யாழில் பல்கலைக்கழக மாணவி கொ லை : நாடாளுமன்றில் சரமாரியாக கேள்வி கேட்ட உறுப்பினர்!!

பல்கலைக்கழக மாணவி

யாழ். பல்கலைக்கழக மா ணவி கொ லைசெய்யப்பட்டதன் பின்னணி என்ன? குறித்து ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளது.

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட மா ணவி ஒருவர் க ழுத்து வெ ட்டிக் கொ லை செய்யப்பட்டமை பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருவளை பகுதியைச் சேர்ந்த எச்.டி.ஆர். காஞ்சனா என்பவரே இவ்வாறு க ழுத்து வெ ட்டிப் ப டுகொ லை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி இவ்வாறு கூறியுள்ளார்.

“இந்த கொ லை சம்பவம் குறித்த உண்மையைக்கூறி பொறுப்பேற்கும் பா துகாப்பு அமைச்சர் ஒருவர் இன்று நாட்டில் இல்லாதமை மிகப்பெரிய பி ரச்சினையாகும்.

நாட்டின் பா துகாப்பு உறுதிப்படுத்தி வருவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நாட்டின், மக்களின் பா துகாப்பை உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்காது உள்ளது.

பெரும்பான்மை மக்கள் கொடுத்த வரத்தை இந்த அரசாங்கம் கருத்தில் கொள்ளாது செயற்படுகின்றது. இதற்கு யாழில் இன்று பல்கலைக்கழ மாணவி ஒருவர் கொ லை செய்யப்பட்டமை இதற்கு நல்ல உதாரணம்” என கூறியுள்ளார்.

இலங்கையில் தக்காளிக்கு ஏற்பட்ட மவுசு : 400 ரூபாவை தாண்டும் விலை!!

தக்காளி

இலங்கையின் வரலாற்றில் ஒரு கிலோ தக்காளி 400 ரூபாவை கடந்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளவிய ரீதியிலுள்ள மரக்கறி சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் தக்காளியின் விற்பனை விலையும் அதிகரித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தக்காளி மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக தக்காளியை உற்பத்தி செய்யும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

பதுளை, வெலிமடை, எட்டம்பிட்டிய, ஹாலிஎல மற்றும் பண்டாரவளை ஆகிய பிரதேச விவசாயிகள் தக்காளியை தொகை தொகையாக அழித்துள்ளனர்.

எனினும் கடந்த 3 மாத காலமாக நாட்டில் நிலவிய மழையுடனான காலநிலை காரணமாக தக்காளி உட்பட மரக்கறிகள் அழிவடைந்துள்ளமையினால் அனைத்து மரக்கறிகளின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளன.

தற்போதைய நிலையில் தக்காளி உற்பத்தி செய்த விவசாயிகள் பெரும் லாபம் அடைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நாட்டிலுள்ள அனைத்து மரக்கறி சந்தைகளில் மரக்கறி விலைகள் குறைவடைந்துள்ளதாகவும், அதன் பயன்கள் மக்களுக்கு கிடைக்கிறதா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நுகர்வோர் அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குழந்தை பெற்ற 17 வயது சி றுமி : பெற்றோருக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

17 வயது சி றுமி

தமிழகத்தில் 17 வயது சி றுமி கு ழந்தை பெற்றெடுத்த ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருமண ஆசை காட்டி ஏ மாற்றிய காதலனை பொலிசார் கை து செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த 17 வயது சி றுமியும், ஆரியூர்நாடு குழிவளவு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (22) என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

திருமணம் செய்து கொள்ளவதாக கூறி அப்பெண்ணை ஆசைக்கு இணங்க வைத்து நந்தக்குமார் கர் ப்பமாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணிற்கு ஆண் கு ழந்தை பிறந்துள்ளது. இதையறிந்து அ திர்ச்சியடைந்த சி றுமியின் பெற்றோர் அவரிடம் விசாரித்து நடந்ததை அறிந்தனர்.

பின்னர் திருமணம் செய்வதாக கூறிய நந்தகுமாரிடம் பா திக்கப்பட்ட பெ ண்ணின் பெற்றோர்கள் திருமணம் குறித்து பேசியுள்ளனர். ஆனால் நந்தகுமார் திருமணம் செய்து கொள்ள ம றுப்பு தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அ திர்ச்சியடைந்த பெ ண்ணின் தந்தை காவல் நிலையத்தில் இதுகுறித்து பு கார் அளித்தார். புகாரின்பேரில், நந்தகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வ ழக்குப் பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்து சி றையில் அடைத்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து தடைகளை தகர்த்து உலகளவில் சாதனை படைக்க செல்லும் மாணவன்!!

