சச்சினின் ஓய்வுக்கு காரணம் என்ன?

Sachin-Tendulkar

கிரிக்கெட்டின் சாதனை சிகரம் என்று அழைக்கப்படும் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் முடிவுக்கு தள்ளப்பட்டதற்கு நானே காரணம் என்று பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் கிண்டல் செய்துள்ளார்.

அவர் அளித்த ஒரு பேட்டியில்,

டெண்டுல்கர் ஒரு சூப்பர் ஸ்டார். கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் ஓட்டங்களை குவித்துள்ளார். 2011ம் ஆண்டு உலக கோப்பை அரைஇறுதியில் தெண்டுல்கரின் (85 ஓட்டங்கள்) விக்கெட்டை நான் தான் வீழ்த்தினேன். இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாகும்.

அதன் பிறகு 2012ம் ஆண்டு மார்ச் 18ம் திகதி நடந்த ஆசிய கிண்ண கிரிக்கெட்டிலும் அவரது விக்கெட்டை (52 ஓட்டங்களில்) நான் தான் கைப்பற்றினேன். ஒரு நாள் போட்டியில் இது தான் அவரது கடைசி ஆட்டமாகும்.

இந்த போட்டியில் அவர் துஸ்ரா வகை பந்து வீச்சில் தடுமாறினார். உடனே மிஸ்பா உல்ஹக் என்னிடம், அவரை ஸ்லிப்பில் பிடி எடுத்து தூக்கி விடலாம் என்று கூறினார். இதையடுத்து யூனிஸ்கான் ஸ்லிப் பீல்டிங்குக்கு மாற்றப்பட்டார் எங்களது திட்டப்படியே உலகின் தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீரரான அவர் ஸ்லிப்பில் விக்கெட்டை இழந்தார்.

இது போன்ற எனது சிறந்த பந்து வீச்சே அவரை ஒரு நாள் போட்டியில் இருந்து வெளியேற நிர்ப்பந்தப்படுத்தியது என்றார்.

மனைவி உறங்கும்போது 3 வயது மகளை கற்பழித்த காமக்கொடூர தந்தை..!!

child-abuse

இந்திய ராஜஸ்தான் மாநிலத்தில் 3 வயது மகளை தந்தை கற்பழித்த கொடூரம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள நஹர்கார் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். கூலித் தொழிலாளி.

அவருக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். நேற்று முன்தினம் இரவு அவரது மனைவி தூங்கிக் கொண்டிருந்தபோது கணேஷ் மகளை வீட்டுக்கு வெளியே தூக்கிச் சென்றார்.

மகள் என்றும் பாராமல் அவர் அந்த சிறுமியை கற்பழித்துவிட்டு வீட்டுக்கு வெளியே போட்டுவிட்டு சென்றார். நேற்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் காயப்பட்டு கிடந்த சிறுமியை ஜே.கே லோனே மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் காலையில் எழுந்தபோது மகளைக் காணாமல் கணேஷின் மனைவி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் கணேஷிடம் விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா தடுத்துவைத்தது கொடூரச் செயல்: ஐ.நா சபை!!

aus

அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் 46 பேரை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அவுஸ்திரேலியா காலவரையின்றி தடுத்துவைத்திருப்பது, கொடூரமான, மனிதத் தன்மையற்ற, இழிவுபடுத்தும் விதமான செயல் என்று ஐநா சபை குற்றம் சாட்டியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் இந்தச் செயல் காரணமாக தடுத்துவைக்கப்பட்டவர்கள் கடுமையான உளவியல் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று இவர்களது வழக்குகளை பரிசீலித்த ஐநா குழுவொன்று கண்டறிந்துள்ளது.

