வவுனியா செய்திகள்

வவுனியாவில் கனடிய புலம்பெயர் உறவுகளினால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!!

  கனடா நாட்டில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு.திருமதி. வேலாயுதபிள்ளை சந்திராதேவி குடும்பத்தினரின் நிதியுதவியுடன் தெரிவு செய்யப்பட்ட 10 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு நல்லின கறவைப்பசுக்கள் நேற்று (17.04.2017) வழங்கிவைக்கப்பட்டன. சாஸ்திரிகூழாங்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட...

வவுனியாவில் காப்பாற்ற முயன்றவர்களை தாக்கிய யானை சுட்டுக்கொலை!!

  வவுனியா ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் இன்று (17.04.2017) காலை 8.30 மணிக்கு கிணற்றில் வீழ்ந்து கிடந்த இரண்டு யானைகள் மீட்கப்பட்டன. நேற்றைய தினம் (16.04) இரண்டு குட்டி யானைகளும் இரண்டு பெரிய யானைகளும் கிணற்றிள் வீழ்ந்திருந்த...

வவுனியா தாண்டிக்குளம் கந்தசாமி ஆலயத்தில் திருட்டு!!

  வவுனியா தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் நேற்று (16.04.2017) இரவு திருடர்கள் ஆலயத்தின் உண்டியலை உடைத்து பெருமளவு பணத்தினைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. நேற்று...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!!

வவுனியாவில் இன்று (17.04.2017) தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டில் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசார் சடலத்தினை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. வவனியா வெளிக்குளம்...

வவுனியா ஆசிகுளம் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி!!

  வவுனியா ஆசிகுளம் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி கழகத்தின் தலைவர் பி.ரஞ்சித்குமார் தலைமையில் நேற்று (16.04.2017) வெகுசிறப்பாக விளையாட்டுகழக மைதானத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின்...

வவுனியாவில் கிணற்றில் விழுந்த 3 யானைகள் மீட்பு : அதிகாரியை தாக்க முயன்ற யானை சுட்டுக்கொலை!!

  வவுனியா ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் நேற்று (16.04.2017) காலை 8.30 மணிமுதல் இரண்டு குட்டியானைகளும் இரண்டு பெரிய யானைகளும் கிணற்றிள் வீழ்ந்து உயிருக்குப் போராடி வந்தன. ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் நான்கு யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக வவுனியா...

வவுனியாவில் 52வது நாளாகத் தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 52 ஆவது நாளாகவும் இன்று (16.04) தொடர்கிறது. குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும்,...

வவுனியாவில் புத்தாண்டை மாற்றிஅமைத்த யுரேனஸ் இளைஞர் கழகம்!!

  யுரேனஸ் இளைஞர் கழக இளைஞர் யுவதிகளினால் நேற்றுமுன்தினம் புத்தாண்டு தினத்தை விசேட புகைத்தல் விழிப்புணர்வு தினமாக மாற்றி உள்ளனர் . கிராமங்களில் உள்ள மக்களிடம் இது தொடர்பாக கலந்துந்துரையாடி வீடுகள் கடைகள் பொது இடங்கள்...

வவுனியா ஒமந்தையில் பெரியம்மா முன்பள்ளி திறப்பு விழா!!

  வவுனியா ஒமந்தை வேப்பங்குளத்தில் பெரியம்மா முன்பள்ளி திறப்பு விழா நேற்று (15.04.2017) காலை 10.30 மணியளவில் ரி.ஆர்.ரி இன் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திருமதி சிவசக்தி அருந்ததி தலமையில் நடைபெற்றது. சுமார் எட்டு லட்சம்...

வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்து உயிருக்குப் போராடும் நான்கு யானைகள்!!

  வவுனியா ஓமந்தை கொம்புவைத்தகுளத்தில் இன்று(16.04.2017) காலை வயல் வெளியில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்த இரண்டு யானைகளும் இரண்டு குட்டி யானைகளும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றன. தற்போது சம்பவ இடத்திற்கு ஓமந்தை பொலிஸார் விரைந்துள்ளதுடன் வன விலங்கு...

வவுனியாவில் கோர விபத்து : ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

  வவுனியா கலுகுன்னாமடுவ பகுதியில் இன்று (16.04.2017) காலை 11 மணியளில் இடம்பெற்ற வாகன விபத்து ஏழு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. கலுகுன்னாமடுவ பகுதியில் பாதையில்...

வவுனியா வைத்தியசாலையில் ஒருவயதுக் குழந்தை சிகிச்சை பலனின்றி மரணம்!!

  வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று (15.04.2017) பிற்பகல் 2.30 மணியளவில் உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா இரணைஇலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த தம்பதிகளுக்கு...

வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய தேர் திருவிழா!(படங்கள்,வீடியோ)

வவுனியா வைரவ புளியங்குளம்  ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலயத்தில் ஏவிளம்பி  வருட தேர் திருவிழா நேற்று ( 14.04.2016)சிறப்பாக இடம் பெற்றது. வவுனியாவில் புதுவருடபிறப்பை முன்னிட்டு  இவ்வாலயத்தில்தேர்த்திருவிழா இடம்பெறுவது சிறப்பாகும். மேற்படி தேர்த்திருவிழாவில் ஏராளமான...

வவுனியா பூந்தோட்டம் வீதியில் விபத்து : ஒருவர் படுகாயம்!!

  இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ளார். வவுனியாவிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென குடைசாய்ந்ததில் சாரதி படுகாயமடைந்து...

வவுனியாவில் அனாதரவாக வீதியோரத்தில் கிடந்த மோட்டார் சைக்கிள் மீட்பு!!

வவுனியா - யாழ். பிரதான வீதியில் வீதியோரத்தில் ஆனாதரவான நிலையிலிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிசாரால் நேற்றிரவு மீட்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா- யாழ். பிரதான வீதியோரத்தில் நிலத்தில் சரிந்து விழுந்த...

வவுனியா மினி சூறாவளி : தடைப்பட்ட A9 வீதி போக்குவத்து!!

  வவுனியா ஈரப்பெரிய குளம் பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்துள்ளதுடன், மினி சூறாவளி தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக வீதியோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், வீடுகள் சிலவும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், A9...