நாகராஜா தியாகராஜா

வெற்றி என்பது ஒரு மனிதனை எந்த உயரத்திலும் கொண்டு போய் நிற்க வைக்கும். வெற்றிக்கு வறுமை தடை அல்லயென பல்வேறு தடைகளை தாண்டி வவுனியா மாணவன் உலகளவில் சாதனை படைக்க செல்லவுள்ளார்.

அந்த வகையில் விபுலானந்தா கல்லூரி மாணவன் நாகராஜா தியாகராஜா உலகளவில் குத்துச்சண்டை போட்டியில் சாதனை படைப்பதற்காக இன்று பாகிஸ்தான் செல்கின்றார்.

மிகச் சிறந்த வாழ்க்கை முறையே உண்மையான வெற்றிக்கு அடையாளம். அது அவனை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தும். ஒருவர் தான் தீர்மானமாக நினைக்கும் ஒரு விடயத்தை எண்ணியது போல முடித்து விட்டாலே அது வெற்றி தான்.

இந்த நிலையில் வெற்றியில் அளவுகோல் என்று எதுவும் இல்லையென்பதை அம்மாணவன் வறுமையின் மத்தியில் போ ராடி தகர்த்து எறிந்து வெற்றி பெற்றுள்ளார்.
குறித்த மாணவன் மென்மேலும் வளர பலரும் பாராட்டி வருகின்றனர்.

வவுனியாவில் இருந்து சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு செல்லும் வீரர்களுக்கு கௌரவிப்பு!!

வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து சர்வதேச கிக்பொக்சிங் போட்டியில் கலந்துகொள்ள பாகிஸ்தான் செல்லும் வீரர்களுக்கு இன்று (21.01.2020) மாலை வவுனியா நகரசபை மண்டபத்தில் கௌரவம் வழங்கப்பட்டது.

வவுனியாவிலிருந்து இலங்கைக்காக விளையாடுவதற்காக ஏழு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு தேசிய குத்துச்சண்டை அணியுடன் நாளை (22.01) பாகிஸ்தான் நோக்கி பயணமாகவுள்ளனர்.

பாகிஸ்தான் லாகூரில் எதிர்வரும் 23.01.2020 தொடக்கம் 27.01.2020 வரை நடைபெறவுள்ள சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ளவுள்ள வவுனியாவை சேர்ந்த ரி.நாகராஜா, எஸ்.சஞ்சயன், வி.வசீகரன், ஆர்கே.கெவின், பி.ராகுல், எஸ்.ஸ்ரீதர்சன் மற்றும் கெ.நிரோஜன் ஆகிய வீரர்களை வெற்றிபெற வாழ்த்தி அவர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டது.

வவுனியா நகரசபை உபதலைவர் கெ.குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்மணி அகளங்கன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் க.சந்திரகுமார், வன்னி மாவட்ட சமாதான நீதிவான்கள் சங்கத்தின் தலைவர் மாணிக்கம் ஜெகன்,

வவுனியா வர்த்தக சங்கத்தின் செயலாளர் அம்பிகைபாலன், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் இ.நவரட்ணம் ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களை வாழ்த்தி கௌரவித்திருந்தனர்.

உங்களின் தரவுகளை காசாக்கும் பேஸ்புக் : எவ்வளவு சம்பாதிக்கிறது தெரியுமா?

தரவுகளை காசாக்கும் பேஸ்புக்..

உலகின் முதன்மை சமூக வலைத்தள பக்கமான பேஸ்புக் நமது தனிப்பட்ட தரவுகளை பயன்படுத்தி எவ்வாறு பில்லியன் கணக்கிலான டொலர்களை வருவாயாக ஈட்டுகிறது என்பது வெளியுலகில் அதிகமாக அறியப்படாத ஒன்று.

பேஸ்புக்கின் பிரமாண்டமான தரவு சேவையகத்திலேயே நமது அனைத்து தரவுகளும் சேமிக்கப்படுகின்றன. நமது தனிப்பட்ட தரவுகள் மட்டுமின்றி, ஒவ்வொருமுறை நாம் பேஸ்புக்கில் என்னென்ன பதிவேற்றுகிறோம் உள்ளிட்ட அனைத்தும் இந்த சேவையகத்தில் சேமிக்கப்படுகிறது.