குறைந்தது இரண்டரை ஆண்டுகள் காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்தத் அகதிகளை அவுஸ்திரேலியா உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அவர்களுக்கு நஷ்டஈடும் புனர்வாழ்வும் அளிக்க வேண்டும் என ஜெனீவாவிலிருந்து இயங்கும் மனித உரிமைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் 42 பேர், மியன்மாரிலிருந்து சென்ற ரோஹிஞ்சாக்கள் 3 பேர், குவைத் பிரஜை ஒருவர் ஆகியோர் அடங்கிய இந்த அகதிகள் தாங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளது தொடர்பில் ஐநா மனித உரிமைக் குழுவிடம் முறையிட்டிருந்தனர்.

தடுத்துவைக்கப்பட்டதை எதிர்த்து அவுஸ்திரேலிய நீதிமன்றங்களில் வழக்கு தொடர தங்களுக்கு வழியில்லாமல் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இவர்களை அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியாது. ஆனால் அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டால் இவர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவார்கள் என்று கருதப்பட்டு குடிவரவுத்துறையின் தடுப்புக்காவல் மையத்திலேயே இவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அகதிகள் தடுத்துவைக்கப்பட்டது எதேச்சதிகாரமான செயல் என்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்பாட்டின் 9ஆம் சரத்தை மீறும் செயல் என்றும் சுயாதீன மனித உரிமை நிபுணர்கள் 18 பேர் அடங்கிய ஐ.நா குழு கண்டறிந்துள்ளது.

2009 மார்ச் மாதத்துக்கும் 2010 டிசம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருந்த இந்த தஞ்சக் கோரிக்கையாளர்களில் பெரும்பான்மையானோர் முதலில் கிறிஸ்துமஸ் தீவில் இறங்கியிருந்தவர்கள்.

இவர்களில் ஐந்து பேர் கடலில் இருந்து மீட்கப்பட்டு முதலில் இந்தோனேஷியாவில் கரைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டுவரப்பட்டவர்கள்.

தாம் ஏன் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறோம் என்று தமக்குத் தெரிவிக்கப்படவில்லை எனவும், அவுஸ்திரேலிய நீதிமன்றங்களில் தமது தடுப்புக்காவலை எதிர்த்து மறுஆய்வு மனு தொடுக்கும் சட்ட வழிமுறைகள் தமக்கு இல்லை என்றும் இந்த அகதிகள் ஐநா மனித உரிமைக் குழுவிடம் முறையிட்டிருந்தனர்.

தடுத்துவைக்கப்பட்டவர்களில் ஏழு பேர் மட்டும் விடுவிக்கப்பட்டு, அவுஸ்திரேலிய சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் என ஐநாவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

-BBC-

மெட்ராஸ் கபே படத்தை திரையிட தியட்டர் அதிபர்கள் மறுப்பு : படம் வெளியாவதில் சிக்கல்..!!

madrascafe

மெட்ராஸ் கபே படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மறுத்து விட்டனர். இதனால் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் இப்படம் இன்று ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்தியில் தயாரான இப்படத்தை தமிழிலும் டப்பிங் செய்துள்ளனர்.

தமிழ் பதிப்புக்கு தணிக்கை குழுவினர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. மெட்ராஸ் கபே படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாக தமிழ் அமைப்பினர் எதிர்த்தனர். இதையடுத்து இரு தினங்களுக்கு முன் பிரத்யேகமாக படத்தை அவர்களுக்கு திரையிட்டு காட்டினர். படம் பார்த்த சீமான், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் முழுக்க தமிழர்களுக்கு எதிரான படம் இது என கொந்தளித்தனர்.

விடுதலைப்புலிகள், ஈழத்தமிழர்களை மட்டுமே படத்தில் கொச்சைப்படுத்தி உள்ளனர் என்றும், சிங்களர்கள் பற்றியோ, இலங்கை ராணுவத்தினர் தமிழர்களை கொன்று குவித்தது பற்றியோ எந்தவொரு காட்சியும் இடம் பெறவில்லை என்றும் அவர்கள் கூறினர். இந்தியா முழுவதும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று வைகோ வற்புறுத்தினார். மீறி திரையிட்டால் தியேட்டர்களில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.

