஸ்தா, மேட்டுக்குடி போன்ற பல படங்களில் நடித்தவர் நக்மா.

பின்பு நடிப்பை குறைத்துக்கொண்டு அரசியல் பக்கம் தலைகாட்டினார். ஆனால் அரசியல் பெரிய அளவில் கைகொடுக்காததால் மீண்டும் சினிமா பக்கம் தலை நீட்டுகிறார்.

தற்போது டோலிவுட் இயக்குனர் தேஜா தன் படத்தில் நடிக்க நக்மாவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறாராம்.

அவர் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாவிட்டாலும் நடிப்பதற்கான பச்சை கொடி காட்டியுள்ளாராம்.

பம்பலப்பிட்டியில் ரயிலில் மோதி இளைஞர் பலி..!

railwayபம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவின் கடற்கரைவீதி பகுதியில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து பாணதுறை வரை பயணித்த ரயிலில் மோதியே இவர் பலியாகியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில் உயிரிழந்தவர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 30 வயதான நபர் எனத் தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நடிகை ஷம்முவை மணக்கிறார் பரத்!!

barath

நடிகர் பரத்தும் நடிகை ஷம்முவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் நடிகர் பரத் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக அறிவித்திருந்தார்.

எனவே, பரத்துடன் இரண்டு படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்த அமெரிக்கா வாழ் தமிழ் நடிகையான ஷம்முவைத்தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது.
நடிகை ஷம்மு பிரகாஷ்ராஜ் தயாரித்து, நடித்த காஞ்சிவரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதன்பிறகு தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். பரத்துடன் இணைந்து இரண்டு படங்களில் நடித்துள்ளார். பரத்துடன் நடித்தபோது இவர்களிடைய காதல் தொற்றிக் கொண்டதாம். பின்னர், ஷம்முவுக்கு படவாய்ப்பு இல்லாமல் போகவே, அமெரிக்காவுக்கு பறந்து போனார்.

இருந்தாலும் இவர்களிடையே இருந்த காதல் குறையவில்லையாம். இருவரும் தொடர்பிலேயே இருந்து வந்துள்ளார்கள். இந்நிலையில் பரத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றதும், மணப்பெண் ஷம்முவாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.

இதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது, பரத்தின் நண்பர்கள் ஷம்முவை அண்ணி, அண்ணி என்றுதான் அழைப்பார்களாம். ஆகையால் இருவீட்டாரும் கூட, சீக்கிரமாகவே பரத்துக்கும், ஷம்முவுக்கு இடையிலான காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து திருமண திகதியை அறிவிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

மாகாண சபைத் தேர்தல் திகதி நாளை அறிவிப்பு..!

votingமத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் நாளை நண்பகல் 12 மணியுடன் முடிவடைகிறது.

சுயேச்சைக் குழுக்களுக்கு கட்டுப்பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால எல்லை இன்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

மூன்று மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி கடந்த 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

10 மாவட்ட செயலகங்களில் வேட்புமனுக்களை ஏற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனையொட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

நேற்று நண்பகல்வரை அரசியல் கட்சிகள் சார்பில் 17 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதுடன், 49 சுயேச்சைக்குழுக்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று நண்பகல்வரை 12 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதோடு, முஸ்லிம் காங்கிரஸ், ஜனசெத பெரமுன, ஐக்கிய இலங்கை மகாசபை, ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி என்பன சார்பாக 9 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளதோடு, ஐ.ம.சு.மு, ஐ.தே.க போன்ற கட்சிகள் இறுதி நேரத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நடைபெறும் திகதி நாளை நண்பகல் தேர்தல் ஆணையாளரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

எந்த பந்தாக இருந்தாலும் விரட்டி அடிப்பேன்: டில்ஷான்!!

dilshan

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப துடுப்பாட்ட வீரர்கள் மாற்றத்தினை வெளிப்படுத்த வேண்டுமென இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் புதிய நடைமுறைகளின் படி ஒவ்வொரு இனிங்ஸிலும் இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவதோடு, பவர் பிளே அல்லாத ஓவர்களின் போது 4 களத்தடுப்பாளர்கள் மாத்திரம் எல்லைக்கோட்டில் களத்தடுப்பில் ஈடுபட அனுமதிக்கப்படுகின்றனர்.

இம்மாற்றங்களுக்கேற்ப துடுப்பாட்ட வீரர்கள் மாற்றத்தினை வெளிப்படுத்த வேண்டும் என டில்ஷான் குறிப்பிட்டார்.

4 களத்தடுப்பாளர்கள் மாத்திரம் களத்தடுப்பில் ஈடுபடும் போது பந்து பழையதாக இருக்கும் பட்சத்தில் இறுதி ஓவர்களில் அதிரடியை வெளிப்படுத்த முடியுமென டில்ஷான் தெரிவித்தார்.

முன்னைய காலங்களில் ஆரம்ப ஓவர்களில் துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக ஆடியிருந்தனர் எனக் குறிப்பிட்ட டில்ஷான் தற்போது இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவதால் ஆரம்ப ஓவர்களில் அமைதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பின்னர் அதிரடியாக ஆட முடியுமென அவர் தெரிவித்தார்.

எனினும் தன்னைப் பொறுத்தவரை ஒரு பந்து அடித்தாடக் கூடியதாகக் காணப்பட்டால் அது போட்டியின் முதலாவது பந்தாக இருந்தாலும் அதை அடித்தாடவே செய்வேன் எனவும் டில்ஷான் தெரிவித்தார்.

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 4வது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் டில்ஷான் தனது 17வது ஒருநாள் சர்வதேசப் போட்டிச் சதத்தினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பில்லாவைவிட “ஆரம்பம்” விறுவிறுப்பாக இருக்கும் : இயக்குனர் விஷ்ணுவர்தன்!!

aarambam-movie

அஜீத், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் “ஆரம்பம்” திரைபடத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. இதுவரை இப்படம் குறித்து படக்குழுவினர் யாருமே வாய்திறக்கவே இல்லை. இந்நிலையில் முதல்முறையாக இப்படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் படத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து விவரித்துள்ளார். அதன் விபரம் வருமாறு..

“ஆரம்பம்” என்ற தலைப்பு எல்லோரையும் கவர்ந்துள்ளது. இந்த தலைப்புக்கான தாமதம் திட்டமிடப்பட்டது அல்ல. ஆனால் இந்த வரவேற்பு கிடைக்க அந்த தாமதமும் ஒரு காரணம் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். இது ஒரு போராட்ட குணமுள்ள ஒரு தனி மனிதனின் கதை. கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அந்த பிரதான சூரியனை சுற்றி வரும் கோள்கள்தான்.

மங்காத்தா படத்தில் நடித்தது போன்றே இந்த படத்திலும் அஜீத் நரை கலந்த தலை முடியுடன்தான் நடிக்கிறார். மங்காத்தா படத்துக்கு முன்னரே அஜீத்திடம் என் படத்துக்கு இந்த கெட்டப்தான் வேண்டும் என்று கேட்டிருந்தேன் ஆனால் வெங்கட்பிரபு முந்திக் கொண்டார்.

இந்த ஸ்டைல் அவர் .அளவுக்கு வேறு யாருக்காவது அமைந்து இருக்குமா என்றால் சந்தேகமே. இது விறுவிறுப்பான வேகமான படம். எங்களது கூட்டணியில் உருவான பில்லா படத்தை விட பல மடங்கு வேகமாக இருக்கும். அஜீத் ரசிகர்களை மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக இருக்கும் என்பது நிச்சயம்.

இவ்வாறு விஷ்ணுவர்தன் கூறினார்