மட்டக்களப்பு ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா மீது கடுமையான விமர்சனம்..
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய உதவி வீடுகளுக்கான பயனாளிகள் தெரிவு குறித்து இந்தியா மீது தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கவலையும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளனர்.
நாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று...
தமிழ் அரசியல் கைதிகளை வடக்கு, கிழக்கிற்கு மாற்றக் கோரிக்கை..
இலங்கையின் கொழும்புச் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு அரசாங்கத்தைக் கோரியுள்ளது.
இந்த தமிழ் அரசியல் கைதிகளில்...
இலங்கை அதிகாரிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதற்கு கடும் எதிர்ப்பு..
பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பை மீறி இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் வெலிங்டன் இராணுவ முகாம் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த...
மாரடைப்பால் உயிரிழந்தார் மணிவண்ணன் – அதிர்ச்சியில் திரை உலகம்
பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் காலமானார். சென்னை நெசபாக்கத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட அவரது இல்லத்திலேயே உயிர் பிரிந்தது.
மணிவண்ணன் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர்...
கொள்ளுப்பிட்டி பூமாரி அம்மன் ஆலயத்தை அகற்றும் உத்தரவு அதிர்ச்சியளிக்கின்றது!- டி.எம். சுவாமிநாதன் எம்.பி.
கொள்ளுப்பிட்டி ஸ்ரீ பூமாரி அம்மன் ஆலயத்தை உடனடியாக அப்புறப்படுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டமை பேரதிர்ச்சி தரும் விடயமாகும் என்று கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் முகாமைத்துவ தர்ம கர்த்தாவும் எம்.பி.யுமான டி.எம்.சுவாமிநாதன்...
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா இருப்பது இலங்கை அரசுக்கு அச்சுறுத்தல்- கோத்தபாய ராஜபக்ச
ஈழத் தமிழர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு அளித்து வருவது இலங்கை அரசை கலக்கமடையச் செய்துள்ளது என பாதுகாப்புச் செயலரான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள கொத்தலாவல இராணுவ பல்கலைக் கழகத்தில் நேற்று...
2028ம் ஆண்டளவில் சீனாவின் சனத்தொகையை விஞ்சப் போகும் இந்தியா..
2028ஆம் ஆண்டளவில் சீனாவை விஞ்சி உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என ஐநா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
அந்த சமயத்தில் இந்தியா சீனா ஆகிய இரண்டு நாடுகளின்...
மீனவர்களுக்கு கட்டாயக் காப்புறுதி – இல்லையேல் கடலுக்குள் செல்ல முடியாது..
இலங்கையின் தென்பகுதி மற்றும் தென் மேற்குக் கரையோரங்களில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை, கடற்காற்று காரணமாக 48 மீனவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் காப்புறுதி செய்யாமல் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அரசாங்கம்...
கோட்டபாய ராஜபக்ஷ்வை கொல்ல முயன்ற 6 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்.
குண்டொன்றை வெடிக்க வைத்து பாதுகாப்புச்செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ்வை கொலை செய்ய முயன்ற சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் 6...
அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறுவோம்- குமார் சங்கக்கார..
சம்பியன்ஸ் A குழுவில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்று இலங்கை அணியின் அனுபவ வீரர் குமார் சங்கக்கார கூறியுள்ளார்.நேற்று முன்தினம் இரவு இங்கிலாந்துடன் நடந்த...
அரையிறுதியில் தென் ஆப்ரிக் அணி..
மேற்கிந்திய தீவு , தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது . நேற்று நடைபெற்ற இப்போட்டி, கனமழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது. தலா 31...
கின்னஸ் புத்தகத்தில் இலங்கை மூதாட்டியின் பெயர்..
இலங்கையைச் சேர்ந்த சேர்ந்த 116 வயது மூதாட்டியை உலகின் மிகவும் வயதான மனிதராக கின்னஸ் சாதனைத் பதிவேடு அறிவித்துள்ளது.
உலகின் வயதான மனிதராக அறிவிக்கப்பட்டிருந்த ஜப்பானைச் சேர்ந்த, ஜிரோமோன் கிமுரா (Jiroemon Kimura) கடந்த...
மேலும் 41 இலங்கை அகதிகள் இன்று நாடு கடத்தல்..
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற மேலும் ஒரு தொகுதி இலங்கை அகதிகள் இன்று நாடு கடத்தப்படுவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
41 இலங்கை அகதிகள் இவ்வாறு விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர்...
சென்னையில் இருந்து வந்த இலங்கையர் உடல் முழுதும் தங்கம்!
இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கை வந்த இலங்கையர் ஒருவரின் உடலில் 32 தங்கத் தகடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டு சுங்கப்...
43 இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது..
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 43 இலங்கையர்களை இந்தோனேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இந்தோனேசியாவின் சியான்ஜுர் பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜாவா தீவின் கடல் ஊடாக அவர்கள் அவுஸ்திரேலியா செல்வதற்கு...
இலங்கை அணி அபார வெற்றி- அரை இறுதிக்கான வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டது..
செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தலைவர் மத்தியூஸ் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து...
