வாரம் ஒன்றிற்கு பேஸ்புக்கின் உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த பயனாளர்களால் 14 பில்லியன் புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன. பேஸ்புக்கின் இந்த பிரம்மாண்ட சேவையகமானது மொத்தமாக அமெரிக்காவில் அமைந்துள்ள நான்கு கால்பந்து மைதானத்திற்கு ஒப்பானது.

இதேப்போன்று பேஸ்புக் நிறுவனத்திற்கு என உலகெங்கிலும் 15 பிரம்மாண்ட சேவையகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 15 சேவையகமும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்த சேவையகங்களில் நமது லைக்குகள், நமது நடந்த நாட்களின் நினைவலைகள் என அனைத்தும் சேமிக்கப்படுகின்றன.

இந்த தரவுகளே உரியமுறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, நாள்தோறும் பேஸ்புக்கில் நாம் என்ன பார்க்க வேண்டும், எந்த காணொளிகளை காண வேண்டும் என முடிவு செய்கிறது.

மேலும், எந்தவகையான காணொளிகளை நாம் விரும்புகிறோம் என்பதை ஆய்ந்தறிந்து, அதையே நமக்கு பின்னாளில் பரிந்துரைகளாக வழங்குகிறது.

இந்த தரவுகளே பேஸ்புக் நிறுவனத்திற்கு வருவாயை ஈட்ட பயன்படுகிறது, விளம்பர நிறுவனங்களுக்கு அந்த தரவுகளையே விற்பனை செய்கிறது. இதுவே பேஸ்புக் நிறுவனத்திற்கு கடந்த ஆண்டில் மட்டும் 55.8 பில்லியன் டொலர்களை வருவாயாக ஈட்ட காரணமாக அமைந்தது.

பேஸ்புக் நிறுவனத்தின் சேவையகமே உலகின் தனிப்பட்ட தரவுகளின் மிகப்பெரிய பெட்டகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் பேஸ்புக் அதை ஒரு தார்மீக பொறுப்புடன் கையாள்கிறது.

கணவனை விமானத்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய மனைவி விபத்தில் ப லி!!

வீடு திரும்பிய மனைவி..

கணவனை விமானத்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பின இளம் மனைவி விபத்தில் உ யிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை கண்டி – கொழும்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டியும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் குறித்த இளம் பெண்ணும் அவரது கணவரின் சகோதரரும் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளனர். கடந்த 6ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்த 26 வயதான பெண் ஒருவரே இந்த விபத்தில் உ யிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

மெதவல பிரதேசத்தை குறித்த பெண்ணின் கணவர் தொழில் நிமித்தம் டுபாய் சென்றுள்ளார். அதற்கமைய 19ஆம் திகதி கணவனை விமானம் ஏற்றுவதற்காக மனைவி விமான நிலையம் சென்றுள்ளார்.

அடுத்த நாள் வீடு திரும்பும் போது விபத்தில் உ யிரிழந்துள்ளார். எனினும் வெளிநாடு சென்ற இளம் கணவனுக்கு தனது மனைவி உ யிரிழந்த விடயம் இன்னமும் தெரிவிக்கவில்லை என உ யிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

திருமணத்தின் பின் குடும்பத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலும், முச்சக்கரவண்டி ஒன்று கொள்வனவு செய்யும் முயற்சியிலும் கணவன் டுபாய் சென்றுள்ளார்.

எனினும் எதிர்பாராத நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் அப் பகுதி மக்களை சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வெ ட்டிக் கொ லை செய்யப்பட்ட மா ணவி தொடர்பில் வெளியான தகவல்கள்!!

மருத்துவ பீட மா ணவி

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட மா ணவி ஒருவர் க ழுத்து வெ ட்டிக் கொ லை செய்யப்பட்டமை பெரும் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருவளை பகுதியைச் சேர்ந்த எச்.டி.ஆர். காஞ்சனா என்பவரே இவ்வாறு க ழுத்து வெ ட்டிப் ப டுகொ லை செய்யப்பட்டுள்ளார். பண்ணை கடற்கரைப் பகுதியில் இன்று மதியம் 2.30 மணியளவில் இந்த கொ லைச் ச ம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக் கொ லை தொடர்பில் வி சாரணை செய்யப்பட்டபோது தெரியவந்துள்ள தகவலின்படி, கொ லை செய்யப்பட்ட பெ ண் மற்றும் அவரது க ணவன் கடற்கரைப் பகுதிக்கு சென்றுள்ளனர். அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிலத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