இந்த நிலையில் மதுரை உயர் நீதிமன்றத்தில் மெட்ராஸ் கபே படத்துக்கு தடை விதிக்க கோரி வக்கீல் பி.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் ராஜேசுவரன், மதிவாணன் ஆகியோர் விசாரித்தனர். படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வக்கீல் டி.ஆர்.ராஜா கோபால் இலங்கையில் நடந்த உண்மையான சம்பவத்துக்கும், படத்தில் கூறப்பட்டுள்ள கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றார்.

நீதிபதிகள் படத்தை வெளியிட தடை எதுவும் விதிக்கவில்லை. இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. மத்திய திரைப்பட தணிக்கை குழு ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
விசாரணையை அடுத்த மாதம் 3ம் திகதிக்கு தள்ளி வைத்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் நேற்று மாலை சென்னையில் அவசர கூட்டம் நடத்தினார்கள். சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். மெட்ராஸ் கபே படத்தை திரையிடுவதா, வேண்டாமா என்பது குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டது என்று பன்னீர் செல்வத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட போது ‘‘மெட்ராஸ் கபே படத்தை திரையிடுவதா வேண்டாமா அந்தந்த திரையரங்க உரிமையாளர்களே முடிவு செய்து கொள்ளலாம்’’ என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.

திரையரங்க அதிபர் ஒருவர் கூறும் போது ‘‘மெட்ராஸ் கபே படத்தை திரையிடக்கூடாது என தமிழ் அமைப்புகள் எதிர்த்து உள்ளன. முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளனர். தியேட்டர்களுக்கு இது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம்’’ என்று கூறினார். தியேட்டர் முகப்புகளில் வைக்கப்பட்டு இருந்த மெட்ராஸ் கபே பட பேனர்களும் அகற்றப்பட்டு விட்டன.

திகார் சிறையில் பவர்ஸ்டார் : ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்..!!

power

வேலூர் சிறை அதிகாரிகள் நன்னடத்தை சான்று வழங்காததால் நடிகர் சீனிவாசன் டெல்லி திகார் சிறையில் இருந்து, ஜாமினில் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்த தொழில் ஓட்டல் அதிபர் ரங்கநாதனிடம் 50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்ட நடிகர் சீனிவாசன் வாங்கிய கடனை கொடுக்காமல் ஏமாற்றியதால் கடந்த ஏப்ரல் 26ம் திகதி வேலூர் சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக, டெல்லியை சேர்ந்த தொழில் அதிபரிடம் ஐந்து கோடி ரூபாய் மோசடி செய்த நடிகர் சீனிவாசனை, டெல்லி போலீசார் கடந்த ஜூன், 4ம் திகதி அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கு கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைத்தனர்

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பதிவு செய்யப்பட்ட ஆறு வழக்குகளில் இருந்து ஜாமினில் விடுவிக்க, பிணயத் தொகை செலுத்தி உள்ளனர். இந்த ஆவணங்கள், டெல்லி போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

டெல்லி வழக்கிலும், ஜாமின் பெற முயற்சி நடக்கிறது. வேலூர் சிறையில் இருந்த போது, அவருக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கினால் தான் திகார் சிறையில் ஜாமின் கிடைக்கும்.

இதனால் வேலூர் சிறையில் நன்னடத்தை சான்றிதழ் வாங்க முயற்சி நடந்தது. சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால், திகார் சிறையில் இருந்து பவர்ஸ்டார் சீனிவாசன் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பவருக்கு ஜாமீன் கிடைக்கும அல்லது திகார் சிறை வாழ்க்கை 100 நாட்களை தாண்டிவிடுமா என்பது வேலூர் அதிகாரிகளின் கைகளில்தான் உள்ளது என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு யு சான்றிதழ்..!!

varuthappadatha-valipar-sangam

கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் ஆகிய வெற்றி படத்திற்குப்பின் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தில் சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, பரோட்டா சூரி போன்றோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இசை இமான். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திக்கேயன் சொந்த குரலில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த மாதம் 6ம் திகதி படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் படக்குழுவினர் சந்தோசத்தில் உள்ளனர்

ஆர்யா-விஜய் சேதுபதி இணையும் புறம்போக்கு!!

purampokku

யுடிவி மோஷன் பிக்சர்ஸ், தி வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கு புறம்போக்கு என பெயரிட்டிருக்கின்றனர். இயற்கை, பேராண்மை படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இந்த படத்தை இயக்குகிறார்.