அதன்போது, சி றிய க த்தி ஒன்றினால், பெ ண்ணின் க ழுத்தை வெ ட்டி கொ லை செய்துள்ளார். இருவரும் பேருவளையைச் சேர்ந்தவர்கள் எனவும் பெ ண்ணின் க ணவரான இரா ணுவ சி ப்பாய், பரந்தன் இரா ணுவ பொ லிஸ் பிரிவின், மருத்துவ வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெ ண், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்றுவந்தவராவார். கொ லை செய்யப்பட்ட பெ ண்ணிற்கு கடந்த 4 வருடங்களிற்கு முன்னர் இந்த இரா ணுவ சி ப்பாயுடன் பதிவுத் திருமணம் இடம்பெற்றதாகவும்,

பின்னர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கற்கும் போது வேறொருவருடன் காதல் ஏற்பட்டதால், அதை அறிந்த க ணவனான இரா ணுவ சி ப்பாய், பெ ண்ணை அழைத்து, க த்தி யால் க ழுத்தை அ றுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பண்ணை கடற்கரையில் நின்றவர்கள் பொ லிஸாருக்கு வழங்கிய த கவலின் பிரகாரம் பொலிஸார் பெ ண்ணின் ச டலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், இரா ணுவ சிப்பாயைக் கை து செய்துள்ளனர்.

கை து செய்யப்பட்ட இரா ணுவ சி ப்பாயிடம் பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தும் ஆபத்து : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

உலக நாடுகளை அச்சுறுத்தும் ஆபத்து

சீனா மற்றும் அதன் பிராந்திய நாடுகளில் ஆ ட்கொ ல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றுநோய் தீவிரமாக அதிரிகரித்துள்ள நிலையில் தற்போது அமெரிக்காவிலும் பரவ ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் குறித்த வைரஸின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இலங்கை மக்கள் அ ச்சமடையத் தேவையில்லை என்று இலங்கை தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோய் நிபுணர் வலியுறுத்தியுள்ளார்.

வைரஸின் அறிகுறிகள் தென்பட்டால் பொருத்தமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், அவர்களின் பயண விபரங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்துமாறும் சுற்றுலாப் பயணிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்திருந்த நிலையில், தாய்லாந்து, தென் கொரியா மற்றும் ஜப்பானிலும் பரவத் தொடங்கியது. இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட சீன அதிகாரிகள், மனிதர்கள் மூலம் வைரஸ் பரவுவதை உறுதி செய்துள்ளனர்.

மருத்துவ ஊழியர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர், நான்காவது மரணம் நேற்று பதிவாகியுள்ளது.

சீன புத்தாண்டு விடுமுறை காலத்தில் சுற்றுலா பயணிகளின் இலங்கை வருகை அதிகரித்துள்ளதுடன், பல சீன நாட்டினர் தங்கள் விடுமுறை இடமாக இலங்கையை தேர்வு செய்வதால் இந்த வைரஸ் இலங்கையிலும் பரவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வைரஸைக் கட்டுப்படுத்த இலங்கையில் அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோய் பிரிவின் தலைமை தொற்றுநோய் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வரும் எந்தவொரு நபரும் அதிக காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற கொரோனா வைரஸிற்கான அறிகுறிகள் தென்பட்டால், அவரை விமான நிலையத்திலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்குவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் தொற்று குறித்து இலங்கை மக்கள் வீணான அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழில் ச டலம் ஒன்று மீ ட்பு!!

எழுதுமட்டுவாழ் பகுதியில்..

யாழ். எழுதுமட்டுவாழ் பகுதியில் கா யங்களுடன் ச டலம் ஒன்று மீ ட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம், எழுது மட்டுவாழ் – படித்த மகளிர் திட்ட பகுதியில் இன்று காலை குறித்த ச டலம் மீ ட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ச டலமாக மீ ட்கப்பட்டவர், அதே பகுதியைச் சேர்ந்த இ.குபேந்திரன் என அ டையாளம் காணப்பட்டுள்ளார். வீதியில் ச டலம் காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக கொடிகாமம் பொ லிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொ லிஸார் ச டலத்தை மீ ட்டுள்ளனர். குறித்த ச டலத்தின் த லை மற்றும் உ டலில் கா யங்கள் உள்ள நிலையில், இது கொ லையாக இருக்கலாம் என பொ லிஸார் ச ந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் வி சாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

மட்டக்களப்பில் விமான தயாரிப்பில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்கள் : தடுத்து நிறுத்திய புலனாய்வுத் துறை!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் யு த்தத்திற்கு பின் தமிழ் இளைஞர்கள் சிலர் சேர்ந்து சிறிய ரக விமானம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது அதனை இலங்கை பு லனாய்வு துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சியில் 2013ஆம் ஆண்டு செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் விமான தயாரிப்பு பொறியியல் கற்கை நெறியை மேற்கொண்டு மோட்டார் ரக என்ஜினை பயன்படுத்தி சிறிய ரக விமானம் ஒன்றை தயாரிக்க முனைந்தபோது அதனை இரா ணுவத்தினர் சு ற்றி வ ளைத்து பி டித்து த டுத்து நி றுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் குறித்த விமான தயாரிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் ப ல த டவை வி சாரணைக்கு உட்படுத்தப்பட்டு உ யிர் அ ச்சு றுத்தல் காரணமாக நா ட்டை வி ட்டு வெ ளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விமானம் தயாரிக்கப்பட்டிருந்தால் விடுதலைப் புலிகளுக்கு பின்னர் இலங்கையின் சிறிய ரக விமானத்தை தயாரித்த பெருமை செங்கலடி தமிழ் இளைஞர்களுக்கு கிடைத்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக விமான தயாரிப்பில் ஈடுபட்ட இளைஞர் அமெரிக்காவில் த ஞ்சம் அ டைந்துள்ளார்.

இது தொடர்பாக தற்போது பு லனாய்வுத் து றையினர் சில இளைஞர்களை தே டிவருவதாக தவகல்கள் வெளியாகியுள்ளதாக மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

-தமிழ்வின்-

நன்றி நவிலல் : துரைராசா தனலட்சுமி!!

துரைராசா தனலட்சுமி

பிறப்பு – 1939.08.20  || இறப்பு – 2020.01.15

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியை பிறப்பிடமாகவும் வவுனியா தாண்டிக்குளம் பத்தினியார் மகிளங்குளத்தை தற்காலிக வதிவிடமாக கொண்ட துரைராசா தனலட்சுமி அவர்களின் நன்றி நவிலல்.

எங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும்,

தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், சகோதர மொழி நண்பர்களுக்கும்,

மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் எமது துயரில் பங்கு கொண்ட தனிநபர்கள், நிறுவனங்கள், அமைப்புக்கள் அனைவருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்கனம்

மகன்
துரைராசா தில்லைநாதன்
தினேஸ் ரவல்ஸ்
தாண்டிக்குளம்
வவுனியா
077 – 6014960

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி வெட்டிக் கொலை!!

மருத்துவபீட மாணவி

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவியொருவர் கொ லை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொ லைச் சம்பவம் இன்று(22.01.2020) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

பேருவளை பகுதியைச் சேர்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மாணவி ஒருவரே இவ்வாறு கொ லை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொ லைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கிளிநொச்சி – பரந்தன் இரா ணுவ முகாமில் மருத்துவ பிரிவில் பணியாற்றும் பேருவளை பகுதியைச் சேர்ந்த மதுகம இரங்க பிலிப் குமார எனும் 29 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வவுனியா நகரசபையில் தரித்து நிற்கும் வாகனங்கள் : குப்பைகளை அகற்றுவதில் மீண்டும் சிக்கல்!!

வவுனியா நகரசபையில்..

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை ஏற்றாது வவுனியா நகரசபை வளாகத்தில் இன்று (22.01.2020) காலை தொடக்கம் 8க்கு மேற்பட்ட குப்பையேற்றும் வாகனங்கள் தரித்து நிற்கின்றன.

வவுனியா மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள குப்பை மேட்டில் வவுனியா நகர எல்லைக்குற்பட்ட குப்பைகள், வைத்தியசாலை கழிவுகள், பாவனையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான மருந்துகள் போன்றவற்றினை குறித்த இடத்திற்கு கொண்டு வந்து கொட்டுவதால்,

பல்வேறு சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதுடன் மழைக் காலங்களில் அதிகளவு துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்து பிரதேச இஸ்லாமிய மக்கள் இன்று காலை 6 மணி தொடக்கம் கவனயீர்ப்பு போ ராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நகர எல்லைக்குற்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போ ராட்டம் மேற்கொள்வதினையடுத்து,

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதினால் 8க்கு மேற்பட்ட குப்பையேற்றும் வாகனங்கள் இன்றையதினம் கடமைக்கு செல்லாது நகரசபை வளாகத்தில் தரித்து நிற்கின்றன.