ஆர்யா, விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களைத் தவிர மூன்றாவதாக இன்னொரு நாயகனும் நடிக்கப் போகிறார். கதாநாயகியர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

புறம்போக்கு என தலைப்பா என ஆச்சர்யத்துடன் கேட்பவர்களுக்கு, அதற்கான காரணத்தை சொல்கிறார் இயக்குனர் ஜனநாதன்.
புறம்போக்கு என்ற வார்த்தையை எல்லோரும் கொச்சையாகப் பேசுகிறார்கள். இந்த சொல் பற்றி மேலோட்டமான புரிதல் உள்ளது.

ஆனால் புறம்போக்கு என்கிற சொல் ஆழமான வரலாற்று ரீதியான பொருள் கொண்டது. வாழ்வியலின் அடிப்படையிலான கருத்தை உள்ளடக்கியதாகும். மக்கள் தேவைக்காக இருந்த பொது இடமான புறம்போக்கு நிலங்கள் இன்று மெல்ல மெல்ல தனியாரின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி வருகிறது.

அதைப் பற்றிய பின்னணியை கொண்ட சிந்தனைதான் இப்படம். புறம்போக்கு என்று இனியாரும் ஏளனமாக கேலியாகப் பேசவேண்டாம்.
மலை, பனிச்சிகரங்கள், ஆறு, சர்வதேச கடல்பரப்பு, காற்று, ஒளி, நிலவொளி மட்டுமல்ல எல்லையற்ற அண்டவெளியும்கூட புறம்போக்குதான். எதுவும் தனியுடைமையல்ல. எல்லாமே பொதுவுடைமைதான் என்று கூறுகிறார்.

இப்படத்தில் உலகப் படங்களில் பணிபுரிந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர். ஏகாம்பரம் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பை இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம், சென்னை ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும் அக்டோபரில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. 2014 ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஈழ நேருவை இலங்கைக்கு நாடு கடத்த நீதிமன்றம் இடைக்கால தடை!!

eela nerhu

ஈழத் தமிழரான ஈழ நேருவை இலங்கைக்கு நாடு கடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. இலங்கை அகதிகளான செந்தூரன், ஈழ நேரு, சவுந்தரராசன் ஆகியோரை இலங்கைக்கு நாடு கடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் ஈழ நேருவின் மனைவி, இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அம் மனுவில், ஈழநேருவை இலங்கைக்கு அனுப்பினால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதனால் அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதி ஈழ நேருவை இலங்கைக்கு அனுப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுதாரரின் புகார் தொடர்பாக மத்திய, மாநிலஅரசுகள் செப்டம்பர் 27ம் திகதிக்குள் பதில் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

காதலில் விழுந்த தினேஷ் கார்த்திக்!!

dineshkarthik_dipikapalligal

திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் காதலில் விழுவது போல விளையாட்டு உலகிலும் ஒரு புதிய காதல் பூத்துள்ளது.
ஸ்குவாஷ் போட்டியில் கலக்கிக் கொண்டிருப்பவர் சென்னையில் பிறந்தவரான மலையாளத்து தீபிகா பல்லிக்கல்.

இளம் வயதிலிருந்தே புகழுச்சியில் இருக்கும் தீபிகா ஸ்குவாஷ் வீராங்கனைகள் வரிசையில் சர்வதேச அளவில் உச்சத்தில் உள்ளார்.
தீபிகாவின் அழகில் மயங்கிய திரையுலகினர் அவரை நடிக்க வைக்க கடுமையாக போராடிப் பார்த்தார்கள்.

ஏன் நடிகர் சிம்புவே கூட தீபிகாவை அணுகியதாக கூறப்பட்டது. ஆனால் அழகாக சிரித்தபடி அத்தனை அழைப்புகளையும் நிராகரித்து விட்டார் தீபிகா. கிசுகிசுக்கள் எதிலும் சிக்காமல் இருந்த தீபிகா தற்போது தினேஷின் காதல் பந்தில் போல்டாகி விட்டார்.

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் விரர் தினேஷ் கார்த்திக் 21 வயதிலேயே நிகிதா என்பவரை மணந்தார். சின்ன வயது முதலே பழகியவர் நிகிதா. ஆனால் இந்தத் திருமணம் சீக்கிரமே உடைந்து போனது. நிகிதாவுக்கும், இந்திய கிரிக்கெட் அணியில் இருந்த ஒரு வீரருக்கும் இடையே ரகசியத் தொடர்பு இருந்துள்ளதாம். இந்த வீரர் தினேஷின் நெருங்கிய நண்பரும் கூட.

இதனால் அதிர்ச்சியாகிப் போன தினேஷ் மனைவியை விட்டுப் பிரிந்தார். பின்னர் விவாகரத்து செய்து விட்டார். நிகிதாவைப் பிரிந்த பின்னர்தான் அவர் கிரிக்கெட்டில் முழு வீச்சில் ஆர்வம் காட்டினார். பல போட்டிகளில் பட்டையைக் கிளப்பினார். இந்திய அணியில் தற்போது அவருக்கு ஒரு நல்ல இடம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் வைத்து தீபிகாவை சந்தித்துள்ளார் தினேஷ். முதல் பார்வையிலேயே அவர்களுக்குள் ஏதோ புரிந்து போய் விட்டதாம். அதன்பின்னர் அடிக்கடி சந்திக்க நட்பு பூத்து, காதலாகி கணிந்தது.

கடந்த மார்ச் மாதம் பயிற்சிக்காக இங்கிலாந்து போயிருந்தார் தீபிகாவை சந்தித்து இனிய அதிர்ச்சி கொடுத்தார் தினேஷ். பின்னர் சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் ஆடியபோது தினேஷுடன் நிறைய நேரத்தை செலவிட்டுள்ளார் தீபிகா.

தீபிகாவுடன் ஏற்பட்டுள்ள இந்தக் காதலால்தான் தினேஷ் முன்பை விட சிறப்பாக ஆடுவதாக கூறுகின்றனர். தீபிகாவின் காதல் உண்மைதான் என்று அவரது வீட்டார் கூறுகின்றனர். இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி விட்டனராம்.

இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் கூட முடிந்து விட்டதாகவும் சொல்கிறார்கள். திருமணம் எப்போது என்பது இன்னும் முடிவாகவில்லை.

பைக் ஓட்டும் காட்சிகளில் ஹெல்மெட் இல்லாமல் நடிக்கமாட்டேன் : அஜித்..!!

Actor Ajith with Ducati Bike in Aarambam Movie Stills

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜீத். இவர் தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஆரம்பம், சிவா இயக்கத்தில் வீரம் ஆகிய படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் பைக் ரேசிலும் பிரியமுடையவர். இதனால் அவர் படத்தில் பைக் ஒட்டும் காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ”நான் இனிமேல் நடிக்கும் படத்தில் பைக் காட்சிகள் வரும்பொழுது ஹெல்மேட் போடாமல் நடிக்க மாட்டேன். அப்படி நடித்தால் எனது ரசிகர்களும் அதே பின்பற்றுவார்கள் என்ற அச்சத்தில் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்றார்.

ஜில்லாவைத் தொடர்ந்து விஜயின் அதிரடி..!!

vijay

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த துப்பாக்கி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இக்கூட்டணி ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறது. இது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டு விட்டது.

இந்நிலையில் விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணையவிருக்கும் புதிய படத்திற்கு அதிரடி என பெயரிட்டு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்னும் இது உறுதி செய்யப்படவில்லை.