குறித்த பகுதியில் பல லட்சம் பெறுமதியான குப்பை மீள்சுழற்சி இயந்திரமும் கட்டிடமும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பம்பைமடு குப்பைமேடு விவகாரம் : மீண்டும் போ ராட்டம் ஆரம்பம்!!

பம்பைமடு குப்பைமேடு விவகாரம்

வவுனியா மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பா துகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள, குப்பை மேட்டினை அகற்றும்படி கோரி, பிரதேச இஸ்லாமிய மக்களினால் கவனயீர்ப்பு ஆ ர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த குப்பை மேட்டில் வவுனியா நகர எல்லைக்குட்பட்ட குப்பைகள், வைத்தியசாலை கழிவுகள், பாவனையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான மருந்துகள் போன்றவற்றினை குறித்த இடத்திற்கு கொண்டு வந்து பா துகாப்பற்ற முறையில் வீசுவதுடன்,

தீ மூட்டுவதால் வெளியாகும் கரும் புகையினால், பல்வேறு சுவாசப் பி ரச்சினைகள் மற்றும் மழைக் காலங்களில் அதிகளவு துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கு ற்றம் சுமத்துகின்றனர்.

கடந்த வருடமும் குறித்த மக்களினால் இதே போன்றதொரு ஆ ர்ப்பாட்டம் நடாத்தப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகளின் உறுதிமொழிக்கமைய கைவிடப்பட்டிருந்தது.

தீர்வு கிடைக்காத நிலையில் ஒரு வருடத்திற்கு பின்னர் குறித்த ஆ ர்பாட்டம் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. போ ராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் பொலிஸார் பா துகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் கவனிப்பாரற்றுக்கிடக்கும் சர்வதேச விளையாட்டரங்கை திறக்க ஈ.பி.டி.பி நடவடிக்கை!!

ஓமந்தையில்..

வவுனியா, ஓமந்தையில் சர்வதேச தரத்துடன் பல கோடி ரூபா செலவுடன் அமைக்கப்பட்ட விளையாட்டரங்கு கவனிப்பாரற்ற நிலையில் உள்ளமை தொடர்பாக விளையாட்டு வீரர்களால் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து,

அதனை உடன் திறக்க நடவடிக்கை மேற்கோள்ளப்படவுள்ளதாக ஈ.பி.டி.பி யின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கு.திலீபன் தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் பல கோடி ரூபா நிதியில் சர்வதேச தரத்துடன் விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

அதனை திறந்து வைத்து வவுனியா மட்டுமன்றி இலங்கை வீரர்கள் பயன்படுத்த ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படாமையால் இன்று குறித்த பகுதி பற்றைக்காடாக காணப்படுவதுடன் அங்குள்ள பொருட்களும் சேதமடைந்து காணப்படுகின்றன.

இது தொடர்பாக வீரர்கள் எமது கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து உடனடியாக விளையாட்டரங்கை நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தோம்.

அங்கு கட்டிடம் பாரிய சேதமடைந்த நிலையில் நீச்சல் தடாகத்தில் உள்ள நீர் அழுக்கடைந்த நிலையில் காணப்படுவதுடன் விளையாட்டு திடல்கள் கால்நடைகள் தங்குமிடங்களாகவும் காணப்படுகின்றன.

எனவே இவ்விடயம் தொடர்பாக உடனடியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன் அவர் ஊடாக உடனடியாக விளையாட்டரங்கை திறந்து விளையாட்டு வீரர்களுக்கு பயன்பட ஆவணசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் முச்சக்கர வண்டி விபத்து : இருவர் படுகாயம்!!

விபத்து

வவுனியா முதலாம் குறுக்குத் தெருவில் முச்சக்கர வண்டியொன்றும் பட்டா ரக வாகனம் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (21.01.2020) இரவு இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரிவருவதாவது,

வவுனியா, முதலாம் குறுக்கு தெரிவில் இருந்து இறப்மைக்குளம் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும், ஹொரவப்பொத்தானை வீதியில் இருந்து சூசைப்பிள்ளையார் குளம் நோக்கி வந்த பட்டா ரக வாகனமும் முதலாம் குறுக்குதெரு சந்தியில் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த குடும்ப பெண் ஆகியோர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குடும்ப பெண்ணுடன் இருந்த குழந்தைக்கு தெய்வாதீனமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.