விஜய் நடித்த தலைவா படம் பல்வேறு தடைகளை தாண்டி தற்போது தமிழகத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் தற்போது அறிமுக இயக்குனர் நேசன் இயக்கும் ஜில்லா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை சிறையில் இருக்கும் 106 மீனவர்களை மீட்க நடவடிக்கை : சல்மான் குர்ஷித்..!!

salman-kurshid

இலங்கை சிறையில் வாடும் 106 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் இன்று திமுக, அதிமுகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக கேள்வி எழுப்பினர். திமுக சார்பில் வசந்தி ஸ்டான்லியும் அதிமுக சார்பில் மைத்ரேயனும் கருத்துகளைத் தெரிவித்தனர்.

இந்தக் கருத்துகளுக்குப் பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை சிறையில் தற்போது 106 தமிழக மீனவர்கள் உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழக மீனவர்களை மீட்க பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போதும், இந்தியா வந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மீனவர்களை விடுதலை செய்யும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

ஸ்டூவர்ட் பிராட்டை அழ வைக்க வேண்டும் : ஆஸி. பயிற்சியாளர்!!

leman

பிடியெடுப்பு என தெரிந்தும் வேண்டுமென்றே களத்தை விட்டு வெளியேற மறுத்த இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்டை அடுத்த ஆஷஸ் தொடரின் போது அழ வைக்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய ரசிகர்களை பயிற்சியாளர் டேரன் லீமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டிங்காமில் கடந்த மாதம் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து விரர் ஸ்டூவர்ட் பிராட் ஆட்டமிழந்தும் நடுவர் விரலை உயர்த்தாததால் வெளியேற மறுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அவர் 37 ஓட்டங்களில் இருந்த போது சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகரின் ஓவரில் பந்து அவரது துடுப்பில் உரசியபடி விக்கெட் காப்பாளர் பிராட் ஹேடினிடம் சென்றது. அதை அவர் பிடியெடுக்கதவறினாலும், பந்து விக்கெட் காப்பாளரின் கையுறையை உரசிக் கொண்டு, முதலாவது ஸ்லிப்பில் நின்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க்கிடம் புகுந்தது. ஆனால் நடுவர் ஆட்டமிழப்பை வழங்க மறுத்தார்.

ஸ்டூவர்ட் பிராட்டும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. நடுவரின் மோசமான தீர்ப்பையும் ஸ்டூவர்ட் பிராட் நடந்து கொண்ட விதத்தையும் அவுஸ்திரேலிய வீரர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்றாலும் வேறு வழியின்றி தொடர்ந்து விளையாடினர். அதன் பிறகு பிராட் 65 ஓட்டங்களில் தான் ஆட்டம் இழந்தார்.

இந்த டெஸ்டில் அவுஸ்திரேலியா 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஒரு வேளை ஸ்டூவர்ட் பிராட் தொடக்கத்திலேயே நடையை கட்டியிருந்தால் அவுஸ்திரேலியா வெற்றி கூட பெற்றிருக்க முடியும். இந்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட் மீது அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீமன் திடீரென சூடான தாக்குதலை தொடுத்திருக்கிறார். அவுஸ்திரேலிய வானொலிக்கு லீமன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது..

காலம் கடந்தாலும் கூட ஸ்டூவர்ட் பிராட்டின் பிடியை அவுஸ்திரேலிய வீரர்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். இது ஒரு அப்பட்டமான மோசடி. அவுஸ்திரேலிய மக்களும் இதை மறக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். எல்லா பிடியெடுப்புக்களுக்கும் உடனே பெவிலியன் திரும்ப வேண்டும் என்று சொல்லவில்லை.

சிலவற்றில் சந்தேகம் இருக்கும். ஆனால் துடுப்பில் உரசியபடி முதலாவது ஸ்லிப்பில் கேட்ச் ஆகும் போது வெளியேற மறுப்பதை ஜீரணிக்க முடியாது. அடுத்த ஆஷஸ் தொடர் எங்கள் நாட்டில் கோடை காலத்தில் நடைபெற உள்ளது. அப்போது எங்களது ரசிகர்கள் அவருக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் (கிண்டல், கேலி உள்ளிட்டவை மூலம் வெறுப்படைய செய்து) என்று நம்புகிறேன்.

அந்த தொடரின் போது ஸ்டூவர்ட் பிராட் கண்ணீர் வடித்தபடி தான் நாட்டிற்கு திரும்புவார் என்று நம்புகிறேன். பந்து துடுப்பில் உரசி கொண்டு தான் சென்றது என்பது பிராட்டுக்கு நன்கு தெரியும். நடுவர்களின் மோசமான தீர்ப்பு தான், அவரை முட்டாள் போன்று ஆக்கி விட்டது. ஆனால் இப்போது அவர் வெளிப்படையாக கூறி வரும் கருத்துகள் அபத்தமானது. அதனால் தான் அவர் மீது எங்கள் நாட்டு மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. என்று லீமன் கூறினார்.

உயரமான இடத்திற்கு சென்றால் உடல் எடை குறையும் : ஆய்வில் தகவல்..!!

man-climbing

மனிதனின் உடல் எடை பூமியின் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாழ்வான பகுதியில் இருக்கும் நபர் உயரமான இடத்திற்கு செல்லும் போது அவரது உடல் எடை குறைவதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதனின் உடல் எடைக்கும் புவி ஈர்ப்பு விசைக்கும் உண்டான தொடர்பு குறித்து அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பூமியின் வெவ்வேறு இடங்களில் புவி ஈர்ப்பு விசை மாறுபடுவதால் மனித உடல் எடையும் புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்ப மாறுபடுவதாக, அவுஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து, ஆய்வாளர் கிறிஸ்டியன் ஹர்ட் கூறியதாவது…

பூமி சீரான கோள வடிவில் இல்லை. இதில் பல்வேறு உயர்ந்த குன்றுகளும் பள்ளத்தாக்குகளும் ஆழமான கடல்களும் உள்ளன. இந்த அனைத்து பகுதிகளிலும் புவி ஈர்ப்பு விசை, ஒரே சீரானதாக அமைவதில்லை.

பூமியின் மைய நோக்கு விசையின் காரணமாகவே இங்குள்ள பொருட்கள் அனைத்தும் சுற்றும் பூமியிலும் நிலையாக நிலைத்து நிற்கின்றன. எனினும் இந்த மைய நோக்கு விசை, பூமியின் மையப் பகுதியில் இருந்து செயல்படுவதால் உயரமான மலைக்குன்றுகளில் நிலவும் விசையிலும் ஆழமான பகுதிகளில் நிலவும் விசையிலும் மாறுபாடுகள் உள்ளன.

அவ்வகையில் பூமியின் ஒரு பகுதியிலிருந்து உயரமான மலைப் பகுதிக்கு செல்லும் ஒருவருக்கு உடல் எடை கணிசமான அளவு குறைகிறது. பூமியின், புவி ஈர்ப்பு விசை பற்றி துல்லியமாக கணிக்கும் சூப்பர் கம்ப்யூட்டர்களின் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், ஒவ்வொரு 250 மீட்டர் இடைவெளியிலும் ஒவ்வொரு 5 வினாடிகளில் புவி ஈர்ப்பு விசையில் மாறுபாட்டை உணர முடிந்தது.

அவ்வகையில் பூமியின் உயரமான பகுதிகளில் ஈர்ப்பு விசை குறைவாகவும் தாழ்வான பகுதிகளில் அதிகமாகவும் பதிவானது. தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் உள்ள நிவேடோ ஹுயாஸ்கரன் மலைப்பகுதியில் மிகக் குறைந்த புவி ஈர்ப்பு விசையும் ஆர்க்டிக் கடல் பகுதியில் அதிக அளவிலான புவி ஈர்ப்பு விசையும் பதிவாகின.

ஆர்க்டிக் கடல் பகுதியில் இருக்கும் நபரின் உடல் எடை நிவேடோ மலைப்பகுதிக்கு செல்லும் போது ஒரு சதவீதம் குறைகிறது. ஆர்க்டிக் கடல் பகுதியில் 100 மீட்டர் உயரத்திலிருந்து குதிக்கும் நபர் நிவேடோ மலைப்பகுதியில் 100 மீட்டர் உயரத்திலிருந்து குதிக்கும் போது, நிலப்பகுதியை அடைய 16 மில்லி நொடிகள் தாமதமாகிறது.

குதிக்கும் நபர் ஒரு சதவீத உடல் எடையை இழப்பதே இதற்கு காரணம். பூமியின் வெவ்வேறு இடங்களில் இவ்வகை எடை மாறுபாடு ஏற்படினும், மனிதனின், நிறையில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை. இவ்வாறு, கிறிஸ்டியன் ஹர்ட் கூறினார்.

ஹரியின் சம்பளம் 5 கோடி ரூபாய்!!

Hari

சூர்யாவை இயக்கும் இயக்குநர் அடுத்த படத்தை கார்த்தியை வைத்து இயக்குவார். அதேபோல, கார்த்தியை இயக்கும் இயக்குநர், அடுத்த படத்தில் சூர்யாவை இயக்குவார். இந்த கொடுக்கல் வாங்கல் பல காலமாக நடந்து வருகிறது. இதை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் கண்ணும் கருத்துமாகச் செய்து வருகிறது.

அப்படித்தான் சிங்கம்-2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே அடுத்து கார்த்திக் படத்தை இயக்குவதாக ஒப்புக் கொண்டார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பதாக இருந்தது.

சிங்கம்-2 வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்த ஜூனியர் என்.டி.ஆர் தன்னை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என ஹரியிடம் கேட்க அவரும் ஓ.கே. சொல்லிவிட்டார்.

சம்பளம் 5 கோடி என்றதும் கார்த்தியின் படத்தை டிராப் செய்துவிட்டு ஜூனியர் என்.டி.ஆரை வைத்து தெலுங்கில் ஆக்‌ஷன் கதயொன்றை இயக்கப் போகிறார் ஹரி.

சர்ச்சையில்லாமல் சாமி இயக்கும் படம்!!

gangarruமிருகம், உயிர், சிந்து சமவெளி போன்ற படங்களை இயக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் சாமி. தற்போது எந்தவித சர்ச்சையும் இல்லாமல் கங்காரு படத்தை இயக்கி வருகிறார்.

80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. முழுக்க முழுக்க கொடைக்கானல் மலையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. அமைதிப்படை இரண்டாம் பாகத்தைத் தயாரித்த வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

நாயகனாக புதுமுகம் அர்ஜுனா, நாயகியா வர்ஷா அஸ்வதி நடித்து வருகின்றனர். இவர்களுடன் பிரியங்கா, தம்பி ராமையா, கலாபவன் மணி, ஆர்.சுந்தரராஜன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் முதல் முறையாக இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

இந்தப் படத்துக்காக கொடைக்கானல் மலை உச்சியில் ஒரு கிராமத்தையே செட் போட்டு அசத்தியுள்ளனர். சாய்குமார் கதை எழுத, திரைக்கதை அமைத்து, வசனம் எழுதி, இயக்குகிறார் சாமி. ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்கிறார்

தங்கையை அண்ணனும், அண்ணனை தங்கையும் கங்காரு போல் கண்ணும் கருத்துமாக காப்பற்றுவது தான் படத்தின் கதை. போதாக்குறைக்கு காதலியும் காதலனை கங்காரு போல காப்பாற்றுகிறாராம்.

அன்பை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை இது. எந்தவித செக்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இல்லாமல் குடும்பத்தோடு உட்கார்ந்து ரசிக்கும் படமாக இருக்கும் என்கிறார் தயாரிப்பாளர்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவை வைரமுத்துவுக்கான பாராட்டு விழாவாக நடத்தப் போகிறார்களாம். அக்டோபர் 14ம் திகதி சென்னை டிரேட் சென்டரில் விழா நடைபெற உள்ளது.